Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெளிப்படைத்தன்மை: சில கேள்விகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[ சனிக்கிழமை, 25 யூன் 2011, 06:02 GMT ] [ புதினப் பணிமனை ]

'புதினப்பலகை'க்காக நந்தன் அரியரத்தினம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்சவுடன் மேற்கொண்ட தனிப்பட்ட சந்திப்பு தொடர்பில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. கூடவே அவை சில கேள்விகளையும் எழுப்பியுள்ளன.

இம்மாதம் 8 ம் திகதி இந்திய உயர் ஆணையாளர் அசோக் காந்தாவின் அழைப்பின் பேரில் அவரது இல்லத்தில் மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இரா.சம்பந்தர் தமது கட்சி வடகிழக்கில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான உதவியை கோரியதாகவும் அதற்கு தான் இணக்கம் தெரிவித்திருந்தாகவும் பாதுகாப்புச் செயலர் கொழும்பில் இருந்து வெளிவரும் ‘த ஜலண்ட்’ [The Island] பத்திரிகைக்கு வழங்கிய சிறப்புச் செவ்வியில் தெரிவித்திருக்கின்றார்.

இம்மாதம் யாழ் அளவெட்டியில் இடம்பெற்ற த.தே.கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் இடம்பெற்ற இராணுவ அத்துமீறல்களைத் தொடர்ந்து எழுந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் போதே கோத்தாபய ராஜபக்ச இதனைத் தெரிவித்திருந்தார்.

"மூத்த அரசியல் தலைவரான இரா.சம்பந்தர் இராணுவத்துடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்ததைத் தொடர்ந்து அரசாங்கம் அதனை வரவேற்றிருந்தது. அதற்கு அவசியமான முன்னேற்பாடுகளை மேற்கொள்வதற்கு தயாராக இருந்தோம். எனினும் அதற்கு முன்பதாகவே த.தே.கூட்டமைப்பின் ஒரு பிரிவினர் அரசாங்கத்துக்கும் கூட்டமைப்பின் தலைவருக்கும் இடையில் இடம்பெற்ற உடன்பாட்டை மீறும் வகையில் ஒரு கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்தனர். கூட்டமைப்பின் ஒரு பிரிவினர் இரா.சம்பந்தரால் முன்னெடுக்கப்பட்டுவரும் மீள்ஒருங்கிணைவு முயற்சிகளுக்கு எதிராக செயற்பட்டுவருகின்றனர் என்று குறிப்பிட்டிருக்கும் ராஜபக்ச, த.தே.கூட்டமைப்பு ஊடகங்களுக்கு வழங்கிய [spate of statements] அறிக்கைகளில் அவர்களது தலைவர் இந்திய உயர் ஆணையாளரின் இல்லத்தில் மேற்கொண்ட சந்திப்பு பற்றி முச்சுவிடவில்லை என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்.

[GR alleges TNA split over Sampanthan’s reconciliation move - The Island - June 19 – 2011]

00000

பாதுகாப்புச் செயலரின் செவ்வி முன்னிறுத்தும் பிரதான கேள்விகள் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இராணுவத்துடன் ஒத்துழைப்பு வழங்க இணக்கம் தெரிவித்திருந்ததா?

அவ்வாறு இராணுவத்துடன் இணைந்து பணியாற்றுவதாயின் இதன் மூலம் கூட்டமைப்பு முன்னிறுத்த முயற்சிக்கும் கொள்கை நிலைப்பட்ட விளக்கம் என்ன?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் என்ற வகையில் இரா.சம்பந்தர் மேற்கொள்ளும் மீள்இணக்கப்பாட்டு முயற்சிகள் உரிய வகையில் ஏனைய உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தப்படுவதில்லையா?

இது தொடர்பில் கூட்டமைப்பினரின் தகவல்கள் பிறிதொரு விடயத்தைச் சுட்டிக்காட்டுகின்றது.

த.தே.கூட்டமைப்பினர் ஏற்கனவே ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போதும் தமிழ் மக்களின் பிரச்சனை தொடர்பில் ஆக்கபூர்வமான முன்னேற்றங்கள் எவையும் இடம்பெற்றிருக்கவில்லை எனவே கொழும்பின் தீர்மானிக்கும் தரப்பினருடன் (Decision Makers) பேசுவது பொருத்தமானது என்ற அடிப்படையிலேயே மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன் முதற்கட்டமாக பசில் ராஜபக்சவுடன் ஒரு சந்திப்பு இடம்பெற்றுள்ளது. பின்னர் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தரும் பாதுகாப்புச் செயலரும் பிரத்தியேகமாக இந்திய உயர் ஆணையர் இல்லத்தில் சந்தித்துள்ளனர்.

இது இரகசியம் பேணப்பட வேண்டிய சந்திப்பாக இருந்ததாலும் இதனை ஆரம்பமாகக் கொண்டு மேலும் சில சந்திப்புக்களை மேற்கொள்வதற்கான திட்டம் இருந்ததாலும் மேற்படி சந்திப்பை சம்பந்தர் பகிரங்கப்படுத்தியிருக்கவில்லை.

தற்போது இதனை அரச தரப்பே பகிரங்கப்படுத்தியிருக்கிறது எனினும், அளவெட்டி சம்பவத்தால் மேற்படி சந்திப்பு தொடர்வதற்கான வாய்ப்பு கேள்விக்குள்ளாகியுள்ளது என்றும் கூட்டமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூட்டமைப்பினர் குறிப்பிடும் விடயம் இலகுவில் நிராகரிக்கக் கூடிய ஒன்றல்ல. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அரசுக்கும் இடையில் இடம்பெற்றுவரும் பேச்சுவார்த்தை தொடர்பில் ஏலவே சில ஆய்வாளர்கள் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர்.

ஜி.எல்.பீரிஸ், வாஸ்குணவர்த்தன மற்றும் விக்கிரமசிறி ரத்நாயக்க அல்லது ரஜீவ விஜயசிங்க போன்றவர்களுடன் கூட்டமைப்பு பேச்சுக்களில் ஈடுபட்டுவருது அர்த்தமற்றது அது அரசின் காலத்தை இழுத்தடிக்கும் தந்திரோபாயத்தின் ஒரு பகுதியாகவே அமைந்திருக்கிறது என்றும் அவ்வாறானவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே இந்தப் பின்புலத்தில்தான் சம்பந்தர் – பாதுகாப்புச் செயலாளர் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

00000

இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற இன்னும் சில தகவல்கள் இதனை பிறிதொரு கோணத்தில் சிந்திக்கும்படி வலியுறுத்துகின்றன.

இம்மாதம் இந்தியாவின் மூவர் அடங்கிய உயர்மட்டத்தினர் கொழும்பு வந்திருந்தனர். இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் பிரதீப் குமார் அடங்கிய குழுவினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்து ஆலோசித்திருந்தனர்.

அவர்கள் ஊடாகவே இவ்வாறானதொரு பரிந்துரை வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தற்போதைய பேச்சுவார்த்தைக்கு மேலதிகமாக இலங்கையின் தற்போதைய நிலைமைகளுக்கு ஏற்ப குடியரசு அதிபர் சகோதரர்களுடன் பேசுவது பொருத்தமாக அமையும் என்ற ஆலோசனையை அவர்கள் வழங்கியிருக்கக் கூடும். இந்திய உயர் ஆணையர் இல்லத்தில் சம்பந்தர்- கோத்தாபய சந்திப்பு இடம்பெற்றுள்ள பின்னணியும் இதனை நிரூபிக்கும் வகையிலேயே அமைந்துள்ளது.

ஈழத் தமிழர் பிரச்சனையில் இந்தியா ஒரு தவிர்க்க முடியாத சக்தி (Inevitable factor) என்பதில் இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது.

எனினும் இலங்கையின் தற்போதைய அரசியல் சூழலில் கொழும்பை தமிழர் நலன் சார்ந்து (அதிகம்) அழுத்துவதற்கான வாய்ப்புக்கள் இந்தியாவிற்கு இருக்கிறதா?

இந்தியா தனது நலன்களை புறம்தள்ளி தமிழர்களுக்காக கொழும்பைப் பகைத்துக் கொள்ளும் நிலைமை இருக்கிறதா?

இப்படியான கேள்விகள் நமக்குத் தரும் பதில் இல்லை என்பதே.

இதே வேளை இது தொடர்பில் பேசிய ஒரு நண்பர் பிறிதொரு விடயத்தைப் பகிர்ந்து கொண்டார். இராஜதந்திர மட்டத்தினருடன் தொடர்புகளைக் கொண்டிருக்கும் அவரது வாதம் முக்கியமானது – தற்போது இலங்கைக்கான கடனுதவி வழங்கும் நாடுகளின் தலைமையை [Aid leadrship] சீனா எடுத்துக் கொண்டுள்ளது.

அரசியல் (ஒத்துழைப்புக்கான) தலைமைத்துவத்தை [Political Leadrship] எடுத்துக் கொள்வதில் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் ஒரு மறைமுக இழுபறி நிலவுகிறது. பொதுவாக இலங்கையில் இடம்பெற்றுவரும் மனித உரிமை நிலைமைகள் தொடர்பான சந்திப்புக்கள் அமெரிக்க தூதுவரின் ஊடாக இடம்பெறுவதே வழமை.

அதனை பெரியளவில் இந்தியா விரும்பவில்லை. அரசியல் விடயங்களும் அத்தகைய ஒரு நிலைக்குச் சென்றுவிடக் கூடாது என்றே இந்தியா கருதுகிறது. எனவேதான் த.தே.கூட்டமைப்பிற்கும் அரசிற்கும் இடையிலான சந்திப்புக்களை இந்தியா முன்னின்று ஊக்குவிக்கின்றது.

இங்கு பிரச்சனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவரை சந்திக்கின்றது ஏன் சந்திக்கின்றது என்பதல்ல ஆனால் த.தே.கூட்டமைப்பின் அரசியல் முன்னெடுப்புக்கள் வெளிப்படைத் தன்மையற்றும் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதையே பலரும் பிரச்சனைக்குரிய ஒன்றாக பார்க்கின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் கொள்கை நிலைப்பட்ட முடிவுகள் இல்லாமையே இதற்குக் காரணம் ஆகும்.

கூட்டமைப்பின் தலைவர் என்ற வகையில் இரா சம்பந்தரிடம் இருந்து வெளிப்படும் கருத்துக்களும் ஏனைய அங்கத்தவர்கள் மத்தியில் இருந்து வெளிவரும் கருத்துக்களும் முன்னுக்குப் பின் முரண்பாடானவையாகவே இருக்கின்றன.

தற்போது இராணுவத்துடன் ஒத்துழைப்பதற்கு சம்பந்தர் இணக்கம் தெரிவித்திருந்தார் என்ற கருத்து இராணுவத்தை வழிநடத்துபவரிடம் இருந்து வெளி வந்திருக்கிறது.

அரசின் தீர்மானிக்கும் சக்திகளுடன் பேசுவதற்கும் இராணுவத்துடன் ஒத்துழைப்பதாக இணங்கிப் போவதற்கும் இடையில் அடிப்படையிலேயே வேறுபாடுண்டு.

யாழ்ப்பாணத்தில் ஆட்பதிவில் இராணுவம் ஈடுபட்டுவருகின்றது என்பதை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை கூட்டமைப்பு இடைநிறுத்தியுள்ளது. யாழ் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கு வழங்கிய வாக்குறுதியைத் தொடர்ந்தே தாம் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூட்டமைப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் பிந்திய தகவல்களின்படி பதிவுகள் தொடருகின்றன தவிர இராணுவத் தரப்பின் வாக்குறுதிகளை நம்பி கூட்டமைப்பு செயற்படுவது இராணுவத்திற்கு மறமுகமான தலைமை அங்கீகாரத்தை வழங்காதா?

யுத்த காலத்தில் இராணுவத் தரப்பினருடன் அரசியல் தலைமைகள் தொடர்புகளைப் பேணுவதும் யுத்தமற்ற சூழலில் இராணுவத் தரப்புடன் ஒத்துழைப்பதும் முற்றிலும் மாறுபட்ட அரசியல் பரிமாணத்தைக் கொண்டதாகும்.

இங்கு பிறிதொரு கேள்வி எழுகிறது, கொழும்பு பெருமளவு சிவில் நிர்வாகத்தை [Civil Administration] இராணுவ மயப்படுத்தி [Militarization] வருகிறது.

இதன் ஒரு பகுதியாக இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர்களை நிர்வாக பதவிகளில் அமர்த்துவதன் மூலம் அனைத்து நிர்வாகமும் மறைமுகமாக பாதுகாப்பு அமைச்சின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுகிறது.

புலிகளுக்கு எதிராக யுத்த களத்தில் சாதனை புரிந்த இராணுவத் தளபதிகளுக்கு உயர் பதவிகள் வழங்கும் நடைமுறையை காலம் சென்ற ஜே.ஆர்.ஜயவர்த்தன தொடக்கி வைத்திருந்தார்.

ஆனால் மகிந்த அரசு இதனை உச்ச நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. மகிந்த அரசின் இத்தகைய அனுகுமுறை இலங்கையை இராணுவமயப்படுத்தும் நோக்கம் கொண்டது என்று மனித உரிமை ஆர்வலர்களும் சிவில் சமூகத் தரப்பினரும் தொடர்ந்தும் எச்சரித்து வருகின்றனர்.

இந்தப் பின்புலத்தில் சிறுபான்மை தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்மைப்பு இராணுவத்துடன் ஒத்துழைப்பதற்கு இணங்குவது அரசின் இராணுவமயமாக்கல் நிகழ்ச்சித் திட்டத்தை ஏற்பதாக அமையாதா?

இராணுவ வாதத்தை கூட்டமைப்பு அங்கீகரிக்கப்பதாக அமையாதா? இவ்வாறான கேள்விகளுக்கு கூட்டமைப்பின் எதிர்வினை என்ன?

http://www.puthinappalakai.com/view.php?20110625104142

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெளிப்படைத்தன்மை: சில கேள்விகள் ?

அளவெட்டியில் கட்சிக் கூட்டம் நடப்பதை சிங்களப் பயங்கரவாதி கோத்தபாயவிற்கு காட்டிக் கொடுத்து குழப்பிய சாக்கடை சம்பந்தன், தனது துரோகத்தனத்தை மறைக்க இந்திய உல்லாசப் பயணத்தையும் கைவிட்டு பாராளுமன்றுக்கு சென்று அரசியல் தீர்வு பற்றி ஊளையிட்டுள்ளார். போலியாக தாக்குதலுக்கு கண்டனமும் வெளியிட்டுள்ளார். எனினும் சம்பந்தனின் துரோகத்தனம் சந்தேகங்களுக்கப்பால் நிரூபணமாகி விட்டது.

இதற்கு சம்பந்தனின் பதில் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு சம்பந்தனின் பதில் என்ன?

பெப்.. பெப். பே! :lol:

பெப்.. பெப். பே! :lol:

கிருபன் டெலோக்காரர் ஒன்றிணைகிறார்களாமே ?

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் டெலோக்காரர் ஒன்றிணைகிறார்களாமே ?

நல்ல விடயம். அது சரி எலி ஏன் அம்மணமாக ஒடுது?

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=34110

Edited by கிருபன்

நல்ல கேள்விகள் கேட்கிறார்கள். தாங்களும் புலத்திலிருந்து எதுவும் செய்ய முடியாது. ஏதாவது செய்ய முயற்சிப்பவர்களையும் கேள்வி கேட்பது. கேள்வி கேட்பது நல்லதுதான். கேட்பவன் செயல் திறனுடையவனாக இருக்க வேண்டுமே.

அதைத்தான் கிருபன் ஏன் எலி அம்மணமாக ஓடுகிறது என்றாரோ?

இன்று இராணுவத்துடன் இணைந்து செயல்பட்டால்தான் அங்கு எதையாவது செய்ய முடியும் என்ற நிலை. வடக்கு கிழக்கில் அவர்களை மீறி எதுவும் செய்ய முடியாத நிலை.

இதையெல்லாம் கேள்வியாகக் கேட்காமல் தாயகத்தில் எதையாவது செய்வதற்குக் கேள்வி கேடபவர்களும் முன்வரவேண்டும்.

அது சரி எலி ஏன் அம்மணமாக ஒடுது?

தமிழ் சமூகத்தின் நலனுடன் சற்றும் சம்பந்தமில்லாத இந்த மாதிரி விழல் கேள்விகளுக்கு பதில் அளித்து காலத்தை வீணாக்குவதில்லை, இந்த மாதிரி விழல் கேள்விகளைக் கேட்கும் புத்தியும் இல்லை.

எமது சமூகத்துக்காக எதையுமே உருப்படியாக சாதிக்க வக்கற்ற சம்பந்தனுக்கு குடை பிடிக்கும் ஒரு சில கூட்டம், தம்மைப் போல் மற்றவர்களும் எம் சமூகத்துக்கு ஒன்றும் செய்யாமல் இருப்பதாக கருதுகிறார்கள்? கேள்விகள் கேட்பவர்கள் எல்லாரும் தாயகத்தில் தம்மைப்போல் மற்றவர்களும் ஒன்றும் செய்வதில்லை என்று கனவு காண்கிறார்கள்.

சம்பந்தன் தனது காணிக் கொள்கையால் எமது திருமலை மண்ணில் சிங்கள குடியேற்றத்துக்கு வழிவகுத்தார். தனது உறவினர் சிலருக்கு அரசில் வேலை எடுத்துக் கொடுத்தார். சில உறவினர்களை இந்தியாவில் குடியேற்றினார்.வேறென்ன செய்தார்?

ராணுவத்துடன் இணைந்து செயற்பட்டால் தான் அங்கு எதையும் செய்யமுடியும் என்ற நிலை என்றால் கருணாவும், டக்ளசும் செய்வதை என்னவென்பது? அதுகலாவது அதை வெளிப்படையாக செய்கிறது. ஆனால் உந்த சம்பந்தர் சகபாடிகளுக்கு தெரியாமல் ரகசியமாக தொடர்புகளை வைத்து எதைச் செய்தார்? அளவெட்டியில் நடக்கும் கூட்டத்தை கூட்டமைப்புக்காரருக்கே தெரியாமல் தமிழினப் படுகொலையாளன் கோத்தபாயவிடம் ஏன் தெரிவிக்க வேண்டும்? புலிகள் இருந்த காலத்திலேயே ரகசிய தொடர்புகளை ஏற்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டவர்.

Edited by ஆராவமுதன்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சமூகத்தின் நலனுடன் சற்றும் சம்பந்தமில்லாத இந்த மாதிரி விழல் கேள்விகளுக்கு பதில் அளித்து காலத்தை வீணாக்குவதில்லை, இந்த மாதிரி விழல் கேள்விகளைக் கேட்கும் புத்தியும் இல்லை.

கேள்வி விளங்காமல் இருந்தால் விழல் கேள்வி மாதிரித்தான் இருக்கும். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கேள்விகள் கேட்கிறார்கள். தாங்களும் புலத்திலிருந்து எதுவும் செய்ய முடியாது. ஏதாவது செய்ய முயற்சிப்பவர்களையும் கேள்வி கேட்பது. கேள்வி கேட்பது நல்லதுதான். கேட்பவன் செயல் திறனுடையவனாக இருக்க வேண்டுமே.

அதைத்தான் கிருபன் ஏன் எலி அம்மணமாக ஓடுகிறது என்றாரோ?

இன்று இராணுவத்துடன் இணைந்து செயல்பட்டால்தான் அங்கு எதையாவது செய்ய முடியும் என்ற நிலை. வடக்கு கிழக்கில் அவர்களை மீறி எதுவும் செய்ய முடியாத நிலை.

இதையெல்லாம் கேள்வியாகக் கேட்காமல் தாயகத்தில் எதையாவது செய்வதற்குக் கேள்வி கேடபவர்களும் முன்வரவேண்டும்.

கேள்விகள் கேட்காமல் விட்டு / கேட்டவர்களையும் நல்ல பெயர்கள் சூட்டிப் போட்டுத் தள்ளியதால்தான் கடைசியில் முள்ளிவாய்க்காலில் எல்லாம் முடிந்தபோது வாயடைத்து நின்றோம்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கூட இராணுவத்தினை மீறி எதுவும் செய்யமுடியாமல், இராணுவம் அளவெட்டியில் தாக்கியபோதும் அது இராணுவம்தான் என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டாக சொல்லமுடியாமல் உள்ள நிலையை உணராமல் வெறும் வாய்ச்சவடால் வீரர்களாக இருப்பதில் ஒரு பிரயோசனம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

எமது சமூகத்துக்காக எதையுமே உருப்படியாக சாதிக்க வக்கற்ற சம்பந்தனுக்கு குடை பிடிக்கும் ஒரு சில கூட்டம், தம்மைப் போல் மற்றவர்களும் எம் சமூகத்துக்கு ஒன்றும் செய்யாமல் இருப்பதாக கருதுகிறார்கள்? கேள்விகள் கேட்பவர்கள் எல்லாரும் தாயகத்தில் தம்மைப்போல் மற்றவர்களும் ஒன்றும் செய்வதில்லை என்று கனவு காண்கிறார்கள்.

சம்பந்தனால் சரியாக ஒன்றும் செய்யமுடியாது என்பது பாராளுமன்றத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் யாழில் விவாதிக்கப்பட்ட ஒன்றுதான். அவர் இந்தியாவில் ஏவல்பேயாக இருந்து ஏதாவது தமிழர்களுக்கு பெற்றுக்கொடுக்கலாம் என்று நம்புகின்றார். அவரைத் தூற்றித்தான் தாயகத்தில் உள்ளவர்களுக்கு நன்மை செய்யவேண்டும் என்றில்லை.

கேள்வி விளங்காமல் இருந்தால் விழல் கேள்வி மாதிரித்தான் இருக்கும். :lol:

கேட்டவருக்கே தெரியாது, விழுந்தும் மீசையில் மண் ஒட்டாமல் விலகுவது - இந்த விழல்ப் பதிலில் நன்கு புரிகிறது.

சம்பந்தனால் சரியாக ஒன்றும் செய்யமுடியாது என்பது பாராளுமன்றத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் யாழில் விவாதிக்கப்பட்ட ஒன்றுதான். அவர் இந்தியாவில் ஏவல்பேயாக இருந்து ஏதாவது தமிழர்களுக்கு பெற்றுக்கொடுக்கலாம் என்று நம்புகின்றார். அவரைத் தூற்றித்தான் தாயகத்தில் உள்ளவர்களுக்கு நன்மை செய்யவேண்டும் என்றில்லை.

இது தூற்றுதல் இல்லை. தாயகத்தில் நிரந்தரமாக வதியும் எமக்குள்ள உரிமையைப் (பயமின்றி சிங்கள பயங்கரவாதிகளையும் எதிர்க்கப்) பயன்படுத்துகிறோம். தமிழினப் (அதாவது எமது) பிரதிநிதி எனக் கூறியபடி எமது சமூகத்தை விலைபேசும் கயவர்களை தட்டிக்கேட்கும் உரிமை தாயகத்தில் நிரந்தரமாக வதியும் எமக்குண்டு. நாட்டைவிட்டு ஓடிய கிருபன் போன்றவர்கள் இங்கு வந்து நிரந்தரமாக இருந்துகொண்டு எமது கருத்துக்களை விமர்சனம் செய்தால் அதில் நியாயமுண்டு. அதை விட்டு, நாட்டை மறந்து ஓடியது மட்டுமிலாமல், குறைந்தபட்ச பண்பும் தெரியாமல் அநியாயமாக எமது நாட்டு கைக்கூலி அரசியல்வாதிகளுக்கு ஆதரவாக பேசுவதை நிறுத்துங்கள். அவர்கள் பற்றி விமர்சிக்கும் உரிமை உடைய எம்மை விமர்சிக்கும் உரிமையை / தகுதியை பெற்றுக்கொண்டு, பின்னர் எம்மை விமர்சியுங்கள். அதுதான் நியாயம்.

நோகாமல் நொங்கு குடிப்பவர்கள், தமக்கு நோகாமல் நொங்கு கிடைக்கும் வரை அதைப் பெற்றுக்கொடுப்பவன் படும் கஷ்டங்களையும், அவனுக்கு இடர்களைக் கொடுப்பவர்களையும் பற்றிக் கவலைப்படுவதில்லை.

தங்கள் கருத்துக்கு ஒரு பச்சை இட்டுள்ளேன்.

தட்டிக் கேளுங்கள்.. ஆனால் "தட்டி"ப் போடாதீர்கள்!

நான் நாட்டை விட்டி ஓடியதும் (உங்கள் பார்வையில்), நீங்கள் ஓடவிரும்பியும் ஓடமுடியாமல் உள்ளதும் (எனது பார்வையில்) அரசியல் விமர்சனங்களிற்குத் தேவையற்றது.

கேட்டவருக்கே தெரியாது, விழுந்தும் மீசையில் மண் ஒட்டாமல் விலகுவது - இந்த விழல்ப் பதிலில் நன்கு புரிகிறது.

எனக்குத் தெரியாத ஒன்றை நான் எழுதுவதில்லை. :D

சரி.. உங்களுக்கு இன்னமும் புரியாததால் சொல்லித் தொலைக்கின்றேன்.

"எலி ஏன் அம்மணமாக ஓடுது" என்ற சொற்றடர் காரணமில்லாமல் ஒருவர் ஒரு காரியத்தைச் செய்வதில்லை என்பதைக்குறிக்கும். ரெலோக்கள் ஒன்றிணைந்து, தமிழ்க் கூட்டமைப்பில் சேர்ந்ததற்கு என்ன காரணம் என்பது உங்களுக்குத் தெரியாவிட்டால் தமிழ்க்கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனைச் சாடி ஒரு பிரயோசனமுமில்லை.

நான் நாட்டை விட்டி ஓடியதும் (உங்கள் பார்வையில்), நீங்கள் ஓடவிரும்பியும் ஓடமுடியாமல் உள்ளதும் (எனது பார்வையில்) அரசியல் விமர்சனங்களிற்குத் தேவையற்றது.

எனக்குத் தெரியாத ஒன்றை நான் எழுதுவதில்லை. :D

சரி.. உங்களுக்கு இன்னமும் புரியாததால் சொல்லித் தொலைக்கின்றேன்.

"எலி ஏன் அம்மணமாக ஓடுது" என்ற சொற்றடர் காரணமில்லாமல் ஒருவர் ஒரு காரியத்தைச் செய்வதில்லை என்பதைக்குறிக்கும். ரெலோக்கள் ஒன்றிணைந்து, தமிழ்க் கூட்டமைப்பில் சேர்ந்ததற்கு என்ன காரணம் என்பது உங்களுக்குத் தெரியாவிட்டால் தமிழ்க்கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனைச் சாடி ஒரு பிரயோசனமுமில்லை.

தெரியாத ஒரு சொற்றொடரின் கருத்தை சொன்னதுக்கு நன்றிகள். அது எனது அறியாமை.

இதற்கும் உள்ளூர் அரசியல் விபரங்கள் பற்றிய அறிவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நேரடியாக அறியும், பெறும் விபரங்கள் மிக மிக அதிகம். தெரிந்ததில் மிக சொற்பமானவற்றையே, மிகச் சிலவேளைகளில் மட்டுமே, தேவைக்கேற்ப இங்கு பகிருவதுண்டு.

என்னைப் பற்றிய உங்கள் பார்வை எவ்வளவு தவறானது என்பதை நான் மிகத் துல்லியமாக அறிந்துகொண்டேன்.

---------------------

நாடுகளின் அரசியலில் பருவகால விடய நடவடிக்கைகள் போன்று தமிழர் அரசியல் போராட்டத்தில் விடய அரசியல் காலம் என செயற்பாடுகள் நடந்து கொண்டு இருக்கின்றன. முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின்னர் போர்க்குற்றம், இனப்படுகொலை, அவலவாழ்வு, நல்லிணக்கம், அரசியல் பேச்சுவார்த்தை, புலம்பெயர் ஐக்கிய நாடுகளில் போட்டி அரசியல் என சிறுதுகாலம் களைகட்டியது.

.

ஆனால் இப்போ எல்லாமே மூன்று விடயங்களுக்குள் சுருங்கி விட்டது. ஒன்று உள்ளூரில் அரசாங்கம்-கூட்டமைப்பு- இந்தியா அரசியல் இழுபறிகள் இரண்டாவது வெளினாடுகளில் போர்க்குற்ற அடிப்படையிலான அரசியலும் அதனை செய்வதில் உள்ள போட்டிகளும் மூன்றாவதாக தாயகத்தில் மக்களின் தொடரும் அவலவாழ்வு.

.

மேற்கூறப்பட்ட மூன்று விடயங்களிலும் மக்களின் அவல வாழ்வு ஒன்றுதான் நிரந்தரமாக, நீண்டகாலம் அப்படியே இருக்கப்போகின்றது என்ற உண்மை தெட்டத்தெளிவு. கூட்டமைப்பு- அரசாங்க பேச்சுவார்த்தை என்பதும், இந்திய அழுத்தங்களும் ஓர் போலியான காலத்தை இழுத்தடித்துக்கொண்டு ஒவ்வொருவரும் தமது ஸ்திரத்தன்மையினை பேணவேண்டிய அல்லது பேணவேண்டும் என்ற தடத்தில் இயங்கி கொண்டு இருக்கின்றது.

.

இதில் இந்தியா, இலங்கையினை பொறுத்தவரை அது ஈழத்தமிழரின் அபிலாசைகளுக்கு எதிரான அரச இயந்திரங்கள். அங்கு ஆட்சிகள் மாறினாலும் அரச இயந்திரங்களின் செயற்பாடுகள் நிலையானது.

.

ஆனால் கூட்டமைப்பின், தமிழர் தலைமையின் நிர்வாக இயந்திரம் நிலை இல்லாதது அடிப்படையான, ஆளமான, நீண்டகாலத்திற்கு தாக்குப்பிடிக்க கூடிய கட்டமைப்பினை கொண்டு இல்லை கூடவே மாறவும் கூடியது. எடுத்துக்காட்டாக அரசியலிற்கு அப்பால் தேர்தலில் வென்றால் என்ன தோற்றால் என்ன தமிழர்களுக்கான பலமான அரசியல் பீடம் அல்லது கட்டமைப்பு என்பது இல்லை மாறாக ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவை தேர்தலை நம்பிய அரசியலாகவே உள்ளது. எடுத்துக்காட்டாக கூட்டமைப்பின் எதிர்காலம் அல்லது அடுத்த தலைமை யார்? அல்லது வளர்க்கப்படுகின்றார்களா? என்றால் குறிப்பிடக்கூடிய தகவல்கள் இல்லை.

.

வெளி நாடுகளில் தமிழர்களின் அரசியல் அதனைவிட மோசம். அரசியல் கட்டமைப்புக்களில் அடிபாடு குத்துப்பாடு, ஆரோக்கியமற்ற தலைமைக்கான போட்டிகள்,குறைபாடான ஜனனாயகம், தனி நபர் ஆதிக்கங்கள் இன்றும் தொடர்கின்றன. இந்த சூழல் நிலையான ஓர் உயர் அரசியல் பீடத்தை புலம்பெயர் நாடுகளில் உருவாக்கும் என்பதில் கேள்விக்குறிகளே அதிகம்.

.

இந்த நிலையில் சுயாதீன மக்கள் குழுக்களால் நீண்டகாலம், மிக நீண்டகாலம் அரசியல் திட்டங்களை வகுத்து செயற்பட முடியாமல் திணறுவதுதான் நடக்கும் அதுதான் விடய அடிப்படையிலான அரசியல் வேலைத்திட்டங்கள்.

அதாவது போர்க்குற்றம் என்ற அடிப்படையில் தற்போதைய பணிகள்

அடுத்து நாட்டிற்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற பணிகள்

மூன்றாவது அரசியல் தலைமைக்கான பனிப்போர்கள் இந்த அடிப்படையிலேயே புலம்பெயர் நாடுகளில் பணிகள் நடக்கின்றன.

.

இந்த மூன்று விடய செயற்பாடுகளும் தெரிந்தோ தெரியாமலோ வெளி நாட்டு சக்திகள் அல்லது புற சூழல்கள்தான் ஆதிக்கம் செலுத்தி நிற்கின்றன என்பதனை யாரும் மறுக்க முடியாது. அதுதான் யதார்த்தம் என பலர் வாதிடலாம். உண்மைதான் ஆனால் இந்த விடய அரசியல் பணியின் ஆயுட்காலம் என்ன? விளைவு என்ன? இந்த இரண்டிற்கும் பதில் தெரியாமலேயே பணிகள் நடக்கின்றன. இதுதான் வேதனைக்குரிய விடயம்.

.

ஆகவே தமிழர்களின் அரசியல் நடவடிக்கையில் அடுத்தது என்ன நடக்கும் என்பதில் சிறு அளவேனும் ஓர் அளவுகோல் இல்லாமலேயே பணிகள் நடக்கின்றன. இது சர்வதேச அரசியல் சூழலின் மாற்றமா? அல்லது சூழ்ச்சிகளா? அலல்து தமிழர் தலைமைகளின் சோம்பேறித்தனமா? அல்லது இயலாமையா?

.

எது எப்படி இருப்பினும் தமிழர் தலைமைகளோ மக்களோ சில அடிப்படைகளில் இருந்து விலக முடியாத சூழலும், வரலாற்று நிர்ப்பந்தகளும் உள்ளன. அதற்கு மக்களின் அவலங்களும், விடுதலைப்போராட்டமும், இழப்புக்களும் இறுதியாக ஓரு நாடு அல்லது தீர்வு வேணும் என்ற இலட்சியமும் காரணிகளாக உள்ளன.

.

சிங்கள அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையில் தோல்வி என்றால் அல்லது இப்படியே காலத்தை இழுத்தடிஓஉ செய்தால் அடுத்தது என்ன? மாற்றுத்திட்டம் என்ன?

நாடு கடந்த அரசாங்கத்தின் அடுத்த மூன்று ஆண்டுக்கான பணிகள் திட்டங்கள், திட்ட முன்னேற்றங்கள் என்ன?

பேரவைகள், மக்கள் அமைப்புக்களின் நொஈண்டகால திட்டம் அல்லது திட்ட அடைவுகள் என்ன?மேற்கூறப்பட்டவைகளின் நடவடிக்கையில் போர்க்குற்றம் என்ற ஒன்றினை நம்பி நடக்கும் அரசியல் பணிகள் வேறுகோணத்தில் சிலவேளை சென்றால் அடுத்த திட்டம் அல்லது மாற்றுத்திட்டம் என்ன?

.

வந்த பிறகு பார்ப்போம் என்றா இருக்கின்றோம் அல்லது நடக்கட்டும் பார்க்கலாம் என்றா இருக்கின்றோம்.

உமை உங்களது ஆழமான கருத்தாடல் - எமக்கு மிக அவசியமான, தேவையான எதிர்காலத்தை அழகாக சுட்டிக்காடுகிறது.

நாம் இங்கு (யாழ் களத்தில்) "சில வேளைகளில்" விளையாட்டாக கருத்துக்களை எழுதினாலும், நீங்கள் குறிப்பிட்ட விடயங்கள் மனதில் சிலகாலமாக ஓங்கி எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

உங்களுக்கு ஒரு தனி மடல் அனுப்பியுள்ளேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.