Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் அழுத்தத்தினால் தனது பாதுகாப்புச் செயலாளர் பதவியைத் துறந்தான் சிங்களப் பயங்கரவாதிகளின் நண்பன் - லியாம் பொக்ஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் அழுத்தத்தினால் தனது பாதுகாப்புச் செயலாளர் பதவியைத் துறந்தான் சிங்களப் பயங்கரவாதிகளின் நண்பன் - லியாம் பொக்ஸ்

சிங்களப் பயங்கரவாதிகளுடனான தனது நெருங்கிய உறவு, தனது நண்பனை தனது அரசியல் பயணங்களில் சேர்த்துக்கொண்டமை, சிங்களப் பயங்கரவாதிகளுக்கு உதவுவதற்காக தான் ஆரம்பித்த போலியான நிதிக்கட்டமைப்பு, ஒருபால் புணர்வு தொடர்பாக தனக்கெதிராக இங்கிலாந்து மக்கள் மத்தியில் வளர்ந்துவரும் ஊகங்கள் என்பவற்றின் அழுத்தம் காரணமாக இந்தச் சிங்களப் பயங்கரவாதிகளின் நண்பன் நேற்று வெள்ளிகிழமை தனது பதவியைத் துறந்தான்.

தனது அரசியல் நடவடிக்கைகளில் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு அறிந்தே இடம் கொடுத்ததன் மூலம், தன்னைப்பற்றிய தவறான கண்ணோட்டம் மக்கள் மத்தியில் வருவதற்கு தானே காரணாமைவிட்டதால் தனது ராஜினாமாவை ஏற்றுகொள்ளும்படி அவன் கொடுத்த கடிதத்தை,இங்லகிலாந்துப் பிரதம் ஏற்றுக்கொண்டுள்ளதுடன், அவன் தொடர்ந்தும் பதவியில் இனி நீடிக்க முடியாது என்றும் சொல்லியிருக்கிறார்.

சிங்களப் பயங்கரவாதிகளின் ஆயுத முகவராகச் செயற்பட்ட வெரிட்டி என்பவனுடன் நீண்டகாலமாக லியாம் பொக்ஸுக்கு இருந்து வரும் மர்மமான உறவு, மற்றும் சிங்களப் பயங்கரவாதிகலின் உதவிக்கென அவன் ஆரம்இத்த கணக்கு, சிங்களப் பயங்கரவாதிகளின் பிரச்சார நிறுவனமொன்றிடமிருந்து தனது சிங்கள தேசத்தின் பயணங்களுக்காக செலுத்தப்பட்ட பணம் போன்றவை அண்மையில் இவனுக்கெதிராகக் கொண்டுவரப்பட்ட நிரூஇக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் என்றால் அது மிகையாகாது.

மலைபோலக் கவலைகள் மத்தியிலும் ஒரு சிறு ஆறுதலாக வந்திருக்கிறது இந்தச் செய்தி

தமிழ்நெட்டில் வந்த முழுச் செய்தியும் இதோ..

UK’s Defence Secretary Liam Fox quits as pressure mounts

[TamilNet, Friday, 14 October 2011, 16:05 GMT]

UK’s Defence Secretary Liam Fox has resigned from his post Friday afternoon amid mounting pressure over his working relationship with his flatmate and self-styled adviser Adam Werritty. Dr. Fox was widely accused of running a ‘shadow foreign policy’ on Sri Lanka and undermining Britain’s official foreign policy, a mysterious trust he set up to solicit private sector contributions to ‘development’ in Sri Lanka – with Mr. Werritty as its key contact - seems to have done nothing other than fund his visits to the island, and now it appears that Mr. Werritty’s globe-trotting to numerous places Dr. Fox was also visiting on official business, has been partly funded by a corporate intelligence company with “a close interest” in Sri Lanka.

Liam_Fox_Oct_2011_fr.jpg

Liam Fox

The resignation of Dr. Fox has come after a week long allegations about how he secretly retained an informal adviser who was funded by several business groups.

In a letter to David Cameron, Mr Fox said he had “mistakenly allowed” his personal and professional responsibilities to become “blurred”, but in his response, the prime minister has said he was very sorry for Mr Fox's departure but “understood his reasons”.

According to BBC’s political editor Nick Robinson, the Britsh PM had concluded that Mr Fox “could no longer stay in his job” amid continuing questions about his links to his former flatmate Adam Werritty.

It emerged that the lobbyist Werrity had accompanied the defence secretary on 18 foreign trips, despite having no official role, and had been handing out business cards suggesting he was an adviser to Mr Fox.

Mr. Werritty, it has also transpired, has long been a key ‘unofficial’ aide for Dr. Fox in his dealings with the Sri Lankan regime, accompanying the Defence Secretary to meetings with President Mahinda Rajapaksa and Foreign Minister GL Peiris, and flying out ahead of Dr. Fox’s visits to Sri Lanka to liaise with Colombo officials.

Mr Fox was being investigated by the Cabinet Secretary amid claims that he had broken the ministerial code.

According to the BBC, Mr Fox in his resignation letter has said he had mistakenly allowed the distinction between his “personal interest” and his government activities to become “blurred”.

“The consequences of this have become clearer in recent days," he added. "I am very sorry for this. I have also repeatedly said that the national interest must always come before personal interest”.

“I now have to hold myself to my own standard. I have therefore decided, with great sadness, to resign from my post as secretary of state for defence”, Mr. Fox has been quoted as saying.

Mr Fox earlier this week apologised to MPs earlier this week but maintained that there was no wrongdoing in his dealings with Mr Werritty.

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்யாம் பொக்ஸ், வெள்ளைக்காரன் தனது பதவியை துறந்தான். போய் துலையட்டும்.

ஈழப் போரில் தமிழனை, அழிக்க முன்னின்ற நாராயணனும், மேனனும், பான்கி மூனின் நண்பர் நம்பியாரும் இன்று எங்கே... ஒளித்திருக்கிறாகள்?

கேடு கெட்ட பாரதம். சீலைக்குள் தான்... ஓளிக்கும்.

பிரித்தானிய உறவுகள் இந்த இராஜினாமாவுடன் பொக்சை விட்டுவிடக்கூடாது. முழுமையான ஒரு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.

அப்பொழுதுதான் மீது முழு உண்மையும் வெளியில் வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பகிர்வுக்கு, நல்ல செய்தி, அடுத்து அவனை விசாரனை செய்து உண்மைகளை வெளிக் கொணர வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பகிர்வுக்கு, நல்ல செய்தி, அடுத்து அவனை விசாரனை செய்து உண்மைகளை வெளிக் கொணர வேண்டும்

ஹலோ உடையார்.. :(

அப்பிடியே புலிகளையும் விசாரிக்க வேணும்..! :unsure:

புலிகள் சகோதரக் கொலையை நடத்தினதாலதானே மற்ற இயக்கமெல்லாம் ஒட்டுக்குழுவா மாறினவை..? :( அதாலதானே சிங்களவன் கை ஓங்கினது? :unsure: அதாலதானே லியாம் ஃபொக்சுக்கு சிங்களவனோடை அண்ட ஆசை வந்தது? :rolleyes:

அதால புலிகளை விசாரிக்கிறதுதானே முறை? :lol:

ஹலோ உடையார்.. :(

அப்பிடியே புலிகளையும் விசாரிக்க வேணும்..! :unsure:

புலிகள் சகோதரக் கொலையை நடத்தினதாலதானே மற்ற இயக்கமெல்லாம் ஒட்டுக்குழுவா மாறினவை..? :( அதாலதானே சிங்களவன் கை ஓங்கினது? :unsure: அதாலதானே லியாம் ஃபொக்சுக்கு சிங்களவனோடை அண்ட ஆசை வந்தது? :rolleyes:

அதால புலிகளை விசாரிக்கிறதுதானே முறை? :lol:

என்னே கலைஞரின் வாதத்தின் வலிமை.

கவிஞர் இப்படியான வாதாடங்களைத்தான் சொல்லுகிறார்.

கதை கட்ட ஒருவன் பிறந்து விட்டால்

கண்ணகி வாழ்விலும் களங்கமுண்டு

காப்பாற்ற சில பேர் இருந்து விட்டால்

கள்வர்கள் வாழ்விலும் நியாயம் உண்டு

கோர்ட்டுக்குத் தேவை சில சாட்சி

குணத்துக்குத் தேவை மனசாட்சி உன்

குணத்துக்குத் தேவை மனசாட்சி

மயிலைப் பார்த்து கரடி என்பார்

மானைப் பார்த்து வேங்கை என்பார்

குயிலைப் பார்த்து ஆந்தை என்பார்

அதையும் சிலபேர் உண்மை என்பார்

யானையைப் பார்த்த குருடனைப் போல்

என்னைப் பார்த்தால் என்ன செய்வேன்? சிலர்

என்னைப் பார்த்தால் என்ன செய்வேன்

  • கருத்துக்கள உறவுகள்

smiley-happy014.gif

உணர்ச்சிவசப் படாதீர்கள்,மல்லையூரான்.

smiley-happy110.gif

  • கருத்துக்கள உறவுகள்

smiley-happy014.gif

உணர்ச்சிவசப் படாதீர்கள்,மல்லையூரான்.

smiley-happy110.gif

தமிழ்சிறி.. மல்லை சொன்னதில பிழை இல்லையே.. :rolleyes: அந்தச் செய்தி போய்ச் சேரவேண்டியவர்களைச் சேர்ந்தால் சரி..! :rolleyes::wub:

தமிழ்சிறி: நான் இசைக்கலைஞரை பற்றி கூற முயவில்லை. அவர் முன் வைத்து காட்டிய வாதாட்டம் இருப்பதை காவியங்கள் பல இடங்களில் சுட்டி காட்டியிருக்கின்றன என்பதைதான் கூறினேன். அப்படி வாதாட்டதை நாம் எதிர்கொள்ளத்தான் வேண்டும். நானும் இசையும் ஈடுபட்டிருந்தது வேறும் தத்துவார்த்த வாதாட்டமே.

இராமன் ஏன் காட்டுக்கு போகவேண்டுமென்பதில் மந்தாரை வைத்த வாதமும், கோவலனை கொலை செய்ய பொற்கொல்லன் காட்டிய நியாமும் துஷ்ட பக்கத்திலிருந்தன. செங்குட்டுவன் போருக்கு போவது சரியேயென்று இளங்கோ வைத்த வாதம் நல்ல கரையிலிருப்பது.

ஆனால் இந்த பொய்வாதங்களும் அது சேர்ந்த சந்தேகங்களும் சுவாரசியமாக காட்டபட்டது காளிதாசனால்:

கௌதமி பொய் கூறுகிறாள் என்று நினைத்து துஷ்யந்தன் குயில் தன் குஞ்சுகளை எப்படி காக்கிறது என்பது தெரியாதா என்று கேட்கிறான். கபட அரசியலால் சகுந்தலையை வஞ்சித்து ஏமாற்றிவிட்டு ஆசிரம வாசிகளான தம்மீது பழியை போடுகிறான் இந்த அரசன் என்று சந்தேகித்து இப்படிபட்ட ஏமாற்று பேர்வழியுடன் பேசுவது பயனில்லை என்று கூறி சகுந்தலையை அங்கேயே விட்டு விட்டு போய்விடுகிறான் சங்கரார்வன்.

டிஸ்கி:

சகுந்தலை ராணியாக இருந்த போது சங்கரார்வன் எப்போதாவது அரண்மனைக்கு விஜயம் செய்த்தாக காளிதாசன் எங்காவது கூறியிருக்கிறாரா? அப்போது துஷ்யந்தனும் சங்கரார்வனும் என்ன பேசிக்கொண்டார்கள்.

Edited by மல்லையூரான்

சிறிலங்கா அரசாங்கத்துக்கு இஸ்ரேலிய, சீன ஆயுதங்களை வாங்கிக் கொடுக்க முயற்சித்தார் அடம் வெரிட்டி! - இன்டிபென்டன்ட் தகவல்!!

சிறிலங்கா அரசாங்கத்துக்கு இஸ்ரேல் மற்றும் சீனா ஆகிய நாடுகளிடம் இருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்வது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் பிரித்தானியாவிள் முன்னாள் படைத்துறை அமைச்சர் லியாம் பொக்ஸின் நண்பர் அடம் வெரிட்டி ஈடுபட்டதாக பிரித்தாகிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி இது குறித்த செய்தியை வெளியிட்டுள்ள பிரித்தானியாவின் 'இன்டிபென்டன்ட்' எனும் ஊடகம் இவ்விகாரம் தொடர்பில் கொழும்பில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் அடம் வெரிட்டி கலந்து கொண்டதாகத் தெரிவித்துள்ளது. இது குறித்து இவ்வூடகம் மேலும் தெரிவித்துள்ளதாவது:

சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஆயுதங்களை விற்பணைன செய்வதற்கு பிரித்தானியா கட்டுப்பாடுகளை விதித்திருந்த நிலையில், சீனாவிடம் இல்லாத குறிப்பிட்ட ஆயுத தளபாடங்கள் சிலவற்றை இஸ்ரேலிடம் இருந்து பெற்றுக் கொடுப்பது தொடர்பிலான பேச்சுவார்த்தையில் அடம் வெரிட்டி ஈடுபட்டிருந்தார்.

இவ்விவகாரம் தொடர்பில் இலங்கைக்கும் இஸ்ரேலுக்கு தொடர்ச்சியான விஜயங்களை மேற்கொண்டிருந்த அடம் வெரிட்டிக்கு சர்வதேச பாதுகாப்பு தொடர்பில் ஆலோசனைகளை வழங்கும் குழுவும், இஸ்ரேலுக்கு ஆதரவான நிறுவனம் ஒன்றும் நிதிகளை வழங்கியுள்ளன.

அதேவேளை, அடம் வெரிட்டி கடந்த டிசம்பர் மாதம் ஆயுதங்களை கொள்வனவு செய்து கொடுப்பதற்கு முயன்றமைக்கோ அல்லது சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஆயுதங்களை அனுப்புமாறு லியாம் பொக்ஸிடம் கோரிக்கை விடுத்தார் என்பதற்கோ ஆதாரங்கள் எதுவும் இல்லை.

ஆனால் இலங்கையில் இடம்பெற்ற விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கு தேவையான ஆயுத உற்பத்தியாளர்களுடன் அடம் வெரிட்டி காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆயுதக் கொள்வனவு குறித்த பேச்சுவார்த்தையின் போது பிரித்தானியாவைப் போலன்றி ஆயுத விநியோகக் கட்டுப்பாடுகள் மற்றும் போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அழுத்தங்களை சீனா பிரயோகிக்கவில்லை என சிறிலங்கா அரசாங்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

சிறிலங்கா படைத்தரப்பினருக்கு ஆயுதங்கள், போர் விமானங்கள் மற்றும் கடற்படைப் படகுகள் போன்ற ஆயதத் தளபாடங்களை இஸ்ரேல் வழங்கியுள்ளது.

இந்நிலையில், இவ்வாரம் சீனாவின் மேஜர் ஜெனரல் குவான் லீஹூவா தலைமையிலான படைத்தரப்பு அதிகாரிகள் குழுவொன்று இரு நாடுகளுக்கும் இடையிலான படைத்தரப்பு உறவுகளை மேலும் பேச்சுவார்த்தை நடத்த கொழும்புக்குச் சென்றுள்ளது' என இவ்வூடகம் மேலும் தெரிவித்துள்ளது.

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=971e97ca-4901-4a15-a16c-b653f177d1cf

நல்ல சகுனம்.......கொலண்டிலும் சில அமைச்சர்கள் இராஜினாமாச்செய்யும் நாள் வெகு விரைவில் வரும். அத்துடன் காட்டிக்கொடுத்து தமிழனை விற்பவர்களும் தற்கொலை செய்யும் காலம் வரும் ஏனெனில் உண்மையும் நீதியும் நீண்டகாலம் நித்தரை கொள்ளா தோழா...........

Edited by tamilsooriyan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.