Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு பொருளாதாரத் தடை விதிக்கக்கோரி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம்: வைகோ வரவேற்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு பொருளாதாரத் தடை விதிக்கக்கோரி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம்: வைகோ வரவேற்பு

இலங்கை மீது மத்திய அரசு பொருளாதாரத் தடை விதிக்க வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இலங்கையில் ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்த சிங்கள அரசு மீது, ஐ.நா. சபை போர்க் குற்றவாளி என்று அறிவித்து, விசாரணை நடத்த வேண்டும் என்றும், அதற்கு இந்திய அரசு ஐ.நா. சபையை வற்புறுத்த வேண்டும் என்றும், மேலும் தமிழர்களுக்கு சிங்கள அரசு துன்பம் விளைவிப்பதைத் தடுக்கவும் தமிழர்களுக்குப் பாதுகாப்பான நிலை ஏற்படுத்தவும் இலங்கை அரசு மீது பிற நாடுகளோடு சேர்ந்து இந்திய அரசும் பொருளாதாரத் தடை கொண்டு வர வேண்டும் என்றும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் கொண்டு வந்த தீர்மானம் மிகவும் வரவேற்கத் தக்கதாகும்.

சட்டமன்றத்தில் ஒருமனதாக இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது, தமிழகத்திலும் உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும் நம்பிக்கை ஊட்டுகிறது.

இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=55611

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா வைகோ அவர்களே நீங்கள் தொடர்ந்து ஈழத்தமிழனுக்கு குரல் கொடுப்பவர். தொடர்ந்தும் குரல் கொடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழினம் இணைந்தால், மீண்டுமொரு முறை

தரணியில் தலை நிமிர்ந்து நிற்கலாம்!

இதைத் தான் இன்றைய தமிழகச் செய்திகள் எங்களுக்கு உணர்த்தி நிற்கின்றன!!!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் கொண்டு வந்த தீர்மானம் மிகவும் வரவேற்கத் தக்கதாகும்
.

பாருங்கள்....... தமிழ்த்தலைவர்களே......இந்த நேரத்திலே ஒரு தமிழ்த்தலைவன் எப்படியிருக்க வேண்டுமோ அப்படித்தான் மதிப்புக்குரிய திரு வைக்கோ இருக்கின்றார். ஏனெனில் தன்னை கட்சியில் இருந்து அம்மையார் விலக்கிய பின்னும் அதை சொற்பமேனும் மனதில் வைக்காமல் [அரசியல் செய்யாமல்] தமிழின விடிவிற்காய் அம்மையாரின் தீர்மானத்திற்காக அவரைப்பாராட்டுகிறார்.இவரைப்போலல்லவா இன்று தலைவர்கள் தேவை. மிகவௌம் ஆரோக்கியமாக உள்ளதல்லவா............................

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.