Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகின் மிகப்பெரிய ஒட்டுண்ணி இலங்கையரின் உடலில் கண்டுபிடிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலகின் மிகப்பெரிய ஒட்டுண்ணி இலங்கையரின் உடலில் கண்டுபிடிப்பு!

Published on July 19, 2011-12:28 pm

இலங்கையில் டெங்கு மற்றும் மர்மமான வைரஸ் நோய்கள் பரவி வரும் நிலையில், மருத்துவ ஆராய்ச்சி நிலையம் மனிதனின் உடம்பில் வாழும் மிகப்பெரிய ஒட்டுண்ணியொன்றை ஓர் இலங்கையரில் அடையாளம் கண்டுள்ளது.

‘பலன்ரிடியம் கொலி’ எனப்படும் இந்தப் பாரிய ஒட்டுண்ணியானது முன்னொருபோதும் இலங்கையரில் கண்டறியப்படவில்லையெனவும் மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் சகரிக சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த ஒட்டுண்ணி பன்றிகளின் பெருங்குடலிலேயே வாழ்கின்றது. இது உலகின் மிகப்பெரிய புறட்டோஸோ ஒட்டுண்ணியாகும். பன்றிகளின் மலத்தில் காணப்படுகின்ற இந்த ஒட்டுண்ணி, மாசடைந்த நீர் வழியாக மனித உடலில் நுழைகிறதெனவும் அவர் கூறினார்.

தேசிய வைத்தியசாலையில் நோயாளியொருவரின் மலம் பரிசோதனை செய்யப்பட்டபோது இந்த ஒட்டுண்ணி கண்டறியப்பட்டது. இந்த ஒட்டுண்ணி தொற்குள்ளாகியவர்க்கு தோல்நோய் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றன காணப்படுகின்றனவெனவும் சகரிக சமரசிங்க குறிப்பிட்டார்.

இந்த ஒட்டுண்ணி மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளரான துஷாரா தந்திரகே என்பவரால் அடையாளம் காணப்பட்டது. இதேவேளை, மருத்துவ ஆராய்ச்சி நிலையம் இவரின் உடம்பில் ஒருவகையான நாடாப்புழுவையும் கண்டுபிடித்துள்ளது.

http://www.saritham.com/?p=26697

  • கருத்துக்கள உறவுகள்

உலகின் மிகப்பெரிய ஒட்டுண்ணி இலங்கையரின் உடலில் கண்டுபிடிப்பு!

நான்கூட டக்கிளஸ் பற்றின செய்தியாக்கும் எண்டு நினைச்சன்..! :wub:

நான்கூட டக்கிளஸ் பற்றின செய்தியாக்கும் எண்டு நினைச்சன்..! :wub:

அது ஓட்டுக்குழுண்ணி :)

  • கருத்துக்கள உறவுகள்

நான்கூட டக்கிளஸ் பற்றின செய்தியாக்கும் எண்டு நினைச்சன்..! :wub:

என்ன நினைச்சேன்????

செய்தியை முழுசா படிக்கவில்லைபோல.................... இலங்கையில் பன்றிகளில் அது சாதாரணமாக உள்ளதாம். மனிதர்களுக்கு பரவிட்டது என்பததுதான் செய்தி.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செய்தியின் தலைப்பு அதன் தற்போதைய வடிவில் தவறானது. :rolleyes::o

Balantidium_LifeCycle.gif

இது பலன்ரீடியத்தின் வாழ்க்கை வட்டம். இது ஒப்பீட்டளவில் சிறிய ஒட்டுண்ணி. ஆனால் புரட்டோசவன் வகை ஒட்டுண்ணிகளில் பெரியது. ஆகவே தலைப்பை சரியான வகையில் இடுவது அவசியம்.

உலகின் மிகப்பெரிய ஒட்டுண்ணிகளில் tape worm அடங்குகின்றது. இவையும் பன்றிகளில் இருந்து தான் தொற்றுகின்றன. இவை 10 மீற்றர்கள் நீளம் வரை குடலில் தொற்றி வளரக் கூடியன.

hdc_0001_0003_0_img0261.jpg

இது நாடாப்புழுவின் வாழ்க்கை வட்டம். (இதுவே உலகில் அறியப்பட்ட மிகப் பெரிய மனித ஒட்டுண்ணிகளில் ஒன்றாக விளங்குகிறது.)

பொதுவாக பன்றி இறைச்சியை உண்பவர்கள் அதனை சரியான வகையில் சமைத்து உண்ணாவிட்டால் இந்தத் தொற்றுக்களுக்கு வாய்ப்பு இருக்கிறது.

Edited by nedukkalapoovan

[/quote

அப்ப இனி தொப்பிய எடுத்து மாட்டிகொண்டு இசுலாமுக்கு மாற வேண்டியதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இனி தொப்பிய எடுத்து மாட்டிகொண்டு இசுலாமுக்கு மாற வேண்டியதுதான்.

madcow.gifஇசுலாமுக்கு போனால்.... மாடு சாப்பிட வேண்டி வருமே... பரவாயில்லையா? madcow2.gif

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.