Jump to content

தமிழீழ ஆட்பதிவுத் திணைக்களம்


Recommended Posts

தயவு செய்து.. வெளிநாடுகளில் கிடைக்கின்ற வசதியும் வாய்ப்பும், தனி மனித வாழ்வை மேம்படுத்தக் கிடைக்கின்ற வாய்ப்பு, அங்கே எனக்கு இல்லை. அதனால் அங்கு செல்ல முடியாதுள்ளது என்ற உண்மையைச் சொல்லுங்கள்.. அது நேர்மை.. அதை விட்டுப் போட்டு.. தண்ணி நல்லம் .. காத்து நல்லம்.. ஆனா.. ஆச்சி விடுறாவில்லை என்ற சாட்டுக்களை சொல்லாதீர்கள்..

இதைத்தான் நானும் சொல்கிறேன் எங்கட நாட்டுக்கு நாங்கள் போகும் போது, குறுகிய காலத்தில் வசதிவாய்ப்பான நிலைக்கு உயர்த்துவது ஒண்று கடினமான விடயம் இல்லை........ ஒரு 6 மாத இங்கத்தைய உழைப்பு போதும் வசதியான வீடு, காற்றோட்டமான காணி, அன்பான அயலவர், கூப்பிட்ட குரலுக்கு ஒடிவரும் உறவுகள், கோவிச்சுக் கொண்டு எண்றாலும் போய் அமைதியாக இருக்கும் கோயில்..... முற்றத்தில் இருந்து மணம்தரும் மல்லிகை கனகாம்பரம்.... இப்படி எல்லாவற்றையும் இரண்டு வருடங்களுக்குள் மீள அமைச்சிடலாம்...!

இங்கு என்ன இருக்கிறது வெள்ளைக்காறனுக்கு உழைத்து கொடுப்பதை விட.....! ஓயாமல் உழைத்து வெள்ளையனை உயர்த்துவதைவிட , அவனுக்கு வரிப்பணமாய் எங்களின் உழப்பை வழங்குவதை விட தாய்நாட்டை உயர்த்துவது மேல்....!

வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயர குடி உயரும், குடி உயரக் "கோ" உயர்வான்.....!

Link to comment
Share on other sites

இல்லதம்பி குறை நினைக்கவேண்டாம். என்னைப்போல பல வயதானவர்கள் தமிழீழத்தில் வாழவே விருப்பம். பலர் பிள்ளைகளுக்கு, கணவன்,மனைவிகளுக்குப்பயந்து விருப்பமில்லாமல் வெளினாடுகளில் வாழ்கினம். எனக்குத்தெரிந்த ஒருவர் 70 வயது இருக்கும். அவர் வைத்திய தாதியாக புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் வேலை செய்யவிருப்பம். ஆனால் அவரின் பிள்ளைகள் அவர் அங்கு போகத்தடுக்கிறார்கள். எதாவது வருத்தம் வந்தால் ஆர் பாப்பினம் என்று அவர்களின் பிள்ளைகள் கேக்கினம். எல்லாச்சொத்துக்களையும் பிள்ளைகளுக்குக் கொடுத்து,அவர்களிடம் கையெந்திக்கொண்டிருக்கும் என்னைப்போன்ற வயோதிபர்கள் தமிழீழத்துக்கு போகவிரும்பியும் மனைவி,கணவர்,பிள்ளைகளிடன் பேச்சுகளுக்கு எதிர்பேசாமலும் வெளினாடுகளில் வாழ்கினம்.

கந்தப்பு சொல்லுறது போலவும் நடக்குது. அதேவேளை வெளிநாட்டுக்கு வந்த பல ஓய்வூதியக்காரர்கள் வெளிநாடுகளில் வாழப்பிடிக்காமல் ஊர் திரும்பிவிட்டார்கள்..! அங்கு அவைக்கு சுதந்திரம் அதிகம்..குளிருக்க மனிசர் படுறபாடு தேவையா என்றிட்டு போயிட்டினம்..! ஒருவருக்கு நிரந்தர வதிவிடம் கிடைத்தும் போடா என் சிறீலங்கன் பாஸ்போட் தா என்று கேட்டு வாங்கிப் போனவர்..!

எங்கள் நாட்டின் காலநிலை சொர்க்கம் போல என்கிறார்கள் அங்கு போய்வந்த வெள்ளையர்கள்..! அவர்கள் வாழ்க்கையை வாழப்பிறந்தவர்கள்.. நாமோ வசதி வாய்ப்புக்காக அடிமையாகவும் வாழக்கூடியவர்கள்..! எங்கே புகழிடத்தில் எத்தனை தமிழர்கள் அரச உயர்பதவிகளில் இருக்கினம்...சொல்லுங்கோ...கை விரல் விட்டு எண்ணலாம்..! எல்லாம் கூலிகள்..! ஆனால் காசுக்காக எங்களவர்கள் எதுவும் செய்வார்கள்..! வெள்ளையர்கள் எங்களை எருமைகள் போல மேய்ப்பார்கள்..! தன்மானமுள்ளவை இருக்க மாட்டினம்..! நமக்குத் தெரிந்த ஒருவர் மருத்துவராக கடமையாற்றியவர்..பல வருட அனுபவம் இருந்தும் உயர்பதவிகளுக்கு செல்ல முடியவில்லை.. அவர் இப்போது தாயகம் சென்று அங்கு பணிபுரிகிறார்..அப்படி கொஞ்சம் சூடுசுரணை உள்ள தமிழர்களும் இல்லாமல் இல்லை..! அவர்களால் தான் இலங்கை அன்று சுதந்திரமடைந்தது..நாளை தமிழீழம் கூட அப்படியானவர்களின் பக்களிப்பால் தான் மிளிரவும் போகிறது..! மிச்சம்..ஒட்டுண்ணிக் கூட்டம்..நாமும் தான்..! :wink: :idea:

Link to comment
Share on other sites

வணக்கம்!

இதில் தலைப்பு "தமிழீழ ஆட்பதிவுத் திணைக்களம்"!!!

பின்பு ஏன் தேவையற்ற விவாதங்களைத் தொடக்குகிறீர்கள்!! ஏதோ இப்படியெல்லாம் எழுதினால் இயக்கத்தைப் பற்றி கூடத் தெரியும் என்று மற்றவர்கள் நினைப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்!! உங்களது அறியாமைகளால் எதிரி/துரோகிகளுக்கு தீனி போடுகிறீர்கள்!! உங்களை அறியாமலேயே பலவற்றைக் காட்டிக் கொடுக்க முற்படுகிறீர்கள்!!

தயவுசெய்து பலதரம் யோசித்து விட்டு கருத்தெழுதுங்கள்!! தலைப்பிற்குள் நில்லுங்கள்!!!

Link to comment
Share on other sites

இவோன் எமது குடும்பம் மிகவும் வறிய குடும்பம். நான் ஒருவன் தான் வெளிநாட்டில் இருக்கிறேன். நான் எனது 15 வது வயதில் இங்கு வந்தேன். இங்கு வந்து 8 ம் வகுப்பில் இருந்து எனது கல்வியை இங்கு தொடர்ந்தேன் 3 வருடங்கள் தொடர்ந்து படித்தேன். மாலையில் உணவகத்தில் வேலை காலையில் பாடசாலை இப்படி எனது வாழ்க்கையை 3 வருடங்கள் மிகுந்த சிரமத்தின் மத்தியில் ஓட்டிப்பார்த்தேன் முடியவில்லை. எமது குடும்ப நிலைக்கு பெருந்தொகை பணம் தேவைப்பட்ட படியால் பாடசாலைக்கு முற்று புள்ளிவைத்துவிட்டு தொடர்ந்து வேலை செய்ய தொடங்கினேன். இன்று நான் எனக்கு இருந்த பொறுப்புக்கள் யாவற்றையும் தீர்த்துவிட்டேன். ஆனாலும் இன்றும் எனது குடும்பத்தவர்களை நான் தான் பார்த்துவருகிறேன்.

எனக்கு வதிவிட அனுமதி பற்றி கவலை இல்லை ஏனெனில் எனக்கு ஜேர்மனிய தேசிய இன உரிமை கிடைத்துவிட்டது.

நான் 11 வருடங்கள் இங்கு வாழ்ந்து பழகிவிட்டேன். இங்கு பெறும் ஊதியம் போல் இலங்கையில் ஒரு போதுமே பெற முடியாது. இதனால் எனக்கு அங்கு சென்று வாழ விருப்பமில்லை. ஏனெனில் எமது ஏழ்மை நிலையை போக்கணும் என்றால் நான் இங்கு இருந்தால் மட்டுமே அது சாத்தியம். அதனால் அங்கு சென்று வாழ்வது என்பது என்னால் முடியாத காரியம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்!

இதில் தலைப்பு "தமிழீழ ஆட்பதிவுத் திணைக்களம்"!!!

பின்பு ஏன் தேவையற்ற விவாதங்களைத் தொடக்குகிறீர்கள்!! ஏதோ இப்படியெல்லாம் எழுதினால் இயக்கத்தைப் பற்றி கூடத் தெரியும் என்று மற்றவர்கள் நினைப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்!! உங்களது அறியாமைகளால் எதிரி/துரோகிகளுக்கு தீனி போடுகிறீர்கள்!! உங்களை அறியாமலேயே பலவற்றைக் காட்டிக் கொடுக்க முற்படுகிறீர்கள்!!

தயவுசெய்து பலதரம் யோசித்து விட்டு கருத்தெழுதுங்கள்!! தலைப்பிற்குள் நில்லுங்கள்!!!

இங்க வெட்டிப்பேச்சுத் தானே நடக்கிறது. தங்களுக்குத் தான் எல்லாம் தெரியும் என்டு தான் எழுதினம்

Link to comment
Share on other sites

இங்க வெட்டிப்பேச்சுத் தானே நடக்கிறது. தங்களுக்குத் தான் எல்லாம் தெரியும் என்டு தான் எழுதினம்

அப்பு யூகே ராசு. :roll: :roll: கொஞ்ன்சம் கூல் ஆகுங்கெ :P :P எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் நாங்கள் இங்கு செய்தி சொல்லவரவில்லை. நடந்து முடிந்த சம்பவங்களையே இங்கு எழுதினோம். இவைகள் எல்லாம் பொது மக்களாகிய எமது காதுகளுக்கு எட்டுமுன் உங்கள் எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் அவர்களின் காதில் அவர்களின் உளவாளிகள் தகவல் போட்டுவிடுவார்கள். ஏதோ நாங்கள் தமிழீழத்தின் அடுத்தகட்ட தாக்குதல் நடவடிக்கையை இங்கு எழுதிவிட்ட மாதிரியல்லவோ நீங்கள் அலுத்துக்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.