Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமரன் பத்மநாதனின் கருத்து தொடர்பில் இந்திய மௌனம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

28 மே 2011

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதனின் கருத்து தொடர்பில் இந்தியா மௌனம் காத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் நேரடித் தொடர்பு காணப்படுவதாக குமரன் பத்மநாதன் அண்மையில் இந்திய ஊடகமொன்றுக்கு செவ்வியளித்திருந்தார்.

குமரன் பத்மநாதனின் கருத்துக்கள் தொடர்பில் இந்திய அதிகாரிகள் தற்போதைக்கு எவ்வித பதிலையும் அளிக்கப் போவதில்லை இந்திய வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் சயிலாஸ் தங்கா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ராஜீவ் படுகொலை தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு மத்திய அரசாங்கமோ காங்கிரஸ் கட்சியோ ஆர்வம் காட்டவில்லை என பாரதீய ஜனதா கட்சி அறிவித்துள்ளது.

ராஜீவ் படுகொலையை விடவும், கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைப்பதற்கே காங்கிரஸ் கூடுதல் முனைப்பு காட்டி வருவதாக பாரதீய ஜனதா கட்சியின் ஊடகப் பேச்சாளர் ராஜீவ் பிரதாப் ருட்டி தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை நாடு கடத்துமாறு இந்தியா கோரிய போதிலும், மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டது முதல் குமரன் பத்மநாதனை நாடு கடத்துமாறு கோரப்படவில்லை.

source:GTN.

  • கருத்துக்கள உறவுகள்

குமரன் பத்மநாதனின் கருத்து தொடர்பில் இந்திய மௌனம்?

குமரன் பத்மநாதனின் கருத்துக்கள்,

ஸ்ரீலங்காவின் கருத்துக்கள் என்று இந்தியாவுக்கும், தெரிஞ்சு போட்டுது. அதனால் தான்.... இந்த மௌனம்.

இந்தியா உண்மையில் தனது ஒரு 'தலைவரின்' கொலையை தமிழினத்தை அழிக்க பாவித்துவருகின்றமைக்கு இது நல்ல உதாரணம்.

இன்ரபோலில் தான் இவரை தேடுகின்றது என்கிறது. தனது நாடு ஊடகவியலாளரை அவரை பேட்டி காணவைத்து தனது நாட்டில் பிரசுரிக்கின்றது.

ஆனால், பாகிஸ்தானிடம் மும்பாய் தாக்குதலுக்கு பொறுப்பானவர்களை 'பிடித்து தா' என அடம்ப்பிடிக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் காந்தியின் கொலையின் சூத்திரதாரிகள் இன்னும் வெளியில் உலாவுகின்றார்கள் என்று நான் எழுதினால் எனக்கு முட்டாள் பட்டம் கட்ட ஆயிரம் பேர் விரைந்து எழுதுவார்கள்!

இதை விடுதலைப் புலிகளே செய்ததாகக் காட்டவே இந்தியா விரும்புகின்றது! அதனால் தான் இந்த மவுனம்!!!

உண்மைகள் வெளிவந்தால், முழு இந்தியாவுமே அதிரும் என்பதே உண்மை!!!

http://savukku.net/home/874-2011-05-23-18-15-48.html

ராஜீவ் காந்தி. இவரது மரணத்திற்காக 21 ஆண்டுகளாக 7 பேரை தூக்குக் கொட்டடியிலும், சிறைக் கொட்டடியிலும் வைத்திருந்தாலும், இந்த வழக்கு மத்திய புலனாய்வுத் துறையால், இன்றும் விசாரிக்கப் பட்டு வருகிறது. இன்றும் விசாரணையில் இருக்கும் ஒரு வழக்கில் 21 ஆண்டுகளாக 7 பேரை சிறையில் அடைத்து வைத்திருப்பது எந்த வகையில் நியாயம் ?

மேலும், ராஜீவ் கொலையில் இந்த 7 பேர்தான் உண்மைக் குற்றவளிகளா ? இதில் வேறு யாருக்கும் தொடர்பே இல்லையா ? இதன் பின்னணியில் உள்ள சதிதான் என்ன என்ற கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில், “விடுதலைப் புலிகளுக்கு அப்பால் ராஜீவ் கொலைப் பின்னணி – காலடிச் சுவடுகள்” என்ற புத்தகம் வெளிவருகிறது. இந்த புத்தகத்தை எழுதியவர், ராஜீவ் சர்மா என்ற டெல்லியைச் சேர்ந்த பத்திரிக்கையாளர். கடும் உழைப்பைச் செலவிட்டு, மென் பொறியாளரான அன்புத் தோழர் ஆனந்தராஜ், இதை மொழி பெயர்த்திருக்கிறார்.

இந்தப் புத்தககத்தை சவுக்கு பதிப்பகம் சார்பாக முதல் நூலாக வெளிக் கொணர்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

இன்னொரு முறை மக்களைக் காட்டிக்கொடுக்கும் கே.பி

இலங்கை அரசுடன் இணைந்து புலிகளை முள்ளி வாய்க்கால் வரை நகர்த்திச்சென்று பல்லாயிரம் மக்கள் கொலைச் செய்யப்படுவதற்குக் காரணமாக அமைந்ததாகக் கருதப்படும் குமரன் – செல்வராஜா – பத்மநாதன் எனப்படும் கே.பி இப்போது எஞ்சியிருக்கும் மக்களையும் காட்டிக்கொடுப்பேன் எனச் சூழுரைத்துள்ளார். மக்கள் தெருத் தெருவாக அழிக்கப்படுகிறார்கள். வட-கிழக்கில் வாழும் மேல் மத்தியதர வர்க்க மக்கள் பிரிவினரைத் தவிர ஏனையோர் பௌத்த சிங்கள ஆக்கிரமிப்பின் அழிவுக்களு நாளாந்தம் உள்ளாகிக்கொண்டிருக்கிறார்கள்.

இலங்கையில் தமிழ் இரண்டாவது மொழியல்ல. அழிக்கப்படும் மொழி. பௌத்தம் மதமல்ல ஆக்கிரமிப்பின் சின்னம். இந்த நிலையில் இவற்றிற்கு எதிராக மக்கள் தங்களால் இயன்ற வழிகளில் போராடிக்கொண்டே இருக்கிறார்கள். இந்த நிலையில் தான் இன்னொரு போராட்டம் உருவாக அனுமதிக்க மாட்டேன் என்று சூழுரைத்துள்ளார். ”

அவர்கள் அப்படிச் செய்ய முயன்றால், இங்கு பிரச்சினைகளை உருவாக்க முயன்றால் அவர்களை நான் உயிருள்ளவரை விடமாட்டேன். அப்படிச் செய்வதாயின் முதலில் அவர்கள் என்னைக் கொல்ல வேண்டும்.” என்று கூறியுள்ளார்.

பிரச்சனைகளை உருவாக்குவது இலங்கை அரசே தவிர ஏனையோர் அல்ல என்பதை உணராத சர்வதேசக் குற்றவாளியான கே.பியின் புலம் பெயர் நீட்சிகள் அரசியல் நீக்கம் செய்யப்பட வேண்டும் எனபதற்கு இதைத் தவிர வேறு சான்றுகள் தேவையில்லை.

கே.பி உருவாக்கிய நாடு கடந்த தமிழீழம் புலம்பெயர் தமிழர்களின் பிரதிநிதிகள் என்று கூறிவருவது தெரிந்ததே.

http://inioru.com/?p=21469

ராஜீவ் கொலை வழக்குக்கு சீ.பீ.ஐ சார்பில் பொறுப்பாக இருந்தவர் ரகோத்மன் எழுதிய "ராஜீவ் கொலை வழக்கு" நேற்று வாசித்தேன்

வழக்குக்கு பொறுப்பாக இருந்ததால் முதலாம்,இரண்டாம் எதிரியும் அகப்படாதவரை தான் அதை எழுதமுடியாமல் இருந்ததாகவும் இப்போ இலங்கை அரசே கதிர்காமர் கொலை வழக்கை தள்ளிவிட்டதால் தான் இப்பொ எழுதியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நேரடியாக விசாரணைக்கு பொறுப்பாக இருந்ததால் பல புதியவிடயங்களுடன் ஆதாரங்களுடனும் புத்தகம் உள்ளது. எழுதியவிதமும் வெகு மிக தெளிவு.

எனக்கு 90% மேல் உண்மைபோல் தான் இருந்தது.

முடிந்தால் அனைவரும் கட்டாயம் வாசிக்கவும்.குறிப்பாக புங்கையூரான்.

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் கொலை வழக்குக்கு சீ.பீ.ஐ சார்பில் பொறுப்பாக இருந்தவர் ரகோத்மன் எழுதிய "ராஜீவ் கொலை வழக்கு" நேற்று வாசித்தேன்

வழக்குக்கு பொறுப்பாக இருந்ததால் முதலாம்,இரண்டாம் எதிரியும் அகப்படாதவரை தான் அதை எழுதமுடியாமல் இருந்ததாகவும் இப்போ இலங்கை அரசே கதிர்காமர் கொலை வழக்கை தள்ளிவிட்டதால் தான் இப்பொ எழுதியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நேரடியாக விசாரணைக்கு பொறுப்பாக இருந்ததால் பல புதியவிடயங்களுடன் ஆதாரங்களுடனும் புத்தகம் உள்ளது. எழுதியவிதமும் வெகு மிக தெளிவு.

எனக்கு 90% மேல் உண்மைபோல் தான் இருந்தது.

முடிந்தால் அனைவரும் கட்டாயம் வாசிக்கவும்.குறிப்பாக புங்கையூரான்.

இந்த நூல் கூட 100% உண்மையாய் இருக்கும் என கூற முடியாது...உண்மையிலும் பார்க்க கற்பனையே அதிகம் இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.