Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இசையும் கதையும்.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ர கடவுளே..

ஏன் ஆதி.. அவரை திருப்பள்ளி எழுச்சி... பாடாமலே.. நித்திரையாள எழுப்புறீங்க. வாசிக்க சகிக்கலையோ.. இல்ல நீங்க தாவித்திருஞ்ச இடங்களும்.. தெருக்களும்.. மரங்களும்.... உதுகளுக்கு வரும் என்ற பயம்....??! :):lol::icon_idea:

  • Replies 127
  • Views 9.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குண்டனோட.. கோயில் சந்திதானத்தை அடைஞ்ச நான்.. கோயிலை கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்யத் தொடங்கினேன்.. அப்போ.. கோயிலின் ஒரு பக்க மதிலோடு ஒட்டிய.. அந்த பணக்கார ஐயா (நல்லா பெயின்ரடிச்ச பெரிய வீட்டில வசிக்கிறவை எண்டதாலும்.. நாலைஞ்சு லொறி வைச்சு வியாபாரம் செய்யுறவை எண்டதாலும்.. அவைக்கு அப்படி ஒரு பெயர் ஊரில) வீட்டில இருந்து.. ஒரே சத்தம்.. என்ன தான் நடக்கு என்று காது கொடுத்து உளவு சா.. ஒட்டுக்கேட்டன்..! :lol:

எடியேய்.. நான் தான் இந்த வருசம் திருவிழாச் செய்யுறது. என்ர பிள்ளை கனடாவுக்கு போக.. பிள்ளையாரட்ட நேந்தனான். அவன் போய் இப்ப ஆறு மாசம் ஆகுது. எவனோ.. எங்கையோ.. வீரமாகாளி அம்மன் றோட்டில இருக்கிறவன்.. இஞ்ச வந்து பூசை கட்டி திருவிழாச் செய்ய விடுவனே... என்று சிங்கள முன்னாள் ஜனாதிபதி.. டி பி விஜேதுங்க.. தமிழ் மக்கள் சிங்களப் பெருவிருட்சத்தை சார்ந்து படரும் கொடிகள்.. அவை நாட்ட பிரிக்க..ஆள முடியுமோ.... எண்டு.. பேசிய கணக்கா.. இவரும் பேசி முடிக்க...

பதிலுக்கு உள்ளிருந்து ஒரு பெண் குரல்.. சும்மா கிடவுங்கோ.. அவங்களோட.. உங்களுக்கு வியாபாரத்தில போட்டி இருக்கலாம்... இவ்வளவு நாட்டுப் பிரச்சனைக்குள்ளும்.. இந்தக் கோயிலுக்கு அவங்கள் தானே வருசா வருசம் திருவிழாச் செய்யுறாங்கள். இதையும்.. செய்திட்டுப் போகட்டுமேன்... உங்களுக்கு என்ன... எண்ட..

அதற்கு பதிலா.. ஆண் குரல்.. எடியே நீ எனக்கு புத்திமதி சொல்லுறியே. எனக்கு தெரியுண்டி என்ன செய்யனும் என்று சொல்லி முடிக்க முதல்.. ஐயோ அடிக்காதேங்கோ அடிக்காதேங்கோ என்று அந்தப் பெண் குரல் அலறும் சத்தம் மட்டும் கேட்டது.

உடனே நான் இந்த முறை பிள்ளையார் திருவிழாக் காணுறது.. இரத்தக் களரி மேல தான் போல.. என்று நினைச்சுக் கொண்டே கோயிலை சுற்றி ஒரு நோட்டம் விட்டேன். என் கண்ணுக்கு என்னையும் குண்டனையும் தவிர வேறு யாரும் தெரியவில்லை. பிள்ளையாரும்.. சிவனே என்று பட்டுத்துணியால முகத்தை.. காதைப் போர்த்திக் கொண்டு இருந்தார்.. அதுவும் இரும்புக் கம்பிகளுக்குப் பின்னால்..!

மாலை 6 மணிக்குத் திருவிழா.. 5 மணிக்கு கூட ஒருத்தர் வந்து.. கோயிலை சுத்தம் செய்யல்ல.. இதுக்க திருவிழாச் செய்யுறது எவண்டா என்று அடிபடுறாங்களே என்று நினைச்சு எனக்குள்ள வேதனைப் படத்தான் முடிஞ்சுது.

பிள்ளையாருக்கு.. தினமும் காலையில.. கோயிலுக்கு அப்பால இருக்கிற ஒரு வயதான பாட்டி மட்டும் தான் வந்து முத்தம் பெருக்கி தண்ணி தெளிச்சிட்டுப் போறவா. இந்தப் பக்கத்து வீட்டு பணக்கார பொம்பிளையளும்.. முன் வீட்டு முதலாளி அம்மாவும்.. ஏன் அவாக்கு இருந்த அந்த வடிவான மகளும் ஒரு நாளும்.. வீட்டை விட்டு வெளிய வந்து கோயிலை சுத்தம் செய்ததை நான் கண்டதே இல்லை. ஆனா.. திருவிழா எண்டால் மட்டும்.. காஞ்சிபுரங்கள் ஜொலிக்க.. தங்க நகைகள் மின்ன.. அவையிட மாப்பிள்ளை மார்.. பட்டு வேட்டி சால்வை யோட.. பிள்ளை குட்டிகள்.. பட்டுப்பாவாடை உடுத்த.. கூட்டம் கூட்டமா வந்து பஷன் சோ காட்டுவினம். அதுக்குள்ள சண்டை வேற.. எவன் உசத்தியா பிள்ளையாருக்கு திருவிழாச் செய்யுறதெண்டு..ம்ம்ம்.. . என்ன பிறவிகளோ... என்று எண்ணிக்கொண்டே என் வேலையில் கவனமானேன்.

கோயிலை பெருக்கி சுத்தம் செய்த பின்னர்.. தண்ணி தெளிச்சு.. அப்புறம் மஞ்சள் தண்ணி தெளிச்சிட்டு.. உள்ள இருந்த ஒரு சிறிய தூசி படிந்திருந்த.. ரேப் றெக்கோடரை சுவிச் ஆன் செய்தேன்..!

அதில் இருந்து பாடல் ஒன்று ஒலிக்க.. அந்தச் சூழல்.. விநாயக ரம்மியமானது... அக்கம் பக்கத்து சண்டைகள்.. எல்லாம் தாண்டி.. விநாயகர் துதி பாடியது ரேப் றெக்கோடர்...!

(அப்புறம் என்ன.. நடந்துச்சி என்றதை அப்புறமா வந்து சொல்லுறனே...) :lol:

Edited by nedukkalapoovan

நீங்க இராமாயனமும்.. நாட்டார் பாடலும் படிச்ச ஆக்கள். எங்களுக்கு இராமாயனம்.. நளவெண்பா.. பெரிய புராணம்.. சீராப்புராணம் என்று இலக்கியப் பக்கங்கள் நீண்டவை. அதை படிக்க ஒரு முழு இலக்கிய அறிவு பெற்ற ஆசிரியரின் உதவி தேவைப்பட்டது. பொன்னுச்சாமி ஆசிரியர் இலக்கியத்தைப் படிப்பிக்கும் விதமே அழகு. அதிலும் பொம்பிளப் பிள்ளையளை தடவி தடவி படிப்பிப்பார் பாருங்க..

அவையும் தடவக் குடுத்திட்டு படிப்பினம்.. பாருங்க.. (தப்பா நினைக்கக் கூடாது.. அவருக்கு அவருடைய மாணவிகள் எல்லாம் பேரப்பிள்ளைகள் கணக்கு..) நம்ம பயபுள்ளைங்க.. வைச்ச கண் வாங்காம.. பாடத்தில.. சா.. தடவலில... ஒரு கண் வைச்சுக்கிட்டே படிப்பாங்க..! :):icon_idea:

நெடுக்ஸ், நீங்கள் எழுதும் இசையும் கதை நல்லா இருக்கு, தொடருங்கள். இந்த பெண்களை சீண்டிப்பார்ப்பதை கொஞ்சம் நிப்பாட்டினால் இன்னும் நல்லா இருக்கும் . :D:lol: :lol:

நல்லாயிருக்கு. தொடருங்கள்!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ், நீங்கள் எழுதும் இசையும் கதை நல்லா இருக்கு, தொடருங்கள். இந்த பெண்களை சீண்டிப்பார்ப்பதை கொஞ்சம் நிப்பாட்டினால் இன்னும் நல்லா இருக்கும் . :D:lol: :lol:

அவங்க எங்கள சீண்டலாமுன்னா.. ஏன் நாங்க சீண்டப்படாது..??! :D:lol::icon_idea:

நல்லாயிருக்கு. தொடருங்கள்!!

நன்றி சோழி அண்ணா. தங்கள் சித்தமே எங்கள் பாக்கியம்..! (அப்புறம் அது யார் பாக்கியம் என்று கேட்கிறதில்ல... சரியா.) :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

ஒட்டு கேட்டதோடு மட்டும் போகாமல், பிரயோசனமா ஏதோ செய்யத் தொடங்கி இருக்கிறீங்கள் போல... ^_^ தொடருங்கோ... :)

Edited by குட்டி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரேப் றெக்கோடர் விநாயகர் துதி பாடிக் கொண்டிருக்க.. பூசகரும்.. வந்து சேர்ந்தார். அவரிடம் கோயில் சாவியை கையளித்து விட்டு நாங்கள் மூன்று தோப்புக் கரணம் போட்டிட்டு.. பிள்ளையாருக்கு பாய் சொல்லிட்டு வெளியேறினம். அப்பவும் சனக் கூட்டத்தை கோயிலில காணல்ல.

உடனே எனக்கு ஒரு எண்ணம் தோன்றிச்சு. போற வழில.. கோயிலுக்கு அருகில் இருந்த குஞ்சண்ண கடைக்குப் போய் மம்மி ரொபி வாங்கிறது என்று முதலே முடிவு செய்திருந்ததால.. அங்க போய் குஞ்சண்ண.. இன்றைக்கு திருவிழாவுக்கு கம்ப வாரூதி வாறாராம்... உண்மையோ எண்டன். அவரும் வாயைப் பிளந்து கொண்டு அப்படியா.. எண்ட.. கடைக்கு வந்திருந்த.. அக்கம் பக்கத்து பொம்பிளைங்க காதிலும் அது விழுந்திருக்க வேணும். நாங்க பரப்பி விட்ட வதந்தியால.. குஞ்சண்ண கடை மட்டுமில்ல.. கோயிலும் கொஞ்சம் கொஞ்சமா நிரம்ப ஆரம்பிச்சிது.

அதுக்கிடையில.. கோயில் திருவிழாப் பிரச்சனை பெரிய காதுகளுக்கு எட்ட.. அதுவும் சுமூகமா முடியும் போல அறிகுறிகள் தென்பட.. எனியும் இங்க நிற்கிறது உடம்புக்கு நல்லதில்ல என்றிட்டு.. நானும் குண்டனும் அந்த இடத்தில இருந்து நகர்ந்து கொண்டம்.

நாங்க இருவரும் வீதியில் இறங்கி நடக்கத் தொடங்க.... குண்டன் கேட்டான்.. டேய் நீ ஏண்டா அந்தாளை இதுக்குள்ள இழுத்தனீ எண்டு. நான் விளங்காமல் எந்தாளை எண்டன். அவன்.. கம்ப வாரூதியைத் தான் எண்டான்.

சும்மா கிடவடா.. அந்தாள் நல்லூருக்கு அருகில கம்ப கோட்டம் என்று.. சீமெந்துக்கு சிறீலங்கா சிங்கள அரசு தடை போட்டு வைச்சிருக்கிற இந்த நேரத்திலும்.. அரண்மனையைக் கட்டி வைச்சிட்டு.. தானே தனக்கொரு சிம்மாசனத்தை வாங்கி வைச்சிட்டு.. அதில உட்கார்ந்து அழகு பார்த்துக்கிட்டு.. இருக்கு... எவண்டா... எந்த திருவிழாக்கு கூப்பிடுவான்.. சுளையா அறவிடலாம் எண்டு. நீ.. என்னடான்னா.. இப்படி கேட்கிறா. நான் அவற்ற சீடன் ரா. ஒரு சீடன் தலைக்கு என்ன செய்ய வேணுமோ.. அதைத் தானே செய்திருக்கிறன்.

என்ன... நீ அவற்ற சீடனோ..?! என்றான் பதிலுக்கு.. புருவங்களை உயர்த்திய படி. அதுக்கு நான்..சிம்பிளாக.. ஓம் எண்டன்.

மீண்டும் வியப்போடு.. எப்படி எண்டான்...

அவர் போற வாற இடமெல்லாம்.. தான் யாழ் இந்துவின் மைந்தன்.. என்று சொல்லி தான் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறார். எங்கட தமிழ் சமூகத்தில.. யாழ் இந்துவுக்கு ஒரு மரியாதையை அங்க நல்லாப் படிச்சவங்க ஏற்படுத்திக் கொடுத்திருக்காங்க எல்லோ. அதில குளிர் காயிறது பல பேர். அதில கம்ப வாரூதியும் ஒருவர். அதுக்காகவே இப்ப யாழ் இந்துவுக்கு தகுதி இல்லாத பிள்ளைகளை அனுப்ப அதன் முன் பின் கதவுகளை தட்டிற பெரிய ஆக்கள் பலர். அவர்களுக்கு உதவிறதும்.. நம்ம கம்ப வாரூதியின் பணிகளில் ஒன்று. உனக்கும் தெரியும் தானே இங்க நடக்கிற சங்கதிகள். அந்த வகையில்.. கம்ப வாரூதி யாழ் இந்துவின் கிழட்டு மைந்தன் என்றால்.. நான் இன்றைய மைந்தன். அப்ப அவருக்கு நான் சீடன் தானே எண்டன்.

ஆகா.. இது வேறையா.. நடக்கட்டும் நடக்கட்டும் என்றான் அவன்.

உனக்கு ஒன்று தெரியுமா... இப்ப கம்ப வாரூதி வாரிசுகளை திரட்டிக் கொண்டிருக்கிறாராம் எல்லோ. அவருக்கு ஆமாப் போடக் கூடிய இந்துவின் மைந்தர்கள் என்போர் சிலரை அணைச்சு வைச்சுக் கொண்டிருக்கிறார். அதுபோக.. உங்க யாழ்ப்பாண.. முக்கிய வியாபார புள்ளிகளின் காதுகளிலும் கம்பர் இராமாயனம்.. பாடுப்படுகுதாம் கேள்விப்பட்டனியோ.. என்றேன்.

நானும் உப்படிக் கொஞ்சம் கேள்விப்பட்டனான் தான். அது கிடக்கட்டும்.. நான் வேற ஒன்றும் கேள்விப்பட்டன் உண்மையோ எண்டான்.. குண்டன்.

அப்படி என்ன கேள்விப்பட்டா எண்டன்.. பதிலுக்கு.. அறிய ஆவலுடன்.. .

கம்ப வாரூதிக்கு.. எங்கட "பெரிசு" கோரிக்கை வைச்சிருக்காம் எல்லோ.. கம்பரை.. இராமாயனத்தைப் பாடிப் பாடி நாங்க என்னத்தை கண்டம்.. சாதிச்சம். சீதை தீக்குளிச்ச காலம் இப்ப இல்ல.. இப்ப எங்கட பெண் போராளிகள் தீயில குளிக்குதுகள்... தேசத்துக்காக..! எனவே மக்கள் மத்தியில மேடை போடேக்க.. கொஞ்சம் மாற்றிப் பேசுங்கோ எண்டும்.. சனத்திட்ட சுளையா அறவிடுறதில.. குறிப்பிட்ட தொகை இஞ்சால வரணும் எண்டும்.

ஓம் ஓம்.. நானும் கேள்விப்பட்டனான். பெரிசு சொல்லுறதும் சரி தானே. அந்தக் கால சில இலக்கியங்கள் உண்மையோ பொய்யோ என்று கூடத் தெரியாது. அவை இந்தக் காலத்துக்கு பெரிசா உதவப் போறதும் இல்ல. இருந்தாலும் தமிழ் நயத்துக்காக.. மொழிச் சிறப்பைச் சொல்ல.. வரலாற்று மிச்ச சொச்சங்களை தெரிஞ்சுக்கோனும்.. என்றதுக்காக படிக்கிறம். அதேபோல.. இந்தக்கால எமது இந்தப் போர்க்கால வாழ்க்கையை எண்டாலும் இலக்கியமாக்க வேண்டிய பொறுப்பு.. கம்பருக்கு இல்லாட்டிலும்.. கம்ப வாரூதிகளுக்கு இருக்கத் தானே வேணும்... என்றேன் நான் பதிலுக்கு.

ம்ம்.. நீ சொல்லுறது சரிதான். ஆனா.. உன்ர கதைகளில.. உண்மையோட நிறைய நக்கல் இருக்கடா எண்டான் குண்டன்.

அதற்கு நான்.. கம்ப வாரூதி மற்றாக்களைப் பற்றி.. அடிக்காத நக்கலாடா நான் அடிக்கிறன். எல்லாம் அவரிட்ட இருந்து கொப்பி பண்ணினது தான் எண்டன்.

உடனே.. திடீர் சுடலை ஞானம் பெற்றவன் போல.. இன்றைய நிலையில.. தமிழ் உலகின்.. உண்மையான கம்பரின் வாரிசா யாரைப் பார்க்கிறா எண்டான்.. குண்டன்.

யாருரு.... என்று வானத்தைப் பார்த்து.. கொஞ்ச நேரம் யோசிச்சுப் போட்டு.. நம்ம.. பக்கத்து வீட்டு... வைரமுத்துவைத் தான்... என்றேன்..!

அவனும் எனது பதிலில் ஏதோ ஒரு திருப்தியைக் கண்டவன் போல.. இப்ப நான் கோயிலுக்கு திரும்பிப் போப்போறன்... எண்டான். நானும்.. அப்ப பிறகு சந்திப்பம் என்றிட்டு.. என் வீட்டை நோக்கிப் புறப்பட்டேன்.

எதுக்காக அன்று அப்படிச் சொன்னேனோ.. தெரியாது.. ஆனால் இந்தப் பாடல்.. அதை நிரூபிக்கப் போதும் என்று நினைக்கிறன்..... அந்தப் பாடலையும் நீங்களும்.. ஒருக்கா கேளுங்கோவன்..

(நீங்க அப்படியே.. பாட்டைக் கேட்டுக் கொண்டு.. தூங்கினாலும் சரி.. முளிச்சிருந்தாலும் சரி.... இன்னொரு சங்கதியோட அப்புறம் வாறன்.) :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கம்ப வாரூதிக்கு.. எங்கட "பெரிசு" கோரிக்கை வைச்சிருக்காம் எல்லோ.. கம்பரை இராமாயனத்தைப் பாடிப் பாடி நாங்க என்னத்தை கண்டம்.. சாதிச்சம். சீதை தீக்குளிச்ச காலம் இப்ப இல்ல.. இப்ப எங்கட பெண் போராளிகள் தீயில குளிக்குதுகள்... தேசத்துக்காக..! எனவே மக்கள் மத்தியில மேடை போடேக்க.. கொஞ்சம் மாற்றிப் பேசுங்கோ எண்டும்.. சனத்திட்ட சுளையா அறவிடுறதில.. குறிப்பிட்ட தொகை இஞ்சால வரணும் எண்டும்.

அதோடை... கொழும்புக்கு போன கம்ப வாரூதி, திரும்ப யாழ்ப்பாணம் வரேல்லையா?

குட்டிக் குட்டி.. விசிட் அடிச்சிருப்பார். அவற்ற துதிபாடிகள் எல்லாம் 1995 இடம்பெயர்வோட கொழும்பில செற்றில். அதனால அவரும் அங்கையே செற்றில் ஆகிட்டார். கம்பரால் உருவான காவியத்தை வைச்சு வாற.. வருமானம்.. சுளையா கைக்கு வருகுது எல்லோ..! இப்ப அவருக்கு என்ன கவலை. சிங்களத்துக்கு வக்காளத்து வாங்கிற பேப்பர்களில அப்பப்ப கையெழுத்து போடுறது.. உப தொழில்..! :):lol::icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு நல்லா இருக்கு உங்கட தொடர் தொடருங்கள்,

கம்பவாருதியை நான் பத்தாம் வகுப்பில் பட்டிக்கும் போது காரைநகரில் அவரின் பட்டி (மலையாளம்) மன்றம் பார்த்து பிடிக்கும், பிறகுதான் தெரிச்சது அவரின் செயற்பாடுகள்,

No கம்பவாருதி அசல் சந்தர்ப்பவாதி

இந்த திரியில் தொடக்கம் முதல் இவ்வாக்கத்திற்கு ஆதரவு நல்கி வரும் தங்களுக்கு நன்றி.

கம்பவாருதியா மட்டும் இருந்தால் பறுவாயில்லை.. அது அவரவர் விருப்பம். ஆனால் கம்பவாருதி என்ற நிலையை வைச்சுக் கொண்டு சமூகத்தின் மீது சவாரி செய்வது தான் தவறாக அமைகிறது. :):icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோயிலில் இருந்து என் வீட்டுக்கு வந்த நான்.. நண்பனை கோயிலில் தனிய விட்டிட்டு வந்திட்டமே.. சரியில்லையே.. என்ன நினைக்கிறானோ..சரி போய் ஏதேனும் உதவி செய்வம் என்றிட்டு மீண்டும் பெற்றோரிடம் விடைபெற்று.. கோயிலுக்கு ஓடினேன்.

கோயிலில்.. அவனைத் தேடினேன் ஆனால் அவன் என் கண்ணுக்கு எட்டவில்லை. கொஞ்சம் குழப்பமடைந்த நான்... உடனேயே அவனைத் தேடி அவனுடைய வீட்டுக்குப் போனேன்.

அங்கு கண்ட காட்சி.. நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

அவனின் தாயார்.. நெஞ்சு வலியால் துடித்துக் கொண்டிருந்தார். அவரருகில்.. குண்டனும்.. அவாவை விட்டுப் பிரிந்து வாழ்ந்து கொண்டிருந்த அவனின் அப்பாவும்.. அந்த அம்மாவின் நிலை கருதி அங்கு நின்று கொண்டிருந்தார்கள். ஆனால் அந்த அம்மாவோ.. அத்துணை வருத்தத்தின் மத்தியிலும்... அந்தாளை இங்க இருந்து போகச் சொல்லு.. இல்ல உடனவே செத்திடுவன் டா.. என்று மகனைப் பார்த்து.. கத்திக் கொண்டிருந்தார். குண்டனோ அதனைக் காதில் வாங்காமல்.. பூரணமாக.. வீட்டுக்குள்ளே நுழைந்து கொண்டான்.

அப்போ.. முன்னர் ஒரு முறை நண்பன் எனக்குச் சொன்னவை ஞாபகத்துக்கு வந்தது. எங்கட அம்மாவுக்கு அப்பாவைப் பிடிக்கிறதில்ல. அப்பா அம்மாவின்ற சொத்துக்களை எல்லாம் வியாபாரம் என்று கொண்டு போய் சீரழிச்சுப் போட்டார். அதனால அம்மாவுக்கு அவர் மேல கோபம். அதோட அப்பாவும் அம்மாவை விட்டு.. பிரிஞ்சு போய்ட்டார். அப்பா அழிச்ச அந்த வியாபாரத்தில நாங்க வென்று காட்டனும் என்று தான் என்ர அண்ணன்மாரை தட்டத்தனிய தானே கஸ்டப்பட்டு வளர்த்து எடுத்து இவ்வளவு பெரிய வியாபாரிகள் ஆக்கி இருக்கிறா எண்டவன். அதுமட்டுமில்லாம.. அவன்ர அப்பாவும் அவங்க அம்மாவை விட்டுப் பிரிஞ்சு போயிருந்தாலும்.. தனியத் தான் வாழுறார் என்றும் சொல்லி இருந்தவன்.

இவ்வளவு காலம் இவ்வளவு கஸ்டங்களோட தனிய வாழ விட்டிட்டு.. போயிருந்ததால.. நண்பனின் அப்பா மேல அவங்க அம்மாக்கு ஆத்திரம் வாறது நியாயம் தானே என்று என் மனம் அந்த அம்மாவின் செயலில் நியாயம் தேடிக் கொண்டிருந்தது. உடனேயே.... அது.. தன் மனைவிக்கு ஆபத்து என்றவுடன்.. ஓடி வந்து அருகில் நிற்கும் அந்த அப்பாவின் நிலைக்காகவும் பரிதாபப்பட்டது.

இந்த நிலையில்.. தன் மகனின் நல்ல நண்பன்... அயலவன்.. என்ற வகையில்.. என் மீது மதிப்பும் அன்பும் வைத்திருந்த அந்த அம்மாவை அணுகி.. ஏம்மா.. இவ்வளவு வருத்தத்தோடையும் கத்துறீங்க.. அது உங்க உடம்புக்கு நல்லதில்ல.. அந்த ஐயா கொஞ்சம் இருந்து பார்த்திட்டுத்தான் போகட்டுமேன் விடுங்களேன் என்று அவருக்காக.. பாரிய தயக்கத்துடன்.. பயத்துடன்.. பரிந்து பேசினேன்.

வழமையா யார் அறிவுரையையும் கேட்காத அந்த அம்மா.. என் பேச்சுக்கு மதிப்பளிச்சு.. மெளனமானதும்.. இன்றி.. கண்களில் நீர் சொட்ட என்னைப் பரிவோடு பார்த்தார்.. நோய் பற்றிய கவலையும்.. பயமும்.. அவரின் முகத்தில் படர்ந்திருக்க..! உடனே நான் அந்த அம்மாவின் கைகளைப் பற்றி ஆறுதல் சொல்லி.. நன்றியும் சொல்லிக் கொண்டேன்.

அப்போது.. வீட்டுக்குள்ள நுழைந்திருந்த என் நண்பன்.. தாயாருக்கென்று தானே தயாரித்த.. போசாக்குப் பாணத்தோடு அங்கு வந்து கொண்டிருந்தான்... அவனின் தாய் மீதான அந்தப் பாசம் என் மனதை இழகச் செய்தது.. கண்களில் நீரை வரவழைத்தது... பொறுப்பான மகனாக அவன் செயற்படுவதைக் கண்டு.. என் மனம் அவனை வாழ்த்தியது..! அம்மா என்றால்.. எந்த உயிர்க்கும் எந்த நிலையிலும்.. அது பெரிதே.. என்பதை மீண்டும் உணர்த்தியது அவன் செயல் எனக்கு..! அப்போ.. என் தாயின் எண்ணம் மனதில் எழ.. நண்பனிடமும் அவன் தாயிடமும் தந்தையிடமும் ஆறுதல் சொல்லி.. விடைபெற்றுக் கொண்டு வீட்டுக்கு ஓடிப் போய் அம்மாவின் மடியில் சாய்ந்து கொண்டே... நண்பனின் தாய்க்கு நடத்ததைச் சொல்ல ஆரம்பித்தேன்..! அம்மாவும் தலையை தடவி விட்டபடி.. என்னை அரவணைத்தபடி....

(என் அம்மாவின் அன்புப் பிடியில் இருந்து மீண்டு.. மீண்டும் வருகிறேன்.. மிச்சக் கதையோட.. அதுவரை அம்மா கூட இல்லாதவங்க.. உங்கட அம்மாவை நினைச்சுப் பாருங்க.. அம்மா கூட இருக்கிறவங்க.. அவாக்கு ஒரு உம்மா கொடுங்க..!) :):icon_idea:

Edited by nedukkalapoovan

என்னடா பயபுள்ளை மூன்று நாளா கதையைத்தொடரக் காணோம் என்ன எண்ணினேன்... ^_^

மனதைத் தொட்டு, கண்கள் லேசாகக் கலங்கிய பாகம், தொடருங்கள்! :)

Edited by குட்டி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னடா பயபுள்ளை மூன்று நாளா கதையைத்தொடரக் காணோம் என்ன எண்ணினேன்... ^_^

மனதைத் தொட்டு, கண்கள் லேசாகக் கலங்கிய பாகம், தொடருங்கள்! :)

வெளில கொஞ்சம் வேலையா இருந்திட்டமா.. அதுதான். இந்தத் தொடர் களைக்கும் வரை ஓயாது. களைக்கும் போது நிறைவு பெறும்..! :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு, நீங்க போட்ட உடனேயே வாசித்துவிட்டன், ஆனா, இன்று தமிழ் விழா இங்கு, இப்பதான் வந்தனான் என் பிள்ளைகளும் பங்கு பற்றியவர்கள்.

நெடுக்காலபோவன், சில பெண்கள் இப்படிதான் என்ன செய்ய வியாபாரத்தில் நட்டம் வந்துவிட்டது, அவர் யாருக்காக இதை செய்ய போனவர், லாபம் வந்தா?

என்றாலும் அந்த தாயின் மன வைநிரக்கிந்த்தை பாரட்டனும்,

இந்த பாட்டு எனக்கு பிடித்த பாட்டு நன்றி பகிர்வுக்கு,

  • கருத்துக்கள உறவுகள்

நண்பன்ட கதையை சொல்ல வெளிக்கிட்டு கடைசியில தன்ட புகழ் பாடுப் படுது :D

Edited by ரதி

உங்கள் பிள்ளைகள் சிறந்த தமிழ் கலைஞர்களாக உருவாக வாழ்த்துகிறேன் உடையார்.

மேலும்.. அந்த ஐயாவை முதல் தடவை பார்த்த போது எனக்கு அவரில் பரிதாபம் தான் ஏற்பட்டது. அவர்களின் முழுக்குடும்ப ரகசியங்களும் எமக்குத் தெரிய வாய்ப்பில்லை. நண்பன் சொல்லியவற்றின் அடிப்படையில்.. ஊர் அறிந்த வரையில்.. தாய் தந்தை இருவருமே நல்லவர்கள் தானாம். :):icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நண்பன்ட கதையை சொல்ல வெளிக்கிட்டு கடைசியில தன்ட புகழ் பாடுப் படுது :D

நீங்கள் என் வீட்டுக்கு பக்கத்தில் வாழ்ந்து என் புகழை நன்கு தெரிந்து கொண்டதன் பெயரில் இதனை எழுதியதாக எண்ணி.. உங்கள் விமர்சனத்தையும் வாழ்த்தி வரவேற்கிறேன்.

படைப்புக்கள் பல விதம் போல.. வாசகர்களும் படைப்புக்களின் பாலான அவர்களின் எண்ண ஓட்டங்களும் அவரவர் தகுதிக்கும் தன்மைக்கும் ஏற்ப பல வகைப்படும்..! இதை நான் நன்கே அறிந்து வைத்துக் கொண்டுதான் இதனை இங்கு எழுத ஆரம்பித்தேன். அந்த வகையில் உங்கள் விமர்சனத்தையும் ஆரோக்கியமான ஒன்றாகவே உணர்கிறேன். :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கதைகள் பெரிய இலக்கியங்கள் தான்...நீங்கள் பெரிய இலக்கியவாதி நான் ஒத்துக் கொள்கிறேன் தகுதியில்லாத நான் உங்கள் கதைக்கு விமர்சனம் எழுதினது தப்பு தான்...நீங்கள் எழுதுங்கள் ரசிப்பதற்கு பல பேர் இருக்கிறார்கள் :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் கதைகள் பெரிய இலக்கியங்கள் தான்...நீங்கள் பெரிய இலக்கியவாதி நான் ஒத்துக் கொள்கிறேன் தகுதியில்லாத நான் உங்கள் கதைக்கு விமர்சனம் எழுதினது தப்பு தான்...நீங்கள் எழுதுங்கள் ரசிப்பதற்கு பல பேர் இருக்கிறார்கள் :(

எடி தங்கச்சி! வெளியிலை வாடியப்பா...தேவையில்லாமல் வருத்தத்தை தேடாதை...உனக்கென்ன விசரே?சும்மா எல்லாரோடையும் வாயைகுடுத்து வருத்ததை தேடுறாய் :( :(

  • கருத்துக்கள உறவுகள்

Quote: "வழமையா யார் அறிவுரையையும் கேட்காத அந்த அம்மா.. என் பேச்சுக்கு மதிப்பளிச்சு.. மெளனமானதும்.. இன்றி.. கண்களில் நீர் சொட்ட என்னைப் பரிவோடு பார்த்தார்.. நோய் பற்றிய கவலையும்.. பயமும்.. அவரின் முகத்தில் படர்ந்திருக்க..! உடனே நான் அந்த அம்மாவின் கைகளைப் பற்றி ஆறுதல் சொல்லி.. நன்றியும் சொல்லிக் கொண்டேன்"

இது உங்கட புகழ்ச்சியல்ல அடி மனதில் இருந்து வந்த வார்த்தைகள், எனக்கு பல நண்பர்கள் இருந்தவர்கள், என் நண்பனை விட என் சொல்லைதான் அவர்களின் அம்மா, அப்பா, சகோதரங்கள் கேட்கிறவர்கள், ஆனால் எங்கள் வீட்டில் என் நண்பர்கள் ஆட்சிதான், நான் கேட்டாலும் கிடைக்காத சாப்பாடு, அவன்கள் அம்மா... என முதல் வந்துவிடும்,

ரீ கூட அப்படிதான், நான் கேட்டா, போட்டு குடிடா எத்தனை தரம் உனக்கு போடுவது...

இது எங்கள் நண்பனின் மீது உள்ள அளவு கடந்த பாசம், அவன் இவர்களை போன்ற நண்பர்களை வைத்திருக்க வேண்டும் என்று அவர்கள் எங்களை கவனிப்பார்கள், ஏன் நங்கள் கூட எங்கள் பிள்ளைகளின் நண்பர்களை வந்தால் கவனிக்கிறது, இனிப்பு முதல் அவர்கள் கேட்கும் எல்லாம் உடனே கொடுப்பது வழக்கம்

களத்தில் உள்ள அத்தனை பேருக்கும் உங்கட இந்த வசனம் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கு, ஒரு/பல நல்ல நண்பர்கள்/ நண்பிகள் இருந்திருந்தால். நீங்கள் எழுதியதை என் நண்பர்களுடன் நான் வாழ்ந்த வாழ்கைதான் நினைவில் ஓடுகின்றது,

எங்கட ஊரில ஒரு ஆச்சி இருந்தவா, அவாக்கு நாக்கில கறுப்பு புள்ளிகள் இருந்தது, அவாவை நாங்கள் கரி நாக்கு வருகிறது என்று சந்தியில் இருந்து ஓடிவிடுவம், அல்லது ஒரே திட்டுதான், புறு புறுத்துக்கொண்டு போய் வீட்டில் வத்தி வைச்சிடுவா, கரி நாக்கு ஆண்களிலும் இருக்கு.

நன்றி நெடுக்கு உங்கள் வாழ்த்திற்கு, என்னுடைய பிள்ளைகள் நல்லா தமிழ் கதைப்பினம், இனி எழதி & வாசிக்கதான் பழக்கனும், இதுதான் பொரிய பிரச்சனை இங்கு, பார்ப்பம்

உங்களிடம் நிறைய தவறான பார்வைகள் உண்டு.

முதலில் இலக்கியம் என்பது பக்கம் பக்கமாக எழுதப்பட்டவை என்பதான கருத்தியல் உங்களிடம் உள்ளது போலுள்ளது. வேறு பலரிடமும் அப்படித்தான் உள்ளது. ஆனால்.. காலத்தைப் பிரதிபலிக்கக் கூடிய ஒரு குட்டிக்கதை கூட இலக்கியம் தான். இதில் உங்கள் பார்வையை மாற்றிக் கொள்ளுதல் நன்று.

நீங்களே உங்கள் தகுதியை குறைத்து எடைபோடுவது அடுத்த குறைபாடு. நான் எழுதினேன் தகுதிக்கும் தன்மைக்கும் ஏற்ப விமர்சனங்கள் வேறுபடும் என்று. நீங்களே உங்கள் விமர்சனம்.. தரக்குறைவானது என்பது போல.. எழுதுவது.. தவறு. நான் உங்கள் விமர்சனத்தை ஆக்கபூர்வமான ஒன்றாகவே கருதுகிறேன்.

விமர்சனம் என்பது மீண்டும் பக்கம் பக்கமாக எழுதப்பட வேண்டும் என்ற அர்த்ததைக் கொண்டதல்ல.. உதாரணம்.. நாலடியார் திருக்குறள் பற்றி ஈரடி விமர்சனம்.. ஆலும் வேலும் பல்லுக்குறுதி..நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி.. என்ற அந்த விமர்சனமே அவ்விரு ஆக்கங்களின் தன்மையை இயம்புவதாக எனக்கு என் தமிழ் ஆசான் பொன்னுச்சாமி சேர் சொல்லித் தந்தது ஞாபகம் வருகிறது.

ஒரு படைப்பை.. படைப்பாளியை விமர்சிக்கனும்.. அல்லது அவரைப் பற்றி கருத்தெழுதனும் என்றால்.. ஒன்றில் ஆராய்ந்து எழுதனும்.. இல்ல தெரிஞ்சு கொண்டு எழுதனும்.. இல்ல.. படைப்பை படித்த மாத்திரத்தில்.. உங்களுக்குள் எழும் உங்கள் கருத்தின் மீது நம்பிக்கையோடு, அதன் மீதான காரணங்களை வைத்துக் கொண்டு எழுதனும். நான் உங்கள் கருத்துக்கு வைத்த பதில் கருத்தோடு நீங்களே உங்கள் கருத்தையே குறைத்து மதிப்பீடு செய்வதாக எண்ணி கருத்துப் பகிர்வது உங்களின் தவறே தவிர எனதல்ல..!

நான் எனது சுய ஆக்கங்கள் தொடர்பில் அமையும் விமர்சனங்களை எந்த உருவிலும் சந்திக்க தயாராக உள்ள படியால் தான் இதை இங்கு பதிகிறேன். இன்றேல் இதனை பதிய வேறு இடங்களா இல்லை...???! :):icon_idea:

எடி தங்கச்சி! வெளியிலை வாடியப்பா...தேவையில்லாமல் வருத்தத்தை தேடாதை...உனக்கென்ன விசரே?சும்மா எல்லாரோடையும் வாயைகுடுத்து வருத்ததை தேடுறாய் :( :(

சந்தியில் சிந்து பாடுதல் என்பது இது தானோ.. கு.சாண்ணா. :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Quote: "வழமையா யார் அறிவுரையையும் கேட்காத அந்த அம்மா.. என் பேச்சுக்கு மதிப்பளிச்சு.. மெளனமானதும்.. இன்றி.. கண்களில் நீர் சொட்ட என்னைப் பரிவோடு பார்த்தார்.. நோய் பற்றிய கவலையும்.. பயமும்.. அவரின் முகத்தில் படர்ந்திருக்க..! உடனே நான் அந்த அம்மாவின் கைகளைப் பற்றி ஆறுதல் சொல்லி.. நன்றியும் சொல்லிக் கொண்டேன்"

இது உங்கட புகழ்ச்சியல்ல அடி மனதில் இருந்து வந்த வார்த்தைகள், எனக்கு பல நண்பர்கள் இருந்தவர்கள், என் நண்பனை விட என் சொல்லைதான் அவர்களின் அம்மா, அப்பா, சகோதரங்கள் கேட்கிறவர்கள், ஆனால் எங்கள் வீட்டில் என் நண்பர்கள் ஆட்சிதான், நான் கேட்டாலும் கிடைக்காத சாப்பாடு, அவன்கள் அம்மா... என முதல் வந்துவிடும்,

ரீ கூட அப்படிதான், நான் கேட்டா, போட்டு குடிடா எத்தனை தரம் உனக்கு போடுவது...

இது எங்கள் நண்பனின் மீது உள்ள அளவு கடந்த பாசம், அவன் இவர்களை போன்ற நண்பர்களை வைத்திருக்க வேண்டும் என்று அவர்கள் எங்களை கவனிப்பார்கள், ஏன் நங்கள் கூட எங்கள் பிள்ளைகளின் நண்பர்களை வந்தால் கவனிக்கிறது, இனிப்பு முதல் அவர்கள் கேட்கும் எல்லாம் உடனே கொடுப்பது வழக்கம்

களத்தில் உள்ள அத்தனை பேருக்கும் உங்கட இந்த வசனம் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கு, ஒரு/பல நல்ல நண்பர்கள்/ நண்பிகள் இருந்திருந்தால். நீங்கள் எழுதியதை என் நண்பர்களுடன் நான் வாழ்ந்த வாழ்கைதான் நினைவில் ஓடுகின்றது,

எங்கட ஊரில ஒரு ஆச்சி இருந்தவா, அவாக்கு நாக்கில கறுப்பு புள்ளிகள் இருந்தது, அவாவை நாங்கள் கரி நாக்கு வருகிறது என்று சந்தியில் இருந்து ஓடிவிடுவம், அல்லது ஒரே திட்டுதான், புறு புறுத்துக்கொண்டு போய் வீட்டில் வத்தி வைச்சிடுவா, கரி நாக்கு ஆண்களிலும் இருக்கு.

நன்றி நெடுக்கு உங்கள் வாழ்த்திற்கு, என்னுடைய பிள்ளைகள் நல்லா தமிழ் கதைப்பினம், இனி எழதி & வாசிக்கதான் பழக்கனும், இதுதான் பொரிய பிரச்சனை இங்கு, பார்ப்பம்

படைப்பின் இயல்போடு கலந்து அதை படிக்கும்.. பார்க்கும்.. உங்கள் விரிவான பார்வையை மதிக்கிறேன் உடையார்.

அப்ப பெரும்பாலான வீடுகளில் அதே நிலை தான் போல. எங்கள் வீட்டில் எங்களின் சொல்லுக்கு மரியாதை தாறதிலும்.. மற்றவங்க அதை மதிக்கிறது அதிகம். அதுவும் சிறு வயதில் பெரியவங்க எங்கள் கருத்தைச் சொல்லை மதிக்கும் போது எமக்குள் எழும் ஒரு ஆனந்தம் இருக்கே அதை உணர்ந்தால் தான் அதன் இன்பம் புரியும். அப்படி மதிக்கும் பெரியவர்கள் மீது எமக்கு இயல்பான மதிப்பும் மரியாதையும் எழுவது சகஜம். அந்த நிலை தங்களுக்கும் வந்திருக்கிறது போல.. உடையார். குறிப்பாக அப்பா அம்மாவை விட பாட்டி தாத்தா எங்கள் சொல்லை (பேரப்பிள்ளைகள் சொல்லை) அதிகம் மதிப்பாங்க... அல்லது கேட்பாங்க. அதனால் தான் சிறுவர்கள் சிறுமிகள் அதிகம்.. அப்படியான பாட்டி தாத்தாக்களோடு ஒட்டிக் கொள்கிறார்கள்... என்பது எனது எண்ணம். :)

நிறைய புலம்பெயர் மக்களின் குழந்தைகள்... தமிழ் கதைப்பினம்.. நீங்கள் சொல்லுறது போல.. தமிழ் எழுத.. வாசிக்க தெரியாது. சிறுவயது முதலே.. பள்ளியில் இரண்டாம் மொழி கற்பிக்க ஆரம்பிக்கிற நேரத்திலாவது.. வீட்டில் நேரம் ஒதுக்கி.. நாளுக்கு ஒரு அரைமணித்தியாலமாவது பெற்றோர் அமர்ந்திருந்து தமிழை எழுத.. வாசிக்கக் கற்றுக் கொடுத்தால் அது பிள்ளைகள் தமிழ் படிக்க சிரமத்தை தராது என்று நினைக்கிறேன். வளர்ந்த பிள்ளைகளிடத்தில் அவர்களா உணர்ந்து தமிழைப் படித்தால் அன்றி மற்றும்படி தமிழ் கற்பிப்பது சிரமம். :):icon_idea:

------------------------

இங்கு சிலர் விமர்சிப்பது போல.. நான் தற்புகழ் என்ற ஒரு எல்லைக்குள் நின்று இந்த ஆக்கத்தை தரவில்லை. மாறாக என் இயல்பை அதில் இருத்தி வைக்க முயல்கிறேன். அந்த கால நேரத்தில் என் இயல்பு.. என் நண்பனின் இயல்பு.. தேசத்தின் இயல்பு.. ஊரின் இயல்பை பிரதிபலிக்கவே முயல்கிறேன். சிலரின் பார்வையில் அது தற்புகழ்ச்சியாக அமைந்தால்.. அது அவர்களின் சொந்தக் கருத்தியலோட்டமே தவிர எனது நிலை அதுவல்ல..! :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

உங்களிடம் நிறைய தவறான பார்வைகள் உண்டு.

முதலில் இலக்கியம் என்பது பக்கம் பக்கமாக எழுதப்பட்டவை என்பதான கருத்தியல் உங்களிடம் உள்ளது போலுள்ளது. வேறு பலரிடமும் அப்படித்தான் உள்ளது. ஆனால்.. காலத்தைப் பிரதிபலிக்கக் கூடிய ஒரு குட்டிக்கதை கூட இலக்கியம் தான். இதில் உங்கள் பார்வையை மாற்றிக் கொள்ளுதல் நன்று.

நீங்களே உங்கள் தகுதியை குறைத்து எடைபோடுவது அடுத்த குறைபாடு. நான் எழுதினேன் தகுதிக்கும் தன்மைக்கும் ஏற்ப விமர்சனங்கள் வேறுபடும் என்று. நீங்களே உங்கள் விமர்சனம்.. தரக்குறைவானது என்பது போல.. எழுதுவது.. தவறு. நான் உங்கள் விமர்சனத்தை ஆக்கபூர்வமான ஒன்றாகவே கருதுகிறேன்.

விமர்சனம் என்பது மீண்டும் பக்கம் பக்கமாக எழுதப்பட வேண்டும் என்ற அர்த்ததைக் கொண்டதல்ல.. உதாரணம்.. நாலடியார் திருக்குறள் பற்றி ஈரடி விமர்சனம்.. ஆலும் வேலும் பல்லுக்குறுதி..நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி.. என்ற அந்த விமர்சனமே அவ்விரு ஆக்கங்களின் தன்மையை இயம்புவதாக எனக்கு என் தமிழ் ஆசான் பொன்னுச்சாமி சேர் சொல்லித் தந்தது ஞாபகம் வருகிறது.

ஒரு படைப்பை.. படைப்பாளியை விமர்சிக்கனும்.. அல்லது அவரைப் பற்றி கருத்தெழுதனும் என்றால்.. ஒன்றில் ஆராய்ந்து எழுதனும்.. இல்ல தெரிஞ்சு கொண்டு எழுதனும்.. இல்ல.. படைப்பை படித்த மாத்திரத்தில்.. உங்களுக்குள் எழும் உங்கள் கருத்தின் மீது நம்பிக்கையோடு, அதன் மீதான காரணங்களை வைத்துக் கொண்டு எழுதனும். நான் உங்கள் கருத்துக்கு வைத்த பதில் கருத்தோடு நீங்களே உங்கள் கருத்தையே குறைத்து மதிப்பீடு செய்வதாக எண்ணி கருத்துப் பகிர்வது உங்களின் தவறே தவிர எனதல்ல..!

நான் எனது சுய ஆக்கங்கள் தொடர்பில் அமையும் விமர்சனங்களை எந்த உருவிலும் சந்திக்க தயாராக உள்ள படியால் தான் இதை இங்கு பதிகிறேன். இன்றேல் இதனை பதிய வேறு இடங்களா இல்லை...???! :):icon_idea:

நான் உங்கள் கதையை வாசித்து விட்டு நீங்கள் எழுதினீர்களே // படைப்பை படித்த மாத்திரத்தில்.. உங்களுக்குள் எழும் உங்கள் கருத்தின் மீது நம்பிக்கையோடு, அதன் மீதான காரணங்களை வைத்துக் கொண்டு எழுதனும்.// இதை அடிப்படையாக வைத்து தான் உங்கள் கதை மீதான என் முதல் விமர்சனம் அமைந்தது...ஒரு படைப்பாளி எதையாவது எழுதினால் எல்லா விதமான விமர்சனங்களையும் தாங்கும் சக்தி உடையவராக இருக்க வேண்டும் அப்படி இருக்க முடியா விட்டால் எழுதக் கூடாது ஆனால் உங்களுக்கு நான் எழுதிய விமர்சனத்திற்கு நீங்கள் திருப்பி எழுதியது எனக்கு எழுதத் தெரியாது ஆகவே உனக்கு என்னை விமர்சிக்க தகுதி இல்லை என்ட‌ அடிப்படையிலேயே அமைந்தது....ஒரு படைப்பாளி எதையாவது எழுதினால் அவர் தெரிந்தவரோ,பக்கத்து வீட்டுக்கார‌ரோ என பார்ப்பதை விட‌ அவர் என்ன எழுதி இருக்கார் எனத் தான் பார்க்க வேண்டும்...தனிய புகழ்ந்து எழுதுபவர்களை,வாழ்த்து சொல்பவர்களை மட்டும் நம்ப வேண்டாம்[அதற்காக அவர்கள் பொய் சொல்கிறார்கள் என நான் சொல்லவில்லை]...உங்கள் கதைக்கான எனது விமர்சனம் உங்கள் முழுக் கதையையும் படித்த படியால் தான் எழுந்தது தனியே கடைசிப் பகுதியை மட்டும் வைத்து எழுதியதல்ல...தொடர்ந்து எழுதுங்கள் நாங்கள் படிக்க தயராக இருக்கோம் :icon_idea:

ஊரில் ஒருத்தர் இருந்தவர் அவருக்கு எப்ப பார்த்தாலும்,யார் என்ன செய்தாலும் தன்ட‌ புகழ் பாடுறது தான் வேலை...யார‌வது பழைய கதைகளை கதைத்தால் உட‌னே இவர் தன்ட‌ கதையைப் புகுத்தி தன்ட‌ புகழ் பாட‌த் தொட‌ங்கி விடுவார் கடைசியில் இவருடைய கதையாலேயே அவர் அழிந்தார்...நான் சத்தியமாக என்ட‌ தம்பி உங்களை சொல்லலை யாரை சொல்கிறேன் என்பது வாசிப்பவர்களுக்கு விளங்கும்

நீங்கள் தற் புகழ் பாடுவதாக எழுதி இருந்ததால் தான்.. குறிப்பிட்டேன் என்னுடைய புகழை அயலில் வாழ்ந்து கண்டறிந்ததன் பெயரில் அப்படி எழுதுகிறீர்கள் என்று. ஏனெனில்.. படைப்பில் வரும் விடயங்கள் தற்புகழ்ச்சிக்கும் அப்பால் அக்காலத்தில் நான் வாழ்ந்த வடிவத்தின் பிரதிபலிப்புக்கள் என்ற வகையில் தான் நான் இதில் எழுதி இருக்கிறேன்.. என்பதை வாசகர்கள் உணரும் போது.. இந்த தற்புகழ்ச்சி என்ற பதத்தின் தேவை கடந்து உங்கள் கருத்து அமைந்திருக்கவும் வாய்ப்புள்ளது.

நான் என் நண்பனோடு எப்படி பழகினேன்.. அவன் எப்படிப் பழகினான்.. அவனின் குடும்ப உறவுகளோடு எப்படி நட்புத் தொடர்ந்தது.. என்பது தற்புகழ்ச்சி ஆகாது. அது எமக்குள் இருந்த நட்பின் இயல்பைக் காட்டுவதாகவே அமையும் என்பது என் எதிர்பார்ப்பு. அது வாசகர்களுக்கு தற்புகழ்ச்சியாக அமையின்.. அதற்காக நான் வருந்தப்போறதும் இல்லை. அது வாசகர்களின் நிலையே தவிர படைப்பாளியினது கிடையாது. வாசகர்களுக்கு படைப்பை தர முடியுமே தவிர.. நாம் விரும்பும் வடிவில் அதைப் படிக்கச் செய்ய முடியாது.

விமர்சனங்களை எதிர்கொள்ள சக்தி அற்றவனானால்.. இதனை இங்கு போட்டிருக்கமாட்டேன். அதுமட்டுமன்றி.. ஆக்கத்தின் ஆரம்பத்திலேயே.. விமர்சனங்களை வரவேற்றுவிட்டுத்தான் இதனைப் பதியவும் ஆரம்பித்திருக்கிறேன். அந்த வகையில்.. நேர்... எதிர் விளைவுகளை..சந்திக்க வழியில்லாமல்.. ஆக்கத்தை எழுத முயன்றிருக்கமாட்டேன்.. அல்லது இங்கு பிரசுரித்திருக்க மாட்டன்.

அதேபோல்.. என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் விபரங்கள்.. சம்பந்தப்பட்ட எல்லாத்தையும் இங்கு எழுதிட்டு.. திக்குமுக்காட நான் ஒன்றும் முட்டாள் கிடையாது. நான் எங்கே எதை எழுதுகிறேன்.. என்பதில் கவனமாகவே இருக்கிறேன். நான் இங்கு எழுதுவும் விடயங்கள் கடந்த அக்காலத்தில் என் அருமைக்குரிய நண்பனுடனான நட்பின் அந்தக் கால தேசத்தின் நடப்பின்.. ஊரின் மக்களின் வாழ்வியல் சார்ந்தே பெரிதும் அமைகின்றன. அமையும்.

மற்றும்படி.. தனிப்பட்ட வகையில் ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும்.. உங்கள் விமர்சனத்தை எப்போதும் போல ஆக்கபூர்வமான ஒன்றாகவே கருதுகிறேன். தற்புகழ்ச்சி என்று வாசகர் நினைக்கக் கூடியவற்றை தவிர்த்து எழுத உங்கள் கருத்து உதவலாம். அந்த வகையில்.. இதனை ஒரு ஆக்கபூர்வ விமர்சனமாகவே பார்க்கிறேன். :):icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.