Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னணி மனித உரிமை அமைப்புக்கள் புலிகளிடம் பணம் பெற்றுக் கொள்கின்றன – ரொஹான் குணரட்ன

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

24 ஜூன் 2011

உலகின் முன்னணி மனித உரிமை அமைப்புக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் நிதி உதவி பெற்றுக் கொள்வதாக பயங்கரவாத ஒழிப்பு தொடர்பான தொடர்பான பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார்.

மனித உரிமை கண்காணிப்பகம், சர்வதேச மன்னிப்புச் சபை, சர்வதேச அனர்த்தக் குழு உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் நிதி உதவி வழங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளே பாரியளவில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மனித உரிமை அமைப்புக்களை புலிகள் தொடர்ந்தும் ஏமாற்றி வருவதாகவும் சிலர் அந்தப் பொறியில் சிக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரச்சாரத்திற்கு பதிலடி கொடுக்கக் கூடிய சரியான இராஜதந்திர பொறிமுறை உருவாக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொடிய பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுத ரீதியான போராட்டத்திலிருந்து இலங்கைக்கு எதிரான பிரச்சாரப் போராட்டத்திற்கு மாறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சில அரசியல்வாதிகள் புலிகளின் நிதியைப் பெற்றுக் கொண்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரச்சாரப் போராட்டத்திற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்பதனை இலங்கை அரசியல் தலைமைத்துவங்கள் இன்னமும் தெளிவாக விளங்கிக்கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

போலியான தகவல்களின் மூலம் இலங்கையின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்திய பாணியிலான அதிகாரப் பகிர்வுத் திட்டம் இலங்கைக்கு பொருந்தாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு நாடும் தனித்துவமானது எனவும் மற்றொரு நாட்டின் தீர்வுத் திட்டம் இன்னொரு நாட்டுக்கு பொருந்தாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/63081/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு நாடும் தனித்துவமானது எனவும் மற்றொரு நாட்டின் தீர்வுத் திட்டம் இன்னொரு நாட்டுக்கு பொருந்தாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உங்களுக்கேன் இந்தப் புதிய அரசியல் துறை ஆய்வு?

பேசாமல் பயங்கரவாதிகளுடனும்,அல்-கைதாவுடனும் நின்று விடுங்கள்!

போகிற போக்கைப் பார்த்தால் உங்களுக்கு, விரைவில் வருமானம் இல்லாமல் போய் விடும் போல் உள்ளது!!!

  • கருத்துக்கள உறவுகள்

என்னடா பொழுது போயிருச்சே இன்னும் ஒரு டமாஸ் செய்தி கூட காணமே ! என்று பார்த்தால்.. நடத்திடாங்க...

47831.gif47831.gif

தன்னைப்போலவே எல்லோரும் என நினைக்கும் உயரிய பண்புகொண்டவர் இந்த பேராசிரியர்.

பாருங்கள் பேராசிரியர் என்று கூறிக்கொண்டு எவ்வளவு கீழ்த்தரமான அறிக்கையை சொல்கிறார். சிங்களவன் தன் இனத்திற்காக எவ்வளவு ஒற்றுமையாகச்செயல்படுகிறான் என்பதுதான் இதிலிருந்து புலப்படுகிறது. ஆனால் நாம் எமக்குள் வரும் ஒவ்வொரு சிறிய பிரச்சனைகளையும் பெரிதாக்கி வேற்றுமையை உருவாக்குவோமா???அல்லது ஒற்றுமையை உருவாக்குவோமா?????????????????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.