Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வன்னிப் போரில் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ்ப் பெண் ஒருவரை விரைவில் திருமணம் செய்கிறார் சீமான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[Thursday, 2011-06-02 05:17:10]

சீமான் 3 ஆண்டுகளாக தன்னை காதலித்ததாகவும், திருமணம் செய்வதாக சொல்லி, நெருங்கி பழகியதாகவும், தற்போது தன்னை திருமணம் செய்ய மறுப்பதாகவும், இது தொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரண்ட்ஸ் படத்தில் நடித்த விஜயலட்சுமி பொலிஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து, பரபரப்பான முறைப்பாட்டு மனு ஒன்றை கொடுத்துள்ளார்.

இந்த முறைப்பாடு தொடர்பாக, சீமான் சார்பாக, அவரது வக்கீல் சந்திரசேகரன் செய்தியாளர்களிடம் தெளிவுபடுத்தினார்.

நடிகை விஜயலட்சுமி முறைப்பாடு கொடுத்தது பற்றி எங்களுக்கு எந்த தகவலும் இல்லை. விஜயலட்சுமி, அவரது அக்காள் விவாகரத்து வழக்கு தொடர்பாக உதவி கேட்டு, சீமானை ஒருமுறை சந்தித்து பேசினார். அது தொடர்பாக உதவி செய்யும்படி, சீமான் என்னிடம் கூறினார்.

அந்த ஒருமுறை மட்டுமே விஜயலட்சுமி சீமானை சந்தித்து பேசினார். அதன் பிறகு, அவர் சீமானை பார்க்கவே இல்லை.

சீமான் இலங்கை போரில் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ் பெண் ஒருவரை விரைவில் திருமணம் செய்ய உள்ளார். அவரது பெற்றோரும் இதற்கு சம்மதம் தெரிவித்து விட்டனர். இதை கெடுக்கவும், அரசியலில் சீமானுக்கு உள்ள புகழை அழிக்கவும், திட்டமிட்டு சதி செய்து, இதுபோன்ற தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது என்றார்.

source:seithy.

Edited by tamil arasu

  • கருத்துக்கள உறவுகள்

சில நாடகளிற்கு முன்னர் சாந்தி எழுதிய அன்பினி என்கிற என்கிற முன்னைநாள் போராளியின் கதையில் சீமனை பற்றிய விபரத்தினை மறைமுகமாக எழுதியது

பூலான்தேவியின் தொல்லையிலிருந்து தப்பி மூச்சு விட்ட நேரம் இன்னொருவர் அவர்களுக்கு வகுப்பெடுக்கப் புதிதாக வந்திருப்பதாகப் பிள்ளைகள் சொன்னார்கள். அதுவொரு புதிய அனுபவம். அவரைப்பற்றிப் பல விடயங்களை ஏற்கனவே அறிந்திருந்தார்கள். அவர் ஒரு தமிழகத்துக்காரர். அதையும்விட ஒரு சினிமாக்காரர். இயக்குனர் என அவரது அறிமுகத்தை அவளது நாட்டியத் தாரகையும் பாடகியுமான யாழிசை சொல்லிக் கொண்டிருந்தாள். பூலான்தேவியின் வகுப்பைவிட அது வித்தியாசமானதாக இருந்தது. அவர் தனது சினிமா அனுபவங்கள் முதல் சிறை அனுபவங்கள் வரை பகிர்ந்து கொண்டார்.

அந்தச்சினிமாக்காரரிடம் கேள்விகள் கேட்டார்கள் அவரோடு பலவிடயங்களைப் பேசினார்கள். அந்த நேரத்தில் அவரைப் புலிகளின் குரல் வானொலியின் பொறுப்பாளர் கேட்டார். ஏன் நீங்கள் திருமணம் செய்யவில்லை.உங்களுக்குப் பிடித்த ஒருவரை திருமணம் செய்யலாமே ?

அவர் சிரித்தார். பின்னர் சொல்லத் தொடங்கினார்….இ சிறை எனக்கு வீடுமாதிரி…. நான் அடிக்கடி சிறைக்குப் போய் வருவேன்… இதையெல்லாம் புரிந்து நான் சிறைக்குப் போய் வரும்வரை குடும்பப் பொறுப்புகளைக் கவனித்து என்னுடன் வாழக்கூடிய ஒருத்தி கிடைத்தால் நான் நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன். அவரது வயதுக்கு ஒத்த வயதில் இருந்த ஒரு அக்காவை மனதில் நினைத்துத்தான் அவரிடம் திருமணம் பற்றி புலிகளின் குரல் பொறுப்பாளர் கேட்டதாகப் பிள்ளைகள் கதைத்தார்கள்.

பின்னர் அந்த அக்காவுக்கு அந்தச் சினிமாக்காரரைச் சொல்லி நக்கலடிப்பார்கள். அக்கா சிரிப்பாள்…அதற்கு மேல் கதைக்கமாட்டாள். அக்காவுக்குள் அந்தச் சினிமாக்காரர் மேல் ஒருதலைக்காதல் இருந்தது. அக்கா அந்த இயக்குனரை நேசித்தாள். அவருடன் வாழும் கனவோடு இருந்தாள். ஆனால் அக்காவின் காதல் நிறைவேறவில்லை. அவளது ஒருதலைக்காதல் அவளுக்குள்ளேயே கரைந்து போனது.

  • கருத்துக்கள உறவுகள்

விஜய் லண்டனில் வாழ்ந்த ஈழப் பெண்ணை திருமணம் செய்ததை இட்டு தமிழக இந்திய ஊடகங்கள் அவரை இலங்கையின் மருமகன் என்று சொன்னது போல... அண்ணன் சீமானையும் சொல்லமாட்டார் என்று நம்புகின்றோம். அந்த வகையின் அண்ணன் சீமான் தமிழீழத்தின் மருமகனானால் சந்தோசம்..! செய்தி உண்மை என்றால் வாழ்த்துக்கள் அண்ணன் சீமான்.

  • கருத்துக்கள உறவுகள்

சில நாடகளிற்கு முன்னர் சாந்தி எழுதிய அன்பினி என்கிற என்கிற முன்னைநாள் போராளியின் கதையில் சீமனை பற்றிய விபரத்தினை மறைமுகமாக எழுதியது

அப்ப அன்பினி அக்காவையோ சீமான் அண்ணா கட்டப் போறார்... அப்பாடா.. அன்பினி அக்காக்கு வாழ்க்கை கிடச்சாச்சு. எனி புலிகளை திட்டமாட்டாங்கப்பா..! அதெப்படி பிரபாகரனால் மூளைச் சலவை செய்யப்பட்ட சீமானை மட்டும் அன்பினி அக்கா காதலிச்சாவோ தெரியல்ல...???! இருந்தாலும் வாழ்த்துக்கள் அன்பினி அக்கா.

எதுஎப்படியோ.. அன்பினி அக்கா வாழ்ந்து அவருக்காவும் பிறருக்காகவும் தமக்காக வாழத் தெரியாது உயிர் விட்ட போராளிகளின் மதிப்பும் உணர்வும் பாதுகாக்கப்பட்டாலே போதும்..! அதற்காக அண்ணன் சீமானுக்கு விசேட நன்றிகள்.

Edited by nedukkalapoovan

அவர்களை மனமார வாழ்த்துகிறோம். அதுமட்டுமல்லாமல் நாம்தமிழர் இயக்கத் தோழர்கள் பலர் போரில் பாதிக்கப்பட்டு அநாதைகளாக்கப்பட்ட பெண்களை மணமுடிக்க முன்வந்துள்ளதை அறிந்து மனமாரப் பாராட்டுவோம். (எங்கள் சொந்த இனம் போரால் பாதிக்கப் பட்ட பெண்களை ஒதுக்கித்தள்ளுவது கண்டு வெட்கப் படுகிறோம். )

Tamil Nadu film director Seeman will marry a Sri Lankan Tamil woman soon

2 June 2011, 5:50 am

by D.B.S. Jeyaraj

Tamil film director & leader of “We Tamil movement” Sebastian Simon now known as “Senthamilan Seeman” will marry a sri Lankan Tamil woman soon.

Seeman’s bride to be is the widow of LTTE leader Muthukumaru Soundarakrishnan/Lt.Col Anbumani killed on November 2nd 2007 at Kilinochchi.

Lt.Col Anbumani a.k.a Alex was a skilled photographer & was a senior deputy to former LTTE political commissar Suppiah Paramu Thamilselvan.

Both Thamilselvan&Anbumani were bombed to death in an aerial attack by the Sri Lankan Air Force at Thiruvaiaaru in Kilinochchi on 02-11-2007.

Anbumani had got married to a beautiful young tiger cadre attached to the Arts & Culture division of the LTTE just 4 months prior to his death.

Alex’s wife continued to be in the LTTE &worked in TV &Radio. After the LTTE debacle in May 2009 she surrendered to the army & was detained.

The film director-actor & head of “Naam Thamilar Iyakkam”(We Tamil movement)Sebastian Seeman heard of her plight & arranged for her release.

A hefty bribe was paid to a Tamil para-military organization aligned to the SL govt. Mrs.Soundarakrishnan was released & sent off to India.

She lived in Tamil Nadu under the benign protection of Seeman who made arrangements for her to be looked after even during his imprisonment.

Seeman had first met her when he conducted a workshop in film studies in the Wanni after being invited by LTTE leader Velupillai Prabhakaran.

Seeman who was a bachelor had indicated to the LTTE leaders that he would like to marry a LTTE woman cadre with Tamil national consciousness.

When a senior tigress was proposed in marriage to Seeman, the director turned it down & instead expressed a liking for the young, pretty girl.

Though flattered by Seeman’s attention the girl turned down the offer as she was romantically involved with a cadre in the LTTE medical unit.

A disappointed Seeman returned to India but Soundarakrishnan alias Anbumani who had his eye on the girl got married to her using rank & power.

After suffering tragedy&calamity the girl was rescued through Seeman’s efforts &found a safe haven in India. Later she agreed to marry Seeman.

The tale is something out of a romantic film & according to reports the wedding will be a quiet “Self -respect” (Suya mariyaathai) ceremony.

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களை மனமார வாழ்த்துகிறோம். அதுமட்டுமல்லாமல் நாம்தமிழர் இயக்கத் தோழர்கள் பலர் போரில் பாதிக்கப்பட்டு அநாதைகளாக்கப்பட்ட பெண்களை மணமுடிக்க முன்வந்துள்ளதை அறிந்து மனமாரப் பாராட்டுவோம். (எங்கள் சொந்த இனம் போரால் பாதிக்கப் பட்ட பெண்களை ஒதுக்கித்தள்ளுவது கண்டு வெட்கப் படுகிறோம். )

அண்ண.. இது எங்கடை சமூகத்திடம் எதிர்பார்த்தது தான். நான் கண்கூடாக கண்டிருக்கிறேன். வருந்தி இருக்கிறேன். கிளாலி பயணத்திற்காக வெளிநாட்டுக்கு ஓடி வர எம்மவர்கள் முண்டி அடிக்க.. அவர்களுக்கு வழித்துணை வழங்க கடற்கரும்புலிகள் பாதுகாப்பு வழங்கினர். ஒருபோது சிறீலங்கா சிங்கள கடற்படை கிளாலி போக்குவரத்தை ஊடறுக்க முனைய கடும் கடற்சண்டை. வெளிநாட்டுக்கு ஓடிக் கொண்டிருந்தவையை போராளிகள் பாதுகாக்க.. கரும்புலி வீரர்களாக சில இளைஞர்கள் வெடித்து இறக்கிறார்கள். நேரடிச் சண்டையிலும் சில வீரமரணங்கள்.

அடுத்த நாள் செய்தியில்.. அது வருகிறது. போராளிகளின் வித்துடல்.. யாழ் வீதி ஒன்றில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. அங்கு கூடி நின்றது.. ஒரு சில போராளிகளும்.. சில செல்லப் பிராணிகளுமே. அப்பவே நினைச்சன்.. எதுக்காக இந்தப் போராட்டம்...??! இந்த நன்றி கெட்ட மக்களுக்கு ஒரு விடுதலை அவசியமா என்று..! இருந்தாலும் போராளிகள் அப்படி நினைக்கல்ல.. அவர்கள் அதையும் கடந்து தேசப் பற்றோடு நின்றார்கள். அதை இன்று சிலர் தங்களின் சுய விளம்பரங்களுக்காக வாழ்வுக்காக கேலிக் கூத்தாக்கும் போது வலிக்கிறது. நெஞ்சு வலிக்கிறது.

அப்பவே நினைச்சன்.. எதுக்காக இந்தப் போராட்டம்...??! இந்த நன்றி கெட்ட மக்களுக்கு ஒரு விடுதலை அவசியமா என்று..! இருந்தாலும் போராளிகள் அப்படி நினைக்கல்ல.. அவர்கள் அதையும் கடந்து தேசப் பற்றோடு நின்றார்கள். அதை இன்று சிலர் தங்களின் சுய விளம்பரங்களுக்காக வாழ்வுக்காக கேலிக் கூத்தாக்கும் போது வலிக்கிறது. நெஞ்சு வலிக்கிறது.

உங்கள் ஆதங்கம் புரிகிறது நெடுக்ஸ். போராளிகள், தெசப்பறோடும், தனது வாழ்நாளை முழுமையாக போராட்டத்துக்கு அர்ப்பணித்த அப்பழுக்கற்ற தலைவனுக்காகவும் என்றோ ஒருநாள் நமது இனம் நிம்மதியோடு தமது சொந்த நிலத்தில் வாழும் என்ற நம்பிக்கையில் உயிரை தியாகம் செய்தனர்.

ஆனால் எதிரியின் பழிவாங்கல்கள் மூளை அந்த தமிழ் இனத்தை போராளிகளுக்கு எதிராகத் திருப்புவதில் குறிப்பிடத்தக்க வெற்றியை கண்டிருக்கலாம். ஆனால் அவையாவும் தற்காலிகமானவையே. தமிழ் மக்கள் எங்கும் உணர்வுள்ளவர்களாகவே உள்ளார்கள். தூண்டவேண்டிய இடத்தில் தூண்டவேண்டிய விதத்தில் தூண்டினால் எமது எதிர்பார்ப்பிற்க்கும் மேலாக வேலைசெய்வார்கள். All we need to know is "theory of provoking."

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களை மனமார வாழ்த்துகிறோம். அதுமட்டுமல்லாமல் நாம்தமிழர் இயக்கத் தோழர்கள் பலர் போரில் பாதிக்கப்பட்டு அநாதைகளாக்கப்பட்ட பெண்களை மணமுடிக்க முன்வந்துள்ளதை அறிந்து மனமாரப் பாராட்டுவோம். (எங்கள் சொந்த இனம் போரால் பாதிக்கப் பட்ட பெண்களை ஒதுக்கித்தள்ளுவது கண்டு வெட்கப் படுகிறோம். )

யாழ்கள உறுப்பினர் செந்தில்5000 அவர்களை 2009 ஏப்ரல் நியூயோர்க் கவனயீர்ப்பு நிகழ்வில் சந்தித்தேன். அவர் அமெரிக்காவில் நடைபெறும் பல கவனயீர்ப்பு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக பல மணித்தியாலங்கள் பிரயாணம் செய்பவர். வேலையில் விடுமுறை கேட்டு பெரும்பாலும் எல்லாக் கவனயீர்ப்பு நிகழ்விலும் கலந்து கொள்வார். அவர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர். அண்மையில் அவரைப் பற்றி விசாரிக்கும் போது, அவர் அமெரிக்கா வேலையை உதறிவிட்டு தமிழகம் சென்று நாம் தமிழர் இயக்கத்தில் இணைந்திருக்கிறார் என்பதை அறிந்தேன். அமெரிக்காவில் சென்ற மாதம் நடைபெற்ற நியுயோர்க் கவனயீர்ப்பில் பல நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த தமிழர்கள் கலந்து கொண்டார்கள். நாங்கள் ஈழத்தமிழர்கள் பாதிக்கப்பட்ட இனம். இருந்தாலும் எங்களை விட பல மடங்கு உணர்வு கூடியவர்கள் தமிழகத்தில் நாம் தமிழர் இயக்கத்தில் இருக்கிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.