Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அம்மாவாம்!! :)

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விளக்கு ஒன்று அணைந்து போனால்

வீடு மட்டும் இருள்கிறது

வீதி விளக்கு அணைந்து போனால்

சாலை மட்டும் இருள்கிறது

மேற்கே சூரியன் மறைந்து போனால்

பாதி உலகம் இருள்கிறது

மேற்கே சூரியன் மறைந்து போனால்

பாதி உலகம் இருள்கிறது

பெத்த தாய் அவள் செத்து போனால்

மொத்தம் உலகமும் இருள்கிறது

விளக்கு ஒன்று அணைந்து போனால்

வீடு மட்டும் இருள்கிறது

இன்பத்து பால் ஓடுகையில்

மனைவி ஆகிறாள் தாய்

தன இதய பாலை ஓடுகையில்

அன்னை ஆகிறாள் தாய்

அள்ளி எடுத்து கொஞ்சுகையில்

பிள்ளை ஆகிறாள் தாய்

துன்பத்தில் தலை கோதுகையில்

தோழி ஆகிறாள் தாய்

தர்மத்தை நிலை நாடுகையில்

தலைவி ஆகிறாள் தாய்

நாடுவைதியம் புரிகையில்

பாடி ஆகிறாள் தாய்

ஒத் வேலைகாரி வடிவத்தில்

கடவுள் ஆகிறாள் தாய்

காலம் எலாம் கடவுளுக்கு

மொத்தம் பத்து அவதாரம்

பெத்த தாய்க்கு மட்டும் தாய்க்கு மட்டும்

நித்தம் பத்து அவதாரம்

நித்தம் பத்து அவதாரம்

அன்னை இறந்துபோகையில் அன்பிறந்து போகும்

அவள் ஆகிபோட நாவோடு ருசி இறந்து போகும்

தாலி தந்த கணவருக்கு சபை இறந்து போகும்

ஆவி வந்த உறவுக்கு வழி இறந்து போகும்

பார்த்து நிற்கும் மகனுக்கு பாசம் இறந்து போகும்

கனிந்து நிற்கும் மகளுக்கு காவல் இறந்து போகும்

ஒஹ்ஹ்ஹ

ஓசை கேட்கும் வீட்டுக்குள் ஒழி இறந்து போகும்

காலம் எல்லாம் கடவுளுக்கு

மொத்தம் பத்து அவதாரம்

பெத்த தாய்க்கு மட்டும் தாய்க்கு மட்டும்

நித்தம் பத்து அவதாரம்

நித்தம் பத்து அவதாரம்

விளக்கு ஒன்று அணைந்து போனால்

வீடு மட்டும் இருள்கிறது

வீதி விளக்கு அணைந்து போனால்

சாலை மட்டும் இருள்கிறது

மேற்கே சூரியன் மறைந்து போனால்

பாதி உலகம் இருள்கிறது

மேற்கே சூரியன் மறைந்து போனால்

பாதி உலகம் இருள்கிறது

பெத்த தாய் அவள் செத்து போனால்

மொத்தம் உலகமும் இருள்கிறது

  • கருத்துக்கள உறவுகள்

விளக்கு ஒன்று அணைந்துபோனால் ....

எல்லோரும் கேட்க வேண்டிய பாடல்.

பாடல் மிகவும் அருமை .

  • கருத்துக்கள உறவுகள்

அன்னை இறந்துபோகையில் அன்பிறந்து போகும்

அவள் ஆகிபோட நாவோடு ருசி இறந்து போகும்

தாலி தந்த கணவருக்கு சபை இறந்து போகும்

ஆவி வந்த உறவுக்கு வழி இறந்து போகும்

பார்த்து நிற்கும் மகனுக்கு பாசம் இறந்து போகும்

அனுபவித்தவர்களுக்குத்தான் இவையெல்லாம் புரியும்

நன்றி அறிவு, உடையார்

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

  • 2 weeks later...
  • 2 months later...

கள்ளிக்காட்டில் பிறந்த தாயே

என்னை கல்லுடைச்சு வளர்த்த நீயே

முள்ளுக்காட்டில் உழைச்ச தாயே

என்னை முள்ளு தைக்க விடல நீயே

காடைக்கும் காட்டு குருவிக்கும் எந்த புதருக்குள் இடமுண்டு

கோடைக்கும் அடிக்கும் குளிருக்கும் தாய் ஒதுங்கதான் இடமுண்டா?

கரட்டு மேட்டையே மாத்தினா அவ கல்லை புழிஞ்சு கஞ்சி ஊத்துனா..

உழவு காட்டில விதை விதைப்பா

ஓணான் கரட்டில கூழ் குடிப்பா

ஆவாரம் குழையில கை துடைப்பா -பாவம்மப்பா

வேலி முள்ளில் அவ விறகெடுப்பா

நாழி அரிசி வைச்சு உலைய வைப்பா

பிள்ளை உண்ட மிச்சம் உண்டு உயிர் வளர்ப்பா தியாகம்மப்பா

கிழக்கு விடியுமுன்னே விழிக்கிறா அவ உலக்கை பிடித்துதான் பிறக்கிறா

மண்ணை கிண்டிதான் பிழைக்கிறா உடல் மக்கி போகமட்டும் உழைக்கிறா..

தாயி கையில் என்ன மந்திரமோ

கேப்பை களியில் கூட நெய் ஒழுகும்

காஞ்ச கருவாடு தேனொழுகும் அவ சமைக்கியிலே

தங்கம் தனிதங்கம் மாசு இல்லை

தாய்பால் ஒன்னில் மட்டும் தூசு இல்லை

தாய்வழி சொந்தம் போல பாசம் இல்லை நேசமில்லை..

ஆறு இல்லா ஊரில் கிணறு இருக்கு

கோயில்லா ஊரில் தாய் இருக்கு

தாயில்லா ஊரில் நிழல் இருக்கா அன்பில் நிசமிருக்கா

சொந்தம் நூறு சொந்தம் இருக்குதே

பெத்த தாய் போல ஒன்னு நிலைக்குதா

சாமி நூறு சாமி இருக்குதே அட

தாய் இரண்டு தாய் இருக்குதா

படம்: தென்மேற்கு பருவக்காற்று

இசை: NR ரஹ்நந்தன்

பாடியவர்: விஜய் பிரகாஷ்

வரிகள்: வைரமுத்து

ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்

அம்மாவை வாங்க முடியுமா நீயும்?

அம்மாவை வாங்க முடியுமா நீயும்?

ஆயிரம் உறவு வந்து உன்னை தேடி வந்து நின்னாலும்

தாய் போல தாங்க முடியுமா?

உன்னையும் என்னையும் படைச்சது இங்கே யாருடா?

தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிறதுன்னா தாய்டா..

(ஆசைப்பட்ட..)

பட்டினியா கிடைந்தாலும் பிள்ளைக்கு பால் கொடுப்பா

பால் குடிக்கும் பிள்ளை முகம் பார்த்து பசி தீர்ப்பா

இளவட்டம் ஆட பின்னும் எண்ணை தேச்சி குளிக்க வைப்பா

உச்சி முதல் பாதம் வரை உச்சி கோதி மகிழ்ட்ந்திடுவா

நெஞ்சிலே நடக்க வைப்பா

நிலாவை பிடிக்க வைப்பா

பிஞ்சி விரல் நகம் கடிப்பா

பிள்ளை எச்சில் சோறு தின்பா

பல்லு முளைக்க நில்லு முனையால்

மெல்ல மெல்லதான் கீறி விடுவா

பல்லு முளைக்க நில்லு முனையால்

மெல்ல மெல்லதான் கீறி விடுவா

உன்னையும் என்னையும் படைச்சது இங்கே யாருடா?

தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிறதுன்னா தாய்டா..

மண்ணில் ஒரு செடி முளைச்சா

மண்ணுக்கு அது பிரசவம்தான்

உன்னை பெற துடி துடிச்சா

அன்னைக்கு பூகம்பம்தான்

சூரியனை சுற்றிக்கிட்டு தன்னை சுற்றும் பூமியம்மா

பெத்தெடுத்த பிள்ளை சுத்தி பித்து கொள்ளும் தாய்மையம்மா

கர்பத்தில் நெளிந்த உன்னை நுட்பமாய் தொட்டு ரசிப்பா

பெத்தை போல் அவள் இருப்பா மெத்தையாய் உன்னை வளர்ப்பா

என்ன வேண்டும் இனி உனக்கு?

அன்னை மடியில் சொர்க்கம் இருக்கு

என்ன வேண்டும் இனி உனக்கு?

அன்னை மடியில் சொர்க்கம் இருக்கு

(ஆசைப்பட்ட..)

படம்: வியாபாரி

இசை: தேவா

பாடியவர்: ஹரிஹரன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.