Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் உதயன் பிரதம ஆசிரியர் தாக்கப்பட்டார்

Featured Replies

யாழ் உதயன் பிரதம ஆசிரியர் தாக்கப்பட்டார்

யாழ் உதயன் பிரதம ஆசிரியர் இன்று இரவு 7:45 மணியளவில், உந்துருளியில் வந்த இருவரால் தாக்கப்பட்டார்.

59 வயதுடைய ஞாநசுந்தரம் குகநாதனே படுகாயங்களுக்கு உள்ளானார்.

தனது அலுவலகத்தில் இருந்து கஸ்தூரியார் வீதியால் சென்றுகொண்டிருந்த பொழுதே பின்னால் வந்தவர்களால் இரும்பு குழாயால் தாக்கப்பட்டார். இதில் இவர் மயங்கி விழுந்தார்.

கஸ்தூரியார் வீதி முழுமையான சிங்கள இராணுவ கட்டுப்பட்டுள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.

News Editor attacked in Jaffna

[TamilNet, Friday, 29 July 2011, 15:08 GMT]

Two unidentified men who came in a motorbike attacked the Chief News Editor of Uthayan Daily in Jaffna, Gnanasundaram Kuganathan, Friday around 7:45 p.m., causing serious injuries to the 59-year-old news editor. Earlier, Mr. Kuganathan was living inside the paper office as the news paper had come under attacks by occupying SL Army-backed operatives in May 2006 and in March 2009. The staff at the paper office have been threatened by the EPDP paramilitary on several occasions.

Mr. Kuganathan sustained injuries in his head and fainted, the residents of the area said. The victim was rushed to Jaffna Teaching Hospital.

The attackers had followed Mr. Kuganathan in a motorbike while he was leaving the office and attacked him with a sharp iron rod on Kasthooriyaar Road in Jaffna city. The area is full of SLA check posts and patrols.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=34236

Edited by akootha

இவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தமையால் பல காலம் உதயன் அலுவலக வளாகத்தில் உள்ள அறை ஒன்றில் வெளியே வராமல் வசித்து வந்தார். எந்த அச்சுறுத்தல் வந்தாலும் எழுத்துப் பணியில் அஞ்சாமல் ஈடுபட்டவரை மீண்டும் தாக்கியுள்ளனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரை தேடிச் சென்றவர்களால் இவரை கண்டுபிடிக்க முடியலாம் போகவே, வேறு சிலரை சுட்டுக் கொன்று போட்டு போயிருந்தனர்

  • கருத்துக்கள உறவுகள்

இவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தமையால் பல காலம் உதயன் அலுவலக வளாகத்தில் உள்ள அறை ஒன்றில் வெளியே வராமல் வசித்து வந்தார். எந்த அச்சுறுத்தல் வந்தாலும் எழுத்துப் பணியில் அஞ்சாமல் ஈடுபட்டவரை மீண்டும் தாக்கியுள்ளனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரை தேடிச் சென்றவர்களால் இவரை கண்டுபிடிக்க முடியலாம் போகவே, வேறு சிலரை சுட்டுக் கொன்று போட்டு போயிருந்தனர்

உதயன் பத்திரிகைக்கு, எத்தனை சத்திய சோதனை. கவலையாக உள்ளது.

நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் தோல்வியுற்ற ஒட்டுக்குழுவும், சிங்கள ராணுவமும் சேர்ந்தே..... இதனைச் செய்திருக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் அதிகம்.

அந்த.... நாதாரிகள் தான் செய்திருப்பாங்கள்.

பிற்குறிப்பு;

"நிழலியை, சில நாட்களாக காணவில்லை ஜாலி" என்னும் பொருள் பட காணவில்லைப் பகுதியில் கருத்து இணைக்க ஆயத்தப் படுத்தும் போது... நிழலியே வந்துட்டார். உங்களுக்கு நூறு வயசு நிழலி. :)

  • தொடங்கியவர்

உதயன் பிரதம செய்தி ஆசிரியர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்

உதயன் பத்திரிகையின் பிரதம செய்தி ஆசிரியர் ஞானலிங்கம் குகநாதன் (வயது 61) இனந்தெரியாத நபர்களினால் இன்று மாலை தாக்கப்பட்ட நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று மாலை 6.30 மணியளவில் உதயன் தலைமைக் காரியாலயத்திலிருந்து வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த இவரைப் பின்தொடர்ந்துள்ள இனந்தெரியாத நபர்கள் சிலர் அவரது தலையில் பலமாகத் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் உதயன் நிர்வாகக் குழுவினரால் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/25532-2011-07-29-15-00-42.html

தோல்வியை சகிக்கமுடியாதவர்களின் சதியே செய்தியாசிரியர் மீதான தாக்குதல்: சரவணபவன் எம்.பி.

நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் படுதோல்வியடைந்தவர்கள் அந்த தோல்வியை சகிக்க முடியாமலே உதயன் பத்திரிகையின் பிரதம செய்தியாசிரியர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் என உதயன், சுடரொளி நிறுவனத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணபவான் - தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.

உதயன் பத்திரிகையின் பிரதம செய்தியாசிரியர் ஞானலிங்கம் குகநாதன் மீது இன்று மாலை நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவானிடம் கருத்துக் கேட்டபோதே அவர் மேற்படி கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில்...

இன்று மாலை 6.30 மணியளவில் உதயன் காரியாலயத்திலிருந்து அருகிலுள்ள வீட்டிற்கு குகநாதன் நடந்து சென்று கொண்டிருந்த வேளையில் இனந்தெரியாத இரு நபர்களினால் தலையில் இரும்புக் கம்பியினால் தாக்கப்பட்டுள்ளார். நாவல சந்தியில் இராணுவ காவலரன் இருக்கும் இடத்திலிருந்து 30 மீற்றர் தூரத்துக்குள்ளேயே இச்சம்பம் இடம்பெற்றுள்ளது. குகநாதன் வரும்வரை காத்திருந்து இரும்புக் கம்பியினால் தாக்கிவிட்டு மோட்டார் சைக்கிளில் சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

தேர்தலில் ஏற்பட்ட படுமோசமான தோல்வியை சகிக்க முடியாதவர்களின் மிலேச்சத்தனமான தாக்குதலாகவே இச்சம்பவத்தை நான் பார்க்கிறேன். தேர்தல் காலங்களிலும் எனக்கும் உதயன் ஆசிரிய பீடத்திற்கும் பல அச்சுறுத்தல் தொலைபேசி அழைப்புக்கள் வந்திருந்தன. இது தொடர்பாக பொலிஸாரிடம் முறையிட்டிருந்ததோடு எமக்கு பாதுகாப்பினை அதிகரிக்குமாறும் வேண்டியிருந்தோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் பொலிஸாரினால் எடுக்கப்படாமலிருக்கும் நிலையிலேயே துரதிர்ஷ்டவசமாக இச்சம்பவம் இடம்பெற்றிருக்கிறது.

ஏற்கனவே 2006ஆம் ஆண்டு மே 3ஆம் திகதி பத்திரிகை சுதந்திர தினத்தில் எமது உதயன் காரியாலயத்திற்குள் புகுந்த காடையர்கள் குகநாதன் எங்கே?.என்று கேட்டு உள்நுழைந்து இருவரை சுட்டுக் கொன்றிருந்தனர். அன்று காரியாலயத்தில் குகநாதன் இல்லாதமையால் உயிர் தப்பியிருந்தார். அன்றிலிருந்து இன்றுவரை உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் குகநாதன் இன்று காடையர்களின் மிலேச்ச தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார்.

எமது நிறுவனத்தின் ஊழியர்களை தாக்குவதன் மூலமாக ஜனநாயகத்தின் குரலை ஒடுக்கி - பேச்சு, கருத்து சுதந்திரத்தினை நசுக்கி எதிர்காலத்தில் வடக்கில் வெற்றிபெறலாம் என சிலர் பகல்கனவு காண்கின்றனர். ஆனால் அது ஒருபோதும் நடக்காது. குகநாதன் போல் நூறுபேர் எங்களுடன் சேர்ந்து உழைக்க காத்திருக்கிறார்கள்.

இச்சம்பவம் தொடர்பாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பத்மநாபனுக்கும் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவுக்கும் நான் முறைப்பாடு செய்திருக்கிறேன். தாக்குதல் நடத்திய காடையர்களை கைதுசெய்து, காடைத்தனத்துக்கு முடிவுகட்ட நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் நான் நம்புகின்றேன் என்று குறிப்பிட்டார்

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/25537-2011-07-29-15-58-23.html

  • தொடங்கியவர்

பொப் டயாஸ் என்பவர் அமெரிக்காவில் உள்ள ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் அமைப்பின் ஆசியாவுக்கான பொறுப்பாளர். இவர் கடந்த வருடம் அமெரிக்காவின் பாதுகாப்பு கமிட்டி கூப்பிட்டு விசாரணை செய்த மூவரில் ஒருவர்.

செய்யவேண்டியது: முடிந்தால் இந்த மடலை: info@cpj.org .....

Dear Bob Dietz,

Director, ASIA PROGRAM COORDINATOR

Sri Lanka: Chief Editor of Jaffna daily attacked

Jaffna daily chief editor was attacked on Friday, at 7:45PM. Mr. Kuganathan is editor in chief for Jaffna daily of Uthayan and is now fighting for his life.

While we all pray for his safety, we should also move passing just condemning these cowardly acts.

Thanks for your attention.

Sincerely,

  • கருத்துக்கள உறவுகள்

குகா மீதான தாக்குதலுக்கு சரா M.P கண்டனம்!

Published on July 29, 2011-9:21 pm No Comments

நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் படுதோல்வியடைந்தவர்கள் அந்த தோல்வியை சகிக்க முடியாமலே உதயன் பத்திரிகையின் செய்தியாசிரியர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் என உதயன், சுடரொளி நிறுவனத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணபவன் தெரிவித்துள்ளார்.

இன்று மாலை 6.30 மணியளவில் உதயன் காரியாலயத்திலிருந்து அருகிலுள்ள வீட்டிற்கு குகநாதன் நடந்து சென்று கொண்டிருந்த வேளையில் இனந்தெரியாத இரு நபர்களினால் தலையில் இரும்புக் கம்பியினால் தாக்கப்பட்டுள்ளார். நாவல சந்தியில் இராணுவ காவலரன் இருக்கும் இடத்திலிருந்து 30 மீற்றர் தூரத்துக்குள்ளேயே இச்சம்பம் இடம்பெற்றுள்ளது. குகநாதன் வரும்வரை காத்திருந்து இரும்புக் கம்பியினால் தாக்கிவிட்டு மோட்டார் சைக்கிளில் சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

தேர்தலில் ஏற்பட்ட படுமோசமான தோல்வியை சகிக்க முடியாதவர்களின் மிலேச்சத்தனமான தாக்குதலாகவே இச்சம்பவத்தை நான் பார்க்கிறேன். தேர்தல் காலங்களிலும் எனக்கும் உதயன் ஆசிரிய பீடத்திற்கும் பல அச்சுறுத்தல் தொலைபேசி அழைப்புக்கள் வந்திருந்தன. இது தொடர்பாக பொலிஸாரிடம் முறையிட்டிருந்ததோடு எமக்கு பாதுகாப்பினை அதிகரிக்குமாறும் வேண்டியிருந்தோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் பொலிஸாரினால் எடுக்கப்படாமலிருக்கும் நிலையிலேயே துரதிர்ஷ்டவசமாக இச்சம்பவம் இடம்பெற்றிருக்கிறது.

ஏற்கனவே 2006ஆம் ஆண்டு மே 3ஆம் திகதி பத்திரிகை சுதந்திர தினத்தில் எமது உதயன் காரியாலயத்திற்குள் புகுந்த காடையர்கள் ”குகநாதன் எங்கே..” என்று கேட்டு உள்நுழைந்து இருவரை சுட்டுக் கொன்றிருந்தனர். அன்று காரியாலயத்தில் குகநாதன் இல்லாதமையால் உயிர் தப்பியிருந்தார். அன்றிலிருந்து இன்றுவரை உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் குகநாதன் இன்று காடையர்களின் மிலேச்ச தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார்.

எமது நிறுவனத்தின் ஊழியர்களை தாக்குவதன் மூலமாக ஜனநாயகத்தின் குரலை ஒடுக்கி – பேச்சு, கருத்து சுதந்திரத்தினை நசுக்கி எதிர்காலத்தில் வடக்கில் வெற்றிபெறலாம் என சிலர் பகல்கனவு காண்கின்றனர். ஆனால் அது ஒருபோதும் நடக்காது. குகநாதன் போல் நூறுபேர் எங்களுடன் சேர்ந்து உழைக்க காத்திருக்கிறார்கள்.

இச்சம்பவம் தொடர்பாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பத்மநாபனுக்கும் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவுக்கும் நான் முறைப்பாடு செய்திருக்கிறேன். தாக்குதல் நடத்திய காடையர்களை கைதுசெய்து, காடைத்தனத்துக்கு முடிவுகட்ட நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் நான் நம்புகின்றேன் என்று குறிப்பிட்டார்.

http://www.saritham.com/?p=28236

இதையும் சர்வதேச மட்டத்திலுள்ள ஊடகவியலாளர் மத்தியில் கொண்டு செல்லவேண்டும்.

பாரிய அபிவிருத்தி என்று தமிழரை ஏமாற்ற நினைக்கும் பயங்கரவாதிகளினதும் அவர்களது கைக்கூலிகளினதும் வேலையாக இருக்க வேண்டும்.

"இனந்தெரியாத இரு நபர்களினால் தலையில் இரும்புக் கம்பியினால் தாக்கப்பட்டுள்ளார்"

குகநாதனின் உடல்நிலை எப்படி?

  • தொடங்கியவர்

"இனந்தெரியாத இரு நபர்களினால் தலையில் இரும்புக் கம்பியினால் தாக்கப்பட்டுள்ளார்"

குகநாதனின் உடல்நிலை எப்படி?

குருதி தோய்ந்த படத்துடன் ....அவசர சிகிச்சை பிரிவில்

http://www.tamilmirror.lk/component/content/article/87---main/25540-2011-07-29-16-51-37.html

  • கருத்துக்கள உறவுகள்

பாரிஸ் ஈழநாடு நடத்தியவர் தானே... குகநாதன்.

அவருக்கும் உதயனுக்கும் என்ன சம்பந்தம்.

அவருக்கு ஏன் ஆமி அடிக்குது?

ஒண்டும்... விளங்கேல்லை.

உதயன் செய்தி ஆசிரியர் குகநாதன் மீது மிலேச்சத்தனமான தாக்குதல் : படுகாயமடைந்த அவர் அவசர சிகிச்சைப் பிரிவில்

உதயன் செய்தி ஆசிரியர் குகநாதன் மீது மிலேச்சத்தனமான தாக்குதல் : படுகாயமடைந்த அவர் அவசர சிகிச்சைப் பிரிவில்

உதயன் நாளிதழின் செய்தி ஆசிரியர் ஞா.குகநாதன் ஆயுததாரிகள் இருவரால் மிலேச்சத்தனமாகத் தாக்கப்பட்டதில் படுகாயமடைந்தார். யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நேற்றுப் பகல் வேலை முடிந்து அவர் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இரவு 7.30 மணிக்கு இந்தப் பயங்கரம் இடம்பெற்றது. நாவலர் வீதியில் கஸ்தூரியார் வீதி சந்திக்கும் மனோகரா தியட்டர் சந்திக்கும் இடைப்பட்ட பகுதியில் அவரைப் பின்தொடர்ந்து சென்ற இருவர் அவர் மீது இந்த மிலேச்சத்தனமாக தாக்குதலை நடத்தி உள்ளனர்.

தாக்குதலை நடத்தியவர்கள் பின்னர் தயாராக நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் ஏறித் தப்பிச் சென்றனர். கஸ்தூரியார் வீதி - நாவலர் வீதிச் சந்தியில் உள்ள இராணுவக் காவலரணில் இருந்து 30 மீற்றர் தூரத்தில் சம்பவம் இடம்பெற்றது. எனினும் தாக்குதலாளிகள் தப்பிச் சென்றுள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளாகி இரத்தம் கொட்டிய நிலையிலும் ஒருவாறு அருகில் இருந்த தனது வீட்டுக்குள் ஓடிச் சென்ற குகநாதன் பத்திரிகை அலுவலகத்துக்கு தகவல் தந்தை அடுத்து அங்கிருந்து சென்றவர்கள் அவரை உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றனர்.

வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரவில் சேர்க்கப்பட்ட அவர், தொடர்ந்தும் தீவிர கண்காணிப்பிலேயே வைக்கப்பட்டுள்ளார்.

இரண்டு நபர்கள் இரும்புக் கம்பியினால் அவரைத் தாக்கிவிட்டு ஓடிச் சென்று மோட்டார் சைக்கிளில் ஏறித் தப்பிச் சென்றனர் என்று வீதியில் சைக்கிளில் வந்த ஒருவர் விவரித்தார்.

இரண்டு பேர் அரை மணி நேரத்துக்கும் அதிகமாக அந்த இடத்தில் தரித்து நின்றனர் என்று செய்தி ஆசிரியரின் அயலவர்கள் தெரிவித்தனர். நேற்று இரவும் அடையாளம் தெரியாத மூவர் இரவு 11 மணி வரையும் செய்தியாசிரியரின் வீட்டுக்கு முன்பாக தரித்திருந்தனர் என்றும் அவர்கள் கூறினர். காலையில் பார்த்த போது அந்த இடத்தில் மதுபானப் போத்தல்கள் காணப்பட்டன என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் பொலிஸார் வைத்தியசாலைக்கு வந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்ததுடன், விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

2006ஆம் ஆண்டு உதயன் பத்திரிகை அலுவலகத்துக்குள் புகுந்த ஆயுததாரிகள் மிலேச்சத்தனமாக இருவரைச் சுட்டுக்கொன்ற தாக்குதலின் போதும் கொலையாளிகள் குகநாதனைப் பெயர் குறிப்பிட்டுத் தேடினர். அப்போது அவர் கடமையில் இருந்தபோதும் ஒருவாறு மறைவிடம் ஒன்றில் பதுங்கிக்கொண்டதால் மயிரிழையில் தப்பித்தார்.

onlineuthayan.com

பிற்குறிப்பு;

"நிழலியை, சில நாட்களாக காணவில்லை ஜாலி" என்னும் பொருள் பட காணவில்லைப் பகுதியில் கருத்து இணைக்க ஆயத்தப் படுத்தும் போது... நிழலியே வந்துட்டார். உங்களுக்கு நூறு வயசு நிழலி. :)

கொஞ்சம் தலை காட்டாமல் விட்டால், பசங்களுக்கு எவ்வளவு கொண்டாட்டம் :D

  • கருத்துக்கள உறவுகள்

பாரிஸ் ஈழநாடு நடத்தியவர் தானே... குகநாதன்.அவருக்கும் உதயனுக்கும் என்ன சம்பந்தம்.

அவருக்கு ஏன் ஆமி அடிக்குது?

ஒண்டும்... விளங்கேல்லை.

அவரில்லை இவர் என்று நினைக்கின்றேன்

குருதி தோய்ந்த படத்துடன் ....அவசர சிகிச்சை பிரிவில்

http://www.tamilmirror.lk/component/content/article/87---main/25540-2011-07-29-16-51-37.html

நன்றி அகூத

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.