Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்ட‌ன் காவல்துறையினர் செய்தது சரி

Featured Replies

ஆனால் ஒன்றைக் கவனிக்க வேண்டும்.. ஆர்ப்பாட்டக்காரர்கள் மட்டுமல்ல.. சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞனின் குடும்பத்தினரும் தங்கள் கவலையை உண்மையை அறிதலுக்கான ஆர்வத்தை வெளிப்படுத்தி இருந்தனர். அந்த வகையில் உள்துறை அமைச்சர் அம்மையார் மே.. அந்தக் குடும்பத்தினரின் நிலைப்பாட்டோடு அரசு தன்னைப் பகிர்ந்து கொள்கிறது என்று கூறி இருக்கிறார். ஆர்ப்பாட்டம்.. கலவரத்துக்கு முதலே அதை அரசு செய்திருக்கலாமே..???! காவல்துறை முன் வைத்த குற்றச்சாட்டு.. அந்த இளைஞர் காவல்துறையினர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ததால் தாங்கள் சுட்டுக் கொன்றதாக. ஆனால் சுயாதீன பொலிஸ் விசாரணை ஆணைக்குழு அந்த இளைஞனுக்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கி பாவிக்கப்பட்டிருக்கவில்லை என்று கூறி இருக்கிறது.

ஒருவரை கொலையாளி.. கொள்ளைக் கூட்டத்தின் தலைவர் என்று பொதுமக்களும் காவல்துறையும் தீர்மானிக்க முடியும் என்றால் ஏன் நீதித்துறை என்ற ஒன்றிருக்கிறது..???! இந்தக் கொலை மிகவும் மோசமான செயற்பாடாகவே பார்க்கப்படும். காவல்துறை நீதித்துறைக்கும் பதில் சொல்ல வேண்டி வரும் போலவே தோன்றுகிறது. இப்படித்தான் அவசரக் குடுக்கைத் தனமாக பயங்கரவாதி என்று சொல்லி.. 2005 யூலை குண்டுவெடிப்பின் பின்.. ஒரு அப்பாவி பிரேசில் இளைஞனை சுட்டுக் கொன்றது காவல்துறை. பொதுமக்களுக்கு அவரை காட்டியது பயங்கரவாதியாக. இறுதியில் நீதித்துறை தான் அவர் ஒரு அப்பாவி குடியேற்றக்காரர் என்று அறிவித்து காவல்துறையின் செயற்பாட்டை கடிந்திருந்தது.

எந்த சம்பவங்களும் முழுதாக நிரூபிக்கப்படாத நிலையில், தீர்ப்பு வருமுன் இந்த கலவரத்தை ஆரம்பித்த ஆர்ப்பாட்டக்காரர்களால் அந்த இளைஞரின் கொலைக்கு காரணமென சந்தேகிக்கும் பொலிசாரின் மீது அல்லது அந்த போலிஸ் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியிருந்தால் அவர்களின் ஆத்திரத்திற்கான காரணத்தை ஏற்றுக் கொள்ளலாம். அதைவிட்டு தனிநபர்களின் சொத்துக்கள் மீது தாக்குதல்கள் நடத்தி பொருட்களை சூறையாடுவது சரியென்று எடுக்கலாமா? அவர்களின் கோபம் அரசாங்க நிறுவனங்கள் மீது இருக்கவில்லை. வெறும் கொள்ளைக்கூட்டம். இவர்களால் பாதிக்கப்பட்ட ஒருவர் இவரின் ஒன்றுவிட்ட பாட்டியை சுட்டுக் கொன்றால் அதுவும் சரியாகுமா?

பொறுப்புகளில் உள்ள மே அம்மையார்தகவல்களை சரி பார்த்துத்தான் கருத்துக் கூற முடியும். பிரேசில் இளைஞன் தவறுதலாக சுட்டுக் கொல்லப்பட்டது உண்மை. அதற்காக காவல்துறையினரின் எல்லா நடவடிக்கைகளிலும் பிழை பிடிப்பது எங்களுக்கே தீங்காக அமையும்.

துணைப்பிரதமரும் தெரேசா மே யும் அந்த இளைஞனின் குடும்பத்தினருக்கு ஒரே செய்தியையே தெரிவித்தனர். துணைப் பிரதமர் நாட்டில் தானே இருந்திருந்தார். :unsure::o

அவர் ஒரு எடுபிடி இங்கே வெள்ளைகள் அவரை Tea boy என்று தான் சொல்லுவார்கள். அவரால் என்ன செய்ய ஏலும்? அவரின் பேச்சை யார் கேட்பது இப்போ? (ஒருவேளை அவர் தனக்குத் தெரிந்ததை உளறி விட்டால் அதுவே அரசாங்கத்திற்கும் காவல்துறையினருக்கும் ஆப்பாக மாறிவிடும் என்று நினைத்தாரோ என்னவோ.. :unsure: )

மக்களிடம் ஓட்டுக் கேட்கும் போது இருக்கும் ஆர்வம் அந்த மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் எந்த அரசியல்வாதி தான் உடனே வாருகிறார்கள்? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய கவலை காவல்துறைக்கு நீதித்துறைக்கு பதில் சொல்ல தேவையில்ல என்ற அடிப்படையில் அதிகாரங்களை வழங்குவதும் ஆபத்தானது. ரொட்னாம் சம்பவத்தை அடுத்து.. ஹக்னியில்.. ஒரு இளைஞனை அநாவசியமாக நிறுத்தி சோதனை செய்ததே அங்கு கலவரம் தோன்றக் காரணமானது. காவல்துறை அடிக்கடி... வெள்ளைகள் அல்லாதோரை நோக்கி புதிய புதிய வழிமுறைகளைப் பரீட்சித்துப் பார்ப்பது குறித்து நீண்ட காலமாகவே முறைப்பாடுகள் குறைபாடுகள் இருக்கின்றன.

காவல்துறை.. பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டம்.. ஜி 8 மாநாட்டு ஆர்ப்பாட்டங்களை கையாண்ட விதத்திலும் கடுமையான கண்டனங்களைப் பெற்றிருந்தது. குறிப்பாக மாணவர்களின் ஆர்ப்பாட்டம் வன்முறைக்கு மாற.. காவல்துறையின் சில விசமத்தனமான ஆத்திர மூட்டத்தக்க அணுகுமுறைகளும் காரணமாக அமைந்திருந்தது. இதனை அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தவன் என்ற முறையில் நானே கண்டிருக்கிறேன். அவை தேவையற்றவை. அப்படியான அணுகுமுறைகளை காவல்துறை தவிர்ப்பதோடு நீதித்துறைக்கு பதில் சொல்ல வேண்டிய அதிகாரங்களை அதற்கு வழங்குவதே காவல்துறையும் அதிகார துஷ்பிரயோகங்களை செய்வதில் இருந்து அதனை தடுக்க அல்லது கட்டுப்படுத்த உதவும். :)

Edited by nedukkalapoovan

இன்று காலை செய்தி அறிவிப்பாளர் ஒருவர் அம்மையார் மே நேற்று பேட்டி கொடுத்தபோது water canon பாவிக்கும் எண்ணம் இருக்கா என்று அந்த செய்தியாளர் கேட்டதற்கு அமையார் வடக்கு அயர்லாந்தில் தான் பாவித்துள்ளார்கள் இங்கு அதாவது இங்கிலாந்திற்கு அது தேவை இல்லை என்ற வகையில் பதில் கூறி இருந்தாராம். அது எப்படி வடக்கு அயர்லாந்தில் பயன்படுத்தலாம் என்றால் ஏன் இங்கிலாந்தில் (mainland) பயன்படுத்த முடியாது?

ஏன்? எப்படி முடியாது?? என்று பார்வையாளர்களைப் பார்த்து தனது விசனத்தைக் வெளிப்படையாகக் கூறி இருந்தார்... (செய்தி அறிவிப்பாளர் வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது) நியாயமான கேள்விகள்.

வெள்ளைகளுக்கிடையிலேயே வெளிப்படையாக வேற்றுமைகள் இருக்கும் பட்சத்தில் வேற்று இனத்தவருக்கு (எமக்கும் தான்) 100% நியாயம் கிடைக்குமா என்பது சந்தேகமே.. :rolleyes:

[உண்மை இது தான் என்று தெரிந்தாலும் சில அரசியல் தலையீட்டால் தடையங்களை அழிப்பது இங்கு அவ்வளவு சிரமம் இல்லை. (உதாரணம் இளவரசி டயானாவின் விபத்து/கொலை விசாரணை)]

ஒரு கருப்பின சகோதரன் மரணத்திற்கு ஊரையே எரிக்கிறார்கள்.

தங்கள் ஒட்டுமொத்த இனமே அழிந்த பொழுது கூட தமிழர்கள் எம்மினத்தை காப்பாற்றுங்கள் என்று கதறிக்கொண்டு லண்டன் நகர வீதிகளில் அமைதியான போராட்டங்கள் தான் செய்தார்கள். சகோதரன் முருகதாசன் தன்னை தானே தான் எரித்துகொண்டான்.

இங்கிலாந்து இப்பொழுது புரிந்து கொள்ளும் தமிழர்கள் எத்தனை பெரிய ஜனநாயகவாதிகள் என்று.. நாங்களா தீவிரவாதிகள்?

(முகநூலில் இருந்து)

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ இவர்களுக்கு என்னதான் தீர்வு??? காவல்துறையின் கையை கட்டிப்போட்டுவிட்டு கலவரம் அடங்குதில்லை என்றால் எப்படி?? தாயகத்தில் இப்படிப்பட்டவர்களுக்கு பொட்டு வைத்தால், "களையெடுபு" இங்கு நடந்தால் தனிமனித சுதந்திரம், அஜாரகம் ஓன்றும் புரியவில்லை நெடுக்ஸ்.

தாங்கள் இருப்பதற்கே ஒரு வதிடம் இன்றி ஒழித்து திரிந்த கெரில்லாக்களுக்கும்...........

வான்படை கடற்கடை காவல்துறை என்றும் பல ஆயிரம் கோடி செலவில் சிறைகளையும் வைத்திருக்கும் ஒரு நாட்டிற்கும் இடையில் இருக்கும் வித்தியாசத்தை புரியவில்லை என்று எழுதியிப்பது?

நீங்கள் பிறந்ததில் இருந்து சிறையிலேயே இருக்கிறீர்களா? அனுதாபங்கள்!

தாங்கள் இருப்பதற்கே ஒரு வதிடம் இன்றி ஒழித்து திரிந்த கெரில்லாக்களுக்கும்...........

வான்படை கடற்கடை காவல்துறை என்றும் பல ஆயிரம் கோடி செலவில் சிறைகளையும் வைத்திருக்கும் ஒரு நாட்டிற்கும் இடையில் இருக்கும் வித்தியாசத்தை புரியவில்லை என்று எழுதியிப்பது?

நீங்கள் பிறந்ததில் இருந்து சிறையிலேயே இருக்கிறீர்களா? அனுதாபங்கள்!

:o:o:o

  • கருத்துக்கள உறவுகள்

காவல்துறை செய்தது பிழை என்று நீதி விசாரணை செய்து தண்டனை வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டம் நடத்தலாம்.ஆனால் கடைகளைக் கொள்ளையடிப்பதும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதும் எந்த வித்தில் கொல்லப்பட்ட இளைஞனுக்கான நீதி கோரலாகும்?பனை மரத்தில் தேள் கொட்ட தென்னை மரத்தில் நெறி கட்டிய கதையாக இந்த வன்முறைகள் அமைந்திருக்கின்றன.வன் முறையாளர்கள் களவெடுப்பதிலேயே குறியாக இருக்கிறார்களேயன்றி வேறு எந்த விடயத்திலும் அல்ல.காவல்துறை சொத்தழிவிலும் பார்க்க தனிமனித உயிருக்கு கொடுக்கும் மரியாதையே இதுவாகும்.இக்கலவரம் வேறு ஒரு நாட்டில் நடந்திருந்தால் வன்முறையைத் தவிர்க்கும் போராட்டத்தில் பல உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருக்கும்.காவல்துறையில் இருக்கும் எல்லா மனிதர்களும் ஒரே மாதிரியான குணாதியம் உடையவர்கள் அல்ல ஒருவர் உணர்ச்சி வசப்பட்டு அவசரப்பட்டு நடந்ததால் எற்பட்ட தவறுக்கு ஒட்டு மொத்த காவல் தறையைக் குற்றஞ் சாட்டுவது முறையாகாது.

தாங்கள் இருப்பதற்கே ஒரு வதிடம் இன்றி ஒழித்து திரிந்த கெரில்லாக்களுக்கும்...........

வான்படை கடற்கடை காவல்துறை என்றும் பல ஆயிரம் கோடி செலவில் சிறைகளையும் வைத்திருக்கும் ஒரு நாட்டிற்கும் இடையில் இருக்கும் வித்தியாசத்தை புரியவில்லை என்று எழுதியிப்பது?

நீங்கள் பிறந்ததில் இருந்து சிறையிலேயே இருக்கிறீர்களா? அனுதாபங்கள்!

நான் சிறையில் இருப்பது ஒருபக்கம் இருக்கட்டும் , நீங்கள் குறிப்பட்ட முப்படைகளையும் , ஆளணிகளையும் கொண்ட நாட்டினால் ஏன் இந்தக் கொள்ளைக் கும்பல்களை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் உள்ளது??????????? மேலும் , நான் நெடுக்கருக்கு எழுதிய இரண்டாவது கருத்தாடலையும் வடிவாகப் படித்துவிட்டு நான் சிறையில் இருக்கின்றேனா? இல்லையா ? என்ற முடிவுக்கு வாருங்கள் மருதங்கேணி. நன்றி .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.