Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னியில் ஆயிரக் கணக்கான பொதுமக்கள் இறந்ததை மறைக்கிறார் மகிந்தர்: றொகான் குணரெட்ண

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வியாழன், 02 ஜூன் 2011 02:27

உலக பயங்கரவாத ஆய்வு நிபுணரான பேராசிரியர் றொகாண் குணரெட்ண இலங்கையின் இறுதி யுத்ததில் பல ஆயிரம் அப்பாவி பொது மக்கள் கொல்லபட்டது ஏற்றுக்கொண்டார்.

இலங்கையில் நடைபெற்ற பயங்கரவாதம் தோற்கடிக்கபட்டமை தொடர்பான உலக நாட்டு பிரதிநிதிகளுடனான மாநாட்டில் உரையாற்றும்போது குணரெட்ண மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்...

நான் பிரபாகரனை சந்தித்திருந்தேன். நந்திகடலில் அண்மையில் போய் ஒரு இரவு தங்கி இருந்தேன். பல ஆயிரம் தமிழ் மக்களை பேட்டி கண்டேன்.

வன்னியில் கடமையாற்றிய புலிகளின் மருத்தவர்கள், பிரேத பரிசோதகர்கள், பிரேத சுத்திகரிப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் பல ஆயிரம் பேர் சரணடைந்த விடுதலைப் புலி போராளிகள் உட்பட பல பேரை பேட்டி கண்டேன்.

கடந்த கிறிஸ்மஸ் கொண்டாட்டதை கூட நான் புலி போராளிகளுடன் அவர்களின் புனர்வாழ்வு முகாமில் கொண்டாடினேன்.

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வன்னி யுத்தத்தில் பொதுமக்கள் எவரும் சாகவில்லை என சொன்னது முழுப்பொய். வன்னி யுத்தத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொல்லபட்டமையே உண்மை என்று தெரித்தார்.

பேராசிரியர் றொகான் குணரெட்ண இலங்கை அரசாங்கத்தின் வெளிவிவகார புலனாய்வு பிரிவின் பணிப்பாளராக நியமிக்கபட இருந்தார்.

இந்நிலையில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பொய் சொல்லுகிறார் என அரசாங்கத்தின் குட்டை போட்டுடைத்து, இலங்கையின் பாதுகாப்பு அமைச்சர் கோத்தாபாய ராஜபக்ஷவின் முதுகில் குத்திவிட்டதாக இலங்கை பாதுகாப்பு துறை வட்டாரங்கள் இவர்மீது ஆத்திரமடைந்துள்ளதாக தெரியவருகிறது.

source:tamilenn.

Edited by tamil arasu

  • கருத்துக்கள உறவுகள்

இருந்தாற்போல் இவருக்கு என்னவோ நடந்து விட்டது?

இவர் ஒரு சந்தர்ப்பவாதி என்பதையே இவரது பேட்டி காட்டுகின்றது!

சிங்களத்தின் நிலை உண்மையில் சரிந்து கொண்டு போவதையே இவரது 'மரம் தாவல்' காட்டுகின்றதா?

Edited by Punkayooran

இருந்தாற்போல் இவருக்கு என்னவோ நடந்து விட்டது?

இவர் ஒரு சந்தர்ப்பவாதி என்பதையே இவரது பேட்டி காட்டுகின்றது!

சிங்களத்தின் நிலை உண்மையில் சரிந்து கொண்டு போவதையே இவரது 'மரம் தாவல்' காட்டுகின்றதா?

அல்லது வழக்கம்போல் தமிழ் செய்தியாளர்களின் பூச்சுற்றலோ தெரியவில்லை.

றொகான் குணரட்ன ஒரு சிங்கள இனவாதி. இப்படிக் கூறியிருப்பது ஆச்சரியம்.

  • கருத்துக்கள உறவுகள்

இறந்தது சிங்களப்படையினால் தான் என்று அவர் சொல்லவில்லை.

பிரபாகரனை தான் 1987இல் நேர்காணல் செய்து பின்னர் ஓர் நூலாக வெளியிட்டதாக கூறுகின்றார்.

பிரபாகரனின் பெற்றோருடன் தான் முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின் உரையாடியதாகவும் கூறுகின்றார்.

யுத்த சூனியப்பிரதேசத்தில் தனது தனிப்பட்ட கணக்கின்படி சுமார் 1400 மக்கள் இறந்ததாக கூறுகின்றார்.

மேலே செய்தியில் தெளிவற்ற வகையில் மொழிபெயர்க்கப்பட்ட துணுக்குகள் உள்ளன. யூரியூப்பில் தேடல் செய்தேன். கீழுள்ள முகவரியில் தற்போது கொழும்பில் நடைபெறும் போரியல் அனுபவ மாநாட்டின் காணொளிகளை காணலாம்: http://www.youtube.com/user/defseminar#p/u/16/T8rjRxzpRcs

போர் முடிந்த நிலையிலும் மடிக்கணினிகளைப் பயன்படுத்தி போர் நடத்த வேண்டிய நிலை! ரொஹான் குணரத்ன

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={CAB77A91-07A6-492D-85FD-964EDBEA4BFB}

உங்கள் கணணிகளை பயன்படுத்தி இவருடன் தொடர்பு கொள்ளலாம்.

Dr Rohan Gunaratna

Professor, Head of International Centre for Political Violence and Terrorism Research

Education: M.A. (International Peace Studies) University of Notre Dame, Ph.D. (International Relations) University of St Andrews

Email: isrkgunaratna@ntu.edu.sg

Tel: 9435 7191

Research Interests: Terrorist organisations, terrorist operational and support networks, maritime terrorist tactics, technologies and techniques, suicide terrorism, and terrorism in the Asia-Pacific

http://www.rsis.edu.sg/about_rsis/research.html

உண்மையில் ரொஹான் மஹிந்தரை தாக்கவில்லை. ரொஹானின் கருத்து இலங்கை அரசின் பிதற்றல்கலை விட ஆபத்தானது.

ரொஹான் கூறியுள்ளார் போரில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் ஆனால் மிக சிறிய அளவே மட்டுமன்றி இந்த கொலைகள் போரில் பொது மக்கள் சிக்குப்பட்டே கொல்லப்பட்டனர். இந்த போரில் சிக்குப்பட்டு கொல்லப்பட்ட என்ர வசனம் போர்க்குற்ற விசாரணைகளில் " மன்னிப்பு" என்ற வாதத்திற்குள் சில வேளை உள்ளடக்கப்படலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.