Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதறிக் கதறி அழ விமானம் ஏற்றப்பட்ட தமிழர்கள்: பிரித்தானியாவிலிருந்து இன்று அதிகாலை புறப்பட்டனர் இன்று பகல் கொழும்பை வந்தடைவர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கதறிக் கதறி அழ விமானம் ஏற்றப்பட்ட தமிழர்கள்: பிரித்தானியாவிலிருந்து இன்று அதிகாலை புறப்பட்டனர் இன்று பகல் கொழும்பை வந்தடைவர்

[Friday, 2011-06-17 09:13:16]

பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட ஒரு தொகுதி தமிழர்கள் பலவந்தமாக சிறப்பு விமானம் ஒன்றின் மூலம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 12.30 மணிக்கு இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் பகல் இவர்கள் கொழும்பை வந்தடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

திருப்பி அனுப்பப்படுபவர்களில் ஆறு பெண்கள் உட்பட 54 தமிழர்கள் உள்ளதாக லண்டனிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் ஆறு பெண்களும் தம்மைத் திருப்பி அனுப்ப வேண்டாம் எனக் கதறி அழுத நிலையில் பலவந்தமாகத் திருப்பி அனுப்பப்பட்டதாக லண்டன் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருப்பி அனுப்பப்படுபவர்கள் இலங்கையில் நெருக்கடிகளை எதிர்கொள்ளலாம் என மனித உரிமை அமைப்புக்கள் இது தொடர்பாக வெளியிட்ட கவலைகளை மீறி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட ஐம்பதுக்கும் மேற்பட்டோர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை அனுப்பப்படுவதற்காக விமானத்தில் ஏற்றப்பட்ட ஒருவரின் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை நாடி தடை உத்தரவு பெற்றதையடுத்து அவர் இறுதி நேரத்தில் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டார்.

அவர் இது தொடர்பாக கூறுகையில் விமானத்தில் 48 ஆண்களும் 6 பெண்களும் இருந்ததாக குறிப்பிட்டார். விமானம் லண்டன் நேரப்படி வியாழன் மாலை மாலை 6.00 மணி அளவில் (இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 12.30 மணிக்கு) லண்டன் கேட்விக் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றதாகவும் அவர் கூறினார்.

மேலும் தன்னோடு விமானத்தில் ஏற்றப்பட்ட வேறு இரண்டு நபர்களும் இறக்கிவிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். அதே நேரம் விமானத்துக்குள் ஏற்றப்பட்ட பெண்கள் கதறி அழுததாகவும் அவர் கூறினார். ஆனால் இது குறித்து பிரித்தானிய அரசு தரப்பு விவரங்களை பெறமுடியவில்லை.

அகதித் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களை மீண்டும் அங்கு அனுப்பப்படக் கூடாது என்று மனித உரிமை அமைப்புக்களோடு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினரும் இணைந்து குரல் எழுப்பியிருந்தாலும், இது தொடர்பில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை. காரணம் ஏதும் தெரிவிக்கப்படாமல் ஒரு சிலரை திருப்பி அனுப்பும் நடவடிக்கை இறுதி நேரத்தில் கைவிடப்பட்டுள்ளது.

இருந்தும் பெரும்பான்மையானோர் இலங்கைக்கு கொண்டு செல்லப்பட உள்ளார்கள். இந்த விடயம் தொடர்பாக பிரிட்டிஷ் நாடாளுமன்ற மக்களவையில் ஒரு விவாதத்துக்கு தான் விடுத்த கோரிக்கையை, சபாநாயகர் ஏற்க மறுத்துவிட்டார் என்று மக்களவை உறுப்பினர் சியோபான் மெக் டோனா தெரிவித்தார். திருப்பி அனுப்பப்படுபவர்களில் ஒரு சிலரின் பாதுகாப்புக்கு பங்கம் வரலாம் என்று, தான் அஞ்சுவதாகவும் அவர் தெரிவித்தார்.

தான் இலங்கைக்கு அனுப்பப்படுவதை எதிர்த்து 30 வயதுடைய தமிழ் இளைஞன் ஒருவர் தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக அவரின் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். பிரித்ததனியா தனது சர்வதேசக் கடமைகளை மிகவும் முக்கியமாக எடுத்துக் கொள்வதாகவும், ஒரு நபர் தனக்கு சர்வதேச பாதுகாப்பு வேண்டும் என்பதை உணர்த்தினால் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்று குடியரவுத் துறை அமைச்சர் டேமியன் கிரின் தெரிவித்துள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=44983&category=TamilNews&language=tamil

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடத்தப்பட்ட இலங்கைத் தமிழர்கள் 38 பேர் கட்டுநாயக்கவை வந்தடைந்தனர் இரகசிய விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை

[Friday, 2011-06-17 10:23:42]

பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கைத் தமிழர்கள் 38 பேர் சற்று முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர் . இந்த நிலையில் இலங்கை வந்துள்ள எவரும் கைது செய்யப்பட மாட்டார்கள் என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இலங்கை வந்துள்ள 38 தமிழர்களும் விசாரணைக்கென தேசிய இரகசிய விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடிகயல்வு திணைக்களக் கட்டுப்பாட்டார்ள் வூலானந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் பிரித்தானியாவில் இருந்து 28 பேரே நாடு கடத்தப்படவுள்ளதாக தமக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் 38 பேர் நாட்டை வந்தடைந்துள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய கடமைநேரப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=44990&category=TamilNews&language=tamil

ஜலத்திற்காக சிறிலங்கா விசாரணைப்பிரிவு சில வேலைகளைச் செய்யும். மனிதவுரிமைகள் மதிக்கப்படுவதாக உலகிற்குக் காட்டுவதற்கு வந்தடைந்தவர்களுக்குப் பாதிப்புகள் எதையும் ஏற்படுத்தாது விடுதலை செய்யும். வெளிப்படையாக இது நடைபெற்றாலும் உட்கிடையாக திருப்பியனுப்பப்பட்டோர் ஆபத்தில் சிக்கவைக்கப்பட்டுள்ளார்கள் என்பதுமட்டும் உறுதியானது.

  • கருத்துக்கள உறவுகள்

Deported Lankans landed

FRIDAY, 17 JUNE 2011 11:57

About 40 Sri Lankan Tamil asylum seekers, who were deported from Britain, arrived here this morning, police said.

A senior police officer confirmed that currently statements were being recorded from them by a special team from the Criminal Investigations Department (CID). “We were just recording statements from them, once the procedure is over we will allow them to go soon,” the official said. (SD)

உந்த றோட்டு களில் திரியும் காடை கோஸ்டிகளால் வந்த வினை. அதுகளை முதல் பிடித்துஅனுப்பனும்.

வாழ்வுக்க்காக வந்த அப்பாவிகள் மீது கருணை இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

உந்த றோட்டு களில் திரியும் காடை கோஸ்டிகளால் வந்த வினை. அதுகளை முதல் பிடித்துஅனுப்பனும்.

வாழ்வுக்க்காக வந்த அப்பாவிகள் மீது கருணை இல்லை.

அதுகளை பிடித்து அனுப்பினால் யாரும் கவலைப்படபோவதில்லை,அனால் தமது பாது காப்புக்கு அஞ்சி தஞ்சம் கோரியவர்களை அனுப்பினால் அவர்கள் மிகவும் அனுதாபத்துக்குரியவர்கள் என்பதே எனது கருத்து.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Jun 18, 2011 / பகுதி: முக்கியச் செய்தி /

பிரிட்டனில் இருந்து 38 தமிழ் மக்கள் நாடுகடத்தல்: விசாரிப்பதற்கு சிறப்பு புலனாய்வு குழு!

பிரிட்டனின் கற்விக்கிலிருந்து பலரின் எதிர்ப்புக்களையும் மீறி கொழும்பிற்கு நேற்று வியாழக்கிழமை பலவந்தமாக 38 தமிழர்கள் திருப்பியனுப்பப்பட்டுள்ளனர். இவர்களின் நிலை மிகவும் ஆபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பிரித்தானியவில் இருந்து நாடுகடத்தப்ட 38 தமிழ் மக்கள் இன்று கொழும்பு வந்தடைந்துள்ளார்கள். இவர்கள் அனைவரும் சிறீலங்கா புலனாய்வாளர்களின் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று லண்டனில் இருந்து விமானம்மூலம் நாடுகடத்தப்பட்ட தமிழ்மக்கள் இன்று அதிகாலை கட்டுநாயக்கா விமான நிலையத்தினை வந்தடைந்துள்ளார்கள். இவர்கள் அனைவரையும் சிறப்பு விசாரணை செய்ய சிறீலங்காவின் சிறப்பு புலனாய்வு குழு ஒன்று நியமிக்கப்பட்டுள் ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு கடத்தப்பட்டால் தங்கள் உயிரிற்கு உத்தரவாதம் இல்லை என்ற காரணத்தால் நேற்று லண்டன் விமான நிலையத்தில் வைத்து தமிழர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அண்மைகாலங்களில் பிரித்தானியா மற்றும் ஜரோப்பிய நாடுகளில் இருந்த செல்லும் ஈழத்தமிழ்மக்கள் சிறீலுங்கா புலனாய்வாளர்களினால் கடத்தப்பட்டும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டும் உள்ள நிலையில் நாடுகடத்தப்பட்ட 38 தமிழ்மக்களுக்கும் என்னவாகுமோ என்ற அச்சத்தில் அவர்களின் உறவினர்கள் காணப்படுகின்றார்கள்.

பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சி ஆவணத் திரைப்படத்தை ஒளிபரப்பியதைத் தொடர்ந்து திருப்பி அனுப்பப்படுவது பிற்போடப்பட்டுள்ளதாக பிரிட்டனின் பிஸ்னஸ் டைம்ஸ் பத்திரிகையின் இணையத்தளம் தெரிவித்துள்ளபோதும் பலவந்தமாக இவர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அனுப்பப்படவிருந்த இலங்கையர்களில் மூவர் நேற்று அனுப்பிவைக்கப்படுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்குகளில் ஒருவர் இளம் தமிழ்ப் பெண்ணாகும். அவரின் வழக்கானது நீதித்துறை மீளாய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளது. ஏனைய இருவரினதும் விடயங்கள் உள்துறை அமைச்சின் மீளாய்வின் பெறுபேறாக உள்ளது.

இதேவேளை, நீதித்துறை மீளாய்வுக்காக ஏனைய பல விண்ணப்பங்கள் நேற்று காலை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் ஏற்றிச் செல்லப்படுவதற் காக கொண்டுசெல்படுவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னராக இந்த விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

வியாழன் பிற்பகல் 5 மணியளவில் விமானத்தில் ஏற்றும் அரசாங்கத்தின் நோக்கத்தைக் கொண்ட தீர்மான ஆவணத்தை பெற்றிருந்ததாக சனல் 4 தெரிவித்திருந்தது.

அந்த இளம் பெண்ணின் வழக்கு இப்போது மீள்பரிசீலனைக்குட்படுத்தப்படவிருக்கிறது. உள்துறை அலுவலகத்தால் அந்தப் பெண் தொடர்பான ஆவணம் லண்டனிலுள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்தப் பெண் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பதை உறுதிப்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட ஆவணத்தைக் கொடுத்திருந்ததாக உள்துறை அலுவலகம் உறுதிப்படுத்தியிருந்ததாக சனல் 4 கூறியுள்ளது.

மற்றைய இருவரும் திருப்பி அனுப்பப்படுவது பிற்போடப்பட்டுள்ளதுடன், இதேவிதமான குற்றச்சாட்டுகள் குறித்து நீதித்துறை மீளாய்வுக்காக நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. திருப்பி அனுப்பப்படவிருந்த ஏனையவர்களும் இதேமாதிரியான பிரச்சினைகளை எதிர்கொண்டிருப்பதாகவும் அவர்கள் திருப்பி அனுப்பப்படுவது பிற்போடப்படும் சாத்தியம் இருப்பதாகவும் அவதானிகள் தெரிவித்திருந்த நிலையில் அவர்கள் தற்போது நாடுகடத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, சட்டத்தரணிகளும் மனித உரிமைப் பணியாளர்களும் இந்த விடயம் குறித்து தமது விசனத்தைத் தெரிவித்திருந்தனர்.

http://www.pathivu.com/news/16925/57/38/d,article_full.aspx

நம்மை பார்த்து சிரிப்பதுடன் நதம் சொல்லும் உண்மைகளும் பொய்யாகவே கருதப்படும்! நாடுகடத்தப்பட்டது 26 பேர் மட்டுமே! அதில் 15 தமிழர் 7 முஸ்லீம்கள் 4 சிங்களவர்கள். தற்கொலை செய்ய முனைந்தவர் விமானத்தில் ஏற்றப்பட்டு சீற் பெல்ற் போட்டு பயணிக்க முனைகையில் விமானம் புறப்பட முன் இறுதிக் கணத்தில் மீளப்பபெறப்பட்டு ஹமனஸ்வேத்துக்கு மீள கொண்டு செல்லப்பட்டுள்ளார். இது சம்பந்தமான செய்தி

http://www.channel4.com/news/sri-lankan-who-attemped-suicide-wins-reprieve

நாடுகடத்தப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டு உறவினர்களுடன் இணைந்தும் விட்டனர்.

இப்படி பொறுப்பற்று நடந்து நமக்கு இன்று ஆதரவாக திரும்பிய பிரித்தானியாவையும் எதிரியாக்க பதிவு முனைகிறதா?

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நாடுகடத்தப்படுபவர்களில் முக்கியமானவர்கள் ரவுடிகளும்,காவாலிகளும் தான்...அவர்களே பேசாமல் சிரித்துக் கொண்டு போறார்கள் அதை நமது ஊடகங்கள் முக்கிய செய்தியாக்குகின்றது...அத்தோடு தமிழர்கள் மாத்திரம் இல்லை முஸ்லீம்களும்,சிங்களவரும் அதில் அடங்குவர்

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில் இருந்து புகலிடம் கோரிய 40 இலங்கையர்கள் நாடுகடத்தப்படுவதாக ஊடகங்களில் பல தகவல்கள் வெளியாகிய போதும் உண்மையில் 26 பேரே நேற்று காலை கட்டுநாயக்கா விமான நிலையத்தை அடைந்ததாக குளோபல் தமிழ் செய்திகளின் புலனாய்வுச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் 16.06.11 அன்று மாலை புறப்பட்ட டீஏ8862 என்ற விசேட விமானத்தில் ஏற்றப்பட்ட இந்த 26 புகலிடக் கோரிக்கையாளர்களுடன் பிரித்தானிய குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் 52 பேரும் சென்றுள்ளனர். ஒருவருக்கு 2 அதிகாரிகள் என்ற அடிப்படையில் விசேட விமானத்தில் பயனித்த பெரும்பாலானவர்கள் அதிகாரிகளாகவே காணப்பட்டதாக குளோபல் தமிழ் செய்திகளின் புலனாய்வுச் செய்தியாளர் தெரிவித்தார்.

இவ்வாறு நாடுகடத்தப்பட்ட இந்த 26 பேரையும் பிரித்தானிய குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் முறைப்படி இலங்கையின் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளிடம் கையளித்ததாக தெரியவருகிறது. இவர்கள் ஒவ்வாருவரிடமும் முழுமையான விபரங்களையும் பதிவு செய்த கட்டுநாயக்கா விமானநிலைய குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் விசாரனையின் முடிவில் இலங்கை தேசிய புலனாய்வுப் பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வுப் பிரிவுகளிடம் கையளித்தனர் என குளோபல் தமிழ் செய்திகளின் புலனாய்வுச் செய்தியாளர் கூறுகிறார்.

இவர்களில் 20 பேர் வரை விடுவிக்கப்பட்டதாக தெரிய வருகின்ற போதிலும் ஏனையவர்கள் நேற்று இரவு வரை விடுவிக்கப்படவில்லை என பெயர் குறிப்பிட விரும்பாத புலனாய்வு அதிகாரி ஒருவர் குளோபலுக்குத் தெரிவித்தார்.

இதேவேளை நாடுகடத்தப்பட்டவர்களின் பெயர் விபரங்கள் கிடைக்கப்பெற்ற போதிலும் அவை அவர்களின் நலன் கருதி இங்கு வெளியிடப்படவில்லை. நாடுகடத்தப்பட்ட 26 பேர் குறித்து எமக்கு கிடைத்த தகவல்களின்படி 2007ஆம் ஆண்டிற்குப் பிற்பாடு வருகை விசா மற்றும் மாணவர் விசா என்பவற்றின் மூலமாக பிரித்தானியாவுக்குள் பிரவேசித்து பின்னர் அரசியல் தஞ்சம் கோரியவர்களே இவ்வாறு நாடுகடத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 2 பெண்கள் ஒரு வயதானவர் உட்பட 16 பேர் தமிழர்கள். 6 பேர் முஸ்லீம்கள். 4 பேர் சிங்களவர்கள் என தெரிவுக்கும் குளோபல் தமிழ் செய்திகளின் புலனாய்வுத் தகவல்கள் வடக்கு, கிழக்கு, கொழும்பு மற்றும் கண்டிப் பிரதேசங்களை இவர்கள் பிறப்பிடமாகக் கொண்டவர்கள் எனத் தெரிவித்துள்ளன.

இதில் நாடுகடத்தப்பட்ட ஒருவர் தனது சோகத்தை தெரிவிக்கையில் தான் மாணவர் விசாவில் பிரித்தானியாவுக்குள் பிரவேசித்து சட்டத்திற்கு புறம்பாக வர்த்தக நிலையம் ஒன்றில் வேலைசெய்து வந்ததாகவும் தமது கடைக்கும் அருகாமையில் உள்ள கடைக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மற்றய கடை உரிமையாளர் பிரித்தானிய காவற்துறைக்கு தகவல் வழங்கியதன் காரணமாகவே தான் கைது செய்யப்பட்டதாகவும் அந்த சம்பவம் நடக்காவிடின் தன்னால் பிரித்hனியாவில் இருந்திருக்க முடியும் எனவும் இலங்கைப் புலனாய்வுப் பிரிவின் விசாரணையில் தெரிவித்ததாக அதிகாரி ஒருவர் எமக்கு கூறினார்.

ஏனைய பலர் கையொப்பமிடச் சென்ற வேளையிலும் வெளியில் அலுவல்கள் காரணமாகச் சென்ற வேளைகளிலும் கைதானதாகத் தெரிவிக்கப்படுகிறது.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/62730/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நாடுகடத்தப்படுபவர்களில் முக்கியமானவர்கள் ரவுடிகளும்,காவாலிகளும் தான்...அவர்களே பேசாமல் சிரித்துக் கொண்டு போறார்கள் அதை நமது ஊடகங்கள் முக்கிய செய்தியாக்குகின்றது...அத்தோடு தமிழர்கள் மாத்திரம் இல்லை முஸ்லீம்களும்,சிங்களவரும் அதில் அடங்குவர்

தெரிந்தமாதிரி சொல்லுகின்றீர்கள். அகதித் தஞ்சம் கிடைக்காமல், கையெழுத்து வைக்கப் போகும் இடத்தில் பிடிபட்டவர்களை அனுப்புவதில்லையோ?

  • கருத்துக்கள உறவுகள்

தெரிந்தமாதிரி சொல்லுகின்றீர்கள். அகதித் தஞ்சம் கிடைக்காமல், கையெழுத்து வைக்கப் போகும் இடத்தில் பிடிபட்டவர்களை அனுப்புவதில்லையோ?

உள்வீட்டு தகவல்கள் இப்படித் தான் சொல்கிறது

தாய் நாட்டுக்கு திரும்பி வருவதில் இவ்வளவு, கத்திக் கதறலா? மெய் சிலிர்க்கிறது.

சகல நாடுகளும், இனிமேல் அகதி என்ற போர்வையில் தாய்நாட்டை விட்டு தப்பி ஓடுபவர்களை திருப்பி அனுப்புவதுடன், அவர்கள் தாய்நாட்டை விட்டு தப்பி ஓட உதவுபவர்களையும் (அவர்களது உறவினர்களையும்) திருப்பி அனுப்பினால் நல்லது.

அத்துடன், மனிதாபிமான ரீதியில், தமது மேற்பார்வையில், அவர்கள் தாய் நாட்டில் ஏதாவது தொழில் தொடக்கி வாழ்க்கையை அமைக்க உதவினால் நல்லது.

தாய் நாட்டின் மீது உண்மையான பற்றுள்ளவர்கள் இதைப் புரிந்துகொள்வார்கள்.

நல்ல அறிவுரை. பற்றுள்ளவர்கள் வெளிநாட்டுக்கு வந்திருக்கமாட்டார்கள்.

அது சரி, நீங்கள் தாய்நாடு என்று சொல்லுவது சகல வளங்களும் கொழிக்கும் இலங்கைத் திருநாட்டைத்தானே. :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.