Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஐ.நா.வில் (நியூயோர்க்) சனல் 4

Featured Replies

ஐ.நா.வில் (நியூயோர்க்) சனல் 4

காலம் : 21 Jun 2011 காலை

New York UN screening for Jon Snow’s Sri Lanka film

Tomorrow morning, Jon Snow’s film Sri Lanka’s Killing Fields will be screened to United Nations diplomats and the US media in New York City. http://primetime.unrealitytv.co.uk/new-york-un-screening-for-jon-snows-sri-lanka-film/

இந்த நிகழ்வுக்கு ஐ.நா. நாட்டு பிரதிநிகளை பார்வையிடும் படி தாழ்மையுடன் நாம் கேட்க வேண்டும்.

Dear Madam/Sir,

Subject: Channel 4 screens "Sri Lanka's Killing Fileds'

I kindly urge You to attend the screening of critically-acclaimed investigation into the final weeks of the quarter-century-long civil war between the government and the secessionist rebels, the Tamil Tigers, featuring devastating new video evidence of war crimes and crimes against humanity.

Tomorrow morning, Tuesday June 21, film will be screened to United Nations organized by Amnesty International and Human Rights Watch.

Sincerely,

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா.வின் நிலை இதுதான்.

New York UN screening for Jon Snow’s Sri Lanka film

Edited by தமிழ் அரசு

  • தொடங்கியவர்

இலங்கையின் கொலைக்களம்: அமெரிக்க இராஜதந்திரிகளுக்காக நியூயோர்க்கில் பிரத்தியேகக் காட்சி!

பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சியின் இலங்கையின் கொலைக்களம் எனும் ஆவணப்படம் இன்று (21.06.11) நியூயோர்க்கில் காண்பிக்கப்படவுள்ளது.

நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டு இயங்கி வருகின்ற ஐக்கிய நாடுகள் சபையின் இராஜதந்திரிகளும், அமெரிக்க ஊடகங்களும் பார்வையிடும் வகையில் இந்த ஆவணப்படம் காண்பிக்கப்படவுள்ளது.

அத்துடன், இந்த ஆவணப்படத்தை பார்வையிட ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறிலங்காத் தூதுவரும் விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நியூயோர்க்கில் இந்த ஆவணப்படம் காட்சிப்படுத்தப்பட்ட பின்னர் சர்வதேச ரீதியில் கொழும்பு பாரிய அழுத்தங்களை எதிர்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜெனிவாவில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 17வது கூட்டத்தொடரில் கடந்த 3ஆம் திகதி இந்த ஆவணப்படம் காண்பிக்கப்பட்ட போது பிரித்தானியா, அமெரிக்கா, இந்தியா, இந்தோனேசியா, மெக்சிக்கோ, பிரான்ஸ், சுவிற்சர்லாந்து, ஒஸ்திரியா மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளின் இராஜதந்திரிகள் பார்வையிட்டிருந்தனர்.

இந்நிலையில், நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டு இயங்கி வருகின்ற ஐக்கிய நாடுகள் சபையின் இராஜதந்திரிகளும், அமெரிக்க ஊடகங்களும் பார்வையிடும் வகையில் இந்த ஆவணப்படத்தை காட்சிப்படுத்த சர்வதேச தேச மனிதவுரிமைகள் சபையும், மனிதவுரிமைகள் கண்காணிப்பகமும் கூட்டாக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 17வது கூட்டத்தொடரில் கடந்த 3ஆம் திகதி காட்சிப்படுத்தப்பட்ட சனல் 4 தொலைக்காட்சியின் இலங்கையின் கொலைக்களம் எனும் ஆவணப்படம் கொழும்புக்கு மேலும் நெருக்கடிகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்த ஆவணப்படத்தின் எதிரொலியாக பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் மற்றும் தெற்காசியாவுக்கான வெளிவிவகார அமைச்சர் Alistair Burt ஆகியோர் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீனமான சர்வதேச விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர்.

அதேபோன்று ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழு பரிந்துரைத்ததின்படி சர்வதேச நடவடிக்கைகளை முன்னெடுக்க சிறிலங்கா அரசாங்கம் முன்வராவிடின் அதற்குரிய காலக்கெடுவினை விதிக்க வேண்டும் என பிரித்தானியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் David Miliband மற்றும் பிரான்சின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் Bernard Kouchner ஆகியோரும் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={F6B9BB79-3B8E-410E-BD20-9AFAFFAD8FDF}

  • தொடங்கியவர்

‘Sri Lanka’s Killing Fields’ – shocking the UN into action

By José Luis Díaz, Head of Amnesty International’s United Nations Office

The fairly sizeable audience that eventually made it to the screening was surely not expecting to learn much that was new: the events at the end of the war in Sri Lanka in 2009 have been well documented, and the documentary was broadcast in the UK last week before being put on the web.

Still, no one is really prepared for the gruesome, heartrending and nearly unbearable images, captured by victims and sometimes by perpetrators, of civilians under deliberate attack and summary executions.

The film shocks you into silence. And so it was today: during the screening there was hardly a sound from the audience of diplomats, journalists and human rights workers, not even the otherwise ubiquitous pecking on smart phone keys.

The only noise came from the scribbling of the Sri Lankan ambassador to the UN and his deputy, who took notes in order to respond to the film.

Dr Palitha Kohona and Major General Shavendra Silva headed a 15-member Sri Lankan delegation to the screening. Silva is featured in the film, because in 2009 he headed the Sri Lankan army’s 58th Division, accused, among other things, of executing LTTE leaders attempting to surrender.

Their defence of the government was curious. In essence, they maintained that if the international community has done almost nothing to establish accountability in Sri Lanka – unlike the case of Sudan or Libya – it is because nothing untoward has happened there. But, as the saying goes, facts are stubborn things, including those recorded by mobile phone video cameras and detailed in reports by the United Nations, Amnesty International and others.

Even Kohona was forced to admit that in part, saying, during the discussion after the screening, that the film seemed to show some violations that would be looked at. A small concession, perhaps, but one that needs to be seen in the context of decades of basically sham national commissions of inquiry and “lessons learned” panels.

Meanwhile, as UN Secretary-General Ban Ki-moon begins his second term our hope is that he stops sitting on a report drafted by experts he appointed and governments strongly back their call for an international investigation into the outrages perpetrated two years ago in Sri Lanka.

http://livewire.amnesty.org/2011/06/21/sri-lankas-killing-fields-shocking-the-un-into-action/

  • தொடங்கியவர்

சனல் 4 ஆவணப்படம் நியூயோர்க்கில் வெளியிடப்பட்டது! இராஜதந்திரிகள், ஊடகவியலாளர்கள் அதிர்ச்சி!!

பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சியின் 'இலங்கையின் கொலைக்களம்' எனும் ஆவணப்படம் நியூயோர்க்கில் இன்று (22.06.11) காண்பிக்கப்பட்டபோது இராஜதந்திரிகள், மனிதவுரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் அமெரிக்க ஊடகவியலாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச மன்னிப்புச் சபையும், மனிதவுரிமைகள் கண்காணிப்பகமும் கூட்டாக இணைந்து இந்த ஆவணப்படத்தை நியூயோர்க்கில் அமைந்துள்ள மன்னிப்புச் சபை அலுவலகத்தில் காட்சிப்படுத்தியிருந்தது. பெரும் அளவிலான இராஜதந்திரிகள் இக் காணொளியைப் பார்வையிட்டிருந்தனர்.

இதன்போது ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறிலங்காவின் வதிவிடப் பிரதிநிதி பாலித்த ஹோகன்ன மற்றும் பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோர் தலைமையில் சுமார் 15 பேர் வரையிலான சிறிலங்கா அரசாங்கத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேஜர் ஜெனரல் சில்வா போர் நடைபெற்ற காலத்தில் 58 வது படைப்பிரிவின் தளபதியாக பணியாற்றியிருந்ததுடன் இந்த ஆவணப்படத்திலும் இடம்பெற்றிருந்தார். போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைய முன்வந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர்களை சுட்டுக்கொன்ற குற்றச்சாட்டும் அவர்மீது உள்ளது.

இந்த ஆவணப்படம் வெளியிடப்பட்டபோது மண்டபத்தில் மிகுந்த அமைதி காணப்பட்டதாகவும் ஆவணப்படத்தைப் பார்வையிட்ட எவருமே அதில் இடம்பெற்றுள்ள இதயத்தை உறையவைக்கும் காட்சிகளையும் இதுபோன்ற கொடுரங்களையும் எதிர்பார்த்திருக்கவில்லை எனவும் சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

இந்த ஆவணப்படம் வெளியிடப்பட்ட பின்னர் இடம்பெற்ற கலந்துரையாடலில் வழமைபோல் அங்கு போர்க்குற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லை எனவும், அவ்வாறு இடம்பெற்றிருந்தால் லிபியா மற்றும் சூடான் போன்று சர்வதேச சமூகம் பொறுப்புக்கூறும் பொறிமுறை ஒன்றை உருவாக்கி இருக்கும் எனவும் பாலித்த ஹோகன்ன தெரிவித்தார்.

ஆனால் சர்வதேச மன்னிப்புச் சபையின் பிரதிநிதிகள் அங்கு இடம்பெற்ற நிகழ்வுகள் தொடர்பில் நீண்ட விளக்கம் அளித்த பின்னர், ஒரு சில சம்பவங்கள் இடம்பெற்றிருந்ததை பாலித்த ஹோகன்ன ஏற்றுக் கொண்டதுடன் அது தொடர்பாக விசாரிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

பாலித்தவின் இந்த விசாரணை குறித்த கருத்தை இதுவரைகாலமும் சிறிலங்காவில் இடம்பெற்ற விசாரணைகளதும் ஆணைக்குழுக்களதும் வரலாறு குறித்த பின்னணியுடனேயே பார்க்க வேண்டும்.

ஜெனிவாவில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 17வது கூட்டத்தொடரில் கடந்த 3ஆம் திகதி இந்த ஆவணப்படம் காண்பிக்கப்பட்டபோது பிரித்தானியா, அமெரிக்கா, இந்தியா, இந்தோனேசியா, மெக்சிக்கோ, பிரான்ஸ், சுவிற்சர்லாந்து, ஒஸ்திரியா மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளின் இராஜதந்திரிகள் பார்வையிட்டிருந்தனர்.

இந்த ஆவணப்படத்தின் எதிரொலியாக பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் மற்றும் தெற்காசியாவுக்கான வெளிவிவகார அமைச்சர் Alistair Burt ஆகியோர் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீனமான சர்வதேச விசாரணைகளை வலியுறுத்தி இருந்தனர்.

அதேபோன்று ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழு பரிந்துரைத்தபடி சர்வதேச நடவடிக்கைகளை முன்னெடுக்க சிறிலங்கா அரசாங்கத்திற்கு காலக்கெடு ஒன்றை விதிக்க வேண்டும் என பிரித்தானியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் David Miliband மற்றும் பிரான்சின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் Bernard Kouchner ஆகியோரும் கூட்டாக கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={68E0967C-9EB5-4866-B2AB-9664277A4C94}

இதே மாதிரி

1. எல்லா அமெரிக்க அரசியல் தலைவர்களும் பார்க்க ஒரிடத்தில் ஒழுங்கு செய்ய வேண்டும்.

இல்லையேல்

2. மூலப்பிரதிகள் (சனல்-4 முத்திரைகளுடன்) வாங்கி எல்லோருக்கும் தனி தனிய அனுப்ப வேண்டும்.

இவர்கள் இணைப்புகளிலோ அல்லது நகல் பிரதிகளிலோ பார்க்ககூடியவர்கள் அல்ல.

எப்படியாவது எல்லா அரசியல் பிரமுகர்களையும் பார்க்க வைக்க வேண்டும்.

பழைய அமெரிக்க தூதரக அதிகாரிகள் இவர்களுக்கு உண்மைகளை ஒருபோதும் தெரிவித்ததில்லை என்பது எனது எண்ணம். இவர்கள் பிரபாகரனும், பின்லேடனும் இறந்ததில் தங்கள் அரசாங்கம் கவலை அடையாது என்று ஒப்பிட்டு கூறியவர்கள். உண்மை என்னவென்பது எல்லோருக்கும் தெரியும். அவர்கள் பின்லேடன் இறந்ததில் கவலைப்படவில்லையல்ல, எல்லோரும் சந்தோஷத்துடன் கொண்டாடினார்கள். பலருக்கு பிரபாகரன் யார் என்பது தெரியாது. சிலர் (ஓபாமா போன்ரோர்) அவரின் தோல்வியை விரும்பவில்லை என்பதும் உண்மை..

  • தொடங்கியவர்

இதே மாதிரி

1. எல்லா அமெரிக்க அரசியல் தலைவர்களும் பார்க்க ஒரிடத்தில் ஒழுங்கு செய்ய வேண்டும்.

இல்லையேல்

2. மூலப்பிரதிகள் (சனல்-4 முத்திரைகளுடன்) வாங்கி எல்லோருக்கும் தனி தனிய அனுப்ப வேண்டும்.

இவர்கள் இணைப்புகளிலோ அல்லது நகல் பிரதிகளிலோ பார்க்ககூடியவர்கள் அல்ல.

எப்படியாவது எல்லா அரசியல் பிரமுகர்களையும் பார்க்க வைக்க வேண்டும்.

பழைய அமெரிக்க தூதரக அதிகாரிகள் இவர்களுக்கு உண்மைகளை ஒருபோதும் தெரிவித்ததில்லை என்பது எனது எண்ணம். இவர்கள் பிரபாகரனும், பின்லேடனும் இறந்ததில் தங்கள் அரசாங்கம் கவலை அடையாது என்று ஒப்பிட்டு கூறியவர்கள். உண்மை என்னவென்பது எல்லோருக்கும் தெரியும். அவர்கள் பின்லேடன் இறந்ததில் கவலைப்படவில்லையல்ல, எல்லோரும் சந்தோஷத்துடன் கொண்டாடினார்கள். பலருக்கு பிரபாகரன் யார் என்பது தெரியாது. சிலர் (ஓபாமா போன்ரோர்) அவரின் தோல்வியை விரும்பவில்லை என்பதும் உண்மை..

இந்த மூலப்பிரதி இப்பொழுது யூட்டியூப்பில் உள்ளது : youtu.be/XADVagA2MUk

1. பல அமெரிக்க அரசியல்வாதிகள், ஒபாமா உட்பட முகநூல்கள் வைத்துள்ளார். அதில் இணைந்து இந்த இணைப்பை பார்த்தீர்களா? எனக்கேட்டு பார்க்கலாம்.

ஜோர்ஜ் க்ளூனி போன்ற நடிகர்கள் முகநூலில் இணைக்கலாம்

சி.என்.என். அன்டர்சன் கூப்பர் போன்றவர்களுக்கு ஆக அனுப்பலாம் : http://edition.cnn.com/CNNI/Programs/ireport/?iref=allsearch

2. பல திணைக்களங்கள் குறுஞ்ச்செய்தி கொண்டுள்ளன. அதில் இணைந்து இதைப்பார்க்க கேட்கலாம்.

http://twitter.com/#!/StateDept - அமெரிக்காவின் இராஜாங்க திணைக்களம்

  • கருத்துக்கள உறவுகள்

விரைவில் வேறு சில நாடுகளில் உள்ள தொலைக்காட்சிகளிலும் இந்தக் காணொளிகள் வரவிருக்கிறது.

நன்றி அகுத. முகனூல் கணக்கு இ்ல்லை. முடிந்தவற்றை செய்து வருகிறேன்.

.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.