Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூடங்குளம் அணு மின் நிலையம் தமிழகத்திற்குக் கிடைத்துள்ள வரப்பிரசாதம்!

Featured Replies

'கூடங்குளம் அணு மின் நிலையம் தமிழகத்திற்குக் கிடைத்துள்ள வரப்பிரசாதம்! - அப்துல் கலாம் கருத்து!

கூடங்குளம் அணு மின் நிலையம் சிறந்த பாதுகாப்பு வசதிகளைக் கொண்டுள்ளதாகவும், இத்திட்டம் தமிழகத்திற்குக் கிடைத்துள்ள வரப்பிரசாதம் எனவும் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.

கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு வரும் அணு மின் நிலையத்தை நிரந்தரமாக மூடக்கோரி நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட மீனவர்களும், சமூக ஆர்வலர்களும் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கூடங்குளத்தில் அணுசக்தி துறை அதிகாரிகள் மற்றும் அணு மின் கழக அதிகாரிகளுடனான சந்திப்பைத் தொடர்ந்து, அணு மின்நிலையத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அவர் ஆய்வு செய்திருந்தார்.

இந்நிலையில், இது குறித்து ஊடகவியலாளர்களைச் சந்தித்த இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், கூடங்குளம் அணு மின் நிலையம் தமிழகத்துக்கு கிடைத்துள்ள வரப்பிரசாதம் எனத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

'கூடங்குளம் அணு மின் நிலையத்தை நான் சுற்றிப் பார்த்தேன். அங்குள்ள விஞ்ஞானிகளை சந்தித்துப் பேசினேன். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தேன். அதன் பின்னர் இது மிகச் சிறந்த அணு மின் நிலையம் என்பதை நான் உணர்ந்தேன்.

இந்த அணு மின் நிலையம் சிறப்பானது, முழுமையான பாதுகாப்பு வசதிகளுடன் கூடியது. இந்த அணு மின் நிலையத்தால் எந்தவித ஆபத்தும் இல்லை. கதிர்வீச்சுகள் வெளிப்படாத வகையில் இந்த உலை நவீன முறையில் கட்டப்பட்டுள்ளது. எனவே இந்த அணு உலை குறித்து எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

ஆயிரம் ஆண்டு பழமையான நெல்லையப்பர் கோவிலுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டதில்லை. அதேபோல் இந்த அணுமின்நிலையமும் பாதிக்கப்படாது. தமிழ்நாட்டில் ஆயிரம் ஆண்டுகளாக மிகப்பெரிய அளவில் பூகம்பம் ஏற்பட்டதில்லை.

கூடங்குளம் பூகம்ப பாதிப்பு பகுதி இரண்டின் கீழ் வருகிறது. எனவே இங்கு பூகம்பம் ஏற்பட வாய்ப்பு இல்லை. அதனால்தான் இங்கு அணு மின்நிலையம் கட்டப்பட்டது. அணு உலையானது 13.5 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ளதால் சுனாமியினால் அணு உலைகள் பாதிக்க வாய்ப்பில்லை.

எவருடைய வற்புறுத்தலினாலும் இங்கு நான் வரவில்லை. நான் சமாதானத் தூதுவராகவும் வரவில்லை. அணு உலைக்கு எதிராக போராட்டத்தில் வெளிநாட்டுச் சதி இருப்பதாகவும் நான் சந்தேகிக்கவில்லை. இந்தியாவின் வளர்ச்சிக்கு மின்சாரம் மிக மிக அவசியம். நம்மிடம் தற்போதுள்ள பாரம்பரிய மின் உற்பத்தித் திறன் மிகவும் குறைவாக இருப்பதால் கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலுமே மின் பற்றாக்குறை நிலவுகிறது. நாட்டின் சிறந்த வளர்ச்சிக்கு மின்சாரம் மிக மிக அவசியம். அதற்கு அணு மின் சக்தி மிகவும் தேவை. ஒரு விஞ்ஞானியாக, தொழில் நுட்பவாதியாக அணு சக்தியை நான் ஆதரிக்கிறேன்.

கூடங்குளம் பகுதியில் அணு மின் நிலையம் அமைந்திருப்பது நமக்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்பது எனது கருத்து. நான் இப்பகுதியைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட பொதுமக்களையும் சந்தித்துப் பேசினேன். இது குறித்து ஆய்வறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க இருக்கிறேன்' என ஊடகவியலாளர்களிடம் அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=053a58a6-a4c0-46e9-a349-8c16dbd1ff77

  • தொடங்கியவர்

அப்துல் கலாமின் கருத்தை நிராகரித்தது கூடங்குளம் போராட்டக் குழு!

கூடங்குளம் அணு மின் நிலையம் தொடர்பாக இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்தல் கலாம் தெரிவித்துள்ள கருத்துக்களை கூடங்குளம் போராட்டக் குழுவினர் நிராகரித்துள்ளனர்.

இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள கூடங்குளம் போராட்டக் குழுவின் தலைவர் உதயகுமார், அப்துல் கலாம் ஒரு விஞ்ஞானி போல கருத்துத் தெரிவிக்கவில்லை எனவும், அவர் குறிப்பிட்ட சிலரை மட்டுமே சந்தித்ததாகவும் விசனம் வெளியிட்டுள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

'முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூடங்குளம் வரும்போது எங்களையும் சந்திப்பார், எங்களது மக்களிடம் குறைகளை கேட்பார் என நம்பியிருந்தோம். ஆனால் அவர் வரவில்லை. இது எங்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது.

இதை விட சிறந்த தொழில்நுட்பம் தேவை என்று அப்துல் கலாம் எழுதியுள்ள கட்டுரை இந்து நாளிதழில் வந்துள்ளது. ஆனால் இன்று கூடங்குளம் அணு மின் நிலையப் பாதுகாப்பு சிறப்பாக உள்ளதாக அவர் கூறியுள்ளார். இது நேர்மாறாக முரண்பாடாக உள்ளது.

இங்கு அமைக்கப்பட்டிருப்பது சிறப்பான அணு மின் நிலையம் என்றால் இதேபோல ஒன்றை கேரளாவில் போய் அவர்கள் அமைக்க முடியுமா? ஏன், மேற்கு வங்கத்தில் கூட நான்கை ஆரம்பிக்கட்டுமே. அதை ஏன் அவர்கள் செய்யவில்லை.

கூடங்குளம் சுற்றுவட்டாரத்தில் சுமார் 12 இலட்சம் மக்கள் வசிக்கிறார்கள். ஆனால், அப்துல் கலாம் 40 பேரை சந்தித்ததாக கூறியதை ஏற்றுக் கொள்ள முடியாது.

கூடங்குளம் அணு மின் நிலையத்திலிருந்து கொஞ்சம் கழிவுதான் வெளியேறும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இது என்ன பேச்சு விஞ்ஞானிகள் போல அவர்கள் பேச வேண்டும். கொஞ்சம் என்றால் எத்தனை தொன் என்பதை அவர்கள் விளக்க வேண்டும்.

இந்தப் பகுதியில் சுனாமி வராது, பூகம்பம் வராது என்று அவர்களால் உத்தரவாதம் தரத் தயாரா? சுனாமி வந்தபோது 133 அடி உயரம் கொண்ட திருவள்ளுவர் சிலையை கடல் அலைகள் மூடியதை அத்தனை பேரும் பார்த்தோம். அப்படி இருக்கையில் 13.5 அடி உயரமே கொண்ட இந்த அணு உலைகளை கடல் அலைகள் மூடாதா?

எங்களுக்கு கூடங்குளம் அணு மின் நிலையம் வேண்டாம். அதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். இந்தியாவுக்கு மின்சாரம் தேவைதான். அதை உற்பத்தி செய்ய பல மாற்று வழிகள் உள்ளன. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு முக்கிய நகரங்களிலும் பல்வேறு வகையான மாற்று மின் உற்பத்தித் திட்டங்களை நிறைவேற்றலாம். அதைச் செய்யாமல் அணு உலைகளை நிறுவுவதை எந்தக் காரணம் கொண்டும் ஏற்க மாட்டாம்' என கூடங்குளம் போராட்டக் குழுவின் தலைவர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

http://www.pongutham...57-15dee5624a84

Edited by akootha

  • தொடங்கியவர்
376129_2619325525934_1339044043_32998488_463279865_n.jpg

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

அவன் ஓசில கஞ்சி குடிப்பது கூட சிலருக்கு பிடிக்காது.. 5 வயசுல அவரின்ட குடும்பத்தின் போட்டு (படகு) கடலில் கவிழுந்து போச்சாம் .. அல்லா கொடுத்த கோணை என்று ஏற்று கொண்டாராம்... இவன் அக்கினி சிறகுகள் அண்டார்டிக்கா சிறகுகள் எழுதட்டும்..

டிஸ்கி:

வயசான மனுசன் ஏதாவது இத மாறி பேசினாத்தான் சோறு போடுவார்கள்.. இதுக்க்கு மேல என்னத்த சொல்லுறது

  • கருத்துக்கள உறவுகள்

04.jpg 13.11.11 ஹாட் டாபிக்

முள்ளை முள்ளால்தான் எடுக்க முடியும்!’ என்ற சூத்திரத்தின் அடிப்படையில் கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு இயக்கத்தை ஒடுக்க, ஆதரவு இயக்கத்தை உரு வாக்கியிருக்கிறது அணுமின் நிலைய நிர்வாகம்.

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக உதயகுமார் தலைமையில் இடிந்தகரை கிராமத்தில் மூன்றாவது கட்ட தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இப்போராட்டத்திற்கு நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டம் தவிர, கேரளாவிலும் கூட ஆதரவு பெருகி வருகிறது. போராட் டக் குழுவினர் அணுமின் நிலைய ஊழியர்களையும் மறித்ததால் அணுமின் நிலையப் பணிகள் ஸ்தம்பித்துப் போயிருக்கின்றன. இத்தனைக்கும் அணுமின் உலையில் டம்மி எரிபொருள் நிரப்பப்பட்டு வெள்ளோட்டம் பார்க்கப்பட்டு விட்டது. அடுத்து யுரேனியத்தை நிரப்பி அணுமின் உலையை ஓடவிட வேண்டியதுதான் மிச்சம். ‘இந்த நிலையில் ஊழியர்கள் அங்கு செல்ல முடியாததால் அணுமின் உலைக்கு மிகவும் ஆபத்து!’ என்கிறார்கள் அதிகாரிகள்.

இதற்கிடையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தின் 19 - வது நாளில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டார். இப்படி அணுமின் உலைக்கு எதிரான போராட்டம் வலுத்து வரும் நிலையில், அதை சமாளிக்க புதிய வியூகம் வகுத் திருக்கிறது அணுமின் நிலைய நிர்வாகம். அணுமின் உலைக்கு அடிக்கல் நாட் டியபோதே எதிர்ப் பாளர்களை சமாளிப்பதற்கென்றே சுமார் 800 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. கூடங்குளம் அணுமின் நிலைய திட்ட இயக்குனராக அகர்வால் இ ருக்கும் வரை அந்தப் பணம் முறையாகப் பலருக்கு பட்டுவாடா செய்யப்பட்டு வந்தது. ஆனால், அவரது பணிக்காலம் முடிந்த பிறகு பணப் பட்டுவாடா நிறுத்தப்பட்டு, பொதுமக்கள் தொடர்பும் இல்லாததாலேயே அணுமின் உலைக்கு எதிரான போராட்டம் வலுத்து விட்டதாக அதிகாரிகள்எண்ணுகிறார்கள்.எனவே,

தற்போதுஅணுமின் உலை எதிர்ப்பாளர்களை சமாளிக்க களத்தில் இறங்கியிருக்கிறது அணுமின் நிலைய நிர்வாகம்.

அதன் முதல் கட்டம்தான் போராட்டக் காரர்களுக்கு விடுக்கப்பட்டிருக்கும் மறைமுக மிரட்டல்! அதாவது, எதிர்ப்பாளர்கள் மீது தொடர்ந்து04a.jpg வழக்கு மேல் வழக்கு போடுவது. இடிந்த கரையில் சட்டவிரோதமாக கூடியிருக்கிறார்கள் என்று உதயகுமார் உள்ளிட்டோர் மீது 60-க்கும் அதிகமான வழக்குகளைப் பதிவு செய்திருக்கிறது கூடங்குளம் போலீஸ். அணுமின் நிலையப் பணியாளர்களை வேலைக்குச் செல்ல விடாமல் தடுத்து விட்டதால் அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாயும் என்கிற செய்தியைக் கசியவிடுவது.தவிர, வெளிநாட்டு நிதி வாங்கும் கிறிஸ்துவ டயோசீசனை ஆஃப் செய்யும் வேலையிலும் வெற்றி பெற்றிருக்கிறது நிர்வாகம். என்றாலும் அணு உலை எதிர்ப்பாளர்கள் தங்களது நிலையை மாற்றிக் கொள்ளவில்லை.

google_protectAndRun("render_ads.js::google_render_ad", google_handleError, google_render_ad);

இதனைத் தொடர்ந்து வெளிப்படையாகவே, கூடங்குளம் அணுமின் நிலைய ஆதரவு இயக்கம் ஒன்று தொடங்கப்பட்டிருக்கிறது. அணுமின் நிலைய நிர்வாகத்தின் அமோக(?) ஆதரவோடு தொடங்கப்பட்டிருக்கும் இந்த ஆதரவு இயக்கத்திற்கு தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் மாவட்டப் பஞ்சாயத்து கவுன்சிலர் விஜயன்தான் தலைவர். இவர்கள் கடந்த 3-ம் தேதி செட்டிகுளத்தில் முதல் கூட்டத்தை நடத்தி முடித்த சூட்டோடு ஆட்களைத் திரட்டிக் கொண்டு நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கே அணுமின் உலைக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் செய்து விட்டு, கூடங்குளம் அணுமின் உலையை உடனடியாக இயக்க மத்திய - மாநில அரசுகள் ஆவன செய்ய வேண் டும் என்று மனு கொடுத்தார்.

இந்நிலையில், அணு உலை ஆதரவு இயக்கத் தலைவர் விஜயனிடம் பேசினோம். ”கூடங்குளத்தில் அணுமின் உலை கண்டிப்பாக அமைய வேண்டும். அப்போதுதான் மின் தேவை சரி செய்யப்பட்டு இந்தியா வளர்ச்சிப் பாதையில் செல்லும். தடையில்லா மின்சாரமே நாட்டின் வளர்ச்சிக்கு நல்லது. அணுமின் உலை ஆபத்து என்கிறார்கள், எதி ல்தான் ஆபத்து இல்லை. நாட்டை கற்காலத்திற்கு அழைத்துச் செல்லக்கூடாது. அணு உலை எதிர்ப்பாளர்கள் ஒரு நாள், இரண்டு நாள் போராட்டம் நடத்துவார்கள் என்று பார்த்தால் மாதக் கணக்கில் இழுத்துக் கொண்டே போகிறார்கள். எனவேதான் அணுமின் உலையால் ஆபத்தில்லை என்று சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு நாங்கள் தள்ளப்பட்டோம்’’ என்றவரிடம், ‘உங்கள் இயக்கத்தின் பின்னணியில் அணுமின் நிலைய நிர்வாகம் இருக்கிறது. நீங்கள் அணுமின் உலைக்கு ஆதரவு நிலை எடுத்ததில் ஏகப்பட்ட பணம் விளையாடுகிறது என்ற பேச்சு அடிபடுகிறதே?’ என்று கேட்டோம். அவரோ, “போராட் டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமாரைக் கூட அமெரிக்காவின் கைக்கூலி என்கிறார்கள்! அது உண்மை என்றால் இதுவும் உண்மை!’’ என்றார் ஆவேசமாக.

மேலும், அணுமின் உலை ஆதரவு இயக்கத்தினர், அணுமின் நிலையத்தின் அவசியத்தை வலியுறுத்தி பல்லாயிரக்கணக்கான பிட் நோட்டீஸுகளை அச்சடித்து விநியோகம் செய்திருக்கிறார்கள். அடுத்த கட்டமாக அணுமின் நிலையம் வேண்டும் என்று அணுவிஜய் நகர் முன்பு போட்டி உண்ணாவிரதம் இருக்கவும் தீர்மானித்திருக்கிறார்கள்.

அணுமின் நிலைய ஆதரவு இயக்கம் தொடங்கப்பட்டிருப்பது குறித்து எதிர்ப்புப் போராட்டக் குழு உறுப்பினர் ராயனிடம் கேட்டோம்....

”இது முழுக்க முழுக்க அணுமின் நிலைய நிர்வாகத்தின் வேலை. எங்களுடைய போராட்டத்தை கொச்சைப்படுத்துவதற்காகவே இந்த உள்ளடி வேலையைச் செய்தி ருக்கிறார்கள். இந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜயனின் மனைவி பெர்சியாள் செட்டிகுளம் பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு வெறும் 17 ஓட்டுகள் வித் தியாசத்தில்தான் ஜெயித்தார். அவருக்கு கடற்கரை கிராமமான பெருமணலில் 33 ஓட்டுகள் மட்டுமே கிடைத்ததால் கடும் கோபத்திலிருந்தார். அவரைத்தான் அணுமின் நிர்வாகம் கையிலெடுத்திருக்கிறது.

அண்மையில் நாங்கள் அவரது வீடு தேடிச் சென்று ஆதரவு கேட்டோம். ‘அணுமின் நிலைய நிர்வாகத்திடம் இரண்டு கோடி ரூபாய் நான் வாங்கி விட்டதாக பிரசாரம் செய்கிறீர்களே, அது தவறு’ என்றார். ‘நாங்கள் அப்படிப் பேசவே இல்லை’ என்று விளக்கம் கொடுத்த பிறகு எங்களுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்தார் விஜயன். ஆனால், அணுமின் நிர்வாகம் தற்போது பேச்சுவார்த்தைக்கு முன்வந்திருக்கிறது. நாங்கள் ‘மக்களோடு பேசி அவர்கள் அச்சத்தைப் போக்குங்கள், தனி நபரிடம் பேச வேண்டாம்’ என்கிறோம். ஆனால், அணுமின் நிர்வாகமோ இவரைப் போன்ற ஆதரவு நிர்வாகிகளைக் கையிலெடுத்துப் பேச முடிவு செய்திருப்பது அச்சுறுத்தலாகவே உள்ளது’’ என்றார்.

கூடங்குளம் அணுமின் நிலைய ஆதரவு இயக்கத்தை உருவாக்கியதன் மூலம் நாடார்-மீனவர் மோதலுக்கு வித்திடப்பட்டிருக்கிறது என்பதுதான் அப்பகுதி சமூக உணர்வாள ர்களின் கவலை.

அ.துரைசாமி

- குமுதம் ரிப்போட்டர்

  • கருத்துக்கள உறவுகள்

10.jpg 13.11.11 மற்றவை

ந்தியாவிற்காக அணுகுண்டு வெடித்துக் காட்டிய அப்துல்கலாமை வைத்து கூடங்குளம் அணு உலை விவகாரத்தை சுமுகமாகத் தீர்க்க முயற்சித்துள்ளது மத்திய அரசு!

இதை நிரூபிப்பதுபோல், கூடங்குளத்திற்கு வருகை தந்த அப்துல்கலாமும் அணுமின் நிலையத்திற்கு ஆதரவாகப் பேசியிருக்கிறார். அதுவும் அவர் போராட்டக் குழு வினரையோ, பொது மக்களையோ சந்திக்காமல், ‘செட்அப்’ கூட்டத் தினருடன் மட்டும் கலந்துரையாடிவிட்டுப் போய் விட்டதாக அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது. இதனால், ‘அரசுக்கு அப்துல்கலாம் தரகு வேலை பார்க்கிறாரா?’ என போராட்டக் குழுவினர் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளனர்.

கூடங்குளம் அணு உலைக்குக் கிளம்பியுள்ள எதிர்ப்பை முறியடிக்க மத்திய அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக தமிழக மக்கள் மத்தியில் நன்மதிப்பு பெற்ற முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமை நேரடியாக கூடங்குளத்திற்கு வரவழைத்து, அவர் வாயால் அணு உலைக்கு நற்சான்றிதழ் வாங்கிவிட அணுமின் கழக அதிகாரிகள் முயற்சிகளை மேற்கொண்டனர். அணுசக்திப் பயன்பாட்டில் அதீத ஆர்வம் கொண்ட கலாமும் அதற்குச் சம்மதித்துவி‘ட்டார்.

google_protectAndRun("render_ads.js::google_render_ad", google_handleError, google_render_ad);

இதையடுத்து, கடந்த 6-ம் தேதி நள்ளிரவு ஒன்றரை மணிக்கு கூடங்குளம் வந்து சேர்ந்தார் கலாம். அவரை வரவேற்பதற்காக கொட்டக் கொட்ட விழித்துக்கொண்டிருந்த அதிகாரிகளிடம், ‘உடனே ஒரு ஆய்வுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்’ எனச் சொல்லிவிட்டார். அதன்படி அணுமின் கழகத் தலைவர் எஸ்.கே.ஜெயின் உள்ளிட்ட அதிகாரிகளுடன் அதிகாலை ஐந்து மணி வரை அணுமின் நிலையப் பணிகள் பற்றி விவாதித்தார். பின்னர் அணு உலை கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டார். தொடர்ந்து பொதுமக்கள் என்ற போர்வையில் அப்பகுதி காங்கிரஸ் பிரமுகர்கள், அணுமின் நிலையத்தில் காண்ட்ராக்ட் பணி செய்தவர்கள் என சுமார் நாற்பது பேரை அழைத்து வந்து கலாமுடன் விவாதிக்க ஏற்பாடு செய்திருந்தார்கள்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக காங்கிரஸ் தலைமை நிலையச் செயலாளர் நெல்லை சாமி, ‘இப்பகுதியில் முப்பத்தைந்து கி.மீ. சுற்றளவில் உள்ள அனைத்து கிராமங்களையும் அணுமின் நிலையமே தத்தெடுத்து அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவேண்டும். தவிர, குரூப்10a.jpg ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியிடங்களுக்கு முழுக்க இந்த ஏரியாக்காரர்களைத் தேர்வு செய்ய வேண்டும்’ என கோரிக்கை வைத்திருக்கிறார்.

தொடர்ந்து பேசிய நெல்லை சாமி, ‘அணுமின்நிலையம் வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்றுக்கருத்தே இல்லை. இங்குள்ள அப்பாவி மக்களை தூண்டிவிட்டுப் போராட் டம் செய்பவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யுங்கள்’ எனச் சொல்லியிருக்கிறார். பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்த கலாம், ‘இங்கு நான் சந்தித்த மக்கள் எல்லோருமே அணுமின் நிலையத்தை ஆதரிக் கிறார்கள்’ எனச் சொன்னார்.

‘இது அதிகாரிகள் ஏற்பாடு செய்த கூட்டம் அல்லவா? பொதுமக்களையோ, போராட்டக் குழுவினரையோ நீங்கள் ஏன் சந்திக்கவில்லை?’ என நிருபர்கள் கேட்டதற்கு, ‘யார் என்னைச் சந்தித்து விளக்கம் கேட்டாலும் பதில் சொல்ல நான் தயார். இங்குள்ள பாதுகாப்பு அம்சங்கள் எனக்கு முழு திருப்தி தருகிறது. தற்போது அமைக்கப்பட்டுள்ள இரு உலைகள் தவிர, மேலும் நான்கு உலைகள் இங்கு அமைக்கலாம். மொத்தத்தில் இது ஒரு அணுசக்தி காம்ப்ளக்ஸாக இருக்கும். பொதுமக்கள் இதில் அச்சம்கொள்ள எதுவுமே இல்லை’ எனச் சொல்லி, அணுமின் கழக அதிகாரிகளை பூரிப்படைய வைத்தார்..

கலாம் ‘விசிட்’ பற்றி சுற்றுச்சூழல் ஆர்வலரும், மும்பை அணு ஆராய்ச்சி மையத்தில் ஓராண்டு பயிற்சி பெற்றவருமான விஞ்ஞானி லால்மோகனிடம் கருத்துக் கே ட்டோம். “சில மணி நேரங்களில் ஆய்வை முடித்துக்கொண்டு, ‘எல்லாம் சுபமாக இருக்கிறது’ என அப்துல்கலாம் சொல்லியிருப்பதைப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது. ஒரு அணு உலையில் வடிவமைப்பு பற்றி ஆய்வு செய்ய குறைந்தபட்சம் இரண்டு நாட்களாவது தேவைப்படும். தவிர, ஏவுகணை விஞ்ஞானியான இவர் அணு உலை பாதுகாப்பு பற்றி எப்படி சான்றிதழ் கொடுக்க முடியும்?’’ என கேள்வி எழுப்பினார் அவர்.

எதிர்ப்புப் போராட்டம் நடந்துவரும் இடிந்தகரைக்குப் போகாவிட்டாலும், குறைந்தபட்சம் கூடங்குளம் பகுதி உள்ளாட்சிப் பிரதிநிதிகளைக்கூட கலாம் சந்தித்துப் பேசாததில் அப்பகுதி மக்களுக்கு கடும் அதிருப்தி. இடிந்தகரை போராட்டத்திலும் அன்றையதினம் கலாமுக்கு எதிரான கோஷங்கள் விண்ணைப் பிளந்தன.

போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளரான உதயகுமாரிடம் பேசினோம். “கலாம் மீது மக்களுக்கு இருக்கும் நம்பகத்தன்மையை வைத்து இந்தப் போராட்டத்தை வலுவிழக்கச் செய்ய மத்திய அரசு முயற்சிக்கிறது. கலாம் மரியாதைக்குரிய நபர் தான். ஆனால், ‘அமெரிக்காவைப்போல் இந்தியா வல்லரசாக வேண்டும்’ எனத் தொடர்ந்து பேசுகிற அவர், என்றைக்காவது உண்ண உணவின்றி உடுத்த உடையின்றி வீதியில் உறங்கும் ஏழை இந்தியர்களைப் பற்றி பேசியிருக்கிறாரா? இலங்கையில் குண்டுவீசி தமிழ் இனமே அழிக்கப்பட்டது அதைப் பற்றி வாய் திறந்திருக்கிறாரா?

அவர் சார்ந்த ராமேஸ்வரம் உள்ளிட்ட தமிழக மீனவர்கள் ஐநூற்றைம்பது பேரை இலங்கை கடற்படை காவு வாங்கியிருப்பது பற்றி என்றைக்காவது கண்டனம் எழு ப்பியிருக்கிறாரா?. அதேசமயம் அமெரிக்காவுடன் நடந்த அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தால் மன்மோகன்சிங் அரசு கவிழும் நிலை ஏற்பட்டபோது, ஓடோடிப்போய் முலாயம்சிங்கையும் அமர்சிங்கையும் நேரில் சந்தித்து மன்மோகனை ஆதரிக்க வைத்தார். விஞ்ஞானியான அவருக்கு இந்த அரசியல் தரகு வேலை எதற்கு? அப்துல்கலாம் தேவதூதர் அல்ல. ஒருபோதும் சாதாரண மக்களின் பாதுகாப்பு பற்றி கவலைப் படுபவரும் அல்ல. அவர் மத்திய அரசுக்கு ஆதரவாக தரகு வேலையைச் செய்யவே இங்கு வந்ததாகச் சந்தேகப்பட வேண்டியிருக்கிறது’’ என்றார் உதயகுமார்.

இதற்கிடையே எதிர்ப்புப் போராட்டத்தை ஒடுக்கும் தங்கள் முயற்சி உச்சகட்டத்தை நெருங்கிவிட்டதாகச் சொல்லும் அணுமின்நிலைய அதிகாரிகள் சிலர், “வருகிற 10-ம் தேதி எங்கள் துறை அமைச்சரான நாராயணசாமியும், மத்திய அரசு அமைத்த நிபுணர் குழுவினரும் கூடங்குளத்திற்கு வருகிறார்கள். அவர்களும் கலாமைப் போலவே(?) பொதுமக்களைச் சந்தித்து, அவர்களின் சந்தேகத்தைப் போக்குவார்கள். இந்த சந்தேகம் போக்கும் நிகழ்ச்சிகளின் வீடியோ காட்சிகளை, தேவைப்பட்டால் இது சம்பந்தமான வழக்குகள் விசாரணையின்போது கோர்ட்டில் தாக்கல் செய்வோம். இந்த விஷயத்தில் இனி பொறுப்பதற்கில்லை. மத்தியப் படைகள் மேலும் வரவழைக்கப்பட்டு, அவர்களின் பாதுகாப்புடன் அணுமின் உற்பத்திப் பணிகள் துரிதப்படுத்தப்படும்’’ என்கிறார்கள் அதிரடியாக.

ச.செல்வராஜ்

- குமுதம் ரிப்போட்டர்

இந்தியா மாதிரி வறிய,நீர் நிலைகள் அற்ற நாடுகளுக்கு அணு உலை மின்சாரம் நல்லதே. செலவு கூடிய மாற்று திட்டங்கள் வசதிப்பட மாட்டா.

நிறைய விஞ்ஞானிகள் குறைந்த ஊதியத்தில் தொழில் புரிய வருவார்கள். அதை பயன் படுத்தி அதிகாரிகள் சேவை மனப்பான்மையுடன் மக்களுக்கு குறைந்த செலவில் மின்சாரம் தயாரித்து வழங்க முன் வரவேண்டும். ஆசிய விளையாட்டுக்களுக்கு விளையாட்டிடம் கட்டியது போன்ற ஊழல் நிறைந்த வேலைகள் செய்தால் மக்கள் தங்கள் பாதுகாப்பை எண்ணி பயப்படுவார்கள். இதை மறு பக்கத்து அரசியல் வாதிகள் பயன் படுத்தி கொள்வார்கள்.

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

அணு்வில் இருந்து மட்டுமே மின்சாரம் வேண்டும் என பிடிவாதமாக இருப்பவர்கள், இதில் சில குழந்தைகளை தத்துதெடுக்கலாம், ஜாதுகோடா உரேணிய சுரங்களை சுற்றி மட்டும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் இவ்வாறு பிறக்கின்றன

300295_2140692513070_1118899237_31838104_15282536_n.jpg

ஜேர்மனி இன்னும் சில ஆண்டுகளில் அணுமின் நிலையங்களைக் கைவிட்டு விடும். ஐரோப்பாவில் அதிக அணு உலைகளைக் கொண்ட பிரான்ஸ் அணுமின் நிலையங்களைக் குறைக்க (மக்களின் எதிர்ப்பு காரணமாக) ஆலோசிக்கின்றது.

இதே வேகத்தில் யூரேனியம் பாவிக்கப்படுமானால் உலகில் யூரேனியத்தின் இருப்பு இன்னும் 80-90 வருடங்கள் மட்டுமே. ஆனால் யூரேனியத்தின் கழிவுகளை பல நூறு வருடங்கள் பாதுகாப்பாகக் கட்டிக் காக்க வேண்டி வரும். கூடங்குளம் அணு மின் நிலையத்திலிருந்து நாள்தோறும் வெளியாகப் போகும் பல நூற்றுக் கணக்கான கிலோ கழிவுகளை எங்கே புதைக்கப் போகிறார்கள் ?

  • தொடங்கியவர்

உலகின் பெரிய அணு ஆயுத கழிவுகளை பாதுகாப்பாக (?) சேமிக்கும் ஆலை பின்லாந்தில் உள்ளது.

Finland's nuclear waste bunker built to last 100000 years

  • தொடங்கியவர்

அணு விஞ்ஞானி அப்துல் கலாம்!

அப்துல் கலாம் கூடங்குளம் சென்று வந்துள்ளார். அங்குள்ள அணு மின் உலை அபாயமற்றது; வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று சொல்லியுள்ளார். இது கிட்டத்தட்ட எதிர்பார்த்ததுதான். அப்துல் கலாம் அணு மின்சாரத்தின்மீது நம்பிக்கை கொண்டவர். (நானும்தான்.) எனவே அவர் மாற்றாக எதையும் சொல்லியிருக்கப்போவதில்லை.

ஆனால் பிரச்னை, அப்துல் கலாம் ஒரு அணு விஞ்ஞானியா என்பதைப் பற்றியது. அவர் அணு விஞ்ஞானி அல்லர். அப்படி அவர் தன்னை ஒருபோதும் சொல்லிக்கொண்டதில்லை. அவர் ஒரு ஏரோனாட்டிகல் பொறியாளர். ஒரு கட்டத்தில் இந்தியாவின் அணு ஆயுதச் சோதனைத் திட்டத்துக்குத் தலைமை தாங்கியுள்ளார். அது மட்டுமே அவரை அணு விஞ்ஞானி ஆக்கிவிடாது. எனவே ஊடகங்கள் அவரை அணு விஞ்ஞானி என்று அழைப்பதைத் தவிர்க்கவேண்டும்.

அப்படியானால், அப்துல் கலாமால் அணு சக்தி பற்றிய விஷயங்களையும் அது தொடர்பான அபாயங்களையும் புரிந்துகொள்ள முடியாது என்றா சொல்வது? இல்லை! நல்ல அறிவியல் புரிதல் கொண்ட எவராலுமே அணு சக்தி, அதன் ஆற்றல், அதன் அபாயங்கள், அவற்றை எப்படி எதிர்கொள்ளலாம் போன்ற பலவற்றைப் புரிந்துகொள்ள முடியும். மேலும், அணு ஆயுதச் சோதனைத் திட்டத்துக்குத் தலைமை தாங்கிய ஒருவருக்குக் கட்டாயம் இதுபற்றி நல்ல புரிதல் இருந்தாகவேண்டும்.

அந்த மட்டத்தில், அவரை அணு விஞ்ஞானி என்று அழைக்காமல் போகலாமே தவிர, கூடங்குளத்தில் பிறர் சொல்வதுபோல ஆபத்து என்பதெல்லாம் இல்லை என்று அவர் சான்றிதழ் கொடுத்தால் கட்டாயம் ஏற்றுக்கொள்ளலாம் என்பது என் கருத்து.

கலாம் அல்லர் அரசியல்வாதி. அவர் குஜராத் கலவரம் பற்றி என்ன சொன்னார், இலங்கைப் படுகொலை பற்றி என்ன சொன்னார் என்றெல்லாம் கேட்பவர்கள்தான் அரசியல்வாதிகள்! அறிவியல், தொழில்நுட்பம் மூலம் உலகை நல்லபடியாக மாற்றமுடியும் என்பதில் நம்பிக்கை கொண்டிருக்கும் கலாம், அது தொடர்பான விவாதங்களில்தான் பங்கெடுக்க விரும்புகிறார் என்பது வெளிப்படை. பிற விஷயங்களில் கருத்து சொல்ல அவர் தயங்குகிறார். எனவே, அதில் அவர் கருத்து என்ன, இதில் அவர் கருத்து என்ன என்று தோண்டிப் பார்க்காமல், அணு சக்தி தொடர்பாக அவர் நியாயமான கருத்தை முன்வைக்கக்கூடியவரா என்பதை மட்டும்தான் பார்க்கவேண்டும்.

அவரை நம்பாதவர்கள், அவரை அரசவைக் கோமாளி என்று சாடுபவர்கள் சாடிவிட்டுப் போங்கள்.

http://thoughtsintamil.blogspot.com/2011/11/blog-post_07.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜேர்மனி இன்னும் சில ஆண்டுகளில் அணுமின் நிலையங்களைக் கைவிட்டு விடும். ஐரோப்பாவில் அதிக அணு உலைகளைக் கொண்ட பிரான்ஸ் அணுமின் நிலையங்களைக் குறைக்க (மக்களின் எதிர்ப்பு காரணமாக) ஆலோசிக்கின்றது.

இதே வேகத்தில் யூரேனியம் பாவிக்கப்படுமானால் உலகில் யூரேனியத்தின் இருப்பு இன்னும் 80-90 வருடங்கள் மட்டுமே. ஆனால் யூரேனியத்தின் கழிவுகளை பல நூறு வருடங்கள் பாதுகாப்பாகக் கட்டிக் காக்க வேண்டி வரும். கூடங்குளம் அணு மின் நிலையத்திலிருந்து நாள்தோறும் வெளியாகப் போகும் பல நூற்றுக் கணக்கான கிலோ கழிவுகளை எங்கே புதைக்கப் போகிறார்கள் ?

யாழ்ப்பாணப்பக்கத்திலை எக்கச்சக்கமான இடமிருக்கு.......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.