Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை இணைப்பு

Featured Replies

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களில் இடம்பெற்ற யுத்த மோதல்களின் போது அரச பாதுகாப்பு படையினர் செயற்பட்ட விதம் குறித்து மகிழ்ச்சி அடைவதாக ஜனாதிபதியால் நியாமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தனது இறுதி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை இன்று (16) பாராளுமன்றில் அவை முதல்வர் நிமல் சிறிபால டி சில்வாவினால் சமர்பிக்கப்பட்டது.

இலங்கை அரசின் பாதுகாப்பு படையினர் சர்வதேச மனித உரிமை சட்டங்களை மீறவில்லை என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் யுத்த சூனிய வலயத்தில் அரச பாதுகாப்பு படையினர் அநாவசியமாக பொது மக்களை இழக்கு வைத்து தாக்குதல்களை மேற்கொள்ளவில்லை எனவும் ஜனாதிபதி நல்லிணக்க ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

எனினும் யுத்த வலயத்தில் அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளும் இடையே இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் பொது மக்கள் சிலர் கொல்லப்பட்டதாக நல்லிணக்க ஆணைக்குழு ஒப்புக் கொண்டுள்ளது.

புலிகளின் பகுதிகளில் இருந்து அரச பாதுகாப்பு படையினர் உள்ள பகுதிகளுக்குச் சென்ற மக்கள் மீது புலிகள் இயக்கம் தாக்குதல் நடத்தியதாகவும் கண்ணிவெடிகளைப் புதைத்து வீதித் தடை விதித்ததாகவும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை தெரிவிக்கிறது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை கடந்த மாதம் 20ம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

கடந்த கால நிலைமைகள் பற்றி ஆராய 2010ம் ஆண்டு மே மாதம் 15ம் திகதி முன்னாள் சட்ட மா அதிபர் சீ.ஆர்.சில்வா தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு ஜனாதிபதியால் அமைக்கப்பட்டதோடு அதன் பதவிகாலம் கடந்த மாதம் 15ம் திகதியுடன் நிறைவு பெற்றது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை கீழே சொடுக்குக...

http://akkinikkunchu.com/new/aj/2011/dec2011/LLRC.pdf

http://akkinikkunchu...-news&Itemid=18

Edited by மோகன்
முழுமையாக்கப்பட்டுள்ளது

நன்றிகள் சிறிலிங்கம்,

உந்தப்பெரிய அறிக்கையில் இருப்பதை அனுமானிக்கக் கூடியதா இருந்தாலும் அந்த அறிக்கையில் இருப்பது என்னெவென்று அறிய ஆவலாக இருந்தது

இருந்தாலும் இருந்தாலும் குற்றவாளி நியமித்த சிங்களக் குழுவின் அறிக்கையை முழுக்கப் படிக்க எனக்குப் பொறுமையும் இல்லை நேரம் ஒதுக்கும் அவசியமும் இல்லை.

அதிகம் அலடாமல் சுருக்கமாக சொன்னதுக்கு நன்றிகள்.

பொருந்த சொல்லப்படாத பொய்கள்

1. இலங்கை அரசின் பாதுகாப்பு படையினர் சர்வதேச மனித உரிமை சட்டங்களை மீறவில்லை என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2. அத்துடன் யுத்த சூனிய வலயத்தில் அரச பாதுகாப்பு படையினர் அநாவசியமாக பொது மக்களை இல க்கு வைத்து தாக்குதல்களை மேற்கொள்ளவில்லை எனவும் ஜனாதிபதி நல்லிணக்க ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

3. எனினும் யுத்த வலயத்தில் அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளும் இடையே இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் பொது மக்கள் சிலர் கொல்லப்பட்டதாக நல்லிணக்க ஆணைக்குழு ஒப்புக் கொண்டுள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது நல்லிணக்க ஆணைக்குழுவா அல்லது நல்லிணக்கத்தை விரும்பாத ஆணைக்குழுவா?

முழு அறிக்கையையும் பெற்றுக்கொள்ள இல்லை தெரிந்தவர்களுக்கு அனுப்பி வைக்க:

http://groundviews.org/wp-content/uploads/2011/12/FINAL-LLRC-REPORT.pdf

பாதிக்கப்பட்ட மக்களிடம் அரசியல் தலைவர்கள் மன்னிப்பு கோர வேண்டும்:ஆணைக்குழு அறிக்கை

வடக்கு, கிழக்கு பிரிவினைவாத பிரச்சினைக்கு தீர்வு காணத் தவறிய இலங்கை வாழ் அனைத்து அரசியல் தலைவர்களும், பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களிடம் மன்னிப்பு கோரும் வகையில் கூட்டிணைந்த அறிக்கையொன்றை விடுக்க வேண்டும் என்று கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

285 பரிந்துரைகள் அடங்கிய மேற்படி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மேலும் சில முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

- யுத்த காலத்தின் போது பொதுமக்களின் இலக்குகள் மீது பாதுகாப்பு தரப்பினரால் வேண்டுமென்றே தாக்குதல்கள் நடத்தப்படவில்லை. ஏற்கனவே பல அனுபவங்களைப் பெற்ற படைத்தரப்பினருக்கு மாற்று வழிகள் காணப்படவில்லை.

- சாதாரண பொதுமக்களுக்கு ஏற்பட்ட உயிர்ச் சேதங்கள் மற்றும் காயங்கள் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் அவற்றை இந்த ஆணைக்குழு ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. இருப்பினும் அந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தி குற்றவாளிகள் இருப்பின் அவர்களுக்கு எதிரான உரிய நடவடிக்கைகளின் மூலம் தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

- யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில், ஷெல் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ள போதிலும் அவை எந்தத் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டவை என்பது தொடர்பில் உறுதியாகக் கூற முடியவில்லை. எவ்வாறாயினும் மனிதாபிமான நடவடிக்கையின் நிமித்தம் உரிய விசாரணைகளை நடத்தி ஷெல் தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

- யுத்தத்துக்கு பின்னர் எவ்வித குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படாத நிலையில் நீண்ட காலமாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை விடுதலை செய்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான தீர்க்கமான முடிவை நோக்கி அரசாங்கம் நகர வேண்டும்.

- யுத்தத்துக்கு பின்னர் செயற்பட்டு வரும் ஆயுத கும்பல்களை நிராயுதமாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆயுத குழுக்களை நிராயுதமாக்குமாறு ஏற்கனவே நல்லிணக்க ஆணைக்குழு அரசாங்கத்தை வலியுறுத்திய போதிலும் அது கவனத்திற் கொள்ளப்படவில்லை. அவ்வாறு கவனத்திற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்குமாயின் உதயன் பத்திரிகையின் செய்தி ஆசிரியர் மீதான தாக்குதலையும் தடுத்திருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்.

- தெற்கில் முக்கிய இரு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தேசிய அபிலாஷைகளைக் கருத்திற் கொண்டு தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றினைப் பெற்றுக்கொடுத்திருப்பார்களாயின் இவ்வாறான யுத்தமொன்றைத் தடுத்திருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்.

- பிரிவினைவாதத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்காமை மற்றும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பயங்கரவாத நடவடிக்கைகளை எதிர்க்காமையால் தமிழ் அரசியல் தலைவர்கள் இந்தப் பிரச்சினைகளுக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்களாக உள்ளனர். அதனால் அனைத்து அரசியல் தலைவர்களும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண தவறியுள்ளதால், பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களிடம் மன்னிப்பு கோரும் வகையில் கூட்டிணைந்த அறிவித்தலொன்றை விடுக்க வேண்டும். மதத் தலைவர்கள், சிவில் சமூகங்கள் இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்

என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://tamilmirror.lk/2010-07-14-09-13-23/32789-2011-12-16-18-45-13.html

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அறிக்கையின் பிறழ்வுகளை ஐநாவின் அறிக்கையோடு ஒப்பிட்டு.. ஒரு பொது அறிக்கையை தமிழ் சமூகம் சர்வதேசத்தின் முன் வைத்து.. மனித உரிமைகள் அமைப்புக்களிடமும் முன் வைத்து.. தமிழர்கள் இதில் திருப்திப்பட ஏதும் இல்லை என்று இனங்காட்டி.. போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு உத்தரவிட சர்வதேசத்தை.. ஐநாவை.. கோர வேண்டும்.

இன்று லிபிய தலைவர் கடாபியின் படுகொலை.. ஒரு போர்க்குற்றமாக கருதப்படக் கூடிய சந்தர்ப்பம் உள்ளதாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தற்போதைய லிபிய கிளர்ச்சிக்கார ஆட்சியாளர்கள் மீது குற்றம் சுமத்தியுள்ளது.

அந்த வகையில்.. முள்ளிவாய்க்கால் படுகொலைகள் அப்பட்டமான போர்க்குற்றங்கள் என்பது கண்கூடு. அதுமட்டுமன்றி தேசிய தலைவர் மற்றும் அவர் குடும்பத்தினர்.. போராளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் படுகொலை செய்யப்பட்டது கூட போர்க்குற்றமாக அமையும்..!

அவற்றை.. முன்னிறுத்துவதை விடுத்து.. புலிக் காய்ச்சல் பேர்வழிகளோடு சேர்ந்து நின்று கொண்டு.. மறப்போம் மன்னிப்போம் என்று தத்துவம் பேசிக் கொண்டும்.. இணக்க அரசியல் பற்றிய ஆய்வரங்கம் நடத்திக் கொண்டும் இருப்பதால் தமிழர்களுக்கு எந்த விமோசனமும் கிடைக்கப் போறதில்லை..!

இந்த அறிக்கைகளை.. சிங்களம் தனது பயங்கரவாதச் செயல்களை நியாயப்படுத்த தயாரித்து வெளியிட்டுள்ளது. இவற்றை தமிழர்கள் ஆணித்தரமாக தெளிவான காரணங்களை சொல்லி.. நிராகரிக்க வேண்டும். தங்கள் நம்பிக்கையீனங்களை வெளிப்படுத்த வேண்டும். இதை முள்ளிவாய்க்கால் தொடர்பான சிங்களப் பயங்கரவாதிகளின் அறிக்கை என்று உச்சரிக்க வேண்டுமே தவிர.. நல்லிணக்கம்.. நல்லெண்ணெய் இணக்கம் என்று தமிழர்கள் மற்றும் தமிழர் ஊடகங்கள்.. இவற்றிற்கு பெயரிடக் கூடாது.

முள்ளிவாய்க்கால் தொடர்பான ஐநா அறிக்கையை முழுச் சிங்கள உலகமும்.. ஐநா அறிக்கை என்று சொல்லவில்லை.. அதற்கு தங்கள் அளவில் ஒரு பெயர் வைத்தே இன்று வரை அழைக்கின்றனர்.. பழிக்கின்றனர். ஆனால் தமிழர்களோ.. நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை என்று சிங்களப் பயங்கரவாதிகளின் இந்த அறிக்கைக்கு.. பாச மழை கொட்டுகின்றனர். இந்த நிலையில்.. இவர்கள் எப்படி தமது நியாயத்தை பெற.. சர்வதேசத்தின் முன் விசாரணைக்கு சிங்கள அரசைக் கொண்டு செல்ல செய்விக்க முடியும்..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்கு சொன்னது போல் இந்த அறிக்கை வெறும் கண் துடைப்பு என்பதை உலகுக்கு பறைசாற்ற வேண்டும். பேசாமல் இருந்தோமா பான் கீ மூன் அறிக்கை விடுவான் இந்த அறிக்கை நல்லதொரு முன்மாதிரி. ஐ.நா இது குறித்து பரிசீலிக்கும் என்றுவிட்டு கிடப்பில் போட்டு விடுவான்.

இந்த அறிக்கை பற்றி சர்வதேசம் உட்பட நாமும் அறிந்தவைதான். மேலே நெடுக்ஸ் கூறியது போன்று செய்யவேண்டும், அதேவேளை தம் தம் நாடுகளில் உள்ள அரசியல் தலைவர்கள், சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் ஊடாக ஐ.நா. மனித உரிமை தொடரில் சிங்களம் மீது ஒரு தீர்மானத்தை கொண்டுவர உழைக்கவேண்டும்.

இந்த அறிக்கை பற்றியும் அதன் மூலம் என்ன நடக்கும் என்பது சர்வதேச நாடுகளுக்கு தெரிந்தாலும் அவர்களை ஒரு சர்வதேச பக்கச்சார்பற்ற ஐ.நா. விசாரணைக்கு ஆதரவு தர வைக்கவேண்டும்.தவறும்பட்சத்தில் போர்குற்ற விசாரணைகளில் இருந்து சிங்களம் தப்பியதாகவே முடியும், அடுத்த தலைமுறை எம்மை பார்த்து கோபப்படும்.

Edited by akootha

] சாதாரண பொதுமக்களுக்கு ஏற்பட்ட உயிர்ச் சேதங்கள் மற்றும் காயங்கள் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் அவற்றை இந்த ஆணைக்குழு ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. இருப்பினும் அந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தி குற்றவாளிகள் இருப்பின் அவர்களுக்கு எதிரான உரிய நடவடிக்கைகளின் மூலம் தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

- யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில், ஷெல் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ள போதிலும் அவை எந்தத் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டவை என்பது தொடர்பில் உறுதியாகக் கூற முடியவில்லை. எவ்வாறாயினும் மனிதாபிமான நடவடிக்கையின் நிமித்தம் உரிய விசாரணைகளை நடத்தி ஷெல் தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

என்ன இந்த நல்லிணக்க ஆணைக்குகுழு பூனைக்குழுவாமாறிவிட்டதா?. ஆணைக்குழு படைகள் மீதான குற்றச்சாட்டுகளைத்தான் விசாரித்துகொண்டிருப்பதாகத்தான் அரசும் மேற்குலகமும் தமிழ் மக்களை நம்ப வைத்தன. இப்போதிந்த பூனைக்குழு குற்றசாட்டுகளை ஏற்க மறுத்துவிட்டது. அமெரிக்கா இனி தேர்தல் வரையும் ஒன்றும் பேசாது. அதற்கு பிறகு வரும் அமெரிக்க அதிபர் எதையாவது கேட்டால் இலங்கை அரசு திரும்ப இந்த குற்ற சாட்டுகளை விசாரிக்க ஒரு ஆணக்குழு நியமித்து 3 வருடம் போக்கும்.

இதனால்த்தான் இந்த ஆணைகுழு ஏற்கனவே கலைக்க பட்டுவிட்டதா?

ஆணைகுழு குற்றசாட்டுகளை ஏற்க மறுத்துவிட்டதால் உடனடியாக சர்வதேசம் இந்த குற்ற சாட்டுகளையேற்கதக்க அமைப்பொன்றை உருவாக்க வேண்டும். தமிழ் மக்களுக்கு காலம் தாழ்த்தாது நீதி வழங்கவேண்டும். அமெரிக்கா, கனடா,பிருத்தானியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாபிரிக்க போன்ற ஆங்கிலம் பேசும் நாடுகள் தமது பழமொழியான "Justice Delayed is Justice Denied" என்பதை ஞாபகபடுத்திக் கொள்ளட்டும்.

Edited by மல்லையூரான்

ஆணைக்குழு அறிக்கை ஒரு பஞ்சதந்திர கதையே : அரியநேத்திரன் _

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=35632

கெட்டிக்காரனின் புழுகு எட்டு நாளைக்கு... இவ் அறிக்கையின் மூலம் சிங்கள அரசியல்வாதிகளினதும், நீதிமான்களினதும் உண்மைத் தன்மை உலகுக்கு காட்டப்பட்டுள்ளது. இதுவம் நல்லதுக்குத்தான்...

சாதாரண பொதுமக்களுக்கு ஏற்பட்ட உயிர்ச் சேதங்கள் மற்றும் காயங்கள் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் அவற்றை இந்த ஆணைக்குழு ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.

உண்மையில் இவ்வளவுதான் இந்த ஆணைகுழுவுக்கு இருந்த அதிகாரமா? ஆணைக்குழு சாட்சியம் அளித்தோரிடம் இதைப்பற்றி எப்போதாவது பேசியதா?. அவர்களுக்கு தங்கள் முறைபாடுகளை ஆணைகுழு தள்ளு படி செய்திருந்ததை இதற்கு முதல் அறியப்படுத்தியதா?

ஆணைக்குழு படைகளின் அத்துமீறல்களை விசாரிக்காதெனில் எதற்காக ஐ.நா விசாரணைக்ழுமுன் தோன்ற மறுத்தது?. படைகளின் அத்துமீறல்களை விசாரித்த ஐ.நா குழுவிற்கு கொடுக்க பட்ட விளக்கம் உள்நாட்டில் விசாரணை நடப்பதால் ஐ.நாவின் விசாரணை தேவையில்லாதது என்பதாகும்.

சம்பந்தர் இந்த ஏமாற்றை எதிர்த்து கொழும்பில் போராட்டங்கள் நடத்தவேண்டும்.

Edited by மல்லையூரான்

மனித உரிமை அமைப்புக்கள் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை கண்டித்துள்ளன

Rights groups criticize Sri Lanka war report

Human Rights Watch renewed calls for an independent review. Sri Lanka has said that its Lessons Learnt and Reconciliation Commission (LLRC) will suffice and narrowly avoided censure at the UN Human Rights Council in September.

"The commission's failure to provide a roadmap for investigating and prosecuting wartime perpetrators shows the dire need for an independent, international commission," he said in a statement.

http://news.yahoo.com/rights-groups-criticize-sri-lanka-war-report-004130222.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.