Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காங்கிரஸ் கட்சியுடன் ஜெயலலிதா கூட்டணி வைக்கக்கூடாது: சீமான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காங்கிரஸ் கட்சியுடன் ஜெயலலிதா கூட்டணி வைக்கக்கூடாது: சீமான்

பதிந்தவர்: ஈழப்பிரியா ஞாயிறு, 17 ஜூலை, 2011

நாம் தமிழர் கட்சியின் சார்பில் முல்லை பெரியாறு உரிமை மீட்பு பொதுக்கூட்டம் மதுரை முனிச்சாலை ஓபுளா படித்துறை அருகே நடந்தது.

பேராசிரியர் தீரன், திரைப்பட இயக்குனர் மணிவண்ணன், சாகுல்அமீது, கலைக் கோட்டுதயம், வக்கீல் தடாசந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். நாம்தமிழர் கட்சி இயக்க தலைவர் சீமான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

சீமான், ‘’முல்லை பெரியாறு அணையை கட்டிய பென்னி குக்கிற்கு எனது முதல் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். உயிரை இழக்கலாம், ஆனால் உரிமையை இழக்க கூடாது என்ற முழக்கத்தோடு இந்த முல்லை பெரியாறு உரிமை மீட்பு போராட்டத்தை தொடங்கி உள்ளோம்.

முல்லை பெரியாறு அணையை கட்டிய பென்னிக்குக் மற்றும் என்ஜினீயர் பெயரை எல்லாம் எனது தமிழ் மக்கள் இன்றும் தங்கள் குழந்தைகளுக்கு பெயர் சூட்டி சொந்தம் கொண்டாடி வருகிறார்கள். ஆனால் முல்லை பெரியாறு அணையை மட்டும் நம்மால் சொந்தம் கொண்டாட முடியவில்லை.

முல்லை பெரியாறு அணையை முதலில் கட்டிய போது யாருக்கும் எவ்வித பிரச்சனையும் இல்லை. ஆனால் 1976-ம் ஆண்டு இடுக்கி அணை கட்டிய பின்னர் தான் பிரச்சனை ஏற்பட்டது.

நமது மாநிலத்தில் விளையும் உணவு பொருட்கள் மற்றும் மின்சாரத்தை மற்ற மாநிலங்களுக்கு நாம் தருகிறோம். ஆனால் அந்த உணவு பொருட்களுக்கு தேவையான தண்ணீரை அண்டை மாநிலங்கள் தர மறுக்கின்றன.

இதேநிலை தொடர்ந்தால் அடுத்த போராட்டம் எங்கள் உரிமையை மீட்கும் போராட்டமாக தான் இருக்கும். இந்த அணை பிரச்சனைக்கு முதலில் இருந்தே காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் தான் காரணம்.

அதே போல் என் இன அழிவிற்கும் காங்கிரஸ் கட்சிதான் காரணம். எனவே தான் அந்த கட்சியை தமிழ்நாட்டில் தோற்கடித்தோம். தமிழகத்தில் இனி காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரக்கூடாது. அந்த கட்சியுடன் இனி எந்த கட்சியும் கூட்டணி வைக்க கூடாது.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவும் கூட்டணி வைக்க கூடாது. எத்தனை சோதனை வந்தாலும் வெல்லப்போவது பென்னிக்குக் கட்டிய பலமான முல்லை பெரியாறு அணை தான்.

இதில் கேரளா, மத்திய அரசுகளின் பசப்பு வார்தைகளை நம்பாமல் நீதிமன்றத்தை மட்டுமே தமிழக அரசு சார்ந்து நிற்க வேண்டும். எனவே தமிழ் மக்களே முல்லை பெரியாறு உரிமை மீட்கும் வரை நாம் ஓயக்கூடாது. அக்டோபர் 15-ந்தேதி மதுரையிலிருந்து முல்லை பெரியாறு நோக்கி பேரணி நடத்தி, அங்கு முற்றுகையிட்டு கூட்டம் நடத்தப்படும்.

அன்றைய தினம் கேரளாவிற்கு அனுப்பப்படும் அனைத்து பொருட்களும் தமிழக எல்லையில் தடுத்து நிறுத்தப் படும். அதற்கான உங்களை அழைக்க தான் இந்த கூட்டம்’’என்று பேசினார்.

http://www.vannionline.com/2011/07/blog-post_6596.html

ஜெயலலிதா காங்கிரசுக்கு ஆதரவாக ஒரு அறிக்கை விட்டாலே போதும்.... சாணக்கியன் சாணக்கியன் என்று சொல்லி கடைசியில் எப்படி சாணி ஆக்கினார்களோ அதே போல தற்போதைய சூழ் நிலையில் அவருடைய அரசியல் பிரவேசம் அதே சாணியால் ஊற்றி மெழுகப்படும்..... ஆக அந்த அளவுக்கு அவர் ஒன்றும் முட்டாளல்ல.... ஜெயலலிதா அம்மையார் பிஜேபியுடன் தான் கூட்டு.... இது நாடறிந்த உண்மை.....கவலை வேண்டாம் தோழர் சீமான் அவர்களே.....

இளைஞர் காங்கிரசில் சுமார் 13 ,86 ,000 பேர் 2009 க்குப்பின்பு உறுப்பினர்களாக இணைந்து இருக்கிறார்கள்...... அது பெரிய விடயமல்ல..... ஆனால் ஒரு இனப் படுகொலைக்குப் பின்பு அப்படுகொலைக்கு காரணமான காங்கிரசிலே தமிழ்நாட்டு இளைஞர்கள் உறுப்பினர்களாக சேர்கிறார்கள் எனில் ஒரு மாபெரும் வரலாற்றுப் பிழை நிகழ்கிறது அதைக் கண்டறிந்து குதற வேண்டும் அதுவே.., அது மட்டுமே இப்பொழுது தமிழ்நாட்டுத் தமிழர் எமது தலையாய கடமை...... இது தமிழ் உணர்வுள்ள எந்த மனிதனாலும் ஜீரணிக்க முடியாத ஒன்று.....

.

இந்த இலக்கத்தில் தவறு உள்ளதா? '13 ,86 ,000'

காங்கிரஸ் -- உலகத்திலேயே பணம் கூடுதலாக உள்ள அரசியல் கட்சி. அதை வீசி எறிந்து கட்சியில் ஆட்கள் சேர்க்கும் திட்டம் இராகுலின் வேலையாக இருக்கும்.

ஜெயலலிதா ஒண்ணும் இலங்கை தமிழர்மேல் உள்ள பாசத்தால் ,காங்கிரஸ்ஸை வெறுக்கல்ல ! காங்கிரஸ், அ.தி.மு.க கூட்டு வேண்டுமென்றால் தன்னை தேடி வரணும் என்ற நிலையில் இருக்கிறார்! இதனை தெளிவாக புரியல்லைன்னா ..நாற பயல்களாயிடுவோம் நாங்க!

  • கருத்துக்கள உறவுகள்

இளைஞர் காங்கிரசில் சுமார் 13 ,86 ,000 பேர் 2009 க்குப்பின்பு உறுப்பினர்களாக இணைந்து இருக்கிறார்கள்...... அது பெரிய விடயமல்ல..... ஆனால் ஒரு இனப் படுகொலைக்குப் பின்பு அப்படுகொலைக்கு காரணமான காங்கிரசிலே தமிழ்நாட்டு இளைஞர்கள் உறுப்பினர்களாக சேர்கிறார்கள் எனில் ஒரு மாபெரும் வரலாற்றுப் பிழை நிகழ்கிறது அதைக் கண்டறிந்து குதற வேண்டும் அதுவே.., அது மட்டுமே இப்பொழுது தமிழ்நாட்டுத் தமிழர் எமது தலையாய கடமை...... இது தமிழ் உணர்வுள்ள எந்த மனிதனாலும் ஜீரணிக்க முடியாத ஒன்று.....

திமுகவில் கட்சித்தலைவர்கள் தங்களது பிள்ளைகளை தனக்குப் பிறகு அப்பதவியில் வரவே விரும்புகிறார்கள். கருணாநிதி போல மற்றைய தலைவர்களும் குடும்ப நலனையே விரும்புகிறார்கள். இதனால் அங்கு புதிதாக இளைஞர்கள் சேர்ந்து பதவிகளைப் பெற முடியாமல் இருக்கிறது. ஆனால் காங்கிரசில் பல கோஸ்டிகள் இருந்தாலும் புதியவர்களுக்கு அங்கே தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் கிடைக்கிறது. உள்ளுராட்சி, மாவட்டத்திலும் பொறுப்புமிக்க பதவிகள் கிடைக்கின்றன. இதனால் பதவி ஆசையினால் அங்கு இளைஞர்கள் காங்கிரசில் சேர்கிறார்கள். சென்ற சட்டசபைத்தேர்தலில் இளைஞர் காங்கிரசில் இருந்து பலர் தேர்தலில் போட்டியிட்டார்கள்(போட்டியிட்ட அனைவரும் தோற்றது வேற கதை).

  • கருத்துக்கள உறவுகள்

31jaya2a.jpg

சுப்பிரமணிய சாமி வைச்ச ரீ பார்ட்டிக்கு பிறகு.... ஜெயலலிதாவுக்கும், சோனியாவுக்கும் ஆகாது.

ஆகவே காங்கிரசுடன் கூட்டு என்ற கவலைக்கு இடம் இல்லை. :lol:

31jaya2a.jpg

சுப்பிரமணிய சாமி வைச்ச ரீ பார்ட்டிக்கு பிறகு.... ஜெயலலிதாவுக்கும், சோனியாவுக்கும் ஆகாது.

ஆகவே காங்கிரசுடன் கூட்டு என்ற கவலைக்கு இடம் இல்லை. :lol:

சீமான் அன்ணா நீங்களும் பழைய உணர்வாளர்கள் போல் கத்தி காலத்தை வீணாக்காமல் நடக்க கூடிய விடயங்களை ஆராயுங்கள்.

தமிழீழ கனவுக்கான அத்திவாரமே ஆட்டங்காண தொடங்கியுள்ளது. அதை நிறுத்த ஆவது குறைந்த பட்ச தன்னாட்சி தீர்வுத்திடடத்தை நீங்கள் ஜெயலலிதாவிடம் சமர்பித்து இதை நடை முறைப்படுத்த உதவுமாறு மத்திய அரசை நெருக்கடி கொடுக்குமாறு கேட்கலாம்.

தலைவர் கூட இடைக்கால நிர்வாக கட்டமைப்புக்கு பேச்சு வார்த்தை காலத்தில் ஒப்புக்கொண்டார்.

இதுவரை ஈழத்திற்காக குரல் கொடுக்கும் தமிழகஆதரவாளர்கள் ஈழத்தின் விடுதலைக்ககு நெருக்குதல் வரும் போது இடைத்தீர்வை மத்திய அரசுக்கு முன் வைக்கவில்லை....

ராஜிவ் காந்தி கூட தான் விரும்பிய தீர்வை தான் ஈழத்திற்கு பதிலாக வைத்தார்.

ஆக தமிழகம் ஒரு தீர்வை முன்வைக்க அதை நடைமுறைப்படுத்த மத்திய அரசை நெருக்குதலுக்கு உள்ளாக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.