Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வொன்றுக்கே மக்கள் ஆணை வழங்கியிருக்கிறார்கள், போர்க்குற்ற விசாரணைகளுக்கான அழைப்பு இலங்கையை விடவும் இந்தியாவையே நோக்கியிருப்பதால், தமிழர்கள் அதில் அதிக நாட்டம் கொள்ளத் தேவையில்லை - சம்பந்தர்

Featured Replies

தமிழீழபோராட்டம் தோற்றுப்போனதற்க்கு, புலம்பெயர் தமிழனை குற்றம் சாட்ட எவருக்கும் அருகதையில்லை!

இந்த புலம்பெயர் தமிழன் மட்டுமில்லையென்றால், பழைய 303,ஷொட் கண்,இத்துப்போன, இந்தியன் எஸ்.எல்.ஆர், எஸ்.எம்.ஜி, வேலை செய்யுமோ செய்யாதோ என்ற நிலையிலிருந்த ஏ3ஜி3, ஏ1ஜி3.....என்று எதிரியுடன் ஒப்பிடுகையில் ...ஆயுத ரீதியில் சமநிலை இல்லாது எப்போதோ அழிந்து போயிருக்கும் புலிகள் இயக்கம் !

உலகம் முழுவதும் கைவிட்ட நிலையிலும் ஜெயசிக்குறு நடவடிக்கையில், அங்கு சிக்கிகொண்ட மக்கள்போராளிகளுக்கான, உணவுத்தேவை, உயிர்காப்பு மருந்துகள், அதனையும்மேவி,போராளிகளுக்கான ஆயுத பலத்தை தந்ததும் ,புலம்பெயர் தமிழனே!

அதனால்தான்,ஓடிபோனவர்கள் என்று புலம்பெயர்தமிழனை அழைத்த அதே கவி.புதுவை , புலம்பெயர்ந்த நம் சொந்தங்களே என்று பாசம் ஒழுக அழைத்தார்!

பொருளாதார உதவி ஒரு புறம் போகட்டும், அரசியல் நகர்வாய்...கொட்டும்பனியிலும் குளிரிலும்,முதியவர்கள்,பச்சிளம் குழந்தைகள்,பாலகர்கள்,பெண்கள் என.............எமக்காய் நீதிகேட்டு எத்தனை நாள் வீதிவீதியாய் தம் சக்தி தேயும்வரை அலைந்தார்கள்?

இன்று விடுதலைபோராட்டம் தோற்றதற்கு பிரதான காரணம், புலம்பெயர் தமிழன் இல்லை மிஸ்டர்.சுகன்!.

களத்தின் சம நிலையை புரட்டிப்போட்டு,மண் அள்ளிமூடி எமது போராடடத்திற்க்கு ஈமசடங்கு நடாத்தியது ஒப்பீட்டளவில் எம்மிடம் துளியளவு கூட இல்லா, எதிரியின் கனரக ஆயுதங்களே!! அதனை ஈடு செய்யக்கூடிய வழிகள் எமக்கு தடைப்பட்டதுமே!

புலம்பெயர் மக்கள் பிரதானமாய் இருந்ததாலல்ல!.......இன்று புலிகளில்லை...இதே புலம்பெயர் தமிழன்தான் சிங்களவனுக்கு மிகப்பெரிய ஆப்பு எங்கிறது, யாருக்கு விளங்குதோ....இல்லையோ.......... மஹிந்தவுக்கு நன்னாவே தெரியும்!

சுகனுக்கு புரியுதோ இல்லியோ.........இதுல இருந்து சிங்களவன் புரிந்து கொண்டது என்னான்னா............புலிகள் விட்டாலும்,புலம்பெயர்தமிழர்கள் சிங்களவனை விடுவதாய் இல்லை!!!

போராட்டத்தில் இருந்து மக்கள் விலகும் போது போராட்டம் தோற்பது தவிர்க்கமுடியாதது. புலப்பெயர்வானது எண்ணிக்கையில் பெரியது. இது நேரடியானது. ஒவ்வொரு புலம்பெயர்ந்தவனும் தாயகத்தில் இருப்பவனுக்கு புலப்பெயர்வை வழிகாட்டிக்கொண்டிருந்தான். இது பல்வேறு வகையானது. போர் நெருக்கடி பொருளாதரா நெருக்கடிக்குள் மக்களை தள்ள வெளிநாட்டு உதவியுள்ளவன் அதிலிருந்து தப்பிக்கொண்டான். புலம்பெயர்ந்தவன் பாதுகாப்பையும் கல்வி பொருளாதரத்தையும் மேம்படுத்திக்கொண்டான். ஒவ்வொரு தாயகத் தமிழனும் வெளிநாட்டுக்குப்போவதை கனவாக கொண்டான். விடுதலைக்கு மாற்றீடாக உணர்ந்தான். போராட்டத்தில் இணைவதில் இருந்து தம்மை விலத்திக்கொண்டார்கள். நாற்பத்தைந்து லட்சம் மக்களின் விடுதலை மூன்று லட்சம் மக்களின் தலையில் எவ்வாறு ஏற்றப்பட்டது என்பதை புரிந்துகொள்வது அவசியமானது. புலம்பெயர்து பாதுகாப்பையும் வாழ்க்கை வசதியையயும் உறுதிசெய்துகொண்டு காசு கொடுத்து தமிழீழம் காண இது ஒன்றும் முதலாளி தொழிலாளி பிரச்சனையில்லை. ஆட்களில்லாத ஆயுதத்தால் எதுவும் செய்யமுடியாது. பெரும்பான்மை மக்களில் இருந்து அந்நியப்பட்ட போராட்டத்தை சர்வதேசம் அங்கீகரிக்கவும் முடியாது. புலம்பெயர்ந்தம் காசுகொடுத்தம் என்பதற்கு அப்பால் புலப்பெயர்வு ஏற்படுத்திய சமூகத்தாக்கம் என்ன என்ற புரிதலே அவசியமானது. முகமாலை பாதை மூட முன்னர் புலிகளின் குரல் வானொலியில் யாழில் இருந்து வன்னிக்கு மக்களை வரும்படி அழைத்துக்கொண்டிருந்தனர். எவரும் வரவில்லை. இதற்கான பின்னணியை புரிந்துகொள்ளுதல் அவசியமானது.

இன ரீதியான ஒட்டுமொத்த மக்கள் எவ்வளவு அதில் இனவிடுதலை சார்ந்து போராட்டத்துடன் இணைந்து நிற்பவர்கள் எவ்வளவு என்ற கணக்கில் இஸ்லாமியத் தமிழர்களின் வெளியேற்றம் புலம்பெயர் தமிழர்கள் மற்றும் அது ஏற்படுத்திய சமூகத் தாக்கம். என்னும் உள்ளகமான ஏராளமான முரண்பாடுகள் போராட்டத்தை பெரும்பான்மை மக்களிடம் இருந்து அந்நியப்படுத்தியது. எஞ்சிய மக்கள் நிர்பந்ததுக்குள் தள்ளப்பட்டார்கள். போரட்டம் பயங்கரவாதமாக முற்றுப்பெற்றது.

புலம்பெயர்ந்த தமிழன் போர்க்குற்றத்திற்கு விரசாணை வேண்டி பெரும் போராட்டம் செய்வதிலும் கவனயீர்ப்புச் செய்வதிலும் இருந்து விலத்தி நாடுகடந்த அரசு அமைத்து சிங்களத்துக்கு கொடுக்கவேண்டிய நெருக்கடிகளில் இருந்து சிங்களத்தை விடுவித்துக்கொண்டான். சனல் 4 போர்க்குற்றக் காணொளியை காட்டினால் அதற்கு நன்றி ஜெயாரீவி காட்டினால் அதற்கு நன்றி அதை விட வேறென்ன? என்னுமொருவனின் தனக்குச் சாதகமான இலங்கை மீதான தலையீட்டை புலம்பெயர் தமிழனின் முயற்ச்சியாக பீத்திக்கொள்வதற்குப் பெயர்தான் தேசியமா? மேற்குலகின் போர்க்குற்றம் என்பது மகிந்தனை அப்புறப்படுத்தி தமக்குச் சாதகமான ஒருவனை அமர்த்துவது குறித்தது இதுக்குள்ள புலம்பெயர் தமிழன் சிங்களப்பேரினவாதத்தில் இருந்து தாயகம் விடுபட என்ன செய்தான்? உண்மை என்னவெனில் புலம்பெயர் தமிழன் சிங்களத்தை மிகப்பெரிய நெருக்கடியில் இருந்து காப்பாற்றுகின்றான்.

  • Replies 56
  • Views 3.7k
  • Created
  • Last Reply

2009 மேக்கு பிறகு நடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை விட உயர்ந்த அரசியல் கோரிக்கையை முன் வைத்த கஜேந்திரன் போன்றோரின் தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியும் இரண்டு தேசங்களின் இணைப்பாட்சி கோரிகையை முன்வைத்த சிவாஜிலிங்கம் போன்றோரின் தமிழ்த் தேசிய விடுதலை முன்னணியும் ஈழம் கேட்ட டக்கிளஸ், பிள்ளையான், கருணா, இனியபாரதி போன்றோர் ஜக்கிய இலங்கையில் அரசுடன் கூட்டு சேர்ந்து தேர்தலில் நின்று தோல்வியை தழுவியுள்ளனர் என்பதாக தமிழ்த் தேர்தல் அரசியலை ஒரு panorama வாக பார்க்கப்பழகிக் கொள்ளவேண்டும்.

இது ஆனைக்கு பானை சரியென்பதுபோலுள்ளது.

கூட்டமைப்பு இந்த தேர்தலை வட்டுகோட்டை தீர்மானத்திர்கு சரியாகவே பார்க்கிறது. தேர்தல் காலங்கலில், தான் நியாயமக கேட்பவற்றை தராவிட்டல் தான் போராடி பெற்றுகொள்வேன் என்றுதான் சம்பந்தர் கூறியிருந்தார். இது சம்பந்தரின் தேர்தல் விஞ்ஞாபனம் என்றும், அவர் அதில் தமிழர்களுக்கு தமது உரிமையை தாமே நிறுவிக்கொள்ளும் சுயநிர்ணய உரிமை இருக்கிறதென்றும் காட்டியிருகிறார்.

போராட்டத்தில் இருந்து மக்கள் விலகும் போது போராட்டம் தோற்பது தவிர்க்கமுடியாதது. புலப்பெயர்வானது எண்ணிக்கையில் பெரியது. இது நேரடியானது. ஒவ்வொரு புலம்பெயர்ந்தவனும் தாயகத்தில் இருப்பவனுக்கு புலப்பெயர்வை வழிகாட்டிக்கொண்டிருந்தான். இது பல்வேறு வகையானது. போர் நெருக்கடி பொருளாதரா நெருக்கடிக்குள் மக்களை தள்ள வெளிநாட்டு உதவியுள்ளவன் அதிலிருந்து தப்பிக்கொண்டான். புலம்பெயர்ந்தவன் பாதுகாப்பையும் கல்வி பொருளாதரத்தையும் மேம்படுத்திக்கொண்டான். ஒவ்வொரு தாயகத் தமிழனும் வெளிநாட்டுக்குப்போவதை கனவாக கொண்டான். விடுதலைக்கு மாற்றீடாக உணர்ந்தான். போராட்டத்தில் இணைவதில் இருந்து தம்மை விலத்திக்கொண்டார்கள். நாற்பத்தைந்து லட்சம் மக்களின் விடுதலை மூன்று லட்சம் மக்களின் தலையில் எவ்வாறு ஏற்றப்பட்டது என்பதை புரிந்துகொள்வது அவசியமானது. புலம்பெயர்து பாதுகாப்பையும் வாழ்க்கை வசதியையயும் உறுதிசெய்துகொண்டு காசு கொடுத்து தமிழீழம் காண இது ஒன்றும் முதலாளி தொழிலாளி பிரச்சனையில்லை. ஆட்களில்லாத ஆயுதத்தால் எதுவும் செய்யமுடியாது. பெரும்பான்மை மக்களில் இருந்து அந்நியப்பட்ட போராட்டத்தை சர்வதேசம் அங்கீகரிக்கவும் முடியாது. புலம்பெயர்ந்தம் காசுகொடுத்தம் என்பதற்கு அப்பால் புலப்பெயர்வு ஏற்படுத்திய சமூகத்தாக்கம் என்ன என்ற புரிதலே அவசியமானது. முகமாலை பாதை மூட முன்னர் புலிகளின் குரல் வானொலியில் யாழில் இருந்து வன்னிக்கு மக்களை வரும்படி அழைத்துக்கொண்டிருந்தனர். எவரும் வரவில்லை. இதற்கான பின்னணியை புரிந்துகொள்ளுதல் அவசியமானது.

இன ரீதியான ஒட்டுமொத்த மக்கள் எவ்வளவு அதில் இனவிடுதலை சார்ந்து போராட்டத்துடன் இணைந்து நிற்பவர்கள் எவ்வளவு என்ற கணக்கில் இஸ்லாமியத் தமிழர்களின் வெளியேற்றம் புலம்பெயர் தமிழர்கள் மற்றும் அது ஏற்படுத்திய சமூகத் தாக்கம். என்னும் உள்ளகமான ஏராளமான முரண்பாடுகள் போராட்டத்தை பெரும்பான்மை மக்களிடம் இருந்து அந்நியப்படுத்தியது. எஞ்சிய மக்கள் நிர்பந்ததுக்குள் தள்ளப்பட்டார்கள். போரட்டம் பயங்கரவாதமாக முற்றுப்பெற்றது.

புலம்பெயர்ந்த தமிழன் போர்க்குற்றத்திற்கு விரசாணை வேண்டி பெரும் போராட்டம் செய்வதிலும் கவனயீர்ப்புச் செய்வதிலும் இருந்து விலத்தி நாடுகடந்த அரசு அமைத்து சிங்களத்துக்கு கொடுக்கவேண்டிய நெருக்கடிகளில் இருந்து சிங்களத்தை விடுவித்துக்கொண்டான். சனல் 4 போர்க்குற்றக் காணொளியை காட்டினால் அதற்கு நன்றி ஜெயாரீவி காட்டினால் அதற்கு நன்றி அதை விட வேறென்ன? என்னுமொருவனின் தனக்குச் சாதகமான இலங்கை மீதான தலையீட்டை புலம்பெயர் தமிழனின் முயற்ச்சியாக பீத்திக்கொள்வதற்குப் பெயர்தான் தேசியமா? மேற்குலகின் போர்க்குற்றம் என்பது மகிந்தனை அப்புறப்படுத்தி தமக்குச் சாதகமான ஒருவனை அமர்த்துவது குறித்தது இதுக்குள்ள புலம்பெயர் தமிழன் சிங்களப்பேரினவாதத்தில் இருந்து தாயகம் விடுபட என்ன செய்தான்? உண்மை என்னவெனில் புலம்பெயர் தமிழன் சிங்களத்தை மிகப்பெரிய நெருக்கடியில் இருந்து காப்பாற்றுகின்றான்.

போராட்டம் தோற்றது வெளிநாடுகளால். அதை நிவிர்த்திக்கதான் எல்லா தமிழ் வெளிநாட்டு அமைப்புக்களும்.

1. நோர்வே, அமெரிக்கா, EU , யப்பான் பேச்சுவார்த்தை என்று ஏமாற்றியது.

2. அதே நேரம் அமெரிக்கா ஆயுதகப்பல்களை காட்டிகொடுத்தது. கீபீர், டிவோராவை ஸ்ரேல் மூலம் வழங்கியது.

3. இந்தீயா தடை செய்ய பட்ட ஆயுதகளையும் ஆட்களையும் கொடுத்தது.

.........

.........

போராட்டத்தில் இருந்து மக்கள் விலகும் போது போராட்டம் தோற்பது தவிர்க்கமுடியாதது. புலப்பெயர்வானது எண்ணிக்கையில் பெரியது. இது நேரடியானது. ஒவ்வொரு புலம்பெயர்ந்தவனும் தாயகத்தில் இருப்பவனுக்கு புலப்பெயர்வை வழிகாட்டிக்கொண்டிருந்தான். இது பல்வேறு வகையானது. போர் நெருக்கடி பொருளாதரா நெருக்கடிக்குள் மக்களை தள்ள வெளிநாட்டு உதவியுள்ளவன் அதிலிருந்து தப்பிக்கொண்டான். புலம்பெயர்ந்தவன் பாதுகாப்பையும் கல்வி பொருளாதரத்தையும் மேம்படுத்திக்கொண்டான். ஒவ்வொரு தாயகத் தமிழனும் வெளிநாட்டுக்குப்போவதை கனவாக கொண்டான். விடுதலைக்கு மாற்றீடாக உணர்ந்தான். போராட்டத்தில் இணைவதில் இருந்து தம்மை விலத்திக்கொண்டார்கள். நாற்பத்தைந்து லட்சம் மக்களின் விடுதலை மூன்று லட்சம் மக்களின் தலையில் எவ்வாறு ஏற்றப்பட்டது என்பதை புரிந்துகொள்வது அவசியமானது. புலம்பெயர்து பாதுகாப்பையும் வாழ்க்கை வசதியையயும் உறுதிசெய்துகொண்டு காசு கொடுத்து தமிழீழம் காண இது ஒன்றும் முதலாளி தொழிலாளி பிரச்சனையில்லை. ஆட்களில்லாத ஆயுதத்தால் எதுவும் செய்யமுடியாது. பெரும்பான்மை மக்களில் இருந்து அந்நியப்பட்ட போராட்டத்தை சர்வதேசம் அங்கீகரிக்கவும் முடியாது. புலம்பெயர்ந்தம் காசுகொடுத்தம் என்பதற்கு அப்பால் புலப்பெயர்வு ஏற்படுத்திய சமூகத்தாக்கம் என்ன என்ற புரிதலே அவசியமானது. முகமாலை பாதை மூட முன்னர் புலிகளின் குரல் வானொலியில் யாழில் இருந்து வன்னிக்கு மக்களை வரும்படி அழைத்துக்கொண்டிருந்தனர். எவரும் வரவில்லை. இதற்கான பின்னணியை புரிந்துகொள்ளுதல் அவசியமானது.

இன ரீதியான ஒட்டுமொத்த மக்கள் எவ்வளவு அதில் இனவிடுதலை சார்ந்து போராட்டத்துடன் இணைந்து நிற்பவர்கள் எவ்வளவு என்ற கணக்கில் இஸ்லாமியத் தமிழர்களின் வெளியேற்றம் புலம்பெயர் தமிழர்கள் மற்றும் அது ஏற்படுத்திய சமூகத் தாக்கம். என்னும் உள்ளகமான ஏராளமான முரண்பாடுகள் போராட்டத்தை பெரும்பான்மை மக்களிடம் இருந்து அந்நியப்படுத்தியது. எஞ்சிய மக்கள் நிர்பந்ததுக்குள் தள்ளப்பட்டார்கள். போரட்டம் பயங்கரவாதமாக முற்றுப்பெற்றது.

புலம்பெயர்ந்த தமிழன் போர்க்குற்றத்திற்கு விரசாணை வேண்டி பெரும் போராட்டம் செய்வதிலும் கவனயீர்ப்புச் செய்வதிலும் இருந்து விலத்தி நாடுகடந்த அரசு அமைத்து சிங்களத்துக்கு கொடுக்கவேண்டிய நெருக்கடிகளில் இருந்து சிங்களத்தை விடுவித்துக்கொண்டான். சனல் 4 போர்க்குற்றக் காணொளியை காட்டினால் அதற்கு நன்றி ஜெயாரீவி காட்டினால் அதற்கு நன்றி அதை விட வேறென்ன? என்னுமொருவனின் தனக்குச் சாதகமான இலங்கை மீதான தலையீட்டை புலம்பெயர் தமிழனின் முயற்ச்சியாக பீத்திக்கொள்வதற்குப் பெயர்தான் தேசியமா? மேற்குலகின் போர்க்குற்றம் என்பது மகிந்தனை அப்புறப்படுத்தி தமக்குச் சாதகமான ஒருவனை அமர்த்துவது குறித்தது இதுக்குள்ள புலம்பெயர் தமிழன் சிங்களப்பேரினவாதத்தில் இருந்து தாயகம் விடுபட என்ன செய்தான்? உண்மை என்னவெனில் புலம்பெயர் தமிழன் சிங்களத்தை மிகப்பெரிய நெருக்கடியில் இருந்து காப்பாற்றுகின்றான்.

நான் கணக்கில வீக்!! அந்த 45 இலட்சம் மக்கள் தொகை எங்கே எப்பிடி வரும் ...என்னு கொஞ்சம் விபரமாக சுகனிடம் அறிந்து கொள்ளலாமா?

அப்புறம் என்ன அந்த 3 இலட்சம் மக்களின் தலையில்?? யார் அந்த 3 இலட்சம்?

நாடுகடந்த அரசு நடவடிக்கை சிங்களத்துக்கு நெருக்கடியே தராதா மிஸ்டர்.சுகன்? அப்போ ஏன் உருத்திரகுமார கைது செய்ய சந்தர்ப்பம் தேடி அலையுது சிங்களம்?

இங்குள்ள புலம்பெயர் தமிழன் சிங்களபேரினவாதத்திலிருந்து விடுபட,எதுவும் செய்யலைன்னு நீங்க சொல்றீங்க, புலம்பெயர் தமிழன் இங்கு இருப்பதால்தான், தொண்டைக்குள் சிக்கிய முள்ளாக, டக்ளஸ் மஹிந்த,கருணா, அப்புறம் வட இந்தியம் , தாங்கள் விரும்பியபடி ஆடமுடியல்லையேன்னு அவஸ்தைப்படுறாங்கன்னு ஊர் நம்புது!

அப்புறம் என்ன திரும்ப திரும்ப அதையே சொல்லுறீங்களே சுகன் சார்!

"போராட்டத்தில் இருந்து மக்கள் விலகும் போது போராட்டம் தோற்பது தவிர்க்கமுடியாதது"

கருணா பிரியாது இருந்தால்கூட,புலம்பெயர்ந்து ஒரு தமிழன்கூட வராம இருந்த கூட இந்த அழிவு தவிர்க்கப்படமுடியாதது!

பிராந்திய சர்வதேச அரசியலின் போக்கிலான பல நாடுகள் கூடி எம்மீது நடத்திய இந்த க்னரக ஆயுதபொழிவை எதிர்கொள்ளும் சக்தி இல்லாமல்போனதே ...இன்றைய நிற்கதியின் முதற்காரணி என்று நான் சொன்னால், சுகனுக்கு அதை ஏற்கும்பக்குவம் இருக்குமா, தெரியலியே!

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்த தமிழன் போர்க்குற்றத்திற்கு விரசாணை வேண்டி பெரும் போராட்டம் செய்வதிலும் கவனயீர்ப்புச் செய்வதிலும் இருந்து விலத்தி நாடுகடந்த அரசு அமைத்து சிங்களத்துக்கு கொடுக்கவேண்டிய நெருக்கடிகளில் இருந்து சிங்களத்தை விடுவித்துக்கொண்டான். சனல் 4 போர்க்குற்றக் காணொளியை காட்டினால் அதற்கு நன்றி ஜெயாரீவி காட்டினால் அதற்கு நன்றி அதை விட வேறென்ன? என்னுமொருவனின் தனக்குச் சாதகமான இலங்கை மீதான தலையீட்டை புலம்பெயர் தமிழனின் முயற்ச்சியாக பீத்திக்கொள்வதற்குப் பெயர்தான் தேசியமா? மேற்குலகின் போர்க்குற்றம் என்பது மகிந்தனை அப்புறப்படுத்தி தமக்குச் சாதகமான ஒருவனை அமர்த்துவது குறித்தது இதுக்குள்ள புலம்பெயர் தமிழன் சிங்களப்பேரினவாதத்தில் இருந்து தாயகம் விடுபட என்ன செய்தான்? உண்மை என்னவெனில் புலம்பெயர் தமிழன் சிங்களத்தை மிகப்பெரிய நெருக்கடியில் இருந்து காப்பாற்றுகின்றான்.

இப்ப நீங்கள் கொஞ்சம் சறுக்கிறீங்கள்..............

மேலே எழுதிய கருத்தை இவை இன்னும் மேல்துக்கும் என நீங்கள் நினைத்திருக்கலாம். ஆனால் நீங்கள் கூறிய யாதார்த்தம் என்பது இங்கே தடுமாறி நிற்கிறது.

எடுத்தோம் கவுழ்த்தோம் எனும் நிலையை இப்போது தோற்றுவிக்க முடியாது. எமது எதிரி என்பவன் இப்போது சிங்களவனாக மட்டுமல்லாமல் அதையும் தாண்டி நிற்கிறது. நாம் தூண்கள் என நினைத்து கட்டியவையே எம்மேலே சாய்ந்து நசுக்கிறது இனியொரு இடைவெளி ஒன்று இங்கே அவசியமானது. எது பால் எது கள் என்ற தெளிவை ஏற்படுத்திய பின்பே ஒரு மக்கள் நகர்வை எதிர்பார்க்க முடியும். சிங்களவனின் ஆளுமைக்குள் அடங்க தாயக மக்களாக இருந்தாலும் புலம்பெயர்ந்த மக்களாக இருந்தாலும் சரி யாரும் தயாராக இல்லை. விடியலை நோக்கிய நகர்வு நிற்சயம் தேவையானது தற்போதைய சூழ்நிலைகள் அதற்கு ஒவ்வாதது. தயாக மக்களால் ஒரு ஆயுதபோராட்டத்தை முன்னெடுக்க முடியாது என்பது மூன்றுவயது பிள்ளைக்கும் தெரிந்த ஒன்று இதை ஏன் தத்துவாந்தம்போல் பேச வேண்டும்?

முள்ளிவாய்க்கால் என்பது ஒரு அழிவை தந்தாலும் சிதறி சின்னாபின்னாமாகி கொண்டிருந்த புலத்து இளைய தலைமுறையின் குருதிக்குள் ஒரு உணர்வை பாய்ச்சியிருக்கிறது. குண்டுபட்ட துயரமும் தாய்தந்தையரை கண்முன்னே இழந்த வலிகளுடனும்தான் ஈழத்து இளைய தலைமுறை வளர்கிறது. இரண்டும் ஏதோ ஒரு பாலத்தில் சந்திக்க போகின்றது என்பதை அது நடக்கும் வரையில்தான் மறுதலிக்க முடியும்.

முதாலாளித்துவ சுரண்டல் என்பது எப்போதும் இருந்த இருக்க போவதொன்று அதை போட்டு குழப்பி என்ன ஆக போகிறது. அழகான பெண்ணொருத்தி போனால் எல்லா ஆண்களும் திரும்பி பார்க்கிறார்கள் ஒரு அழகற்ற பாட்டி நடந்துபோனால் குனிந்து போகிறார்கள். அதற்காக அழகான பெண்களை பார்பப்பது போலவே அழகற்ற பெண்களையும் பாருங்கள் என்று ஒரு சட்டத்தை இயம்ப முடியுமா? மனிதன் ஆசைகளுக்கு அடிமையாகிறான் அதன் அங்கங்களாக.............. மண் ஆசை பெண் ஆசை என்று தொடர்கிறது அதில் பலவீனமானவன் அடிபட்டு போகிறான். அதுவே ஒரு பாடமாக அமையும்போது போராட தொடங்குகிறான் போராட்டம்தான் வாழ்க்கை என்றாகும்போது.................... போராட்டத்தை எப்படி புறந்தள்ளி பேச முடியகிறது???

வர்க்க பிரிவினை என்பது சீனா இந்தியாவில் தற்போது தலைக்கு மேலே எழுந்து ஆடுகிறது என்ன செய்ய முடியும். ஏழைகள் போராட முன்வரவேண்டும். அதுதான் ஒரே தீர்வு.

பணக்காரனிடம் பணம் இருக்கிறது அடியாட்களை வைத்து அடிப்பான்தான் ஆனால் தீர்வு வேண்டுமா வேண்டாமா? இதற்கான பதிலை காண்பவனுக்கும் காணதாவனுக்கும் இடைவெளி இருக்கலாம். அண்ணனுக்கும் தம்பிக்கும் இடைவெளி உள்ளதென்பது பொய்யானது.

சம்பந்தராலோ கூட்டமைப்பாலோ எந்த நகர்வையும் தானாகச் செய்ய முடியாது. நிச்சயமாக இந்தியாதான் அதன் பின்னணியில் நிற்கிறது என்பது தெளிவானது. சர்வதேசம் என்னதான் முயன்றாலும் இந்தியாவை மீறி தமிழருக்கு எந்தத் தீர்வும் கிடைக்கப்போவதில்லை. அவ்வாறு நம்பிக் கொண்டிருப்பதில் பயனுமில்லை. தமிழரின் அழிவில் இந்தியா மட்டுமல்ல சர்வதேசமும் தனது பங்கிற்கு அனைத்தையும் செய்து விட்டது. சனல் 4 என்ற ஊடகத்தின் தாக்கம் மட்டுமே இன்று தமிழர் விடயத்தில் சர்வதேசம் பற்றிக் கதைக்க வைக்கிறது.

அது மட்டுமல்ல போர்க் குற்ற விசாரணையில் இலங்கையை சர்வதேச நீதிமன்றம் விசாரிப்பதற்கு இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது. இந்தியாவின் தடுப்பு இல்லாவிட்டால் இந்த நிகழ்வு இற்றைவரை நடைபெற்றிருக்க வேண்டும். நடைபெற்ற தேர்தலில் ஆளும் கட்சியினர் அல்லது அது சார்ந்த குழுவினர் குறிப்பிடத் தக்க இடங்களைக் கைப்பற்றியிருந்தால் தமிழர்கள் தங்களை ஆதரிப்பதாகவும் போர்க் குற்றம் என்பது பொய்யானதென்பதையும் வெளிப்படுத்தியிருப்பர். தமிழர் கூட்டமைப்பு வெற்றி பெற்றமையினால் அந்த நிலைப்பாட்டை இந்தியா சொல்ல வைக்கிறது என்பது எல்லோருக்கும் புரியக் கூடிய ஒன்று.

ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வொன்றுக்கே மக்கள் ஆணை வழங்கியிருக்கிறார்கள், போர்க்குற்ற விசாரணைகளுக்கான அழைப்பு இலங்கையை விடவும் இந்தியாவையே நோக்கியிருப்பதால், தமிழர்கள் அதில் அதிக நாட்டம் கொள்ளத் தேவையில்லை. இப்படிச் சம்பந்தர் சொல்வதின் அர்த்தம் உண்மையானதுதான். இல்லாவிட்டால் பலம்பொருந்திய சர்வதேசம் ஏன் இன்னமும் சுணக்கம் காட்ட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

கருணா பிரியாது இருந்தால்கூட,புலம்பெயர்ந்து ஒரு தமிழன்கூட வராம இருந்த கூட இந்த அழிவு தவிர்க்கப்படமுடியாதது!

பிராந்திய சர்வதேச அரசியலின் போக்கிலான பல நாடுகள் கூடி எம்மீது நடத்திய இந்த க்னரக ஆயுதபொழிவை எதிர்கொள்ளும் சக்தி இல்லாமல்போனதே ...இன்றைய நிற்கதியின் முதற்காரணி என்று நான் சொன்னால், சுகனுக்கு அதை ஏற்கும்பக்குவம் இருக்குமா, தெரியலியே!

ஒரு பச்சை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.