Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சனல் – 4 தமிழகத்தில் உறைநிலை மௌனம்

Featured Replies

சனல் – 4 தமிழகத்தில் உறைநிலை மௌனம்

சனல்-4 தொலைக்காட்சி அம்பலப்படுத்திய சிறீலங்கா கொலைக்களம் என்ற ஒரு மணி நேர ஒளிநாடா உலகளவில் பாரிய ஊமைக் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்படியான செய்திகளை பொதுவாக தமிழகத்தின் பத்திரிகைகளும், இணையங்களும் கூடுதல் முக்கியம் கொடுத்து எழுதுவது வழமை. ஆனால் சனல் 4 வெளியான பின்னர் அனைவரும் அடக்கி வாசிப்பதை காணமுடிகிறது.

உண்மை துல்லியமாக வெளிப்படும் நேரம் எதற்காக மௌனம் காக்க வேண்டும் என்ற கேள்வி பல்வேறு உப கேள்விகளை உருவாக்குகிறது.

சனல் 4 நிகழ்வு புலிகளுக்கு ஆதரவானது என்று கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆனால் அதில் புலிகள் செய்த குற்றச் செயல்களும் பக்கச்சார்பின்றி எடுத்துரைக்கப்படுகிறது. மேலும் சரணடைந்த ஒருவரை புலி என்ற தலைப்பில் புறந்தள்ள முடியாது. அத்தகையோரை பாலியல் பலாத்காரம் செய்து, சித்திரவதை செய்து, இறக்கும் போது அவமானம் செய்து, இறந்த பின்னும் அவமானம் செய்து, இது எமது நாடு என்று சிங்களத்தில் கொக்கரிப்பதை பார்த்த பின்னரும் தமிழக ஊடகங்கள் மௌனம் காப்பது ஏன்..?

தமிழகத்தின் ஊடகங்களில் சனல் 4 அணு குண்டு போல விழுந்துள்ளது. அவர்கள் காக்கும் உறை நிலை மௌனம் ஆயிரம் அர்த்தங்களை பேசுகிறது.

http://www.alaikal.com/news/?p=73963

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக ஊடகங்கள் என்பவை எவை..??!

சன் ரிவி.. கலைஞர் ரிவி.. ஜெயா ரிவி.. ராஜ் ரிவி.. விஜய் ரிவி மற்றும் அரசியல் கட்சி சார் சஞ்சிகைகள்.. பத்திரிகைகளா..??!

அவை என்றும் போல சுய தணிக்கை செய்வது ஒன்றும் புதிதல்ல.

சனல் 4 வீடியோவை முழுமையாக பார்த்தவன் என்ற வகையில் அதில் ஒரு காட்சியைத் தவிர மீதம் எல்லாம் ஏலவே இணையத்திலும் அண்ணன் சீமானாலும் மக்கள் தொலைகாட்சியாலும் காட்டப்பட்டுள்ளன.

மேற்கு நாடுகளைப் பொறுத்தவரை 70 நாட்களா கொல்லுறான் கொல்லுறான் என்று கத்தக் கதறவும் காதடைத்துப் போயிருந்தவர்களும்.. ஆயுத சப்பிளை செய்து கொண்டிருந்தவர்களும்.. இதனை இன்று ஆச்சரியத்தோடு பார்ப்பது போல நடிக்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. வன்னியில் நடந்த யுத்தத்தை முழுமையாக வடிவமைத்து வழிகாட்டி களத்திற்கு விஜயம் செய்து இராணுவத்தை உற்சாகப்படுத்தி.. ஆயுதங்களை நுட்பங்களை சொல்லிக் கொடுத்தவர்களும் இவர்களே.

இன்று.. எதை அவர்கள் மறைக்க நினைத்தார்களோ.. அவை வெளிப்பட்டுவிட்ட வெட்கத்தில்.. தங்களின் மனிதாபிமான சாயம் வெழுத்து குள்ள நரி சாயம் வெளிப்படுகிறதே என்ற அச்சத்தில் சிலவற்றை செய்ய முனைகிறார்கள்.

இந்தக் காணொளிகளில் பல யுத்த காலத்திலும் அதன் பின்னரும் காலத்துக்கு காலம் வெளிப்பட்டு இன்று அவை தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. அவ்வளவே. அன்றும் இன்றும் சனல் 4 ம் அல்யஜீராவும் தான்.. கொஞ்சம் என்றாலும் எமது கானொளிகளுக்கு மதிப்பளித்து சிங்கள அரசின் மிகக் கொடூரமான பொய் பிரச்சாரங்கள் மறுதலிப்புகளுக்கு மத்தியிலும் வெளியிட்டு வந்தன. தமிழகத்தைப் பொறுத்தவரை இவற்றில் பல காட்சிகள் பழையன. ஏனெனில் தமிழகத்தில் அண்ணன் சீமான் இவற்றை சீடிக்களிலும் நூல்களிலும் போஸ்ரர்களிலும் தமிழக மக்களுக்கு காட்டி இருக்கிறார். சில வட இந்திய ஊடகங்களும் காட்டி உள்ளன.

எதுஎப்படியோ சனல் - 4 இன் தொகுப்பு என்பது ஒரு முக்கிய ஆவணம். ஐநா வே போர் குற்றம் நிகழ்ந்துள்ளது.. விசாரணை அவசியம் என்று சொல்லியும் கூட கருணாநிதி போன்ற கீழ்த்தர ஜீவன்கள் இன்று வரை அதை வலியுறுத்தி ஒரு அறிக்கை தந்ததில்லை. ஜெயலலிதா தீர்மானம் இயற்றக் கூட அதனை ஆதரிக்கிறோம் என்று சட்ட மன்றத்துக்கு வெளியில் நின்று சொல்லிக் கொண்டதோடு சரி. மகள் கனிமொழி சிறையில் பூவா வாடுறாவாம்... வன்னியில் எமது மக்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த போது.. அங்கு இயல்பு நிலை திரும்பி விட்டது என்று சொன்னவர் தான் கருணாநிதி. அவரின் மகளுக்கு மட்டுமே வெயில் புழுக்கம். மற்றவர்களுக்கு அது இயல்பு நிலை. இப்படியாபட்ட மனிதர்கள் வாழும் இடத்தில் சில சக்திகள் மெளமாக இருப்பது ஒன்றும் வியப்பில்லையே. அதற்காக ஒட்டுமொத்த தமிழகமும் அப்படி என்றல்ல..! அப்படி நினைப்பது புலம்பெயர் தமிழர்களின் சிந்தனை குறுகியதாக இருக்கின்றது என்பதையே இனங்காட்டுகிறது.

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

உண்மையில் தமிழகத்தை விட்டு வெளியால் உள்ள மாநிலங்களில் இந்த படுகொலைகள் பற்றிய இந்த ஆவணம் மக்களுக்கு கொண்டு செல்லப்படல்வேண்டும் வேண்டும்.

பி.ஜே.பி. கட்சி, கம்நியூசிய கட்சி உட்பட அனைத்தி கட்சி புள்ளிகளும் இவை பற்றி அறியவேண்டும்.

ஜோர்ஜ் பெர்ணன்டஸ் போன்றவர்கள் மீண்டும் புது டெல்லியில் இவைபற்றி மீண்டும் கருத்தரங்குகள் வைக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

------

ஜோர்ஜ் பெர்ணன்டஸ் போன்றவர்கள் மீண்டும் புது டெல்லியில் இவைபற்றி மீண்டும் கருத்தரங்குகள் வைக்கவேண்டும்.

ஜோர்ஜ் பெர்னான்டஸ், தீவிரமான மறதி நோயால் பீடிக்கப்பட்டுள்ளதாக எங்கோ..... வாசித்தேன்.

இலங்கையின் கொலைக் களங்கள்: சேனல் 4 ஆவணப் படம் வீடியோ!

ஜூன் 15,2011

இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த போரின் இறுதிக்கட்ட நிகழ்வுகளின் பதிவுகள் சிலவற்றை உள்ளடக்கிய பிரிட்டனின் 'சேனல் 4'-ன் ஆவணப் படம் வெளியாகியுள்ளது. (வீடியோ - கீழே)

'இலங்கையின் கொலைக்களங்கள்' (Sri Lanka's Killing Fields) எனப் பெயரிடப்பட்ட இந்த 50 நிமிட ஆவணப் படம், போர்க் குற்றங்களுக்கான மிக முக்கிய ஆதாரமாகக் கருதப்படுகிறது. எனினும், இந்த ஆவணப் படத்தை போலியானது என்று இலங்கை அரசு தொடர்ந்து கூறி வருகிறது.

(சேனல் 4 வலைத்தளத்தில் Sri Lanka's Killing Fields ஆவணப் படத்தை காண... http://www.channel4.com/programmes/sri-lankas-killing-fields/4od#3200170)

சேனல் 4 வலைத்தளத்தில் இந்த ஆவணப் படம் பொதுமக்களின் பார்வைக்காக புதன்கிழமை தொடங்கி ஆறு நாட்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழ் மக்களை படையினர் துன்புறுத்தும் காட்சிகள், சரணடைந்த சாமானியர்கள் மீதான கொலைவெறித் தாக்குதல்கள், பொதுமக்கள் தங்குமிடங்கள் மீதான குண்டுவீச்சுத் தாக்குதல்கள், புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த பெண்கள் மீதான பாலியல் பலாத்காரங்கள், அந்தப் பெண்புலிகளைக் கொல்லும் கொடூரங்கள், நிர்வாணமாக நிறுத்தப்பட்டு தமிழ்க் கைதிகள் சுட்டு வீழ்த்தப்படும் நிகழ்வுகள்...

இப்படி இலங்கை ராணுவத்தினரின் போர்க் குற்றங்களை முற்றிலும் துகிலுரிக்கும்படியாக உள்ள இந்த ஆவணப் படம் இதோ...

(முக்கியக் குறிப்பு: இந்த ஆவணப் படத்தில் கொடூரக் காட்சிகள் நிறைந்துள்ளதால் குழந்தைகள், இளகிய மனம் கொண்டவர்கள், இதய நோயாளிகள் முதலானோர் தவிர்க்குமாறு அறிவுறுத்துகிறோம்.)

http://new.vikatan.com/news.php?nid=2366

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் தமிழகத்தினைச் சேர்ந்த பலரது வலைப்பதிவுகளில் இக்காணொளிபற்றிய கருத்துக்கள், செய்திகள், காணொளிகள் வந்திருக்கின்றன. குமுதம், விகடன் வாரப்பத்திரிகைகளில் இனி அடுத்த இதழில் இதுபற்றிச் செய்திகள் வரலாம் என நினைக்கிறேன்.

தமிழக ஊடகங்கள் என்பவை எவை..??!

சன் ரிவி.. கலைஞர் ரிவி..

உந்தக் கேடு கெட்ட தொலைக்காட்சிகளைப் புலம் பெயர்ந்த எம்மவர்கள் காசு கொடுத்து வீட்டில வைத்துப் பார்க்கிறார்களே. அவர்களை செருப்பாலை அடிக்கவேண்டும்.

ஆனால் தமிழகத்தினைச் சேர்ந்த பலரது வலைப்பதிவுகளில் இக்காணொளிபற்றிய கருத்துக்கள், செய்திகள், காணொளிகள் வந்திருக்கின்றன. குமுதம், விகடன் வாரப்பத்திரிகைகளில் இனி அடுத்த இதழில் இதுபற்றிச் செய்திகள் வரலாம் என நினைக்கிறேன்.

உந்தக் கேடு கெட்ட தொலைக்காட்சிகளைப் புலம் பெயர்ந்த எம்மவர்கள் காசு கொடுத்து வீட்டில வைத்துப் பார்க்கிறார்களே. அவர்களை செருப்பாலை அடிக்கவேண்டும்.

விகடன் தன் இணையத்தளத்தில் அடுத்த நாளே தரவேற்றம் செய்து இருந்தது. பலர் பின்னூட்டம் இட்டு இருந்தனர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.