Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லிபியர்களை நம்பிக்கெட்ட கடாபி _

Featured Replies

வீரகேசரி இணையம் 10/26/2011 3:29:51 PM

g-300_11.jpg

லிபியாவில் அண்மையில் கொல்லப்பட்ட முன்னாள் அதிபர் கடாபி, லிபியர்கள் தன்னை அதிகம் விரும்பியதாக திரிபோலி புரட்சியாளர்களால் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்டபோதிலும், கடைசி நிமிடம்வரை நம்பினார் என்று அவருடைய பாதுகாவலர் தெரிவித்தார்.

தி நியூயார்க் டெய்லி நியூஸ் இதழுக்கு அளித்த பேட்டியில் கடாபியின் பாதுகாவலரான மன்சூர் தாவ் இவ்வாறு தெரிவித்தார். திரிபோலி ஆக்கிரமிப்பாளர்களால் கைப்பற்றப்பட்டுவிட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்ட பிறகும், லிபியர்கள் தன்னை அதிகம் விரும்புகிறார்கள் என்றே நம்பினார் மம்மர் கடாபி என்றார் அவர்.

லிபியாவை விட்டு கடாபி தப்பிச் செல்வதற்கு எத்தனையோ வாய்ப்புகளும் வழிகளும் இருந்தன. இருந்தபோதும், தன் முன்னோர்கள் மரித்த அதே மண்ணில் தானும் மரிக்கவே கடாபி விரும்பினார் என்று கூறிய தாவ், அவர் இப்படி நினைத்ததற்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன். அவர் இங்குள்ள சூழ்நிலையை தவறாகவே கணித்துவிட்டார். அவர் மட்டும் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றிருந்தால், சுகமான வாழ்க்கையை வாழ்ந்திருக்க முடியும் என்றார் தாவ் வருத்தத்துடன்!

கடாபி, அவரது மகன் முஸ்ஸாடிம், அவரது பாதுகாப்பு அமைச்சர் அபு பக்கர் யூனிஸ் ஆகியோர் நேற்று செவ்வாய்க்கிழமை லிபிய பாலைவனத்தில் அடையாளம் தெரியாத இடத்தில் புதைக்கப்பட்டனர். இருப்பினும், கடாபியின் உறவினர்கள், அவருடைய ஆதரவாளர்கள் சிலர் என ஒருசிலரை இஸ்லாமிய முறைப்படியான கடைசிக் கட்ட சடங்குகளைச் செய்ய அனுமதித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், சரியான இடத்தை மட்டும் காட்டிக்கொடுக்கவில்லை, அது தெரிந்தால் அந்த இடத்தை பின்னாளில் புனிதத் தலம்போல் மாற்றிவிடக்கூடும் என்ற அஞ்சியதால் அவ்வாறு செய்ததாகவும் அதிகாரிகள் கூறினர். _

http://www.virakesar...asp?key_c=34561

  • கருத்துக்கள உறவுகள்

மக்களுக்குப் பிடித்தமான தலைவராக இருந்தவர் மக்களை விட்டு விலகியதும் மக்கள் மனங்களில் இருந்தும் விலக்கப்பட்டிருக்கிறார். :wub:

எப்பவுமே சுற்றியுள்ள ஒட்டுண்ணிகளிடம் கவனமாக இருக்க வேண்டும்..! :rolleyes::lol:

மக்களை குறை சொல்ல முடியாது. பல சந்தர்ப்பங்களை நழுவ விட்டுவிட்டார் கடாபி.

தானும் தன் குடும்பமும் நாட்டை ஆளவேண்டும் என எண்ணியதன் விளைவே இது. நாட்டில் உள்ள பெரு வளத்தையும் மக்களின் விருப்பு வெறுப்புக்களை அறிந்து ஆட்சியை மெல்ல மெல்ல மக்களாட்சியாக மாற்றியிருக்க வேண்டும்.

ஆனால் யாரும் (சர்வாதிகாரிகள்) சரித்திரத்தில் இருந்து படிக்க விரும்புவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பிடித்த முஸ்லீம் நாட்டு தலைவர்

Qaboos bin Said Al Said 220px-Qabus_bin_Said.jpg 14th Sultan of Oman Reign 23 July 1970 – present Predecessor Sa‘id ibn Taymur Spouse Sayyidah Nawwal bint Tariq Dynasty Al Said Father Sa‘id ibn Taymur Mother Mazwon bint Ahmad Born 18 November 1940 (age 70)

Salalah, Oman

17px-WMA_button2b.png16°59′54.90′N54°05′38.04′E Religion Ibadi Islam

Edited by உடையார்

லிபிய சரித்திரத்தில் இன்னும் நூறு நூற்றைம்பது வருடங்கள் பேசப்படுவார்.அவர் செய்த நல்ல விடயங்கள் நிறையவே இருக்கிறது.அமெரிக்காவும் ஐரோப்பாவும் சேர்ந்து செய்த சூழ்ச்சியேயன்றி வேறொன்றுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அது தெரிந்தால் அந்த இடத்தை பின்னாளில் புனிதத் தலம்போல் மாற்றிவிடக்கூடும் என்ற அஞ்சியதால் அவ்வாறு செய்ததாகவும் அதிகாரிகள் கூறினர்.

மக்களுக்கு கடாபியில் விருப்பமில்லை எனில் யார் அவருக்கு புனிததலம் கட்டுவதாம். மக்கள் ஆதரவுக்கு அவருக்கு இல்லை என்றால் மக்கள் இருக்கும் இடத்திலேயே கடாபியின் பூதவுடலை புதைத்து இருக்கலாமே?

  • கருத்துக்கள உறவுகள்

இன்று அறிந்துகொண்ட தகவல்களிலிருந்து.. :rolleyes:

கடாஃபி பழங்குடியினர்போல் வேறு மூன்று அல்லது நான்கு பழங்குடிகள் லிபியாவில் உள்ளனர். எவருக்குமே மொமர் கடாஃபியை பிடிக்கவில்லை.. :rolleyes:

ஆனால் இறுதியில் கடாஃபியைக் கொன்றவிதமும், அவரைச் சுற்றிநின்று கூச்சல் கும்மாளம் போட்டதும் கடாஃபி இனத்தவரின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது. கடாஃபியின் உடலை அவர்கள் வாங்க மறுத்ததும் இந்தக் கோபத்தினால்தான்..

இப்போது பழங்குடியினருக்கு இடையிலான பிரச்சினையாக இது மாறிவிட்டதாம். :unsure:

கடாஃபி செய்த நன்மைகளைப் பற்றிக் கேட்டறிந்தபோது, மத்திய கிழக்கில் உள்ள செல்வந்த நாடுகளில் மக்கள் பணத்தை (இலவசங்களை) பெரிதாக எடுத்துக்கொள்வதில்லையாம். ஆனால் பழிவாங்கல் புத்தி அவர்களுக்கு அதிகமாம். அதனால் புரட்சிப் படையினரின் தலைகள் இனிமேல் உருளுமாம்..! :unsure:

இன்று அறிந்துகொண்ட தகவல்களிலிருந்து.. :rolleyes:

கடாஃபி பழங்குடியினர்போல் வேறு மூன்று அல்லது நான்கு பழங்குடிகள் லிபியாவில் உள்ளனர். எவருக்குமே மொமர் கடாஃபியை பிடிக்கவில்லை.. :rolleyes:

மொத்தமாக வரை 140 பழங்குடி வகை மக்கள் உள்ளனர். அதில் நான்கு பெரிய பிரிவுகள் இருக்கலாம்.

There are about 140 tribes and clans in Libya. : http://en.wikipedia.org/wiki/Libya#Administrative_divisions_and_cities

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.