Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்தாவை கைது செய்ய அமெரிக்காவில் பேரணி -ருத்திரா அதிரடி நடவடிக்கை

Featured Replies

மகிந்தாவை கைது செய்ய அமெரிக்காவில் பேரணி -ருத்திரா அதிரடி நடவடிக்கை

tgte1.jpg

அமெரிக்கா வரும் மகிந்தவை கைது செய்யவும் அவர் புரிந்த இன படுகொலைக்கு எதிராக ஆர்பாட்டம் நடத்த

மக்களை திரளுமாறு அழைப்பு விடுக்க பட்டுள்ளது .

ஐ.நா வரும் மகிந்தா இராஜபக்சேயின் வருகையை முன்னிட்டு

அரசியல் அடிப்படையிலும், சட்டரீதியிலுமான ஆர்ப்பாட்டப் பேரணி

ஐக்கிய நாடுகள் சபையில் சொற்பொளிவாற்ற வரும் மகிந்தா இராஜபக்சேயின் நியூயோக் வருகையை முன்னிட்டு அரசியல் அடிப்படையிலும், சட்டரீதியிலுமான எதிர்ப்பைக் காட்டும் முகமாக நாடுகடந்த தமிழீழ அரசால் ஓர் ஆர்ப்பாட்டப் பேரணி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

வட அமெரிக்காவிலுள்ள அத்தனை உறவுகளையும், அமைப்புக்களையும், சங்கங்களையும், விளையாட்டுக் கழகங்களையும், மற்றும் பொது அமைப்புக்களையும் எம்முடன் இணைந்து இந்த ஆர்ப்பாட்டப் பேரணியை வெற்றிகரமாக நிறைவேற்ற உதவுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

காலம் :வெள்ளிக்கிழமை, செப்ரெம்பர் 23 ம் திகதி, 2011

நேரம் : காலை 9:00 மணி தொடக்கம் மாலை 5:00 மணிவரை

இடம் : ஐக்கிய நாடுகள் சபை முன்பாக, நியூயோக்

போர்குற்றம் செய்தவர்களை, மனிதாபிமானத்தை மதிக்காதவர்களை, இன அழிப்பைச் செய்தவர்களைத் தண்டிக்கும் காலம் இது. நீதி வேண்டும் உலகம் நீதி பெற்றுத்தர, குற்ற்வாளிகளைக் கூண்டிலேற்ற எம்மவர் குரல் தணியாது ஒலிக்கவேண்டும். எமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும்நாம் தவறவிடாது பயன்படுத்த வேண்டும்.

இவையெல்லாம் நிறைவேற நாம் ஒவ்வொருவரும் எமது பங்களிப்பைத் தவறாமலும், தப்பாமலும், தாமதியாமலும், தயங்காதும் தரவேண்டும். எமது தலையாய கடமையாக் எண்ணி எமக்கு ஆதரவைத் தந்து இந்த ஆர்ப்பாட்டப் பேரணியை வெற்றிகரமாக நிறைவுசெய்ய வருமாறு உங்களை அன்புடன் வேண்டுகிறோம்.

சர்வதேசம் உன்னிப்பாக பார்க்கும் இந்நிகழ்வு எமது உணர்வை எடுத்துக் காட்டும் விதத்தில் அமையவேண்டும். இந்தப் பேரணியின் வெற்றி உங்கள் ஒவ்வொருவருடைய கையிலும்தான் தங்கியிருகிறது என்பதை மற்ந்துவிடாதீர்கள்.

வாகன வசதி செய்தவுடன் அதன் விபரத்தை உங்களுக்குஅறியத் தருவோம். தொடர்புகளுக்கு: தொ.இல: 416 829 1362 அல்லது 416 291 7474

கணனி: r.sivalingam@tgte.org

கனடாவில் உள்ள அமைப்புக்களுக்கும், சங்கங்களுக்கும், விளையாட்டுக் கழகங்களுக்கும், மற்றும் பொது அமைப்புக்களுக்குமான ஓர் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை பி.ப. 3:00 மணிக்கு நடைபெறும். ஒவ்வொரு அமைப்பிலிருந்தும் இருவரை வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

இடம்:- நல்லூர் கந்தசாமி கோவில் மண்டபம்

20 நகெட் அவென்யூ, ஸ்காபரோ

(20 nugget avenue Scarborough – north-east of McGowan and Sheppard)

காலம்: ஞாயிற்றுக்கிழமை செப்டெம்பர் மாதம் 11 ம் நாள், 2011

நேரம்: – பிற்பகல் 3:00 மணி

அன்புள்ள,

கலாநிதி ராம் சிவலிங்கம்

துணைப் பிரதமர்

Regards

Raj Suthan

“Lets voice for Tamil Freedom”

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இணைப்பிற்கு, இப் போரட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

லண்டன் சரித்திரம் இங்கே திரும்புமா?

ஒன்றுபட்ட போராட்டமாய் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தாவை கைது செய்ய அமெரிக்காவில் பேரணி -ருத்திரா அதிரடி நடவடிக்கை

tgte1.jpg

அமெரிக்கா வரும் மகிந்தவை கைது செய்யவும் அவர் புரிந்த இன படுகொலைக்கு எதிராக ஆர்பாட்டம் நடத்த மக்களை திரளுமாறு அழைப்பு விடுக்க பட்டுள்ளது .

இந்த திரி யாருமே கேட்பாரற்று அனாதையாக ஈழம் போல காட்சியளிக்கிறதே...

கவிதைகளுக்கும், கட்டுரைகளுக்கும், 'குல்மா'செய்திகளுக்கும், யாழில் இருக்கும் வரவேற்பு, ஏன் இதற்கு இல்லை?

நம்பிக்கையீனமா?

.

இந்த திரி யாருமே கேட்பாரற்று அனாதையாக ஈழம் போல காட்சியளிக்கிறதே...

கவிதைகளுக்கும், கட்டுரைகளுக்கும், 'குல்மா'செய்திகளுக்கும், யாழில் இருக்கும் வரவேற்பு, ஏன் இதற்கு இல்லை?

நம்பிக்கையீனமா?

.

உண்மை...

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரி யாருமே கேட்பாரற்று அனாதையாக ஈழம் போல காட்சியளிக்கிறதே...

நம்பிக்கையீனமா?

நன்றி ராஐவன்னியன் & வீணா, மீண்டும் கள உறவுகளின் பார்வைக்கு கொண்டு வந்ததிற்கு, ஊர் புதினத்தில் இருந்த படியால் பலர் பார்த்திருக்க வாய்ப்பில்லை,

எங்கள் மண்ணில் அல்லது நிகழ்வில் போட்டால் நல்லது என்று நினைக்கிறேன்.................

  • கருத்துக்கள உறவுகள்

ருத்திரகுமாரன் சும்மா ஒன்றும் செய்யாமல்... சும்மா இருக்கிறார், என்று கவலைப்படுபவர்கள் கண்ணிலும் இந்தத் தலைப்பு படாததுதான்... அதிசயம்.

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தாவை கைது செய்ய அமெரிக்காவில் பேரணி -ருத்திரா அதிரடி நடவடிக்கை

tgte1.jpg

அமெரிக்கா வரும் மகிந்தவை கைது செய்யவும் அவர் புரிந்த இன படுகொலைக்கு எதிராக ஆர்பாட்டம் நடத்த

மக்களை திரளுமாறு அழைப்பு விடுக்க பட்டுள்ளது .

சர்வதேசம் உன்னிப்பாக பார்க்கும் இந்நிகழ்வு எமது உணர்வை எடுத்துக் காட்டும் விதத்தில் அமையவேண்டும். இந்தப் பேரணியின் வெற்றி உங்கள் ஒவ்வொருவருடைய கையிலும்தான் தங்கியிருகிறது என்பதை மற்ந்துவிடாதீர்கள்.

குறிப்பாக நா.க.த. அரசின் சகல பா. உறுப்பினர்களும் கலந்து கொள்ள வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

குறிப்பாக நா.க.த. அரசின் சகல பா. உறுப்பினர்களும் கலந்து கொள்ள வேண்டும்

வாத்தியார், நாடு கடந்த அரசை விமர்சிக்கும்...

நெல்லையன், ஆசான், சித்தன், ஆராவமுதன் போன்ற யாழ்கள உறுப்பினர்களும் இந்த தலைப்பில் கருத்து எழுதாமல்... இருக்கும் மர்மம் தான் விளங்கவில்லை. நாடு கடந்த அரசின் பிரதமர் உருத்திரகுமாரன் முந்தி விட்டார் என்று... பயப்படுகிறார்கள் போலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

யார் தலைமை தாங்குகிறார்கள் என்பதல்ல யாருக்கு எதிராக நாம் போர்க்கொடி உயர்த்துகிறோம் என்பது தான் முக்கியம்.எமது மக்களை கொன்று குவித்தவனுக்கு எதிராக எமது எதிர்ப்பைக் காட்ட நாம் அணிதிரள்வோம்.

சரியாகச் சொன்னீர்கள் நுணாவிலான்.

பலர், உருத்திரகுமாரனில் குறை கண்டு பிடிப்பதையே... தொழிலாக வைத்துள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சரியாகச் சொன்னீர்கள் நுணாவிலான்.

பலர், உருத்திரகுமாரனில் குறை கண்டு பிடிப்பதையே... தொழிலாக வைத்துள்ளார்கள்.

தமிழ் சிறி ஓற்றுமையே பலம் என்பதை எடுத்துக்காட்ட விஞ்ஞானிகள் ஈழ தமிழ் இனத்தை ஆரய போகின்றார்கள்

முன்னம் புலி புலி என்று கிலி பிடிச்சு திரிந்தார்கள் குறை கூறிக்கொண்டு,

இப்ப மெல்ல அவல் வேனும்....வைக்கல் பட்டறை ....

  • கருத்துக்கள உறவுகள்

...ஓற்றுமையே பலம் என்பதை எடுத்துக்காட்ட விஞ்ஞானிகள் ஈழ தமிழ் இனத்தை ஆரய போகின்றார்கள்

.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யார் தலைமை தாங்குகிறார்கள் என்பதல்ல யாருக்கு எதிராக நாம் போர்க்கொடி உயர்த்துகிறோம் என்பது தான் முக்கியம்.எமது மக்களை கொன்று குவித்தவனுக்கு எதிராக எமது எதிர்ப்பைக் காட்ட நாம் அணிதிரள்வோம்.

போராட்டம் வெற்றி பெற தமிழக மக்களின் வாழ்த்துக்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.