Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ்.பல்கலைக்கழக மாணவன் லத்தீஸ் கடத்தப்பட்டுள்ளார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.பல்கலைக்கழக மாணவன் லத்தீஸ் கடத்தப்பட்டுள்ளார்

28 நவம்பர் 2011

lg-share-en.gif

குளோபல் தமிழ்ச்செய்திகள் :

GTN.special_CI.jpg

யாழ்.பல்கலைக்கழக சித்த மருத்துவபீட மாணவனான வேதாரணியம் லத்தீஸ் (27 வயது) கடத்தப்பட்ட சம்பவம் மாணவ சூழலிடையே பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.நேற்றிரவு யாழ்.திருநெல்வேலியிலுள்ள பாலசிங்கம் விடுதியிலுள்ள தனது சக நணபர்ளை சந்தித்து விட்டு கைதடியிலுள்ள தனது விடுதிக்கு திரும்பிக்கொண்டிருக்கையிலேயே இவர் கடத்தப்பட்டிருக்கலாமென குடும்பத்தவர்கள் சந்தேகிக்கின்றனர்.

வடமராட்சி கிழக்கு மருதங்கேணியை சொந்த இடமாக கொண்ட இவர் வன்னியில் படையினரால் பிடிக்கப்பட்டிருந்த நிலையில் அண்மையிலேயே பூஸா தடுப்பு முகாமிலிருந்து இழுபறிகளின் பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாகையால் வழமை போல திருநெல்வேலியிலுள்ள பாலசிங்கம் விடுதியிலுள்ள தனது சக நண்பர்ளை சந்திக்க வந்து திரும்புவது இயல்பானதென நண்பர்கள் கூறுகின்றனர். நேற்று இரவு வரை இவர் தைடியிலுள்ள பல்கலைக்கழக சித்த மருத்துவபீட விடுதிக்கு திரும்பாததையடுத்து சக மாணவர்கள் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டுள்ளனர். அவ்வேளையினில் பலர் உரையாடும் சத்தங்கேட்டதாகவும் சிலர் சிங்கள மொழியிலும் கதைப்பதை கேட்டதாகவும் மாணவர்கள் தரப்பினில் கூறப்படுகின்றது. இவரை படையினரே கடத்தியுள்ளதாக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் உறுதியாக கூறுகின்றனர்.

நேற்று மாவீரர் தினங்கொண்டாட்டங்களில் மாணவர்கள் பாலசிங்கம் விடுதியில் ஈடுபட்டிருந்ததையடுத்து விடுதி சூழலில் படையினர் குவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்;. மாணவர்கள் அச்சம் காரணமாக அனைவரும் ஒன்று கூடி விடுதிகளுள் முடங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

இது EPDP அல்லது சிங்கள புலனாய்வு பிரிவினரின் வேலையாகத்தான் இருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேற யார்? இனந்தெரியாத பங்கர் அமைச்சரின் கைத்தடிகள் தானே ஈழத்தில் ஆட்சி செய்வது.

கடத்தல் காணமல் போதல் கொலைகள் இதெல்லாம் நடக்கும் ஒரு ஜனநாயக நாடு சிறிலங்காவாகத்தான் இருக்கும் .

யாழ். பல்கலை மாணவனை காணவில்லை; பொலிஸ் நிலையத்தில் பெற்றோர் புகார்

யாழ். பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவபீட இரண்டாம் வருட மாணவனொருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் காணாமல் போயுள்ளார் என சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் அம்மாணவனின் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர்.

வடமராட்சி கிழக்கு மருதங்கேணியை சொந்த இடமாக கொண்ட வேதாரணியம் லத்தீஸ் (வயது 27) என்ற மேற்படி மாணவன் நேற்று இரவு, கைதடியிலுள்ள மாணவர் விடுதியிலிருந்த நிலையிலேயே காணாமல் போயுள்ளார் என முறைப்பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.அலுவலகத்திலும் மேற்படி மாணவனின் பெற்றோரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அதிகாரி த.கனகராஜ் தெரிவித்தார்.

http://tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/31650-2011-11-28-12-43-41.html

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர் நிகழ்வு நடைபெற்ற போது சிங்களம் இப்படி எதாவது செய்யும் என நினைத்திருந்தேன். இலத்தீஸ் கடத்தப்பட்ட பின்பு இன்னும் பலரை சிங்களம் கடத்தலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.பல்கலைக்கழக மாணவன் லத்தீஸ் கடத்தப்பட்டுள்ளார்

28 நவம்பர் 2011

lg-share-en.gif

குளோபல் தமிழ்ச்செய்திகள் :

GTN.special_CI.jpg

யாழ்.பல்கலைக்கழக சித்த மருத்துவபீட மாணவனான வேதாரணியம் லத்தீஸ் (27 வயது) கடத்தப்பட்ட சம்பவம் மாணவ சூழலிடையே பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.நேற்றிரவு யாழ்.திருநெல்வேலியிலுள்ள பாலசிங்கம் விடுதியிலுள்ள தனது சக நணபர்ளை சந்தித்து விட்டு கைதடியிலுள்ள தனது விடுதிக்கு திரும்பிக்கொண்டிருக்கையிலேயே இவர் கடத்தப்பட்டிருக்கலாமென குடும்பத்தவர்கள் சந்தேகிக்கின்றனர்.

வடமராட்சி கிழக்கு மருதங்கேணியை சொந்த இடமாக கொண்ட இவர் வன்னியில் படையினரால் பிடிக்கப்பட்டிருந்த நிலையில் அண்மையிலேயே பூஸா தடுப்பு முகாமிலிருந்து இழுபறிகளின் பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாகையால் வழமை போல திருநெல்வேலியிலுள்ள பாலசிங்கம் விடுதியிலுள்ள தனது சக நண்பர்ளை சந்திக்க வந்து திரும்புவது இயல்பானதென நண்பர்கள் கூறுகின்றனர். நேற்று இரவு வரை இவர் தைடியிலுள்ள பல்கலைக்கழக சித்த மருத்துவபீட விடுதிக்கு திரும்பாததையடுத்து சக மாணவர்கள் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டுள்ளனர். அவ்வேளையினில் பலர் உரையாடும் சத்தங்கேட்டதாகவும் சிலர் சிங்கள மொழியிலும் கதைப்பதை கேட்டதாகவும் மாணவர்கள் தரப்பினில் கூறப்படுகின்றது. இவரை படையினரே கடத்தியுள்ளதாக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் உறுதியாக கூறுகின்றனர்.

நேற்று மாவீரர் தினங்கொண்டாட்டங்களில் மாணவர்கள் பாலசிங்கம் விடுதியில் ஈடுபட்டிருந்ததையடுத்து விடுதி சூழலில் படையினர் குவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்;. மாணவர்கள் அச்சம் காரணமாக அனைவரும் ஒன்று கூடி விடுதிகளுள் முடங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

University student missing in Jaffna

[TamilNet, Monday, 28 November 2011, 09:23 GMT]

A student of the University of Jaffna, 27-year-old Vetharaniyam Latheesh, was missing after he left the gents hostel (Balasingham Hostel) of the University of Jaffna in Thirunelveali by 6:45 pm, Sunday evening. The student, studying at the Siddha Medicine department of the university located at Kaithadi, and used to stay in the hostel there, had come to the university hostel in Thirunelveali to meet a friend. University circles fear that the SL Army that was deployed in large numbers around the university campus on Sunday might have abducted him. A relative of Latheesh, who made a mobile call to him and got connected, heard his abductors talking in Sinhala and beating him, asking “kawuda” (who). The University Students Union has confirmed the abduction of Latheesh.

Mr. Latheesh, comes from the coastal village Aazhiyava’lai in Vadamaraadchi East in the Jaffna district that was formerly under the LTTE control.

Studying in Jaffna, he was arrested by the SL military during the war and was kept in detention at Poosa for a long time. He was released to continue his studies at the intervention of the university after the war.

As he had found his house at Aazhiyava’lai completely razed down, he was staying in the Kaithadi hostel and was being supported by his relatives.

‘Abductions’ have once again escalated in Jaffna, and the abduction of Lathesh creates much tension in the university community.

இவர் வீட்டை வந்திடாராமே.... பெற்றோர் பொலிசாரிடம் சென்று கூறியுள்ளனர். ஆனால் மேலே உள்ள பின்னோட்டக்காரரோ அல்லது செய்தியை இணைத்தவரோ அது பற்றி இன்னும் மூச்சுவிடவில்லை. ஒருவேளை இந்த கடத்தல் நமக்கு சந்தோசமான விடயமே? எனக்கு பல்லு போனாலும் எதிரிக்கு ... அதுவோ? எம்மை பாரார்த்து பல கேள்விகளை நாமே கேட்க வேண்டியுள்ளது!

http://tamilmirror.lk/2010-07-14-09-13-23/31687-2011-11-29-07-30-28.html

Edited by மொட்டை மனிதன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர் வீட்டை வந்திடாராமே.... பெற்றோர் பொலிசாரிடம் சென்று கூறியுள்ளனர். ஆனால் மேலே உள்ள பின்னோட்டக்காரரோ அல்லது செய்தியை இணைத்தவரோ அது பற்றி இன்னும் மூச்சுவிடவில்லை. ஒருவேளை இந்த கடத்தல் நமக்கு சந்தோசமான விடயமே? எனக்கு பல்லு போனாலும் எதிரிக்கு ... அதுவோ? எம்மை பாரார்த்து பல கேள்விகளை நாமே கேட்க வேண்டியுள்ளது!

http://tamilmirror.l...9-07-30-28.html

இப்ப என்ன சொல்ல வாறியள், கடத்தினவன் கத்தியவரை விட்டு விட்டதால் அவன் நல்லவன் வல்லவன், அவனுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்,கடத்தியவர்களை விடுவித்த செம்மல்கலே என புலம்பெயர் தேசத்தில் ஒரு பெரிய ஊர்வல போக வேணும் என்ரு சொல்கிறீர்களா? அல்லது சிங்களவன் ஒருவரையுமே கடத்தி கொலை செய்ய்வது இல்லை என்று சொல்ல வருகிறீர்களா?

அவனை நல்லவன் என்று சொல்வதால் உங்களுக்கு என்ன வருமானம்? :lol: :lol: :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.