Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை சனாதிபதி மீது அவுஸ்திரேலியத் தமிழர் போர்க்குற்ற வழக்குத் தாக்கல் செய்துள்ளார்

Featured Replies

இணைப்புக்கு நன்றி.

நல்ல முயற்சி. இந்த கூட்டம் எங்கும் செல்லாமல் முடக்கப்பட்டு பின்னர் விசாரணைகள் சர்வதேச அளவில் முன்னெடுக்கப்பட வேண்டும்.

மெல்போர்னில் தான் சிங்களவர்களுக்கு அதிக அவர்கள் உறவுகள் உண்டு, அங்கேயே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

இந்த செய்தியில் இவன் பெயர் மொகிந்த்ரா என உள்ளது

An Australian citizen who says he saw hospitals deliberated attacked by Sri Lankan forces has filed war crimes charges against president Mohindra Rajapaksa in the Melbourne Magistrates' Court

Edited by akootha

போர்க்குற்றவாளியான மகிந்தவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளுக! - அவுஸ்திரேலிய மனிதவுரிமை வழக்கறிஞர்கள் அழைப்பு!!

பொதுநலவாய அரசியல் தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்யும் போர்க்குற்றவாளியான சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளுமாறு அந்நாட்டின் மனிதவுரிமை வழக்கறிஞர்கள் சிலர் அழைப்பு விடுத்துள்ளதாக Green Left Weekly எனும் ஊடகம் தெரிவித்துள்ளது.

2013ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுநலவாய அரசியல் தலைவர்களின் மாநாட்டை தமது நாட்டில் நடத்துவதற்கான பரப்புரைகளை மேற்கொள்ள இம்மாநாட்டை சிறிலங்கா அரசாங்கத்தின் தலைவர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள் எனவும் இவ்வூடகம் குறிப்பிட்டுள்ளது. இது குறித்து இவ்வூடகம் மேலும் தெரிவித்துள்ளதாவது:

'இலங்கையின் வகைகூறும் தன்மை: பொதுநலவாய அமைப்பின் பொதுவான நீதித்தன்மை' எனும் தலைப்பில் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கடந்த 20ஆம் திகதி இடம்பெற்ற கருத்தரங்கில், சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளதாக Deakin பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டாமியன் கிங்ஸ்பெரி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது 40,000 வரையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளமை பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. மக்கள் செறிந்திருந்த பகுதிகளை இலக்கு வைத்து சிறிலங்கா படைத்தரப்பால் திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்பட்ட பீரங்கித் தாக்குதலின் போது இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் உயிரிழந்துள்ளதாக டாமியன் கிங்ஸ்பெரி சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், இப்போரின் போது சிறிலங்கா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் கிடைக்கப் பெற்ற நம்பத்தகுந்த சாட்சியங்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதற்கு போதுமானது எனவும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, இப்போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் நீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட குற்றவாளிகள் சட்டத்தின் முன்னிறுத்தப்படும் வரை இலங்கையை பொதுநலவாய அமைப்பிலிருந்து இடைநிறுத்துவதற்கான நடைமுறைகள் உள்ளதாகவும் அவர் தனதுரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் மற்றும் உலகத் தமிழர் பேரவை ஆகிய அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கருத்தரங்கில் சிறிலங்காவுக்கான அவுஸ்திரேலியாவின் முன்னாள் தூதுவர் Bruce Haigh, கன்பராவிற்கான கத்தோலிக்க ஆயர் Pat Power, தேவாலய ஒருங்கிணைப்பாளரான வணக்கத்திற்குரிய John Bar,சமாதானம் மற்றும் முரண்பாடுகள் கற்கை நிலையத்தின் பணிப்பாளர் Jack Linch மற்றும் சர்வதேச நீதியாளர் ஆணைக்குழுவின் அவுஸ்திரேலியாவுக்கான தலைவர் ஜோன் டோவ்ட் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றி இருந்தார்கள்.

அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ள பொதுநலவாய அரசியல் தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அந்நாட்டுக்கு விஜயம் செய்யும் போது அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளுமாறு இக்கருத்தரங்கில் உரையாற்றிய பேராசிரியர் டாமியன் கிங்ஸ்பெரி உட்பட பலரும் அழைப்பு விடுத்திருந்தனர்.

இக்கருத்தரங்கில் வேறு நாடுகளிலிருந்தும் கலந்து கொண்டிருந்த மலேசியாவின் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான டற்றோ ஜொகாறி அப்துல் மற்றும் மனோகரன் உட்பட்ட மனிதவுரிமை செயற்பாட்டாளர்கள் அந்த அழைப்புக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.

அதேவேளை, இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதியும், அவுஸ்திரேலியாவுக்கான சிறிலங்காத் தூதுவருமான அட்மிரல் திசார சமரசிங்க பொறுப்புக் கூறவேண்டும் என்பதற்கான போதிய சாட்சியங்கள் இருப்பதால், அவரை இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் எனவும் அக்கருத்தரங்கில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் உரியவகையில் பொறுப்புக் கூறாத வரை 2013ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரசியல் தலைவர்களின் மாநாட்டைப் புறக்கணிக்கப் போவதாக கனேடியப் பிரதமர் Stephan Carper ஏற்கெனவே அறிவித்திருந்தார்' என இவ்வூடகம் மேலும் தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இம்மாத இறுதியில் மூன்று நாட்கள் நடைபெறவுள்ள பொதுநலவாய அரசியல் தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று (24.10.11) அந்நாட்டுக்கு பயணத்தை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://ponguthamil.c...ce-685bc10ff9cf

Edited by akootha

ஜனாதிபதிக்கு எதிராக அவுஸ்திரேலிய நீதிமன்றில் வழக்கு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக அவுஸ்திரேலிய நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சிட்னி மோர்னிங் ஹரால்ட் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட அவுஸ்திரேலிய குடியுரிமை பெற்றுக் கொண்ட அருணாச்சலம் ஜெகதீஸ்வரன் என்ற நபரே இவ்வாறு வழக்கு தாக்கல் செய்துள்ளார். அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பாடசாலைகள், வைத்தியசாலைகள், அநாதை இல்லங்கள், மக்கள் குடியிருப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு நிலைகள் மீது அரசாங்கப் படையினர் வான் மற்றும் தரைவழித் தாக்குதல்களை நடத்தியதாகவும் இதனால் ஆயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பேர்த்தில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இன்றைய தினம் அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் செய்துள்ள நிலையில் இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது. முப்படைகளின் தளபதி என்ற ரீதியில் ஜனாதிபதி இந்தக் குற்றச் செயல்களக்கு பொறுப்பு சொல்ல வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை எதிர்வரும் நவம்பர் மாதம் 29ம் திகதி நடைபெறவுள்ளது. ஜெகதீஸ்வரன் 1987ம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரியிருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் தன்னார்வ தொண்டராக பணியாற்றியதாகவும் குறித்த சந்தர்ப்பத்தில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதனை நேரடியாக கண்டதாகவும் ஜெகதீஸ்வரன் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

http://www.tamilcanadian.com/news/tamil/index.php?action=full_news&id=8796

நான் அவனில்லை

அமெரிக்கா, அவுஸ்ரேலியாவில் வாழும் எம்மக்கள் மத்தியில் குழறுபடிகாரர்கள் இருந்தாலும் சில உரமான வேலைகளை செய்கின்றார்கள் ... அது ஓர் அமைப்பினூடாகவோ அல்லது சில தனி மனித முயற்சிகளினூடாகவோ!!

ஆனால் ...

... இங்கு பிரித்தானியாவில் ... BTF ஆம் ... அது எமது பிரித்தானிய பிரதிநிதிகளாம் ... இன்றுவரை ஒரு உருப்படியான, இம்மாதிரியான வழக்கொன்றை இங்கு பதிய முற்படவில்லை ... இங்கு நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் பலர் இருந்தும் .... !!!!!!!!!!!!!! ... மகிந்த இங்கு வந்த நேரம், ஓர் வழக்கை அவனோடு வந்த ஓர் இராணுவ அதிகாரிக்கு எதிராக அரையும் குறையுமாக போட வெளிக்கிட்டு ,... அது மிகப்பெரிய நகைச்சுவயாம் ... இப்போ ஓய்ந்து விட்டார்கள் ... உந்த அரசியல் செயற்பாடுகளில் மட்டும்!!!

ஆனால் ...........

....... இப்போ பணவேட்டைக்காக உள்ள கும்பை/கஞ்சல்/கூழங்களை சேர்த்துக்கொண்டு .... மாவீரர்நாள் .... பிரித்தானியாவில் தனியே செய்து .... கணக்கு காட்டப் போகிறார்களாம்!!!!!!!!!!!!!!!!!!!!!! ..... செய்ய வேண்டியதை செய்யாமல், முகமூடிகளுடன் இணைந்து மாவீரர் நாளை நடாத்த, யார் ... உந்த BTF காரர்களைக் கேட்டது????????????? ... சிங்களவனா!!!!!!!!!!!!!

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

ipad-art-wide-Sri-420x0.jpg

Indictment against President ... Arunachalam Jegapheeswaran. Photo: Brendan Esposito

THE Sri Lankan President, Mahinda Rajapaksa - who was due to arrive in Perth last night - has had an indictment filed against him in an Australian court accusing him of war crimes in his country's civil war.

A Sri Lankan-born civil engineer, Arunachalam Jegapheeswaran, yesterday filed an indictment against the Mr Rajapaksa, declaring he was seeking justice for thousands who perished in aerial bombardments and ground attacks on shelters, schools, hospitals, orphanages and community centres.

''People are still suffering because of what he did and I think the world should know,'' Mr Jegapheeswaran said yesterday, denying his motive was to embarrass the President during the Commonwealth Heads of Government

''I've seen all of these things,'' he said, having been a volunteer aid worker in Sri Lanka from 2007 to 2009. ''I can't bear that the person who is responsible for all of this - who is the commander-in-chief - is coming to my country and getting off scot-free.''

The indictment was filed under the Australian criminal code with the Melbourne Magistrates Court yesterday and set for hearing on November 29, Mr Jegapheeswaran's lawyer, Rob Stary, said.

For the case to proceed, the Australian Federal Police would have to conclude there is sufficient material to compile a brief of evidence of criminality, which it would then refer to the Commonwealth Director of Public Prosecutions for consideration. If a decision to prosecute is then made, the Attorney-General's consent would be be sought.

Mr Rajapaksa, who strenuously denies any wrongdoing, has already been cited in a separate brief of evidence compiled by the International Commission of Jurists' Australian section and handed to the AFP.

The brief recommends that he be investigated for alleged war crimes, along with Sri Lanka's high commissioner to Australia, Thisara Samarasinghe, and other military and political figures.

Mr Samarasinghe has also denied committing war crimes and cast himself as a uniter of the Sinhalese and Tamil communities in Australia.

Mr Jegapheeswaran, 63, who arrived in Australia in 1987 and became an Australian citizen three years later, said he was haunted by the killings and injuries he witnessed. Mr Stary said he had written to the Attorney-General, Robert McClelland, last Thursday to alert him to the move and urge him to take up the case. He had also written to the AFP yesterday, asking them to serve the indictment on Mr Rajapaksa.

''The government will need to show a bit of backbone to investigate it, but there is absolutely no reason on the face of it why they should not pursue it,'' Mr Stary said.

A spokesman for Mr McClelland said the Attorney-General has not been informed of any criminal matter or charges relating to Mr Rajapaksa.

Read more: http://www.smh.com.au/national/sri-lankan-president-accused-of-war-crimes-by-australian-citizen-20111024-1mgd2.html#ixzz1bjsvfChH

Edited by nunavilan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அய்யா ஜெகதீஸ்வரனுக்கு ஒரு பெரிய சலூட்.

ஐயா, நீங்கள் ஒருத்தர் ஆயிரம் தமிழ் அமைப்புகளுக்கு சமன்.

உங்களுடைய வழக்கு வெற்றி அடைய வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா, அவுஸ்ரேலியாவில் வாழும் எம்மக்கள் மத்தியில் குழறுபடிகாரர்கள் இருந்தாலும் சில உரமான வேலைகளை செய்கின்றார்கள் ... அது ஓர் அமைப்பினூடாகவோ அல்லது சில தனி மனித முயற்சிகளினூடாகவோ!!

ஆனால் ...

... இங்கு பிரித்தானியாவில் ... BTF ஆம் ... அது எமது பிரித்தானிய பிரதிநிதிகளாம் ... இன்றுவரை ஒரு உருப்படியான, இம்மாதிரியான வழக்கொன்றை இங்கு பதிய முற்படவில்லை ... இங்கு நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் பலர் இருந்தும் .... !!!!!!!!!!!!!! ... மகிந்த இங்கு வந்த நேரம், ஓர் வழக்கை அவனோடு வந்த ஓர் இராணுவ அதிகாரிக்கு எதிராக அரையும் குறையுமாக போட வெளிக்கிட்டு ,... அது மிகப்பெரிய நகைச்சுவயாம் ... இப்போ ஓய்ந்து விட்டார்கள் ... உந்த அரசியல் செயற்பாடுகளில் மட்டும்!!!

ஆனால் ...........

....... இப்போ பணவேட்டைக்காக உள்ள கும்பை/கஞ்சல்/கூழங்களை சேர்த்துக்கொண்டு .... மாவீரர்நாள் .... பிரித்தானியாவில் தனியே செய்து .... கணக்கு காட்டப் போகிறார்களாம்!!!!!!!!!!!!!!!!!!!!!! ..... செய்ய வேண்டியதை செய்யாமல், முகமூடிகளுடன் இணைந்து மாவீரர் நாளை நடாத்த, யார் ... உந்த BTF காரர்களைக் கேட்டது????????????? ... சிங்களவனா!!!!!!!!!!!!!

சனல் 4 தொலைக்காட்சியின் இலங்கையின் கொலைக்களம் வெளிவருவதற்கு முக்கிய காரணமாக இருந்த அமைப்பு உலகத்தமிழர் பேரவை. அதில் அங்கம் வகிக்கும் பிரித்தானியா அமைப்பு பிரித்தானியா தமிழர் பேரவை(BTF)

  • கருத்துக்கள உறவுகள்

நான் அவனில்லை

சீரியசாக வாசித்துகொண்டிருக்கும்போது இப்படியா சிரிக்க வைக்க வேண்டும்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.