Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முறிவடைந்தது கூட்டமைப்பு - அரசு பேச்சுவார்த்தை

Featured Replies

முறிவடைந்தது கூட்டமைப்பு - அரசு பேச்சுவார்த்தை

தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்குமிடையில் சுமார் ஒரு வருட காலமாக இடம்பெற்று வந்த பேச்சுவார்த்தை பாராளுமன்ற தெரிவுக்குழு விவகாரத்தில் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து இன்று முறிவடைந்துள்ளது.

அரசாங்கத்துக்கும் கூட்டமைப்புக்குமிடையில் 15 ஆவது சுற்றுப்பேச்சுவார்த்தை இன்று இடம்பெற்றபோது, பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு நியமிக்கக் கூடிய தமிழத்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களின் பெயர்களை முன்வைக்குமாறு அரசதரப்பில் வலியுறுத்தப்பட்டதையடுத்தே பேச்சுவார்த்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்குமிடையில் இடம்பெற்ற 14 ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தையின் போது இவ்விவகாரம் ஆராயப்பட்டு இணக்கப்பாடு ஒன்று காணப்பட்டது.

அரசுக்கும் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுக்களின் போது காணப்படும் இணக்கப்பாட்டை பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சமர்ப்பிப்பதெனவும் அச்சந்தர்ப்பத்தில் இரு தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.

இருந்தபோதிலும் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் ஆரம்பமான போது பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இடம்பெறும் தமது உறுப்பினர்களின் பெயர்களை உடன் வெளியிடுமாறு கூட்டமைப்பினரை அரச தரப்பு கோரியதையடுத்தே பேச்சுக்களில் முறுகல் நிலை ஏற்பட்டது.

கூட்டமைப்பினர் அவ்வாறு தமது உறுப்பினர்களின் பெயர் விபரங்களை வெளியி டவில்லை எனில் தம்மால் பேச்சுக்களைத் தொடரமுடியாது என அரச தரப்பினர் கூற, இணக்கப்பாடு எட்டப்பட்டு அதனைப் பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு முன்வைப்பதற்கு முன்னதாக தம்மால் பெயர் விபரங்களைத் தர முடியாது என கூட்டடைப்பு உறுதியாகக் கூற பேச்சுக்களைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுதொடர்பிலான அறிக்கை ஒன்றை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் வெளியிட்டுள்ளார். டிசம்பர் மாதத்தில் 1, 06, 14, 15ஆம் திகதிகளில் பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது. அதன்படி முதலாம் திகதி பேச்சுவார்த்தை இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காகவே அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள குழு தெரிவுக்குழு என்பதும் குறிப்பிடத்தக்கது. ___

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=35362

  • கருத்துக்கள உறவுகள்

முதலாவதிலேயே முறிய வேண்டியது

14 வது சுற்றில் முறிவடைந்து இருக்கின்றது

  • தொடங்கியவர்

அடுத்து கூட்டமைப்பு என்ன செய்யும்? அன்று விடுதலைப்புலிகளின் பேச்சுவார்த்தை முறிந்தமைக்கும் இதற்கும் இடையில் என்ன வித்தியாசம்?

சர்வதேசம் எவ்வாறு இதை அணுகும்? சிங்களம் எவ்வாறு காய்களை நகர்த்தும்?

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்குமிடையில் சுமார் ஒரு வருட காலமாக இடம்பெற்று வந்த பேச்சுவார்த்தை பாராளுமன்ற தெரிவுக்குழு விவகாரத்தில் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து இன்று முறிவடைந்துள்ளது.

அடுத்தகட்டம் என்ன ..........? மீண்டும் தந்தை செல்வாவின் வழியில் அகிம்செய் வழியில் போராட்டமா ???? அல்லது மீண்டும் ஆயுதவழியில் போராட ஏதாவது திட்டமுள்ளதா ?அல்லது எந்த திட்டமும் இல்லாது அடுத்த கால் நூறு ஆண்டுக்கு இழுத்து கலத்தைகடத்த திட்டமா ???????? எதுவாயிருந்தாலும் உங்களுக்கு ஆணையிட்டு பாராளுமன்றம் அனுப்பிய தமிழ் மக்களுக்கு தெரியப்படுத்துங்கள் இல்லாவிடின் காலப்போக்கில் அவர்கள் கெதி ......................?

  • தொடங்கியவர்

பேச்சுவார்த்தையை சிறிலங்கா அரசாங்கம் முறித்துக் கொண்டது! - சுரேஸ் பிரேமச்சந்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தையை சிறிலங்கா அரசாங்கம் இன்று முறித்துக் கொண்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பபின் ஊடகப் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும், சிறிலங்கா அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் 15வது சுற்றுப் பேச்சுவார்த்தை இன்று நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெற்றிருந்தது.

இப்பேச்சுவார்த்தை குறித்து சுரேஸ் பிரேமச்சந்திரன் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

'சிறிலங்கா அரசாங்கம் பேச்சுவார்த்தையை முறித்துக் கொண்டது. இதற்கு முன்னர் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் அவர்கள் எமக்கு வழங்கிய உறுதி மொழிகளை நிறைவேற்றவில்லை. சிறிலங்கா ஜனாதிபதிக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கும் இடையில் ஒரு இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது.

சிறிலங்கா அரசாங்கத் தரப்பிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் இடம்பெறும் பேச்சுவார்த்தையில் எடுக்கப்படும் தீர்மானம் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் அரச யோசனையாக முன்வைக்கப்பட வேண்டும் என்பதே அந்தப் புரிந்துணர்வு.

இப்படி இருககையில் சிறிலங்கா அரசாங்கத் தரப்பு இதுவரையில் ஒரு தீர்வுக்கும் முன்வரவில்லை. நாங்கள் முன்வைத்த அதிகாரப் பரவலாக்கம் உள்ளிட்ட பலவற்றிற்கு அவர்கள் உரிய பதிலளிக்கவில்லை. இந்நிலையில் நாடாளுமன்ற தெரிவுக் குழுவிற்கு பெயர்களை சமர்பிக்க வேண்டுமென அவசரமாக பெயர் கோருகின்றனர். நாங்கள் எப்படி வழங்க முடியும்.

சிறிலங்கா அரசாங்கத்துக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை கடந்த தை மாதம் ஆரம்பமானது. தெரிவுக் குழு தொடர்பில் கடந்த செப்டெம்பர் மாதமே பேசத் தொடங்கப்பட்டது. தெரிவுக் குழு பேச்சுவார்த்தையும் அசர - கூட்டமைப்பு பேச்சுவார்த்தையும் சமாந்திரமாக நடைபெற வேண்டும் என சிறிலங்கா அரசாங்கத்தின் தரப்பில் கூறப்பட்டது.

எனினும் டிசம்பர் மாத இறுதிக்குள் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்தால் நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் பங்கு பற்ற முடியும் என நாம் கூறிவிட்டோம்.

இப்பேச்சுவார்த்தை ஆரம்பமாகி ஒரு வருடத்தில் எதுவித தீர்வுகளும் எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தைக்கான நிகழ்ச்சி நிரலும் போட்டோம். ஆனால் சிறிலங்கா அரசாங்கம் புதிய கதையைதான் ஒவ்வொரு கூட்டத்திலும் சொல்கிறது. எனவே டிசம்பர் மாத இறுதிக்குள் தீர்வை முன்வைத்தால் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு வருவோம். அடுத்த பேச்சுவார்த்தையில் இதற்கு பதிலளிக்க முடியுமானால் அதில் கலந்து கொள்ள நாம் தயார். அடுத்த பேச்சுவார்த்தை 06ஆம் திகதி என ஏற்கனவே திகதி குறிக்கப்பட்டுள்ளது' என சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=6c77ae18-cf55-4de7-8f6e-22d9e7870233

  • தொடங்கியவர்

இணக்கப்பாடுகளை அமுல்படுத்துங்கள், புதிய இடையூறுகளை ஏற்படுத்த வேண்டாம்: அரசிடம் இரா. சம்பந்தன் வலியுறுத்து

மிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நேற்று சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையொன்றிலேயே இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பு அங்கத்தவர்களின் பெயர்பட்டியலை முன்வைக்குமாறு அரசாங்கத் தூதுக்குழுவினர் நேற்று கோரியதால், இரு தரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை முறிவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் அறிக்கை வெளியாகியுள்ளது.

ஜனாதிபதியின் யோசனைக்கமைய தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தூதுக்குழுவுக்கும் இடையில் 10.11.2011 ஆம் திகதி பேச்சுவார்த்தைகள் ஆரம்பமானதை அவ்வறிக்கையில் இரா. சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

2011 ஜனவரி 10 ஆம் திகதி முதாலாவது சந்திப்பின்போது, இனப்பிரச்சினைக்கான தனது யோசனைகளை த.தே.கூ. வெளிப்படுத்தியது.  2011 பெப்ரவரி 3 ஆம் திகதி பேச்சுவார்த்தையின்போது அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய அந்த யோசனைகனை எழுத்துமூலம் த.தே.கூ. சமர்ப்பித்தது. அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய மேலும் விரிவான யோசiனையை எழுத்துமூலம் 2011மார்ச் 18 ஆம் திகதி மூன்றாவது சந்திப்பின்போது அது சமர்ப்பித்தது. இந்த யோசனைகளின் அடிப்படையில் அர்த்த்முள்ள பேச்சுவார்த்தைகளை தொடர்வது குறித்த தனது பதிலை சமர்ப்பிப்பதற்கு அரசாங்கம் அப்போது இணங்கியது.

ஆனால், அதன்பின் அடுத்த 5 மாத காலத்தில் 7 தடவை சந்திப்பு நடந்தது. ஆனால் அரசாங்கம் தனது பதிலை சமர்ப்பிப்பதாக மீண்டும் மீண்டும் உறுதியளித்த போதிலும் அதை செய்யவில்லை.

இந்நிலையில் 2011 ஓகஸ்ட் 4 ஆம் திகதி நடந்த சந்திப்பின்போது, தனது விரிவான யோசனைகளுக்கு அரசாங்கம் தமது பதிலை முன்வைக்கத் தவறினால், அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க முடியாது எனவும் அரசாங்கத்தின் பதில் கிடைக்கும்வரை பேச்சுகளுக்கு மேலும் திகதி நிர்ணயிப்பதில் அர்த்தமில்லை எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்தது.

அதன்பின் செப்டெம்பர் 2 ஆம் திகதி ஜனாதிபதிக்கும் த.தே.கூ. தலைவருக்கும் இடையிலான சந்திப்பின்போது மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான நடைமுறைகள் குறித்து இணக்கப்பாடு ஏற்பட்டது. இதன்படி தூதுக்குழுக்கள் செப்டெம்பர் 16 ஆம் திகதி சந்தித்து மேற்படி நடைமுறைகள் நிகழ்ச்சிக்குறிப்பில் சேர்க்கப்பட்டன. ஒக்டோபர் 20 ஆம் திகதி நடந்த சந்திப்பில் இவை உறுதிபடுத்தப்பட்டன.

இதன்படி அரசாங்கத் தூதுக்குழுவுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இடையிலான பேச்சுவார்த்தையை தொடர்வதெனவும் இதில் ஏற்படும் இணக்கப்பாட்டை உத்தேச நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிடம் முன்வைப்பதெனவும் இணக்கப்பாடு ஏற்பட்டிருந்தது.

ஏற்றுக்கொண்டபடி, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பங்குபற்றுவதற்கு, இரு தரப்புப் பேச்சுவார்த்தைகளில் கருத்திற்கொள்ளத்தக்க இணக்கப்பாடு ஏற்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியது.

இப்பேச்சுவார்த்தைகளை ஆக்கபூர்வமாக முன்னெடுப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் உறுதிபூண்டுள்ளது. இலங்கையின் அனைத்து மக்களும் ஆவலாகவுள்ள, ஏற்றுக்கொள்ளத்தக்க அரசியல் தீர்வை காண்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் ஏற்பட்ட பரஸ்பர இணக்கப்பாடுகளை அமுல்படுத்தும்படியும் இதற்கு புதிய இடையூறுகளை ஏற்படுத்த வேண்டாம் எனவும் அரசாங்கத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது.

http://tamilmirror.lk/2010-07-14-09-13-23/31955-2011-12-03-18-21-44.html

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவுக்கு கூட்டமைப்பு கொடுத்த அறிக்கையால் கோபமடைந்த மகிந்த கூட்டம் வேண்டுமென்றே கூட்டணியை பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேற்றி உள்ளது.

வன்முறை தீவிரவாதம் என்றெல்லாம் பேசுவதற்கு அரசாங்கத்திற்கோ பேரினவாதத்திற்கோ இந்தியாவிற்கோ உலகத்திற்கோ இனிச் சந்தர்ப்பம் இல்லை.

  • தொடங்கியவர்

கூட்டமைப்பு சரியான முடிவு எடுத்துள்ளது. மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப எடுத்துள்ளது.

கூட்டமைப்பை பேச்சுவார்த்தை மூலம் அடிபணிய வைக்க முடியவில்லை. எனவே, அந்த அமைப்புக்குள் ஏதாவது சதிகளை உருவாக்கி அதனை பலவீனப்படுத்த சிங்களம் முயலலாம். அடுத்து வரும் நாட்களில், வாரங்களில் அவதானமகா இருக்கவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.