Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொதிக்கிறது திருமலை...

Featured Replies

கொதிக்கிறது திருமலை

திருகோணமலையில் நேற்று ஐந்து அப்பாவி மாணவர்கள் படையினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளதால், இன்று திருமலையில் அனைத்து வணிக நிலையங்களும், மூடப்பட்டுள்ளதுடன், பாடசாலைகளிற்கு மாணவர்கள் வராமையாலும், அலுவலகங்களிற்கு ஊழியர்கள் செல்லாiமாயலும் அவை வெறிச்சோடிக் காணப்படுகின்றன. இன்று வழமை மறுப்புப் போராட்டத்திற்கு எந்த அமைப்பும் அழைப்பு விடுக்காத போதும், மக்களால் இந்த வழமை மறுப்புப் போராட்டம் நடாத்தப்படுகிறது.

அரச அலுவலகங்களிலும் வரவு குறைவாக இருந்ததை முன்னிட்டு ஏனையவர்களும் வீடுதிரும்பியுள்ளனர் எனத்தெரியவருகின்றது.

அத்தோடு இன்று காலையிலேயே மக்கள் ஒரு வித பதட்டத்துடனேயே காலையில் அவசர அவசரமாக வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதே வேளை பெரும் எண்ணிக்கையான சிறீ லங்கா காவற்துறையினரும், சிறீ லங்கா இராணுவத்தினரும் சுற்றுக்காவல் நடவடிக்கைகளில் ஈடுபடடுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தகவல்: சங்கதி

  • Replies 107
  • Views 10.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

இறந்த மாணவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள். :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry:

  • கருத்துக்கள உறவுகள்

கல்விச் சமூகத்தை அழிக்கும் சிங்கள ஆதிக்க சக்திகளின் எண்ணங்களுக்கு இரையாகிப் போன உறவுகளுக்கு கண்ணீர் அஞ்சலிகள் :cry: :cry: :cry: :cry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இறந்த மாணவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள் :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry:

உயிர்நீத்த அப்பாவி மாணவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள் :cry:

அப்ப இனி என்ன இராணுவத்துக்கு கலக்கம் தான் எங்க அடி விழது என்று பார்துக் கொண்டிருக்க வேண்டியது தான் :?:

மாணவரை கொன்று குவிக்கப் படிவதையா உலகம் மௌனமாக பார்த்துக்கொண்டு இருக்கின்றது? இது என்ன விந்தையான உலகமப்பா? சிறுவர்கள் மாணவர்களென பலர் கொல்லப்பட்டவண்ணம் உள்ளனர். இதனை நிகழ்த்தும் சிங்கள பயங்கரவாத அரசாங்கத்தை உலகம் கண்டிக்கத்தவறினால். பின்னர் இதுவே முன்மாதிரி ஆகிவிடும். அதனையா உலகம் விரும்புகின்றது????

சிங்கள இனவெறிக்கு பலியான மாணவர்களுக்கு எனது அண்ணீர் அஞ்சலிகள்.

இந்த கொலையைப் பாக்கும் போது சின்ன சந்தேகம் 1983ம் ஆண்டு தின்னவேலி குண்டு வெடிப்பைத் தொடர்ந்து மானிப்பாய் வெஸ்லி தியேட்டருக்குப் பக்கத்தில் பத்து அப்பாவி பொது மக்கள் வரிசையாக நிக்க வைச்சு சுட்டுக் கொல்லப்பட்டார்கள் இன்றும் அதே மாதிரியாக எங்கையோ குண்டு வெடிக்க அவ்வழியில் வந்த மாணவர்கள் பிடித்து வரிசையாக நிக்க வைச்சு சுடப்பட்டுள்ளார்கள் கிட்டத்தட்ட 22 ஆண்டுகள் எமது போராட்டம் என்ன பலனைத் தந்துள்ளது என சிந்திக்க வைக்கிறது சிங்களவன் அன்று செய்ததைத்தான் இன்றும் செய்கிறான் இதுக்கு என்ன முடிவு???????

இறந்த மாணவர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள்.........

அப்பாவி மாணவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்.... :cry: :cry:

சில நாட்களாகவே அப்பாவி ஈழத்தமிழரின் மீதான வன்முறை இலங்கையில் தலைவிரித்து ஆடுகிறது.... சிறுமிகளை கூட பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தும் கேவலம் அரங்கேறுகிறது... மீண்டும் ஒரு 1983 வருமோ என அஞ்சுகிறேன்.... சிங்கள ராணுவத்துக்கு ஆண்மை இருந்தால் விடுதலைப் புலிகளுடன் மோதி பார்க்கட்டும்... அதை விட்டு அப்பாவி மக்களை கொல்வதில் அவர்களுக்கு என்ன லாபம்?

* லக்கிலுக் கேட்டு கொண்டபடி மாற்றப்பட்டுள்ளது - மதன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனவுகள் நிறைவு பெறாமல்..

கலைந்த கனவுடன்

கயவனின்..

கருவிக்கு இரையான

கண்மணிகள் இவர்கள்

கல்வி சமூகத்தை

கருவிலே அழிக்கும்..

கயவரின் செயலை..

கண்டு கொள்ளுமா உலகம்?

காணமல் இருப்பதால்..

கருக்கொள்ளும் யுத்த மேகத்தை

கருத்தில் கொள்ளுமா?

கண்ணீரால் அஞ்சலிக்கிறேன்

கண்கான தேசத்திலிருந்து..

சில நாட்களாகவே அப்பாவி ஈழத்தமிழரின் மீதான வன்முறை இலங்கையில் தலைவிரித்து ஆடுகிறது.... சிறுமிகளை கூட பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தும் கேவலம் அரங்கேறுகிறது... மீண்டும் ஒரு 1983 வருமோ என அஞ்சுகிறேன்.... சிங்கள ராணுவத்துக்கு ஆண்மை இருந்தால் விடுதலைப் புலிகளுடன் மோதி பார்க்கட்டும்... அதை விட்டு அப்பாவி மக்களை கொல்வதில் அவர்களுக்கு என்ன லாபம்?

உங்களோட உணர்வுகள் வரவேற்ககூடியதுதான்.. ஆனால் தயவு செய்து பாலியல் வல்லுறவு என்ற சொல்லை ஈழத்தமிழர் படும் அவலம் பற்றி பேசும் எந்த இடங்களிலும் பாவிக்காதீர்கள். "பாலியல் வன்முறை" என்று மட்டும் பிரயோகியுங்கள். நன்றி 8)

மட்டுறுத்துனர் யாராவது அந்த வார்த்தையை மாற்றினால் நன்றி உடையவனாக இருப்பேன்...

சில நாட்களாகவே அப்பாவி ஈழத்தமிழரின் மீதான வன்முறை இலங்கையில் தலைவிரித்து ஆடுகிறது.... சிறுமிகளை கூட பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தும் கேவலம் அரங்கேறுகிறது... மீண்டும் ஒரு 1983 வருமோ என அஞ்சுகிறேன்.... சிங்கள ராணுவத்துக்கு ஆண்மை இருந்தால் விடுதலைப் புலிகளுடன் மோதி பார்க்கட்டும்... அதை விட்டு அப்பாவி மக்களை கொல்வதில் அவர்களுக்கு என்ன லாபம்?

அப்பு லுக்குலக் உமது அன்பான ஈழதமிழ்மக்களின் பரிவுக்கு அடியேனின் notworthy.gifnotworthy.gif

தயவுசெய்து இதுபோன்ற பிரச்சினைகளின் போது என் உணர்வுகளை நையாண்டி செய்வதை நிறுத்தவும்.....

சில நாட்களாகவே அப்பாவி ஈழத்தமிழரின் மீதான வன்முறை இலங்கையில் தலைவிரித்து ஆடுகிறது.... சிறுமிகளை கூட பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தும் கேவலம் அரங்கேறுகிறது... மீண்டும் ஒரு 1983 வருமோ என அஞ்சுகிறேன்.... சிங்கள ராணுவத்துக்கு ஆண்மை இருந்தால் விடுதலைப் புலிகளுடன் மோதி பார்க்கட்டும்... அதை விட்டு அப்பாவி மக்களை கொல்வதில் அவர்களுக்கு என்ன லாபம்?

:oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops:

:oops: :oops: :oops: :oops: :oops:

:oops: :oops: :oops: :oops: :oops: :oops:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருகோணமலையில் கடந்த திங்கட்கிழமை இரவு படையினரின் கைக்குண்டு வீச்சிலும், கண்மூடித்தனமான துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்காகி உயிரிழந்த ஐந்து தமிழ் இளைஞர்களினதும் இறுதிச் சடங்குகள் நாளை வியாழக்கிழமை இடம்பெறும் என தெரியவருகின்றது.

இது தொடர்பான ஏற்பாடுகளில் திருமலை தமிழ் மாணவர் பேரவையினர் ஈடுபட்டுவருவதாக அறியமுடிகின்றது.

இதே நேரம் இச்சம்பவங்களை கண்டித்து திருமலையில் இன்று முதல் இடம்பெறும் வழமை மறுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் அதே சமயம் மேற்படி இளைஞர்களின் இறுதிச் சடங்குகளை முன்னிட்டு எதிர்வரும் வியாழக்கிழமை பொது மக்கள் கலந்துகொள்வதற்காக வழமை மறுப்புப் போராட்டம் தளர்த்தப்படும் எனவும் தெரியவருகின்றது.

தகவல் மூலம் - சங்கதி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருமலையில் 5 மாணவர்களின் மரணங்களுக்கும் குண்டு வெடிப்பும் துப்பாக்கி சூட்டுக் காயங்களுமே காரணம் பிரேத பரிசோதனையில் முடிவு.

திருக்கோணமலையில் இடம்பெற்ற ஐந்து மாணவாகளின் மரணங்களுக்கு குண்டு வெடிப்பும்,துப்பாக்கி சூட்டுக காயங்களுமே காரணம் என பிரேத பரிசோதனையின் முடிவுகளில் தெரியவந்துள்ளது. திருக்கோணமலையில் நேற்றிரவு எட்டு மணியளவில் கடற்கரையில் நின்று கொண்டிருந்த மாணவர்கள் மீது குண்டு வீச்சு தாக்குதலும் பின்னர் துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. கடற்படையினரே இந்த தாக்குதலை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.எனினும

வீணாக இறந்து போன நம் மாணவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்.. :cry: :cry:

  • தொடங்கியவர்

இராணுவ வெறியர்களுக்கு பதில் கொடுக்க நல்ல தருணம் பார்த்துக்காத்திருக்கிறோம் - திருமலை மாணவர் சமூகம் அறிக்கை

றுசவைவநn டில Pயனெயசய ஏயnnலையn றுநனநௌனயலஇ 04 துயரெயசல 2006

எங்கள் உயிர்களை நாமே பாதுகாக்கவேண்டிய சூழ்நிலைகள் தற்போது எழுந்துள்ளன. இந்தநிலையில் எங்களுக்கும் ஆயுதப்பயிற்சிகளை தாருங்கள். இவ்வளவு காலமும் நாங்கள் பொறுத்திருந்தமைக்கு சிங்கள இனவாதிகளினால் நல்ல வெகுமதிகள் அளிக்கப்படுகின்றது. இந்த நிலையில் இன்னும் நாம் பொறுமைகாக்க முடியாது. இனியும் நாம் பொறுத்திருக்கப்போவதில்லை என திருமலை மாவட்ட மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து திருமலை மாணவர்கள் விடுத்துள்ள

அறிக்கையில மேலும் கோரியிருப்பதாவது

இந்த சிங்கள காடை வெறியர்களின் கைகளினால் வீணாக சாவதற்கு நாம் என்ன கோளைகளா? ஆழிக்க வந்த படைகள் மீது அனலெடுத்து சென்று எதிரியை விரட்டி புலிக்கொடி நாட்டிய எமது தேசியத்தலைவனின் மண்ணில் பிறந்தவர்கள்தான் நாமும் எனவே, எமது திருமலை மாவட்ட, எமது தமிழ் இராணுவத்தளபதி கேணல் சொர்ணம் அவர்களே.. நாங்கள் தமிழ் மாணவர்களும், மக்களும் இப்போது எதற்கும் தயாராகவே இருக்கின்றனர். இந்த வெறியர்களின் வெறியாட்டத்திற்கு நல்லதொரு பதில் கொடுக்க தருணம் பார்த்திருக்கின்றனர்.

இனி யுத்தம் ஒன்று மூண்டால் இந்த சிங்கள படைகளில் எவரும் உயிருடன் வீடுதிரும்பப்போவதில்லை என்பதும் உறுதி. எனவே எங்களுக்கும் ஆதப்பயிற்சிகளை தாருங்கள். இந்த இராணுவ வெறியர்களை எமது தாயக மண் எங்குமிருந்தும் ஒரேயடியாக விரட்டியடிப்போம். இந்த வெறிநாய்களின் ஆயுதஅச்சுறுத்தல்களுக்கு நாமும் அந்த வழியல் உரிய பதில் கொடுக்கின்றோம். சமீப காலமாக தமிழ் மாணவர்கள் மீதும் தமிழ் மக்கள் மீதும் தாக்கிவரும் இராணுவத்தின் ஆயுத அச்சுறுத்தல்களை எமக்காக எந்த சமுகமம் தட்டிக்கேட்கப்போவதில்லை. இந்த இராணுவ வெறியர்களுக்கு உரிய பதிலை நாமே அளிக்கின்றோம். வேண்டும் எங்களுக்கும் ஆயுதப்பயிற்சி வேண்டும் ! என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டள்ளது.

தகவல்: சங்கதி

பாருங்கள் சிங்கள இராணுவத்தின் காட்டுமிராண்டித்தனத்தை,, தற்போதைய தமிழர்கள் தந்தை செல்வா காலத்து தமிழர்கள் என்று என்னிக்கொண்டு இருக்கிறார்கள் சிங்களப்பேரினவாதிகள்..

பாருங்கள்,, பொது இடத்தில் கதைத்துக்கொண்டு இருந்த 7 பல்கலைகழக மாணவர்வகளை பிடித்துச்சென்று ஒவ்வொர் ஒவ்வொருவராக வீதியில் படுக்க வைத்து காதுக்கு அருகில் மூளை சிதறும்படியாக சுட்டு இருக்கிறார்கள்,, 5 மாணவர்கள் கொல்லப்பட்ட நிலையில் மீதி 2 மாணவர்களும் சாவது உறுதியாகிவிட்டது எதற்கும் தப்பிக்க முயற்சித்துப்பார்ப்போம் என நினைத்து ஓடிய வேளை முதுக்குபுறத்தில் சுட்டு இருக்கிறார்கள்,,, அவர்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்

அதிலையும் பாருங்கோ செல்வன் இறந்தவர்களை புலிகள் என பெற்றோர் ஏற்றுக் கொண்டு கையொப்பம் இட்டத்தான் தரமுடியும் எண்டு சொல்லியிருக்கிறாங்கள் பொலிஸ்காரங்கள் அப்ப எப்பிடியான மனநிலையில் சிங்கள தேசம் தமிழரை நடத்துகிறது. . இது இலங்கை அரசுக்கு ஆக்கத்துக்குரிய நடவடிக்கையாக தெரியவில்லை அழிவின் தொடக்கம் எண்டுதான் எண்ணத் தோன்றுகிறது...............

  • தொடங்கியவர்

ஐந்து மாணவர்களின்

கொடூரக் கொலையால்

திருமலை ஸ்தம்பிதம்

எந்நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற பீதி

திருகோணமலையில் கடற்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஐந்து மாணவர்கள் கொல்லப்பட்டும், இரண்டு பேர் படுகாயமடைந்த சம்பவம் தமிழர் தாயகத்தின் தலைநகரில் பெரும் பதற்றத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தால் திருகோணமலை முற்றாக ஸ்தம்பித்துள்ளது. அங்கு காலவரையறையற்ற ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. எந்நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற பீதி அங்கு நிலவுகின்றது.

நேற்றுமுன்தினம் இரவு 7.20 மணியள வில் திருகோணமலை பெரிய கடற்கரை காந்தி சிலைக்கு அருகில் உள்ள நீண்ட கட்டில் இளைஞர் குழுவொன்று வழமைபோல அமர்ந் திருந்து உரையாடிக் கொண்டிருந்தது. அப் போது ஓட்டோ ஒன்றில் வந்த இனந்தெரியாத நபர்கள் சிலர் இந்த இளைஞர்கள் மீது கைக்குண்டை வீசிவிட்டு கோட்டை வீதிப்பக்கமா கைக்குண்டு வெடித்ததில் திருமலை புனித ஜோசப் கல்லூரி மாணவரான யோகராஜா பூங்குழலோன் என்பவரின் காலில் காயம் ஏற்பட்டு அவர் கீழே விழுந்தார். இவரை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்ல சக மாணவர்கள் முயன்றபோது அச்சமயம் அப் பகுதியில் நின்ற கடற்படையினர் அங்கு சுமார் 10 நிமிடங்கள் வரை துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். இதனால் கடற்கரையில் ஓய்வுக்காக வந்து அமர்ந்திருந்தோர் நாலாபுறமும் சிதறி ஓடினர்.

இதற்கிடையில் காயமடைந்த மாணவர்க ளுக்கு அருகில் விரைந்த கடற்படையினர் அவர்களைத் தாக்கி நிலத்தில் வீழ்த்தி, குண்டு வீசியவர் யாரென்று விசாரித்துள்ளனர். இதுபற்றி எதுவும் தெரியாதென மாணவர்கள் கூறியபோது அதனை ஏற்காத கடற்படையி னர் கீழே விழுந்து கிடந்த மாணவர்களின் நெஞ்சை தமது சப்பாத்துக்கால்களினால் மிதித்தவாறு மாணவர்களின் காதுக்கருகில் துப்பாக்கி முனையை வைத்து சுடத் தொடங் கினர் என்று கூறப்படுகின்றது.

இந்தத் துப்பாக்கிச் சூட்டில் சண்முகராஜா கஜேந்திரன் (மருத்துவ பீடத்திற்கு தெரி வானவர்), தங்கத்துரை சர்வானந்தா(மொரட் டுவைப் பல்கலைக்கழக மாணவன்), யோகராஜா ஹேமச்சந்திர, மனோகரன் ரஜீகரன், லோகிதராஜா ரொஹான் ஆகிய ஐவருமே கொல்லப்பட்டனர்.

காயமடைந்தவர்களான பரராஜசிங்கம் கோகுலராஜ், யோகராஜா பூங்குழலோன் ஆகி யோர் திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர். பூங்குழலோன் நேற்று மாலையளவில் ஆபத்தான கட்டத்தில் இருந்தார். அதேவேளை, கோகுல் ராஜ் அவசர விபத்துப் பிரிவில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகிறார்.

கொல்லப்பட்ட மாணவர்கள் அனைவரின தும் தலையில் சூட்டுக்காயங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப் புக்குழுவின் திருமலைக் கிளையின் அதிகாரி கள் மாணவர்களின் சடலங்களைப் பார்வையிட்டு இதனை உறுதி செய்திருக்கின்றனர்.

பதற்றநிலை

தமிழர் தாயகத்தின் தலைநகரில் இடம் பெற்ற இந்தச் சம்பவம் தமிழர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தி யிருக்கிறது. இந்தச் செய்தி நேற்றுக்காலை ஊடகங்கள் ஊடாக வெளிவந்ததையடுத்து திருமலை நகரமே ஸ்தம்பிதமடைந்தது. மக் களின் இயல்பு வாழ்வு முற்றுமுழுதாக முடங் கியது. அரச அலுவலகங்கள், வங்கிகள், நீதி மன்றங்கள் போன்றனவும் இயங்கவில்லை.

இதற்கிடையில் கொல்லப்பட்ட மாணவர் களின் சடலங்களை பொறுப்பேற்பதாயின் அவர் கள் "பயங்கரவாதிகள்' என்று கையொப்ப மிட்டு ஏற்குமாறு பாதுகாப்புத் தரப்பினர் குறிப்பிட்ட மாணவர்களின் பெற்றோரை வலியுறுத்தினர் எனவும் ஒரு செய்தி தெரிவித் தது.

ஐந்து மாணவர்களின் சடலங்களும் நேற் றுப் பிரேத பரிசோதனையின் பின் பெற்றோரி டம் ஒப்படைக்கப்பட்டன. துப்பாக்கி மற்றும் குண்டுவெடிப்புகளினால் ஏற்பட்ட மரணங் களை பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டதாகத் தெரிகிறது.

மாணவர்களின் இறுதிக்கிரியைகள் பெரும்பாலும் நாளை வியாழக்கிழமை திரு மலையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படு கிறது. அதற்கு முன்னதாக அச்சடலங்கள் திருகோணமலையிலுள்ள பிலபலமான கல் லூரிகளுக்கு அஞ்சலி நிகழ்வுகளுக்காக எடுத் துச் செல்லப்படுமென எதிர்பார்க்கப்படு கிறது. (க3)

தகவல்: உதயன் நாளிதள்

திருகோணமலையில் சுடப்பட்டவரில் ஒருவர்.

fr4us.jpg

நன்றி>எண்ணத் தெளிவு

படுகொலை செய்யப்பட்ட மாணவச் செல்வங்களே...

உங்களுக்கு கண்ணீரஞ்சலிகள்....

சிறீலங்கா இராணுவம் இப்பிடி செய்துபோட்டுதே எண்டு எனக்கு ஒரு கவலையும் இல்லை.

அவர்கள் யார் ? நாங்கள் யார்?

நாம் நம்பின யாரும் தப்பு செய்தால்தானே.. கோவமும் கவலையும் வரும்!

எங்களை பொறுத்தவரையில் அந்நிய நாட்டு ராணுவம் செய்த ஒரு அநியாயம்.

வீட்டுக்குள் புகுந்த பாம்பை அடிச்சு கொன்று நெருப்பில போட்டு எரிக்க ஏதும் வழி இருக்கா எண்டு இனி பாப்பம்.

அந்நியபடையின் கொலைவெறியில் பலியாகிபோன மாணவர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள்! :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.