Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எவருடைய மிரட்டலுக்கும் அஞ்சாமல் தமிழ்த் தேசியக்கூட்டமைபுக்கே வாக்களித்து நமது தமிழ் தேசியத்தைப் பாதுகாக்க வேண்டும்: இன்று நம்மிடம் மிஞ்சி இருப்பது தன்மானம் ஒன்றுதான் என முழங்கிய ஆனந்த சங்கரி ...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எவருடைய மிரட்டலுக்கும் அஞ்சாமல் தமிழ்த் தேசியக்கூட்டமைபுக்கே வாக்களித்து நமது தமிழ் தேசியத்தைப் பாதுகாக்க வேண்டும்: இன்று நம்மிடம் மிஞ்சி இருப்பது தன்மானம் ஒன்றுதான் என முழங்கிய ஆனந்த சங்கரி ...

[Monday, 2011-07-18 08:24:10]

தமிழ் மக்கள் அளிக்கும் தீர்ப்பை அறிவதற்குக் கூட அமைச்சர்களும் சிங்களக் கட்சியினரும் இங்கு இருக்கார் நிலைமையை விளக்குகிறார் ஆனந்தசங்கரி. அன்றும் இன்றும் என்றுமே சோதனைகளும் வேதனைகளும் ஏற்பட்ட போதெல்லாம் தமிழ் மக்களுடன், தமிழ் மண்ணில், நிலைத்து நின்றவர்கள் என்றும் இருப்பவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்தான்.

இன்று தற்காலிக கூடங்களை அமைத்துக் கொண்டு இங்கே தங்கி இருக்கும் அமைச்சர்களும், சிங்களக் கட்சியினரும் தேர்தல் முடிவுகளைக் கேட்கக் கூட இங்கே இருக்கமாட்டார்கள். எனவே மானமுள்ள தமிழர்களான நாம் எவருடைய மிரட்டலுக்கும் அஞ்சாமல் தமிழ்த் தேசியக்கூட்டமைபுக்கே வாக்களித்து நமது தமிழ் தேசியத்தைப் பாதுகாக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவர்களுள் ஒருவரான ஆனந்தசங்கரி வேண்டுகோள் விடுத்தார்.

பச்சிளைப்பள்ளி பிரதேச சபைக்கான கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில் பளை பஸ் நிலையத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய ஆனந்தசங்கரி மேலும் கூறியதாவது:

இப்பொழுது இங்கு நடை பெறுவது சாதாரண பிரதேச சபைக்கான தேர்தல் அல்ல. தன்மானத் தமிழர்களுக்கும் ஒரு சிங்கள அரசாங்கத்துக்கும் இடையில் நடக்கும் ஒரு பலப்பரீட்சை.

இந்த தமிழ் மண்ணில் நாம் இருப்பதற்கு எதுவுமே இல்லை. இன்று நம்மிடம் மிஞ்சி இருப்பது தன்மானம் ஒன்றுதான்.உச்சிமீது வானமே இடிந்து வீழ்ந்தாலும் அச்சமில்லை என்று வாழ்பவன் தமிழன். நமது தாயகத்தை, தமிழ் தேசியத்தை தமிழ் மண்ணைப் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு தமிழரினும் கடமை. இதை மறந்துவிடக் கூடாது.

கடந்த காலங்களில் நாம் விட்ட தவறுகளை மீண்டும் மீண்டும் செய்துவிடக்கூடாது. வாக்களிப்பில் கலந்துகொள்வோர் ஏனோதானோ என்று இருந்துவிடக் கூடாது. நம்மைப் பாதுகாக்க இன்று நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம் நமது வாக்குகள் மட்டுமே தான்.

அதனை நாம் உரிய முறையில் பயன்படுத்த வேண்டும். நாம் வாக்களிக்காவிட்டால் நமது வாக்குகள் சூறையாடப்பட்டு நமக்கு எதிராகவே பயன்படுத்தப்பட்டு விடலாம். இன்று சர்வதேசமே உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. போர்குற்ற அறிக்கையும் சனல் 4 உம் கூறுவது சரியா? அல்லது சிங்கள அரசு கூறுவது சரியா? என்று அவதானித்துக் கொண்டிருக்கின்றனர்.

எனவே அதனை தீர்மானிக்க வேண்டியதும், தீர்ப்பு வழங்க வேண்டியதும் நீங்கள் தான். சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்றார் ஆனந்த சங்கரி.இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ். சிறீதரன், ஈ.சரவணபவன், பிரதேச அமைப்பாளர் அருந்தவபாலன் ஆகியோர் பேசினர்.

http://www.seithy.com/breifNews.php?newsID=46682&category=TamilNews&language=tamil

Edited by தமிழ் அரசு

  • கருத்துக்கள உறவுகள்

சங்கரி ஐயாவோ...???! ஆனந்த சங்கரி என்று போடுங்கள். (ரெம்பத்தான் குழையுறீங்கள்.)

இவர்கள் எல்லாம் சந்தர்ப்பவாத ஈனத்தனமான அரசியல்வாதிகள். தமிழ் தேசியக் கூட்டமைப்பு இவர்களை எல்லாம் என்ன அரசியல் நோக்கோடு உள்வாங்குகிறது என்று தெரியவில்லை. தேசிய தலைவர் இவரை ஒரு அரசியல்வாதியாக மதித்து தமிழ் தேசிய கூட்டமைப்பை இவரின் தலைமையில் உருவாக்கிய போது.. அதை இடைநடுவில் கைவிட்டுவிட்டு தமிழர் விடுதலைக் கூட்டணியை காப்பாற்றப் போறன் என்று ஓடி.. சிங்களக் கட்சிகளின் ஆதரவோடு போர் நடக்க நடக்க.. மக்கள் சாகச் சாக.. தனித்து தமிழர் விடுதலைக் கூட்டணியில் நின்று தேர்தல்கள் என்று சிங்களம் திணித்தவற்றின் போட்டியிட்டு அவற்றிற்கு ஜனநாயக அங்கீகரம் அளித்து.. தான் தோல்வி கண்டவர்.

2006ம் ஆண்டு சிங்களம் போரை திணித்த போது.. விடுதலைப் புலிகளை அழிக்காம.. வடக்குக் கிழக்கில் ஜனநாயகத்தை நிறுவ முடியாது என்று சிங்களத்தின் தமிழர்கள் மீதான இன அழிப்புப் போருக்கு அங்கீகாரம் வழங்கிய பெரும் உத்தமர் இவர். இன்று அந்தப் போரால் அழிந்த சிதைந்த மக்களுக்காக இந்த முதலை நீலிக்கண்ணீர் வடிப்பதுதான் வேடிக்கையாக உள்ளது. அந்தக் கோர முகமே கண் முன்னால் நின்று நிழலாடுகிறது. இப்படிப்பட்ட ஒருவருக்கு "ஐயா" என்ற அந்தஸ்து வேற..!

முள்ளிவாய்க்காலை மறப்போம்.. மன்னிப்போம்.. மகிந்தவோடு இணைவோம் என்று சிங்களத்திற்கு பாவமன்னிப்பு வழங்கிய பெருமகான் இவர். இவரை எல்லாம் இப்ப எதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள்ள கொண்டு வருகினம் என்று தெரியல்ல.. சரி நாங்கள் எல்லாம் முன்னாள் தவறுகளை மறந்து.. தமிழ் மக்களின் உரிமைக்காக இணைந்திருக்கிறோம் என்றால்.. தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் உள்வாங்கப்படுவர்கள்.. தங்களின் அரசியல் நிலைப்பாட்டை தமிழ் மக்களுக்கு விளக்குவதோடு.. எனி தாம் தமிழ் மக்களுக்கு எக்காலத்திலும் துரோகம் இழைக்க மாட்டோம் என்று சத்தியப் பிரமானம் செய்ய வேண்டும்.

இன்றி.. இவர்களை தமிழ் தேசிய கூட்டமைப்பின் மேடைகளில் ஏற்றி.. தமிழ் தேசிய.. தமிழீழ தமிழின.. ஆர்வளர்கள் போல விளம்ரபம் செய்ய அனுமதித்துவிட்டு... பின்னர்.. சிங்கள.. இந்தியக் கூலிகளாக... ஜனநாயகம் என்ற போர்வையில்.. தேர்தல் களங்களில் வலம் வர தமிழ் தேசியக் கூட்டமைப்பு உதவுமாயின்.. கூட்டமைப்பு திட்டமிட்டு செய்த.. மகா தவறாக.. மக்களை ஏமாற்றும் செயலாகவே அது அமையும்.

கூட்டமைப்பினர்.. தமிழ் மக்களின் நம்பிக்கையை தக்க வைக்க வேண்டின்.. துரோகிகளை மன்னிக்க வேண்டின்... முதலில் அவர்களிடம் எனிமேல் மக்கள் துரோக செயல்களைச் செய்யமாட்டோம்.. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைகளுக்கு விரோதமாகச் செயற்பட மாட்டோம்.. தமிழ் தேசியத்திற்கு.. தமிழீழத்திற்கு.. தமிழ் மக்களின் பெருவிருப்பிற்கு எதிராக செயற்பட மாட்டோம் என்று எழுதி வாங்கிக் கொண்டே அவர்களை உள்வாங்க வேண்டும். சொல்லை.. மேடைப் பேச்சை நம்பி ஏமாறும் காலத்தை பிரபாகரன் தகர்த்துவிட்டு சென்றுவிட்டார். ஆனந்த சங்கரி.. வரதராஜப்பெருமாள் போன்றவர்கள்.. தமிழ் மக்கள் யாரையும் பேச்சால் எனி ஏமாற்ற முடியாது என்ற நிலைக்கு கொண்டு வந்திருக்கிறார் தேசிய தலைவர். எனவே.. தமிழ் தேசியக் கூட்டமைப்பு இப்போதும் தேசிய தலைவரை மதிக்கிறது என்றால்.. அவரின் கொள்கையின் பிரகாரம் உருப்பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு மதிக்கப்பட வேண்டும் என்றால்.. தமிழ் மக்களுக்காக அவர்களின் விருப்புக்கு ஏற்ப உரிமைகளை நிலைநாட்ட விளைகிறது என்றால்.. இதனைச் செய்தாக வேண்டும்.

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சங்கரி ஐயாவோ...???! ஆனந்த சங்கரி என்று போடுங்கள். (ரெம்பத்தான் குழையுறீங்கள்.)

இவர்கள் எல்லாம் சந்தர்ப்பவாத ஈனத்தனமான அரசியல்வாதிகள். தமிழ் தேசியக் கூட்டமைப்பு இவர்களை எல்லாம் என்ன அரசியல் நோக்கோடு உள்வாங்குகிறது என்று தெரியவில்லை. தேசிய தலைவர் இவரை ஒரு அரசியல்வாதியாக மதித்து தமிழ் தேசிய கூட்டமைப்பை இவரின் தலைமையில் உருவாக்கிய போது.. அதை இடைநடுவில் கைவிட்டுவிட்டு தமிழர் விடுதலைக் கூட்டணியை காப்பாற்றப் போறன் என்று ஓடி.. சிங்களக் கட்சிகளின் ஆதரவோடு போர் நடக்க நடக்க.. மக்கள் சாகச் சாக.. தனித்து தமிழர் விடுதலைக் கூட்டணியில் நின்று தேர்தல்கள் என்று சிங்களம் திணித்தவற்றின் போட்டியிட்டு அவற்றிற்கு ஜனநாயக அங்கீகரம் அளித்து.. தான் தோல்வி கண்டவர்.

2006ம் ஆண்டு சிங்களம் போரை திணித்த போது.. விடுதலைப் புலிகளை அழிக்காம.. வடக்குக் கிழக்கில் ஜனநாயகத்தை நிறுவ முடியாது என்று சிங்களத்தின் தமிழர்கள் மீதான இன அழிப்புப் போருக்கு அங்கீகாரம் வழங்கிய பெரும் உத்தமர் இவர். இன்று அந்தப் போரால் அழிந்த சிதைத்த மக்களுக்காக இந்த முதலை நீலிக்கண்ணீர் வடிப்பதுதான் வேடிக்கையாக உள்ளது. அந்தக் கோர முகமே கண் முன்னால் நின்று நிழலாடுகிறது. இப்படிப்பட்ட ஒருவருக்கு "ஐயா" அந்தஸ்து வேற..!

முள்ளிவாய்க்காலை மறப்போம்.. மன்னிப்போம்.. மகிந்தவோடு இணைவோம் என்று சிங்களத்திற்கு பாவமன்னிப்பு வழங்கிய பெருமகான் இவர். இவரை எல்லாம் இப்ப எதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள்ள கொண்டு வருகினம் என்று தெரியல்ல.. சரி நாங்கள் எல்லாம் முன்னாள் தவறுகளை மறந்து.. தமிழ் மக்களின் உரிமைக்காக இணைந்திருக்கிறோம் என்றால்.. தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் உள்வாங்கப்படுவர்கள்.. தங்களின் அரசியல் நிலைப்பாட்டை தமிழ் மக்களுக்கு விளக்குவதோடு.. எனி தாம் தமிழ் மக்களுக்கு எக்காலத்திலும் துரோகம் இழைக்க மாட்டோம் என்று சத்தியப் பிரமானம் செய்ய வேண்டும்.

இன்றி.. இவர்களை தமிழ் தேசிய கூட்டமைப்பின் மேடைகளில் ஏற்றி.. தமழின ஆர்வளர்கள் போல விளம்ரபம் செய்த அனுமதித்துவிட்டு... பின்னர்.. சிங்கள.. இந்தியக் கூலிகளாக ஜனநாயகம் என்ற போர்வையில்.. தேர்தல் களங்களில் வலம் வர தமிழ் தேசியக் கூட்டமைப்பு உதவுமாயின்..அது மகா தவறாக.. மக்களை ஏமாற்றும் செயலாகவே அது அமையும்.

உங்களின் கருத்தை உள்வாங்கி தலைப்பை திருத்தியுள்ளேன் .

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் கருத்தை உள்வாங்கி தலைப்பை திருத்தியுள்ளேன் .

நன்றி நண்பரே. நான் உங்களைச் சொல்லவில்லை. சில தமிழ் ஊடகங்கள் அப்படி நடந்து கொள்கின்றன. அவர்களையே சொன்னேன். இருந்தாலும்.. அதை உள்வாங்கி தலைப்பை மாற்றிக் கொண்டமைக்கு மீண்டும் மிக்க நன்றி. :)

தன்மானம் பற்றி இந்த உடும்பு இறைச்சி பேசுது. என்ன செய்வது. தமிழனின் கேவல நிலை.

நாம இங்கிருந்து எழுதி என்ன கிழிக்க போறியள் என்று கேட்பினம்.

சரி நடப்பதை பார்ப்போம்

  • கருத்துக்கள உறவுகள்

ததேகூட்டமைப்பு தேசியத்திற்காக உறுதியோடு நின்றவர்களை ஓரம் கட்டி விட்டு தமிழ்த்தேசியத்திற்கு எதிரானவர்களை உள்வாங்குவது யார் கொடுத்த ஆலோசனையின் பேரில் என்று விளங்கவில்லை.தமிழ்க்கட்சிகளை ஒன்றிணைத்து ததேகூட்டமைப்பை உருவாக்கியபோது மக்களுக்கு நன்கு அறிமுகமான உதயசூரியன் சின்னத்தை அதற்குக் கிடைக்க விடாமல் நீதிமன்றம் சென்று தடையுத்தரவை வாங்கியவர்.அவரை மீண்டும் கூட்டமைப்புக்குள் உள்வாங்குவது மிக ஆபத்தானதாகும் வெண்ணெய் திரண்டு வரும் பொழுது தாழியை உடைப்பவர்கள் இவர்கள்.எல்லோரையும் அரவணைத்தல் கொள்கையின் கீழ் இவர்கள் மீண்டும் உள்வாங்கப்படகிறார்கள் என்றால் கூட்டமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கஜேந்திரன் பத்மினி சிவாஜிலிங்கம் என்று எல்லோரையும் உள்வாங்க வேண்டும்.

கூட்டமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கஜேந்திரன் பத்மினி சிவாஜிலிங்கம் என்று எல்லோரையும் உள்வாங்க வேண்டும்.

கூட்டமைப்பு அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். இது கூட்டமைப்புக்கு பரிந்துரைக்கப்பட வேண்டிய விடயம்.

அரசாங்கம் எதிரிகளை எப்படி மிரட்டி உள்வாங்குவது என்பதில் தனித்துவம் அடைந்திருகிறது. நாம் நம்மிடம் வருபவர்களை ஏற்க மறுப்பதோ அல்லது சிறு பிழைகளுக்கு நம்மவர்களைத் தள்ளிவைப்பதோ இரண்டுமுறை யோசிக்கவேண்டிய விடயங்கள்.

கூட்டமைப்பு தனது அரசியல் அமைப்பை சரியாக வரையறுத்திருக்கவேண்டும். அமெரிக்க அரசியல் யாப்பு 200 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்னமும் அதன் ஜனனாயாக தன்மை கேள்விகுறியாக்கபடவில்லை. அது லிங்கன், புஸ் போன்ற சர்வாதிகளையும் கண்டது. லிங்கன், ஒபாமா மதிரி எளிய குடிமக்கள் அதிபராகவும் வழி கொடுத்தது. கட்சி ஒழுங்கான யாப்புடன் இயங்க வேண்டும். அப்போது அங்கதவர்கள் சரியாய் இருப்பார்கள்.

உதாரணத்துக்கு: எதை செய்த்தால் கட்சி தலைவராகவோ, அல்லது முதல் மந்திரியாகவோ வரமுடியும் என்பது ஓழுங்காக வரையறுக்கப்பட்டிருந்தால், வருபவர்களுக்கு தெரியும் தனக்கு முதல் மந்திரி பதவி கிடைக்கிற சந்தர்ப்பம் எவ்வளவு என்று. அந்த நேரத்தில் உள்ளே வருவோர் போவோர் மீது கவலைப்பட வேண்டியதில்லை.

Edited by மல்லையூரான்

இந்த தமிழ் மண்ணில் நாம் இருப்பதற்கு எதுவுமே இல்லை. இன்று நம்மிடம் மிஞ்சி இருப்பது தன்மானம் ஒன்றுதான்.உச்சிமீது வானமே இடிந்து வீழ்ந்தாலும் அச்சமில்லை என்று வாழ்பவன் தமிழன். நமது தாயகத்தை, தமிழ் தேசியத்தை தமிழ் மண்ணைப் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு தமிழரினும் கடமை. இதை மறந்துவிடக் கூடாது.
நண்பர்களே எனக்கு ஒன்றும் புரியவில்லை. தலை சுற்றுகிறது...............உங்களுக்கு ஏதாவது புரிந்தால் தயவு செய்து கூறுங்கள். அதற்காக தலைவலியை அதிகப்படுத்தாதீர்கள்.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நண்பர்களே எனக்கு ஒன்றும் புரியவில்லை. தலை சுற்றுகிறது...............உங்களுக்கு ஏதாவது புரிந்தால் தயவு செய்து கூறுங்கள். அதற்காக தலைவலியை அதிகப்படுத்தாதீர்கள்.

எனக்கும் அப்படித்தான் உள்ளது, இன அழிவுக்கு ஆதரவாக அரசுடன் இருந்த இவர் இப்போது என்ன பேசுகின்றார் .........?

நீங்கள் நல்லவரா ....?கெட்டவரா.....?அங்கிள்.

Edited by தமிழ் அரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.