Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இசைப்புயல் ஏ.ஆர் ரகுமானின் இனிய பாடல்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இசைப்புயல் ஏ.ஆர் ரகுமானின் இனிய பாடல்கள்

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசையில் உங்களுக்கு பிடித்த பாடல்களை இணையுங்கள்.

வாழ்க்கை பற்றிய ஆராய்ச்சிகளுக்கு அளவுமில்லை. முடிவுமில்லை. சோர்வும் இருப்பதில்லை. வாழ்க்கை பற்றியதான விடயங்களை மனிதன் காணத்துடிக்கின்ற நிலையில், அல்லது வாழ்க்கை பற்றிய நிறைவான உண்மையை அறிந்து கொள்கின்ற நிலையில், அடுத்த கணம் அப்படியே மாறியும் விடுகிறது. ஆய்ந்தறியக்கூடியதல்ல வாழ்க்கை என்பதை அது பற்றிய ஆய்வுகள் சொல்லி நிற்கும்.

வாழ்க்கையில் என்னதான் நாம் கோலங்களை போட்டுக் கொண்டாலும், உணர்வுகளில் வீச்சில் அப்படியே அடங்கிவிடுவது இயல்பாக நடக்கும் எளிய விஞ்ஞானம் என்பேன். இது பற்றி உணர்வுகளிடம் நடிக்க முடியாது என்ற தலைப்பில் 2009 ஆம் ஆண்டில் பதிவிட்டிருந்தேன். அது ஒஸ்கார் விருதுகள் வழங்கப்பட்ட நாள். இசையில் நாயகன் ஏ. ஆர். ரகுமான், இரண்டு ஒஸ்கார் விருதுகளை வென்ற நாள்.

ஒரு பிள்ளை எழுதும் கிறுக்கல் தான் வாழ்க்கையா? அதில் அர்த்தம் தேடி அலைவதே வேட்கையா? அர்த்தம் புரியும் போது வாழ்வு மாறுதே! என்று ஏ. ஆர். ரகுமான் பாடுகின்ற பாடலும், வாழ்க்கை பற்றிய அழகைச் சொல்லிச் செல்லும்.

ஏ. ஆர். ரகுமான் அவர்கள் பற்றிய குறிப்புகளில் உத்வேகம் குடிகொண்டிருக்கும். நேற்று இசைப் புயல், ஏ. ஆர். ரகுமானின் வாழ்க்கை சரிதத்தைக் கொண்ட உத்தியோகபூர்வ நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. A. R. Rahman: The Spirit of Music என்பதுதான் அதன் பெயர். நஸ்ரின் முன்னி கபீர் என்ற எழுத்தாளரோடு, கலந்துரையாடிய சம்பாஷணை வடிவில் நூல் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

rahman.jpg?w=465&h=310நூல் வெளியீட்டு விழாவில், ஏ. ஆர். ரகுமானுடன் எழுத்தாளர் நஸ்ரின் முன்னி. [நிழற்பட மூலம்: AR Rahman FB Page.]

என்னதான் சாதனைகள் செய்துவிட்ட போதிலும், தன்நிலையில் என்றுமே அடக்கமாயிருந்து, தன் காரியங்களில் அமைதியாகவே, கருமங்கள் செய்வதில் ஏ. ஆர். ரகுமானுக்கு நிகர் அவர் மட்டுந்தான். அதிகமே பேசாதவொரு ஆளுமையின் வாழ்க்கை பற்றிய குறிப்புகளை அறிந்து கொண்டு, அதனை நூல் வடிவிற்கு கொண்டுவருவதென்பது அவ்வளவு லேசுபட்ட காரியமல்ல.

அதிகமாகப் பேசாத ஒருவரின் வாழ்க்கை பற்றிய விடயங்களை தொகுப்பதென்பது எப்படிச் சாத்தியமாகும்? நஸ்ரின் முன்னி, எட்டு வருடங்களாக ரகுமானைத் தொடர்ந்து, இந்த சுயசரிதை நூலைத் தொகுத்துள்ளார். இந்த எட்டு வருட காலங்களுக்குள் ஏகப்பட்ட மாற்றங்கள் ஏ. ஆர். ரகுமானின் வாழ்க்கையில் ஏற்பட்டன. தமிழ், ஹிந்தி திரையுலகின் பிரபல இசையமைப்பாளரிலிருந்து, ஒஸ்கார் விருதுகளை வென்ற மேற்கத்திய சினிமாக்களுக்கும் இசையமைக்கும் இசையமைப்பாளராக மாறியதும் இதற்கிடையில் தான் நடந்தது.

தனது இளமைக் காலத்தில், வாழ்க்கை மீதான வெறுப்பு மிகவும் அதிகமாக இருந்ததாக, ஏ. ஆர். ரகுமான் சொல்ல, அதனைக் கேட்ட நஸ்ரின் முன்னிக்கு அதிர்ச்சியாக இருந்துள்ளது.

“என்னிடமிருந்த அந்தப் பணத்தின் மூலம், எனது முதலாவது Fostex 16-track mixer/recorder ஐ நான் வாங்கினேன். அந்தக் காலத்தில் சென்னையின் சினிமாக்களில், இசை ஒரு தனித்த பாடல் நிலையிலேயே பண்ணப்பட்டது, ஆனால் என்னிடம் 16 பாடல்கள் கொண்ட நிலையிருந்தது. அந்த காலப்பகுதியில் நான் பெற்ற இடர், அவமானம், மற்றவர்களால் நான் கட்டுப்படுத்தப்பட்டமை, எனது குடும்பத்தின் முகத்தில் கவலையைக் கண்டு கொண்டமை, தாழ்வுச் சிக்கலை எப்படி உணர்வேன் என யோசித்தமை, போதிய தன்னம்பிக்கை இல்லாமை, ஏன் சில நேரங்களில் – உயிரையே மாய்த்துக் கொள்வோமா என்று யோசித்தமை போன்ற எல்லா உணர்ச்சிகளும் மெல்லவே மறையத் தொடங்கின.

அந்த இரவில், இசையரங்கில் நான் அமர்ந்திருந்து கொண்டு, எனது புதிய recorder ஐ பார்த்துக் கொண்டிருந்தேன், அப்போது, நான் என்னை அரசனாக உணர்ந்து கொண்டேன். நான் புதியவனாய் உதயமானேன். ஒளிமயமான எதிர்காலம் பற்றிய சமிஞ்சை எனக்குத் தோன்றியது!” என்கிறார் ரகுமான்.

இதனைக் கேட்ட, நஸ்ரின் முன்னியோ அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டார். நிச்சயமாகத்தான் சொல்கிறீர்களா? என்று அவர் கேட்க, ரகுமான் அதற்கு “நம்பிக்கையே இல்லாமலிருந்தது. எப்படித்தான் இந்த விடயங்களிலிருந்து மீளப் போகிறேனோ? என்று பலவேளைகளில் நான் யோசித்துக் கொண்டிருந்திருக்கிறேன்.!” என்று பதிலளித்துள்ளார்.

அடக்கமாகவே, வாழ்க்கை பற்றிய அழகு நிலைகளைச் சொல்கின்ற இசையமைப்பாளரின் சிந்தனையோட்டம் தெளிவானது. அவரின் தேவைக்கதிமாக கதைக்காத நிலை மாறவேயில்லை. ரகுமானாகவே இருந்தார். இருக்கிறார். இந்த நூல் வெளியீட்டையொட்டி ராயிட்டர் செய்தி நிறுவனத்திற்கு அவர் வழங்கிய ஒரு நிமிட சுருக்கமான பேட்டி, வாழ்க்கை பற்றிய பல விடயங்களை சொல்லி நிற்கிறது.

அந்தக் குறுகிய பேட்டியிலிருந்து, சில பகுதிகளை நான் இப்பதிவின் தேவை கருதி, தமிழாக்கம் செய்கிறேன்.

கேள்வி: நீங்கள் வெறுப்பு, அன்பு ஆகியவற்றிக்கிடையில் தேர்ந்தெடுத்தல் பற்றிக் கதைத்துள்ளீர்கள். நீங்கள் வெறுப்பை அல்லது ஒருவேளை பகையை, உங்கள் ஒஸ்கார் சாதனைகளின் பின்னர் அனுபவித்ததுண்டா?

ரகுமான்: ஒவ்வொரு விடயமும் அதற்கான எதிரான விடயத்தைக் கொண்டுள்ளதென நான் நினைக்கிறேன். உங்களிடம் புகழ், அந்தஸ்து என எல்லாமுமே இருக்கின்ற நிலையில், அதற்கெதிரான விடயங்கள் உங்களைத் தேடிவரும் என ஆன்மீகமும் சொல்கிறது. ஆகையால், நான் அதற்காக காத்திருந்தேன். அது வந்தது, ஆனாலும் என்னால் அதனை கையாள முடிந்தது. அது அவ்வளவு நாசகாரமானதாக இருக்கவில்லை: நான் நினைத்தது போலவேயிருந்தது, ஆன்மீகமும் எனக்கு துணையாகியது. அது நடக்குமென்பதை அப்படியே எதிர்வுகூற முடியும். நான் 13 வயதிலிருந்தே பிரபல்யமாகயிருந்தேன் – இப்படியாக பழகிவிட்ட நிலையில், ஒரு விடயம் சார்பாக நல்ல வகையில், பார்ப்பதற்கான ஆர்வம் உங்களுக்கு வரும். அந்த நிலையில், நீங்கள் ஆக்கபூர்வமாக விடயங்களை காண்பதற்கும், அதன் மூலம் என்ன செய்யலாம் என்கின்ற எண்ணங்களாலும் போஷிக்கப்படுவது நிராசையாகவே நடந்தேறும்.

கேள்வி: பொதுநலவாய நாடுகளுக்கிடையான விளையாட்டுப் போட்டிக்கான பாடல் பற்றி நீங்கள் விமர்சனங்களை எதிர்கொண்டீர்கள். அது உங்களை பாதித்ததா?

ரகுமான்: தோற்றுப் போவதற்கும் எனக்கு சந்தர்ப்பங்கள் வேண்டுமென, எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். ( சிரிக்கிறார்.)

கேள்வி: அதை நீங்கள் தோல்வியாகப் பார்க்கிறீர்களா?

ரகுமான்: ஆம் மற்றும் இல்லை. விளையாட்டு போட்டியின் பின்னர், ஆக்கபூர்வமான பல நிலைகள் தோன்றின. ஆனாலும், சிலருக்கோ, எதிர்மறையான விடயங்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனாலும், அது பரவாயில்லை.

எதுவுமே அலட்டிக் கொள்ளாமல், அமைதியாகவே சாதனை மேல், சாதனை செய்கின்ற ஆளுமைகள் சொல்லிச் செல்கின்ற ஒரேயொரு விடயம் – தன்னம்பிக்கை தான். “தன்னை நம்புகின்ற நிலையில், மனிதன் தன்னைச் சூழவுள்ள மனிதர்களுக்கும் நம்பிக்கையைக் கொடுக்கிறான், இதனால், அன்பினால் வலுப்பெற்ற உறவுகள் பிறக்கிறது. அடக்கம், ஆதரவு என்ற பண்புகள் நிராசையாகவே அவர்களிடையே தோன்றியும் விடுகிறது” என்று கோபாலு சொல்லச் சொன்னான்.

- உதய தாரகை

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:முன்பே வா

படம்:சில்லென்று ஒரு காதல்

முன்பே வா என் அன்பே வா

ஊட வா உயிரே வா முன்பே வா

என் அன்பே வா பூ பூவாய் பூப்போம் வா

நான் நானா கேட்டேன் என்னை நானே

நான் நீயா நெஞ்சம் சொன்னதே

முன்பே வா என் அன்பே வா

ஊட வா உயிரே வா

முன்பே வா என் அன்பே வா

பூ பூவாய் பூப்போம் வா

ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டால்

கோலம் போட்டவ கைகள் வாழி வளையல் சத்தம்

ஜல் ஜல்

ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டால்

கோலம் போட்டவ கைகள் வாழி

சுந்தர மல்லிகை சந்தன மல்லிகை

சிந்திய புன்னகை வண்ணம் மின்ன

பூ வைத்தாய் பூ வைத்தாய்

நீ பூவைக்கோர் பூ வைத்தாய்

மன பூ வைத்து பூ வைத்த

பூவைக்குள் தீ வைத்தாய் ஓ...

நீ நீ நீ மழையில் ஆட

நான் நான் நான் நனைந்தே வாட

என் ஆழத்தில் உன் ரத்தம்

ஆடைக்குள் உன் சத்தம் உயிரே ஒகோஓ

வாழும் ஒரு சில நாளும்

கனி என ஆனால் தருவேன் என்னை

முன்பே வா என் அன்பே வா

ஊட வா உயிரே வா

நான் நானா கேட்டேன் என்னை நானே

நான் நானா கேட்டேன் என்னை நானே

முன்பே வா என் அன்பே வா

பூ பூவாய் பூப்போம் வா

நிலவிடம் வாடகை வாங்கி

விழி வீட்டினில் குடி வைக்கலாமா

நாம் வாழும் வீட்டுக்குள் வேராரும் வந்தாலே

தகுமாஆஆ

தேன்மலை தேக்குக்கு நீதான்

உந்தன் தோள்களில் இடம் தரலாமா

நான் சாயும் தோள் மேல் வேராரும் சாய்ந்தாலே

தகுமா...

நீரும் செங்குள சேறும்

கலந்தது போலே கலந்தவலா

முன்பே வா என் அன்பே வா ஊட வா உயிரே வா

முன்பே வா என் அன்பே வா பூ பூவாய் பூப்போம் வா

நான் நானா கேட்டேன் என்னை நானே

நான் நீயா நெஞ்சம் சொன்னதே முன்புதான்

முன்பே வா என் அன்பே வா ஊட வா உயிரே வா

முன்பே வா என் அன்பே வா பூ பூவாய் பூப்போம் வா

ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டால்

கோலம் போட்டவ கைகள் வாழி வளையல் சத்தம்

ஜல் ஜல்

ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டால்

கோலம் போட்டவ கைகள் வாழி

சுந்தர மல்லிகை சந்தன மல்லிகை

சிந்திய புன்னகை வண்ணம் மின்ன

ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டால்

கோலம் போட்டவ கைகள் வாழி வளையல் சத்தம்

ஜல் ஜல்

ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டால்

கோலம் போட்டவ கைகள் வாழி

சுந்தர மல்லிகை சந்தன மல்லிகை

சிந்திய புன்னகை வண்ணம் மின்ன

இணைப்புக்கு நன்றி நுனா, நான் தனியே தமிழை விட றஹ்மான் இசையமைத்த வேற்று மொழிப்பாடல்களையே இணைக்க விரும்புகிறேன்.

Edited by r.raja

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி நுனா, நான் தனியே தமிழை விட றஹ்மான் இசையமைத்த வேற்று மொழிப்பாடல்களையே இணைக்க விரும்புகிறேன்.

இணையுங்கள் ராஜா.ஆவலாக உள்ளேன்(ளோம்).

பாடல்:என்ன விலை அழகே

பாடியவர்: உன்னி மேனன்

படம்: காதலர் தினம்

இசை: AR. ரஹ்மான்

பாடல்: கவிஞர் வாலி

விலை அழகே .....

என்ன விலை அழகே

சொன்ன விலைக்கு வாங்க வருவேன்

விலை உயிர் என்றாலும் தருவேன்

இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன் ஓ

ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்

(என்ன விலை..)

படைத்தான் இறைவன் உனையே

மலைத்தான் உடனே அவனே

அழகைப் படைக்கும் திறமை முழுக்க

உன்னுடன் சார்ந்தது என்னுடன் சேர்ந்தது

விடிய விடிய மடியில் கிடக்கும்

பொன் வீணை உன் மேனி

மீட்டட்டும் என் மேனி

விரைவினில் வந்து கலந்திடு

விரல்பட மெல்லக் கனிந்திடு

உடல் மட்டும் இங்கு கிடக்குது

உடன் வந்து நீயும் உயிர் கொடு

பல்லவன் சிற்பிகள் அன்று

பண்ணிய சிற்பத்தில் ஒன்று

பெண்ணென வந்தது இன்று சிலையே

பல்லவன் சிற்பிகள் அன்று

பண்ணிய சிற்பத்தில் ஒன்று

பெண்ணென வந்தது இன்று சிலையே

உந்தன் அழகுக்கில்லை ஈடு

(என்ன விலை..)

உயிரே உனையே நினைத்து

விழி நீர் மழையில் நனைந்து

இமையில் இருக்கும் இரவு உறக்கம்

கண் விட்டுப் போயாச்சு

காரணம் நீயாச்சு

நிலவு எரிக்க நினைவு கொதிக்க

ஆராத நெஞ்சாச்சு ஆகாரம் நஞ்சாச்சு

தினம் தினம் உனை நினைக்கிறேன்

துரும்பென உடல் இளைக்கிறேன்

உயிர் கொண்டு வரும் பதுமையே

உனைவிட இல்லை புதுமையே

உன் புகழ் வையமும் சொல்ல

சித்தன்ன வாசலில் உள்ள

சித்திரம் வெட்குது மெல்ல உயிரே

உன் புகழ் வையமும் சொல்ல

சித்தன்ன வாசலில் உள்ள

சித்திரம் வெட்குது மெல்ல

நல்ல நாள் உனைச்சேரும் நாள்தான்

(என்ன விலை..)

Edited by nunavilan

http://www.youtube.com/watch?v=cu-2yxYL06w

நிலா காய்கிறது நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே

இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்

தென்றல் போகின்றது சோலை சிரிக்கின்றது யாரும் சுகிக்கவில்லையே

இந்தக் கைகள் மட்டும் உன்னைத் தீண்டும்

காற்று வீசும் வெய்யில் காயும் காயும் அதில் மாற்றம் ஏதும் இல்லையே

ஆஆஆ...வானும் மண்ணும் நம்மை வாழச் சொல்லும் அந்த வாழ்த்து ஓயவில்லை

என்றென்றும் வானில்

.......... நிலா காய்கிறது .........

அதோ போகின்றது ஆசை மேகம் மழையைக் கேட்டுக் கொள்ளுங்கள்

இதோ கேட்கின்றது குயிலின் பாடல் இசையைக் கேட்டுக் கொள்ளுங்கள்

இந்த பூமியே பூவனம் உங்கள் பூக்களைத் தேடுங்கள்

இந்த வாழ்க்கையே சீதனம் உங்கள் தேவையைத் தேடுங்கள்

.......... நிலா காய்கிறது .........

படம் : இந்திரா

இசை : ஏ.ஆர். ரஹ்மான்

பாடியவர் : ஹரிணி

வரிகள் : வைரமுத்து

Edited by r.raja

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:போர்க்களம் அங்கே

படம் : தென்னாலி

வரிகள்:கவிஞர் பிறைசூடன்

போர்க்களம் அங்கே பூவில் காயம் இங்கே

புன்னகை தீவே உயிரின் உயிலும் எங்கே

காதலின் போரிலே கலந்த கைகள் எங்கே

கள்வனே கள்வனே களவு போனதெங்கே

உயிர் கரைந்து போகுதிங்கே

(போர்க்களம்..)

உன்னை எங்கு பிரிகிறேன்

உனக்குள் தானே வாழ்கிறேன்

அன்பில் உன்னை அளக்கிறேன்

அணிச்சை செயலாய் நினைக்கிறேன்

(உன்னை..)

நீயும் சொன்ன சொல்லை நம்பி

இன்னும் உலகில் இருக்கிறேன்

உனது முகமும் அசையும் திசையில்

எனது உதயம் பார்க்கிறேன்

உன்னிலே என்னை நான் தேடித் தேடி வருகிறேன்

(போர்க்களம்..)

பேச மறந்து சிரிக்கிறேன்

பிரிந்தும் உயிராய் இருக்கிறேன்

பார்வை இன்றி பார்க்கிறேன்

பகலில் இருட்டாய் இருக்கிறேன்

உனக்குக்ப் பிடித்த உலகம் வாங்கி

உன்னை அங்கு வைக்கிறேன்

நிமிடம் நிமிடம் கனவில் நினைவில்

குடித்தனம் நான் செய்கிறேன்

இறப்பிலோ பிறப்பிலோ உன்னில் நானே வாழ்கிறேன்

(போர்க்களம்..)

யூ டியூபில் 1,156,119 பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட தமிழ் பாடல், எனக்கும் பிடித்த பாடல்...

குரல்: ஸ்ரீநிவாஸ்

வரிகள்: வைரமுத்து

பாடல்: சொட்டச் சொட்ட

இசை: A R R

படம்: தாஜ்மஹால்

அடி நீ எங்கே...அடி நீ எங்கே...

அடி நீ எங்கே...

அடி நீ எங்கே...அடி நீ எங்கே

சொட்டச் சொட்ட நனையுது தாஜ் மஹாலு

குடையொண்ணு குடையொண்ணு தா கிளியே

விட்டுவிட்டுத் துடிக்குது என் நெஞ்சு

வெக்கம் விட்டு வெக்கம் விட்டு வா வெளியே

அடி நீ எங்கே...நீ எங்கே...

நீ எங்கே நீ எங்கே

பூ வைத்தே பூ எங்கே

மழைத் தண்ணி உசிரக் கரைக்குதே

உசிர் உள்ள ஒருத்திக்கு

தாஜ் மஹாலக் கட்டிக் கொடுத்தவனும் நாந்தாண்டீ

அடியே நீ எங்கே எங்கே

நீ எங்கே கண்ணீரில மழையும் கரிக்குதே

அடியே நீ எங்கே எங்கே

நீ எங்கே கண்ணீரில மழையும் கரிக்குதே

சொட்டச் சொட்ட நனையுது தாஜ் மஹாலு

குடையொண்ணு குடையொண்ணு தா கிளியே

விட்டுவிட்டுத் துடிக்குது என் நெஞ்சு

வெக்கம் விட்டு வெக்கம் விட்டு வா வெளியே

அடி நீ எங்கே...நீ எங்கே...நீ எங்கே

உனக்காக பரிசு ஒன்று கொண்டேன்

எதற்காக நீ விலகி நின்றாய்

நான் மழையல்லவே

ஏன் ஒதுங்கி நின்றாய்

உனக்காக பரிசு ஒன்று கொண்டேன்

எதற்காக நீ விலகி நின்றாய்

நான் மழையல்லவே

ஏன் ஒதுங்கி நின்றாய்

எனைக்கண்டு சென்ற கனவே

உயிரைத் துண்டு செய்த மலரே

வந்து மழையிலாடு மயிலே மயிலே

உன் நாணம் என்ன கண்ணே

மேகம் அட்சதை போடும்போது

தலையை நீட்ட வேண்டும் கண்ணே கண்ணே

நீருக்கும் நமக்கும் ஒரு தேவபந்தம்

அன்பே உருவானது

நீருக்குள் முகம் பார்த்த ஜோடி ஒன்றை

மீண்டும் மழை சேர்த்தது

சொட்டச் சொட்ட நனையுது தாஜ் மஹாலு

குடையொண்ணு குடையொண்ணு தா கிளியே

விட்டுவிட்டுத் துடிக்குது என் நெஞ்சு

வெக்கம் விட்டு வெக்கம் விட்டு வா வெளியே

அடி நீ எங்கே...நீ எங்கே...

நீ எங்கே நீ எங்கே

பூ வைத்தே பூ எங்கே

மழைத் தண்ணி உசிரக் கரைக்குதே

உசிர் உள்ள ஒருத்திக்கு தாஜ் மஹாலக்

கட்டிக் கொடுத்தவனும் நாந்தாண்டீ

அடியே நீ எங்கே எங்கே நீ எங்கே

கண்ணீரில மழையும் கரிக்குதே

அடியே நீ எங்கே எங்கே நீ எங்கே

கண்ணீரில மழையும் கரிக்குதே

அடியே நீ எங்கே எங்கே நீ எங்கே

கண்ணீரில மழையும் கரிக்குதே

நீ எங்கே...நீ எங்கே...நீ எங்கே...

நீ எங்கே...நீ எங்கே...நீ எங்கே...

நீ எங்கே...நீ எங்கே...நீ எங்கே...

-----

படம் - என் சுவாசக்காற்றே

பாடியவர் - M.G.சிறீக்குமார்

இசை - A.R.ரகுமான்

வரிகள்: வைரமுத்து

ஒரு துளி விழுது ஒரு துளி விழுது

ஒரு துளி விழுது ஒரு துளி விழுது

ஒரு துளி... இரு துளி...

சிறு துளி... பல துளி...

பட பட தட தட தட தட

சட சட சிதறுது

சின்னச் சின்ன மழைத்துளிகள்

சேர்த்து வைப்பேனோ

மின்னல் ஒளியில் நூல் எடுத்துக்

கோர்த்து வைப்பேனோ

சின்னச் சின்ன மழைத்துளிகள்

சேர்த்து வைப்பேனோ

மின்னல் ஒளியில் நூல் எடுத்துக்

கோர்த்து வைப்பேனோ

சக்கரவாகமோ மழையை அருந்துமாம்

நான் சக்கரவாகப் பறவையானேனோ

மழையின் தாரைகள் ஈரவிழுதுகள்

விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ

சின்னச் சின்ன மழைத்துளிகள்

சேர்த்து வைப்பேனோ

மின்னல் ஒளியில் நூல் எடுத்துக்

கோர்த்து வைப்பேனோ

சிறு பூவினிலே விழுந்தால்

ஒரு தேன்துளியாய் வருவாய்

சிறு சிற்பியிலே விழுந்தால்

ஒரு முத்தெனவே மலர்வாய்

பயிர் வேரினிலே விழுந்தால்

நவதானியமாய் விளைவாய்

என் கண்விழிக்குள் விழுந்ததனால்

கவிதையாக மலர்ந்தாய்

அந்த இயற்கை அன்னை படைத்த

ஒரு பெரிய Shower இது

அட இந்த வயது கழிந்தால்

பிறகெங்கு நனைவது

இவள் கன்னி என்பதை இந்த மழை

கண்டறிந்து சொல்லியது

சக்கரவாகமோ மழையை அருந்துமாம்

நான் சக்கரவாகப் பறவையானேனோ

மழையின் தாரைகள் வைரவிழுதுகள்

விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ

மழை கவிதை கொண்டு வருது

யாரும் கதவடைக்க வேண்டாம்

ஒரு கறுப்புக் கொடி காட்டி

யாரும் குடை பிடிக்க வேண்டாம்

இது தேவதையின் பரிசு

யாரும் திரும்பிக் கொள்ள வேண்டாம்

நெடுஞ்சாலையிலே நனைய

ஒருவர் சம்மதமும் வேண்டாம்

அந்த மேகம் சுரந்த பாலில்

ஏன் நனைய மறுக்கிறாய்

நீ வாழ வந்த வாழ்வில்

ஒரு பகுதி இழக்கிறாய்

நீ கண்கள் மூடிக் கரையும் போது

மண்ணில் சொர்க்கம் ஏதுவாய்

நீ கண்கள் மூடிக் கரையும் போது

மண்ணில் சொர்க்கம் மீளுவாய்

சக்கரவாகமோ மழையை அருந்துமாம்

நான் சக்கரவாகப் பறவையானேனோ

மழையின் தாரைகள் வைரவிழுதுகள்

விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ

சின்னச் சின்ன மழைத்துளிகள்

சேர்த்து வைப்பேனோ

மின்னல் ஒளியில் நூல் எடுத்துக்

கோர்த்து வைப்பேனோ

சின்னச் சின்ன மழைத்துளிகள்

சேர்த்து வைப்பேனோ

மின்னல் ஒளியில் நூல் எடுத்துக்

கோர்த்து வைப்பேனோ

தொடரும்...

Edited by குட்டி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:ஆருயிரே மன்னிப்பாயா

படம் : குரு

பாடியவர்:ஏ.ஆர்.ரகுமான்

தம் தர தம் தர மாஸ்தி மாஸ்தி

தர தம் தர தம் தர மாஸ்தி மாஸ்தி

தர தம் தம் தர தம்

என் ஆசை தாவது உன்மேலே (தம் தர)

ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா

சொல்லடி என் சகியே

ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா

சொல்லடி என் சகியே

ஓ... நீயில்லாத ராத்திரியோ

காற்றில்லாத இரவாயோ

ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா

சொல்லடி என் சகியே

ஆருயிரே என்னை மன்னிப்பாயா மன்னிப்பாயா

சொல் என் சகியே

ஆனால் என்னை விட்டுப் போனால்

எந்தன் நிலா சோர்ந்து போகும்

வானின் நீலம் தேய்ந்து போகுமே

முன் கோபக் குயிலே

பித்துப் பித்துக் கொண்டு தவித்தேன் தவித்தேன்

உன்னை எண்ணி நான் வாடிப்போனேன்

நீயில்லாமல் கவிதையும் இசையும்

சுவையே தராதே

ஐந்து புலன்களின் அழகியே

ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா

சொல்லடி என் சகியே... (தம் தர...)

ஓ.... ரோஜாப் பூவை... ரோஜாப் பூவை

உள் காயம் செய்தால் நியாயமா?

பேசிப் பேசி என் ஊடல் என்ன தீருமா?

நிலாவிலே வாழ்வது இன்பம்

இருந்தும் இல்லை என்பது துன்பம்

அகிம்சை முறையில் நீயும் கொல்லாதே (தம் தர...)

ஆருயிரே மன்னிப்பேனா மன்னிப்பேனா

சொல்லையா என் உயிரே

ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா

சொல்லடி என் சகியே ஓ...

நீயில்லாத ராத்திரியோ

காற்றில்லாத இரவாய் ஆகாதோ (தம் தர...)

Hum hain is pal yahan - Kishna (2007)

 

Dido & A.R Rahman - If I Rise

 

 

The Pussycat Dolls - Jai Ho

 

 

 

 

அன்பே......................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:முக்காலா முக்காபல்லா

படம்:காதலன்

பாடியவர்கள்:மனோ & சுவர்ணலதா

  • கருத்துக்கள உறவுகள்

அவர் இசை எவ்ளோ , அருமையோ .. அத போலவே அவர் குணமும்!

எவ்ளோ உயரம்போனாலும் ...பீலா காட்டாத ஏ.ஆர்.ஆர்..............

படம்: சங்கமம்

இசை: AR ரஹ்மான்

பாடியவர்: ஷங்கர் மகாதேவன்

கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணியே உருத்தும்

காணாத உன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும்

வராக நதிக்கரை ஓரம் ஒரே ஒரு பார்வை பார்த்தேன்

புறாவே நில்லுன்னு சொன்னேன் கனாவே ஓடி மறைஞ்சே

(வராக..)

(கண்ணில்..)

(கண்ணில்..)

கண்ணு டக்கு டக்கு டக்குங்குது ஓ

உள்ள திக்கு திக்கு திக்குங்குது ஓ

நெஞ்சு ஜல்லு ஜல்லு ஜல்லுங்குது ஓ

சொல்லு சொல்லு சொல்லுங்குது

(வராக..)

பஞ்சவர்ணகிளி நீ பறந்த பின்னாலும்

அஞ்சு வர்ணம் நெஞ்சில் இருக்கு

(பஞ்சவர்ணகிளி..)

மனசுக்குள்ள சடுகுடு சடுகுடு

மயக்கத்துக்கு மருந்தொன்னு கொடு கொடு

ஓ காவேரி கரையில்

மரமாயிருந்தால் வேருக்கு யோகமடி

என் கை ரெண்டும் தாவனியானால் காதல் பழுக்குமடி

(கண்ணு..)

(வராக..)

(கண்ணில்..)

(கண்ணில்..)

நீ எனை கடந்து போகையிலே

உன் நிழலா பிடிச்சுப்புட்டேன்

(நீ எனை..)

நிழலுக்குள்ள ம்ம்ம் குடியிருக்கேன் ம்ம்ம்

ஒடம்பவிட்டு உசிர் மட்டும் தள்ளி நிக்க

கிழிஞ்ச நெஞ்ச எதக்கொண்டு நானும் தைக்க

ஓ ஒத்த விழிப்பார்வை ஊடுருவப்

பார்த்து தாப்பா தெரிச்சிடுச்சு

தாப்பா தெரிச்சிடுச்சு

(கண்ணு..)

(வராக..)

(வராக..)

(கண்ணில்..)

(கண்ணில்..)

படம்: சங்கமம்

பாடல்: வைரமுத்து

பாடியவர்கள்: ஹரிஹரன், எம். எஸ். விஸ்வநாதன்

இசை: ஏ. ஆர். ரஹ்மான்

பல்லவி

=======

ஆ: ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்

உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்

உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம்

(மழைத்துளி மழைத்துளி..)

ஆலால கண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க‌

என்ன ஆடாம ஆட்டி வைச்ச வணக்கமுங்க‌

என் காலுக்கு சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல் வணக்கம்

என் கால் நடமாடுமையா உம்ம கட்டளைகள் வெல்லும் வரைக்கும்

(என் காலுக்கு சலங்கையிட்ட)

நீ உண்டு உண்டு என்றபோதும் அட இல்லை இல்லை என்றபோதும்

சபை ஆடிய பாதமய்யா அது நிக்காது ஒருபோதும்

(ஆலால கண்டா ஆடலுக்குத் தகப்பா)

(மழைத்துளி மழைத்துளி...)

சரணம் 1

========

ஆ: தண்ணியில மீனழுதா கரைக்கொரு தகவலும் வருவதில்லை

எனக்குள்ள நானழுதா துடைக்கவே எனக்கொரு நாதியில்ல‌

என் கண்ணீ் ஒவ்வொரு சொட்டும் வைரம் வைரமாகுமே

சபதம் சபதம் என்றே சலங்கை பாடுமே

ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

மனமே மனமே சபதம் வெல்லும் மட்டும் சாயாதிரு

விழியே விழியே இமையே தீயும் போதும் கலங்காதிரு

கங்கை நதி அத்தனையும் கடலில் சங்கமம்

நட்சத்திரம் அத்தனையும் பகலில் சங்கமம்

கலைகளின் வெகுமதி உன்னிடத்தில் சங்கமம் சங்கமம்

(மழைத்துளி மழைத்துளி...)

(ஆலால கண்டா ஆடலுக்குத் தகப்பா)

சரணம் 2

========

(எம். எஸ். விஸ்வநாதன்)

ஆ: தந்தான தந்தானனா..

மழைக்காகத் தான் மேகம் அட கலைக்காகத் தான் நீயும்

உயிர் கலந்தாடுவோம் நாளும் மகனே வா

நீ சொந்தக் காலிலே நில்லு தலை சுற்றும் பூமியை வெல்லு

இது அப்பன் சொல்லிய சொல்லு மகனே வா மகனே வா

ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான்

தன் கண்ணீரை மூடிக் கொண்டு இன்பம் கொடுப்பான்

புலிகள் அழுவது ஏது அட பறவையும் அழ அறியாது

போர்க்களம் நீ புகும்போது முள் தைப்பது கால் அறியாது

மகனே மகனே காற்றுக்கு ஓய்வென்பது ஏது அட ஏது

கலைக்கொரு தோல்வி கிடையாது கிடையாது

ஹரி: ஆலால கண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க‌

விஸ்: என்னை ஆடாம ஆட்டி வெச்ச வணக்கமுங்க‌

ஹரி: என் காலுக்குச் சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல்வணக்கம்

விஸ்: என் கால் நடமாடுமையா நம்ம கட்டளைகள் வெல்லும்வரைக்கும்

ஹரி: நீ உண்டு உண்டு என்ற போதும்

விஸ்: நீ உண்டு உண்டு என்ற போதும் அட இல்லை இல்லை என்ற போதும்

சபை ஆடிய பாதமையா அது நிக்காது ஒருபோதும்

ஹரி: மழைத்துளி மழைத்துளி...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:தீக்குருவியாய்

ஏதோம்மா ஏதோ மாதிரி போலே என்ன வழியில்லையா

ஏதோம்மா ஏதோ மாதிரி போலே என்ன முடியலையா

கனவுல இவதான் சில்லுன்னு பட்டா

காதலாய் இவதான் சுள்ளுன்னு சுட்டா

தீக்குருவியாய் தீங்கனியினை தீக்கைகளில் தீஞ்சுவையென

தீப்பொழுதினில் தீண்டுகிறாய் தந்திரனே

தீக்குருவியாய் தீங்கனியினை தீக்கைகளில் தீஞ்சுவையென

தீப்பொழுதினில் தீண்டுகிறாய் தந்திரனே

பூ மந்திரத்தீ தூண்டுகிறாய்

தீயினைத் தீநதியினில் தேடுகிறாய் தந்திரா

(தீக்குருவியாய்)

சில்லிடவா சிக்கிடவா கிறங்கிடவா கிறுக்கிடவா

கை தொடு தந்திரா

அடி யாழ் உடலிலே வாள் இடையிலே நுரையாய் மறையாதா

விறைத்திடு நந்திதா

இடையோர மூன்றாம்பிறையே முத்தம் ஏந்தி வா வா

இமையோரத் தூவல் சிறையே துயில் தூக்கிப் போ போ

(தீக்குருவியாய்)

இடை தொடவா இசைத்திடவா சுவைத்திடவா செதுக்கிடவா

சொல்லிடு நந்திதா

காலடியிலே வான்நிலவது பனியாய்ப் படராதா

தேடிடு தந்திரா

மழைநேரக் காற்றே காற்றே மனம் தின்ன வா

குடையோர ஊற்றே ஊற்றே குணம் சொல்லித் தா தா

(தீக்குருவியாய்)

படம்: கண்களால் கைது செய்

இசை: ஏ.ஆர்.ரகுமான்

பாடியவர்கள்: ஹரிணி, முகேஷ், ஜான்சன்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:ஏதோ ஏதோ

படம்:எனக்கு 20 உனக்கு 18

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:தீயில் விழுந்த தேனா

படம்:வரலாறு

இசையமைத்து பாடியவர்:இசைப்புயல்

http://www.youtube.com/watch?v=JzE_J64IORE&feature=related

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.