Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தசையினைத் தீ சுடினும்...

Featured Replies

தசையினைத் தீ சுடினும்...

எழுத்தா ளரும் விடுதலைச் சிறுத்தைகள் முன்னாள் எம்.எல்.ஏவுமான ரவிக்குமாரின் "தமிழராய் உணரும் தருணம்" என்ற நூலில் வாசிக்க வாய்த்த கவிதை. 1983-ல் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த இனக் கலவரத்தின் ஒரு சம்பவத்தை சிங்களக் கவிஞர் பாஸில் ஃபெர்னாண்டோ கவிதையாகப் பதிவுசெய்திருக்கிறார்.

மொழியாக்கம் கவிஞர் சேரன்.

'ஜூலை: மேலும் ஒரு சம்பவம்

இறந்தவர்களைப் புதைப்பது
ஒரு கலையாகவே வளர்ந்திருந்த
எமது காலத்தில்

இந்த நிகழ்வு மட்டும் அழிய மறுத்து எஞ்சியிருப்பதற்குக் காரணம் ஏதுமில்லை சத்தியமாகச் சொல்கிறேன் நான் உணர்ச்சிபூர்வமானவன் அல்லன்.

சித்தம் குழம்பியனாகவும் ஒருபோதும் இருந்ததில்லை.

உங்களைப் போலவே நானும் உணர்ச்சிகளை வெளிக்காட்டத் தயங்குபவன்.

அன்றாட வாழ்க்கையிலும் நான் ஒரு யதார்த்தவாதி

எச்சரிக்கை உணர்வுள்ளவனும்கூட.

மறந்துவிடு என்று அரசு ஆணையிட்டால் உடனடியாக மறந்துவிடுகிறேன்.

மறப்பதில் எனக்கிருக்கும் திறமைபற்றி எவருக்குமே ஐயம் இருந்ததில்லை.

என்னை ஒருவரும் குறை சொன்னதும் கிடையாது.

எனினும் அந்தக் கும்பல் அந்த காரை எப்படித் தடுத்து நிறுத்தியது என்பதை இப்போதும் நான் நினைத்துப் பார்க்கிறேன்.

காருக்குள் நாலு பேர்

பெற்றோர், நாலு அல்லது ஐந்து வயதில் - ஆணும் பெண்ணுமாய் இரு குழந்தைகள்.
ஏனைய கார்களை எப்படித் தடுத்து நிறுத்தினரோ
அப்படித்தான் அந்த காரையும் தடுத்து நிறுத்தினார்கள்.

எந்த வேறுபாடும் இல்லை.

குதூகலம் கொப்பளிக்கின்ற மனநிலையில் ஒரு சில கேள்விகள்.

செய்வதைப் பிழையறச் செய்ய விரும்பும் கவனமாய் இருக்கலாம்.

பிறகு செயலில் இறங்கினர் வழமைபோல.
பெட்ரோல் ஊற்றுவது, பற்றவைப்பது போன்ற விஷயங்கள்

ஆனால், திடீரென்று யாரோ ஒருவன்

கதவுகளைத் திறந்தான்.

அழுது அடம்பிடித்து

பெற்றோரைவிட்டு விலக மறுத்த இரண்டு குழந்தைகளையும் வெளியே இழுத்தெடுத்தான்.

குழந்தைகளின் உணர்வுகளைக் கவனத்தில்கொள்ளாமல் இருப்பது

சில சமயங்களில் குழந்தைகளுக்கு நல்லது என அவன் எண்ணியிருக்கக்கூடும்.

துரிதமாகச் செயல்பட்ட இன்னொருவனோ தீக்குச்சியைக் கிழித்தான்.

சுற்றிலும் எரிந்துகொண்டிருந்த பலவற்றோடு இந்த நெருப்பும் சேர்ந்துகொண்டது.

அருகே நின்று தமது சாகசங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தனர் கொஞ்சம் பேர்.

கலைந்து போனார்கள் ஒரு சிலர்.

காருக்குள் இருந்த இருவரும் என்ன எண்ணியிருப்பார்கள் என்பதைப் பற்றி யார் கவலைப்பட்டார்கள்

சமாதான விரும்பிகளாக மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப ஆரம்பித்தனர்.

அப்போதுதான் உள்ளேயிருந்தவர் திடீரென கார் கதவை உடைத்து வெளியே பாய்ந்தார்.

சட்டையிலும் தலைமயிரிலும் ஏற்கெனவே தீப்பற்றிவிட்டிருந்தது.

குனிந்தவர் தனது இரண்டு குழந்தைகளையும் வாரி எடுத்தார். எங்கும் பார்க்காமல் கவனமாகத் திட்டமிட்டு எடுத்த முடிவை செயல்படுத்துவதுபோல உறுதியுடன் காருக்குள் திரும்பி ஏறினார் கதவை மூடினார்.

தனித்துவமான அந்த சப்தத்தை நான் கேட்டேன்.

எரிந்தழிந்த கார் இப்போதும் தெருவோரம் கிடக்கிறது.

ஏனையவற்றோடு இன்னும் சில நாட்களில் மாநகராட்சி அதனை அகற்றக் கூடும் தலைநகரின் தூய்மையே ஆட்சியாளர்களின் தலையாய பணி!

ஒரு மாற்று இனத்தைச் சேர்ந்தவர் தமிழர்களின் மீதான இனக் கலவரத்தைப் பதிவு செய்தது முக்கியமான விஷயம். மேலும், இன வெறி உச்சத்தில் இருக்கும் ஒருவனுக்கு அந்தக் குழந்தைகளை காரில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று கண நேரத்தில் தோன்றிய எண்ணம். ஆனாலும் தானும் தன் மனைவியும் இறந்த பிறகு தங்கள் குழந்தைகள் ஆதரவற்றவர்களாகத் திரிவதை விட, அவர்களுக்கு வேறு எந்தக் கொடூரத் தண்டனையையும் வழங்க முடியாது என்கிற தமிழரான அந்தத் தந்தையின் எண்ணம் எனப் பல்வேறு வகையான மன உணர்வுகளும் வாசிப்பவரைச் சிதைத்துப் போடுகிறது!

மூலம்: ஆனந்த விகடன் - ஐப்பசி 12, 2011

Edited by akootha

எத்தனையோ கொடூரமான உண்மைச் செய்திகளை இதுவரை கேட்டிருப்பினும், விகடனில் இதனை வாசித்த போது, தீயில் அரைவாசி வேகிய அந்த தந்தையின் உணர்வுகள் மனசிலாட என் இரு குழந்தைகளையும் அந்தக் குழந்தைகளின் இடத்தில் பொருத்திப் பார்த்து விறைத்துக் கொண்டேன்

இலங்கையில் முன்னர் போருக்கு எதிரான சிங்கள கலைஞர்களின் இசைக் குழுவின் நிகழ்சியான 'சாது ஜன ராவிய' போன்ற நிகழ்வுகளை பல நேரிடையாக பார்த்து உள்ளேன். மணலாறு முகாமில் பிழைத்து போன புலிகளின் தாக்குதல் ஒன்றில் பலியான பல போராளிகளின் உடல்களை 'ட்றக்' இல் ஏற்றும் போது ஒரு நிர்வாண உடல் கீழே விழ, ஒரு சிங்கள் இராணுவத்தினன் கண நேர உணர்வு மேலிடலால் 'என் சகோதரியே' என்று ஓடிச் சென்று உடை ஒன்றால் போர்த்திய பின் எழுதிய ஒரு கவிதையின் சில உணர்வு பூர்வமான வரிகளும் இதைப் போன்ற ஒரு உணர்வையே எனக்கு முன்னர் ஊட்டிச் சென்றன

  • கருத்துக்கள உறவுகள்

83 கலவரம் நடந்து கொண்டிருந்த நேரம்.

உயிர் தப்ப கட்டிய சறத்துடன் சிங்களவர்களுடன் கலந்து ஓடிக்கொண்டிருந்தநேரம்.

toyota corolla சாம்பல் நிற கார் ஒன்றை என் கண் முன்னே மறித்தார்கள்.

அந்த கார், அதனது நிறம், அதற்குள் இருந்த பெண்ணின் முகம், அவரது நெற்றியிலிருந்த பெரிய குங்குமப்பொட்டு........ . குங்குமப்பொட்டைத்தான் நானும் பார்த்தேன். அவர்கள் மறிக்க, அந்த முகத்தில் தெரிந்த அதிர்ச்சி, மரண பயம், உடனே இறங்க முற்பட்டபோதுது வழிமறித்து பூட்டப்பட்ட கார்க்கதவு .....

திரும்பிப்பார்த்தால் என்னை அடையாளம் கண்டு கொள்வார்கள் என்றநிலையில் சில செக்கன்களில் அந்த பெண்ணின் அலறல்...திரும்பிப்பார்த்தபோது எரிகின்ற கார்.......அப்படியே என் கண்ணுக்குள் இப்போதும் இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

வெறித்தனமான இனஅழிப்பில் ஈடுபடும் இனத்திற்குள்ளும் மனிதாபிமானக் குரல்கள் எழத்தான் செய்கின்றன. ஆனால் அரச பயங்கரவாதம் அவர்களின் குரல்வளைகளை நசுக்கி விடுகின்றது. எனக்கு ஒரு சிங்கள நண்பி இருக்கின்றாள் கடந்த முள்ளிவாய்க்கால் சம்பவங்களை ஒட்டிய நாட்களில் இந்த கனடாவில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வுகளில் கலங்கிய விழிகளோடு கலந்து கொண்டாள். இன்றும் கூட அந்த நிகழ்வுகளைப்பற்றிப் பேசினால் கலங்கும் மனுசியாக இருக்கிறாள். எம்மினத்திற்கு உதவி செய்யவேண்டும் என்ற அவா இருக்கிறது ஆனால் அவளுடைய பெற்றோரையும் சகோதரர்களையும் இழக்கவேண்டி ஏற்பட்டுவிடும் என்றபயத்தினால்மனமிருந்தும் உதவமுடியாத ஒரு ஆளாக இருக்கிறாள். இந்தக் கவிஞரைப்போன்றே அவளின் உணர்வுகளும்...

  • கருத்துக்கள உறவுகள்

83 கலவரத்தில் தப்பிப் பிழைத்ததே அதிசயம்.. :mellow: அதுபற்றி எழுதவேண்டும் என்று நினைப்பேன்..! ஆனால் இன்றுவரை முடியவில்லை..! :(

1983........... அப்போது எனக்கு 1வயது. "ஈழப் போராட்டம்" என்ற ஒரு விடயம் என் மனதுக்குள் உள்நுழைந்த முதன்முதற் தருணத்திலிருந்து .... (அப்போது எனக்கு 9 வயது) நான் என் எண்ணத்தில் அதிகமாக ஆராய்ந்த விடயம் இந்த 1983 இனவன்முறை பற்றியதுதான்!

இதைவிடக் கொடுமையான நிறைய சம்பவங்கள் அங்கு நடந்தேறின. ஆனாலும், பல தமிழர்களுக்கு அடைக்கலம் கொடுத்து காப்பாற்றியதும் சிங்கள மக்கள்தான்!

என்னைப் பொறுத்தவரையில்... சிங்களப் பேரினவாத வெறி இல்லாத எந்தச் சிங்களவரும் மனிதநேயமுள்ள மனிதர்தான்!!!

எமது போராட்டம் மற்றும் விடுதலைப்போர் என்பது சிங்களப் பேரினவாதத்துக்கு எதிரானதாகவே இருந்தது. இருக்கின்றது!

அது அப்பாவிச் சிங்கள மக்களுக்கெதிராக தொடுக்கப்பட்டதல்ல!

ஆனால்........இப்பொழுது சிங்களதேசம் நிறையவே மாறிவிட்டது! விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசிலரே தமிழ் மக்கள் குறித்து மனிதநேயம் பேசுகின்றார்கள்!

தங்களுகென்று ஒரு தேசம் வேண்டும் என தமிழர்கள் தீர்க்கமான முடிவுக்கு வருவதற்கு மிகவும் பிரதானமாய் அமைந்தது இந்த 1983 இன வன்முறை!

தற்போதைய முள்ளிவாய்க்கால்வரை......... சிங்களதேசம் அதனையே மீண்டும் மீண்டும் சொல்லி நிற்கின்றது!

என் பிள்ளை எம் நாட்டில் சுதந்திரமாய் வாழ வேண்டும்! அதுதான்...... என் ஆசை!

எம் மாவீரர்களின் ஆசையும் அதுவேதான்!!!

பகிர்வுக்கு நன்றி அகூதா!

  • தொடங்கியவர்

ஆனால்........இப்பொழுது சிங்களதேசம் நிறையவே மாறிவிட்டது! விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசிலரே தமிழ் மக்கள் குறித்து மனிதநேயம் பேசுகின்றார்கள்!!

அன்று, இரண்டு தமிழர்கள் சேர்ந்து ஒரு அப்பாவி சிங்களவரை அடிக்கவே முடியாது என்பார்கள். ஆனால், பத்து சிங்களவர்கள் சேர்ந்து ஒரு அப்பாவி தமிழனை அடித்தாலும் அவர்களில் பலரும் அலட்டியதில்லை.

ஆனால், இன்று காலம் மாறிவருகின்றது. காரணம், அந்த மௌனம் அவர்களையே குறி வைக்க தொடங்கியமே.

என் பிள்ளை எம் நாட்டில் சுதந்திரமாய் வாழ வேண்டும்! அதுதான்...... என் ஆசை!

எம் மாவீரர்களின் ஆசையும் அதுவேதான்!!!

அதற்கு நாம் எல்லோரும் தொடர்ந்தும் உரமாக இருப்போம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.