Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறுதிப் போரில் ஐ.நா நடந்து கொண்டவிதம் சரியானதா? – மீளாய்வு செய்ய அதிகாரி நியமனம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இறுதிப் போரில் ஐ.நா நடந்து கொண்டவிதம் சரியானதா? – மீளாய்வு செய்ய அதிகாரி நியமனம்!

Published on September 14, 2011-9:33 am

இலங்கையில் நடந்த இறுதிப் போரின் போது ஐக்கிய நாடுகள் சபை நடந்துகொண்ட விதம் குறித்து மீளாய்வு செய்வதற்கான அதிகாரி ஒருவரை பொதுச் செயலாளர் பான் கீ மூன் நியமித்துள்ளார்.

ஐ.நா. சனத்தொகை நிதியத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளரான தொறயா அகமட் ஓபெய்ட் என்ற அதிகாரியே இதற்கென நியமிக்கப்பட்டுள்ளார் என்று ஐ.நா. செயலகம் அறிவித்துள்ளது. பொதுச் செயலாளர் பான் கீ மூனினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

பான் கீமூன் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கையில், இலங்கையின் போரில் அதிகளவு பொதுமக்கள் கொல்லப்படுவதற்கான காரணங்களில் ஒன்றாக ஐ.நா. போது வலயத்தில் இருந்து வெளியேறியமையும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

அத்துடன் போரின் போது ஐ.நா. நடந்துகொண்ட விதம் குறித்து மீளாய்வு செய்யப்படவேண்டும் என்றும் அறிக்கை பரிந்துரைத்திருந்தது. அதன் அடிப்படையிலேயே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

நிபுணர் குழுவின் அறிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கு முன்னகர்த்திய கையோடு இந்த நியமனத்தையும் பான் கீ மூன் வழங்கி உள்ளார். ஓபெய்ட் தனது பணிகளை விரைவில் ஆரம்பிப்பார் என்று ஐ.நா. அறிவித்தள்ளது.

http://www.saritham.com/?p=34400

  • கருத்துக்கள உறவுகள்

காற்று மாறுகின்றது போலத்தான் கிடக்கின்றது!

பொறுத்திருந்து பார்ப்போம்!

இவ்வளவு உயிர்கள் அழியப்போகிறது என்று தெரிந்தும் பாதுகாப்பு என்ற காரணத்தைச் சொல்லி விலகிச் சென்ற ஐ நா இப்போது என்ன? அப்படி நடந்துகொண்டது சரியா என விசாரிப்பது.

  • கருத்துக்கள உறவுகள்

கதை கதையாம்...! அல்பமாம்...!!

.

ஒரு ஊரில் அந்தணர் ஒருவர் இருந்தார். அவருக்கு பல வருடங்களாக குழந்தையே இல்லாமலிருந்ததால், அவரும் அவரது மனைவியான லட்சுமியும் போகாத கோயில்கள் இல்லை, வேண்டாத தெய்வங்கள் இல்லை. பலனில்லாமல் ஒரு குழந்தைக்காக பல காலம் தவமிருந்தனர் .ஆனாலும் அவர்களது வீட்டில் குழந்தை இல்லாத நிலையே தொடர்ந்து நீடித்தது.

இந்த சமயத்தில், ஒரு நாள் வயலுக்குப் போய்விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த அந்தணர், தான் வந்து கொண்டிருந்த பாதையோரம் ஒரு கீரிப்பிள்ளை பாம்புடன் சண்டையிட்ட காயங்களோடு துவண்டு கிடப்பதைக் கண்டார். அந்த கீரிப்பிள்ளைக்கு மனமிரங்கி "ஐயோ பாவம், சின்னஞ்சிறு ஜீவன்! இதன் காயத்திற்கு மருந்திடாவிட்டால், அது இறந்து போகக் கூடும்" என்றெண்ணி தன வீட்டுக்கு அதை தூக்கி வந்து, அதன் காயங்களுக்கு பச்சிலை வைத்துக் கட்டி அன்பாக கவனித்து வந்தார்.

நாட்கள் நகர்கின்றன. பிள்ளையில்லாத வீட்டில் கீரி, பிள்ளையானது..துள்ளி விளையாடியது...அவ்வீட்டில் மகிழ்ச்சி பொங்கியது. அந்தணரும், அவரது மனைவியும், கீரிக்கு 'லட்சுமணன்' என்று ஆசை ஆசையாய் பெயரெல்லாம் சூட்டி வளர்த்து வந்தனர். அவர்கள் குழந்தை வரம் வேண்டி எங்கு சென்றாலும் இப்போது கீரிப்பிள்ளையும் உடன் சென்றது. அந்தணர் வயலுக்குப் போனால், லட்சுமிக்கு துணையாய் வீட்டில் இருந்து கொண்டது கீரிப்பிள்ளை.

பழகப்பழக, உற்ற துணையாய் அந்த தம்பதிகளின் வாழ்வில் சின்னதாய் ஒரு சுவாரசியம் சேர்த்துக் கொண்டிருந்தது அந்த கீரிப்பிள்ளை. "லட்சுமணா" என்றழைத்து விட்டால் போதும், கீரி எங்கிருந்தாலும் தலை நீட்டி எட்டிப்பார்க்கும் அளவிற்கு அந்தணர் அதை பாசமும் பரிவுமாய் பழக்கி வைத்திருந்தார்.

வராது வந்த மாமணி போல, கிருஷ்ணனின் சமந்தகமணி போல, அந்த அந்தண தம்பதிகள் செய்த தவத்தின் பலனோ, இல்லை கீரி வீட்டுக்குள் நுழைந்த நல்ல நேரமோ, மிக நீண்ட காத்திருப்பின் பலனாக அந்தணரின் மனைவி லட்சுமி கர்ப்பவதி ஆனார்.

பத்து திங்கள் கழிந்த பின், அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. பல கோயில்களுக்கு கால் தேய நடையாய் நடந்ததன் பலனாகப் பிறந்த குழந்தை என்று எண்ணியதால், அந்தணரும் அவரது மனைவியும் அந்தக் குழந்தையின் மீது தங்களது உயிரையே வைத்திருந்தனர்.

கீரிப்பிள்ளை அந்தக் குழந்தைக்கு, அண்ணனானது.

அக்கம் பக்க வீடுகளில் இருந்தோரெல்லாம் "இதுநாள் வரையிலும் நீங்கள் கீரிப்பிள்ளை வளர்த்ததெல்லாம் சரி தான், இனி அதை காட்டில் விட்டுவிடுங்கள், கைக் குழந்தையை வைத்துக் கொண்டு இப்படி ஒரு காட்டுவிலங்கை வளர்த்து வருவது அத்தனை உசிதமானதல்ல, கீரிப்பிள்ளை பாம்பையே எதிர்த்து சண்டையிட்டு வெல்லக் கூடியது...என்னதான் வீட்டில் வைத்து வளர்த்தாலும் அதன் புத்தி மாறிவிடுமா?" என்று சொல்லி அந்தண தம்பதிகளை குழப்ப ஆரம்பித்தனர்.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக குழந்தை வளர்ந்தது. ஒரு கோடைநாளில் அதற்கு ஒரு வயது முடியுந்தருவாயில், அதிகாலையில் அந்தணர் வழக்கம்போல தன குழந்தையைக் கொஞ்சிவிட்டு வயலுக்குப் போனார். அவரது மனைவி, தன் குழந்தைக்கு அமுதூட்டி அது தூங்கியதும் தொட்டிலில் கிடத்திவிட்டு வழக்கம் போல குடிக்க தண்ணீர் எடுத்து வர அருகாமைக் கிணற்றுக்குப் போனார்.

வழியில் அண்டை அசலில் "குழந்தை எங்கே?" என்று விசாரித்தவர்களிடம் "அவன் தூங்குகிறான், அவனது அண்ணன் லட்சுமணன் அவனுக்கு காவலிருக்கிறான் " என்று சொல்லியவாறு சென்றார் அந்த அம்மாள். "பெரிய காவல்தான்" என்று முகவாயில் கை வைத்து அதிசயித்துக் கொண்டார்கள் அந்த அண்டை அசலார் அனைவரும்.

அந்தம்மாள் வீடு வந்துசேரும் முன்னே, வயலுக்குப் போன அந்தணர் காலை உணவுக்காக வீட்டுக்கு வந்து கொண்டிருக்கும் பாதையில், முன் போலவே ஒரு கீரியைப் பார்த்தார். வெறும் கீரியை மாத்திரம் அல்ல, அந்தக் கீரி, ஒரு பாம்புடன் கடுங்கோபத்துடனும், வீரியமுடனும் சண்டையிடுவதைப் பார்த்தார் அவர்.

வீரியமிக்க அந்தச் சண்டையின் முடிவில், கீரி ஜெயிக்கிறது, வாயெல்லாம் ரத்தக் கரையோடு பாம்பைக் கொன்றுவிட்டு தலை தூக்கிப் பார்த்த அந்தக் கீரியை கண்டதும், அந்தணரின் மெல்லிய மனம் ரத்தம் கண்ட பயத்தில் சட்டென்று துணுக்குற்றுப் போனது .

"என் லட்சுமணன், இத்தனை பயங்கரமான கீரி இல்லை, அவன் வீட்டுக் கீரி! அவனுக்கு இத்தனை கோபமெல்லாம் வர சாத்தியமில்லை!" என்று தன் மனதுக்குள் பலவாறு சமாதானம் சொல்லிக் கொண்டே வீடு நோக்கி விடு விடுவென நடையை கட்டினார் அந்தணர்.

வேக வேகமாய் வீட்டுக்குள் நுழைந்த அந்தணரின் கண்ணில் பட்ட முதல் காட்சி...

குழந்தையின் தொட்டில் மீது, வாயெல்லாம் ரத்தக்கறை படிந்து போன கீரிப்பிள்ளை லட்சுமணனின் முகம் தான்.

வழியில் கண்ட கீரி & பாம்புச் சண்டையால் மனதை அலைக்கழித்த சில நிமிட பயம் மூளைக்கு ஏற, அந்தணர் அதீத உணர்வுக்கு ஆட்பட்டு, சுவற்றில் அலங்காரத்துக்கு சாற்றி வைத்திருந்த வாளை கண்ணிமைக்கும் நேரத்தில் உருவி எடுத்தார்...தொட்டில் ஊஞ்சல் கட்டையில் அமர்ந்திருந்த லட்சுமணனை ஒரே வெட்டில் இரண்டு துண்டுகளாகப் பிளந்தார்.

தன் எஜமானன், தான் தகப்பனாக கருதிய ஆருயிர் அந்தணரின் வாள் வீச்சில் வெட்டுப்பட்டு குற்றுயிரான கீரி "நீயா என்னைக் கொன்றது?" என திக்கித்து உறைந்த கண்களோடு உயிர் விட்டது.

தண்ணீர் குடத்தோடு வீட்டுக்குள் நுழைந்த லட்சுமி அம்மாள், நிகழ்ந்த சம்பவத்தால் அதிர்ந்து குடத்தை நழுவவிட்டார். மண்குடம் உடைந்து சிதற, கண்களில் நீர் சரமாய் வழிய, "என்ன காரியம் செய்தீர், என் அருமை கணவரே?" என அரற்றி அழுதாள்.

அதற்கு அந்தணர் பேசவில்லை, அவர் கண்கள் பேசின...

"ஒழிந்தாய், காட்டுக் கீரியே..! என் குழந்தையையா கடித்தாய்?" எனக் கூவியவாறு தாவி ஓடிப்போய் தொட்டிலில் கிடந்த குழந்தையை அள்ளி எடுத்தார். தகப்பன் வாடை கண்டு மெல்லச் சிணுங்கி விழித்த குழந்தை, முகமலர்ந்து சிரிக்கவும், உச்சந்தலையில் இடி விழுந்தது போன்று உணர்ந்தார் அந்தணர்.

"அப்போ குழந்தைக்கு ஒன்றுமில்லையா..?"

"அப்படியானால்... லட்சுமணன்..? பாதையில் கண்ட கீரி..நீயா? என் குழந்தையின் பொருட்டு தன் உயிரையும் மதியாது அத்தனை வீரியமாய் சண்டையிட்டது நீதானா..? ஐயோ, லட்சுமணா....என் மகனே! உன்னை நான் கொன்றேனே?" என்று அலறித் துடித்துப் புரண்டார் அந்தணர்.

"ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும், மாண்டவர் மீள்வதுண்டோ?"

-மேலேயுள்ள ஐ.நா.வின் செயலை வாசித்தபோது, என் மனதில் இக்கதையே மனதில் தோன்றி மறைந்தது.

நன்றி, காலம் கடந்த ஐ.நாவின் ஞானத்திற்கு...! :icon_idea:

.

  • கருத்துக்கள உறவுகள்

போர் நடந்த சமயத்தில் இலங்கை ஐநாவுக்குச் சொன்னது இதுதான்.. "நீங்கள் போர்வலயத்தில் இருக்கலாம்.. ஆனால் இனிமேலும் உங்கள் பணியாளர்களின் உயிருக்கு உத்தரவாதம் வழங்க முடியாது..!"

ஐநாவின் தலைமையிடத்தில் இடத்தில் வேறு யாராவது இருந்தாலும் முதலில் செய்யப்போவது தங்கள் பணியாளர்களை வெளியேற்றுவதுதான். ஏனென்றால் சிங்களவன் இவ்வளவு பேரைக் கொல்வான் என்று ஆதாரபூர்வமாக நம்புவதற்கு அப்போது எவ்வித முகாந்திரமும் இல்லை. (எமக்குத் தெரியும்.. பல நாடுகளுக்கும் தெரிந்திருக்கலாம். ஆனால் ஐநாவில் அது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை.) :unsure:

இப்போது எல்லாம் நடந்துவிட்ட பிறகு அலசி ஆராய்கிறார்கள். ஐநாவில் இலங்கை குறித்த அசைக்கமுடியாத ஒரு கருத்துருவாக்கமும் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இந்நிலையை எய்துவதற்கு ஆயிரக்கணக்கில் மக்களும் போராளிகளும் மரணிக்கவேண்டியதாகிவிட்டது. :(

இப்போது இவர்கள் ஆராய்வதும் நல்லதுக்குத்தான். பான்கி மூனுக்கு இலங்கை விவகாரத்தில் ஆலோசனைகள் வழங்கியது நம்பியார். ஐநாவின் நடவடிக்கை போதாது என்று இந்த அதிகாரி அறிக்கை வழங்குவாரானால் நம்பியாரும், அவரைத் தொடர்ந்து இந்தியாவும் பதிலளிக்கவேண்டிய சந்தர்ப்பங்கள் அமையலாம். :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களைக் காதலிக்கிறதும்.. கார் செலுத்துவதும்... ஒன்று. இரண்டையும் நாம் அவதானமாகச் செய்யவில்லை என்றால்.. உயிரைக் கூட குடித்துவிடலாம்..! இரண்டிலும் அளவுக்கு மிஞ்சி நம்பிக்கை வைக்கிறது.. வேகமாகச் செயற்படுவது.. ஆபத்தில் முடிக்கும். நின்று நிதானித்து.. வரையறைகளைப் பின்பற்றி நடந்தால்.. காரும் இடிபடாது.. காதலும்.. நம்மை ஆபத்தில் தள்ளாது. இரண்டுக்கும் இன்சூரன்ஸ் செய்து கொள்வது நன்று. இன்றேல்.. நஸ்ட ஈடு இன்றி.. பரிதவிக்க நேரிடும். :lol::):icon_idea:

தமிழரின் வேள்விக்கான விடியல் தெரிகிறது

Edited by விசுகு

நாளை தமிழீழத்திற்கான, அதன் சுயநிர்ணய உரிமைக்கான வாக்கெடுப்பு நடத்தப்படும் பொழுது, ஐ.நா. தன் பிழைகளுக்கு ஒரு பாரிய பிராயச்சித்தமாக பாதுகாப்பு அவையின் ஆதரவை பெறல் வேண்டும், முக்கியமாக சீனா.

அது ஒன்றே ஒருவித ஆறுதல் தரும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.