Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாசமுள்ள மகனே !

Featured Replies

stock_father_son_dusk.jpg

நான் முதுமையினால், நோயினால் நலிவூற்று, உண்ணும்போது நான் அறியாமலே என் ஆடைகளிலும், உன் வீட்டு மேசையிலும் சிந்தி அழுக்காக்கினால்; பொறுமை காட்டு புரிந்து கொள், கோபம் கொள்ளாதே. நீ குழந்தையாய் இருந்தபோது உனக்கு உண்ணக் கற்றுத்தர எத்தனை மணித்தியாலங்களை செலவிட்டிருப்பேன்.

சில வேளைகளில் ஒரே விடயத்தை பல முறை கூறுகின்றேன் என்று சலித்துக்கொள்ளுகிறாயே. இதுவும் முதுமையில் ஏற்படும் மூளையின் பலயீனம் தான். நீ குழந்தையாய் இருந்தபோது உனக்கு தூக்கம் வரும்வரை ஒரே ‘காகமும் வடையூம்’ கதையை எத்தனை நூறு தடவை சலிக்காது சொல்லியிருப்பேன். நான் எதனையாவது மறந்துவிட்டால் எனக்கு ஞாபகப் படுத்திக்கொள்ள நேரம் கொடு. என் பேச்சு தொடர்ச்சியின்றி இருந்தால் அதற்காக சிரிக்காதே. நான் சொல்லும் விடயமல்ல முக்கியம். நான் உன்னுடன் இருக்கிறேன் என்பதும் நீ நான் சொல்வதை அன்புடன் காது கொடுத்து கேட்கின்றாய் என்பதும் தான் முக்கியம். நான் ஒரு விடயத்தில் புத்திமதி சொன்னால், பழைய பஞ்சாங்கமென்று ஒதுக்காதே. உற்றுக் கவனித்து கேட்பாயேயானால், என் நோக்கமும் சொல்லும் பாசத்தினால் நனைந்திருப்பதை உணர்வாய்.

தளர்வூற்ற என் கால்கள் நடக்க மறுக்கும்போது நீ உன் முதல் அடியை எடுத்து வைக்க நான் உதவியதுபோல் எனக்கு உன் கையை கொடு.

முதுமையினால் தசை நார்கள் நலிவடைந்து சிறு நீர் கட்டுப்பாடு குறையும்போது கழிவறைக்கு செல்லமுன் வீடோ அல்லது முற்றமோ அழுக்காகலாம். நீ என் நெஞ்சின் மீது கழித்த சிறு நீரை எத்தனை முறை பன்னீராக நினைத்து கையால் துடைத்துவிட்டு கழுவாமலே உலர விட்டிருப்பேன். நீ நெஞ்சில் கழித்த மலத்தை எதுவித அருவருப்புமின்றி சந்தணத்தை துடைப்பதுபோல் கையால் அகற்றினேனே. இவற்றையெல்லாம் சிந்தித்து பார்த்த பின் இதற்காக வெறுப்புக் கொள்.

வீட்டிலிருக்கும் புதிய உபகரணங்கள், கணணிகள், பற்றிய அறிவு எனக்கில்லையே என்று கேலியாக பார்க்கிறாயே. ஆடை அணிவதிலிருந்து ஒவ்வொன்றாக வாழ்க்கையை வாழ்வாங்கு வாழ்வது வரை கற்றுத்தந்து வழிகாட்டியது நான்தான் என்பதை மறந்துவிட்டாயே.

என்றோ ஒரு நாள் “நான் இன்னும் வாழ விரும்பவில்லை சாக விரும்புகிறேன்” என்று சொல்லும்போது கோபம் கொள்ளாதே. என்னை புரிந்துகொள். நான் வாழ்க்கையை வாழ்ந்து முடித்தவன். என்னை சாக விடு. எத்தனை தவறுகள் நான் செய்திருந்தாலும் ஒன்று மட்டும் உண்மை. நான் என்றும் உன் நலனையே விரும்பியவன். உன் வாழ்க்கைக்கான பாதையை வகுக்கும்போது உன் வருங்காலத்தையூம் முன்னேற்றத்தையூம் கருத்திலெடுத்தே சுயநலமின்றி செயல்பட்டு வந்துள்ளேன். இதனை நீ என்றாவது உணர்வாய்.

என்னை காணும்போது கவலையோ, கோபமோ, வெறுப்போ கொள்ளாதே. நீ வாழ தொடங்கியபோது உன் அருகே நான் இருந்ததுபோல் நீயூம் இன்று என் அருகிருந்து அன்பு காட்டி என்னை புரிந்துகொள்ள முயற்சிசெய். பாசமுடன் சந்தோசமாக நான் வாழ உதவி செய்து என் வாழ்வை அமைதியாக முடித்துக்கொள்ள வழிவிடு. உனக்காக நான் என் இதயத்தில் தேக்கி வைத்திருக்கும் பாசம் நிறைந்த ஒரு புன்னகையால் அந்த இறுதி நொடியில் உன் முகம் பார்த்து நன்றி சொல்வேன். அது உன்னையும் உன் வருங்கால பரம்பரையையும் வாழவைக்கும்.

I love you my son.

என்றும் பாசமுடன் உன்

அப்பா.

ஆக்கம் : VM Thevarajan (Australia)

... முகப்புத்தகம் ஒன்றில் ஓர் தந்தை ...

வாசித்து முடியும் முன்பே விழிகள் நிறைந்து விட்டன... :(

இணைப்பிற்கு நன்றி நெல்லையான்

ஒரு தந்தையின் வாழ்க்கை

மெழுதிரி...........

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய மகனும், நாளைக்குத் தந்தையாகி, அவனும் முதுமை நிலையை அடையும் போது தான், இந்தத் தந்தையின் ஏக்கத்தை அவன் புரிந்து கொள்வான்!

அது வரையும், அவன் புரிந்து கொள்ள முயற்சித்தாலும்,அவனால் முழுமையாகத் தந்தையைப் புரிந்து கொள்ள முடியாது!

அதற்காக ஆயிரம் காரணங்களையும் அவன் கண்டு பிடிப்பான்!

நல்ல ஒரு அருமையான இணைப்பு, நெல்லையன்!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.