Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எல்லாம் அவை பார்த்துக் கொள்ளுவினம்.. சும்மா ஊரைப் பேய்க்காட்ட நாங்க வந்து வந்து போவம் - மேனன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் தீர்வோ, போர்க்குற்ற விசாரணையோ, அவர்களே பார்த்துக்கொள்வர்’ – மேனன்

போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்ள இலங்கையிடமே ஒரு பொறிமுறை உண்டு என்று கூறியிருக்கும் இந்திய பாதுகாப்பு ஆலேசாகர் சிவசங்கர் மேனன், இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வொன்றைக் காணும் விடயம் இலங்கையின் சொந்தப் பிரச்சினை என்றும் தெரிவித்துள்ளார்.“கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு என்ற பொறிமுறையை இலங்கை அரசாங்கமே கொண்டிருப்பதால், ஐ.நா. அறிக்கை குறித்து நாம் எதுவுமே பேசவில்லை” என்று ஊடகவியலாளர்களிடம் சிவசங்கர் மேனன் தெரிவித்தார்.

இரண்டு நாள் விஜயத்தை முடித்துக்கொண்டு இந்திய தூதுக்குழு நாடு திரும்ப முன்னர் ஊடகவியலளார்களுடன் பேசிய மேனன் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டார்.

தனக்குத் திருப்திதரக்கூடிய ஒரு தீர்வைக் காணவேண்டியது இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் தெரிவித்திருக்கும் மேனன், இந்த விடயத்தில் இந்தியா அழுத்தமெதனையும் கொடுக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர் தரப்புக்கான வேகமான ஒரு தீர்வு காணப்படும் என்று இந்தியா நம்புவதாகவும், எனினும், இந்த விடயத்தை இலங்கையிடமே விட்டுவிடுவதாகவும் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உள்ளிட்ட தமிழர் பிரதிநிதிகளையும் சந்தித்துக் கலந்துரையாடிய இந்தியக் குழுவினர், இறுதிப் போர்க் காலத்தில் காணாமல்போனதாகக் கூறப்படுபவர்களுடைய விபரங்களை வெளியிடவேண்டியது ஒரு அவசர விவகாரம் என்று தெரிவித்துள்ளனர்.

இடம்பெயர்ந்த மக்களுடைய மீள்குடியேற்றம் திருப்திதருவதாக இருப்பதாகவும், எனினும், செய்வதற்கு இன்னமும் நிறையவே இருப்பதாகவும் மேனன் இதன்போது தெரிவித்தார்.

இந்திய வீடமைப்புத் திட்டம் பற்றி விளக்கிய இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவ், 50 வீடுகளை அமைக்கும் பணிகள் இந்த மாத இறுதிக்குள் நிறைவுசெய்யப்படும் என்றும், வருட இறுதிக்குள் 1,000 வீடுகள் கட்டி முடிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்திய-இலங்கை மீனவர்களிடையேயான பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு எட்டப்படும் என்றும், இரண்டு தரப்பினரும் பேசி இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வர் என்றும் மேனன் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் இரண்டு மணி நேர உரையாடல் நடத்திய இந்தியத் தூதுக் குழுவினர், இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு இந்தியப் பிரதமரிடம் ஜனாதிபதி விடுத்த வேண்டுகோளை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்தனர்.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை வருவார் என்று ஊடகவியலாளர்களிடம் தெரிவித்த மேனன், எனினும், எப்போது வருவார் என்பது இன்னமும் நிச்சயிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

(இப்படிச் சொல்வது.. ஈபிடிபி ஒட்டுக்குழு பயங்கரவாதிகள் சார்ப்பு ஜாவ்னா ரூடே இணையத்தளம். pro-epdp para military terrorist website)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் தீர்வோ, போர்க்குற்ற விசாரணையோ, அவர்களே பார்த்துக்கொள்வர்’ – மேனன்

(இப்படிச் சொல்வது.. ஈபிடிபி ஒட்டுக்குழு சார்ப்பு ஜாவ்னா ரூடே இணையத்தளம். pro-epdp terrorist website)

வாசித்துக்கொண்டு போகும்போதே தெரியவந்துவிட்டது. இது தமிழருக்கு எதுவுமே கிடைத்துவிடக்கூடாது என்று நினைப்பவர்களின் வயித்தெரிச்சல் வார்த்தை ஜாலங்கள் என்று.

முன்பு புலிகள் விட்டால் தீர்வு வரும் என்பவர்கள் தொடர்ந்து எழுதிப்பழகியதிலிருந்து விடுபடமுடியவில்லைப்போலும். தமிழரின் விதி. இவர்களும் எமக்குள்.............??? :(:(:(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாசித்துக்கொண்டு போகும்போதே தெரியவந்துவிட்டது. இது தமிழருக்கு எதுவுமே கிடைத்துவிடக்கூடாது என்று நினைப்பவர்களின் வயித்தெரிச்சல் வார்த்தை ஜாலங்கள் என்று.

முன்பு புலிகள் விட்டால் தீர்வு வரும் என்பவர்கள் தொடர்ந்து எழுதிப்பழகியதிலிருந்து விடுபடமுடியவில்லைப்போலும். தமிழரின் விதி. இவர்களும் எமக்குள்.............??? :(:(:(

இல்ல விசுகு அண்ணா. இதுதான் மேனனின் இந்திய மத்திய ஆளும் வர்க்கத்தின் உண்மையான நிலைப்பாடோவும் தெரியாது. ஏனெனில் இந்த ஒட்டுக்குழு பயங்கரவாதிகளின் தலைவர் மேனனோட ரெலிபோனில பேசினவராம். ஒருவேளை மேனன் காதுக்க இப்படி குசு குசுத்திருப்பாரோ.

தமிழக சட்ட மன்ற தீர்மானத்தை அடுத்து யாழ்ப்பாணத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடு செய்தவை. அது பிசக்கிப் போன ஆதங்கங்களும் வெளிப்படலாம்.

ஆளாளுக்கு நல்லா வியாபாரத்தைக் கொண்டு போறாங்கள் என்று மட்டும் தெரியுது. புலிகள் இல்லாதது பல எலிகளுக்கு ஒரே கும்மாளம்..! :):D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் நெடுக்ஸ்

ஆனால் ஜெயலலிதா தமிழ்நாட்டிலிருந்து எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்போது இப்படி பேசமுடியாதே........??? :(

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதாவுக்கும் இதே பதிலைத்தான் சொல்லப் போகிறாரா?அம்மாவின் ரியாக்ஷன் எப்பிடி இருக்குதென்று பார்ப்போம்.டெல்லிக்குக் கூப்பிட்டு திமுக கழட்டி விட்டு மந்திரிப் பதவிகள் தாறமெண்டு சொல்லி மாய்மால வேலை பார்க்கப் போறாங்களோ தெரியாது.மலையாளி மேனன் போகக்கையே இத உருப்படாது என்று தெரியும்.மகிந்த தீர்வு குடுத்தாலும் இந்த மலையாளி குடுக்க விடமாட்டான்.நாரயணணிட்ட தானே படிச்சவன்.பிரதமரைச்சந்திப்பது அரசியல் நடைமுறை கட்சித்தலைவரை(சோனியா)சந்திப்பது என்ன நடைமுறை?

இந்தியா (புதுடெல்லி) எந்த தீர்வையும் விரும்பவில்லை. ஆனால் என்ன செய்வது, கொழும்பும் அதன் பக்கம் இல்லாமல் சீனா பக்கம் சாய்கின்றது. தமிழகத்திலும் கருணாநிதி இல்லை.

அதேவேளை, எட்டு கோடி தமிழக மக்களையும் பகைப்பதா? இல்லை இரண்டு கோடி சிங்களவரை பகைப்பதா என்ற நிலையும் தோன்றி விடாமலும்;

எதற்காக விடுதலைப்புலிகளை புதுடெல்லி அழித்ததோ (தமிழருக்கு தனிநாடு இருக்க கூடாது) அதுவே கடைசியில் தீர்வாகி விடக்கூடாது என்ற நிலைப்பாட்டிலும்;

இந்தியா ஏதோ ஒரு தீர்வை தந்தே ஆகவேண்டிய நிலை உருவாகியுள்ளது.

இல்லாவிடில் காலப்போக்கில் தமிழகமே பிரியும் நிலை உருவாகிவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் கண்துடைப்பு நாடகம் போல் நடக்கிறது.

தமிழக முதலமைச்சரை கொங்கிரஸ் தலைவி எதிரவரும் பதினாலாம் நாள் சந்திக்கப்போவதாக செய்திகளில் வாசித்த ஞாபகம். அத்தோடு அன்றுதான் சனல் 4 இல் போர்க்குற்றங்கள் தொடர்பான மேலதிக ஆவணங்களை ஒளிபரப்ப உள்ளதாக அறியக்கூடியதாக உள்ளது. தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் சக்தியை கட்டுப்படுத்தாவிட்டால் எதிர்காலத்தில் கொங்கிரசின் தலைமைப்பதவிக்குரியவர்களை வீழ்ச்சியடையவைக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம் தென்படுகின்றன. அத்தோடு தமிழகம் மற்றும் இந்திய மத்திய அரசுகளுக்கு பெருந்தலையிடியாக சீமான். எல்லாம் ஏதோ ஒரு சங்கிலிக்கோர்வையில் இரு கோடுகள் தத்துவம்போல் நகர்த்தப்பட்டுக்கொண்டு இருக்கின்றது. மத்திய அரசு தமிழக அரசை கூர்மையான மென்போக்காலும் அதனூடாக தமிழின உணர்வாளர்களை வலிமையாகவும் பலவீனப்படுத்தும் முயற்சியில் தன்னை முழுமையாக திணித்திருக்கக்கூடும் என்று எனக்கு ஒரு எண்ணப்பாடு தோன்றுகிறது. இதில் இந்திய மத்திய அரசு ஒரு கல்லில் பல மாங்காய்களை வீழ்த்துவதற்கு முனைகிறது என்றே சொல்லத் தோன்றுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

Jun 12, 2011 / பகுதி: செய்தி /

இலங்கையில் அரசியல் தீர்வுகாணும் விடயத்தில் இந்தியா தலையிடாது: இந்திய உயர்மட்ட தூதுக்குழு

இலங்கையில் அரசியல் தீர்வுகாணும் விடயத்தில் இந்தியா தலையிடாது எனவும் அது இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்த விடயம் எனவும் இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய அரசாங்கத்தின் உயர்மட்ட தூதுக்குழு தெரிவித்துள்ளது.

இந்தியாவின் வெளிவிவகார செயலர் நிருபமா ராவ், தேசிய பாதுகாப்பு ஆலேசாகர் சிவ் சங்கர் மேனன், பாதுகாப்புச் செயலர் பிரதீப் குமார் ஆகியோரடங்கிய இந்திய தூதுக்குழு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்க் கட்சிகளுடனான கலந்துரையாடலின் போது வடக்கு இராணுவமயப்படுத்தப்படுதல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. இக்கலந்துரையாடல்கள் தொடர்பாக இந்திய ஊடகங்களிடம் சிவ்சங்கர் மேனன் கூறுகையில்,இறுதிக்கட்ட யுத்தத்தின்போது காணாமல் போனோர் தொடர்பான தகவல்களை வழங்குவதும் வடக்கில் இயல்பு வாழ்க்கையை உறுதிப்படுத்துவதுமேஉடனடி இலக்காகும் எனக்கூறினார்.

காணாமல் போனோர் தொடர்பாக விபரங்களை வெளியிடுவது குறித்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை, மீள்குடியேற்ற விடயத்தில் பணிகள் நடைபெறுகின்றபோதிலும் இன்னும் அதிகமாக செய்யப்பட வேண்டியிருப்பதாக சிவ்சங்கர் மேனன் கூறியுள்ளார்.

ஜனாதிபதியுடனான இரு மணித்தியால பேச்சுவார்த்தைகளின்போது, இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை இந்திய பிரதமர் ஏற்றுக்கொண்டதை இந்திய தூதுக்குழு தெரிவித்தது. இருதரப்புக்கும் சௌகரியமான வேளையில் இந்த விஜயம் இடம்பெறும் எனவும் இதற்கான திகதி நிர்ணயிக்கப்படவில்லை எனவும் சிவ்சங்கர் மேனன் இந்திய ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

மீனவர் பிரச்சினை குறித்து இரு நாடுகளின் மீனவர் சங்கங்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இருதரப்புக்கும் நன்மையளிக்கக்கூடிய தீர்மானங்களை அவர்கள் மேற்கொள்வார்கள் எனவும் மேனன் தெரிவித்தார்.

எனினும், இலங்கை தொடர்பாக தமிழக சட்டசபை அண்மையில் நிறைவேற்றிய தீர்மானங்கள் குறித்து கலந்துரையாடப்படவில்லை என சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.

pathivu

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் அவை பார்த்துக் கொள்ளுவினம்.. சும்மா ஊரைப் பேய்க்காட்ட நாங்க வந்து வந்து போவம் - மேனன்

  • கருத்துக்கள உறவுகள்

எற்கனவே மகிந்தர், இந்தியா எங்களை வைப்புறுத்தல் பண்ணுது ஏதாவது செய்து நாட்டைக்கிளறி விடுங்கோடா என்று ஜேவியையும் ஹெலஉறுமயவையும் கிட்டிவிடுறாராம். இந்த நிலைமையில மேனன் எப்பிடியாவது உத இலங்கையின்ர பொறுப்பில விட்டுத்தானே ராஜதந்திரமாகச் செய்து முடிக்கவேணும். ஆனபடியால் வந்த தூதுக் குழுவையும் எடுத்த எடுப்பில குறை சொல்லப்படாது பாருங்கோ

எற்கனவே மகிந்தர், இந்தியா எங்களை வைப்புறுத்தல் பண்ணுது ஏதாவது செய்து நாட்டைக்கிளறி விடுங்கோடா என்று ஜேவியையும் ஹெலஉறுமயவையும் கிட்டிவிடுறாராம். இந்த நிலைமையில மேனன் எப்பிடியாவது உத இலங்கையின்ர பொறுப்பில விட்டுத்தானே ராஜதந்திரமாகச் செய்து முடிக்கவேணும். ஆனபடியால் வந்த தூதுக் குழுவையும் எடுத்த எடுப்பில குறை சொல்லப்படாது பாருங்கோ

உண்மைதான். இராசதந்திரம் என்றால் வெளியே கதைத்த எல்லாவற்றையும் சொல்ல மாட்டார்கள். மேலும், மகிந்தருடன் இரண்டு மணிநேரம் கதைத்தது என்பது நிச்சயம் அரசியல் தீர்வு ஒன்று பற்றியே கதைத்திருக்க வேண்டும் என்பதை காட்டுகின்றன.

சில தளங்களில் சிங்கள நாட்டிற்கு ஒரு குறிப்பிட்ட கால வரையறையும் விதிக்கப்பட்டுள்ளது என கூறப்படுகின்றது.

மற்றையவர்கள் என்ன செய்வார்கள் என்பது எமது கைகளில் இல்லை ஆனால் இன்று எமக்குள் உள்ள பலத்தை, கிடைத்துள்ள வழிகளை ( சட்டசபை தீர்மானம், ஐ.நா.அறிக்கை..) பயன்படுத்தி பரப்புரைகளை அழுத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழக முதல்வரைச் சமாளிக்க ஒரு ப+ச்சாண்டி. இன்னொரு நாட்டின் இறையாண்மையில் மற்றவர்கள் தலையிட முடியாது என்று தமிழர்களைக் கொன்று குவித்தபோது சொன்னவர்கள். இப்போது எப்படி சாத்தியமாகும். அப்படி என்றால் லிபியா, எகிப்து, அவ்கானிஸ்த்தான், ஈராக்கில் எல்லாம் நடந்தது எப்படி? எல்லாம் தன்னலம், சுயநலம். தமிழர்கள் தங்களுக்கு விரும்பியதை வாங்கமுடியாது. அவர்கள் வாங்கித்தருவதை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பது தான் நிலைமை. அதற்கும் இவர்களால் அதை வாங்கமுடியாத நிலைமை பரிதாபத்திற்கு உரியவிடயம். இறையாண்மை உடன் கூடிய தமிழீழம் தான் தமிழரின் உரிமையை நிலை நாட்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.