Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இசையும் கதையும்.

Featured Replies

நீங்கள் பதிந்த அன்றே வாசித்து விட்டேன், திலீபன் அண்ணாவின் உண்ணாநிலைப் போராட்டம் ஆரம்பமாவதற்கு ஒரு சில வாரங்களுக்கு முன்புதான் எம்மண்ணை விட்டு இடம்பெயர்ந்தோம்.

சில கதைகளை வாசிக்கும் போது அதில் எமக்குத் தெரிந்த இடங்களாக இருந்தால் மனதில் படமாக்கிக் கொள்வது வழக்கம், உங்கள் எழுத்துக்கும் அந்தத் தன்மை இருக்கிறது... நீங்கள் தொடரும் அடுத்த பாகங்களை ஆர்வமாக எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன், தொடருங்கள் நெடுக்ஸ்...

  • Replies 127
  • Views 9.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான்.. முடிவின்றி.. கபிலன் அண்ணாவின் நினைவலைகளில் மூழ்கியிருக்க... குண்டன் கேட்டான்... என்ன கடுமையா யோசிக்கிறா.. என்று. அதற்கு.. நான்.. இல்ல.. கபிலன் அண்ணாவோட.. எங்கட கடந்த கால.. அனுபவங்களை நினைச்சுப் பார்த்தன்.. கவலையா இருந்திச்சடா... சரி அது இருக்கட்டும்.. கபிலன் அண்ணா எங்க.. எப்ப வீரமரணம் அடைஞ்சவர்... என்று சொல்லேல்லையே நீ... என்று முடிச்சன் என் கவலையை மறைத்து.. அவனின் கேள்விக்கான பதிலை.

அவர் ஆனையிறவில.. வேவுப் போராளியாகப் போய் வீரமரணமடைஞ்சிருக்கிறார். அவர் வீரமரணம் அடைஞ்சு சில வாரங்கள் ஆகி இருக்கும் என்று தான் சொல்லினம். அவர் வேவுப் பார்க்கப் போய் திரும்பி வர நாள் ஆகினதால வேறு வேவு அணி.. அந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட போது தான்.. கபிலன் அண்ணாண்ட சிதைந்து போன வித்துடலை கண்டிருக்கினம். இப்ப தான் அந்தச் செய்தியை.. அண்ணாமார் எனக்குச் சொல்லிச்சினம். விசயத்தை பக்குவமா அவற்ர அம்மா அப்பாட்டச் சொல்லி வை என்று சொல்லிச் சொல்லிச்சினம். அதுதான் நான் உன்னட்டையும் சொல்லுவம் என்று இங்க ஓடி வந்தன்.. என்றான்.

கபிலன் அண்ணா எப்பவும் தன்னை ஒரு இயக்க ஆள் என்று வெளிக்காட்டாமல் தான் அதிகம் செயற்பட்டிருக்கிறார். மக்களோடும் சரி.. நண்பர்களோடும் சரி.. சாதாரணமானவன் என்ற நிலையைக் கடந்து அவர் அதிகம் பழகினதே இல்ல. கடைசியா வேவுப் புலியாகினது கூட அவரின் திறமைக்கு கிடைத்த கெளரவம் என்று தான் நான் நினைக்கிறண்டா. இருந்தாலும் அவரின்ர இழப்பு.. என்னை ரெம்ப பாதிச்சிடிச்சடா. இன்றைக்கு நேற்றா.. கபிலன் அண்ணா சாரணிய அணித் தலைவராக இருக்கேக்க... நல்லூர் வீதியில.. திலீபன் அண்ணா.. இந்தியப் படைகளிடம் தமிழ் மக்களின் கோரிக்கையை முன் வைச்சிட்டு.. உண்ணாவிரதம் இருக்கேக்க.. மக்கள் எழுச்சி கொண்டு நல்லூர் வீதி எங்கும் இராப்பகலா கூடினப் போ.. அந்தச் சின்ன வயசிலும்.. நித்திரை முழிச்சுக் கூட.. சாரணியக் கடமைகளைச் செய்திருக்கிறார்டா.

அப்ப எல்லாம் கூட.... தன்ர.. மற்ற சாரணிய நண்பர்களை.. விட்டிட்டு போகாமல் தானும்... அவர்களோடு இராப்பகலா.. கூட நிண்டு.. அவர்களுக்கு தேவையான சாப்பாடு.. தண்ணி எல்லாம் தன் சொந்தச் செலவில்.. வாங்கித் தந்து கவனிப்பாராம். நீ சாரணிய இயக்கத்தில கன காலம்.. இருக்கேல்ல.. அதால உனக்கு உதுகள் தெரிஞ்சிருக்காது.அதுகளை எல்லாம் நான் சாரணிய இயக்கத்தில சேர்ந்தாப் பிறகு கபிலண்ணா தன் அனுபவப் பகிர்வுகளாகச் சொல்வார். அதுகளை எல்லாம் நினைச்சுப் பார்க்கிறப்போ.. கபிலண்ணாவின் இழப்பு எவ்வளவு கவலையா இருக்கு தெரியுமா..?! என்று என் நீண்டு செல்லும் கபிலண்ணா.. பற்றிய நினைவுகளை குண்டனோடு பகிர்ந்து கொண்டேன். அதற்கு அவன்..

நீ சொல்லுறது நிஜம் தாண்டா. அவர் எங்கட அயலவர்.. எண்டதாலும்.. அவற்ர அம்மா அப்பா எங்களோட நல்ல பழக்கம் என்ற படியாலும் எனக்கும் அவர் கூட சின்னனில இருந்து நல்ல பழக்கம். பழகிறத்திற்கு.. நல்ல பண்பான அண்ணாவும் கூட. எனக்கும் அந்த நாள் நிகழ்வுகளை நினைச்சா கவலையாகவும் வருத்தமாகவும் தான் இருக்கு. என்ன செய்யிறது.. எங்கட தேசத்துக்கு ஒரு விடிவு வரும் வரை.. இவற்றை தாங்கிக் கொள்ள வேண்டிய துர்ப்பாக்கியம் எங்களுக்கடா என்றான் குண்டன் பதிலுக்கு.

நீ சொல்லுறதும் சரி தான்.. இருந்தாலும்.. இவ்வாறான திடீர் இழப்புக்களின்.. தாக்கம் எண்டது.. போர்க்களத்துக்கு அப்பாலையும் இப்படி விரிஞ்சு கிடக்குது.. என்றப்போ.. எல்லாமே கவலை தானே. பார்.. இன்றைக்கு ஒரு மருத்துவனாக உலா வந்து வசதியாக வாழ வேண்டிய திலீபன் அண்ணா.. எமது விடிவுக்காக.. எமது மண்ணின் விடிவுக்காக.. எங்களுக்காக.. தன்னை தனது வாழ்க்கையை அர்ப்பணிச்சிட்டு.. ஒரு தியாகியாகி நிற்கிறார். அதுவும் இந்தச் சின்ன வயசில.

அவரின்ர கொள்கையை அடிக்கடி.. போற்றும் கபிலண்ணாவும்.. அந்த வழில போயிட்டார். இதுகளை எல்லாம் நினைக்கிறப்போ.. ரெம்பக் கவலையா இருக்கு. எனி எப்ப நாங்கள் அவையைப் பார்க்கப் போறம்.. அவை எப்ப எங்களைப் பார்க்கப் போகினம்.. நிலையில்லாத இந்தப் பிரபஞ்ச வாழ்க்கையில.. இது எங்களுக்கு தேவையா என்று கூட நினைச்சிருக்கிறண்டா... என்று நான் அவனுடைய கருத்துக்கு என் அபிப்பிராயத்தைச்.. சொல்லி முடிக்க..

அதுக்காக.. அடிமைகளாக.. இந்த உலகத்தில வாழ இருக்கிற அந்த இயற்கையளித்துள்ள உரிமையைக் கூட இழந்து வாழ்ந்து சாவது மேலாடா.. என்றான் குண்டன் கொஞ்சம் கோபமாகவே.

அதற்கு நான்.. நாங்க சந்திக்கிற.. இழப்புக்களுக்காக.. எங்கட போராட்ட நியாயத்தைக் குறை சொல்லுறன் என்று நினைக்கிறா போல.அப்படி இல்லைடா.. இப்ப பார்.. திலீபண்ணாவுக்காக அன்று எழுதின இந்த வரிகள்..

இன்னும் தொடர்கதையா இருக்கே... அப்ப எப்ப தான் இதுக்கெல்லாம் ஒரு முடிவு வந்து.. எங்கட சுதந்திர தேசம் மீளப் போகுது... என்ற ஏக்கத்தின் பிரதிபலிப்புத் தாண்டா அவை.. என்று சொல்லி அவனை சாந்தப்படுத்திக் கொண்டேன்.

சரி.. சரி.. இதையே நினைச்சுக் கொண்டிருந்தி எண்டால்.. அது தொடரா தொடர்ந்து கொண்டிருக்கும். அத்தனை அவலங்கள்.. சோகங்கள்.. கவலைகள்.. அனுபவங்கள்.. நமக்குள்ள. அதுவும் இந்தச் சின்ன வயதில. நான்.. நீயும் கபிலண்ணாவோட நெருங்கிப் பழகின ஆள் என்றபடியால் தான் இதைச் சொல்ல உன்னட்ட வந்தன். நீ இப்படிக் கவலைப்படுவாய் என்றிருந்தா சொல்லி இருக்கமாட்டண்டா.. என்றான் குண்டன்.. என் தொடர் கவலைகளால்.. தான் வருந்தி.

அதற்கு நான்.. நமக்காரடா.. நாங்களே தான் எங்களைத் தேற்றிக்கொள்ளோனும். சரி.. வா.. இப்ப கபிலண்ணா வீட்டுப் பக்கம் போய்.. மெதுவா செய்தியைச் சொல்லி வைப்பம்... என்று அவனின் கவனத்தை திருப்பி.. செயலில் இறக்க ஆரம்பித்தோம்.

சரி.. வா... என்று குண்டனும் சொல்ல.. நாங்கள் இருவரும் கபிலண்ணா வீடு நோக்கி நடக்கலானோம்.

(மீண்டும் அடுத்த நிகழ்வோடு... வருகிறேன்.)

Edited by nedukkalapoovan

இந்தப் பாகப் பகிர்விற்கு நன்றி நெடுக்ஸ்...

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு, கனமான பாக பகுதியை பதியிச்சிருக்கிறிங்க, அடுத்த பகுதி இதைவிட உங்களுக்கு மிகுந்த சங்கடத்தை கொடுத்த பகுதியா இருக்கும், இந்த செய்தியை சொல்கிற பக்குவமும் மனத் தைரியமும் உங்களுக்கு இருந்ததை மனதா பாரட்டனும்,

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கபிலண்ணா வீட்டை அடைஞ்ச நாங்க.. முற்றத்தில் குட்டி வானொலிப் பெட்டியில்

பாடலைக் கேட்டுக் கொண்டு.. பூ மரங்களை எல்லாம் கத்தரிச்சுப் போட்டு முற்றம் பெருக்கிக் கொண்டிருந்த அவரின்ர அப்பாவை முதலில கண்டம். அவரும் கேற்றடியில் நிண்ட எங்களைக் கண்டிட்டு..

வாங்கோ.. தம்பியவை. எப்படி இருக்கிறீங்க.. என்ன.. கன காலமா ஒருத்தரையும் இங்கால காணக்கிடைல்ல.. என்ன சங்கதி என்றார்...

இல்ல.. அங்கிள்... ஸ்கூல்.. ரியூசன் அதுஇதெண்டு போறதால.. இப்ப விளையாடவே எங்களுக்கு நேரம் கிடைக்கிறதில்ல.. இருந்தாலும் உங்களை அன்ரியை இதால போகேக்க காணுறனாங்கள் எண்டம்.. ஒருவாறு சமாளிச்சுக் கொண்டு.

நாங்க நல்லா சமாளிக்கிறம் என்று உணர்ந்த கபிலண்ணாட அப்பா.. அதை வெளிக்காட்டாமல்.... சரி அது போகட்டும்.. கபிலன் இல்லாததால.. சும்மா வரமாட்டீங்களே.. இப்ப என்ன விசயமா வந்தனீங்கள்.. என்று அடுத்த கேள்வியைத் தொடுத்தார்....

அதற்குள்ள.. நாங்கள் வந்து முற்றத்தில் நின்று உரையாடுவதைக் கண்டிட்டு.. கபிலண்ணாவின் அம்மா ஓடி வந்தாங்க. வாங்க பிள்ளையள்.. எப்படி இருக்கிறீங்கள்.. அம்மா அப்பா சுகமா இருக்கினமோ.. என்று எங்களை வரவேற்றதும் இல்லாம.. பொதுவான நலமும் விசாரிச்சுக் கொண்டிருந்தவங்க... இடையில.. அதை முறிச்சு.. ஏதோ ஞாபகம் வந்தவங்களா.. தங்கச்சி கொலசிப்பில பாஸ் பண்ணிட்டாள் தெரியுமோ எண்டவா... நாங்கள் அதற்குப் பதில் சொல்ல முதலே... நல்ல மார்க்ஸும் எடுத்திருக்கிறாள், எப்பவும் ரிப்போட் வந்த உடன.. தமையனட்டத்தான் முதல்ல காட்டுவாள். இப்ப கொலசிப்பில பாஸ் பண்ணி சந்தோசமா இருந்தாலும்... தமையனட்ட சொல்ல முடியல்லையே என்ற கவலை புள்ளைக்கு. உவன்.. கபிலனை உங்கினை எங்கையும் கண்டனீங்களோ.. தம்பியவை என்ற கேள்வியோட முடிச்சாங்க.

அவாட கேள்விக்கு.. நானும் குண்டனும் பதில் சொல்ல.. முடியாமல்.. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டம். எங்களில் ஏதும் சந்தேகம் வராதிருக்க.. அந்தக் குறுகிய நேர மெளனத்தை கலைத்து.. நான் காணேல்ல அன்ரி. இவன் தான் camp குகள் பக்கம் அடிக்கடி போறவன்.. என்றிட்டு.. குண்டனைப் பார்த்து.. நீ கபிலண்ணாவை எங்கையும் கண்டனியோ என்று கேட்டேன்.. அந்த அம்மாவை சாந்தப்படுத்தும் நோக்கில்..!

அவனும் நிலைமையை உணர்ந்து கொண்டு.. நானும் இப்ப சில மாதங்களா அவரைக் காணேல்ல. ஒருவேளை.. முந்தி ஒருக்கா சந்திக்கேக்க.. தெந்தமிழீழத்துக்கு மூவ் ஆகப் போறன் என்று சொன்னவர் அங்க போயிருப்பாரோ என்னவோ.. என்ற பதிலோடு முடித்தான் அவன்.

பிள்ளை கொலசிப்பில பாஸாகி.. மகிழ்ச்சியா இருக்கிற அந்த குடும்பத்தில.. ஏன் ஒரு அதிர்ச்சிச் தகவலைச் சொல்லி.. அதுகளின்ர அந்தக் குறுகிய மகிழ்ச்சியையும் கெடுப்பான்.. என்று.. நான் உணர்ந்ததைப் போலவே குண்டனும் உணர்ந்திருப்பதாக.. இருந்தது.. அவனின் பதில்.

குண்டனின் பதிலில் ஏதோ திருப்தி கண்ட கபிலண்ணின் அம்மா.. என்னட்டையும் ஒரு ஆறு மாதத்திற்கு முதல் வந்தவன். அப்பவும் சொன்னான்.. அம்மா நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படாதேங்கோ.. நான் நல்லா இருக்கிறன். சிலவேளை யாழ் மாவட்டத்தை விட்டு வெளியால மூவ் பண்ண வேண்டி வரலாம். அப்படி ஒரு நிலைமை வந்தா.. உங்களை அடிக்கடி வந்து பார்க்க முடியாமல் இருக்கும் என்று. ஒருவேளை தம்பி சொல்லுறது போல.. மட்டக்களப்பு.. திருகோணமலை பக்கம் போயிருப்பான் போல. சரி பிள்ளையள்.. அவன் இங்கால வாற நேரம் நிச்சயம் அம்மாட்ட வருவான்.. இப்ப நீங்கள் என்ன சாப்பிடப் போறீங்கள்.. பிள்ளை.. இந்த அண்ணாவைக்கு சோதினை பாஸ் பண்ணினதிற்கு என்ன கொடுக்கப் போறா என்று தாய்க்குப் பின்னால் நின்று கொண்டிருந்த கபிலண்ணாவோவின்.. ஒற்றைச் சகோதரமான.. அவரின் தங்கையைப் பார்த்து கேட்டாங்க அந்த அம்மா.

நான்.. என்னம்மா கொடுக்கிறது.. அவை எல்லோ எனக்கு தரனும்.. என்றாள்.. அவள்... சிரித்தபடி.

அவளின் ஆதங்கத்தில் அர்த்தம் இருந்தாலும்.. நாங்கள் வந்ததின் நோக்கம்.. அறியாதவர்களாய் அவர்கள்.!. நாங்களோ.. மனதில் கவலைகளோடு... பாரிய... சுமைகளை இறக்கி வைக்க முடியாமல்.. தாங்கிக் கொண்டிருக்கிறோம்.. என்பதை அவர்கள் எப்பவுமே உணரக் கூடாது என்பதற்காக..

இல்லத் தங்கச்சி.. நீங்கள்.. பாஸாகினது இப்ப உங்கட அம்மா சொல்லித் தானே தெரியும். அதுதான் நாங்கள் உங்களுக்கு எதுவும் எடுத்து வரல்ல.. இருந்தாலும் எங்கட வாழ்த்தும் பாராட்டுக்களும் உங்களுக்கு உரித்தாகும்.. என்று முடிக்க..

ஐயோ அண்ணா.. நான் சும்மா விளையாட்டுக்குத் தான் சொன்னன். பொறுங்கோ.. உங்களுக்கு எல்லாம் கொடுக்க என்று அப்பா வாங்கித் தந்த சொக்கிலட் வைச்சிருக்கிறன்.. எடுத்துக் கொண்டு வாறன்.. என்று சொல்லிக் கொண்டே.. சொக்கிலட் எடுக்க.. வீட்டுக்குள் ஓடினாள்.. அந்தக் குட்டிச் சிறுமி.

அவளின்.. அந்தக் குடும்பத்தின்.. அந்த மகிழ்ச்சிச் சூழலில்.. சூறாவளியை இறக்காமல்.. மெளனமாவதே சிறந்தது என்ற முடிவுக்கு வந்த நாங்கள்.. இருவரும்.. சொல்ல வந்த விடயத்தை மறைப்பதில் ஒற்றுமைப்பட்டுச் செயற்பட்டோம். அந்த நேரத்தில்.. உந்த விசயத்தை.. பேசாம.. அண்ணாமாரே வந்து சொல்லச் சொல்லி விடுவம். அவையே நேர வந்து சொல்லட்டும்.. என்ற எண்ணத்தை நான் குண்டனோடு.. பகிர்ந்து கொள்வதென்ற முடிவுக்கு வந்திருந்தேன்.

(அப்புறம் என்ன நடந்தது என்றதைச் சொல்ல.. அப்புறமா வாறன்..!)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு முடிவு, உங்களின் பேச்சில் ஒரு நம்பிகையீனம் வந்தாலும் அது பிற்காலத்தில் மனதிற்கு சங்கடமா இருந்திருக்கும்,

வெப்பில் கபிலனின் படம் பார்த்தனான், உங்களிடம் இருந்தால் இதில் இணைந்துவிட்டால் நல்லது,

ஒவ்வரு நண்பர்கள் குழுவிலும் இந்த குண்டன் பெயர் இருக்கும், அந்த குழுவில் யார் மற்றவர்களைவிட மொத்தமா இருக்கிறானோ, அவன் குண்டனாகிவிடுவான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு முடிவு, உங்களின் பேச்சில் ஒரு நம்பிகையீனம் வந்தாலும் அது பிற்காலத்தில் மனதிற்கு சங்கடமா இருந்திருக்கும்,

வெப்பில் கபிலனின் படம் பார்த்தனான், உங்களிடம் இருந்தால் இதில் இணைந்துவிட்டால் நல்லது,

ஒவ்வரு நண்பர்கள் குழுவிலும் இந்த குண்டன் பெயர் இருக்கும், அந்த குழுவில் யார் மற்றவர்களைவிட மொத்தமா இருக்கிறானோ, அவன் குண்டனாகிவிடுவான்

இவர்களோடு பள்ளிக்காலத்தில் எடுத்த படங்கள் கூட இப்போ இல்லை. மாவீரர் பட்டியலில் இவர்களின் பெயர் இருக்கிறது. ஆனால் அவற்றை எல்லாம் குறிப்பிட்டுக் கொள்வது.. சில பல பிரச்சனைகளை அவர்களின் குடும்பத்தினருக்கும்.. வேறு பலருக்கும் உருவாக்கலாம் என்பதால் அவற்றைத் தவிர்ப்பது நல்லது என்றே நினைக்கிறேன். அதுமட்டுமன்றி இவர்களின் குடும்பங்களைச் சார்ந்தார் இன்றும் தாயகத்தில் வாழ்கின்றனர்.அவர்கள் பற்றிய நினைவுகளை எவராலும் அழிக்க முடியாது என்பதை இக்கதை சொல்லும். இன்றைய சூழலில்.. அதுவே எமக்குரிய சாத்தியமும் கூட.

எங்கள் வீடு 1995 சந்திரிக்கா- ரத்வத்தை கூட்டு இராணுவ நடவடிக்கையான ரிவிவெரச நடவடிக்கையின் போது சிங்களப் படைகளால் தகர்க்கப்பட்ட போது.. என்னுடைய பல ஆவணங்களும் அழிந்து போயின. பள்ளிக் காலத்தில் பெற்ற பரிசுப் பொருட்கள் சான்றிதழ்கள், பல அல்பங்கள் உட்பட. எனி அவை எமக்கு கிடைக்காதவைகளில் அடங்கும். :(

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நெடுக்கு, நீங்க சொல்வது சரி, வீணா ஏன் பிரச்சனைகளை, அவரின் படத்தை வெப் இல் பார்த்த பின்தான் கேட்டனான், சாறி,

எங்கள் வீடும் அதே காலத்தில்தான் இடிக்கப்பட்டு நேவியின் அணைக்கட்டாகியது, எத்தனை நினைவுச் சின்னங்களை இழந்துவிட்டோம், என் பிள்ளைகளிடம் காட்ட ஒன்றுமே இல்லை,

உங்களுக்கு வலி எப்படி இருக்கும் என்று இவற்றை இழந்தவர்களுக்கு புரியும், தொடருங்க...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நெடுக்கு, நீங்க சொல்வது சரி, வீணா ஏன் பிரச்சனைகளை, அவரின் படத்தை வெப் இல் பார்த்த பின்தான் கேட்டனான், சாறி,

எங்கள் வீடும் அதே காலத்தில்தான் இடிக்கப்பட்டு நேவியின் அணைக்கட்டாகியது, எத்தனை நினைவுச் சின்னங்களை இழந்துவிட்டோம், என் பிள்ளைகளிடம் காட்ட ஒன்றுமே இல்லை,

உங்களுக்கு வலி எப்படி இருக்கும் என்று இவற்றை இழந்தவர்களுக்கு புரியும், தொடருங்க...

நீங்கள் கேட்டதில் தப்பில்லை. அதனால் சாறி எல்லாம் எதற்கு. :)

மேலும்.. சும்மா இருக்க முடியாம கதை என்று எழுதப் போய் நாங்களே தகவலைத் திரட்டி கொத்தாக் கொடுத்ததா அமையக் கூடாது பாருங்க.

எனக்கு நல்லாவே தெரியும் எம்மவரின் குணம். கூட நின்றிட்டு.. அங்கால போய் குழிபறிக்கிற ஆட்கள் எம்மத்தியில் எம்மோடு கலந்தும் உள்ளனர். இதில் நிறைய முன் அனுபவமும் உண்டு.. உடையார். அதனால் நாம் தான் எழுத்திலும்.. எழுதப்படும் விடயத்திலும் சுய கவனம் செலுத்த வேண்டும். இன்றேல்.. எம்மால் மற்றவர்களும் தொல்லைகளுக்கு ஆளகலாம்.. இல்லையா சொல்லுங்க. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இசையும் கதையும் இன்று தான் நேரம் கிடைத்து வாசித்தும்,பாடல்களை கேட்டும் முடிக்க முடிந்தது. தேசபக்திப்பாடல்களும் அத்தோடு தொடர்பு பட்ட சம்பவங்களும் இன்றும் மனதில் நிழலாடுகிறது. தொடர்ந்து எழுதுங்கள், நெடுக்ஸ்.

யாரோ முகம் தெரியாதவரின் மரணச் செய்தி கேட்டாலே அந்த நாள் முழுதும் அந்த நபரைப் பற்றிய சிந்தனையாகவே இருக்கும்.

ஒரு நண்பனாக, அண்ணனாக, போராளியாகப் பழகியவரின் மரணத்தை எங்காவது தமது பிள்ளை உயிரோடு இருப்பான் என்று தம்மைத் தாமே தேற்றியிருக்கும் பெற்றோருக்குச் சொல்லி அவர்களின் இதயத்தைக் கிழிப்பதற்கு யாருக்குமே தைரியம் எளிதில் வராது என்பது உண்மை. உங்களின் அனுபவங்களும் அதனைத் தொட்டுச் சென்றுள்ளது யதார்த்தமாக உள்ளது. தொடருங்கள்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வீட்டுக்குள் ஓடிய கபிலண்ணாவின் தங்கை.. இரண்டு கண்டோஸ் (Kandos) கஜு நட் சொக்கிலேட் பார்களோடு வந்தாள். அவற்றை அவள் எங்களுக்கு ஆளுக்கொன்றாக தந்துவிட நாங்களும் நன்றி சொல்லி வாங்கிக் கொண்டோம்.

உடனே என் எண்ணத்தில்... அட அந்தப் பிள்ளைக்கு கொடுக்க எதுவும் இல்லையே என்ற எண்ணம் தலையெடுக்க... யோசனையில்.. நான் எனது சொக்கிலேட் பாரை.. பொக்கட்டுக்குள் திணிக்க... அண்ணா அதை பொக்கட்டுக்க வைக்காதேங்கோ.. உருகிப் போயிடும் என்றாள் சிறுமி.

ஆனால்.. நானோ.. அவளுக்கு பதிலுக்கு... பரிசாக ஏதேனும் கொடுக்க வேண்டும்.. என்ற எண்ண ஓட்டத்தில் விஞ்சி இருக்க.. அவளின் குரலைப் பொருட்படுத்தாமல்... பொக்கட்டுக்குள் சொக்கிலட் பாரை திணித்த போது.. அன்று காலையில் என் அம்மா தந்த.. ஞாபகத்தில் இருந்து தொலைந்திருந்த.. ரியூசன் காசு பத்து ரூபா நோட் தட்டுப்பட... மனதில் திருப்தியும் மகிழ்ச்சியும் பொங்க.. அதை எடுத்து தங்கையிடம் நீட்டினேன்...

அதைக் கண்ட கபிலண்ணாவின் அம்மா.. தம்பி.. காசெல்லாம் கொடுக்காதேங்கோ. உங்களுக்கு எங்கால காசு என்று கேட்க.. அன்ரி.. அம்மா காலைல ரியூசனுக்கு என்று தந்தவா.. இப்ப தங்கச்சிக்கு கொடுக்க எங்களட்ட இதுதான் இருக்கு.. அதுதான் கொடுக்கிறன் என்றேன்..

அதற்கு அவா.. பறுவாயில்லை. அம்மா ரியூசனுக்கு என்று தந்த காசை நீங்கள் வைச்சிருங்கோ.. பிறகு ஒரு நேரம் வரேக்க நீங்கள் விரும்பினதை வாங்கிக் கொண்டு வந்து கொடுங்கோ... என்றவர்.. மகளைப் பார்த்து.. பிள்ளைக்கு அண்ணாவை பிறகு வரேக்க.. பரிசு கொண்டு வந்து தருவினம்.. இப்ப அந்தக் காசை அவரட்ட கொடும்மா என்றார்.

அவளும் தாயின் சொல்லை மதித்து.. தலையை ஆட்டியபடி.. அண்ணா இந்தாங்கோ.. என்று நான் கொடுத்த பண நோட்டை.. நீட்ட... வாங்க மனதின்றி.. அந்த தாயின் சொல்லுக்கு கட்டுப்பட்டு வாங்கிக் கொண்டு.... அப்ப அன்ரி நேரமாகுது.. நாங்கள் போயிட்டு.. வரப் போறம்.. என்று சொல்லி.. நான் விடை பெறத் தயாரானேன்.

அதற்கு கபிலண்ணாவின் அம்மா.. என்ன ஒன்றும் குடிக்காமல் கொள்ளாமல்.. போகப் போறீங்களோ.. என்று கேட்க..

நாங்கள் வீட்ட சொல்லாமல் கொள்ளாமல்.. வந்திட்டம்.. கெதியாப் போகனும் அன்ரி.. என்றான் குண்டன் தன் அமைதி குலைத்து. நானும் அதற்கு ஒத்தூத.. நாங்கள் இருவரும் விடைபெறத் தயாரானோம்.

அப்போது... திடீர் என்று குண்டன்.. ஏதோ ஞாபகம் வந்தவனாய்.. அன்ரி.. நான் உங்களட்ட ஒன்று சொல்ல வந்தனான்... என்றான்..

அதைக் கேட்ட எனக்கு தூக்குவாரிப் போட்டது. அட கடைசி நேரத்தில வெண்ணெய் திரண்டு வரும் வேளையில்.. தாழியை உடைக்கிற கணக்கா இருக்கிறானே.. இவன்.. என்ற எண்ணம் மேலிட.. அவனை அந்த இடத்தில் தடுத்து நிறுத்தினால் கபிலண்ணாவின் பெற்றோருக்கு என் மீது அவநம்பிக்கை தான் வரும் என்பதால் அவன் சொல்ல வந்ததைச் சொல்லட்டும் என்றுவிட்டு அமைதியாக நின்று கொண்டிருந்தேன் நான்.

குண்டனின் குரலைக் கேட்டுவிட்டு.. என்ன தம்பி சொல்ல வந்தனீங்கள் என்றார்.. கபிலண்ணாவின் அம்மா.

கபிலண்ணாவைப் பற்றித் தான் அன்ரி என்றான் அவன்....

நான் தொலைஞ்சு போ.. என்று எண்ணிக் கொண்டிருக்க..

கபிலன் பற்றி என்ன தம்பி கேள்விப்பட்டனீங்கள்... அப்ப ஏன் நான் முதலில கேட்கேக்க.. அவரைப் பற்றி ஒன்றும் தெரியாது என்று சொன்னனீங்கள்.. என்று கொஞ்சம் கோபம் வெளிப்பட சொல்லி முடிச்சாங்க கபிலண்ணாட அம்மா.

இவற்றை எல்லாம் குண்டனின் அருகில் சிலையாக நின்ற படி நான் அவதானிச்சுக் கொண்டிருக்க முடிஞ்சுதே தவிர வாயே திறக்கவில்லை.

இல்லை அன்ரி.. நீங்கள் கபிலண்ணா பற்றியும்.. அவரை கடந்த 6 மாதமா சந்திக்கல்லையும் என்று சொல்லத்தான்.. எனக்கும் கவலையாப் போயிட்டு.. அதுதான்... நேராப் போய் camp பில கொஞ்சம் விசாரிச்சா என்ன என்று சொல்ல வந்தன் அன்ரி.. என்று வெகு பக்குவமாகச் சொல்லி முடித்தான் குண்டன்.

அட பறுவாயில்லையே.... இந்தப் பிளான் நல்லா இருக்கே.. சொல்ல வந்து விடயத்தைச் சொல்லாமல் போறதிலும்.. அவையா அறிய தூண்டிவிட்டுச் செல்வது.. நல்லம் தானே... குண்டா.. நீயா இப்படி.. என்று எனக்குள் அவனைப் பற்றி ஒரு உயர்ந்த எண்ணம் எழ.. எதுக்கும் அன்ரி.. இவன் சொல்லுறது போல.. camp புகளில கொஞ்சம் விசாரிச்சுப் பாருங்களேன்.. என்று கூறி.. குண்டனின் குரலுக்கு வலுச் சேர்த்தேன் நான்.

ஓம்.. தம்பியவை.. நீங்கள் சொல்லுறதும் சரி தான்.. அவனுக்கு என்ன பாடோ தெரியல்ல.. இவள் பிள்ளையையும் கூட்டிக் கொண்டு ஒருக்கா உந்த பக்கத்தில இருக்கிற camp லையாவது விசாரிச்சுப் பார்க்கத் தான் வேணும்.... என்று கபிலண்ணாவின் அம்மா கூற.. மனதில் இருந்த சுமையில் பாதியை இறக்கி வைத்த திருப்தியில்.. அப்ப நாங்கள் போயிட்டு வாறம் அன்ரி.. (வீட்டுக்குள்ளே ஏதோ அலுவலாகச் சென்றிருந்த கபிலண்ணாவின் அப்பாவை.. காணாத படியால்..) அங்கிளிடமும் சொல்லி விடுங்கோ என்று கூறி விட்டு.. விடைபெற்றோம்.

அங்கிருந்து விடைபெற்று நாங்கள் இருவரும் வீதிக்கு ஏற.. நல்ல காலம்.. விசயம் இந்தளவோட.. இப்படி முடிஞ்சது. கடைசி நேரத்தில நீ எல்லாத்தையும் சொல்லிவிடப் போறா என்று பயந்திட்டன் என்றேன் நான் குண்டனைப் பார்த்து.

உண்மையில.. நான் இரண்டு மூண்டு தடவை நினைச்சனான்.. கபிலண்ணா பற்றிய விசயத்தை சொல்லிடுவமோ என்று. நீ.. பிடிகொடுக்காமல் கதைக்கிறதப் பார்த்திட்டு நானே ஊகிச்சுக் கொண்டன்.. இவன் அதைச் சொல்ல விருப்பப்படல்லப் போல.. நான் ஏன் அதைக் கெடுப்பான் என்று. எதுஎப்படி இருந்தாலும்.. நான் இப்பவே அண்ணாமாரட்டப் போய் இப்படி கபிலண்ணாவைப் பற்றி அவரின்ர அப்பா அம்மாட்ட சொல்லக் கூடிய சூழல் அங்க இருக்கேல்ல.. என்ற.. விசயத்தைச் சொல்லிட்டுத்தான் வீட்ட போவன்.. என்றான் குண்டன் பதிலுக்கு.

அது நல்லது... என்று நான் அவனுக்கு என் ஆதரவை வெளிக்காட்டிக் கொண்டிருக்க...

அவன் என்னையும் மீறி.. அத்தனை கவலைகளையும் மீறி.. நாங்கள் வந்து கொண்டிருந்த வீதியில் இருந்த.. அந்த வீட்டின் மதில்களுக்கு மேலால எட்டிப் பார்த்தான். இதனை மெளனமாக அவதானிச்ச நான்..

என்ன ஐயாக்கு அங்க பார்வை வேண்டி இருக்கு என்றேன்...

அதற்கு அவன்.. இது தான் காயத்திரி வீடு என்றான்...

ஓ.. அந்த பதிவிரதையா.. நளவெண்பாவின்.. தமயந்தியை தோற்கடிக்கிற விதமா.. அன்ன நடை நடந்து வருமே.. அந்தக் காயத்திரியிண்ட வீடா இது என்றேன் நான்... தெரியாதவன் போல...

அதற்கு அவன்.. முகமெல்லாம்.. சிவக்க.. குழைஞ்சு கொண்டே ஓம் என்றான்...

அதைக் கேட்ட எனக்கு எண்ணங்களில்... இந்தப் பாடல்.. ஒலிக்கத் தொடங்கியது..

http://www.youtube.com/watch?v=KPNvheFLUIo&feature=related

(மீண்டும்.. குண்டனின் குழையல்களுக்குப் பின்னால் இருந்த சங்கதிகளோடு.. சந்திக்கும் வரை..)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் "பறுவாயில்லை" என்டா எழுதறனீங்கள்?...2,3 இடத்தில் அப்படி எழுதி இருக்குறீங்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு நேரில் சம்பவங்களை பார்ப்பது போல் எழுதிக்கொண்டு போகின்றீர்கள்,

"வெண்ணெய் திரண்டு வரும் வேளையில்.. தாழியை உடைக்கிற கணக்கா இருக்கிறானே"

இந்த பழமொழியை ஏன் இந்த இடத்தில் போட்டனிங்கள்,

நான் அறிந்தவரை மனதுக்கு சந்தோஷமான கரியம் ஒன்று நடைபெற இருக்கும் போது அதை இன்னுமொருவர் குழப்ப வெளிக்கிட்டால்தான் இப்படி பாவிக்கிறனாங்கள், ஆனா நீங்க போனதோ துக்க காரியத்தைபற்றி சொல்வதற்கு, அதை சொல்லாவிட்டாலும் உங்கள் இருவரின் அடிமனதிலும் துக்கம் மண்டியிருக்கிறது.

அவன் அப்படி சொல்ல வெளிக்கிடும் போது நீங்கள் இப்படி எழுதியிக்கலாம்

"எண்ணிச் செய்கிறவன் செட்டி (நெடுக்கு), எண்ணாமல் செய்கிறவன் மட்டி (குண்டன்)" என நினைத்தேன் குண்டனை என,

அவர்கள் கபிலனை காணவில்லை என்ற கவலையில் இருக்கிறர்கள், அத்துடன் மகளினால் ஏற்ப்பட்ட இந்த சந்தோஷத்தை கொஞ்ச நேரத்தை நீங்க கெடுக்க விரும்பவில்லை அதையே குண்டனும் எண்ணியிருக்கனும் என்பதை காட்ட

எப்படி நீங்க நினைத்து இதில் சேர்த்தீர்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் "பறுவாயில்லை" என்டா எழுதறனீங்கள்?...2,3 இடத்தில் அப்படி எழுதி இருக்குறீங்கள்?

நாங்க பேச்சு வழக்கில் அப்படி தான் பாவிக்கிறது. பறவாயில்லை என்பது சரியான எழுத்து நடையாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். (இதில் பேச்சு நடையையும் கலந்து எழுதி வருகிறேன்.. இயல்பைப் பிரதிபலிக்க.). நன்றி அக்கா தங்கள் கருத்திற்கு. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு நேரில் சம்பவங்களை பார்ப்பது போல் எழுதிக்கொண்டு போகின்றீர்கள்,

"வெண்ணெய் திரண்டு வரும் வேளையில்.. தாழியை உடைக்கிற கணக்கா இருக்கிறானே"

இந்த பழமொழியை ஏன் இந்த இடத்தில் போட்டனிங்கள்,

நான் அறிந்தவரை மனதுக்கு சந்தோஷமான கரியம் ஒன்று நடைபெற இருக்கும் போது அதை இன்னுமொருவர் குழப்ப வெளிக்கிட்டால்தான் இப்படி பாவிக்கிறனாங்கள், ஆனா நீங்க போனதோ துக்க காரியத்தைபற்றி சொல்வதற்கு, அதை சொல்லாவிட்டாலும் உங்கள் இருவரின் அடிமனதிலும் துக்கம் மண்டியிருக்கிறது.

அவன் அப்படி சொல்ல வெளிக்கிடும் போது நீங்கள் இப்படி எழுதியிக்கலாம்

"எண்ணிச் செய்கிறவன் செட்டி (நெடுக்கு), எண்ணாமல் செய்கிறவன் மட்டி (குண்டன்)" என நினைத்தேன் குண்டனை என,

அவர்கள் கபிலனை காணவில்லை என்ற கவலையில் இருக்கிறர்கள், அத்துடன் மகளினால் ஏற்ப்பட்ட இந்த சந்தோஷத்தை கொஞ்ச நேரத்தை நீங்க கெடுக்க விரும்பவில்லை அதையே குண்டனும் எண்ணியிருக்கனும் என்பதை காட்ட

எப்படி நீங்க நினைத்து இதில் சேர்த்தீர்கள்

கதையோடு.. மிகவும் ஒன்றி.. அதன் இயல்போட்டத்தோடு உங்களை ஒட்டி.. கிட்டத்தட்ட எனது மனநிலையில் உங்களையும் வைத்திருந்து.. இதனை நீங்களே எழுதுவதற்கு ஈடாக.. உங்கள் கருத்துக்களை வழங்கி வருகின்ற முக்கியமான வாசகர்களில் நீங்களும் ஒருவர்.

ஒரு சுய படைப்பை படைக்கிறவனை விட அந்தப் படைப்பை சரியாக உள்வாங்கிக் கொள்ளும் வாசகனால் தான் அந்தப் படைப்பு உயிர்ப்போட்டம் பெறுகிறது என்ற பெரியவர்களின் விமர்சனங்களை இப்போ இங்கு இந்த காளை அனுபவத்தின் மூலம் குறிப்பாக உங்களை.. குட்டியைப் போன்ற கிரமமாக கருத்துப் பகரும் யாழின் வாசகர்கள் மூலம் என்னால் அறிய முடிகிறது. நிறைய நேரப் பிரச்சனைகள்.. உள்ள புலம்பெயர் சூழலில்.. குந்தி இருந்து இதனை வாசிக்கிறது என்பதே பெரிய விசயம். உங்கள் இருவரையும் தவிர.. வேறு கள உறவுகளும் இதனை வாசித்து கருத்துக் பகிர்ந்துள்ளனர்.. அவர்களும் இதில் அடங்கினாலும்.. நீங்கள் இருவரும் விசேடமானவர்கள்.

இப்போ நீங்கள் கேட்ட விடயத்திற்கு வருகிறேன்.. உண்மையில் அது சரியான பாவனையோ என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.. ஆனால்.. நீங்கள் எனது எண்ண ஓட்டத்தை நெருங்கி இருப்பதை.. உங்களின் கீழ் கண்ட கருத்து சுட்டிக்காட்டுகிறது.

அவர்கள் கபிலனை காணவில்லை என்ற கவலையில் இருக்கிறர்கள், அத்துடன் மகளினால் ஏற்ப்பட்ட இந்த சந்தோஷத்தை கொஞ்ச நேரத்தை நீங்க கெடுக்க விரும்பவில்லை அதையே குண்டனும் எண்ணியிருக்கனும் என்பதை காட்ட

எனக்கு அந்தப் பெற்றோரின் மன மகிழ்ச்சி என்பதை விட அந்தச் சிறுமியின் மகிழ்ச்சிச் சூழலை கெடுக்கக் கூடாத என்ற எண்ணமே அதிகம் நிஜத்திலும் இருந்தது. ஒருவேளை குண்டன் உண்மையைச் சொல்லி.. அண்ணன் மீது பாசம் வைச்சிருந்த அந்தத் தங்கையின் மகிழ்ச்சி என்பது மறுங்கடிக்கப்பட்டிடுமோ என்ற ஆதங்கமே அங்கு நிஜத்திலும் இருந்தது. கொலசிப்பில.. ஸ்கூல் அட்மிசன் ரெஸ்ரில பாஸ் பண்ணிறது என்றது.. ஊரைப் பொறுத்தவரை அந்த வயதுக்குரிய சாதனைகள்.. மிகவும் மகிழ்ச்சிக்குரிய கணங்கள்..இல்லையா. அந்தச் சூழலை பாதுகாக்க நான் விளைய குண்டன் அதிலின்றும் மாறுபட்டிட்டுவானோ.. என்ற ரீதியில் தான் அதை எழுதினேன். பெரியவர்களை விட.. சிறியவர்கள்.. தங்கள் அன்புக்குரியவர்களின் இழப்பைக் கண்டு.. கேட்டு.. அடையும் வேதனையும் பாதிப்பும்.. வாழ்நாள் பூராவும் அவர்களில் தாக்கம் செய்யவல்லது. இதனை நான் அனுபவ ரீதியிலும் கண்டிருக்கிறேன். இந்தக் கதை கூட அந்தப் பிரதிபலிப்புக்களில் ஒன்று தான். இன்றும் கூட அன்று நடந்த சம்பவங்கள் கிட்டத்தட்ட அப்படியே நினைவுகளில் பதிந்துள்ளன. ஆனால் சமீப 5 ஆண்டுகளில் நடந்த பல விடயங்கள்.. மறந்துவிட்டது... அல்லது மறக்கப்பட வேண்டியது என்றாகி விட்டது. :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க சொல்வது மிகச் சரியான காரணம், கொலசிப்பில் சித்தி அடைவது மிக கஷ்டம், அது பல பெற்றோர் & மாணவர்களின் கனவு.

கபிலனின் தங்கை, அம்மா & அப்பாவிற்கு எவ்வளவு சாந்தோஷத்தில் இருந்திருப்பார்கள் என்று விளங்குகிறது. அதே நேரம் இந்த பாஸ் பண்ணின தங்கையின் செய்தியை அவனுக்கு எப்படி தெரிவிப்பது என்று அவர்களின் மனநிலை, அதை அவர்கள் வெளிப்படையாவே உங்களிடமும் கேட்டுவிட்டார்கள் எங்கே கபிலன் என்று.

அந்த நேரம் போய் குண்டன் இந்த செய்தியை சொல்லியிருந்தால், அந்த வீட்டின் சூழ் நிலையே அடியோடு மாறியிருக்கும்.

நீங்க எழுதிய மாதிரி அவனின் தங்கைக்கு அன்றைய தினம் மனதில் அழியாமல் பதிச்சிருக்கும், அவா பாஸ் பண்ணியதே கன பேருக்கு தெரியாம போய், பாஸ் பண்ணிட்டம் என்று நினைக்கும் போது மனதில் வரும் ஒரு சக்தி, இன்னும் படித்து முன்னேறனும், இல்லாமல் போயிருக்கும். பலர் வாழ்த்த கொடுத்து வைத்திருக்கனும், அது மிகப் பெரிய சக்தி முன்னேறுவதற்கு.

வயது வந்த நாங்க கூட மனேஜர் சும்மா நீ செய்தது நல்லா இருக்கிடா என்று தட்டி கொடுக்கும் போது, எப்படி இருப்பம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்க சொல்வது மிகச் சரியான காரணம், கொலசிப்பில் சித்தி அடைவது மிக கஷ்டம், அது பல பெற்றோர் & மாணவர்களின் கனவு.

கபிலனின் தங்கை, அம்மா & அப்பாவிற்கு எவ்வளவு சாந்தோஷத்தில் இருந்திருப்பார்கள் என்று விளங்குகிறது. அதே நேரம் இந்த பாஸ் பண்ணின தங்கையின் செய்தியை அவனுக்கு எப்படி தெரிவிப்பது என்று அவர்களின் மனநிலை, அதை அவர்கள் வெளிப்படையாவே உங்களிடமும் கேட்டுவிட்டார்கள் எங்கே கபிலன் என்று.

அந்த நேரம் போய் குண்டன் இந்த செய்தியை சொல்லியிருந்தால், அந்த வீட்டின் சூழ் நிலையே அடியோடு மாறியிருக்கும்.

நீங்க எழுதிய மாதிரி அவனின் தங்கைக்கு அன்றைய தினம் மனதில் அழியாமல் பதிச்சிருக்கும், அவா பாஸ் பண்ணியதே கன பேருக்கு தெரியாம போய், பாஸ் பண்ணிட்டம் என்று நினைக்கும் போது மனதில் வரும் ஒரு சக்தி, இன்னும் படித்து முன்னேறனும், இல்லாமல் போயிருக்கும். பலர் வாழ்த்த கொடுத்து வைத்திருக்கனும், அது மிகப் பெரிய சக்தி முன்னேறுவதற்கு.

வயது வந்த நாங்க கூட மனேஜர் சும்மா நீ செய்தது நல்லா இருக்கிடா என்று தட்டி கொடுக்கும் போது, எப்படி இருப்பம்

சரியான உணர்வுப் புரிதலும்.. பகிர்தலும்..! :):icon_idea:

எங்கே மிகுதி, வேலைப் பழு?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்கே மிகுதி, வேலைப் பழு?

கொலிடே முடிஞ்சு.. யுனி தொடங்கீட்டு. தலையிடியும் தொடங்கிட்டு.. அதனால.. அது குறையும் வரைக்கும்.. வேற சிந்தனை வராது. உறவுகள்.. கொஞ்சம் பொறுமை காக்க தாழ்மையோடு வினவுகின்றேன்.

நிச்சயமா.... நண்பனை பாதி வழியில அம்போ என்று.. விடமாட்டன்..! :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமா.... நண்பனை பாதி வழியில அம்போ என்று.. விடமாட்டன்..! :)

http://www.youtube.com/watch?v=Fyt3sV6J0_A&feature=related

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குண்டனின் முகம் சிவந்த குழையல்.. அவன் தந்த பதில்.. அந்த சூழல் என் நினைவில் நிழலாடவிட்ட பாடல் வரிகள்.. என்று மனம் எங்கோ எல்லாம் போய் மீண்டு வர.. என்ன கடுமையா யோசிக்கிறா என்ற நண்பனின் கேள்வி மீண்டும் நிஜத்தின் அருகில் என்னைக் கொண்டு வந்து நிறுத்தியது.

நான் அப்படி ஒன்றும் பெரிசா யோசிக்கல்ல.... உனக்கும் காயத்திரிக்கும் இடையில.. ஏதேனும் இருக்கோ என்று நேரிடையாவே கேட்டன். அவன் அடிக்காத குறையா.. அவளுக்கு பின்னால எத்தினை பேர் திரியுறாங்கள்.. உனக்கும் தெரியும் தானே. நீ அதில நானும் ஒன்று என்று நினைச்சியோ என்றான் கண்களில் கோபம் தெறிக்க..!

இல்ல.. வீடெல்லாம் தெரிஞ்சு வைச்சிருக்கிறா.. அது தான்... சும்மா கேட்டன்.. என்று நான் சமாளிக்க முயல.. அவன்.. முந்தி ஆண்டு 5 கொலசிப்புக்கு ஆனப்பந்தியடி.. பொன்னாரம்மா ரீச்சரிட்ட போற காலத்தில இருந்து அவளை எனக்குத் தெரியுண்டா. அந்த வகையான.. ஒரு அறிமுகமே தவிர.. வேற ஒன்றும் எங்களுக்க இல்ல. நீ கடுமையா போட்டு மூளையக் குடையாத என்றான் நக்கல் அதிகம் தொனிக்க..!

அப்ப அவளை விட வேற யாராவது.. உன் குட்டி இதயத்தின் இதய அறைச் சுவரோரமா.. உட்கார்ந்திருக்கினமோ.. என்று நானும் நக்கலைப் பதில் கேள்வியாக்க..

அவன் கொஞ்சம் சீரியஸாகி.. நீ நக்கலா கேட்கிறியோ.. உண்மையா கேட்கிறியோ தெரியா.. எனக்கு ஒரு மச்சாள் இருக்கிறாள்.. அவள் மேல எனக்கு அன்பு அதிகம் என்றான்.. சிரித்தபடி.

அப்படியா.. சங்கதி.. எந்த மச்சாள்.. அம்மன் கோவில் வீதி மச்சாளோ.. இல்ல வேறையோ என்று கேட்க..

அதெப்படி உனக்குத் தெரியும்.. அம்மன் கோவிலடி மச்சாள் பற்றி என்று அவன் வியப்போடு என்னைக் கேட்டான்.

நீ தானே முந்தி சிங்கராஜரட்ட நல்லூரடிக்கு ரியூசனுக்குப் போகேக்க.. சொன்னா.. மறந்திட்டா போல.. என்று அவன் சொன்னதையே நான் அவனுக்கு ஞாபகப்படுத்தி முடிக்க..

அட அதையும் உன்னட்ட உளறி வைச்சிட்டனா.. என்று சுயவியப்போடு முடித்தான்.

உதுதான் சொல்லுறது அளந்து அவிழ்க்கோனும் எண்டு.. பதிலுக்கு நான் நக்கல் அடிக்க..

சொல்லுவாடா.. இதுவும் சொல்லுவா இன்னும் சொல்லுவா என்று அவன் முடிக்க... என் வீடும் வந்து சேர்ந்தது.

வீட்டின் கேற்றடியில் நின்றபடி.. நாங்கள் இருவரும் கொஞ்ச நேரம் உரையாடிக் கொண்டிருக்க எங்கள் வீட்டில் இருந்து ஒரு இரண்டு வீடு தள்ளி இருந்த பக்கத்து வீட்டில் ஏல் படிக்க என்று வெளியூரில இருந்து வந்திருக்கிற அண்ணாமார்.. இந்தப் பாடலை உரக்க ஒலிக்க விட்டிருந்திச்சினம்..

அதைக் கேட்டுவிட்டு.. குண்டன் கேட்டான்.. என்ன அண்ணமார் முன் வீட்டு முத்தேவிகளுக்கு தூதுவிடினமோ என்று..

அவனின் கேள்வியிலும் ஒரு நியாயம் இருக்கவே செய்தது. காரணம்.. அந்த அண்ணாமார் வீட்டுக்கு முன் வீட்டில் இருந்த அன்ரிக்கு 3 அழகான பெண் பிள்ளைகள் மட்டும் தான். அவா எங்களோடு மிக நெருக்கமானவ என்ற படியால் எனக்கும் அவையை நல்லாத் தெரியும். ஆனால் அவைட வீட்டுக்குப் போனதில்ல.

அதுவும் அந்த வீட்டு அன்ரியின்ர பிள்ளைகளோட என் அறிமுகம் கொஞ்சம் சுவாரசியமானதும் கூட..

ஒரு முறை.. அந்த வீட்டு அன்ரி.. என்னை எங்கள் வீட்டுக்கு முன்னால் நின்று அழைக்க.. நான் ஓடிப் போய் என்ன அன்ரி எண்ட... அவா அம்மா இருக்கிறாவோ என்று கேட்க.. நான் அம்மா இல்ல கோயிலுக்கு போயிட்டா என்றன். அவா ஒரு அழைப்பிதழை என்னிடம் தந்து அம்மாட்ட பத்திரமா.. மறக்காமல் கொடுங்கோ என்றுவிட்டு போய் விட்டா.

அப்ப எல்லாம் யாரேனும் ஏதேனும் தந்தால்.. அதைப் பத்திரமா வைச்சிருந்து அம்மாட்ட கையளிக்கிற வயசு. அதனால அம்மா கோயிலால வரும் வரை அதை பாதுகாத்து.. அம்மா வந்த உடன கேற்றடியில வைச்சு.. அதைக் கையளிக்க.. அம்மா கேட்டா யார் தந்தது என்று. நான் அந்த வீட்டைக் காட்டி அந்த அன்ரி என்ற அம்மா மெளனமாகி ஒன்றும் சொல்லாமலே அந்தக் காட்டோட வீட்டுக்க போயிட்டா.

ஒரு இரண்டு நாள் கழிச்சு.. என்னையும் எங்க வீட்ட வந்திருந்த என் வயதை ஒத்த உறவினனையும் அழைச்சு.. குளிப்பாட்டி.. வெளிக்கிடுத்தி.. ஒரு என்வலப்பையும் தந்து விட்டா அம்மா.. இதைக் கொண்டு போய் அந்த அன்ரிட்ட கொடுத்திட்டு வாங்கோ என்று. அம்மாக்கு இப்ப வர நேரமில்லையாம் ஆறுதலா வாறதாம் என்று சொல்லி விடச் சொல்லியும் விட்டா.

சரி என்று நானும் அந்த உறவினனும் அந்த அன்ரி வீட்ட போய் கேற்றடியில நின்று கொண்டு கேற்றைத் தட்டினம். அந்த அன்ரி வீட்டு இரண்டு பொம்மேரியன் நாய்கள் தான் முன்னால ஓடி வந்து எங்களைப் பார்த்துக் குரைச்சுக் கொண்டு நின்றன. நாங்களோ பயத்தில நடுங்கிக் கொண்டு ஓடிறதுக்கு ரெடியா நிண்டம். நாய்கள் குரைக்கிற சத்தத்தைக் கேட்டிட்டு.. அந்த அன்ரி ஓடி வந்து.. நாய்களை விரட்டிட்டு.. என்ன பிள்ளையள்.. என்ன விசயமா வந்தனீங்கள் என்று கேட்க..

நான் சொன்னன்.. அம்மா இதை உங்களிட்ட கொடுக்கச் சொல்லி தந்தவா என்று கொண்டு வந்திருந்த என்வலப்பை நீட்டினன். அவா என்வலப்ப வேண்டிப் பார்த்திட்டு.. நீங்க இதை என்னட்ட கொடுக்காதேங்கோ.. அதோ அவாட்ட கொடுங்கோ என்று சொல்லி வீட்டுக்க கூட்டிக் கொண்டு போனா. நாங்கள் இருவரும்.. பொம்மேரியன் நாய்க்கு பயப்பிடுறதா.. உள்ள பட்டுச் சேலை கட்டி.. நகை எல்லாம் போட்டு.. சோடிச்சிட்டு.. இருக்கிற அந்த பொம்பிளப் பிள்ளையைப் பார்க்கிறதா என்ற இரண்டும் கெட்டான் நிலையில உள்ள போய் நேரா.... அந்த என்வலப்ப அந்த பொம்பிளப் பிள்ளைட்ட கொடுத்தம். அவாவும் அதை நன்றி சொல்லி வாங்கிக் கொள்ள.. அந்த அன்ரி எங்களை உட்கார வைச்சு.. ஐஸ்கிரீம் கப்பில.. பாயாசமும்.. ஒரு தட்டில பலகாரங்களும் கொண்டு வந்து தந்தா சாப்பிடச் சொல்லி.

இதென்னடா அநியாமா இருக்கு.. ஒரு என்வலப்ப கொடுக்க வந்த நமக்கு இவ்வளவு உபசரிப்பா இருக்கே.. என்று மனசுக்க நினைச்சிட்டு.. நான் என் உறவினனைப் பார்க்க அவன் என்னைப் பார்க்க.. தந்த உணவு வகைகள் எங்களைப் பார்க்க.. இதைக் கண்டிட்டு.. அந்த அன்ரி சொன்னா.. நாங்க உங்கட சொந்தம் தான்.. பயப்பிடாம சாப்பிடுங்கோ என்று. அவா அப்படிச் சொன்னதும் மனதில் அவையோட ஒரு நெருக்கமும்... நம்பிக்கையும் எழ...

சரி என்று தந்ததைச் சாப்பிட்டிட்டு.. நன்றி அன்ரி. நாங்கள் போயிட்டு வாறம் என்று நடையக் கட்ட தொடங்க.. அவா.. இரண்டு பேர் கையிலும்.. ஒவ்வொரு அழகான கலர் கடதாசி பாக்கை திணிச்சு விட்டா.

நாங்கள் அதையும் காவிக் கொண்டு.. பொம்மேரியன் நாயட்ட இருந்து தப்பிச்சம்டா என்று வீட்ட நோக்கி நடையக் கட்டினம். போற வழில.. அந்த கடதாசிப் பைகளில... ஏதோ எழுதி இருக்க நான் அதை வாசிச்சன். பூப்புனித நீராட்டு விழா என்று எழுதி இருந்திச்சு. நமக்கு அப்ப அதன் அர்த்தம் புரியல்ல.. அதைப் பற்றி அறியிற ஆவல் எழ.. வீட்ட ஓடிப் போய் அம்மாட்ட அந்தப் கடதாசி பைகளைக் கொடுத்திட்டு.. நான் கேட்டன்.. அங்க என்னம்மா செய்தவ... அந்தப் பொம்பிளப் பிள்ளையை சோடிச்சு வைச்சிருக்கினம் என்று.

அதற்கு அம்மா சொன்னா.. அவை சாமத்திய வீடு செய்தவை என்று. அப்ப ஏன் பூப்புனித நீராட்டு விழா என்று போட்டிருக்கு என்று கேட்க.... அது அதுக்கு ஒத்த சொல் என்று சொல்லி முடிச்சாங்க அம்மா. சரி என்று தலையாட்டிட்டு நாங்கள் போயிட்டம்.

இப்ப.. நாங்களும் வளர்ந்திட்டம்.. அந்தப் பிள்ளையளும் வளர்ந்திட்டினம்.. இந்த நிலையில.. குண்டனின் கேள்வியோடு.. அந்தச் சாமத்திய வீட்டுக்கு அறியாமல் போனதும்.. அப்போ கண்ட அந்தப் பொம்பிளப் பிள்ளையின் முகமும் ஞாபகத்துக்கு வர.. அட எங்கிருந்தோ வந்து நம்ம ஆக்களுக்கே தூதுவிடுறாங்க.. கில்லாடிப் பசங்க தான் என்று மனதில் ஒரு வித ஆதங்கம் எழ..

ஆமாண்டா குண்டா.. அவை இப்படித்தான் ஒவ்வொரு நாளும் பின்னேரத்தில பாட்டை உரக்கப் போட்டிட்டு.. வீட்டு கேற்றடில நின்று நல்லா லுக்கு விடினம் என்று சொல்லி முடிச்சன்.

அப்ப கொஞ்சம் கவனிக்கத்தான் வேண்டி இருக்கு எண்டான் குண்டன் பதிலுக்கு. நானும்.. எல்லாம் வயசுக் கோளாறு.. ஊர் விட்டு ஊர் வந்திருக்கினம் எல்லோ.. கேட்க யாருமில்ல என்ற பிரச்சனை போல..எண்டன்.

அவனும் ம்ம்... என்று என் கருத்தை ஆமோதிப்பவனாய்.. சரி.. அதைப் பிறகு பார்த்துக் கொள்ளுவம்.. இப்ப இருட்டுது.. அம்மா தேடப் போறா என்று சொல்லி நடையக் கட்ட ஆரம்பித்தான்... பாடல் வந்த வீட்டை நோக்கி திரும்பிப் பார்த்தபடி...!

(அப்புறம் என்ன நடந்திச்சு என்று அப்புறமா வந்து சொல்லுறம்.. பொறுமை காக்க வேண்டிக் கொண்டு. நன்றி இதுவரை காத்த பொறுமைக்கு.) :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பூப்புனித நீராட்டு விழா - இது வைச்சி அக்கா என்னை சின்னனில் கிண்டல் பண்ணுவா,

இப்பதான் வீரம் தாண்டி காதலுக்கு வாறிங்கள், வாங்க வாங்க, இனி ஜாலியா வாசிக்கலாம், ஆனாலும் அப்பவே வெளிக்கிட்டியல் காதல் எதிர்ப்பு கொடியை, தொடருங்க

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆனாலும் அப்பவே வெளிக்கிட்டியல் காதல் எதிர்ப்பு கொடியை, தொடருங்க

அப்பவே என் கொம்பாஸ் பொக்சில.. விவேகானந்தரும்.. பிள்ளையாரும் தான் இருப்பினம். சரஸ்வதி நடுவில..!

ஒரு தடவை.. நியூ சயன்ஸ் சென்ரருக்கு பக்கத்தில இருந்தவர்.. ஒரு தாடி வைச்ச.. வர்த்தகம் படிப்பிக்கிற சேர்.. (அவர் எங்களோட நல்ல ஒட்டு.. இப்ப பெயர் மறந்திட்டு... (விஸ்வர் என்று நினைக்கிறன்) ) அவர் பார்த்திட்டு சொன்னார்.. இப்படியே விவேகானந்தரையும் பிள்ளையாரையும் காவிக் கொண்டு திரி.. கடைசியில.. அவையப் போலவே வரப்போறா என்று. இப்ப கொஞ்சம் கொஞ்சமா அதுதான் நடந்தேறிக் கிட்டு இருக்குது. அந்த வகையில் காதல் எதிர்ப்பு சங்கம் அமைக்கிறது என்றது பிளட்டில ஊறின மாற்றர்.. உடையார்..!

அப்படியே இந்தச் செய்தியையும் படிங்க.. எங்க சங்கத்தின் தேவை நாட்டுக்கு எவ்வளவு அவசியம் என்றது புரியும். :lol::D:icon_idea:

post-2989-0-12605300-1317728464_thumb.jp

Edited by nedukkalapoovan

இசையும் கதையும் நன்றாக இருக்கிறது.

தொடருங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.