Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மர்லின் மன்றோ

Featured Replies

மர்லின் மன்றோ Marilyn Monroe, ஜூன் 1, 1926 – ஆகஸ்ட் 5, 1962), அமெரிக்க நடிகையும் பாடகியும் திரைப்பட இயக்குநரும் ஆவார்.

1960 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் விருது இவருக்குக் கிடைத்தது. அத்துடன் 1999 ஆம் ஆண்டில் அமெரிக்க திரைப்படக் கழகத்தினால் (AFI) அனைத்துக் காலப் பகுதிக்குமான சிறந்த நடிகை (greatest female star of all time) விருது வழங்கிச் சிறப்பித்தது.

1947 ஆம் ஆண்டில் இவர் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். ஆரம்பத்தில் சிறிய பாத்திரங்களில் தோன்றினார். 1950 இல் The Asphalt Jungle மற்றும் All About Eve என்ற படங்கள் இவருக்குப் புகழ் தேடிக் கொடுத்தன. நகைச்சுவைப் பாத்திரங்களில் இவரது நடிப்பு பெரிதும் வரவேற்கப்பட்டது.

நோர்மா டொகேர்ட்டி, யாங்க் இதழ், 1945மன்றோவின் கடைசி நாட்களில் போதைப் பொருள், குடும்பப் பிரச்சினையால் அல்லல் உற்றார். இவரது இறப்பு இன்னமும் ஒரு தீர்க்கப்படாத புதிராகவே உள்ளது. தற்கொலை செய்து கொண்டதாகவே அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டாலும் போதைப் பொருள் அதிகம் உட்கொண்டு இறந்திருக்கலாம் என்ற கருத்தும் மறுக்கப்படவில்லை. கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. இவரது பெயர் ஜோன் எஃப். கென்னடி, மற்றும் ரொபேர்ட் கென்னடி ஆகியோருடன் இணைத்துப் பேசப்பட்டது .

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B

Edited by komagan

  • கருத்துக்கள உறவுகள்

அன்றைய காலத்தில் பலரின் நித்திரையை கெடுத்தவர்.

post-1260-0-09053200-1312580604_thumb.jp

  • கருத்துக்கள உறவுகள்

அன்றைய காலத்தில் பலரின் நித்திரையை கெடுத்தவர்.

ஏன் இப்பவும்தான் நீங்க போட்ட படத்தை பார்த்து :lol::D

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு இவவை நினைச்சால் மூண்டு நாள் நித்திரை கெட்டுது

ஏன் இப்பவும்தான் நீங்க போட்ட படத்தை பார்த்து laugh.gifbiggrin.gif

உடையார் உப்பிடி மல்லாக்க பிரண்டு கிடந்தது பார்த்தல்... :rolleyes::lol::D

உங்கட அவாட்டறைச் சொன்னன்.. ^_^

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

உடையார் உப்பிடி மல்லாக்க பிரண்டு கிடந்தது பார்த்தல்... :rolleyes::lol::D

உங்கட அவாட்டறைச் சொன்னன்.. ^_^

குட்டி இப்படி பார்க்கில் படுத்திருப்பதே தனி சுகம் இஞ்ச. மாலை நேரங்களில் கமராவுடன் படுத்திருந்தால்.....அழகிய சந்திரனை படம் எடுக்கலாம்

மர்லின் மன்றோ”– உலகப்புகழ் பெற்ற ஆலிவுட், கவர்ச்சி நடிகை!. உலகம்

முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களின் “கனவுக்கன்னி”யாக விளங்கியவர்.

மர்லின் மன்றோ கடைசியாக நடித்துக்கொண்டு இருந்த படத்தின் பெயர் “நான் கொடுப்பதற்கு இன்னும் சில உண்டு” என்பதாகும். அந்த படத்தில்தான் குளிக்கும் காட்சியில் அவர் நிர்வாணமாக நடித்தார். ஆனால் படப்பிடிப்புக்கு மர்லின் மன்றோ ஒழுங்காக வருவது இல்லை என்று கூறி அவரை படத்தில் இருந்து நீக்கிவிட்டார்கள். சரிவர நடிக்கத் தவறியதற்காக ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு தரவேண்டும் என்று மர்லின் மன்றோ மீது வழக்குத் தொடரப்பட்டது. அதுமுதல் மர்லின் மன்றோ உற்சாகம் குன்றி இருந்தார். ஆங்கிலப் பட உலக புகழின் உச்சிக்கு சென்று கொண்டிருந்த மர்லின் மன்றோவுக்கு திடீரென்று மனநிலை பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் 5_8_1962_ல் மர்லின் மன்றோ தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி, உலகம் முழுவதும் இருந்த சினிமா ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்தது. மர்லின் மன்றோ ஆசிட் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக முதலில் செய்தி பரவியது. அவரது உடலை டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு, அளவுக்கு மீறி தூக்க மாத்திரை சாப்பிட்டதால் மரணம் ஏற்பட்டதாக அறிவித்தனர்.

அமெரிக்காவில் சினிமா நகரமான ஆலிவுட்டில் ஒரு மாளிகையில் மர்லின் மன்றோ வசித்து வந்தார். அதிகாலை 3 மணிக்கு மர்லின் மன்றோ கட்டிலில் மயங்கிக் கிடந்ததை வீட்டு வேலைக்காரர் பார்த்து விட்டு டாக்டர்களுக்கு தகவல் கொடுத்தார். டாக்டர்கள் விரைந்து சென்றார்கள்.

மன்றோவின் படுக்கை அறைக் கதவு உள்பக்கம் தாளிடப்பட்டு இருந்தது. டாக்டர்கள் கதவை உடைத்து உள்ளே நுழைந்தார்கள். ஒரு கையில் டெலிபோனுடன் மன்றோ படுக்கையில் கிடந்தார். உடலில் ஆடை எதுவும் இல்லாமல் நிர்வாணமாகக் கிடந்தார். டாக்டர்கள் சோதித்துப் பார்த்ததில் அவர் இறந்து வெகு நேரம் ஆகி இருப்பது தெரிந்தது. அளவுக்கு மீறி தூக்க மாத்திரை சாப்பிட்டதால் மரணம் அடைந்ததாக டாக்டர்கள் கூறினார்கள். தற்கொலை செய்து கொண்ட மர்லின் மன்றோ, கடிதம் எதுவும் எழுதி வைக்கவில்லை. அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது புரியாத புதிராக இருந்தது.

தற்கொலை செய்து கொண்ட மர்லின் மன்றோவுக்கு வயது 36. சினிமா உலகத்திலேயே அதிக பணம் சம்பாதித்த நடிகையாக திகழ்ந்தார். மர்லின் மன்றோவின் மறைவு ரசிகர்களுக்கு மட்டும் அல்ல, பிரபல நடிகைகளுக்கும் கூட பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.

அமெரிக்காவில் எங்கு திரும்பினாலும் மர்லின் மன்றோ பற்றிய பேச்சாகவே இருந்தது. மரணத்தின்போது கோடீசுவரியாக இருந்த மர்லின் மன்றோவின் இளம் பருவ வாழ்க்கை, சோதனைகளும், துன்பங்களும் நிறைந்ததாக இருந்தது.

http://pusuriyan.wordpress.com

Edited by Udaiyar

  • கருத்துக்கள உறவுகள்

மெர்லின் மன்றோ இறந்து நாற்பத்து ஐந்து வருடங்களுக்கு மேலாகியும் மெர்லின் மன்றோ மீதான கிறக்கம் இன்னும் தீரவில்லை போலிருக்கிறது.

கருப்பு வெள்ளையில் பதினைந்து நிமிடங்கள் ஓடக்கூடிய மர்லின் மன்றோ முகம் தெரியாத நபர் ஒருவருடன் உறவு கொள்ளும் நிர்வாண வீடியோ ஒன்றை அமெரிக்காவின் மெனகாட்டன் பகுதி தொழிலதிபர் ஒருவர் மெனக்கெட்டு வாங்கியிருக்கிறார்.

விலை அதிகமில்லை ஜெண்டில் மேன் 1.5 மில்லியன் டாலர்கள் தான்.

இந்த வீடியோவை இணையத்தில் இடுவதோ, விற்பனை செய்வதோ வாங்கியவரின் நோக்கமில்லையாம். ரகசியக் கனவுகள் போல பாதுகாக்கப் போகிறாராம்.

தனது 36 வது வயதில் படுக்கையறையில் நிர்வாணமாய் இறந்து கிடந்த மர்லின் மன்றோ அமெரிக்க அதிபர் ஜான். எஃப். கென்னடியுடன் கலவிக் காதல் கொண்டிருந்ததாக தகவல் ஒன்று உண்டு.

ஏற்கனவே கென்னடியின் பாலியல் பலவீனங்கள் நிரூபிக்கப்பட்டிருப்பதால் இந்த தகவலும் உண்மையே என பெரும்பாலானவர்கள் ஒத்துக் கொள்கின்றனர். எனினும் இந்த வீடியோவில் இருப்பது கென்னடியா ? என்பது தெரியவில்லை.

இந்த வீடியோ ஒரு பிரதி எஃப்.பி.ஐ யிடம் விசாரணைக்காகக் கொடுக்கப்பட்டிருந்தது. கொடுத்தவர் ஒரு பிரதியை தன்னிடம் வைத்திருந்தார். மர்லின் மன்றோவின் “கணவன்களில் ஒருவரான” ஜோ டி மாகியோ அவரிடமிருந்து இந்த வீடியோவை வாங்க பெரும் பிரயர்த்தனம் செய்தார். $25,000 டாலர்களுக்கு அந்த வீடியோவைத் தருமாறு அவர் பலமுறை விண்ணப்பித்தும் அந்த நபர் மறுத்துவிட்டார்.

இப்போது அந்த நபருடைய மகன், சும்மா இருக்கிறதே என்று ரகசியமாய் அதை விற்பனை செய்யப் போக, அது 1.5 மில்லியன் டாலர் என அவனையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

வேறு ஏதாவது வீடியோக்கள் இருக்கிறதா என அவன் தனது வீட்டுப் பரணையும், கீழ் தளத்தையும் துளாவிக் கொண்டிருப்பதாகக் கேள்வி.

மர்லின் இருந்தாலும் மில்லியன் டாலர்

இறந்தாலும் மில்லியன் டாலர் !

http://sirippu.wordpress.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.