Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய நாடாளுமன்றத்தில் சிறப்பு விருந்தினர்களாக இலங்கை சபாநாயகர், எம்பிக்கள்: உறுப்பினர்கள் எதிர்ப்பால் பரபரப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய நாடாளுமன்றத்தில் சிறப்பு விருந்தினர்களாக இலங்கை சபாநாயகர், எம்பிக்கள்: உறுப்பினர்கள் எதிர்ப்பால் பரபரப்பு

இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் மற்றும் எம்பிக்கள் சிறப்பு விருந்தினர்களாக, இந்திய நாடாளுமன்ற மக்களவையில் கலந்து கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் குரல் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மக்களவை கூடியதும் பேசிய சபாநாயகர் மீராகுமார், சிறப்பு விருந்தினராக வந்திருந்த இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் சமன் ராஜபக்சே உள்ளிட்டவர்களை எம்பிக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

மேலும் இலங்கை எம்பிக்களை, மக்களவை உறுப்பினர்கள் இன்முகத்துன் இந்தியாவிற்கு வரவேற்க வேண்டும் என்றும் மீராகுமார் கேட்டுக்கொண்டார்.

இதற்கு தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து எம்பிக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது தம்பிதுரை எம்பி தலைமையில் எதிர்ப்பு தெரிவித்த அதிமுக உறுப்பினர்கள், போர்க்குற்றம் சாட்சியில் சிக்கியிருக்கும் இலங்கை பிரதிநிதிகள் இந்திய நாடாளுமன்றத்தில் இருக்கக் கூடாது என்றனர்.

உறுப்பினர்களின் எதிர்ப்பால் சபாநாயகர் மீராகுமாரால் உரையை வாசிக்க முடியவில்லை. விருந்தினர்களை வரவேற்று உபசரிப்பதுதான் இந்தியர்களின் கலாச்சாரம் என்று மீராகுமார் கூறியதையடுத்து உறுப்பினர்கள் அமைதியாகினர்.

http://www.nakkheeeran.com/users/frmNews.aspx?N=58724

  • கருத்துக்கள உறவுகள்

விருந்தினர்களை வரவேற்று உபசரிப்பதுதான் இந்தியர்களின் கலாச்சாரம் என்று மீராகுமார் கூறியதையடுத்து உறுப்பினர்கள் அமைதியாகினர்.

இந்தியர்களின் கலாச்சாரம், போர்க் குற்றவாளிகளை வரவேற்று உபசரிக்கும் அளவுக்குக் கீழிறங்கிப் போனது தான், தற்போதைய இந்தியாவின் நிலை.

அரசன் எவ்வழி, குடிகள் அவ்வழி என்பது எவ்வளவு உண்மையாகப் போய் விட்டது!!! :wub:

சரணடைந்தவைகளைக் கொல்வது எந்த உலகத்திலும் இல்லாத கலாச்சாரம். இதை நம்பியாரூடு இந்தியா செய்தது. இரசாயனக்குண்டை No fire zone" அப்பாவி மக்கள் மீது வீசுவது வடநாட்டாரின் கலாச்சாரம்.

சரணடைந்தவைகளைக் கொல்வது எந்த உலகத்திலும் இல்லாத கலாச்சாரம். இதை நம்பியாரூடு இந்தியா செய்தது. இரசாயனக்குண்டை No fire zone" அப்பாவி மக்கள் மீது வீசுவது வடநாட்டாரின் கலாச்சாரம்.

வட இந்தியனுக்கு என்ன கலாச்சாரம் தெரியும் பத்து பேர் ஒருத்தியை துகில் உரிந்த கலாச்சாரம் கொண்டவன்.

அவமானம் தமிழக் தமிழர்களுக்கு.

இனியும் இந்தியாவுடன் தமிழகம் இருக்க வேண்டுமா என்று தமிழக அரசியல் கட்சிகள் துணிந்து கேட்க வேண்டும்..

எல்லா கட்சிகளும் துணிந்து கேட்டால் எத்தனை கட்சிகள் தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும்.

தமிழன் ஒரு கேணையன் அது ஈழம் சரி, தமிழகம் சரி..

இலங்கை நாடாளுமன்றக் குழுவிடம் மீரா குமார் மன்னிப்பு

இந்தியா வந்துள்ள இலங்கை நாடாளுமன்றக் குழுவினருக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்களவையில் அதிமுக உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர்.

இதற்காக அவர்களிடம், மக்களவைத் தலைவர் மீரா குமார் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

இந்திய நாடாளுமன்ற நடவடிக்கைகளை காண்பதற்காக, இலங்கை நாடாளுமன்றத்தின் உயர்நிலைக் குழுவினர் தில்லி வந்துள்ளனர். மக்களவை திங்கள்கிழமை கூடியதும், மீராகுமார் அவர்களை உறுப்பினர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

அப்போது, இருக்கையில் இருந்து எழுந்த அதிமுக எம்.பி.க்கள், இலங்கை நாடாளுமன்றக் குழுவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கோஷம் எழுப்பினர். அப்போது பேசிய மீரா குமார், இருநாடுகளுக்கு இடையே நல்லுறவை வளர்ப்பதற்காக அவர்கள் வந்துள்ளனர் என்றார்.

பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக மக்களவைச் செயலர் ஓர் அறிக்கை வெளியிட்டார்.

அதில் மக்களவையில் நிகழ்ந்த சம்பவத்தால், வேதனையடைந்ததாகவும் இதற்காக இலங்கை நாடாளுமன்றக் குழுவிடம் மீரா குமார் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=India&artid=455138&SectionID=130&MainSectionID=130&SEO=&Title=%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81

' சபாநாயகர் தமிழர்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்' - By sekar

  • கருத்துக்கள உறவுகள்

அ.தி.மு.க. பாரளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய எதிர்ப்பு கோஷம் ஸ்ரீலங்கா பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்பட்ட அவமானமே.

அ.தி.மு. க. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி. :)

to: speakerloksabha@sansad.nic.in,

lokmail@sansad.nic.in

cc: meirakumar@gmail.com

Subject: Sri Lanka must apology to India and Tamils

Dear Speaker of Parliament, India.

I disagree with the fact that when democratically elected MPs who used their right to protest Sri Lankan officials, do not deserve as apology! They have bloodied their hands with lives, including of Indians!

The fact is that these MPs have direct and indirect knowledge of (continuing) genocide of Tamils! And they have killed more than 500 TamilNadu Fishermen.

Regards,

(Your Name)

------------------------------------

to: speakerloksabha@sansad.nic.in,

lokmail@sansad.nic.in

cc: meirakumar@gmail.com

Subject: Sri Lanka must apology to India and Tamils

Dear Speaker of Parliament, India.

I disagree with the fact that when democratically elected MPs who used their right to protest Sri Lankan officials, do not deserve as apology! They have bloodied their hands with lives, including of Indians!

The fact is that these MPs have direct and indirect knowledge of (continuing) genocide of Tamils! And they have killed more than 500 TamilNadu Fishermen.

Regards,

(Your Name)

--------------------------

இலங்கை பாராளுமன்ற எம்.பிகள், கிட்ட மன்னிப்பு கேட்ட மீராகுமார்..

செயல் வரவேற்க தக்கது!

இதனால, ADMK கோவம்..இன்னும் அதிகரித்து , நமக்கு சாதகமா வருதோ இல்லியோ ,

தாங்க அவமானபட்டதை சரிகட்ட ஏதாவது மத்திய அரசுக்கு எதிரா செய்வாங்க !

தற்போதைய நிலமையில், மாநில-மத்திய அரசுகளுக்கிடையிலானஈழ தமிழர்விவகார மோதலில்,எதையும் கண்டும்காணாமல், முக்கியமா மனு அனுப்புறோம் பேர்வழின்னு கமெண்டு ஏதும் சொல்லாமலிருப்பதே, ஈழ தமிழர்களுக்கு புத்திசாலித்தனம்!

----------

ஈழத்தமிழரின் பிரச்சினையை திசைதிருப்பவா சிறிலங்காவின் நாடாளுமன்றக் குழு? - நெடுமாறன் கண்டனம்!!

சிறிலங்காவின் நாடாளுமன்ற சபாநாயகர் சாமல் ராஜபக்ச தலைமையிலான நாடாளுமன்ற குழுவினரை இந்திய நாடாளுமன்றத்துக்கு அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டமைக்கு தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மழைக்காலக் கூட்டத் தொடரில் ஈழத்தமிழர் பிரச்சனை உறுதியாக எழுப்பப்படும் எனத் தெரிந்திருந்த நிலையில், எதிர்க்கட்சிகளைத் திசைத் திருப்புவதற்கு சிறிலங்காவின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவை இந்திய அரசு திட்டமிட்டு அழைத்திருப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

'இந்திய அரசின் அழைப்பின் பேரில் இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் சாமல் ராஜபக்ச தலைமையில் வந்துள்ள குழுவினருக்கு இந்திய நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட வரவேற்பிற்கு அ.தி.மு.க, ம.தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றைச் சேர்ந்த உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டம் தொடங்கும் வேளையில் இலங்கை நாடாளுமன்றக் குழு வந்திருப்பது திட்டமிட்ட ஒன்றாகும். சில நாட்களுக்கு முன்னால் இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் நிருபமா ராவ் கொழும்பு சென்று ராஜபக்சவை சந்தித்துப் பேசியதின் விளைவாகவே இக்குழு அனுப்பப்பட்டுள்ளது.

மழைக்காலக் கூட்டத் தொடரில் ஈழத்தமிழர் பிரச்சனை உறுதியாக எழுப்பப்படும் என்ற காரணத்தினால் எதிர்க்கட்சிகளைத் திசைத் திருப்புவதற்கு இலங்கைக் குழுவை இந்திய அரசு திட்டமிட்டு வரவழைத்திருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தமிழக மக்களின் மன உணர்வுகளை மேலும் மேலும் அவமதிக்கும் வகையில் இந்திய அரசு ராஜபக்ச குழுவுடன் கைகோர்த்து நிற்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கு நல்ல பாடம் கற்பித்தும்கூட இந்திய அரசு திருந்தவில்லை. தமிழக மக்கள் இந்த துரோகத்தை ஒரு போதும் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள் என எச்சரிக்கிறேன்' என அவர் இவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={15D7B085-EFBB-4440-9C5C-2D6D248801FE}

இந்திய எதிர்க்கட்சித் தலைவி இலங்கை வருகிறார்

இந்திய எதிர்க்கட்சித் தலைவி சுஸ்மா ஸ்வராஜ் செப்டெம்பர் 17, 18 ஆம் திகதிகளில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக த ஹிந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவுக்கு வஜயம் செய்துள்ள சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையிலான இலங்கை நாடாளுமன்ற தூதுக்குழுவுக்கும் சுஸ்மா ஸ்வராஜுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பையடுத்து நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இவ்விஜயம் குறித்து அறிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்திற்கும் விஜயம் செய்வதற்கும் இவ்வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வுள்ளதாக செய்தியாளர்களிடம் சுஸ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

http://tamilmirror.lk/2010-07-14-09-13-23/25700-2011-08-02-07-00-39.html

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய எதிர்க்கட்சித் தலைவி இலங்கை வருகிறார்

இந்திய எதிர்க்கட்சித் தலைவி சுஸ்மா ஸ்வராஜ் செப்டெம்பர் 17, 18 ஆம் திகதிகளில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக த ஹிந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

------

சுஸ்மா சுவராஜ் ஈழத்தமிழர் மீது அனுதாபம் கொண்டவர். இந்தச் சந்தர்ப்பத்தை சரியாக பயன் கொள்வார் என்று நம்புவோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.