Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறீலங்காவை போர்க்குற்ற விசாரணையிலிருந்து காப்பாற்றும் நடவடிக்கையில் கூட்டமைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Jul 30, 2011 / பகுதி: முக்கியச் செய்தி /

சிறீலங்காவை போர்க்குற்ற விசாரணையிலிருந்து காப்பாற்றும் நடவடிக்கையில் கூட்டமைப்பு - எஸ்.ஜெயானந்தமூர்த்தி கண்டனம்

வன்னியில் இறுதிக்கட்ட போரில் இலங்கை படைகளினால் படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான பொதுமக்களின் போர்குற்ற விசாரணை அவசியமற்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ள கருத்துக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி வன்மையாக கண்டித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான ஏ.சுமந்திரன் கடந்த ஞாயிற்றுக்கிழமை இலண்டனில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இலண்டன் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில், இலங்கை அரசாங்கத்தின் மீது போர்க்குற்ற விசாரணை நடாத்தப்பட கூடாது என தெரிவித்திருக்கும் கருத்து தொடர்பாக கண்டித்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் இறுதியாக இலங்கை இராணுவத்தினால் கண்மூடித்தனமாக மேற்கொள்ளப்பட்ட போரின் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன், நிராயுதபாணிகளாக வந்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்ட மற்றும் இராணுவத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்கிற எமது உறவுகள் இலங்கை அரசாங்கம் மீது முறையான போர்க்குற்ற விசாரணை நடாத்தப்பட வேண்டும் என தொடர்ச்சியான அழுத்தம் கொடுக்கின்றனர்.

இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரான சுமந்திரன் புலம்பெயர்ந்த மக்கள் எதுவும் அறியாதவர்கள், அவர்கள் அரசியல் ஞானம் அற்றவர்கள் என கூறியிருப்பது கொலை வெறிபிடித்த சிங்களப் பேரினவாத சக்திக்கெதிராக போராடி வரும் எமது புலம்பெயர் மக்களின் எழுச்சியைக் கொச்சைப்படுத்தும் நடவடிக்கையாக அமைந்துள்ளது.

மனித உரிமை அமைப்புகள், அமெரிக்கா மற்றும் பிரித்தானிய உட்பட பல மேற்கேத்தேய நாடுகள் இலங்கை அரசாங்கம் மீது போர் குற்ற விசாரணை நடாத்தப்பட வேண்டும் என அழுத்தம் பிரயோகிறது, ஐக்கிய நாடுகள் சபையும் இலங்கை அரசு மீது போர் குற்ற விசாரணை நடாத்தப்பட வேண்டும் என கடுமையான போக்கை முன்னெடுக்கிறது.

இலங்கை இராணுவத்தினால் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட விபரங்களை "சனல் 4" தொலைக்காட்சி நிறுவனம் அக்குவேறு ஆணிவேறாக உலக மக்களுக்கு திரைபோட்டு காட்டிவரும் நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரின் இவ்வாறான கருத்து இலங்கை அரசாங்கத்தைப் பாதுகாக்க எடுக்கும் நடவடிக்கை மற்றுமல்ல இந்திய அரசாங்கத்தையும் போர் குற்ற விசாரணையிலிருந்து பாதுகாக்கும் நடவடிக்கையாகும்.

தமிழ் தேசியம் மற்றும் தமிழீழத்திற்கு வலுச் சேர்ப்பதற்காக பல்வேறு கஷ்ட்டங்களை சந்தித்து தமிழ் தேசிய கூட்டமைப்பை நாங்கள் உருவாக்கியிருந்தோம். ஆனால் சுமதிரன் போன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட அடிப்படை கோட்பாடுகளை மறந்து செயற்படுவது கவலையளிப்பதாகவுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறிய கருத்துக்கு இதுவரையில் அதில் அங்கம் வகிக்கும் எந்த ஒரு உறுப்பினரும், எதிர்ப்போ அல்லது மறுப்போ தெரிவிக்கப்படாமையினால,; கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் இரட்டை முகங்கள் வெளிக்கு வந்துள்ளது.

இனப்பிரச்சினை தொடர்பாக இலங்கை அரசாங்கத்துடன் இடம்பெற்ற மூன்றாம் பேச்சுவார்த்தையின் போது சாதகமான முன்னேற்றம் ஏற்பட்டள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். ஆனால் இலங்கை அரசாங்கத்துடன் ஒன்பது சுற்றுப் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாகவும், நேரத்துக்கொரு கதையை அரசாங்கம் கூறிவருவதாகவும, பேச்சுவார்த்தையில் எந்த முன்னெற்றமும் ஏற்படவில்லையென மற்றொரு பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்திருந்தார்.

உலக நாடுகளே வன்னி மண்ணில் இடம்பெற்ற கொடூரத்திற்கு நீதி வேண்டும் என ஒருமித்த குரல் கொடுக்கும் போது, கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை அரசாங்கத்தை போர்க்குற்ற விசாரணையிலிருந்து காப்பாற்றுவதற்கான நடவடிக்கையில் செயற்படுகிறதா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழத்தொடங்கியுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறிய கூற்றுக்கு அக்கட்சி விளக்கம் தெரிவிப்பதுடன், இலங்கை அரசாங்கம் மீது போர்க் குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என பாடுபடும் புலம் பெயர்ந்த மக்களுக்கு பூரண ஆதரவு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்துள்ளார்.

http://www.pathivu.com/news/17717/57//d,article_full.aspx

இது ஒரு நல்ல அரசியல் நகர்வாகவே தெரிகின்றது.

தீர்வு மூலம் மட்டுமே போர்க்குற்ற விசாரணைகள் கைவிடப்படும் என வலியுறுத்தல். ஒருபக்கம் கூட்டமைப்பு புலம்பெயர் மக்களை பகிரங்கமாக 'போர் குற்ற முன்னெடுப்புக்களை கைவிடுங்கள்' என கேட்பது. அதை கொழும்புக்கு காட்டி ஒரு தீர்வை எடுப்பது ( சாத்தியமா என கேட்டால், தெரியாது என்பதே பதில்).

மறுபக்கம் புலம்பெயர் மக்கள் (கஜேந்திரனும் கண்டித்துள்ளார்) கூட்டமைப்பை கண்டிப்பதுடன் தொடர்ந்தும் போர்க்குற்ற விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் அரசியல் தீர்வு கிடைக்கும் வரை.

குறிப்பாக தமது குடும்ப நலனுக்காக தமிழரின் உரிமைகளை அடகுவைத்து வாழப் பழகிய கிழடுகளின் முயற்சி .

இது ஒரு நல்ல அரசியல் நகர்வாகவே தெரிகின்றது.

தீர்வு மூலம் மட்டுமே போர்க்குற்ற விசாரணைகள் கைவிடப்படும் என வலியுறுத்தல். ஒருபக்கம் கூட்டமைப்பு புலம்பெயர் மக்களை பகிரங்கமாக 'போர் குற்ற முன்னெடுப்புக்களை கைவிடுங்கள்' என கேட்பது. அதை கொழும்புக்கு காட்டி ஒரு தீர்வை எடுப்பது ( சாத்தியமா என கேட்டால், தெரியாது என்பதே பதில்).

மறுபக்கம் புலம்பெயர் மக்கள் (கஜேந்திரனும் கண்டித்துள்ளார்) கூட்டமைப்பை கண்டிப்பதுடன் தொடர்ந்தும் போர்க்குற்ற விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் அரசியல் தீர்வு கிடைக்கும் வரை.

கூட்டமைப்பு எப்போதுமே போர்க்குற்ற விசாரணையில் ஆர்வம் காட்டவில்லை.(ஆனால் சுமந்திரனின் கருத்துகள் வேறு). இது இந்தியாவின் அழுத்தத்தினால் வந்தது. அரசுடன் கூட்டமைப்பு போர்க்குற்றம் பற்றி எப்போதவது பேசியதா என்பது தெரியாது. போர்க்குற்றத்தில் முயற்சி எடுப்போர், புலம் பெயர் மக்கள், தமிழ் நாட்டு மக்கள், சனெல்-4, அல்ஜசிரா, ஓரளவுக்கு NGOக்கள். இவைகளில் ஒருவரும் கூட்டமைபின் கீழ் இல்லை. அரசு போர்க்குற்றம் சம்பந்தமாக கூட்டமைப்பு கொடுக்கும் வாக்குறிதிகளை சட்டை செய்யாது. இலகுவில் அரசு தீர்வோன்றிக்கு போகாது. தெற்கில் அது செய்யும் அரசியல் இதற்கு அடையாளம். இந்தியா இப்போது இலங்கையில் தான் காலூன்றுவதிலேயே கவனம் செலுத்துகிறது. தமிழருக்கான தீர்வு கேள்விக்குறியே. தீர்வு வர வேண்டுமாயின்

1.இந்தியா முன்வந்து இலங்கையை நெருக்குதல்.

2.போர்குற்றவிசாரனையின் பலனாக உலகநாடுகள் தலையிடுதல்.

3. இந்தியாவில் BJP யும் இலங்கையில் சந்திரிகாவும் வந்தால் எதிர்வு கூறமுடியாதெ சில சம்பவங்கள் நிகழ்தல்.

கூட்டமைப்பு எப்போதுமே போர்க்குற்ற விசாரணையில் ஆர்வம் காட்டவில்லை

கூட்டமைப்பு பகிரங்கமாக போர்க்குற்ற ஆதரவை தெரிவித்தால், கொலையும் விழும். அண்மையில் சுரேஷ் பிரேமச்சந்திரனின் உதவியாளர் ரமேசின் உயிர் அச்சுறுத்தலுக்குள்ளகியது. அந்த கொலைப்பயத்தையும் தாங்கி செல்லும் தைரியம் இன்னும் அங்கில்லை.

1.இந்தியா முன்வந்து இலங்கையை நெருக்குதல்.

2.போர்குற்றவிசாரனையின் பலனாக உலகநாடுகள் தலையிடுதல்.

3. இந்தியாவில் BJP யும் இலங்கையில் சந்திரிகாவும் வந்தால் எதிர்வு கூறமுடியாதெ சில சம்பவங்கள் நிகழ்தல்.

சந்திரிகா வருவதை தவிர, மிகுதி தெரிவுகளை நாம் தொடர்ந்தும் முயன்றவண்ணம் இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

மறுபக்கம் புலம்பெயர் மக்கள் (கஜேந்திரனும் கண்டித்துள்ளார்) கூட்டமைப்பை கண்டிப்பதுடன் தொடர்ந்தும் போர்க்குற்ற விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் அரசியல் தீர்வு கிடைக்கும் வரை.

தாயகத்தில் உள்ளவர்களும் புலம்பெயர்ந்தவர்களும் ஒத்த கருத்தில்தான் உள்ளனர் என்று நிரூபிக்க வெளிக்கிட்டால் சம்பந்தரும், ஜெயானந்த மூர்த்தியும் குழப்புகின்றார்களே. :huh:

தாயகத்தில் உள்ளவர்களும் புலம்பெயர்ந்தவர்களும் ஒத்த கருத்தில்தான் உள்ளனர் என்று நிரூபிக்க வெளிக்கிட்டால் சம்பந்தரும், ஜெயானந்த மூர்த்தியும் குழப்புகின்றார்களே. :huh:

சிலநேரம் நாங்களும் குழம்பி மற்றையவர்களையும் குழப்பிவிடுவதும் ஒரு அரசியல்.

  • கருத்துக்கள உறவுகள்

சிலநேரம் நாங்களும் குழம்பி மற்றையவர்களையும் குழப்பிவிடுவதும் ஒரு அரசியல்.

மேலோட்டமாகப் பார்க்கின்றவர்களுக்கு கலங்கின குட்டைகூட "பளிச்" என்று துலங்கலாகத்தான் இருக்கும்.

தமிழர்களின் அரசியலில் குழப்பமில்லை என்று என்னதான் கூவினாலும் அகம்பாவத்துடன் சுயநல அரசியல் செய்பவர்கள்தான் தற்போது தமிழர்களில் எஞ்சியுள்ளனர். எனவே ஆளையாள் சொற்களால் சுட்டுக்கொள்ளுவது தொடர்வது தவிர்க்கமுடியாதது. :o

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு நல்ல அரசியல் நகர்வாகவே தெரிகின்றது.

தீர்வு மூலம் மட்டுமே போர்க்குற்ற விசாரணைகள் கைவிடப்படும் என வலியுறுத்தல். ஒருபக்கம் கூட்டமைப்பு புலம்பெயர் மக்களை பகிரங்கமாக 'போர் குற்ற முன்னெடுப்புக்களை கைவிடுங்கள்' என கேட்பது. அதை கொழும்புக்கு காட்டி ஒரு தீர்வை எடுப்பது ( சாத்தியமா என கேட்டால், தெரியாது என்பதே பதில்).

மறுபக்கம் புலம்பெயர் மக்கள் (கஜேந்திரனும் கண்டித்துள்ளார்) கூட்டமைப்பை கண்டிப்பதுடன் தொடர்ந்தும் போர்க்குற்ற விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் அரசியல் தீர்வு கிடைக்கும் வரை.

சர்வதேசம் கூட்டமைப்பினை.. புலிகள் இயக்க ஆதரவு அரசியல் அமைப்பு என்ற ரீதியில் தான் இன்னமும் பார்த்து வருகிறது. அண்மையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் கூட்டமைப்பின் வெற்றியை சர்வதேச செய்தி நிறுவனங்கள் (பிபிசி உட்பட) அப்படித்தான் பார்த்து கருத்து வெளியிட்டிருந்ததுடன்.. கூட்டமைப்பு தற்போது பிரிவினையைக் கைவிட்டு.. ஐக்கிய இலங்கைக்குள் தீர்வை தேடுகிறது என்றும் கூறியுள்ளன.

இதை ஒரு கூட்டமைப்பின் சர்வதேசத்திற்கான அரசியல் நகர்வாகக் கொண்டாலும்.... போர்க் குற்ற விசாரணை என்பதை அரசியலாகப் பாவிப்பது என்பது சற்று சிக்கலான விடயம் மட்டுமன்றி அது எதிர்வினைகளை ஏற்படுத்தி.. போர்க் குற்றவாளிகளை தமிழ் மக்கள் மன்னிக்க தயாராகி விட்டார்கள்.. புலிகள் அவ்வாறு அழிக்கப்பட்டதில் தமிழ் மக்கள் மகிழ்ச்சி அடைகிறார் என்று காட்டப்படவும்.. போர்க்குற்ற விசாரணைகள் ஒரேயடியாக குப்பைத் தொட்டிக்குள் போகவும்.. போர்க்குற்றவாளிகள் தப்பிக்கவும் வழிவகுப்பதோடு.. கூட்டமைப்பிற்கு இன்றுள்ள போர்க்குற்ற விசாரணையை காட்டி சிங்களத்தோடு பேரம் பேசும் தன்மையும் இல்லாமல் போய் அது நிர்க்கதியாக வேண்டிய நிலையும் ஏற்படலாம்.

போர்க்குற்ற விசாரணையை அரசியலாக்குவதை கூட்டமைப்பு உட்பட அனைவரும் தவிர்த்துக் கொண்டு அதனை மனித உரிமைப் பிரச்சனையாக.. இன அழிப்பின் வடிவமாக சர்வதேச அரங்கில் முன்னிறுத்தி அதனூடாக சிங்களத்தால் காவு கொள்ளப்பட்ட மக்களுக்கும்.. அவர்களை சார்ந்து வாழும் மக்களுக்கும் நீதி கிடைக்கச் செய்ய வேண்டும். அழிந்து போன அந்த மக்களின் உயிர்கள் மீதும்.. அவர்களைப் பறி கொடுத்துவிட்டு கண்ணீரோடு வாழும் மக்களின் துயரின் மீது அரசியல் செய்வதை சகலரும் கைவிட்டு.. நீதிக்காகவும்.. என்ன தேவைக்காக அந்த மக்கள் முள்ளிவாய்க்கால் வரை போய் உயிர்களை காவு கொடுத்தார்களோ.. அந்தத் தேவை வெல்லப்படவும் நீதி கிட்டவும்.. மனித இனத்துரோகிகள்.. தண்டிக்கப்படவும் வழி செய்யப்பட வேண்டும்.

இது சங்கரியும்.. சித்தார்த்தனும்.. டக்கிளசும்.. கருணாவும்.. கூட்டமைப்பும்.. இந்தியாவும் அரசியல் செய்வதற்கான இன அழிவல்ல. அவர்கள் சொல்வது போல.. இவை மன்னிக்கக் கூடிய மனித உரிமை மீறல்கள் அல்ல. இவற்றை மன்னிக்கக் கோருவதன் மூலம்.. உயிர் திறந்த அந்த மக்கள் விடுதலைப் புலிகளாக சித்தரிக்கப்பட்டு.. பயங்கரவாதிகளாக்கப்பட்டு.. அவர்கள் அவ்வாறு அழிக்கப்பட்டதனாலேயே சிறீலங்கா நீடித்த இன ஐக்கியத்துக்குள்ளும்.. நல்லிணக்கத்துக்குள்ளும்.. அமைதிக்குள்ளும் பிரவேசிக்க முடிந்ததாகச் சித்தரிக்கப்பட்டு.. உண்மைகளும்.. நீதியும் மீண்டும் புதைக்கப்படும் நிலையே உருவாகும்.

இதுவே 1956 இல் இருந்து 2009 வரைக்கும் நிகழ்ந்திருக்கிறது. எத்தனையோ இனக்கலவரங்களை படுகொலைகளை எல்லாம் மன்னித்து மறந்து.. கடைசியிலும்.. முள்ளிவாய்க்கால் தான் எமக்கு சிங்களத்தால் பரிசளிக்கப்பட்டது. இன்னும் இன்னும்.. தயவுசெய்து மக்களின் அழிவுக்கு நீதி தேடும் விடயங்களை வைத்து அரசியல் செய்வதை விடுத்து.. அவற்றை அரசியலுக்கு அப்பாலான மனித உரிமைகள் சார்ந்த விடயமாக புலம்பெயர் மக்களும் உலகத்தமிழினமும்.. சர்வதேசத்தின் முன்னிறுத்தி நீதி பெறவும் குற்றவாளிகள் சர்வதேசத்தின் முன் தண்டிக்கப்படவும் உதவி நில்லுங்கள்.

ஆட்டுக்குள் மாட்டைக் கலந்து.. இறுதியில் கசாப்புக் கடைக்காரனுக்கு.. விளம்பரமும் இலாபமும் ஈட்டிக் கொடுக்காதீர்கள். கூட்டமைப்போ.. யாருமோ.. போர்க்குற்றத்தை மறக்க மன்னிக்க.. சிங்களத்துக்கு அபயம் அளிக்க வேண்டுமெனில்.. அதை அந்த உயிர்களுக்குப் பொறுப்பான மக்களிடம் கேட்டு வாங்கிக் கொள்ளட்டும். ஆனால் மனிதர்கள் என்ற வகையில் கொல்லப்பட்ட அந்த மக்களின் வாழ்வுரிமை பறிக்கப்பட்டது தொடர்பில் ஒட்டுமொத்த மனித சமூகமும் அவர்களுக்காக நீதி கேட்கக் கடமைப்பட்டுள்ளது. அதை எவரும் தடுத்து நிறுத்த முடியாது.

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.