Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாம் ஓர் அன்னிய நாடு நீங்கள் தான் பேசி இணக்கப்பாட்டிற்கு வரவேண்டும்: இந்தியா

Featured Replies

மலேசிய நிருபர்

ஞாயிற்றுகிழமை, யூன் 12, 2011

கூட்டமைப்புடன் என்ன பேசினார்கள் இந்திய குழு என்பது இப்போதுதான் கசிகின்றது. உண்மையில் இந்த பேச்சுவார்த்தையில் இந்திய குழுவினர் எந்தவிதமான அழுத்தத்தினையும் இலங்கைக்கு கொடுக்கவில்லை அத்துடன் கூட்டமைப்பிற்கும் எந்த வாக்குறுதியினையும் நம்பிக்கையினையும் கொடுக்கவில்லை. தாம் ஒரு அன்னிய நாடு நீங்கள்தான் பேசி தீர்மானத்திற்கு வரவேண்டும் என கூறியுள்ளனர் இந்திய தரப்பினர்.

.

பதின்மூன்றாவது சீர்திருத்தத்திற்கு அப்பால் முன்னோக்கி நகர்ந்து இனப்பிரச்சனைக்குத் தீர்வுகாண்பதில் இலங்கை அரசு முனைப்புடன் செயற்டுவதாக இந்திய அரசின் தேசிய பாதுகாப்புச் செயலாளர் சிவசங்கர்மேனன் தெரிவித்திருக்கும் அதேவேளை;

.

தென்னிலங்கையின் எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவிப்பதால் காணி, பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபைகளுக்குப் பகிர்ந்து வழங்க முடியாது என்று இலங்கைத் தரப்பு இந்தியத் தூதுக்குழுவிடம் சுட்டிக்காட்டியுள்ளது.

.

மாகாண சபைகளுக்கு எந்தெந்த அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கப் போகிறீர்கள் என்று இந்தியத் தூதுக்குழுவினர் கேட்டபோதே இலங்கைத் தரப்பு மேற்கண்டவாறு தெரிவித்ததாக அறியவந்தது.இதேவேளைஇனப்பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறும் தமிழர்களுடனான பேச்சை விரைந்து நடத்துமாறும் தமது தரப்பு வற்புறுத்தியதாகவும் இந்திய அரசின் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் இந்திய ஊடகவியலாளருக்குத் தெரிவித்திருக்கிறார்.

.

அரசு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்களை ஆரம்பித்திருப்பதாகவும், எல்லாத் தரப்புகளுக்கும் ஏற்புடைய தீர்வு ஒன்றைக் காண்பதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் இலங்கைத் தரப்பில் அறிவிக்கப்பட்டது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்திய பேச்சுக்களின்போது, அரசுடன் பேசி ஓர் இணக்கப்பாட்டுக்கு வருமாறும், தான் ஒரு வெளிநாடு என்ற வகையில் அதனையே அரசிடமும் கூறமுடியும். அதற்கு அதிகமாக எதனையும் செய்யமுடியாது என்று தெரிவித்ததாகவும் சிவ்சங்கர் மேனன் கூறியுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

அரசு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்களை ஆரம்பித்திருப்பதாகவும், எல்லாத் தரப்புகளுக்கும் ஏற்புடைய தீர்வு ஒன்றைக் காண்பதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் இலங்கைத் தரப்பில் அறிவிக்கப்பட்டது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்திய பேச்சுக்களின்போது, அரசுடன் பேசி ஓர் இணக்கப்பாட்டுக்கு வருமாறும், தான் ஒரு வெளிநாடு என்ற வகையில் அதனையே அரசிடமும் கூறமுடியும். அதற்கு அதிகமாக எதனையும் செய்யமுடியாது என்று தெரிவித்ததாகவும் சிவ்சங்கர் மேனன் கூறியுள்ளார்.

இந்தச் சிவசங்கர் மேனன்,எங்கள் மக்களைக் கொன்று குவிக்க ஆயுதங்கள் வழங்கிய போது,இந்த வெளி நாட்டு மனோநிலை எங்கே போனது?

இந்தியன் ஒருவன் தனது செயல்களுக்குப் பொறுப்பை ஏற்றுக்கொவதில்லை என்று, இலண்டனில் ஒரு பிரபல்யமான வர்த்தக நிலைய அதிபர் ஒரு முறை என்னிடம் கூறினார்!

தங்கள் கருத்து தவறானது என்று அப்போது கூறினேன்! போகப் போகப் புரிந்து கொள்வாய் என்று கூறினார்! இப்போது நன்றாக, அவர் கூறியதின் அர்த்தம் புரிகின்றது!!!

  • கருத்துக்கள உறவுகள்

நாம் ஓர் அன்னிய நாடு நீங்கள் தான் பேசி இணக்கப்பாட்டிற்கு வரவேண்டும்: இந்தியா

Edited by தமிழ் அரசு

  • கருத்துக்கள உறவுகள்

[ ஞாயிற்றுக்கிழமை, 12 யூன் 2011, 10:35 GMT ] [ சிறப்புச் செய்தியாளர் ]

நியாயமான தீர்வுக்கு இந்தியா உதவும் என்று வாக்குறுதி

நிலைத்து நீடிக்கக் கூடிய- நியாயமான தீர்வு ஒன்றை தமிழர்கள் பெற்றுக் கொள்ள இந்தியா தனது முழுப்பங்களிப்பையும் வழங்கும் என்று கொழும்பு வந்த இந்தியக் குழுவினர் தம்மிடம் உறுதியளித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் உயர்மட்டக் குழுவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு நேற்று முற்பகல் ஒன்றேகால் மணி நேரம் இடம்பெற்றது.

இந்தச் சந்திப்புத் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் கருத்து வெளியிடுகையில், இந்தியத் தரப்புடன் நடத்திய பேச்சுக்கள் நம்பிக்கை தரக்கூடியதாக இருந்தது என்று குறிப்பிட்டார்.

தமிழ் பேசும் மக்களின் முக்கிய விடயங்கள் குறித்து தம்மால் முன்வைக்கப்பட்ட மூன்று கோரிக்கைகளையும் இந்தியத் தரப்பு நியாயமானவை என்று ஏற்றுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரசுடன் நடத்தப்பட்ட ஆறுகட்டப் பேச்சுக்களிலும் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் இழுத்தடிக்கும் போக்கையே சிறிலங்கா அரசு கடைப்பிடிப்பதாகவும் இந்திய அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டியதாகவும் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கப்படுவது மற்றும் தமிழ்ப் பிரதேசங்கள் இராணுவ மயப்படுத்தப்படுவ குறித்தும் இந்திய அதிகாரிகளிடம் முறையிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களின் விபரங்களை விரைவில் வெளியிடவிருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் தமக்கு உறுதி வழங்கியதாக இந்தியக் குழுவினர் தம்மிடம் தெரிவித்ததாகவும் சுரேஸ் பிறேமச்சந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

புதினப் பலகை.

  • கருத்துக்கள உறவுகள்

நாம் ஓர் அன்னிய நாடு நீங்கள் தான் பேசி இணக்கப்பாட்டிற்கு வரவேண்டும்: இந்தியா

1987 இல் ராஜீவ் காந்திக்கு இது விளங்காமல் போய்ட்டுது..! :(

1987 இல் ராஜீவ் காந்திக்கு இது விளங்காமல் போய்ட்டுது..! :(

2009 வரை புலிகளுக்கும் இது விளங்கவில்லை... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

2009 வரை புலிகளுக்கும் இது விளங்கவில்லை... :lol:

புலிகளுக்கு என்ன விளங்கவில்லை? :unsure: இலங்கை அரசுடன் தான் பேச வேண்டும் என்பதா? :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.