Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆனந்தகுமாரசுவாமி முகாம் மாணவர்களுக்கு பாதணிகள் தாருங்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யுத்தத்தால் பாதிக்கப்பட்டு அடிப்படை வசதிகளை இழந்த ஆயிரமாயிரம் மாணவர்கள் தமது கல்வியைத் தொடர வழியின்றி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தாயகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வருகின்ற விண்ணப்பங்களும் வேண்டுதல்களும் உதவியென்றே வந்து கொண்டிருக்கிறது.

இம்முறையும் புளியங்குளம் அ.த.க.பாடசாலையில் கல்விகற்கும் மாணவர்கள் 59பேருக்கான பாதணிகளுக்கான உதவிகோரப்பட்டுள்ளது. இம்மாணவர்கள் ஆனந்த குமாரசுவாமி முகாமில் வாழ்ந்து வருகிறார்கள்.

இம்மாணவர்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கிறார்கள். அன்றாடத் தேவைகளை சமாளிக்க முடியாத இந்தப்பிஞ்சுகளின் கல்வித்தேவைகளோ மலையளவு குவிந்திருக்கின்றன. தங்கள் குழந்தைகளின் கல்வியை மட்டுமே நம்பும் அந்தப் பெற்றோர்களால் தங்கள் குழந்தைகளுக்கான கல்வித் தேவைகளை நிறைவேற்ற முடியாது தத்தளிக்கின்றனர்.

இந்த 59மாணவர்களுக்கும் பாதணிகள் வழங்குவதற்காக உறவுகளே உங்களிடம் கையேந்தி நிற்கிறோம். கருணையுள்ளம் படைத்தவர்களிடமிருந்து இம்மாணவர்களுக்காகக் கையேந்தி நிற்கிறோம்.

ஒரு மாணவருக்கு ஒரு சோடி பாதணிகளுக்கு அண்ணளவாக – 750,00ரூபா தேவைப்படுகிறது.

59 மாணவர்களுக்கும் 750,00 x 59 =44250,00/= ரூபா தேவைப்படுகிறது.

ஒரு பாதணிக்கு 5,00€க்கள் மொத்தம் 59 பாதணிகளுக்கும் – 59 x 5= 295,00€க்கள் தேவை.

ஏப்றல் மாதம் நீனாக்கேணி மலைமுந்தல் மகாவித்தியாலய மாணவர்களுக்காக சிங்கப்பூரிலிருந்து சிவரூபன் என்ற உறவு 13025,00/=ரூபாவினை வழங்கியிருந்தார். ஆனால் நீனாக்கேணி மாணவர்களுக்கு நிரந்தரமான கற்கை உதவிகளை வேறொரு நிறுவனம் வழங்க முன்வந்தமையால் நீனாக்கேணி மாணவர்களுக்கான உதவியினை வன்னிமாணவர்களுக்கு பயன்படுத்த முடிவு செய்திருந்தோம். சிவரூபன் என்ற உறவின் உதவியினை ஆனந்தகுமாரசுவாமி முகாம் மாணவர்களுக்கான பாதணிகளுக்காகப் பயன்படுத்தவுள்ளோம்.

சிவரூபன் சிங்கப்பூர் – 13025,00/=

றசோதனா யேர்மனி – 5,00€ (றசோதனா மாதாந்தம் இவ்வுதவியினை ஒரு மாணவருக்காக வாழங்கிவருகிறார்)

குலவீரசிங்கம் மந்தாகினி பிரித்தானியா -29,29€

மொத்தம் இதுவரை ஆனந்தகுமாரசுவாமி மாணவர்களுக்காக – 25975,00ரூபாக்கள் கையிருப்பில் உள்ளது.

44250,00/= – 18275,00 = 25975,00 ரூபாக்கள் இன்னும் தேவைப்படுகிறது. அண்ணளவாக 175,00€க்கள் தேவை.

உதவ விரும்புவோர் தொடர்பு கொள்ளுங்கள்.

Nesakkaram e.V.

Hauptstrasse 210

55743 Idar-Oberstein

Germany

Telephone: +49 (0)6781 70723

Fax: +49 (0)6781 70723

nesakkaram@gmail.com

Skype – Shanthyramesh

Skype – Srigowripal

www.nesakkaram.org

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இம்மாணவர்களுக்கான மேலும் ஒருவர் உதவியுள்ளார். யாழ் கள உறவு அம்பலத்தார் 3பாதணிகளுக்கான உதவியாக - 14,47€ பணத்தை பேபால் ஊடாக வழங்கியிருக்கிறார்.

175,00€ - 14,47€ = 160,53€ இன்னும் தேவைப்படுகிறது.

Edited by shanthy

சப்பாத்து அணிவது என்பது சிறுவயதில் எனக்கும் முன்பு ஓர் கனவாகவே இருந்தது. எல்லோருக்கும் சப்பாத்து அணிவதற்கு குடும்பங்களில் பொருளாதார நிலமைகள் இடம் கொடுப்பது இல்லை. ஆனால்.. சப்பாத்து கால்களை பாதுகாக்கும், விளையாட்டுக்களில் ஈடுபடும்போது மிகவும் உதவியாக இருக்கும், அத்துடன் மாணவர்களிற்கு self esteemஐ உயர்த்தும். நீங்கள் மேலே பாதணி என்று கூறுவது சப்பாத்தையா அல்லது செருப்பும் உள்ளடக்கமா? உங்கள் முயற்சிகள் வெற்றிபெற வேண்டும், வசதி, சந்தர்ப்பம் கிடைக்கும்போது உதவ முயற்சிக்கின்றேன்.

கலைஞன்,

மேற்படி குழந்தைகளுக்கு சப்பாத்துக்கள் தான் வழங்கவுள்ளோம்.

சப்பாத்து எங்கள் பள்ளிக்கூடக்காலத்தில் ஒரு கனவுதான். நானும் அந்தக் கனவோடு இருந்திருக்கிறேன். ஆனால் வீட்டுப்பொருளாதார நிலமை பள்ளிக்கூடத்தைவிட்டு வெளியேறும் வரை நிறைவேறவேயில்லை. எங்களது கனவுகள் இப்போது பிள்ளைகளுக்கு கட்டாயமான தேவையாக உள்ளது. பல பாடசாலைகளின் ஆசிரியர்கள் சப்பாத்த அணியாத பிள்ளைகளுக்கு அடித்துத் தண்டனைகூட வழங்கியிருக்கிறார்கள். கடந்தவருடம் அத்தகைய மாணவர்கள் சிலரது ஒலிப்பதிவினை ஒலிபரப்பியிருந்தேன்.

700மாணவர்களுக்கு மேல் சப்பாத்துக்கள் உதவி கேட்டுள்ளார்கள். ஆனால் முதல் கட்டம் மேற்படி முகாமில் உள்ள 59மாணவர்களுக்கான உதவியைச் செய்யும் முயற்சியின் பின் மற்றைய மாணவர்களுக்கானதையும் செய்யலாமென நம்புகிறேன். உதவிகள் கிடைக்கும் நிலமையைப் பொறுத்து அடுத்ததடுத்த முயற்சியில் இறங்கலாம்.

உங்கள் உதவி - 35,47€ பேபால் வந்துள்ளது. நன்றிகள்.

கலைஞன் கனடா - 35,47€ ஆனந்தகுமாரசுவாமி முகாம் மாணவர்களுக்காக வழங்கியிருக்கிறார்.

160,53€ - 35,47€ = 125,06€ இன்னும் தேவைப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சப்பாத்தை வாங்கிக் கொடுத்தால் அது 6 மாதத்தில் பிஞ்சு போயிடும். அதுக்கு அப்புறம்..????! அந்தப் பிள்ளைகள் சப்பாத்துக்கு மீண்டும் புலம்பெயர் மக்களின் கைகளை எதிர் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்.

அந்தப் பிள்ளைகளுக்கு நிரந்தரமாக சப்பாத்து வழங்கப்பட வேண்டின் இரண்டு வழிமுறைகள் உண்டு.

1. வன்னியிலேயே ஒரு சப்பாத்தை உற்பத்தி செய்யக் கூடிய தொழிற்கூடத்தை அமைத்து வருமானம் குறைந்த பிள்ளைகளுக்கு இலவசமாக வழங்குதல். மீதமானவற்றை வியாபாரத்துக்கு வழங்கி வேலை வாய்ப்புக்களை அதிகரித்தல்.

2. பாதணி வியாபாரம் செய்யும் தமிழர்களின் நிறுவனங்களோடு ஒப்பந்த அடிப்படையில் குறித்த பிள்ளைகளுக்கு பாடசாலைகளூடு அல்லது கிராமசேவகர்களூடு குறைந்தது 3 ஆண்டுகளுக்கு கிரமமாக சப்பாத்து வழங்கச் செய்வது. குறிப்பாக பள்ளிச் சப்பாத்துக்களும்.. பூட்ஸ் எனப்படும் பாம்புக்கடிக்கு எதிரான சப்பாத்துக்களும் வழங்குதல்.

இந்த இரண்டில் எந்த ஒன்றையாவது தெரிவு செய்து அதனை நடைமுறைப்படுத்த எவராவது உதவி கேட்டு வந்தால் நிச்சயமாக எமது இங்கிலாந்து தேசக்கரத்தினூடாக இயன்ற உதவிகளை வழங்குவோம். எனியும் எனியும்.. தற்காலிக உதவிகளூடு மக்களை கையேத்து நிலையில் வைத்திருப்பதில் எமக்கு உடன்பாடில்லை.

அந்த மக்களுக்கு ஒரு நிரந்தர வருவாய்க்கான.. அல்லது வசதிக்கான வழிமுறைகளே இன்றைய தேவை. அவர்களின் வறுமை.. போரின் பாதிப்புக்களை மையமாக வைத்து அவர்கள் மீது கருணை காட்டுதல் எனும் பெயரில் அவர்களை மற்றவர்களில் தங்கி இருக்கச் செய்வது அவர்களை உள்ளூரில் சிங்கள எதிரிகளும் பிறரும் துஸ்பிரயோகம் செய்ய அனுமதிப்பதோடு பெண்களை பாலியல் தொழிலை செய்யவும் ஊக்குவிக்கின்றன. இவற்றிற்கு எல்லாம் மூல காரணம்.. அந்த மக்களின் தேவைகள் நிரந்தரமாக தீர்க்கப்பட வசதிகள் செய்யப்படாமையே..! இதனை பலரும் கருத்திற் கொண்டு செயற்பட்டால்.. சிறுகச் சிறுக சிதறும் பணத்தை திரட்டி ஒரு முதலீடாக்கி வருவாயும் நிரந்தரமும் உள்ள வகைக்கு அதனை மக்களிடத்தில் பயன்படுத்து முடியும்.

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேற்படி மாணவர்களுக்காக குமாரசாமி அவர்கள் 49,05€ பேபால் ஊடாக பங்களித்திருக்கிறார்.

125,06€ - 49,05€ = 76,01€ இன்னும் தேவைப்படுகிறது.

76,01€ ஐமு/புதுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்கப்பாடசாலை பிரான்ஸ் பழைய மாணவர் ஒன்றியத்தினர் வழங்கியிருக்கிறார்கள். அடுத்த கட்டம் ஆனந்தகுமாரசுவாமிமுகாம் மாணவர்களுக்கான உதவிகள் வழங்கப்பட்டதும் இப்பக்கத்தில் விபரங்கள் தெரிவிக்கப்படும்.

உதவியவர்கள் அனைவருக்கும் இதயம் நிறைந்த நன்றிகள்.

Edited by shanthy

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

76,01€ ஐ மு/புதுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்கப்பாடசாலை பிரான்ஸ் பழைய மாணவர் ஒன்றியத்தினர் வழங்கியிருக்கிறார்கள். அடுத்த கட்டம் ஆனந்தகுமாரசுவாமிமுகாம் மாணவர்களுக்கான உதவிகள் வழங்கப்பட்டதும் இப்பக்கத்தில் விபரங்கள் தெரிவிக்கப்படும்.

உதவியவர்கள் அனைவருக்கும் இதயம் நிறைந்த நன்றிகள்.

Edited by shanthy

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சப்பாத்தை வாங்கிக் கொடுத்தால் அது 6 மாதத்தில் பிஞ்சு போயிடும். அதுக்கு அப்புறம்..????! அந்தப் பிள்ளைகள் சப்பாத்துக்கு மீண்டும் புலம்பெயர் மக்களின் கைகளை எதிர் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்.

அந்தப் பிள்ளைகளுக்கு நிரந்தரமாக சப்பாத்து வழங்கப்பட வேண்டின் இரண்டு வழிமுறைகள் உண்டு.

1. வன்னியிலேயே ஒரு சப்பாத்தை உற்பத்தி செய்யக் கூடிய தொழிற்கூடத்தை அமைத்து வருமானம் குறைந்த பிள்ளைகளுக்கு இலவசமாக வழங்குதல். மீதமானவற்றை வியாபாரத்துக்கு வழங்கி வேலை வாய்ப்புக்களை அதிகரித்தல்.

2. பாதணி வியாபாரம் செய்யும் தமிழர்களின் நிறுவனங்களோடு ஒப்பந்த அடிப்படையில் குறித்த பிள்ளைகளுக்கு பாடசாலைகளூடு அல்லது கிராமசேவகர்களூடு குறைந்தது 3 ஆண்டுகளுக்கு கிரமமாக சப்பாத்து வழங்கச் செய்வது. குறிப்பாக பள்ளிச் சப்பாத்துக்களும்.. பூட்ஸ் எனப்படும் பாம்புக்கடிக்கு எதிரான சப்பாத்துக்களும் வழங்குதல்.

இந்த இரண்டில் எந்த ஒன்றையாவது தெரிவு செய்து அதனை நடைமுறைப்படுத்த எவராவது உதவி கேட்டு வந்தால் நிச்சயமாக எமது இங்கிலாந்து தேசக்கரத்தினூடாக இயன்ற உதவிகளை வழங்குவோம். எனியும் எனியும்.. தற்காலிக உதவிகளூடு மக்களை கையேத்து நிலையில் வைத்திருப்பதில் எமக்கு உடன்பாடில்லை.

அந்த மக்களுக்கு ஒரு நிரந்தர வருவாய்க்கான.. அல்லது வசதிக்கான வழிமுறைகளே இன்றைய தேவை. அவர்களின் வறுமை.. போரின் பாதிப்புக்களை மையமாக வைத்து அவர்கள் மீது கருணை காட்டுதல் எனும் பெயரில் அவர்களை மற்றவர்களில் தங்கி இருக்கச் செய்வது அவர்களை உள்ளூரில் சிங்கள எதிரிகளும் பிறரும் துஸ்பிரயோகம் செய்ய அனுமதிப்பதோடு பெண்களை பாலியல் தொழிலை செய்யவும் ஊக்குவிக்கின்றன. இவற்றிற்கு எல்லாம் மூல காரணம்.. அந்த மக்களின் தேவைகள் நிரந்தரமாக தீர்க்கப்பட வசதிகள் செய்யப்படாமையே..! இதனை பலரும் கருத்திற் கொண்டு செயற்பட்டால்.. சிறுகச் சிறுக சிதறும் பணத்தை திரட்டி ஒரு முதலீடாக்கி வருவாயும் நிரந்தரமும் உள்ள வகைக்கு அதனை மக்களிடத்தில் பயன்படுத்து முடியும்.

உங்கள் அரிய ஆலோசனைகளுக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றிகள். தொடர்ந்தும் இப்படியான ஆலோசனைகளை நீங்கள் வழங்க வேண்டுமென வேண்டிக்கொள்கிறோம். :(

Edited by shanthy

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சப்பாத்து அணிவது என்பது சிறுவயதில் எனக்கும் முன்பு ஓர் கனவாகவே இருந்தது. எல்லோருக்கும் சப்பாத்து அணிவதற்கு குடும்பங்களில் பொருளாதார நிலமைகள் இடம் கொடுப்பது இல்லை. .

இணைகிறேன்...

முந்தி தமிழ் புத்தகத்தில் வந்த கதை ஒன்று..நான் நினைக்கிறன் 7 வகுப்பு..ஒரு வன்னி பொடியன் கொழும்பில நடக்க விளையாட்டு போட்டிக்கு சப்பத்தில்லாம் போவான்..அழகாக எழுதிருந்தார்கள், பல தடவைகள் வாசித்துள்ளேன்..அந்த பொடியனுக்கு பெயர் -கதையில்- வரதன், அவருடைய பெனியனிலும் பாலைப்பழ கயர், அவர் கவலைப்படுவார் அந்த நம்பர் சீட்டு இன்னும் கொஞ்சம் பெரிதாய் இருந்தால் அது மறைத்து போய்விடும் என்று..

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்......

நெடுக்காலபோவான் தங்களின் கருத்து உண்மையானதே ஆனால் தற்போதைய உடனடி தேவையை பூர்த்திசெய்து கொண்டு அடுத்தகட்டத்திற்க்கு நகர்வதே சரியாகும் பல கஷ்டங்களுக்கு மத்தியில் செயற்பட்டுக்கொண்டு இருக்கு நேசக்கரம் அமைப்பினை பலப்படுத்துங்கள் அதுவே முக்கியதேவை!!

யுத்தத்தால் பாதிக்கப்பட்டு அடிப்படை வசதிகளை இழந்த ஆயிரமாயிரம் மாணவர்கள் தமது கல்வியைத் தொடர வழியின்றி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தாயகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வருகின்ற விண்ணப்பங்களும் வேண்டுதல்களும் உதவியென்றே வந்து கொண்டிருக்கிறது.

இம்முறையும் புளியங்குளம் அ.த.க.பாடசாலையில் கல்விகற்கும் மாணவர்கள் 59பேருக்கான பாதணிகளுக்கான உதவிகோரப்பட்டுள்ளது. இம்மாணவர்கள் ஆனந்த குமாரசுவாமி முகாமில் வாழ்ந்து வருகிறார்கள்.

இம்மாணவர்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கிறார்கள். அன்றாடத் தேவைகளை சமாளிக்க முடியாத இந்தப்பிஞ்சுகளின் கல்வித்தேவைகளோ மலையளவு குவிந்திருக்கின்றன. தங்கள் குழந்தைகளின் கல்வியை மட்டுமே நம்பும் அந்தப் பெற்றோர்களால் தங்கள் குழந்தைகளுக்கான கல்வித் தேவைகளை நிறைவேற்ற முடியாது தத்தளிக்கின்றனர்.

இந்த 59மாணவர்களுக்கும் பாதணிகள் வழங்குவதற்காக உறவுகளே உங்களிடம் கையேந்தி நிற்கிறோம். கருணையுள்ளம் படைத்தவர்களிடமிருந்து இம்மாணவர்களுக்காகக் கையேந்தி நிற்கிறோம்.

ஒரு சோடி பாதணிகளுக்கு அண்ணளவாக – 750,00ரூபா தேவைப்படுகிறது.

59 மாணவர்களுக்கும் 750,00 x 59 =44250,00/= ரூபா தேவைப்படுகிறது.

ஒரு பாதணிக்கு 5,00€ க்கள் மொத்தம் 59 பாதணிகளுக்கும் – 59 x 5= 295,00€க்கள் தேவை.

சிவரூபன் சிங்கப்பூர் – 13025,00/=

றசோதனா யேர்மனி – 5,00€ (றசோதனா மாதாந்தம் இவ்வுதவியினை ஒரு மாணவருக்காக வாழங்கிவருகிறார்)

குலவீரசிங்கம் மந்தாகினி பிரித்தானியா -29,29€

மொத்தம் இதுவரை ஆனந்தகுமாரசுவாமி மாணவர்களுக்காக – 25975,00ரூபாக்கள் கையிருப்பில் உள்ளது.

44250,00/= – 18275,00 = 25975,00 ரூபாக்கள் இன்னும் தேவைப்படுகிறது. அண்ணளவாக 175,00€க்கள் தேவை.

நேசக்கரத்துக்கு முதலில் பாராட்டுக்கள்.

ஆனால் இங்கு ஒருவிடயம் மனதை நெருடுகிறது.

"ஒரு சோடி பாதணிகளுக்கு அண்ணளவாக – 750,00ரூபா தேவைப்படுகிறது." என்று குறிப்பிடப்பட்டுள்ளது. "சிவரூபன் சிங்கப்பூர் – 13025,00/=" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை வழமையாக 750.00 ரூபா அல்லது 750/= ரூபா அல்லது 750/00 ரூபா என்றுதான் எழுதுவார்கள்.

ஆனால், சகல இடங்களிலும் முற்றுப்புள்ளிக்குப் பதிலாக காற்புள்ளி (கம) பாவித்துள்ளீர்கள். இதை தொடர்ந்து பாவித்துள்ளீர்கள். அதனால் இதை தவறுதலாக செய்ததாக எடுக்கவே முடியாது.

இதுதான் தற்போதைய மேலைத்தேச நடைமுறையா? அறிய ஆவல்.

அல்லது வேறு ஏதும் நோக்கமா?

ஆராவமுதன் வேறெந்த நோக்கமும் இல்லை. இந்த நாட்டில் இந்த ,(கம) முறைதான் பாவிக்கிறார்கள். கடைகளில் விலைப்பட்டியல் எழுதும் போதும் இப்படித்தான் எழுதுவார்கள். நான் பணிபுரியும் இடத்திலும் இதேபோலவே எழுதுமாறு எனது முதலாளி ஒருதரம் குறிப்பிட்டுச் சொல்லியிருந்தார். அதையே நானும் பாவித்துள்ளேன்.

இந்தக்குறியீடு உங்களை நெருடிவிட்டதற்கு மன்னித்துக் கொள்ளுங்கள். ஆனாலும் இதனை நீங்கள் சுட்டிக்காட்டும் வரையிலும் கவனிக்காது விட்டுவிட்டேன். தொடர்ந்து இத்தகைய தவறுகள் காணுமிடத்து தெரிவியுங்கள்.

வணக்கம்......

நெடுக்காலபோவான் தங்களின் கருத்து உண்மையானதே ஆனால் தற்போதைய உடனடி தேவையை பூர்த்திசெய்து கொண்டு அடுத்தகட்டத்திற்க்கு நகர்வதே சரியாகும் பல கஷ்டங்களுக்கு மத்தியில் செயற்பட்டுக்கொண்டு இருக்கு நேசக்கரம் அமைப்பினை பலப்படுத்துங்கள் அதுவே முக்கியதேவை!!

tigertel மெயில் போட்டேன் பதில் வரவில்லை. விடயம் அவசரம் தயவுசெய்து தொடர்பு கொள்ளவும்.

ஆராவமுதன் கீழ் உள்ள இணைப்பில் தெளிவான விளக்கம் உள்ளது பாருங்கள்.

=list&tx_kikproducts_pi1[controller]=Product&cHash=2bc2897ab61c62f952989794b19f39c8"]http://www.kik-textilien.com/kinder/teens/?tx_kikproducts_pi1[action]=list&tx_kikproducts_pi1[controller]=Product&cHash=2bc2897ab61c62f952989794b19f39c8

ஆராவமுதன் வேறெந்த நோக்கமும் இல்லை. இந்த நாட்டில் இந்த ,(கம) முறைதான் பாவிக்கிறார்கள். கடைகளில் விலைப்பட்டியல் எழுதும் போதும் இப்படித்தான் எழுதுவார்கள். நான் பணிபுரியும் இடத்திலும் இதேபோலவே எழுதுமாறு எனது முதலாளி ஒருதரம் குறிப்பிட்டுச் சொல்லியிருந்தார். அதையே நானும் பாவித்துள்ளேன்.

இந்தக்குறியீடு உங்களை நெருடிவிட்டதற்கு மன்னித்துக் கொள்ளுங்கள். ஆனாலும் இதனை நீங்கள் சுட்டிக்காட்டும் வரையிலும் கவனிக்காது விட்டுவிட்டேன். தொடர்ந்து இத்தகைய தவறுகள் காணுமிடத்து தெரிவியுங்கள்.

ஆராவமுதன் கீழ் உள்ள இணைப்பில் தெளிவான விளக்கம் உள்ளது பாருங்கள்.

=list&tx_kikproducts_pi1[controller]=Product&cHash=2bc2897ab61c62f952989794b19f39c8"]http://www.kik-textilien.com/kinder/teens/?tx_kikproducts_pi1[action]=list&tx_kikproducts_pi1[controller]=Product&cHash=2bc2897ab61c62f952989794b19f39c8

நன்றிகள் சாந்தி அக்கா.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.