Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாந்தன், முருகன், பேரறிவாளன் குறித்த தமிழக தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது- மத்திய அரசு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 3 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று கோரி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறினார்.

இந்தக் கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய பேருக்கும் செப்டம்பர் 9ம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவதாக இருந்தது. எனினும் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற சென்னை உயர்நீதிமன்றம் 8 வாரம் தடை விதித்துள்ளது. இந் நிலையில் அவர்களுக்கு பொது மன்னிப்பு கோரி சட்டமன்றத்திலும் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது குறித்து குர்ஷித் கூறுகையில், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது. இதை எவ்வளவு முக்கியமானதாக எடுத்துக் கொள்ள வேண்டுமோ, அவ்வளவு முக்கியமானதாக எடுத்துக் கொள்ளப்படும். அவ்வளவு தான்.

அதே நேரத்தில் உயர் நீதிமன்றத்தின் முடிவில் நான் குறுக்கிட முடியாது. குடியரசுத் தலைவரால் என்ன முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பதை மட்டுமே நான் இங்கு கவனத்தில் எடுத்துக் கொள்ள முடியும்.

உயர் நீதிமன்றங்களும், உச்ச நீதிமன்றமும் தங்களது கருத்தைத் தெரிவிக்கலாம். அந்த கருத்து இறுதியாக உறுதிப்படுத்தப்படும் வரை அந்த நீதிமன்றங்களின் கருத்து குறித்து நான் எதுவும் கூற முடியாது. சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தீர்ப்புதான் வழங்கியுள்ளது. அதற்கு அரசு உரிய பதிலை அளிக்கும் என்றார்.

http://thatstamil.oneindia.in/news/2011/08/30/tn-resolution-on-rajiv-killers-not-binding-centre-aid0090.html

உயர் நீதிமன்றங்களும், உச்ச நீதிமன்றமும் தங்களது கருத்தைத் தெரிவிக்கலாம். அந்த கருத்து இறுதியாக உறுதிப்படுத்தப்படும் வரை அந்த நீதிமன்றங்களின் கருத்து குறித்து நான் எதுவும் கூற முடியாது. சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தீர்ப்புதான் வழங்கியுள்ளது. அதற்கு அரசு உரிய பதிலை அளிக்கும் என்றார்

இவ்வளவு விரைவில் பதில் வந்தலில் எவ்வளவு ஆயத்தமாக இருக்கிறார்கள் என்பது புலனாகிறது.

ஆனாலும் இது பத்திரிகைகளுக்கு வெளியிட்ட அறிக்கை மட்டுமே. தமிழநாட்டு அரசுக்கு உள்துறை அமைச்சும், குடியரசு தலைவியும் பதிலலிக்கவேண்டும் என்று நினைக்கிறேன். சென்னை நீதிமன்றமும் அவர்களின் பதிலுக்கு தான் காத்திருக்கிறத்து.

இந்த நீதியமைசரின் நீதிமன்றங்களை எடுத்தெறிந்த பேச்சு நீதிபதிகளை மிரட்ட வெளிக்கிட்டிருக்கிறார் போலுள்ளது.

Edited by மல்லையூரான்

இவ்வளவு விரைவில் பதில் வந்தலில் எவ்வளவு ஆயத்தமாக இருக்கிறார்கள் என்பது புலனாகிறது.

மிகவும் உண்மை. அதாவது அவர்கள் ஒரு திட்டமிட்டே, எல்லா நகர்வுகளையும் எதிர்பார்த்தே காய்களை நகர்த்துவது தெளிவாக தெரிகின்றது.

இந்த நீதியமைசரின் நீமன்றங்களை எடுத்தெறிந்த பேச்சு நீதிபதிகளை மிரட்ட வெளிக்கிட்டிருக்கிறார் போலுள்ளது.

பாரத மாதாவின் நாட்டில் எல்லாவற்றுக்கும் ஒரு விலை உள்ளது, பணத்தால் எதையும் வேண்டலாம். நீதியும் சட்டமும் கூட விலக்கல்ல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த தூக்குத்தண்டனை பிரச்சனையை....பார்க்கும் போது யாரையோ நாடிபிடித்து பார்க்கிறார்கள் போலிருக்கிறது. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

யாரையும் கட்டுப்படுத்துவதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்படவில்லை. தீர்மானத்தில் சட்டப் பேரவை மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டுமென்றும் இந்திய ராஷ்டிரபதி இவ்விடயத்தில் கருணை செய்யவேண்டுமென்றுமே வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. உலகெங்கிலுமுள்ள ஒட்டுமொத்தத் தமிழரின் ஆதரவோடு - அதாவது தமிழக மக்களின் எல்லாப்பிரதிநிதிகளினதும் ஏகோபித்த ஆதரவுடன் கொண்டுவரப்பட்டுள்ள இந்த வேண்டுகோளை நிராகரித்து இது யாரையும் கட்டுப்படுத்தாது என்று கூறுவது மிகவும் திமிர்த்தனமும் வேண்டுகோளைப் புரிந்து கொள்ளாத முட்டாள்த்தனமும் ஒன்று சேர்ந்தவோர் நிலைப்பாடாகும். வேண்டுகோளைக் கருத்திலெடுக்க வேண்டியவர் இந்திய ஜனாதிபதி|யேயாவார். அவர் அதைக் கருத்திலெடுக்கவில்லையெனில் இந்திய ஜனநாயகம் அர்த்தமற்றதாகிவிடும். இந்த அவப்பெயரை இந்தியா சுமக்க விரும்பாது என்றே எண்ணத் தோன்றுகிறது. ஒரு பெரிய நாடடின் கணிசமான சனத்தொகையைக் கொண்ட மக்களின் வேண்டு கோளைப் புறக்கணிப்பதன்மூலம் இந்திய அரசியல் அமைப்பில் பிராந்தியங்களின் ஜனநாயக ரீதியான பங்களிப்பு செல்லாக்காசாக்கப்படுகின்றமையை இந்தியா விரும்பாது. அது இந்திய தேசிய ஒற்றுடையைக் கருத்தற்றதாக்கிவிடுவதோடு மேலும் பிரிவினையை நோக்கி இட்டுச் சென்றுவிடக் கூடுமென்பதால் தமிழக சட்டசபையின் தீர்மானம் இலகுவில் புறக்கப்பட் முடியாததாகும். இதைப் பிராந்திய அரசியலிலன் மூலம் அமைச்சரான உள்துறை அமைச்சரால் புரிந்து கொள்ள முடியாது. அதுவே அவரின் இத்தகைய முட்டாள்தனமான கருத்துக்குக் காரணமாகும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.