Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூத்த பத்திரிக்கையாளர் சின்னக் குத்தூசி மாரடைப்பால் மரணம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

.

மூத்த தமிழ்ப் பத்திரிக்கையாளர் சின்னக் குத்தூசி மாரடைப்பால் மரணம்.

சென்னை: தமிழகத்தின் மூத்த பத்திரிக்கையாளரும், திராவிட இயக்கத்தின் தனிப்பெரும் சிந்தனையாளருமான எழுத்தாளர் சின்னக்குத்தூசி எனப்படும் தியாகராஜன் இன்று காலை மாரடைப்பால் மரணமடைந்தார்.

77 வயதான சின்னக்குத்தூசி உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். உடல் நலன் குன்றியிருந்த நிலையிலும் கூட அவர் தொடர்ந்து அரசியல் கட்டுரைகளை எழுதி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சின்னக்குத்தூசியின் உடல் நலம் குறித்த விசாரிக்க திமுக தலைவர் கருணாநிதியும் நேரில் வந்து விசாரித்து விட்டுச் சென்றிருந்தார். இதேபோல பல்வேறு தலைவர்கள், எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்களும் மருத்துவமனைக்குச் சென்று சின்னக் குத்தூசியின் உடல் நலம் விசாரித்தனர்.

மறைந்த சின்னக்குத்தூசியை கடந்த 15 ஆண்டுகளாக நக்கீரன் ஆசிரியர் கோபால் சிறந்த முறையில் கவனித்து வந்தார். சின்னக் குத்தூசியின் உடல் நலம் பாதிக்கப்பட்டபோதும் கூட அவர்தான் மருத்துவமனையில் சேர்த்து முழு சிகிச்சைகளையும் பார்த்து வந்தார்.

மறைந்த சின்னக் குத்தூசியின் உடல் ராயப்பேட்டையில் உள்ள நக்கீரன் பத்திரிக்கை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

இன்று மாலை 4 மணிக்கு பெசன்ட் நகர் மின் மயானத்தில் குத்தூசியின் உடல் தகனம் செய்யப்படவுள்ளது.

- தற்ஸ் தமிழ் -

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி சிறி!

அன்னாரின் ஆத்மா சாந்தியடைவதாக. ஆழ்ந்த இரங்கல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாரின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றேன்!!!

ஆழ்ந்த அனுதாபங்கள் !

--------------------------------------

எழுத்தாளர் சின்னக்குத்தூசி புத்தகங்கள்

http://books.dinamalar.com/AuthorBooks.aspx?id=1569

- ராமர் பாலம் இருந்ததா? ராமாயணம் நடந்ததா?

- முத்துச்சரம்

- சுரங்கம்

- சங்கொலி

- கலைஞர்

- கருவூலம்

- வைரமாலை

- பெட்டகம்

- இட ஒதுக்கீடு

- பொற்குவியல்

சின்னகுத்தூசியின் வாழ்க்கை நிகழ்வுகள் வருமாறு:

சின்னக்குத்தூசி என்றழைக்கப்படும் இரா.தியாகராஜன் அவர்கள் 15.06.1934ல் திருவாரூரில் பிறந்தார். தந்தை ராமநாதன். தாயார் கமலா அம்மையார். திருவாரூர் கழக உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்ற சின்னக்குத்தூசி, பள்ளியில் படிக்கும்போதே திருவாரூர் நகர திராவிட இயக்க முன்னோடிகளான சிங்கராயர், முத்துக்கிருஷ்ணன், வி.எஸ்.பி. யாகூப், ‘தண்டவாளம்’ ரங்கராஜன் ஆகியோருடன் ஏற்பட்ட தொடர்பால் திராவிட இயக்க கொள்கைகளின்பால் கவரப்பட்டார்.

பள்ளிப்படிப்பு முடிந்தபின், பயிற்சி பெறாத ஆசிரியராக பணியாற்றிய சின்னகுத்தூசி (எ) இரா.தியாகராஜன், ஆகிரியர் பயிற்சி பெறுவதற்காக, திருவாரூர் நகர மன்றத் தலைவராக இருந்த சாம்பசிவம் அவர்களிடம் பரிந்துரைக் கடிதம் பெற்று தந்தை பெரியாரை சந்தித்தார். பெரியாரின் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் சிறப்பு அனுமதியின் அடிப்படையில் சேர்க்கப்பட்டு, ஆசிரியர் பயிற்சி பெற்றார். அதன்பின், பல்வேறு பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றினார். இவற்றில் குறிப்பிடத்தக்கது, குன்றக்குடி அடிகளார் அவர்களின் நிர்வாகத்தில் செயல்பட்ட குன்றக்குடி உயர்நிலைப்பள்ளியாகும். இப்பள்ளியில் பணியாற்றும்போது, குன்றக்குடி அடிகளாரின் அன்பைப் பெற்று, அவரிடம் நெருக்கமாக செயலாற்றினார்.

குன்றக்குடியில் பணியாற்றியகாலத்தில், தமிழ்த் தேசியக் கட்சியின் நிறுவனர் ஈ.வி.கி.சம்பத் அவர்களின் அழைப்பை ஏற்று, ஆசிரியர் பணியைத் துறந்துவிட்டு சென்னையில் நடந்த இந்தி எதிர்ப்பு போரில் பங்கேற்று சிறை சென்றார்.

திருவாரூரிலிருந்து வெளியான மாதவி வார இதழின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றிய சின்னக்குத்தூசி, பின்னர் தமிழ்த் தேசியக் கட்சியின் அதிகாரப் பூர்வ ஏடான தமிழ்ச் செய்தி வார இதழ், நாளிதழ் ஆகியவற்றின் பொறுப்பாசிரியராகவும் பணியாற்றினார். தமிழ்த் தேசியக் கட்சி, காங்கிரசில் இணைந்தபிறகு, பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் நடத்திய ‘நவசக்தி’யில் தலையங்க ஆசிரியராக சிறிது காலம் பொறுப்பேற்றிருந்தார்.

நாத்திகம், அலைஓசை, எதிரொலி, முரசொலி உள்ளிட்ட நாளேடுகளிலும் நக்கீரன், ஜூனியர் விகடன் உள்ளிட்ட வாரமிருமுறை இதழ்களிலும் மற்றும் பல இதழ்கள், சிற்றிதழ்கள் ஆகியவற்றிலும் ஏராளமான அரசியல் விமர்சனக் கட்டுரைகளை எழுதிக் குவித்துள்ளார். வலுவான வாதங்கள், அசைக்க முடியாத ஆதாரங்கள், மறுக்க இயலாத புள்ளிவிவரங்கள், வரலாற்று நிகழ்வுகள் இவற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்படும் இவரது கட்டுரைகள் தமிழக அரசியல் களத்தில் பலரது கவனிப்பையும் பெற்றுவருகின்றன.

இவரது கட்டுரைகள் ‘புதையல்’, ‘கருவூலம்’, ‘களஞ்சியம்’, ‘சுரங்கம்’, ‘பெட்டகம்’, ‘எத்தனை மனிதர்கள்’, ‘சங்கொலி’, ‘முத்தாரம்’ ‘வைரமாலை’ உள்ளிட்ட பல தலைப்புகளில் நூல்களாக வெளிவந்துள்ளன. அமரர் ஜீவாவின் பொறுப்பில் வெளியான ‘தாமரை’ இதழிலும் இவரது சிறுகதைகள் வெளியாகியுள்ளன. நாராண துரைக்கண்ணன் அவர்கள் நடத்திய பிரசண்ட விகடன் இதழில் தொடர்கதை எழுதியுள்ளார். கலைஞர் அவர்களின் அன்பைப் பெற்ற சின்னக்குத்தூசி அவர்கள் முரசொலியில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவந்தார்.

சின்னக்குத்தூசி என்ற புனைபெயரில் இவர் பரவலாக அறியப்பட்டாலும் கொக்கிரகுளம் சுல்தான் முகமது, காமராஜ் நகர் ஜான் ஆசிர்வாதம், தெரிந்தார்க்கினியன், ஆர்.ஓ.மஜாட்டோ, திட்டக்குடி அனீஃப் ஆகிய புனைப் பெயரிகளிலும் பல அரசியல் விமர்சனக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

நடமாடும் திராவிட இயக்க களஞ்சியம் எனும்படி தமிழகத்தின் 60 ஆண்டுகால அரசியல் விவரங்களை விரல் நுனியில் வைத்திருக்கும் சின்னக்குத்தூசி அவர்கள் இந்திய அரசியல் குறித்தும் ஆழ்ந்த அறிவனுபவம் மிக்கவர். பொதுவாழ்க்கை – எழுத்துப்பணி இவற்றிற்றகாக திருமணம் செய்துக்கொள்ளாமல் வாழ்ந்து வந்த சின்னக்குத்தூசி அவர்கள் சென்னை திருவல்லிக்கேணி எண்.13 வல்லப அக்கிரஹாரம் தெருவில் தங்கியிருந்த சிறிய அறை, இன்றைய பத்திரிகையாளர்களின் வேடந்தாங்கலாக அமைந்திருந்தது. மனிதநேயம், பகத்தறிவு, சுயமரியாதை ஆகியவற்றை இலட்சியங்களாகக் கொண்டு திராவிட இயக்க நெறிகளின்படி வாழ்ந்து வந்தவர் திரு.சின்னக்குத்தூசி (எ) இரா.தியாகராஜன் அவர்கள்

மூத்த பத்திரிகையாளர் சின்னக்குத்தூசியின் மறைவுக்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட இரங்கல் செய்தி:

அரசியல் எழுத்து வித்தகர் சின்னகுத்தூசி மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், தாங்க முடியாத மனவேதனையும் அடைந்தேன். மலைப்பாறையைப் பிளந்து அற்புதச் சிற்பம் வடிக்கும் சிற்றுளியைப் போல, கலை அழகு மிளிறும் சித்திரப் பூக்களை ஆடைகளில் தைத்திடும் குத்தூசியைப் போல, வாதப் பிரதிவாதங்களை நிரல்படுத்தி, எதிர்க்கருத்துக் கொண்டோரையும் திகைப்பில் ஆழ்த்தும் ஆய்வுக் கட்டுரைகளைத் தீட்டி வந்த சின்னகுத்தூசி எனும் எழுத்தாளர் தியாகராசன் அவர்கள், திராவிட இயக்கத்துக்கும் தமிழகப் பொது வாழ்வுக்கும் தன் எழுத்தால் ஆற்றி வந்த தொண்டு ஈடு இணையற்றது; மங்காப் புகழ் பெற்றது.

அரசியல் நிகழ்வுகளை, நூறாண்டு காலப் பொதுவாழ்வுச் செய்திகளை, தந்தை பெரியார், அறிஞர் அண்ணா உள்ளிட்ட வரலாற்று நாயகர்களின் சிந்தனைகளை, கருத்துகளைப் பசுமரத்து ஆணிபோல மனதில் பதிய வைக்கும் அந்த உன்னதப் பணியை அவர்போலச் செய்வதற்கு இனி எவர் இருக்கிறார்?

பொடா கைதியாக வேலூர் மத்திய சிறையில் நான் இருந்தபோது என்னைச் சந்தித்து, தந்தை பெரியார்-தமிழ்த்தென்றல் திரு.வி.க. இருவர் குறித்த ஒரு நிகழ்ச்சியைச் சுட்டிக்காட்டி என்னை நெஞ்சாரப் பாராட்டியதை எப்படி மறப்பேன்?

மறுமலர்ச்சி நடைப்பயணத்தின் நிறைவுநாளில் கைது செய்யப்பட்டு சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் நான் இருந்தபோது, என்னை ஆரத்தழுவி உதிர்த்த அமுதச் சொற்களை எப்படி மறப்பேன்?

முன்பு உடல்நலம் கெட்டு அவர் சிகிச்சை பெற்றபோது அவரைச் சந்தித்தேன். அவருக்கு உடல்நலக் குறைவு என்று அறிந்தபோது சென்னை சென்றவுடன் பார்க்க அவாவுற்றேன். அவர் விமர்சித்தால்கூட அந்த எழுத்தில் ஒரு சுகம் இருக்கும். மிக மிக எளிமையானவர். தன்னலமற்ற கொள்கையாளர்.

அவரது மறைவு திராவிட இயக்கத்திற்கும், தமிழக எழுத்து உலகத்திற்கும் ஈடு செய்யவே முடியாத பேரிழப்பு ஆகும். அவருக்கு துக்கம் நிறைந்த கண்ணீர் அஞ்சலியைச் செலுத்துகிறேன்.

இவ்வாறு வைகோ தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

http://www.alaikal.com/news/?p=71322

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாரின் மறைவு பத்திரிகை உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.