Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னையில் ஹில்லரி கிளின்ரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி Nunavilan, எதும் எங்கள் ஈழம் பற்றி கதைதிருத்தால், ஒரு அடியாக இருத்திருக்கும் to Mahi & Co.

போர்க்குற்றங்கள் குறித்து ஹில்லரியும் ஜெயும் மௌனம் காத்தது ஏன்? - இந்திய ஊடகம் கேள்வி!

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து அமெரிக்க இராஜாங்க அமைச்சர் ஹில்லரி கிளின்டனும், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவும் எவ்வித கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளாமை குறித்து இந்திய ஊடகம் ஒன்று கவலை வெளியிட்டுள்ளது.

இப்போரின் போது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து இவர்கள் இருவருக்கும் நன்கு தெரிந்திருந்தும் அவை குறித்து இவர்களிருவரும் பேசாமல் விட்டமை தொடர்பில் TruthDive எனும் இந்திய ஆங்கில ஊடகம் கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து இவ்வூடகம் மேலும் தெரிவித்துள்ளதாவது:

'இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து சுயாதீனமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகளும், சர்வதேச மனிதவுரிமை அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்ற நிலையில், இவ்விகாரம் குறித்து இவர்கள் இருவரும் மௌனம் சாதித்துள்ளனர். மத்திய அரசின் மீதான நம்பிக்கையீனம் காரணமாகவா போரின் போது இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் ஹில்லரி கிளின்டனுடன் முதலமைச்சர் ஜெயலலிதா கலந்துரையாடினார்?

போரின் போது இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள மக்களை சொந்தவிடங்களில் மீளக்குடியேறுவதற்கு வழி வகுக்கும் வகையில் அமெரிக்கா நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என ஜெயலலிதாவிடம் ஹில்லரி கிளின்டன் உறுதியளித்துள்ளார். ஆனால் இடம்பெயர்ந்த மக்களை தமது சொந்தவிடங்களில் மீள்குடியேற்றுவதற்கு அமெரிக்கா எவ்வாறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பது குறித்து எதுவும் தெரியவில்லை.

அதேவேளை, இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்ட ஹில்லரி கிளின்டன் எந்தவிடத்திலும் இலங்கையின் இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை.

அத்துடன், வன்முறைகள் மற்றும் துன்புறுத்தல்களுக்கு எதிராக பெண்களுக்கு பயிற்சி வழங்குவதற்கு தான் தயாராக இருப்பதாக சென்னையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் குறிப்பிட்ட ஹில்லரி கிளின்டன், இலங்கைப் போரின் போது துன்புறுத்தல்களுக்கு உள்ளான மற்றும் கொல்லப்பட்ட தமிழ் பெண்கள் குறித்து வாயே திறக்கவில்லை.

இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைகளுக்கு வலியுறுத்திய ஹில்லரி கிளின்டனும், ஜெயலலிதாவும் தற்போது மௌனம் காத்ததின் பின்னணி என்ன? இவ்விகாரத்தில் இவர்கள் இருவரும் மௌனம் காத்தமை என்பது போர்க்குற்றம் சுமத்தப்பட்ட சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு கிடைத்த ஒரு வெற்றியாகவே கருதப்படும். சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்றிரவு அமைதியான ஆழ்ந்த உறக்கத்தைக் கொண்டிருப்பார்' என இவ்வூடகம் தெரிவித்துள்ளது.

இதனிடையில், இவ்வூடகம் கடந்த 18ஆம் திகதி வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பொன்றில், இலங்கையின் இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து ஹில்லரி கிளின்டன் பேசுவதைத் தடுக்க புதுடில்லி முயற்சித்ததாக தெரிவித்திருந்தது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுடனான சந்திப்பின் போது இலங்கை விவகாரம் முக்கியத்துவம் பெறும் என அமெரிக்காவின் துணை இராஜாங்க அமைச்சர் ரொபேர்ட் ஓ பிளேக் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுடனான சந்திப்பின் போது இலங்கை விவகாரம் குறித்து ஹில்லரி கிளின்டன் பேசாது விட்டால், அது இவ்விருவரின் நற்பெயருக்கு குந்தகத்தை ஏற்படுத்தி விடும் என இவ்வூடகம் தெரிவித்திருந்தது. அத்துடன், வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் இரு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={C142555C-4702-4D50-A919-361994F5B55C}

இருவரும் சுயநலனில் அக்கறையுள்ள கோழைகளாக நடந்துள்ளனர்.

Background Briefing on India

Special Briefing

Chennai, India

July 20, 2011

SENIOR STATE DEPARTMENT OFFICIAL ONE: All right. Well, I thought I would just give you a brief rundown of why we’re going to Chennai, some of the events there, and maybe a little bit about the speech. I think you’ve already heard already a little bit about the speech.

And then the other issue is probably going to be about Sri Lanka, to say the 70 million Tamils in Tamil Nadu are all very concerned about the situation in Sri Lanka. There’s 70,000 Tamil refugees from Sri Lanka that are still in Tamil Nadu. The state and the central government are very happy to be supporting that. There’s no pressure to leave or anything like that. I think some of them have started to slowly trickle back to Sri Lanka, now that the situation is slowly improving. One of the concerns here in Tamil Nadu is always about the IDPs. As you recall, there were almost 300,000 IDPs at the very end of the war. Almost all of those have now been resettled in the north. There’s about 10,000 or so that still need to be resettled, but generally, I think the government’s record on that has been good.

Where we and the Indians are pushing for progress is on this whole process of reconciliation, where – which is – includes a wide variety of different issues. They need to organize provincial council elections up in the north so that there will be, for the first time, an indigenous leadership in that area that was ruled by the LTTE for 30 years. They need to complete the resettlement process. They need to set up a process of providing for land dispute resolution, because again, many people have claims to various parts of those lands. They need to stop the activities of paramilitaries that continue to operate in that part of the country.

http://www.state.gov/p/sca/rls/rmks/2011/168868.htm

மொத்தத்தில் இது நல்ல சந்திப்பு. ஏற்பட்ட தொடர்புகளை முதலமைச்சர் பயன்படுத்தவேண்டும். சிங்களத்திற்கு கொடுக்கப்பட்டாதாக கருதப்படும் காலக்கெடு முடியும் சந்தர்ப்பத்தில், கொடுத்த அழைப்பை பயன்படுத்தி அமேரிக்கா சென்று எமது விடுதலை முயற்சிகளை மேற்கொள்ளல் வேண்டும்.

(முகநூலில் இருந்து)

'இன்று ஹிலாரி கிளிண்டன் தமிழக முதல்வருடன் இலங்கை நிலவரம் பற்றி பேசியது அரசியலில் மிக முக்கியமான நிகழ்வு. வழக்கத்திற்கு மாறான இப்பேச்சுவார்த்தை இந்திய வெளியுறவு கொள்கையை பலவீனபடுத்தியிருக்கிறது.தமிழகம​் ஈழத்தமிழர்கள் விடயத்தில் இந்திய வெளியுறவு கொள்கையை மறுதலித்து தனகேன்ற ஒரு வெளியுறவு கொள்கையை விரும்புகிறது என்று உலகம் முழுக்க செய்தி போயிருக்கிறது. டெல்லிக்கு இது பெரும் அச்சத்தை தந்திருக்கும் என்பதில் ஐயமில்லை...' - பாக்கியராசன் சே

முதல்முறையாக தமிழ்நாட்டுக்கு என்று தனி அரசியல் கொள்கை உண்டு என்பதை அமெரிக்கா கொண்டுள்ளது. தட்டி கொடுக்கிறார்களோ இல்லையோ நிச்சயம் இலங்கை பயமுறுத்தவும் டெல்லியுடன் பேரம் பேசவும் அமெரிக்கர் இதை பயன்படுத்துவர் ! தமிழ்நாடு உலக அரசியலில் எப்படி கையாளபோகிறது ? - Raj Suthan

  • கருத்துக்கள உறவுகள்

முதல்முறையாக தமிழ்நாட்டுக்கு என்று தனி அரசியல் கொள்கை உண்டு என்பதை அமெரிக்கா கொண்டுள்ளது.

உங்களுடன் உடன் படுகின்றேன் அகூதா!

இந்திய வல்லரசை (?) ஒரே நாளில் அமேரிக்கா தூக்கி எறிந்து விடுமென்று நானும் எதிர் பார்க்கவில்லை!

ஆனால், எமது இனத்திற்கு இது ஒரு உதயத்தின் சமிக்ஞை என்றே நான் பார்க்கின்றேன்!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.