Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசத்தின் குரல் 2011

Featured Replies

தேசத்தின் குரல் 2011 - அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவுநாள்

Date: 2011-12-17 at 6:00 pm

Address: Canada Kanthaswamy Temple Hall, 733 Birchmount Road, Scarborough, ON Canada

Details:

தேசத்தின் குரல் 2011 - அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவுநாள் கனடா தமிழர் கலை பண்பாட்டுக் கழகம்

Date: 2011-12-18 at 6:00 pm

தேசத்தின் குரல் 2011 - அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவுநாள்

Address: Ever Green Party Hall, 5011 Buchan, Montreal, QC Canada

Details: தேசத்தின் குரல் 2011 - அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவுநாள் மொன்றியல் தமிழர் கலைபண்பாட்டுக் கழகம்

Phone: 438 937 0481

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

drbala.jpg

  • கருத்துக்கள உறவுகள்

Anton-Balasingham-247x300.jpg

  • தொடங்கியவர்

381294_10151050671255008_856330007_21987640_1057246696_n.jpg

'தேசத்தின்குரல்' நினைவு சுமந்து

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும் தத்துவ ஆசிரியருமான 'தேசத்தின்குரல்'அன்ரன் பாலசிங்கம் டிசம்பர் 14, 2006 தனது 68 ஆவது வயதில் லண்டனில் காலமானார்.

http://www.youtube.com/watch?v=FfLKwpIIRAk

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணனுக்கு அஞ்சலிகள்

அவரது இறுதிக்கிரிகையின்போது போயிருந்தேன். அந்த மக்கள் வெள்ளம் சொன்னது அவர் எமது ராஐதந்திரி என்று.

பாலா அண்ணா... உன் காலத்தில் நாமும் வாழ்ந்தோம் ... சில நாட்களாவது அருகே ... பிரமிக்க வைத்தாய்!!

  • கருத்துக்கள உறவுகள்

candle.JPG

  • தொடங்கியவர்

'தேசத்தின் குரல்' நினைவுக் குறிப்புகள்

இன்று 14-12-2011 தமிழீழ விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் 'தேசத்தின் குரல்' அன்ரன் பாலசிங்கம் அவர்களின் ஐந்தாம் அண்டு நினைவுநாள். அவரின் ஈரநினைவுகளை நெஞ்சில் சுமக்குமுகமாக தோழர் பரணி கிருஸ்ணரஜனி எழுதிய சிறுகுறிப்புகள். -ஆசிரியர்-

அன்டன் பாலசிங்கம் கல கலப்பானவர் அதே சமயம் கண் டிப்பானவர் - கடும் கோபக்காரர். அன்ரன் பாலசிங்கம் என்ற மனி தரின்பின்னாலுள்ள கோபம் ஒரு தேசத்தின் கோபம் - விடுதலைக் காகப் போராடும் ஒரு இனத்தின் கோபம் - தமது நியாயங்கள் மறுக்கப்பட்டதனாலும் தாம் அங்கீகரிக்கப்படாமல் தொடர்ந்து நிராகரிக்கப்படுவதனாலும் பிறக் கும் ஓர் இனத்தின் வலியிலிருந்து எழும்பெருங்கோபத்தை அவர் ஏதோ ஒரு வகையில் அடையாளப் படுத்திக்கொண்டேயிருந்தார். அதுதான் அவர் மறைந்த போது"தேசத்தின் குரல்" ஆகியிருந்தார்.

போராட்டத்தின் தேவை என்பதே அழிவிலும் துயரத்திலும் இருந்துதான் பிறக்கிறது. எனவே ஒரு போராட்டத்தின் முடிவை-வீழ்ச்சியை ஒரு நிலப்பரப்பைக் கைப்பற்றுவதனூடாக, அழிவை ஏற்படுத்துவதனூடாக அந்த இனத்தின் துயரத்தை முன்னிறுத்திவரையறுப்பதை கோமாளித்தனம் என்பதைவிட வேறு வார்த்தைகளில் விபரிக்க முடியவில்லை.

anton-balasingam.jpg

சேகு வேரா- ப்ரான்ஸ் பனான்- அமில்கர் கப்ரால்- - ஜோன் போல் சார்த்ர் - அன்ரன் பாலசிங்கம்...

பனானின் மொழியில் கூறினால் "இந்த நிலைக்கு அஞ்சத் தேவையில்லை. அடக்குமுறையாளனின் இந்த வழிமுறைகள்வழக்கொழிந்தவை. சில சமயங்களில் அவை விடுதலையைத் தாமதப்படுத்த இயலும், ஆனால் தடுக்க முடியாது."

சர்த்தார் இன்னும் அழகாகக் குறிப்பிடுகிறார், "தொடங்குவதற்கு முன்பே தோல்வியைத் தழுவி விட்ட ஒரு போரில் தங்கள் முழுப்படைபலத்தையும் பிரயோகித்து எதிரி நிலத்தை ஆக்கிரமித்து வெற்றுக்கூச்சலிடுகிறான். இந்த செயல் முழுவதும் வரலாற்றைஎழுதப்புகுந்து விட்ட சுதேசிகளின் விடுதலை நிறைவேற்றத்தை தாமதப்படுத்துவதே ஒழிய. முற்றாகத் தடுப்பதல்ல." எத்தகையதீர்க்கதரிசனமான வார்த்தைகள்.

இந்த தீர்க்கதரிசனங்களை தின்று செரித்து வரலாற்றினுள் வெடித்தெழுந்தவர்தான் அன்ரன் பாலசிங்கம்.

--

அமெரிக்காவில் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்டு இரண்டு வாரங்கள் கழித்து அத்தாக்குதலை முன்னிறுத்தி பிரபல பிரெஞ்சுதத்துவமேதை ழான் போத்திரியா "le monde" பத்திரிகையில் ஒரு சிறப்புக் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்.

அதில் ‘"ஒரு அதிகார அரசும் ஒரு அமைப்பும் நடத்திய விளையாட்டில் மறு தரப்புக்கு சீட்டுக்களை சரியாகப் பகிர்ந்தளிக்காமல்அதிகார அரசு விளையாட்டை ஆரம்பித்தது. விளைவு மறு தரப்பு விளையாட்டின் விதிகளை மாற்ற வேண்டிய புறநிலைக்குதள்ளப்பட்டது. விளைவு இரட்டைக் கோபுரம் தகர்ந்தது. மாற்றப்பபட்ட அவ் விதிகள் கொடுரமானவை. ஏனெனில் அவைஇறுதியானவை என்பதால்" என்று குறிப்பிட்டார். இன்றும் சிங்களம் இதைத்தான் நமக்கு எதிராகச் செய்கிறது.

இப்போது தமிழீழத்திலும் விளையாட்டின் விதிகள் மாற்றப்படவேண்டிய புறநிலை உருவாகியிருக்கிறது. அன்ரன் பாலசிங்கம்இருந்திருந்தால் தெளிவாகச் சொல்லியிருப்பார். இது வன்முறையின் மூன்றாம் கட்டம்.

--

பாலசிங்கம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தவிர்க்க முடியாமல் போன பயங்கரவாத கூறுகளை ஒரு அறவியல் வடிவமாகஇனங்கண்டு அதை நியாயப்படுத்தினார் – கொண்டாடினார்.

ஏனெனில் நிராயுதபாணிகளாக – நிர்க்கதியாக நின்ற தமிழினத்தின் ஒரே ஆயுதமும் தீர்வும் அதன் மித மிஞ்சியவன் முறையிலேயே அடையாளம் காணப்பட்டது. இதை அவர் துணிச்சலுடனும் நேர்மையுடனும் உலகத்துடன் பேச முற்பட்டார். எந்தக் கட்டத்திலும் அவர் இதிலிருந்து இறங்கவேயில்லை.

--

அன்ரன் பாலசிங்கம் அவர்களை ஈழ விடுதலைப் போராட்டத்தின் மதியுரைஞர், கோட்பாட்டாளர் என்று நாம் கூறிக்கொண்டாலும் அவர் குறித்து ஒரு தட்டையான வாசிப்பே ஈழத்தமிழ்ச் சூழலில் இருக்கிறது. நாம் அவருடைய தோற்றுவாயை ஆராயத்தவறிவிட்டோம். பிரித்தானியாவிலிருந்து புறப்பட்டு வந்த அவர் எப்படி ஆயுதம் தரித்த குழுக்களை ஆதரித்து அதன் பின் நின்றார்என்ற யதார்த்த புறநிலையை ஆராயவும் அடையாளங் காணவும் தவறி விட்டோம்.

இத்தவறுகள்தான் இன்றைய போராட்டம் குறித்த தவறான புரிதலுக்கு நம்மை கொண்டு சென்று நிறுத்தியிருக்கிறது. மேற்குறிப்பிட்ட புறநிலைகளின் தோற்றுவாய்களை பிரக்ஞை பூர்வமாக நாம் தேடத் தொடங்கினால் அத் தேடல் எம்மை சர்த்தாரிலும் பனானிலும் கொண்டு போய் நிறுத்தும். ஏனெனில் அவர்களின் தொடர்ச்சியே அன்ரன் பாலசிங்கம்.

அந்த ஆய்வின் தொடர்ச்சி பயங்கரவாதம், புரட்சிகர வன்முறை, வன்முறையின் அறவியல் தொடர்பான கோட்பாடுகளை உய்ந்துணர்ந்து கொள்வதுடன் மட்டுமல்ல தற்போதைய களநிலவரங்களின் கன பரிமாணத்தை உணர்த்துவதுடன் தமிழீழவிடுதலைப் போராட்டத்தின் தந்திரோபாய வடிவ மாறுதலையும் இனங் காட்டும்.

காலம் என்பது பல நினைவுகளை தின்று செரித்துவிடக்கூடியது. ஆனால் சில இழப்புக்களும் பிரிவுகளும் காலத்தால் தின்றுதீர்த்துவிட முடியாதவை. கால உடைப்பில் சிதறுண்டு போகாத அத்தகைய ஒரு பேரிழப்புத்தான் அன்ரன் பாலசிங்கம் அவர்களுடையது. அவரின் இழப்பினூடாக விழுந்த வெற்றிடம் என்றுமே இட்டு நிரப்பப்பட முடியாதது. ஆனால் நிரப்பப்படவேண்டியது காலத்தின் கட்டாயம். ஆனால் துரதிர்ஸ்டவசமாக அந்த வெற்றிடம் அப்படியே வெறுமையாகவே கிடக்கிறது.

--

http://www.muzhakkam.com/muzhakkam/index.php?option=com_content&view=article&id=322%3A2011-12-14-18-11-12&catid=25%3Athe-project&Itemid=27

  • தொடங்கியவர்

நோர்வே தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்;த தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவுநாள் நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் அன்னைபூபதி றொம்மன் வளாகத்தில் நேற்று (14-12-2011) நினைவுகூரப்பட்டது.

பிற்பகல் 7 மணியளவில் சுடர் வணக்கத்துடன் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. மண்டபம் நிறைந்த மக்கள் தமது இதய அஞ்சலியை மலர் தூவி நிறைவேற்றினர். அகவணக்கத்துடன் தொடர்ந்த நிகழ்வில், எம்மை மாறா சோகத்தில் ஆழ்த்திவிட்டு மீளாத்துயில் கொள்ளும் தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் விபரணம் ஒன்று ஒளிவடிவில் காண்பிக்கப்பட்டது

எமது விடுதலைக்காக தன் சொகுசு வாழ்வை அர்ப்பணித்து, கொடிய நோய்க்கு ஆளானபோதும் மக்களின் சுதந்திர வாழ்விற்காய் தலைவரின் வழிநின்று வாழ்ந்த அந்த அற்புத மனிதரின் வாழ்க்கை வரலாறானது, நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரின் நெஞ்சங்களையும் நெகிழ வைத்தது.

இளவயது மங்கையரின் மனதை ஊடுருவிச்சென்ற கவிவரிகளோடு மதியுரைஞரின் நினைவுப்பாடல்களும் பாடப்பட்டது.

தேசத்தின் குரலென்றும், மதியுரைஞர் என்றும், தத்துவாசிரியர் என்றும் ஈழத்தமிழர்களால் அன்போடு அடைமொழிகளால் அழைக்கப்பட்ட கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் ஆயுதமேந்தாத போராளியாகவே வாழ்ந்து இன்று காவியமானார். இருப்பினும் எமது இறுதி இலக்கை அடையும் வரை புலத்தில் உள்ளவர்களும் ஆயுதமேந்தாத போராளிகளாக வாழ்ந்து தொடர்ந்து தமது தேசப்பணிகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது என்ற கருத்தே இன்றைய நிகழ்வில் ஓங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மிக உணர்வுபூர்வமாக நடந்தேறிய தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவுநாள் பிற்பகல் 8.30 மணியளவில் 'தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்' என்ற கொட்டொலியுடன் நிறைவிற்கு வந்தது.

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=f4163d7f-d189-4c95-a085-41ea557c483f

  • தொடங்கியவர்

பிரம்மஞானியும் ஆயுதப் புரட்சியும்

Anton-balasingam.jpg“சுடுகுழலில் இருந்து அதிகாரம் பிறக்கின்றது’ என்பார் சீனச் செம்புரட்சியின் தந்தை மாவோ சேதுங். மாவோ, சேகுவாரா வரிசையில் நவீன உலகம் கண்ட மாபெரும் புரட்சி வீரனான எமது பெருந்தலைவர் பிரபாகரனோ “வலிமையே வாழ்வு தரும்’ என்பார். அப்பெருந்தலைவனுக்கு உறுதுணைநின்று அவரது எண்ணங்களுக்கு அரசியல் – தத்துவார்த்த வடிவம் கொடுத்த பாலா அண்ணனும் “பலமான நிலையில் இருந்துதான் நாங்கள் பேசலாம்’ என்பார்.

தலைவரின் வார்த்தைகளில் கூறுவதாயின் “விடுதலை இயக்கம் என்ற மாபெரும் குடும்பத்தில் ஒரு மூத்த தலைமகனாக, பிதாமகனாக மூன்று தசாப்தங்கள் வாழ்ந்தவர்’ பாலா அண்ணை. “ஒரு மூத்த அரசியல் போராளியாக, ஒரு மதியுரைஞராக, ஒரு தத்துவாசிரியராக, எல்லாவற்றுக்கும் மேலாக’ தலைவனின் “உற்ற நண்பனாக இருந்து’ அவருக்கு “ஊக்கமும் உத்வேகமும் அளித்தவர்’ பாலா அண்ணை.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் “தோற்றம்பெற்ற ஆரம்பகாலம் முதல்’ தலைவரோடு “இருந்து, எல்லாச் சோதனைகளையும், வேதனைகளையும், சவால்களையும், சங்கடங்களையும் தாங்கிக் கொண்டவர்’ என்றால் அவர் பாலா அண்ணைதான். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகர், தத்துவாசிரியர் என்ற பாத்திரங்களோடு மட்டும் பாலா அண்ணையின் வகிபாகம் மட்டுப்படுத்தப்பட்டிருக்கவில்லை.

போராளிகளுக்கு ஏற்படக் கூடிய சங்கடங்களை – அது தனிப்பட்ட விடயமாக இருந்தாலும் சரி, குடும்பப் பிரச்சினையாக இருந்தாலும்சரி – தீர்த்து வைக்கும் ஒருவராகவும், அவர்களுக்கு அறிவுரை வழங்குபவராகவும் பாலா அண்ணை விளங்கினார். இயக்கம் என்ற குடும்பத்தில் போராளிகளுக்கு வகுப்பெடுத்து அரசியல் பாடம் கற்பித்த ஆசானாகவும் பாலா அண்ணை திகழ்ந்தார். தலைவராக இருந்தாலும் சரி, போராளிகளாக இருந்தாலும் சரி அவர்களின் திருமண ஒழுங்கை மேற்கொண்டு அவர்களுக்கான குடும்ப வாழ்க்கைக்கு அத்திவாரம் இட்ட ஒருவராகவும் பாலா அண்ணை விளங்கினார்.

இதனால் தான் “இயக்கம் என்ற குடும்பத்தில் தலைவர் பிரபாகரன் தந்தை என்றால், பாலா அண்ணை இயக்கம் என்ற குடும்பத்தின் தாயாக விளங்கினார்’ என்று பாலா அண்ணனுக்குப் புகழாரம் சூட்டினார் மூத்த போராளி யோகி. இவ்வாறு தனது உயிர்பிரியும் வரை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் என்ற குடும்பத்தில் தாயாக மூன்று தசாப்தங்களாக பாலா அண்ணை திகழ்ந்தார் என்றால் அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன.

ஒன்று தமிழீழத் தனியரசு என்ற இலட்சியம் மீது அவர் கொண்ட ஆழமான பற்றுறுதி. இரண்டாவது இந்த இலட்சியத்தை ஆயுதப் புரட்சி மூலமே அடைய முடியும் என்பதில் அவர் கொண்டிருந்த அசையாத நம்பிக்கை. ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு, வெற்று வார்த்தைகளை வீசித் தமிழீழத்தை அடைய முடியும் என்று ஒரு கணம்கூட பாலா அண்ணை நினைத்தது கிடையாது. அதுபோன்று தமிழீழத்தைக் கைவிட்டு சிங்களத்துடன் சமரசம் பேசித் அரசியல் தீர்வு எதனையும் பெறமுடியும் என்று துளியளவுகூட பாலா அண்ணை நம்பியதும் இல்லை.

அரசியல் என்பதும், பேச்சுவார்த்தை என்பதும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் உந்துசக்தியாக விளங்கிய ஆயுதப் போராட்டத்திற்கு ஏற்படும் தடைகளை அகற்றும் கருவிகளே தவிர, தமிழீழத் தனியரசு என்ற இலட்சியத்தை ஈட்டிக் கொடுக்கும் வழிமுறைகள் அல்ல என்பது பாலா அண்ணைக்குத் தெளிவாகத் தெரிந்திருந்தது. வெளிநாடுகளில் உப்பரிகை மாளிகைகளில் கொலுவிருந்து அறிக்கை விடுவதாலோ, அன்றி மேடைகளில் ஏறி முழங்குவதாலோ தமிழீழத் தனியரசை ஈட்டிவிட முடியாது என்பதில் பாலா அண்ணை உறுதியாக இருந்தார்.

அதனால்தான் ரஜீவ் காந்தி தொடக்கம், பிரேமதாசா உள்ளடங்கலாக, எரிக் சுல்கைம் வரை தான் உரையாடிய அத்தனை நபர்களிடம் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக்களைவு பற்றிப் பேசுவதற்கு பாலா அண்ணை மறுத்தார். “புலிகளின் ஆயுதங்கள்தான் எங்கள் மக்களின் பாதுகாப்புக் கருவிகள். அதனை நாங்கள் கைவிட்டால் எமது மக்களின் பாதுகாப்பிற்கு எந்த உத்தரவாதமும் இல்லை’ என்று பாலா அண்ணை இடித்துக்கூறினார். தமிழீழ விடுதலைப் புலிகள் ஈட்டும் ஒவ்வொரு இராணுவ வெற்றிக்கும் ஒவ்வொரு அரசியல் பரிமாணம் இருந்ததை பாலா அண்ணை நன்கு புரிந்து கொண்டார். இதன் அர்த்தபரிமாணங்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகளுக்கு அடிக்கடி எடுத்தும்கூறினார்.

இதுபோன்றே தமிழீழம் பற்றிய பாலா அண்ணையின் தரிசனமும் இருந்தது. தமிழீழத் தனியரசே தமிழீழ மக்களுக்கு நிரந்தர விடிவையும், சுபீட்சத்தையும் ஈட்டித் தரும் என்பது பாலா அண்ணனுக்கு நன்கு தெரிந்திருந்தது. 1977ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தன்னை பாலா அண்ணை பிணைத்துக் கொண்டதைத் தொடர்ந்து இரண்டு நூல்களை எழுதி வெளியிட்டார். அதில் ஒன்று “தமிழ்த் தேசியப் பிரச்சினை பற்றியது…’ என்ற தலைப்பில் வெளியாகியது. மற்றையது “சோசலிசத் தமிழீழத்தை நோக்கி’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. இதில் “சோசலிசத் தமிழீழத்தை நோக்கி’ என்ற மகுடத்தின் கீழ் பாலா அண்ணை வெளியிட்ட நூலே தலைவர் பிரபாகரன் அவர்களை வெகுவாகக் கவர்ந்து, பாலா அண்ணைக்கும், தேசியத் தலைவருக்கும் இடையிலான உறவுக்கு அத்திரவாரமாக அமைந்தது என்கிறார் “சுதந்திர வேட்டை’ என்ற தனது நூலில் அவரது துணைவியார் அடேல் அன்ரி. இதுவே பாலா அண்ணையை தமிழீழ விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியர் என்ற நிலைக்கு உயர்த்தியது எனலாம்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க வரலாற்றில் எண்ணற்ற நூல்களும், கட்டுரைகளும் வெளிவந்துள்ளன. இதில் ஆசிரியரின் பெயர் குறிப்பிடப்படாது வெளிவந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ நூல்கள் பலவற்றின் ஆசிரியராக பாலா அண்ணையே விளங்கினார். அதே போன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ ஊடகமான “விடுதலைப் புலிகள்’ பத்திரிகையில் ஆரம்பகாலம்தொட்டு வெளிவந்த பல பெயர் குறிப்பிடப்படாத அதிகாரபூர்வ கட்டுரைகள் – ஆசிரியர் தலையங்கங்களின் ஆசிரியராகவும் பாலா அண்ணையே விளங்கினார்.

இவையயல்லாவற்றிலும் இரண்டு விடயங்களை பாலா அண்ணை வலியுறுத்தினார். ஒன்று தமிழீழத் தனியரசு. மற்றையது அவ் இலட்சியத்தை அடைவதற்கான ஆயுதப் புரட்சி.

பாலா அண்ணையைப் பொறுத்தவரை தமிழீழத் தனியரசுக்கான போராட்டம் என்பது ஆயுதப் புரட்சியிலிருந்து வேறுபடுத்தப்பட முடியாத ஒன்றாகவே இருந்தது. ஆயுதப் புரட்சியும், விடுதலையும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாகவே பாலா அண்ணையால் பார்க்கப்பட்டன எனக்கூறின் அது மிகையில்லை. இலண்டனில் ஓர் பல்கலைக் கழக விரிவுரையாளராக விளங்கியவர் பாலா அண்ணை. அவர் மார்க்சிய சிந்தனையைக் கரைத்துக் குடித்த ஓர் தத்துவமேதையும் கூட. இவையயல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு தலைவர் பிரபாகரனின் வழிநின்று, அவருக்கு உறுதுணையாக, அவரது அரசியல் – இராசரீக முன்னெடுப்புக்களுக்குப் பக்கபலமாக பாலா அண்ணை நின்றார் என்றால் அது தலைவனின் சிறப்புக்கும், பாலா அண்ணையின் இலட்சிய உறுதிக்கும் சான்றுபகர்வதை எவராலும் மறுக்க முடியாது.

பேச்சுவார்த்தைகளில் சுயாட்சி, சமஷ்டி போன்ற கணைகளை உலகை நோக்கி பாலா அண்ணை எய்தார். “நாங்கள் சுயாட்சி பற்றி ஆராயத் தயாராக இருக்குறோம். சமஷ்டி பற்றி ஆராய்ந்து பார்ப்பதில் எங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை’ என்று உலகை நோக்கி பாலா அண்ணை ஏவிய ஒவ்வொரு கணைகளிலும் தமிழீழத் தனியரசு என்ற “தமிழரின் உறுதி’ மறைந்திருந்தது. தமிழீழத் தனியரசு என்ற பாதையில் ஏற்பட்ட தடைக்கற்களை அகற்றும் கருவிகளாகவே சுயாட்சி, சமஷ்டி போன்ற கணைகளை பாலா அண்ணை ஏவினார். ஆனால் இவை தன்னிச்சையாக பாலா அண்ணை ஏவிய கணைகள் அல்ல. தலைவர் எடுத்த ஒவ்வொரு முடிவுகளுக்கும் அமைய, தலைவரின் யுக்தியாகவே இக்கணைகளை பாலா அண்ணை ஏவினார்.

இதனால்தான் தமிழீழத்தைக் கைவிட்டு ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவுடன் பேசுமாறு புலிகளை ரஜீவ் காந்தியின் அரசாங்கம் நிர்ப்பந்தித்த பொழுது, தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமை என்ற கோட்பாடுகளை திம்புப் பேச்சுக்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் முன்னிறுத்தியது. தமிழீழத் தனியரசு நோக்கிய பாதையில் ஏற்பட்ட தடைக்கற்களை அகற்றும் அரசியல் யுக்தியாக இம்முக்கோட்பாடுகளை தலைவர் முன்னிறுத்தினார். தலைவரின் எண்ணத்தைப் புரிந்து கொண்ட பாலா அண்ணை, அப்பொழுது புலிகள் இயக்கத்திற்கும், ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈரோஸ், ரெலோ ஆகிய இயக்கங்களுக்கும் இடையில் உறவுப் பாலமாக விளங்கியவர் என்ற வகையில் திம்புப் பேச்சுக்களில் இம்முக்கோட்பாடுகளை சகல தமிழ் இயக்கங்களும், தமிழர் விடுதலைக் கூட்டணியும் முன்னிறுத்துவதற்கு வழிவகை செய்தார்.

இதுபோன்று சுயாட்சி என்ற யுக்தியை பிரேமதாசாவுடனான பேச்சுக்களில் மிகவும் தந்திரமாகத் தலைவர் கையாண்ட பொழுது, அதன் அர்த்தபரிமாணங்களின் வழிநின்று புலிகள் இயக்கத்திற்கு பிரேமதாசாவிடமிருந்து ஆயுத உதவியும், நிதியுதவியும் பெற்று, இந்திய இராணுவத்தை பிரேமதாசா வெளியேற நிர்ப்பந்தித்த புறச்சூழலை தோற்றுவித்ததில் முதன்மையான பாத்திரத்தை பாலா அண்ணை வகித்தார். 1994ஆம் ஆண்டு சமாதானத் தேவதையாக வேடமிட்டு சந்திரிகா ஆட்சிக்கு வந்த பொழுது தமிழீழத் தனியரசு நோக்கிய பயணத்தில் மீண்டுமோர் அரசியல் தடைக்கல் ஏற்பட்டது. இதனை உடைத்தெறிவதற்கான யுக்தியாக மீண்டும் சுயாட்சி என்ற கருவியைத் தலைவர் கையிலெடுத்தார்.

இதுபற்றி 1994ஆம் ஆண்டு தனது மாவீரர் நாள் உரையில் பின்வருமாறு தலைவர் தெரிவித்தார்:

“சமாதான வழியில், தமிழரின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வுகாண சந்திரிகா அரசு முயற்சிகளை எடுக்குமானால், நாம் அதற்கு ஒத்துழைப்பு வழங்குவோம். தமிழரின் தேசியப் போராட்டத்தினது இன்றைய வளர்ச்சிக் கட்டத்தைக் கருத்திற் கொண்டு, உருப்படியான சுயாட்சித் தீர்வுத்திட்டங்கள் முன்வைக்கப்படுமானால், நாம் அதனைப் பரிசீலனைசெய்யத் தயாராக இருக்கிறோம்.’ தனது உரையில் தலைவர் முன்வைத்த சுயாட்சி என்ற யுக்தியை பேச்சுவார்த்தைகளில், திரைமறைவில் நுட்பமாக பாலா அண்ணை கையாண்டார்.

தமிழீழத் தனியரசு என்ற இலட்சியத்திற்கு 2002ஆம் ஆண்டு சமாதானப் பேச்சுவார்த்தைகளில் மீண்டுமொரு அரசியல் தடைக்கல் ஏற்பட்டது. அப்பொழுது மீண்டும் சுயாட்சி என்ற கருவியைத் தலைவர் கையிலெடுத்தார்.

இது பற்றி தனது 2002ஆம் ஆண்டுக்கான மாவீரர் நாள் உரையில் பின்வருமாறு தலைவர் தெரிவித்தார்:

“சுயநிர்ணயக் கோட்பாட்டின் அடிப்படையில், எமது தாயக நிலத்தில், எமது மக்கள் தம்மைத் தாமோ ஆளக்கூடிய பூரண சுயாட்சி அதிகாரத்துடன் ஒரு தீர்வு முன்வைக்கப்பட்டால், நாம் அத்திட்டத்தை சாதகமாகப் பரிசீலனை செய்வோம்.’ மாவீரர் நாள் உரையில் தலைவர் முன்னிறுத்திய இந்த யுக்தியை ஒஸ்லோ பேச்சுவார்த்தைகளில் “சமஷ்டி முறையை ஆராய்ந்து பார்த்தல்’ என்ற வடிவில் பாலா அண்ணை கையாண்டார். இதன் பின்னர் சிங்கள அரசின் கடும்போக்கு அணுகுமுறை மேலோங்கத் தொடங்க, “இடைக்கால நிர்வாகம்’ என்ற வடிவில் தலைவர் முன்னிறுத்திய சுயாட்சி என்ற யுக்தியை பாலா அண்ணை நகர்த்தினார்.

மே 18இற்குப் பின்னர் உருவாகிய சில “மதியுரைஞர்கள்’ குற்றம் சுமத்துவது போன்று ஒருபொழுதும் “தமிழீழத்தில் இருந்து சறுக்கி’ சமஷ்டிக்குள் பாலா அண்ணை வீழ்ந்து விடவில்லை. தமிழீழத் தனியரசு என்ற இலட்சியத்திற்கு ஏற்பட்ட அரசியல் தடைக்கற்களை அகற்றுவதற்கு, தனது ஆலோசனையை ஏற்றுத் தலைவர் முன்னிறுத்திய சுயாட்சி என்ற யுக்தியையே பாலா அண்ணை நுட்பமாகக் கையாண்டார். இந்த வகையில் தலைவரின் எண்ணவோட்டத்தையே பேச்சுவார்த்தை மேசைகளில்

பாலா அண்ணை பிரதிபலித்தார்.

ஒட்டுமொத்தத்தில் தலைவரின் குரலாகவே பேச்சுவார்த்தைகளில் பாலா அண்ணை ஒலித்தார். “பாலசிங்கம் சமஷ்டியில் நம்பிக்கை கொண்டிருந்தார்’ என்று அண்மையில் எரிக் சுல்கைம் தெரிவித்திருந்தார். அத்தோடு, “பாலாவிற்கு உலகத்துடன் பேசும் பாசையும் புரிந்திருந்தது என்றும் சுல்கைம் புகழராம் சூட்டியிருந்தார். எரிக் சுல்கைமின் இவ்விரு கருத்துக்களையும் நாம் ஆழமாக மறுவாசிப்பிற்கு உட்படுத்தினால் ஓர் உண்மை புரியும். அதாவது பாலா அண்ணை வீசிய இராசதந்திர வலையில் இருந்து பிரேமதாசா மட்டுமன்றி எரிக் சுல்கைம் கூட தப்பவில்லை என்பதே அது.

தமிழீழம் என்ற இலட்சியத்தையும், அதனை அடைவதற்கான மூலோபாயமான ஆயுதப்புரட்சியையும் எவ்வாறு பாலா அண்ணை கையாண்டார் என்பதையும் நாம் புரிந்து கொள்வதற்கு பிரேமதாசாவுடனான பேச்சுவார்த்தைகளில் நடந்த சம்பவம் ஒன்றை நாம் இங்கு பார்ப்பது பொருத்தமாக இருக்கும். இதனை சுதந்திர வேட்கை என்ற தனது நூலில் அடேல் அன்ரி நினைவூட்டுகின்றார்:”அரசியல் சுதந்திரத்துக்கும், சுதந்திர அரசுக்கும் மாற்றீடு ஒன்றைத் தேடுவது விடுதலைப் புலிகளின் அரசியல் இலட்சியத்திற்கு விரோதமானதாக அமையுமா என்று பாலாவுடன் தனியாக இருக்கும்போது, நான் விசாரித்ததுண்டு. விடுதலைப் புலிகளின் அரசியல் அணுகுமுறையில் முரண்பாடு எதுவும் இல்லை என்று பாலா பதிலளித்தார். புலிகளின் இறுதி இலக்கானது, சிங்கள மக்களுடன் இணைந்து வாழும் பரிசோதனை முயற்சிகள் அனைத்தும் தோல்வி காணும் பட்சத்தில், சுயநிர்ணய உரிமை அடிப்படையில் சுதந்திர அரசை நிறுவுவதே என்று பாலா விளக்கினார்.

பிரேமதாசா அவர்கள் முட்டுக்கட்டைகளை நீக்கினால், அதாவது மாகாணசபையைக் கலைத்து, ஆறாவது சட்டத் திருத்தத்தைக் கைவிட்டு, புதிய தேர்தல்களை நடத்தினால், வடக்கு – கிழக்கு மாகாண சபைத் தேர்தல்களுக்கு முகம் கொடுக்க விடுதலைப் புலிகள் முழுமையாகத் தயாராக இருக்கிறார்கள் என்று கூறினார். விடுதலைப் புலிகளைப் பொறுத்த வரையிலே சிங்கள மக்களுடன் இணைந்து வாழ்வது சாத்தியமா என்பதைப் பரீட்சித்துப் பார்க்கும் ஒரு முக்கிய சந்தர்ப்பம் இதுவாகும். இந்த மாற்று வழியைக் கடைப்பிடிப்பதால், புலிகள் எதையும் இழக்கப் போவதில்லை. தேர்தலில் புலிகள் வென்றால், தமிழர் தாயகம், தமிழ்த் தேசியம், என்ற எண்ணக்கருக்களுக்கு அவர்கள் உறுதியான நிதர்சன வடிவம் கொடுப்பார்கள். இவையே அவர்களுடைய வெளிப்படையான அரசியல் இலட்சியங்கள் என்றும் பாலா தெளிவுபடுத்தினார்.

பிரேமதாசாவைப் பொறுத்த வரையிலே, விடுதலைப் புலிகளை வழிப்படுத்த அவர் தமது சொந்தத் திட்டம் ஒன்றை வகுத்திருந்தார். அதற்கேற்ப சபையைக் கலைப்பதற்குத் தாமதித்தார்; புதுத்தேர்தல் வாய்ப்பையும் தள்ளிப் போட்டார். ஆறாவது திருத்தச் சட்டத்தை நீக்குவது தொடர்பான முக்கிய விடயத்தைக் கண்டும் காணாதவராகப் புறக்கணித்தார். நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறுவது முடியவே முடியாது என்று வாதிட்டார். இறுதியில், பிரேமதாசா அவர்களுடன் தனிப்பட்ட சந்திப்புகளை நடத்துவதால் யதார்த்த அரசியல் தீர்வுகளுக்கு அதிகம் பயன் கிடைக்கப் போவதில்லை என்பது தெளிவாயிற்று. மிகுந்த பொறுமையுடன் அவருடைய நீண்ட பிரசங்கங்களைச் செவிமடுப்போம். ஒரே மக்கள், ஒரே தேசம் என்ற அவருடைய உரையில் அவருடைய மும்மணிக் கோட்பாடுகளோடு அனைத்து இனங்களும் அமைதியாகவும் ஒத்திசைவாகவும் வாழலாம் என்ற தத்துவமும் எப்போதும் இருக்கும்.

ஹமீது அவர்கள் எமது விடுதி அறைக்கு வந்து, பாலாவுடனான தமது பிரத்தியேகச் சந்திப்பின் போது, விடுதலைப் புலிகளிடமிருந்து ஆயுதக் களைவு நடத்துவது பற்றிப் பேச்சைத் தொடக்கியபோது, பிரேமதாசாவின் இரகசியத் திட்டம் மெதுவாக அம்பலமாயிற்று. மே மாத நடுப்பகுதியில் ஒரு மிகவும் வெப்பமான நாளன்றே இந்தக் கலந்துரையாடல் நடந்தது; விவாதப் பொருளும் சூடானது. எனவே விவாதமும் சூடு பிடித்தது. அரசுத் தலைவரின் அச்சங்களையும் அங்கலாய்ப்புக்களையுமே தாம் பிரதிபலிப்பதாக ஹமீது கூறினார். “தேர்தல் சுதந்திரமாகவும், நியாயப்படியும் நடைபெற வேண்டும் என்று பிரேமதாசா விரும்புகிறார்; அந்தத் தேர்தலில், ஈ.பீ.ஆர்.எல்.எப் உட்பட அனைத்துக் கட்சிகளுக்கும் குழுக்களுக்கும் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்றும் அரசுத் தலைவர் கருதுகிறார்.

ஆனால், வடக்கு – கிழக்கிலே, விடுதலைப் புலிகள் ஆயுதங்களோடு ஒரு மேலாண்மை நிலையை வகித்தால், அப்படியான தேர்தல் சாத்தியமாகாது. ஆகவே புதிய தேர்தல் நடத்துவதானால், அதற்கு முன் புலிகள் ஆயுதங்களைக் கையளிக்க வேண்டும். இதுவே அரசுத் தலைவருடையதும், ரஞ்சன் விஜேரத்னா போன்ற சில அமைச்சர்களுடையதும் கருத்தாகும். என்று அமைதியாக ஆனால் உறுதியாக ஹமீது அவர்கள் தெரிவித்தார்.

விடுதலைப் புலிப் பிரதிநிதிகளை அரசுத் தலைவர் தனிமையில் சந்தித்தபோது, ஆயுதக்களைவு விடயத்தை ஏன் குறிப்பிடவில்லை என்று பாலா கேட்டார். அதே சமயம் இந்தியப் படைகள் வெளியேறிய பின், புலிகளுக்கு எதிரான வேறு தமிழ்க் குழுக்களுடன் தனியான சந்திப்புக்களை பிரேமதாசா நடத்தி வருவதாகவும் பாலா முறையிட்டார். வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் பாதுகாப்பு ஏற்பாட்டைப் பொறுத்தவரையிலே புலிகள் ஆயுதங்களை வைத்திருப்பது ஒரு முக்கிய அம்சமாகக் கருதப்படவேண்டும் என்று பாலா விளக்கமும் அளித்தார்.

நிரந்தர அரசியல் தீர்வு மூலம் நிரந்தர அமைதி நிறுவப்படுமானால் அந்தப் பாதுகாப்பு அமைப்புக்கு புலிகளே பொறுப்பாக இருப்பார்கள். சட்டம் ஒழுங்கு ஆகியவற்றைப் பேண, பயிற்சி வழங்கப்பட்ட பாதுகாப்புப் படை ஒன்று, ஆயுதங்களுடன் புலிகள் வசம் இருக்க வேண்டும். தமிழ் மக்களுக்கு உறுதியான பாதுகாப்பை வழங்கக் கூடிய ஆளணி, தளவாடம், அனுபவம் ஆகியவை புலிகளிடம் உண்டு என்பதையும் திகைத்து நின்ற அரச அணித் தலைவரிடம் பாலா தெளிவுபடுத்தினார். “உங்களுடைய அரசுத் தலைவர் புதிய தேர்தலுக்கான தடைகளை நீக்க, அதாவது சபையைக் கலைத்து, ஆறாவது திருத்தச் சட்டத்தை நீக்க, தயாராக இல்லை. இந்தக் கட்டத்தில் புலிகளிடமிருந்து ஆயுதக் களைவு நடத்த வேண்டும் என்பது காலத்துக்கு முந்திய அவசர முடிவாகும்’. மேலும் மாகாண சபை மட்டுமே ஒரு நிரந்தரத் தீர்வுக்கான நல்ல தளமல்ல; மாகாண சபைத் தேர்தலில் புலிகள் நிற்க முன்வருவது, அதை ஒரு இடைக்கால ஏற்பாடாக ஏற்பதேயன்றி, நிரந்தரத் தீர்வாக ஏற்று அல்ல; சிங்கள மக்களுடன் அமைதியாகவும் ஒத்திசைவாகவும் இணைந்து வாழ விரும்புகின்றோம்; மக்களாட்சி வழிமுறைகளை நிறுவி மக்களாட்சி அரசியல் நடைமுறைகளை பேண விரும்புகின்றோம். அனைத்துக் குழுக்களும் கட்சிகளும் தேர்தலில் பங்கெடுக்க வாய்ப்பு வழங்கும் வகையில் சுதந்திரமான, நியாயமான அடிப்படையிலான தேர்தலை நடத்துவதற்கு அரசுடன் நாம் ஒத்துழைப்போம்.

மக்களின் பிரதிநிதிகளாக நாம் தேர்ந்தெடுக்கப்பட்டதும், தமிழ் மக்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ற முக்கிய பிரச்சினை சம்பந்தமாக நிரந்தரத் தீர்வு காண்பது பற்றி நாம் பேச்சுவார்த்தை நடத்தலாம்.’ என்று புலிகளின் நிலைப்பாட்டை பாலா எடுத்துரைத்தார்.

ஹமீது அவர்கள் கருத்துத் தெரிவிக்கும் போது, மாகாண நிர்வாகக் கட்டுமாணத்தின் ஓர் அம்சமாக மாகாண காவல்துறையை அமைத்து, புலிப் போராளிகளை காவல் அதிகாரிகள் ஆக்கலாமே என்று கூறினார். “அது சாத்தியப்படும் பட்சத்திலும், வடக்கு – கிழக்குக்கான பத்தாயிரம் பேர் அடங்கிய காவல்துறையை உருவாக்க விடுதலைப் புலிகளுக்கு மேலும் ஆயுதங்களும், ஆட்களும் தேவைப்படும்,’ என்று பாலா கருத்துத் தெரிவித்தார். “அப்படிப் பார்த்தால், விடுதலைப் புலிகளின் காவல்துறைப் பிரிவுக்கு, அரசுத் தலைவர் மேலும் ஆயுதங்களை வழங்க வேண்டி இருக்கும்’ என்று பாலா கேலியாகக் குறிப்பிட்டார். விடுதலைப் புலிகளிடமிருந்து ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என்று தொடங்கிய விவாதம், புலிகளுக்கு திரும்பவும் ஆயுதம் வழங்கும் கட்டத்துக்குத் தாவியது.

எமது விடுதி அறையை விட்டு வெளியேறும் போது, ஹமீது அவர்கள் வெகுவாகத் தளர்ந்து போயிருந்தார். தமிழீழத் தனியரசு மீது பாலா அண்ணை கொண்டிருந்த பற்றுதலையும், அதனை அடையும் மூலோபாயமாக ஆயுதப் புரட்சி மீது கொண்டிருந்த அசையாத நம்பிக்கையையும் நாம் ஒவ்வொருவரும் புரிந்து கொள்வதற்கு “சுதந்திர வேட்கையில்’ பதிவாகியுள்ள இச்சிறு குறிப்பு போதுமானது.

பாலா அண்ணையின் தமிழீழம் மீதான பற்றுதலும், ஆயுதப் புரட்சி மீதான அசையாத நம்பிக்கையுமே மூன்று தசாப்தங்களாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் “தாய்’ என்ற பாத்திரத்தில் அவரை உயர்த்தி வைத்திருந்தது. இன்று தேசத்தின் குரலாக அவரை நிலை நிறுத்தியுள்ளது.

14.12.2006 அன்று பாலா அண்ணை என்ற அன்னையை தமிழீழ தேசம் இழந்தது. 18.05.2009 இற்குப் பின்னர் பெரும் தலைவர் பிரபாகரன் என்ற தந்தையைத் தேடித் தமிழினம் ஏங்குகின்றது: முன்னர் தம்பியாகவும், பின்னர் அண்ணணாகவும், இறுதியாக அப்பாவாகவும் போராளிகளிடையே அறியப்பட்ட பிரபாகரன் என்ற தந்தை மீண்டும் வருவார் என்ற அசையாத நம்பிக்கையில் தமிழினம் காத்திருக்கின்றது. காத்திருப்பு என்பதை காலத்தைக் கடத்தும் நிகழ்வாக அல்லாது தமிழீழத் தனியரசு என்ற இலட்சியத்தை அடைவதற்கான நெருப்பு நதியாகக் கொண்டு, பாலா அண்ணையையும், ஏனைய மாவீரர்களையும் சத்தியத்தின் சாட்சியாக வரித்து, அவர்கள் சென்ற வழியில் தலைவரின் எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுத்துத் தமிழீழத் தனியரசு என்ற இலட்சியத்தை அடைவதற்கு அர்த்தபூர்வமாக உழைப்பதே இன்று எவ்வொரு தமிழரும் ஆற்ற வேண்டிய கடமையாகும்.

நன்றி: ஈழமுரசு / புலத்தில்

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.