Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தங்கச் சிறையினுள் அடைபட்ட கைதி கே.பி.; விக்கிரமபாகு கருணாரத்னவின் விமர்சனம்

Featured Replies

Sack_of_money.gifK-P-21.jpgSack_of_money.gif

கே.பி. தங்கக் கூண்டில் சிறை வைக்கப்பட்டுள்ள கைதி. வெளிநாடுகளிலுள்ள புலிகளின் நிதியை அவர் எப்படி வெளிக்கொணர முடியும். அப்படி அவர் அந்த நிதியை இலங்கைக்குக் கொண்டு வந்தால் ராஜபக்ஷவின் குடும்பத்துக்கே அது போய்ச் சேரும். தமிழ் மக்களுக்கு சிறு தொகையே சென்றடையும்.

இவ்வாறு புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.வெளிநாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களினால் பதுக்கி வைக்கப்பட்டுள்ள நிதியைக் கைப்பற்றி போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், முன்னாள் போராளிகளுக்கும் புனர்வாழ்வு வழங்க நடவடிக்கை எடுப்பேன் என தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆயு தக் கொள்வனவாளரும், அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ளவருமான கே.பி. என்ற ழைக்கப்படும் குமரன் பத்மநாதன் பி. பி.ஸிக்கு பேட்டி அளித்திருந்தார்.

கே.பியின் பேட்டி தொடர்பாகக் கேட்ட போதே விக்கிரமபாகு கருணாரட்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் இது தொடர்பாக உதயனுக் குத் தெரிவித்தவை வருமாறு:

தங்கக் கூண்டில் சிறை வைக்கப்பட்டுள்ள கே.பியை அரசு எப்படியெல்லாம் பயன்படுத்த முடியுமோ அப்படி யெல்லாம் பயன்படுத்துகின்றது.போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் புனர்வாழ்வுக்கு வெளிநாட்டில் புலி ஆதரவாளர்கள் பதுக்கி வைத்துள்ள பணத்தைக் கைப்பற்றி பயன்படுத்துவேன் என்று கே.பி. கூறியுள்ளார்.ஒரு கைதி எப்படி சுயாதீனமாகச் செயற்பட முடியும்? அதுவும் வெளிநாட்டு விடயங்களில். எனவே, இதிலிருந்து இதன் பின்னணியில் அரசு உள்ளது என்பது எமக்குத் தெட்டத் தெளிவாகப் புரிகின்றது.

அப்படியே பணம் கைப்பற்றப்பட்டாலும் அது தமிழ் மக்களின் புனர்வாழ்வுக்குப் பயன்படுத்தப்படமாட்டாது. மாறாக ராஜபக்ஷவின் குடும்பத்தின் புனர்வாழ்வுக்குப் பயன்படுத்தப்படும். எனினும், சர்வதேசத்தை ஏமாற்றுவதற்காக தமிழ் மக்களுக்கு ஒரு சிறு தொகை வழங்கப்படலாம். அதுவும் சந்தேகமாகவே உள்ளது.ராஜபக்ஷவின் குடும்ப நலன்களுக்காகவே கே.பி. பயன்படுத்தப்படுகின்றார். ஒரு சமூகத்துக்குத் துரோகம் இழைத்துவிட்டு அரசின் சூழ்ச்சிக்கு கே.பியும் ஒத்துழைப்பு வழங்குகின்றார் என்றார்.

http://onlineuthayan.com/News_More.php?id=62616375429695278

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சமூகத்துக்குத் துரோகம் இழைத்துவிட்டு அரசின் சூழ்ச்சிக்கு கே.பியும் ஒத்துழைப்பு வழங்குகின்றார் என்றார்.

ஒரு மனச்சாட்சியுள்ள சிங்களவனின் கருத்து!!!

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவுக்காக மாடாக உழைத்த சிங்களவர்களான சிறிபதி, மங்கள சமரவீர, சரத் பொன்சேகா போன்றவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிந்தவர்கள் தமிழர்களாகிய கருணாவுக்கும், கே.பிக்கும் என்ன நடக்கும் என்பதை ஊகிக்க முடியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.