Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலஸ்தீனத்துக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்

Featured Replies

பாலஸ்தீனத்துக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்

பாலஸ்தீன அதிகாரத்தை ஒரு முழு உறுப்பினராக சேர்த்துக்கொள்வதற்கு ஆதரவாக ஐ.நா.மன்றத்தின் கலாச்சார மற்றும் அறிவியல் கழகமான யுனெஸ்கோ வாக்களித்துள்ளது.

பாலஸ்தீனம் என்ற பெயரைக் குறிப்பாகப் பயன்படுத்தி முன்வைக்கப்பட்ட இந்த தீர்மானத்தை அமெரிக்காவும் இஸ்ரேலும் கடுமையாக எதிர்த்தன.

ஆனாலும், கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க பாலஸ்தீனர்கள் எடுத்துவருகின்ற முயற்சிகளின் ஓர் அங்கமாக தற்போது அவர்கள் யுனெஸ்கோவில் இணைந்துள்ளனர்.

ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை முழு உறுப்பினராக சேர்க்க வேண்டும் என பாலஸ்தீன நிர்வாகம் சென்ற மாதம் விண்ணப்பித்துள்ளனர்.

அமெரிக்க விருப்பத்தை மீறி பாலஸ்தீனத்தை யுனெஸ்கோ சேர்த்துக்கொண்டுள்ளதால், யுனெஸ்கோவுக்கு அமெரிக்கா வழங்கும் நிதியில் ஏழு கோடி டாலர்களை அது நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கச் சட்டம் ஒன்று சொல்கிறது.

இத்தொகை யுனெஸ்கோவுடைய மொத்த நிதியில் பாதிக்கும் அதிகம் ஆகும்.

இஸ்ரேல் எதிர்ப்பு

யுனெஸ்கோவில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பு மத்திய கிழக்கு அமைதிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கும் வாய்ப்புகளை பாதிக்கும் என்று இஸ்ரேல் கருத்து தெரிவித்திருக்கிறது.

இந்த வாக்கெடுப்பானது, சர்வதேச சமுதாயம் அமைதி வழிமுறையை முன்னுக்கு கொண்டுசெல்ல எடுக்கும் முயற்சிகளை நிராகரிப்பதற்கு ஒப்பானது என்று இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம் கூறியது.

http://www.bbc.co.uk...palestine.shtml

Edited by akootha

இஸ்ரேல் அமேரிக்கா எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் யுனஸ்கோவில் இணைத்த இந்த நாடுகள் ஏன் ஈழப்பிரச்சனையில் அக்கறைகாட்டுவதில்லை ?

  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்

இஸ்ரேல் அமேரிக்கா எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் யுனஸ்கோவில் இணைத்த இந்த நாடுகள் ஏன் ஈழப்பிரச்சனையில் அக்கறைகாட்டுவதில்லை ?

இங்கே கவனிக்கப்பட வேண்டிய ஒரு விடயம் என்னவென்றால், அமெரிக்கா + இஸ்ரேலை தாண்டி பாலஸ்தீனம் இலக்கு நோக்கி நகர முடிகின்றது என்பது. எனவே, எம்மாலும் இந்தியா + சிங்களத்தை தாண்டி செல்ல முடியும்.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே கவனிக்கப்பட வேண்டிய ஒரு விடயம் என்னவென்றால், அமெரிக்கா + இஸ்ரேலை தண்டி பாலஸ்தீனம் இலக்கு நோக்கி நகர முடிகின்றது என்பது. எனவே, எம்மாலும் இந்தியா + சிங்களத்தை தாண்டி செல்ல முடியும்.

உண்மைதான் எங்களுடைய உழைப்பிலேயே எல்லாம் உள்ளது........

  • கருத்துக்கள உறவுகள்

அரபு நாடுகள் பல பலஸ்தீனியத்துக்கு அதரவாக இருக்கின்றது.அமெரிக்கா, இஸ்ரெலுக்கு எதிராக பல நாடுகள் இருக்கின்றன. ஆனால் இந்தியாவுக்கு எதிராக சீனா, பாகிஸ்தனை விட வேறு நாடுகள் இருக்கின்றனவா?. இந்தியாவை மீறி அங்கிகாரம் கிடைக்குமா?.

அரபு நாடுகள் பல பலஸ்தீனியத்துக்கு அதரவாக இருக்கின்றது.அமெரிக்கா, இஸ்ரெலுக்கு எதிராக பல நாடுகள் இருக்கின்றன. ஆனால் இந்தியாவுக்கு எதிராக சீனா, பாகிஸ்தனை விட வேறு நாடுகள் இருக்கின்றனவா?. இந்தியாவை மீறி அங்கிகாரம் கிடைக்குமா?.

மறுக்கமுடியாத உண்மை, இதை முறியடிப்பதே புலம்பெயர் தமிழரின் இன்றியமையாத கடமை

  • தொடங்கியவர்

அரபு நாடுகள் பல பலஸ்தீனியத்துக்கு அதரவாக இருக்கின்றது.அமெரிக்கா, இஸ்ரெலுக்கு எதிராக பல நாடுகள் இருக்கின்றன. ஆனால் இந்தியாவுக்கு எதிராக சீனா, பாகிஸ்தனை விட வேறு நாடுகள் இருக்கின்றனவா?. இந்தியாவை மீறி அங்கிகாரம் கிடைக்குமா?.

கோசவா நாடும் அதற்கு அமேரிக்கா தலைமயிலான அங்கீகாரமும் நல்ல உதாரணம். உருசியா, சீனா, இந்தியா -இன்னும் கோசவாவை எதிர்க்கிறன.

எங்கள் அணுகுமுறை சில விடயங்களில் பாலஸ்தீனம் போலவும் சில இடங்களில் கோசவா போலவும் இருக்க வேண்டும்.

  • தொடங்கியவர்

Ladies and Gentlemen,

The admission of a new Member State is a mark of respect and confidence.

This must be an opportunity to strengthen the Organization and not weaken it, a chance for all to commit once again to the values we share and not to be divided.

Let me be frank. As Director-General, it is my responsibility to say that I am concerned by the potential challenges that may arise to the universality and financial stability of the Organization.

I am worried we may confront a situation that could erode UNESCO as a universal platform for dialogue. I am worried for the stability of its budget.

It is well-known that funding from our largest contributor, the United States, may be jeopardized.

Irina Bokova, DIRECTOR-GENERAL, UNESCO

http://www.unesco.org/new/en/unesco/

Edited by akootha

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரபு நாடுகள் பல பலஸ்தீனியத்துக்கு அதரவாக இருக்கின்றது.அமெரிக்கா, இஸ்ரெலுக்கு எதிராக பல நாடுகள் இருக்கின்றன. ஆனால் இந்தியாவுக்கு எதிராக சீனா, பாகிஸ்தனை விட வேறு நாடுகள் இருக்கின்றனவா?. இந்தியாவை மீறி அங்கிகாரம் கிடைக்குமா?.

இந்தியாவை மீறி தாரளமாக நாம் தமிழ் ஈழத்தை பெறலாம். இந்தியாவை நாம் தான் பெரிதாக தூக்கி பிடிக்கிறோம். இந்தியாவை சும்மா பூட்டான், பர்மா போன்ற நாடுகளே மிரட்டுகின்றன. தெற்காசியாவின் கைப்புள்ள.

இப்போது வெளிநாடுகளில் நம்மவர்களும் படிப்பிலும் வியாபாரத்திலும் நன்றாக முன்னேறி விட்டார்கள். மற்றும் வெளிநாடுகளில் இருக்கும் இந்தியருக்கோ, இந்திய அதிகாரிகளுக்கோ நாட்டை பற்றியோ அதன் வெளிவிவாகரத்தை பற்றியோ கவலை இல்லை.

எந்த அப்பாவிய பிடிச்சு இலஞ்சம் வாங்கலாம் என்று தான் அவங்கள் யோசிக்கிறாங்கள்.

நாங்கள் எவரையும் பற்றி கவலை படாமல் தமிழ் ஈழத்தில் குறியாக இருந்தாலே வெற்றி நிச்சயம்.

  • தொடங்கியவர்

இன்னும் ஐ.நா. 16 அமைப்புக்களில் பாலஸ்தீனம் இடம்பெற தனது அடுத்த நகர்வை எடுத்துள்ளது. இஸ்ரேல் துரித கதியில் ஆக்கிரமிப்பு / வீடுகளை கட்டுதலை ஆக்கிரமிப்பு பகுதியில் நடாத்திக்கொண்டு உள்ளது.

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.