Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என் கேமரா பார்வையில் சிங்கப்பூர் - பயண அனுபவம் (பாகம்-1)

Featured Replies

நன்றி தமிழ்மணம்!

பார்வையாளர்களே! இன்னும் படங்களை பார்வையிட தொடுப்புகளை அழுத்தி பார்வையிடலாம்.

(for more picture clik the links)

என் கேமரா பார்வையில் சிங்கப்பூர் - பயண அனுபவம் (பாகம்-1)

# 1 புதிய லாண்ட் மார்க் ? 2a.marina%2Bbay%2Bsands.jpgவிரிந்த சாலைகள், உயர்ந்த கட்டிடடங்கள், எங்கும் சுத்தம், எதிலும் ஒழுங்கு என்று பாராட்டப்படும், உலக நாடுகளில் அதிகமாக சுற்றுலா பயணிகளைப் பெறுகிற ஒன்றாகத் திகழும் சிங்கப்பூர் உங்களில் பலரும் சென்ற வந்த இடமாகவே இருக்கக் கூடும். சென்றிராதவருக்கு சில தகவல்கள் உதவலாம் என்றும், சென்ற வந்த நினைவுகள் மறக்காமல் இருக்கவும் என் பயண அனுபவத்தை.. என் கேமரா பார்வையில், வழக்கம் போலவே சிறுகுறிப்புகளாக, சிலபல பாகங்களாகப் பகிர்ந்து கொள்ள உள்ளேன். விரிவான பயணக்கட்டுரையாக இல்லாமல் அதாவது பயணக் கதைக்குப் ‘படங்கள்’ என்றில்லாது, எடுத்த ஐநூறுக்கும் அதிகமான படங்களில் வடிகட்டித் தரவுள்ள சுமார் நூறு படங்களுக்கான ‘கதை’ எனக் கொள்ளலாம் :)!

# 2 அதிர்ஷ்டத்தின் அடையாளச் சின்னம்

1.Singapore%2BMerlion.jpgசிங்கப்பூருக்கு அதிர்ஷ்டத்தை அழைத்து வருகிற அடையாளச் சின்னமாகக் கொண்டாடப்படும் மெர்லயன் சுற்றுலா செல்லுபவர்கள் தவறவிடாத இடம். ‘மெர்’ என்றால் கடல். கீழுள்ள மீனுடல் ஒருகாலத்தில் இந்நாடு மீன்பிடி கிராமமாகத் திகழ்ந்ததின் குறியீடாகவும், சிங்கத் தலை சிங்கப்புரா (லயன் சிட்டி) எனும் அதன் புராதனப் பெயரின் குறியீடாகவும் அமைந்துள்ளது.

சிங்கப்பூர் நதியோரமிருக்கும் இவ்விடத்திலிருந்தே எஸ்ப்ளனேட், மெரினா பே சான்ட்ஸ் (Marina Bay Sands) , தென்கிழக்கு ஆசியாவின் உயர்ந்த கட்டிடங்களுள் ஒன்றான Swissotel The Stamford ஹோட்டல், உலகின் அதி உயர சிங்கப்பூர் ஃப்ளையர் அனைத்தும் காணக் கிடைப்பதால் சுற்றலாப் பயணிகள் சுழன்று சுழன்று அவற்றைப் படமாக்கியபடி இருந்தார்கள் இப்படி:

# 3 Marina Bay Sands

2.marina%2Bbay.jpg அந்த ஜோதியில் நானும் ஐக்கியமானேன். சிங்கப்பூர் என்றாலே மெர்லயனே முக்கிய லாண்ட்மார்க்காக எல்லோருக்கும் நினைவுக்கு வருவது போய் அந்த இடத்தை சாண்ட்ஸ் ஹோட்டல் பிடித்துக் கொண்டு வருகிறதோ எனத் தோன்றுகிறது. அதனாலாயே ஒரு மாறுதலுக்கு முதல் படமாக அதைப் பகிர்ந்தேன்! 57 மாடிகளைக் கொண்ட இந்த ஹோட்டலின் மூன்று கட்டிடங்களையும் இணைக்கிறது நீர்ச்சறுக்குப் பலகை போன்ற தோற்றத்துடனான ஸ்கை பார்க் எனும் மேல் தளம். அதில் 150 மீட்டர் நீள நீச்சல் குளம் அமைந்திருப்பது கூடுதல் ஈர்ப்பு.

# 4

sandbay.jpgஆடம்பர ஹோட்டலான இதில் தங்குபவர் தவிர்த்து மேலிருந்து சிங்கப்பூரினை ரசிக்க ஐம்பது பேர்கள் கொண்ட குழுக்களாக தலைக்கு இருபது டாலரை வசூலித்து அனுப்பி வைக்கிறதாம் நிர்வாகம். இரவு நேரத்தில் விளக்கின் ஜாலத்தில் இந்த ஹோட்டல் ஜொலிக்கும் அழகைக் காணவே பலர் மாலையில் மெர்லயன் பக்கம் செல்வதுண்டு. எங்கள் பயணத்திட்டத்திலும் மாலையாக இருந்த சிடி டூரை நாங்கள்தான் காலை நேரத்துக்கு மாற்றி விட்டிருந்தோம். பிறகுதான் ஏன் மாலையில் செல்ல வற்புறுத்தப்பட்டோமெனப் புரிந்தது.

சற்றுத் தள்ளி அமைந்த, 2002 ஆம் வருடம் நிர்மாணிக்கப்பட்ட எஸ்ப்ளனேட் கட்டிடம் உலகின் அதிமுக்கிய கலை அரங்கமாக செயல்பட்டு வருகிறது.

# 5 Esplanade Mall6.%2Besplanade.JPG

டுரியன் பழத்தை இரண்டாக வெட்டிக் கவிழ்த்தது போன்ற கட்டுமானத்தைக் கொண்டது:

# 6

ESPLANADE%2B%25282%2529.JPG

# 6 Swissotel The Stamford Singapore

Swissotel%2BThe%2BStamford%2BSingapore.jpg741 அடி உயரத்தில் இன்னொரு பக்கம் ஸ்டாம்ஃபோர்ட் ஹோட்டல் உலகின் உயர்ந்த கட்டிடமாக கின்னஸில் தான் பெற்றிருந்த இடத்தை, சென்ற வருடம் துபாய் புர்ஜ் காலிஃபாக்கு விட்டுக் கொடுத்திருந்தாலும் தென்கிழக்கு ஆசியாவின் உயரமான கட்டிடங்களில் ஒன்றாகக் கம்பீரம் குறையாமல் காட்சி தருகிறது.

அருகாமையில் வாகனத்திலிருந்து எடுத்தது. கிராப் செய்த படம் அன்று:

# 7

Swissotel%2BThe%2BStamford%2BSingapore%2B%2528Close%2BUp%2529.JPG

[சிங்கப்பூர் ஃப்ளையர்

# 8 sing-flyer%2B%25282%2529.jpg

பார்ப்பதற்குத் தீம் பார்க் ஜெயண்ட் வீல் போலத் தெரிந்தாலும் 44 மாடிகளின் உயரம், அதாவது சுமார் 541 அடி உயரம் கொண்டது இந்த ஃப்ளையர். ஒரு சுற்றுச் சவாரி அரைமணியில் சென்றுவந்து விடலாம். பறவைப் பார்வையில் சிங்கப்பூர் மட்டுமின்றி மலேசியா வரை பார்த்திடலாமென்றும் நீந்தும் ஆகாய மேகங்களின் அருகாமையில் செல்லுவது அற்புத அனுபவமென்றும் சொல்லப் படுகிறது.

# 9

Singapore%2BFlyer%2B-1a.jpg2005-ல் தொடங்கி மூன்று ஆண்டுகளில் நிர்மாணிக்கப்பட்டது. லண்டன் ஐ, மற்றும் சைனாவின் ஸ்டார் ஆஃப் நன்சங் ஆகிய சவாரி சக்கரங்களையும் விட உயர்ந்தது.

# 10

FLYER-2a.jpgகுளிர்சாதன வசதியுடனான 28 கூடைகள் ஒவ்வொன்றும், 28 பேர் அமரும் படியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சின்ன வயதிலிருந்து எங்க ஊர் பொருட்காட்சி ஜெயண்ட் வீலில் ஏறவே பயப்படும் வீராங்கனை நான். எந்த மலைப் பிரதேசத்துக்குச் சென்றாலும், திருப்பதி போன்ற உயரம் குறைந்த குன்றானாலும். குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் வண்டி ஏற ஏற அசெளகரியமாக உணர ஆரம்பித்து விடுவேன். எலுமிச்சையை மூக்குக்கு அருகே வைத்துக் கொள்வேன். நகர்வதே தெரியாமல் மிக மிக மெதுவாகவே சுற்றுமெனச் சொல்லப்பட்ட போதிலும், வந்த இடத்தில் எதற்கடா வம்பு என இதில் ஏறி ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. படம் எடுத்ததோடு நிறுத்திக் கொண்டேன். பிரச்சனை இல்லாதவர்கள் தவறவிடக் கூடாத ஒன்றே இந்த வான் உலா.

# 11 செல்வம் தரும் நீருற்று

fountain-a.jpgThe Fountain of Wealth என சீன நம்பிக்கையின் பேரில் அமைக்கப்பட்ட இது சன்டெக் சிட்டி ஷாப்பிங் மாலினுள் உள்ளது. 1998-ல் உலகின் மிகப்பெரிய நீருற்றாக கின்னஸில் இடப் பெற்றதாகும். ஒரு நாளின் குறிப்பிட்ட சில மணிநேரங்கள் நீர் நிறுத்தப்பட்டு பார்வையாளர்கள் செல்வமும் அதிர்ஷ்டமும் அடைய வேண்டி நீருற்றின் நடுவே அமைந்த குட்டி நீருற்றைச் சுற்றி நடக்க அனுமதிக்கப் படுகிறார்கள். தினம் இரவு 8 முதல் 9 மணிவரை லேசர் ஒளியில் பாட்டுக்கு ஏற்ற மாதிரியாக அசைந்தாடும் இந்த நீருற்று. சன் டெக் மாலுக்கு மக்களை ஈர்க்கவும் இது உதவுவதாகச் சொல்லப்படுகிறது.

# 12 நதிபார்த்து வான் தொட்டுக் கட்டிடங்கள்

Skyscrapers%2Bnear%2BAnderson%2BBridge.jpgவெள்ளை நிறத்திலிருப்பது ஆண்ட்ர்சன் பாலம். இடது பக்கம் தெரிவது எஸ்பளனேட் பாலம். சிங்கப்பூர் நதியின் அழகை ரசித்துக் கொண்டிருந்த வேளையில் இங்கு ஆரம்பித்து வெகுதூரம் நீளுகிற இந்தப் பாலத்துக்கடியிலிருந்து நுழைந்தது நீஈஈஈண்ட படகொன்று.

# 13 dragon-2.jpg படகு சவாரி (river cruise) மூலமாகவும் சுற்றிப்பார்க்கிறார்கள் நகரினை. படம் 5-ல் உள்ள படகு மற்றும் இது போன்ற ட்ராகன் போட்களில்..

# 14 Boat%2Bon%2Bsingapore%2Briver.jpg

நாங்கள் சென்றிருந்தது கஸ்டமைஸ்ட் பேக்கேஜ் என்பதால் ஒவ்வொரு இடத்துக்கும் செல்ல இரண்டு குடும்பங்களுக்கு ஒரு வாகனம் என ஏற்பாடு செய்திருந்தார்கள். சொல்லி வைத்த மாதிரி ஒவ்வொரு நாள் வந்த ஓட்டநர்களும் கஸ்டமர்கள் நேரத்துக்கு சாப்பிட்டார்களா என்பதில் அக்கறை காட்டினார்கள். இல்லையெனில் எங்கே ஓட்டலில் நிறுத்த வேண்டுமானாலும் சொல்லுமாறு கேட்டுக் கொண்டார்கள். சிட்டி டூருக்கு மட்டும் தனிவாகனம் கேட்டுப் பெற்றோம் விருப்பப்படி விருப்பமான இடத்தில் அதிக நேரம் எடுத்துக் கொள்ளலாமென. ஆனால் சிட்டி டூருக்கு அதற்காகவே பிரத்தியேகமாக இயக்கப்படும் இரண்டு தளம் கொண்ட பேருந்தைப் பயன்படுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்குமே என ஆதங்கப்பட்டார் சிங்கப்பூர் வாழ் நண்பர். ஆம், வித்தியாசமான அனுபவமாக, படமெடுக்கக் கூடுதல் வசதியாக இருந்திருக்கும்தான். இருப்பினும் கூட நகரும் வாகனத்தின் உள்ளிருந்து ஓரளவு வெற்றிகரமாகவே பல இடங்களைப் படமாக்கிவிட்டுள்ளேன் :)!

# 15 பழைய உச்சநீதி மன்றம்

old%2Bcourt.jpg

# 16 இஸ்தானா பார்க் நுழைவாயில், தேசியக் கொடிகளுடன்..

ISTANA%2BPARK.jpgசிங்கப்பூர் அதிபரின் குடியிருப்பாகிய இஸ்தானாவிற்கு எதிர்ப்புறம் அமைந்துள்ளது.

தங்கியிருந்த ஐந்து நாட்களில் நேரமின்மையால் உள்ளே செல்ல இயலாத இடங்களாயினும், காட்சிப் படுத்தியப் படங்களை அதன் சிறப்புகளுடனேயே பகிர்ந்திருக்கிறேன் இனி செல்ல இருப்பவர் திட்டமிட உதவுமென.

தொடரும்] button="hori"; lang="ta"; submit_url ="http://tamilamudam.blogspot.com/2011/11/1.html"

logo.gif

Edited by BLUE BIRD

  • தொடங்கியவர்

சின்ன நாடு.. பெரிய பேரு..-சிங்கப்பூர் பயண அனுபவம்(பாகம்-2)-படங்களுடன்

சிறிய நாடானாலும் சீரிய வளர்ச்சியால் பெரிய அளவில் பேசப்படும் நாடு சிங்கப்பூர்.

# 1. நீல வானைத் தொட நீளும் நீலக் கட்டிடம்

skyscraper.JPG

# 2. பறவைப் பார்வையில் பாலம்

bird%2527s%2Beye%2Bview-3.jpg

“ஒரு பத்து வருடங்களுக்கு முன்னர் வந்திருந்தால் இந்த சாலைகள், மால்கள் இவை பிரமிப்பைத் தந்திருக்கக் கூடும். பெங்களூரில் மலிந்து விட்ட மால் கலாச்சாரத்தினாலும், பெருகி விட்ட ஜனத்தொகை மற்றும் ஐடி வளர்ச்சியால் ஊரைச் சுற்றி வளைந்தோடும் ரிங் ரோட்களினாலும், குறிப்பாகச் சமீபத்தில் சில்க் போர்ட் ஜங்ஷனிலிருந்து எலக்ட்ரானிக் சிடி ஜங்ஷனுக்கு பத்து நிமிடங்களில் பறக்க வைக்கும் ஃப்ளை ஓவர் போன்றவற்றாலும் அத்தகு ஆச்சரியம் ஏற்படவில்லை” என்ற போது சிங்கப்பூர்வாழ் நண்பர் “ஒரு வாரம் இருந்ததை வைத்தெல்லாம் எடை போடக் முடியாது” என வாதிட ஆரம்பித்து விட்டார்.

அவர் வாதத்திலும் ஓரளவு நியாயம் இருக்கிறதுதான். ஒரு நாடு எத்தனை வளர்ந்தாலும் விதிமுறைகளை அமல்படுத்துவதில் அரசும் சரி, கடைப்பிடிப்பதில் மக்களும் சரி, காட்டுகிற அலட்சியப் போக்கு ஒன்றே பெரிய பெரிய வித்தியாசங்களை ஏற்படுத்தி விடுகிறதே. அந்த வகையில் நிமிர்ந்துதான் நிற்கிறது தன் கட்டிடங்களைப் போலவே இந்நாடும் எனத் தோன்றியது. இதோ அதோ என இழுத்துக் கொண்டிருந்த பெங்களூர் மெட்ரோ முழுமையாக செயல்பட ஆரம்பித்து விட்டது. இங்குள்ள மாதிரியான பராமரிப்பும் திட்டமிடலும் அரசின் பக்கமிருந்தும், சட்டத்தை மதிப்பதில் மக்கள் பக்கமிருந்தும் ஒத்துழைப்பு எப்படி இருக்குமென்கிற கேள்வி எழவே செய்கிறது.

அனைவரும் போற்றுவதற்கு ஏற்றாற் போல சிங்கப்பூரின் பொதுப் போக்குவரத்து வசதி மிக வசதியான ஒன்றாகவே உள்ளது. நகரின் எந்த மூலைக்கும் எளிதாகச் சென்று விடலாம். பிங்க் லைன், க்ரீன் லைன் என இரண்டு பாதைகளில் ஓடும் மெட்ரோக்களில் எங்கே ஏறி எப்படி மாறி செல்ல வேண்டுமென்பதை மிகத் தெளிவாகக் காட்டியிருக்கிறார்கள் ஒவ்வொரு ஸ்டேஷன்களின் வாசல்களிலிலுமிருக்கும் வரை படத்தில். அதிலும் சென்று பார்க்க விரும்பி மெட்ரோ, மற்றும் பஸ்ஸிலுமாகப் பயணித்தோம் ஜுராங் பறவைகள் பூங்காவிற்கு.

இரயில் நிலையங்களில் பயணிகள் கடைப்பிடிக்கும் ஒழுங்கு பாராட்ட வேண்டிய ஒன்று. மெட்ரோ பராமரிப்பும் சிறப்பு.

# 3metro.JPGபயணிகள் முண்டியடிக்காமல் இறங்குபவருக்கு வழிவிட்ட பின்னரே ஏறுகிறார்கள். 20 வருடங்களுக்கு முன்னர் மும்பையில் வசித்த போது சபபர்ன் ரெயில்களில் பயணித்தது. பிறகு இப்போது சிங்கப்பூர் மெட்ரோவில். ஒவ்வொரு ஸ்டேஷன் வரவிருக்கையிலும் அறிவிப்பு செய்கிறார்கள். அதுவும் ஆட்சி மொழிகளான மலாய், மண்டரின்(சீனக் கிளை மொழி), ஆங்கிலம் இவற்றோடு தமிழிலும் அறிவிப்பு வருகையில் மகிழ்ச்சியாகவே இருந்தது. பக்கத்து மாநிலமேயானாலும் கர்நாடகத்தில் தமிழும், தமிழ் படங்களும், தமிழர்களும் சந்திக்கும் பிரச்சனைகள் மனதில் ஒரு கணம் வந்து சென்றது.

வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணிப் பெண்களுக்குத் தனி இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. நாலு வயது பொடியர்களிலிருந்து வயதானவர்வரை விதிவிலக்கின்றி அநேகம் பேர் மொபைலில் கேம் விளையாடியபடி இருக்கிறார்கள் பயணிக்கையில். “ஜப்பான் இரயில்களில் அத்தனை பேருமே தத்தமது மொபைலுக்குள் முகம் புதைத்திருப்பர். அதற்கு இங்கே தேவலாம்” என்றார் கணவர். இரயில் நிலையத்திலிருந்து வெளியேறியதும் பேருந்தைப் பிடிக்க வரிசையில் நின்று பொறுமையாகச் செல்லுகிறார்கள். பேருந்து ஓட்டுநருக்கு எழுபது வயதிருக்கலாம் போலிருந்தது (சென்டோஸா தீவிலும் பெரிய பேருந்துகளை சின்னப் பெண்கள் வெகு லாவகமாக ஓட்டினார்கள். அருகிலிருந்து கவனித்ததில் அவை ஆட்டோ கியர் என்பது புரிய வந்துது).

நம் நாட்டில் வழக்கொழிந்து வரும் சைக்கிள் ரிக்‌ஷா(பெங்களூரில் நான் கண்டதில்லை) அங்கு இன்னும் புழக்கத்தில் இருப்பது ஆச்சரியம் அளித்தது:

# 4 ‘அந்தக் கடையில ஃப்ரஷ் ஜூஸ் நல்லாருக்கும். குடிக்கிறீங்களா..?’

rickshaw.jpg

உணவைப் பொறுத்தவரை ஷாப்பிங்கிற்கு மக்கள் முற்றுகையிடும் முஸ்தஃபா அருகே அமைந்த முருகன் இட்லி, சரவண பவன், ஆனந்த பவன், கோமளா விலாஸ் ஆகியவற்றில் நல்ல இந்திய சாப்பாடு கிடைக்கின்றன.

# 5 இந்தக் கடையில சாப்பாடு நல்லாருக்கும்

saravana%2Bbhavan1.jpgசரவண பவன் இருக்கும் அதே வரிசையில் இருப்பதே ஒரிஜனல் ‘முருகன் இட்லி’. (அதற்கு முந்தைய திருப்பத்தில் ‘முருகன் இட்லி’ எனும் போர்டுடன் ஈ ஓட்டிக் கொண்டிருந்த உணவகத்தை சந்தேகத்தின் பேரில் முதல்நாளே தவிர்த்தது நல்லதாயிற்று). ‘சுற்றிப் பார்க்கச் செல்லுமிடங்களில் சைவச் சாப்பாடு கிடைப்பது சிரமம். ஒவ்வொரு இடங்களில் நடக்கவும் பார்க்கவும் நிறைய நேரமெடுக்கும் ஆகையால் பசி தாங்க பழங்கள், பிஸ்கெட், தண்ணீர் இவற்றை பையில் எடுத்துச் செல்வது நல்லது’ என்றார் செல்லும் முன்னரே தோழி ஒருவர். தண்ணீர் மற்றும் எனது கேமரா, லென்ஸுகள் எடையே சில கிலோ எடை வந்து விடுவதால் எடுத்து வருபவர்களுக்கு[:)] மேலும் சுமையாகி விடுமே என நான் அந்த ஆலோசனையை செயல்படுத்தாது விட்டதற்கு ஓரிடத்தில் மட்டும் வருந்த நேரிட்டது. ஜூராங் பார்கில் சுற்றிக் களைத்து அடுத்து நேராக நைட் சஃபாரி செல்ல வேண்டியிருந்த சூழலில் அங்கிருந்த உணவகத்துக்குள் நுழைந்தால் சைவ உணவு எதுவுமே இல்லை. ப்ரெட் பட்டர் ஜாம் மற்றும் பழங்கள் எம் மேல் இரக்கம் காட்டின. சிறுகுழந்தைகளை அழைத்துச் செல்லுபவர்கள் என் தோழி சொன்னதைப் பின்பற்றுவது நலம்.

# 6 ஆன்டர்சன் பாலம்

a.bridge.JPGசிங்கப்பூர் நதியின் அக்கரையிலிருந்த இந்த ஆண்டர்சன் பாலத்தை எஸ்ப்ளனேட் பார்க்கிலிருந்து படமாக்கினேன். எஸ்ப்ளனேட் பூங்காவின் ஒரு மரத்தடியில் கனத்த மெளனத்தைப் போர்த்திக் கொண்டு நிற்கிறது இந்தியன் நேஷனல் ஆர்மி(INA) சிப்பாய்களுக்கான நினைவுச் சின்னம்.

# 7. நேதாஜி எழுப்பிய அதே இடத்தில்...Nethaji.JPG

1945-ல் இரண்டாம் உலகப் போரில் உயிர்நீத்த சிப்பாய்களின் நினைவாக ஜூலை எட்டாம் தேதி சுபாஷ் சந்திர போஸ் இங்கு அடிக்கல் நாட்டி நினைவுச்சின்னம் ஒன்றை எழுப்பியிருந்தார். ஒற்றுமை, நம்பிக்கை, தியாகம் எனும் கொள்கைகளும் அதில் பொறிக்கப்பட்டிருந்தன. ஆனால் அப்போது சிங்கப்பூரை ஆக்ரமித்த மவுண்ட்பேட்டனின் படை அவரது உத்திரவின் பேரில் அதைத் தகர்த்து விட்டது. பின்னர் சிங்கப்பூரின் நேஷனல் ஹெரிடேஜ் போர்ட் 1995ஆம் ஆண்டு சிங்கப்பூர்வாழ் இந்தியர் அளித்த நிதியுதவியுடன் இப்போதை நினைவுச் சின்னத்தை எழுப்பியிருக்கிறது.

.

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் பயனுள்ள படப் பயணம் , தொடருங்கள் நீலப் பறவை. வாழ்த்துகள்!!

  • தொடங்கியவர்

ஆப்ரிக்கக் காடும் அழகுப் பறவைகளும் - ஜுராங் பூங்கா - சிங்கப்பூர் (பாகம்-6)

பீடு நடை போடும் மயில், சிறகைச் சிலிர்க்கும் வான்கோழி, வீட்டுக்கு வரும் பக்பக் புறாக்கள் கீச்கீச் மைனாக்கள் எனப் பறவைகளைப் படம் எடுப்பதென்றால் படுகுஷியாகி விடும் என்னை, 20 ஹெக்டேர் பரப்பளவிலிருக்கும் பறவைப்பூங்காவில் கொண்டு விட்டால் என்னாகும் :)? விடைதான் இப்பதிவும், வரவிருக்கும் அடுத்த பாகமும்!!

# 1.மயில் போல... புறா ஒண்ணு...

Victoria.jpg

[Victoria Crowned Pigeon]

சிங்கப்பூரின் ஜூராங் பறவைகள் பூங்கா 380 வகைகளில் 5000 பறவைகளைப் பராமரிக்கிறது என்றால் ஆச்சரியமாய் இருக்கிறதில்லையா? அதுவும் இயற்கையான சூழலிலேயே என்பதுதான் விசேஷம். ஏவியரி எனப்படும் உயர்ந்த மரங்களையும் உள்ளடக்கிய பிரமாண்டக் கூண்டுகளில் பறவைகள் வெளியேறியும் விடாமல் அதே நேரம் சுதந்திரமாக இயற்கையின் மழை வெயில் இடி மின்னல் எல்லாவற்றையும் அனுபவித்தபடி வாழுகின்றன.

பூங்காவின் எந்தெந்த இடத்தில் என்னென்ன வகைப் பறவைகள் உள்ளன என்பதற்கான தெளிவான வரைபடம் நுழைவுச் சீட்டு வாங்குமிடத்தில் தந்து விடுகிறார்கள்.

# 2. பறவைகள் பலவிதம்

Jurong%2Bentrance.jpg

உள்ளே நுழைந்ததும் வரவேற்றது பேரட் பேரடைஸ். காக்கட்டூ, மக்கா, ஸ்கார்லெட், சன் பாரகீட், எலக்டஸ், ஜுவினைல் கிளிகளின் சத்தம் இடத்தையே ரம்மியமாக்கியது. வந்து கவனிக்கிறோமெனக் கையசைத்து விட்டு பனோரெயிலில் ஏறினோம்.

# 3. கிளிகள் கையில் கிளிகள்

parrots.jpg

மூன்று ஸ்டேஷன்களில் நிறுத்தம் கொண்ட இந்த பனோ ரயில் தொடர்ந்து சுற்றியபடி இருக்கிறது. ஒவ்வொரு நிறுத்தத்திலும் இறங்கி [நடக்க முடிகிற அளவு :)]அதன் சுற்று வட்டாரத்தில் இருக்கும் பறவைகளை ரசித்து விட்டு ரயில் அடுத்த ரவுண்ட் வரும் போது ஏறிக் கொள்ளலாம்.

# 4. பனோ ரயில்

jurong%2Bmonorail.1.jpg

முதல் நிறுத்தத்தில் இறங்கிய போது ஆச்சரியப்படுத்தியது அத்தனை வகைப் பறவைகள் நிரம்பிய இடத்தில், உலகில் எத்தனை எத்தனையோ பறவைகள் இருக்கையில் நம்ம தேசியப் பறவைக்கு செய்து வைத்திருந்த மலர் அலங்கார மரியாதை:

# 5. அட நம்ம மயிலு...

national%2Bbird.JPG

# 6. ராணி மகராணி [Victoria Crowned Pigeon]

crowned%2Bpigeon.jpgமாடப்புறா இல்லை. மகுடம் தரித்த புறா. பிரிட்டிஷ் ராணியின் பெயரால் அழைக்கப்படுகிறது. இவை மிகப் பெரிய ‘வாக் இன்’ ஏவியரியில் பராமரிக்கப்படுவதால் நாம் உள்ளேயே சென்று இப்படி ரொம்ப அருகாமையில் இருந்து படம் எடுக்க முடிகிறது.

# 7. மகுடத்தில் வித்தியாசம்

Victoria-2.jpg ஆண் பெண் இரண்டுமே ஒரே மாதிரித் தோற்றத்திலிருக்குமென சொல்லப்பட்டாலும் கொண்டை அமைப்பில் வித்தியாசத்தைப் பார்க்க முடிந்தது (கவனிக்க # படம் 1: மயில் போல..).

# 8. ஹார்ன் பில்

Hornbill.jpg நாலைந்து மரங்கள் அடங்கிய மாபெரும் கூண்டில் இரண்டே பறவைகள். வலைக்கம்பிக்குள் கேமராவின் லென்ஸ் நுழையவில்லை :(! எடுத்த பலவற்றில் தேறிய ஒன்றே இது.

ராட்சத பருந்து, நீந்தும் அன்னங்கள், பெலிகன்கள், கூட்டமாக ஏரியினுள் வெள்ளை மற்றும் ஆரஞ்சு ஃப்ளெமிங்கோ என எண்ணற்ற வகைப் பறவைகள். தூரம், நேரமின்மை காரணமாக அருகில் சென்று பார்க்க இயலாதவையுடன் ஏற்கனவே இறங்கிப் பார்த்தவற்றையும் பறவைப் பார்வையில் பனோரயிலில் இருந்து ரசிக்க முடிகிறது.

அதிலும் கீழ்வரும் முதல் மூன்று (# ) வேகமாய் விரைந்த மோனா ரயிலிலிருந்து எடுத்தவை:

# 9. ஆஸ்திரேலியன் பெலிகன் [உன்னைப் போல் ஒருவன் :)?]

Australian%2BPelicans.jpg

# 10 வெள்ளை ஃப்ளெமிங்கோ கூட்டம்

white%2Bflemingos-aa.jpg

# 11. ஆரஞ்சு வண்ணத்தில்..

orange%2Bflemingo%2Bfrom%2Bmono%2Brail.jpg

# 12. வெள்ளையம்மா

ஒற்றைக்காலில் தவம்

# 13. அழகி (Orange Flemingo)

மடை வாத்து / Wood Duck or Carolina Duck:

வட அமெரிக்காவில் அதிகமாகக் காணப்படும் வகை இவை.

# 14. அசந்த தூக்கத்தில் ஒன்று

# 15. அரைத் தூக்கத்தில் ஒன்று

# 16. அட்டென்ஷனில் ஒன்று

இவை வேறு வகை. வெள்ளை முகங்கொண்ட பழுப்பு வாத்துகள். தொலைவிலிருந்த குட்டையருகே நின்றிருந்தன. அத்தனை தெளிவில்லா விட்டாலும் பார்வைக்காகப் பதிந்துள்ளேன்:

# 17. பழுப்பு வாத்துக்கள்

ஆப்பிரிக்க நீர்வீழ்ச்சிப் பகுதியாக வடிவமைக்கப்பட்ட இடம் வெகு அழகு. இது இரண்டாவது நிறுத்தத்தில் வருகிறது.

# 18. வரவேற்கிறது

செயற்கை நீர்வீழ்ச்சி சுமார் 30 மீட்டர் அதாவது நூறடிக்கும் மேலான உயரத்திலிருந்து விழுகிறது:

# 19. தீம்தனனா தீம்தனனா

‘ச்சோ’ என அருவியின் சத்தம் அமைதியான காட்டில் எதிரொலிக்க அங்கொரு அருமையான இசைக் கச்சேரியே நடந்து கொண்டிருந்தது. மனமின்றியே நகர வேண்டியதாயிற்று.

பழங்குடி ஆப்ரிக்க மனிதர்களைத் தத்ரூபமாகக் காட்டும் சிலைகளும் ஆங்காங்கே உள்ளன:

# 20. சூரியனே கடிகாரம். கிளம்பி விட்டார்கள் வேலைக்கு..

# 21. ஈட்டியோடு காட்டு வீரன்

http://4.bp.blogspot.com/-cKvfcoyxh80/Tt29DZF7NQI/AAAAAAAAFCw/JqbRuEw_GuE/s600/statue-5.JPG

# 22. கூடாரத்தில் கால் நீட்டி..

statue-1a.jpg

# 23. போர்களத்தில் புயலாகி..

statue-2.jpg

முழுப் பூங்காவையும் முழுமையாக ரசிக்க முழுநாள் போதாது. குறிப்பிட்ட நேரங்களில் கிளி ஷோவும் உண்டு. சிறுகுழந்தைகளைக் குஷிப் படுத்துக் கூடியது. ரயிலில் செல்லுகையில் அதற்காக அரங்கில் கூடியிருந்தவர்களைப் பார்க்க முடிந்தது. ஆனால் அதில் அத்தனை ஆர்வம் எங்களுக்கு இருக்கவில்லை. அந்நேரத்தில் முடிந்தவை சுற்றிப் பலவிதப் பறவைகளை அருகாமையில் ரசிப்பதையே விரும்பினோம். நேரம் செல்லச் செல்ல கால்கள் கெஞ்ச ஆரம்பித்து விட்டன.

அதைத் தவிர்க்க சிலர் கைட்கள் கொண்ட ட்ராமில் செல்கிறார்கள். சிலர் இப்படி வாடகைக்கு வண்டியை எடுத்துக் கொண்டுச் சுற்றுகிறார்கள்:

# 24. இது எப்படி இருக்கு?

statue-1.jpg

# 25. ஓங்கி வளர்ந்த காடு

treees.jpg

பொதுவாகப் பெங்களூர் பூங்காக்கள் பலவற்றிலும் தனிமரங்களைப் படமாக்குவதில் ஆர்வம் காட்டுகிற எனக்கு அங்கிருந்த நெடிந்துயர்ந்த மழைக்காட்டு மரங்கள் வியப்பைத் தந்தன. இதைவிடவும் அடர்த்தியான காட்டுக்குள் நீண்ட நேர இரவு நடை அனுபவம் காத்திருப்பதை அப்போது அறிந்திருக்கவில்லை. கிளம்பி நைட் சஃபாரி வந்து சேர்ந்தோம்.

(தொடரும்)

பி.கு: ‘அப்போ கிளிகள்?’ பேரட் பேரடஸைக் காண்பிக்காமல் ஜூராங் பகிர்வை முடிக்க முடியுமா? முதல் பத்தியில் சொன்னது போல அடுத்த பாகத்தில் உங்களைச் சந்திக்க வரும் அழகுக் கிளிகள்! பிறகே நைட் சஃபாரி.]

  • தொடங்கியவர்

எஸ்ப்ளனேட் பார்க்கில் பழைய உச்சிநீதி மன்றம் எதிரே சாலையைப் பார்த்து அமைந்திருக்கிறது முதலாம் உலகப் போரில் உயிர்நீத்த சிப்பாய்களுக்கான நினைவுச்சின்னம். இதையடுத்த படத்தில் இருப்பதன் முன் பக்கமே இது. அகன்ற நினைவாலயத்தை இரண்டு பக்கமும் வாகனங்கள் நின்றிருந்தபடியால் இப்படி எடுக்க வேண்டியதாயிற்று.

# 8. முதலாம் உலகப்போர் நினைவுச் சின்னம்

war%2Bmemorial-front.JPG[/url">http://3.bp.blogspot.com/-bi8t5cx30_U/Tru3BtMzlhI/AAAAAAAAEe4/_QgwlE7BcZc/s1600/war%2Bmemorial-front.JPG"]

# 9. இரண்டாம் உலகப்போர் நினைவுச் சின்னம்war%2Bmemorial-2.JPG[/url">http://2.bp.blogspot.com/-VQoFMcOtHcE/Tru3BvSml3I/AAAAAAAAEeo/tEsZhv9n7TY/s1600/war%2Bmemorial-2.JPG"]

# 10. சிவிலியன் வார் மெமோரியல் பார்க்Civilian%2Bwar%2Bmemorial%2Bpark_a.jpgஇரண்டாம்">http://2.bp.blogspot.com/-KlSzPK8W9tY/TrwLEYI294I/AAAAAAAAE8Q/rzGohuOpcJg/s1600/Civilian%2Bwar%2Bmemorial%2Bpark_a.jpg"]இரண்டாம் உலகப் போரில் ஜப்பானிய ஆக்ரமிப்பின் போது உயிரிழந்த பொதுஜனங்களின் நினைவாக எழுப்பப்பட்டது.

இருபத்தியோராம் நூற்றாண்டினுள் நுழைந்த பின்னும் யுத்தம் இல்லாத ஒரு பூமியை நாம் இன்னும் உருவாக்கவில்லை என்பது வேதனையான விஷயம்.

***

# 11. ஆர்மீனியன் சர்ச்

Armenian%2BChurch.jpgசிங்கப்பூரின்">http://1.bp.blogspot.com/-zbEDETehJow/TrvQe2ZsyvI/AAAAAAAAEgw/uCuH29ietmg/s1600/Armenian%2BChurch.jpg"]சிங்கப்பூரின் வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடங்களுள் ஒன்றாகப் போற்றப்படும் இந்த அமெரிக்க தேவாலயம் இந்நாட்டின் பல முக்கிய கட்டிடங்களை நிர்மாணித்த George Drumgoole Coleman என்பவரின் மாஸ்டர் பீஸ் என்றே கருதப்படுகிறது.1835-ல் கட்டப்பட்ட இதுவே சிங்கப்பூரின் இரண்டாவது தேவாலயம் என்பதும் குறிப்பிடத் தக்கது.

[படங்கள் 10,11 மற்றும் கீழ்வரும் 12 ஆகியன விரைந்து கொண்டிருந்த வாகனத்திலிருந்து படமாக்கப்பட்டிருப்பதை கூர்ந்து கவனித்தால் புலனாகும். பகிர்ந்திடும் ஆவலில் பதிந்துள்ளேன்.]

# 12. கொடி பறக்குதுbuilding%2Bwith%2Bflags.jpgசிங்கப்பூரின்">http://3.bp.blogspot.com/-Uxa5LwXPCWQ/Tru_j4LKucI/AAAAAAAAEfc/h9d3pMmU7Ac/s1600/building%2Bwith%2Bflags.jpg"]சிங்கப்பூரின் சுதந்திர தினம் முடிந்த சில தினங்களில் சென்றிருந்தோம். அநேகமாக அத்தனைக் கட்டிடங்கள், குடியிருப்புகளின் மாடிகள் என எங்கும் தேசியக் கொடிகள் கட்டப்பட்டிருந்தன, சென்றிருந்த தியான் ஹாக் கெங் சீனக் கோவில் உட்பட.

# 13. சீனக் கோவில்chineese-8.jpgஇந்தக்">http://1.bp.blogspot.com/-jleDiAYggtY/Tru_GJGLCqI/AAAAAAAAEfU/20rMb66nRW8/s1600/chineese-8.jpg"]இந்தக் கோவிலிலும் உள்ளே செல்லுகையில் இடது பக்கதிலும் திரும்பி வருகையில் வலது பக்கத்திலும் வாகனம் நின்றபடியால் சாலையின் மறுபுறமிருந்து முழுத்தோற்றத்தை எடுக்கும் எண்ணத்தைக் கைவிட வேண்டியதாயிற்று. இதன் வெளிக்கூரை, உட்கூரை மற்றும் உள்ளிருந்த தெய்வங்கள் குறித்துத் தனிப் பதிவாக பிறிதொரு சமயம் பகிர்ந்திடுகிறேன். ஒரு காலத்தில் மீனவக் கிராமமாக இருந்ததை இப்போதும் நன்றியுடன் தங்கள் அடையாளமாகப் பெருமைப்பட்டுக் கொள்ளும் சிங்கப்பூரின், மீனவரைக் காக்கும் மாஜூ(mazu) மாதாவே இக்கோவிலில் பிரதான தெய்வம்:

# 14. கடலன்னை மாஜு

7.%2Bchineese%2Btemple.jpg[/url">http://4.bp.blogspot.com/-FTx0wXmi8iU/Tru_kKcqAqI/AAAAAAAAEfo/GTkhe9k4WQI/s1600/7.%2Bchineese%2Btemple.jpg"]

சீன நம்பிக்கைகள் பல இடங்களில் கடைப்பிடிக்கப் படுவதைக் காணமுடிந்தது. பாம்பினை கழுத்தில் அணிந்து கொண்டால் அதிர்ஷ்டமும் நலமும் பெருகும் என நம்புகிறார்கள். வேறு காரணம் இருப்பின் அறிந்தவர் பகிர்ந்திடுங்கள். பொது இடங்களில் (மெர்லயன் பார்த்து விட்டு வாகனத்துக்குத் திரும்பும் வழியில்) இதற்கென்றேப் பாம்பைக் கொண்டு வருகிறார்கள். கூடவே ராஜயோகம் வருமெனச் சொல்லாமல் சொல்லவோ என்னவோ பளபளவெனத் தொப்பியும் கொடுக்கிறார்கள் இப்படி:

# 15. “யாரும் இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் செளக்கியமே..”

with%2Bsnake.jpg[/url">http://3.bp.blogspot.com/-JMqkYfMqDQY/TrvsD3XONbI/AAAAAAAAEiE/k66ZGUWSgG8/s1600/with%2Bsnake.jpg"]

கீழ் வருவது செண்டோஸா தீவின் அண்டர்வாட்டர் உலகின் வெளிப்புறமிருந்த தோட்டத்தில்:

# 16. “இளங்கன்றுகள் நாங்க பயமறியோம்..”[/url">http://3.bp.blogspot.com/-4nCeDC5gjxA/TrvrmPNVd6I/AAAAAAAAEh4/d9LCa7ljLZ8/s1600/kids%2Bwith%2Bsnake_f.jpg"]kids%2Bwith%2Bsnake_f.jpg

பறவைப் பார்வை:

# 1. முப்பது ஏழு மீட்டர் உயரம் கொண்ட பிரமாண்ட மெர்லயன்..sentosa%2Blion-4.jpg.தனியே">http://3.bp.blogspot.com/-w3A3bwLlJg8/Tr_Zpo0zwOI/AAAAAAAAEmw/GCqFF4PAGrM/s1600/sentosa%2Blion-4.jpg"].தனியே.. தன்னந்தனியே.. ஹார்பர் பார்த்து..

ஃப்ளையர் ஏறாமல் தவறவிட்டப் பறவைப் பார்வை மவுண்ட் ஃபேபரிலிருந்து சென்டோஸா தீவுக்குப் பயணிக்கையில் கிடைத்தது. அப்போது காட்சிப்படுத்தியவையே முதல் நான்கு படங்களும்.

# 2. கூகுள் மேப் அல்ல.. கேபிள் வாகனப் படம்..http://1.bp.blogspot...g/s650/bev1.jpg[/url">http://1.bp.blogspot.com/-T633wqa9y5E/TrvL6rNJlkI/AAAAAAAAEf0/jqt1CnsQO1g/s1600/bev1.jpg"]http://1.bp.blogspot.com/-T633wqa9y5E/TrvL6rNJlkI/AAAAAAAAEf0/jqt1CnsQO1g/s650/bev1.jpg

அடர்த்தியான நாற்பது ஐம்பதடி உயர அடர்த்தியான மழைக்காட்டு மரங்கள் பச்சைபசேலெனக் கவனத்தைக் கவர்ந்தன. 2011ஆம் ஆண்டு சர்வதேச வன ஆண்டும்.

# 3. மழைக்காடு

http://2.bp.blogspot...jpgஃப்ளிக்கரில்">http://2.bp.blogspot.com/-epC0mnhHm7o/TrvMgaHTjbI/AAAAAAAAEgA/j9yNDtbhNO8/s1600/bird%2527s%2Beye%2Bview-4.jpg"]http://2.bp.blogspot...jpgஃப்ளிக்கரில் இதை நான் பகிர்ந்திருந்த போது thumbnail அளவில் முதலில் பார்த்த போது ப்ரகோலி என்றே நினைத்ததாக ஒரு நண்பர் சொல்ல இன்னொரு தோழியின் பகிர்வு: In Julianne Koepcke's survival story... she will say "I saw the forest beneath me—like green cauliflower, like broccoli "

# 4. நீந்தும் கப்பலை வானில் நீந்தியபடி ரசிக்கலாம்:

http://4.bp.blogspot...e%2Bview-2a.jpg[/url">http://4.bp.blogspot.com/-WYzL4xn7u1g/TrvM5OV27MI/AAAAAAAAEgY/LhWHrd6tbcY/s1600/bird%2527s%2Beye%2Bview-2a.jpg"]http://4.bp.blogspot.com/-WYzL4xn7u1g/TrvM5OV27MI/AAAAAAAAEgY/LhWHrd6tbcY/s650/bird%2527s%2Beye%2Bview-2a.jpg

5. தீவுக்கு மோனோ ரயில், சாலை வழியாகவும் வரலாம்:

http://4.bp.blogspot...osa3.jpgநாங்கள்">http://4.bp.blogspot.com/-T-8D5DmYJYs/TsN_pHzStRI/AAAAAAAAEsw/l0pyfoqL29U/s1600/sentosa3.jpg"]http://4.bp.blogspot...osa3.jpgநாங்கள் கேபிள் காரில் சென்று சாலைவழியாகத் திரும்பினோம். தீவு எங்கிருக்கிறது, கேபிள் கார்ப் பயணம் எங்கே தொடங்கி எங்கே முடிந்தது என்பதையெல்லாம் இருதினம் கழித்து ஒரு மாலையில், சிங்கப்பூர் நண்பர் தந்த ஆலோசனையின்படி சென்ற விவோசிடியின் பின்புறம் மற்றும் மேல்தளத்திலிருந்து ரசிக்க முடிந்தது.

# 6. வரவேற்கிறது சென்டோசா

http://1.bp.blogspot...SINGAPORE-2.jpg[/url">http://1.bp.blogspot.com/-EV--N9fw4ho/TsOXuNXno5I/AAAAAAAAEtc/OfxE1nK_KjQ/s1600/SENTOSA%2BSINGAPORE-2.jpg"]http://1.bp.blogspot.com/-EV--N9fw4ho/TsOXuNXno5I/AAAAAAAAEtc/OfxE1nK_KjQ/s650/SENTOSA%2BSINGAPORE-2.jpg

# 7. Resorts World Sentosa Singapore

http://3.bp.blogspot...SINGAPORE-1.jpg[/url">http://3.bp.blogspot.com/-rJ489SUF0dI/TsOXt1BCZiI/AAAAAAAAEtQ/-qeLqod8bJ0/s1600/SENTOSA%2BSINGAPORE-1.jpg"]http://3.bp.blogspot.com/-rJ489SUF0dI/TsOXt1BCZiI/AAAAAAAAEtQ/-qeLqod8bJ0/s650/SENTOSA%2BSINGAPORE-1.jpg

# 8. விவோ சிடிhttp://3.bp.blogspot...vivo%2Bcity.JPG[/url">http://3.bp.blogspot.com/-1xVGIju-t88/TsPB3dWMmCI/AAAAAAAAEto/hyhHxHCXm80/s1600/vivo%2Bcity.JPG"]http://3.bp.blogspot.com/-1xVGIju-t88/TsPB3dWMmCI/AAAAAAAAEto/hyhHxHCXm80/s650/vivo%2Bcity.JPG

# 9. நீண்ட தன் மூக்கைப் போலவே நெடுநெடுவென வளர்ந்து நிற்கும் பினோச்சியோhttp://4.bp.blogspot...0/Pinocchio.jpg[/url">http://4.bp.blogspot.com/-00k7xTH1Sos/TrvR9JBS-vI/AAAAAAAAEg8/blcVeEnz5ag/s1600/Pinocchio.jpg"]http://4.bp.blogspot.com/-00k7xTH1Sos/TrvR9JBS-vI/AAAAAAAAEg8/blcVeEnz5ag/s700/Pinocchio.jpg

விவோசிடி மேல்தளத்து குளத்தில் குழந்தைகளை விளையாடவிட்டபடி பொழுதைக் கழிக்கிறார்கள் மாலை வேளையில் பலரும். இன்னொரு பக்கத்தில் சிலர், குறிப்பாக வயதான தம்பதியர் சென்டோசா திசை பார்த்து அமர்ந்து, நகரும் கப்பல்களையும் இயற்கையையும் ரசித்தபடி ஜோடி ஜோடியாக அமர்ந்திருந்தனர்.

# 10. அந்திமாலையில்..

http://2.bp.blogspot.com/-ZoNcL3tr0F0/TsOXtBS8RCI/AAAAAAAAEs4/_WetejRP7ro/s650/ship-1.jpg"]http://2.bp.blogspot.com/-ZoNcL3tr0F0/TsOXtBS8RCI/AAAAAAAAEs4/_WetejRP7ro/s1600/ship-1.jpg"]http://2.bp.blogspot.com/-ZoNcL3tr0F0/TsOXtBS8RCI/AAAAAAAAEs4/_WetejRP7ro/s650/ship-1.jpg

# 11 அந்தப் பசுபிக் கடலோரம்..

http://4.bp.blogspot.com/-s4soOMNNAj8/TsOXtRBVvsI/AAAAAAAAEtI/mP9Xsak5eik/s650/ship-2.jpg"]http://4.bp.blogspot.com/-s4soOMNNAj8/TsOXtRBVvsI/AAAAAAAAEtI/mP9Xsak5eik/s1600/ship-2.jpg"]http://4.bp.blogspot.com/-s4soOMNNAj8/TsOXtRBVvsI/AAAAAAAAEtI/mP9Xsak5eik/s650/ship-2.jpg

# 12. சிங்கப்பூரின் அடையாளச் சின்னம் மெர்லயனின் முன்புறத் தோற்றம்

http://4.bp.blogspot.com/-qagL051pOPk/TrlEqoY2TLI/AAAAAAAAEdM/yp-DmMbptus/s650/Frontal%2BView.jpg"]http://4.bp.blogspot.com/-qagL051pOPk/TrlEqoY2TLI/AAAAAAAAEdM/yp-DmMbptus/s1600/Frontal%2BView.jpg"]http://4.bp.blogspot.com/-qagL051pOPk/TrlEqoY2TLI/AAAAAAAAEdM/yp-DmMbptus/s650/Frontal%2BView.jpg

சிங்கப்பூரின் பொருளாதாரம் குறித்த ஞானம் அதிகம் இல்லை. ஆனால் பெரும்பாலும் மக்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் அளவிற்கு பொருளாதார நிலையில் மேம்பட்டு இருப்பதும் அதற்கு அரசும் உதவுவதும், எங்களை சிடி டூர் அழைத்துச் சென்ற டாக்ஸி ட்ரைவரின் பேச்சிலிருந்து அறிய முடிந்தது.

‘சிங்கப்பூர் சின்ன நாடு முடிகிறது. நம்ம நாடு பெரிசு, ஜனத்தொகையும் அதிகம்’ என்றெல்லாம் எவரேனும் வாதிட்டால் வெட்கக்கேடு. நம் ஜனத்தொகை நமது பலம். அரசியல்வியாதிகளின் ஊழலுக்கு சரியான அடி கொடுத்தாலே வறுமைக் கோட்டில் உழலுபவரின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலும். அரசின் இந்த ‘எல்லோருக்குமானது நாடு’ எனும் செயல்பாடு பிடித்தது போலவே, பார்த்த இடங்களில் எனக்கு மிகப் பிடித்தவையாக, எல்லோருக்குமானது இவ்வுலகம் எனப் புரிய வைத்தவையாக அமைந்திருந்தன நீந்துவன, நடப்பன, பறப்பன இவை சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வரும் (சென்டோஸா தீவின்) அன்டர் வாட்டர் வொர்ல்ட், நைட் சஃபாரி மற்றும் ஜுராங் பறவைப் பூங்கா. வரும் பதிவுகளில் அவற்றைப் பற்றி பகிர்ந்து கொள்கிறேன்.

(தொடரும்) மீனம்மா - சென்டோசா, சிங்கப்பூர் (படங்களுடன் பாகம் 4)

# 1. தக தக தங்கமீன் (Parrot Fish)

http://2.bp.blogspot.com/-wQd-XraGkkA/TsTi4hzJbsI/AAAAAAAAExU/PxA_8MWaW4Q/s650/tf4.jpgகூடவே"]http://2.bp.blogspot.com/-wQd-XraGkkA/TsTi4hzJbsI/AAAAAAAAExU/PxA_8MWaW4Q/s1600/tf4.jpg"]http://2.bp.blogspot.com/-wQd-XraGkkA/TsTi4hzJbsI/AAAAAAAAExU/PxA_8MWaW4Q/s650/tf4.jpgகூடவே வவ்வால் போலவும் சில மீன்கள்

ரே வகை மீன்கள் 2, 3 சென்டி மீட்டர் அளவிலும் நீந்திக் கொண்டிருந்தன வேறொரு கண்ணாடித் தொட்டிகளில்.

ஆரஞ்சு பிங்க் என விளக்கொளியில் வண்ணம் மாறி மாறி ஜொலிக்கின்றன நிறமற்ற ஜெல்லி மீன்கள்.

# 5 Jelly Fish

http://2.bp.blogspot.com/-FTJ7DNwn3po/TsTEEa26HOI/AAAAAAAAEvs/hEdFfbDibwY/s650/jelly.jpg"]http://2.bp.blogspot.com/-FTJ7DNwn3po/TsTEEa26HOI/AAAAAAAAEvs/hEdFfbDibwY/s1600/jelly.jpg"]http://2.bp.blogspot.com/-FTJ7DNwn3po/TsTEEa26HOI/AAAAAAAAEvs/hEdFfbDibwY/s650/jelly.jpg

# 6

http://2.bp.blogspot.com/-uUe_hCBOzCw/TsTF-eEu4vI/AAAAAAAAEv4/-S0vW2GjJ8Y/s650/jelly%2Bpink1a.jpg"]http://2.bp.blogspot.com/-uUe_hCBOzCw/TsTF-eEu4vI/AAAAAAAAEv4/-S0vW2GjJ8Y/s1600/jelly%2Bpink1a.jpg"]http://2.bp.blogspot.com/-uUe_hCBOzCw/TsTF-eEu4vI/AAAAAAAAEv4/-S0vW2GjJ8Y/s650/jelly%2Bpink1a.jpg

ஜாஸ் பட சுறா போல சில தலைக்கு மேலே நீத்திச் செல்கின்றன:

# 7

http://4.bp.blogspot.com/-wgGnuG2u2LM/TsS_dEgJLWI/AAAAAAAAEuk/obDk30Afbv0/s650/F-1.jpg"]http://4.bp.blogspot.com/-wgGnuG2u2LM/TsS_dEgJLWI/AAAAAAAAEuk/obDk30Afbv0/s1600/F-1.jpg"]http://4.bp.blogspot.com/-wgGnuG2u2LM/TsS_dEgJLWI/AAAAAAAAEuk/obDk30Afbv0/s650/F-1.jpg

# 8

http://4.bp.blogspot.com/-z1rPeLvb9jo/TsS_dQ78tKI/AAAAAAAAEus/g614m8DubjQ/s650/f2.jpg"]http://4.bp.blogspot.com/-z1rPeLvb9jo/TsS_dQ78tKI/AAAAAAAAEus/g614m8DubjQ/s1600/f2.jpg"]http://4.bp.blogspot.com/-z1rPeLvb9jo/TsS_dQ78tKI/AAAAAAAAEus/g614m8DubjQ/s650/f2.jpg

சில பெரிய மீன்கள் கண்ணாடி மேல் சாய்ந்து அசைவில்லாமல் தூங்கிக் கொண்டிருந்தன:

# 9

http://4.bp.blogspot.com/-ISSs_FUDTZ8/TsS_dgg7QRI/AAAAAAAAEu8/-COCnSO1YR8/s600/f3a.jpg"]http://4.bp.blogspot.com/-ISSs_FUDTZ8/TsS_dgg7QRI/AAAAAAAAEu8/-COCnSO1YR8/s1600/f3a.jpg"]http://4.bp.blogspot.com/-ISSs_FUDTZ8/TsS_dgg7QRI/AAAAAAAAEu8/-COCnSO1YR8/s600/f3a.jpg

இப்படிக் கண்டிராத பளிச் வண்ணங்களில் வியக்க வைத்தன விதம் விதமான வகைகளில், வண்ணங்களில், அளவுகளில் மீன்கள்:

# 10

http://3.bp.blogspot.com/-iuCfssS2Zuc/TsTYhkjOi8I/AAAAAAAAEw0/-y16nmLaiFU/s650/kadal%2Bthavaram.jpg"]http://3.bp.blogspot.com/-iuCfssS2Zuc/TsTYhkjOi8I/AAAAAAAAEw0/-y16nmLaiFU/s1600/kadal%2Bthavaram.jpg"]http://3.bp.blogspot.com/-iuCfssS2Zuc/TsTYhkjOi8I/AAAAAAAAEw0/-y16nmLaiFU/s650/kadal%2Bthavaram.jpg

# 11 யார் தூரிகை தீட்டிய ஓவியம் ? (Blue Hippo Tang)

http://4.bp.blogspot.com/-_cnGqVtOk0g/Ttd-BhTQ0GI/AAAAAAAAE_g/CTrcmfemvag/s650/f6b.jpg"]http://4.bp.blogspot.com/-_cnGqVtOk0g/Ttd-BhTQ0GI/AAAAAAAAE_g/CTrcmfemvag/s1600/f6b.jpg"]http://4.bp.blogspot.com/-_cnGqVtOk0g/Ttd-BhTQ0GI/AAAAAAAAE_g/CTrcmfemvag/s650/f6b.jpg

# 12 Moorish Idol Fish

http://4.bp.blogspot.com/-8T96mZlLe0g/TsTfHoP_syI/AAAAAAAAExA/ddw_32KZ2ZE/s650/Fish-aa.jpg"]http://4.bp.blogspot.com/-8T96mZlLe0g/TsTfHoP_syI/AAAAAAAAExA/ddw_32KZ2ZE/s1600/Fish-aa.jpg"]http://4.bp.blogspot.com/-8T96mZlLe0g/TsTfHoP_syI/AAAAAAAAExA/ddw_32KZ2ZE/s650/Fish-aa.jpg

# 13

வாள மீனோ..

http://2.bp.blogspot.com/-ZNLCiSRZH24/TsTYC1JYpwI/AAAAAAAAEwo/Dh3SIqtXiaM/s650/f8a.jpg"]http://2.bp.blogspot.com/-ZNLCiSRZH24/TsTYC1JYpwI/AAAAAAAAEwo/Dh3SIqtXiaM/s1600/f8a.jpg"]http://2.bp.blogspot.com/-ZNLCiSRZH24/TsTYC1JYpwI/AAAAAAAAEwo/Dh3SIqtXiaM/s650/f8a.jpg

# 14

விலாங்கு மீனோ :)?

http://3.bp.blogspot.com/-5F_efhDEdgk/TsS_eXzfAMI/AAAAAAAAEvI/ZPczv1v9yrg/s650/F4.jpg"]http://3.bp.blogspot.com/-5F_efhDEdgk/TsS_eXzfAMI/AAAAAAAAEvI/ZPczv1v9yrg/s1600/F4.jpg"]http://3.bp.blogspot.com/-5F_efhDEdgk/TsS_eXzfAMI/AAAAAAAAEvI/ZPczv1v9yrg/s650/F4.jpg<p><strong># 15 Parrot Fish

[url="

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள், நீலப்பறவை!!!

பல தடவை போயிருக்கின்றேன்!

உங்கள் பதிவு, ஐந்தே நிமிடத்தில் முழு சிங்கப்பூரையும் கண் முன் கொண்டு வந்து விடுகின்றது!!!

விரிவான அழகிய பயண வர்னணை ...

... எங்கே நம்ம சிரங்கூன் இன்னும் வரவில்லை??????

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இணைப்பிற்க்கு :)

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் நீலப்பறவை..! :rolleyes: :rolleyes: :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.