Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழர் போராட்டத்தில் தீர்க்கமான பாத்திரத்தை வகிக்கபோகும் 2012 : வி.உருத்திரகுமாரன்

Featured Replies

2012 ம் ஆண்டு சிறிலங்கா அரசுக்கும் ஈழத் தமிழர் தேசத்துக்கும் சவால் மிக்கதொரு ஆண்டாக அமையப் போகிறது. இந்த ஆண்டில் எவர் முன்னோக்கி ஒடுகிறார்களோ அவர்களே அடுத்த கட்ட வெற்றியைத் தமதாக்கிக் கொள்ளும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன.

இவ்வாறு தற்போது அமெரிக்காவில் இடம்பெற்று வரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ மூன்றாவது நாடாளுமன்ற முதல் நாள் அமர்வில் உரையாற்றும் போதே பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்தார்.

ஈழத் தமிழ் மக்கள் மீதான சிறிலங்காவின் இனப்படுகொலையினை யுத்தக்குற்றங்களாகவோ குறுக்கிவிடுவதற்கோ அல்லது சில யுத்த அத்துமீறலாகப் புறந்தள்ளி விடுவதற்கோ நாம் இடமளிக்க முடியாது என இடித்துரைத்த பிரதமர் அவர்கள் 2012ம் ஆண்டு ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கூட்டத் இவ்விவகாரத்தை உறுதியாக முன்னிறுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.

இது குறித்து பிரதமர் வி.உருத்திரகுமாரன் கூறிய முக்கிய விடயங்களாக:

2012ம் ஆண்டு சிறிலங்கா அரசுக்கும் ஈழத் தமிழர் தேசத்துக்கும் சவால் மிக்கதொரு ஆண்டாக அமையப் போகிறது. இந்த ஆண்டில் எவர் முன்னோக்கி ஒடுகிறார்களோ அவர்களே அடுத்த கட்ட வெற்றியைத் தமதாக்கிக் கொள்ளும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன.

சிங்கள பௌத்த சிறிலங்கா அரசு தமது மேலாதிக்கத்தைத் தமிழர் மீது நிறுவி விடுவதற்கு தொடர்ச்சியாக முயற்சித்து வருகிறது.

சிங்கள பௌத்த இனவாதக் கட்சிகைளத் தமிழ் மக்கள் தங்கள் அரசியல் தலைமையாக ஏற்றக் கொள்ள வைக்க வேண்டும் எனச் சிங்களம் விரும்புகிறது.

சிங்கள மேலாதிக்கத்தை தமிழ் மக்கள் இயல்பாக ஏற்றுக் கொண்டு வாழும் நிiயினை உருவாக்க வேண்டும் எனபதே சிங்களத்தின் தீராக்கனவு.

இருந்த போதும் சிங்களத்தின் இக்கனவுகள் நிறைவேறுவதாக இல்லை. தாயகத் தமிழ் மக்கள் தமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஈழத் தமிழ் தேசத்தினை வலுப்படுத்தும வகையிலான அரசியல் முடிவுகளையே எடுத்து வருகின்றனர்.

இது மட்டுமன்றி சிறிலங்கா அனைத்துலகரீதியாக அழுத்தங்ககளையும் சந்தித்து வருகிறது.

ஐக்கிய நாடுகள் நிபுணர் குழவின் அறிக்கையின் தாக்கம், சனல் 4 மற்றும் மனித உரிமை அமைப்புக்களின் செயற்பாடுகள், தமிழ் டயாஸ்பாறாவின் அழுத்தங்கள் என யுத்தக்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் அனைத்துலக அரங்கில் தீவிர கவனத்தைப் பெற்றள்ளன.

மேலும் இவை தொடர்பான தொடர்ச்சியான ஆதாரங்கள் வெளிக்கிளப்பிக் கொண்டேயிருக்கின்றன. தொடந்தும் அவை வெளிக் கிளம்பும். ஆதலால் இக் குற்றச்சாட்டக்களை எவரும் இலகுவில் புறந்தள்ளி விடமுடியாது. சிறிலங்கா அரசும் இதிலிருந்து இலகுவில் தப்பித்துக் கொள்ள முடியாது.

சிறிலங்கா அரசின் போர்க்குற்றங்கள் தொர்பாக மேற்குலக அரசுகளும் அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களும் வேறுபட்ட நிலைப்பாடுகளைக் கொண்டுள்ளன.

மேற்குலக அரசுகளைப் பொறுத்தவரை இக் குற்றச்சாட்டுக்கள் குறித்து சிறிலங்கா அரசே உரிய விசாரணைகளை அனைத்துலக தராதரத்துக்கு ஏற்ப மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கூறுகின்றன.

மனித உரிமை அமைப்புக்களைப் பொறுத்தவரை சிறிலங்கா அரசுக்கு இக் குற்றச்சாட்டுக்களை பராபட்சமின்றி விசாரணை செய்யும் விருப்பமோ அல்லது தகைமையோ கிடையாது எனக்கடந்த காலப்பட்டறிவின் அடிப்படையில் பிரகனடனப்படுத்தி அனைத்துலக விசாரணையைக் கோருகின்றன.

இத்தகைதொரு நிலையில் சிறிலங்கா அரசு LLRC அறிக்கையினை வைத்து ஒரு கண்துடைப்பு நாடகம் ஆட முற்படும் நிலை தற்போது உள்ளது.

மேற்குலக அரசுகளின் விருப்பங்களுக்கு சிறிலங்கா அரசு ஆடுவதற்குச் சம்மதிக்கும் பட்சத்தில் இந்தக் கண்துடைப்பு நாடகத்தில் இந்த அரசுகளும் பங்குதாரராக மாறிவிடும் நிலைமைகளும் உள்ளன.

இருந்தபோதும் இக் கண்துடைப்பு நாடகத்தை வெற்றிகரமாக ஆடுவதற்கு சிறலங்காவின் உள்நாட்டு நிலைமைகளும் அனைத்துலக நிலைமைகளும் போதியளவு சாதமான முறையில் இதுவரை அமையவில்லை.

இந் நிலையனைத் தனக்குச் சாதமாக்க சிறிலங்கா அரசு 2012 ல் தீவிரமாக முயலும். 2012 ம் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெறவுள்ள மனிதஉரிமை ஆணைக்குழுவில் மேற்குலகத்துடன் சரசம் கண்டோ அல்லது மேற்குலகத்துடன் முரண்படும் நாடுகளைத் தனக்கு ஆதரவாகத் திரட்டியோ தன்மீது விழுதிருக்கும் குற்றச்சாட்டுக்களைக் கழுவிவிடத் சிறிலங்கா அரசு தீவிரமாகச் செயற்படும்.

சிறிலங்கா அரசு தன்மீதான குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்பித்துக் கொள்ள எடுக்கும் எல்லாவகையான முயற்சிகளையும் நாம் முறியடித்தாக வேண்டும்.

ஈழத் தமிழர் தேசத்தை அரசியல்ரீதியல் தோற்கடிக்க முடியாத நிலையில் ஒரு தேசத்துக்குரிய தகைமைகளை அழித்து விடுவதில் சிறிலங்கா அரசு தீவிர முனைப்புக் காட்டி வருகிறது.

2012 ம் ஆண்டு இந்த முயற்சியினைச் சிங்களம் தீவரமாக மேற்கொள்ளும். அரசியல்தீரவு காண்பதற்கு முயற்சிக்கிறோம் - அதற்காகத் தமிழர் தலைமையுடன் பேச்சுக்களை நடாத்துகிறோம் என்ற தோற்றத்தை ஏற்படுத்திய வண்ணம் ஈழத் தமிழர் தேசத்தை சிங்களமயமாக்கும் தனது திட்டத்தை தீவிரப்படுத்தும் முயற்சியில் சிங்களம்.

ஈழத் தமிழர் தாயகப் பூமியில் தனக்குச் சாதகமான குடிசனப்பரம்பல் ஏற்பாட்டினைச் செய்வதற்குத் தேவையான கால அவகாசத்தினைப் பெற்றுக் கொள்ளும் கபடத்துடனும்தான் சிங்களம் பேச்சுக்களை நாடாத்துகிறது .

2012ம் ஆண்டு இக் கபடத்தனத்துக்கெதிராக ஈழத் தமிழர் தேசம் ஆவேசமாகப் போராட வேண்டும். தமிழர் தாயகத்தை சிங்களமயமாக்கும் முயற்சிகளைத் தடுத்த நிறுத்தியாக வேண்டும்.

இதற்கு சிங்கள அரசுடானான கால எல்லையற்ற பேச்சுக்களைத் தாயகத் தமிழ்த் தலைமைகள் தவிர்க்க வேண்டும்.

ஈழத் தமிழர் தேசத்தைச் சிதைவுறச் செய்ய சிங்கள அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகைiளை எதிர்த்து மக்களை அணிதிரட்டி நேரடிப் போராட்டங்களை மேற்கொள்வதற்குத் தயாராக வேண்டும்.

ஆயுதம் தாங்காத ஒரு 'இன்டிபாடாவுக்கான' அவசியம் தாயகத்தில் வலுத்து வருகிறது. இதனை 2012ம் ஆண்டில் வரலாறு கோரி நிற்கிறது.

தாயகத்தில் நடைபெறும் நேரடிப் போராட்டங்களுக்கு உறுதுணையாக நாடு கடந்த அரசாங்கம் போராட்டங்களை மேற்கொள்ளும் என நாம் எற்கனவே அறிவித்துள்ளமையினை இங்கு நினைவு கூர்கிறேன்.

இவ்வாறு 2012ம் ஆண்டு ஈழ விடுதலைப் போராட்டத்தில் வகிக்க போகின்ற பாத்திரம் குறித்து எடுத்துரைத்த பிரதமர் உருத்திரகுமாரன் இத்தகை அக-புறச் சூழலில் ஈழத்தமிழ் மக்கள் மீதான சிறிலங்காவின் இனப்படுகொலையினை முன்னிறுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எத்தகைய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முனைந்துள்ளது என்பது பற்றியும் விரிவாக விபரித்தார்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நீதியின் அடிப்படையில் செயற்படும் அறிஞர்களையும் நிபுணர்களையும் கொண்டு ஒரு இனப்படுகொலை நிபுணர்குழுவினை (Geneocide panel) அமைத்துள்ளது. இவ் அறிஞர்கள் அமெரிக்கா, இந்தியா மற்றும் ஏனைய மேலைத்யே நாடுகளில் வாழும் தமிழ் மற்றும் அனைத்தலகச் சமூத்தினைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இவ் இனப்படுகொலை நிபுணர்குழு இம் மூன்றாவது அமர்வோடு இணைந்தவகையில் தனது மூலோபாய மற்றும் தந்திரோயங்களை நகர்வுகள் குறித்து விவாதித்து நகரும்.

நாம் தற்போதய உலக ஒழுங்கை நன்கு அறிந்து கொண்டவர்களாக, மாறிவரும் புவிசார் அரசியலின் போக்குகளை முரண்களை நன்கு புரிந்து கொண்டவர்களாக மிகவும் நுட்பமாக நமது நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும்.

இதற்கு ஒரு ஆய்வு றிறுவனத்தின் தேவை உணரப்பட்டது. இதன் அடிப்படையில் Eelam Institute of Strategic Studies எனும் ஆய்வு நிறுவனம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னெடுப்பில் சுயாதீனமான அமைப்பாக உருவாக்கப்படுகிறது. இவ் ஆய்வு நிறுவனம் 2012ம்ஆண்டு தனது செயற்பாடுகளை அரம்பிக்கிறது.

ஈழத் தமிழர் தேசத்தை அமைப்பியல் இனப்படுகொலைக்குள்ளாக்கியும் (structural genocide) சிங்களமயமாக்கிக் கரைத்து விடுவதற்கும் சிறிலங்கா அரசு எடுத்து வரும் முயற்சிகைள தடங்கற்படுத்தும் வகையில் அனைத்துலக பாதுகாப்பு பொறிமுறை ஒன்றை உருவாக்கும் முயற்சி குறித்தும் நாம் இந்த அமர்வில் விவாதிக்க உள்ளோம்.

இத்தகைய இனப்படுகொலையில் இருந்து ஈழத் தமிழ்மக்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள தமிழீழத் தனியரசே நிரந்திரத் தீர்வாக அமையு முடியும் என்ற நிலைப்பாட்டினைக் கொண்டிருக்கும் நாம் இத்தகைய அனைத்துலகப் பொறிமுறை குறித்த கோரிக்கை சிங்களத்தின் இனப்படுகொலை குறித்து அனைத்துலகக் கவனத்தைக் குவிக்க உதவும் என்று கருதுகிறோம்.

தமிழர் மத்தியல் நாடு கடந்தரீதியிலான ஒரு பொருளாதார மையநிறுவனம் ஒன்றினை (Transnational Tamil economic chambers) அமைப்பது தொடர்பான ஒரு திட்ட அறிக்கையும் இவ் அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதத்துக்கு எடுக்கப்படவுள்ளது.

இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உச்ச முன்னெடுப்புகள் குறித்து விபரித்த பிரதமர் வி.உருத்திரகுமாரன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

http://www.puthinappalakai.com/view.php?20111216105217

பங்குனி மாதம் நடக்க இருக்கும் ஐ.நா. மனித உரிமை தொடரில், சிங்களம் மீதான போர்க்குற்றச்சாட்டுக்கள் முன்னெடுக்கப்படுமாயின் நிச்சயம் ஒரு திருப்புமுனை ஆண்டாக அமையும் 2012.

  • தொடங்கியவர்

{{{இதற்கு ஒரு ஆய்வு றிறுவனத்தின் தேவை உணரப்பட்டது. இதன் அடிப்படையில் Eelam Institute of Strategic Studies எனும் ஆய்வு நிறுவனம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னெடுப்பில் சுயாதீனமான அமைப்பாக உருவாக்கப்படுகிறது. இவ் ஆய்வு நிறுவனம் 2012ம்ஆண்டு தனது செயற்பாடுகளை அரம்பிக்கிறது.

ஈழத் தமிழர் தேசத்தை அமைப்பியல் இனப்படுகொலைக்குள்ளாக்கியும் (structural genocide) சிங்களமயமாக்கிக் கரைத்து விடுவதற்கும் சிறிலங்கா அரசு எடுத்து வரும் முயற்சிகைள தடங்கற்படுத்தும் வகையில் அனைத்துலக பாதுகாப்பு பொறிமுறை ஒன்றை உருவாக்கும் முயற்சி குறித்தும் நாம் இந்த அமர்வில் விவாதிக்க உள்ளோம்.

இத்தகைய இனப்படுகொலையில் இருந்து ஈழத் தமிழ்மக்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள தமிழீழத் தனியரசே நிரந்திரத் தீர்வாக அமையு முடியும் என்ற நிலைப்பாட்டினைக் கொண்டிருக்கும் நாம் இத்தகைய அனைத்துலகப் பொறிமுறை குறித்த கோரிக்கை சிங்களத்தின் இனப்படுகொலை குறித்து அனைத்துலகக் கவனத்தைக் குவிக்க உதவும் என்று கருதுகிறோம்.

தமிழர் மத்தியல் நாடு கடந்தரீதியிலான ஒரு பொருளாதார மையநிறுவனம் ஒன்றினை (Transnational Tamil economic chambers) அமைப்பது தொடர்பான ஒரு திட்ட அறிக்கையும் இவ் அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதத்துக்கு எடுக்கப்படவுள்ளது.}}}}

வரவேற்க பட வேண்டிய முயற்சிகள்......மெதுவாக இருந்தாலும் உறுதியான முயற்சிகள்

நெல்லையனே வருக அர்ச்சனையை தொடர்க.... :lol:

பாராட்டப்பட வேண்டிய இரண்டு முக்கிய முடிவுகள். எமது இருப்பை தக்கவைக்க, புலத்தில் தொடர்ந்தும் எமது நடவடிக்கைகளை பலப்படுத்த தேவையான நகர்வுகள்.

1. Eelam Institute of Strategic Studies எனும் ஆய்வு நிறுவனம்

2. ஒரு பொருளாதார மையநிறுவனம் - Transnational Tamil economic chambers

நெல்லையன் போன்ற ஆக்கபூர்வமான மாற்றுக்கருத்துக்களும் வரவேற்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் பொறுப்பில் உள்ளவர்களுக்கு மக்கள் அவதானமாக, விழிப்பாக உள்ளார்கள் என்ற செய்தி சென்றடையும் :D :D

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்

தொடருங்கள்

அதேநேரம் மாவீரர்நாள் போன்றவற்றையும் நாம்தான் முன்னிறுத்தி செய்யவேண்டும் என்பதைவிடுத்து அவரவர் தங்களுக்கான வேலைகளைச்செய்து தாயகம் காப்போம்.

பாத்திரத்தை வகிக்கபோகும் 2012 : வி.உருத்திரகுமாரன்

454626790_tp.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யார் குற்றினாலும் இறுதியில் அரிசி கிடைத்தால் நலம்!

  • கருத்துக்கள உறவுகள்

நாம் விமர்சகர்களாக மட்டும் இருக்காது, பங்காளர்களாவும் இணையனும்...

நாம் விமர்சகர்களாக மட்டும் இருக்காது, பங்காளர்களாவும் இணையனும்...

பங்காளர்களாக இருந்துகொண்டு தேவையான இடங்களில் ஆரோக்கியமாக விமர்சிப்பது சாலச்சிறந்தது!

  • கருத்துக்கள உறவுகள்

நாம் விமர்சகர்களாக மட்டும் இருக்காது, பங்காளர்களாவும் இணையனும்...

நா.க. அரசு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து அதை ஆதரிக்கின்றேன். அதன் பங்காளியாகவும் உள்ளேன். என்ன செய்தேன் செய்கின்றேன் என எழுதச்சொன்னாலும் இங்கு எழுத தயாராக இருக்கின்றேன்.

எழுதியும் உள்ளேன்.

ஆனால் அவர்களுடைய சில நிலைப்பாடுகளை தமிழரின் ஒற்றுமை என்கின்ற நிலையிலிருந்து எதிர்க்கின்றேன். நேரடியாகவும் அவர்களைக்காணும்போதெல்லாம் எனது கருத்தை முன் வைப்பேன்.

உதாரணமாக

மாவீரர் நாளையும் தாங்களே செய்யணும்

விளையாட்டுக்கழகங்கள் மற்றும் பாடசாலைகளையும் தாங்களே நடாத்தணும் என்பது இன்னொருவரிடமிருந்து அவற்றைப்பறிப்பதாகும். அதனால் எமது ஒற்றுமைக்கு பாதகம் ஏற்படும் என்பதால் எதிர்க்கின்றேன்.

அவர்கள் சார்பிலும் இதற்கான சரியான விளக்கமில்லை. இதைப்பற்றி இங்கு யாராவது விளக்கம் தந்தாலும் புரிந்து கொள்ளலாம். முடிந்தால் தரவும்.

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் நாளையும் தாங்களே செய்யணும்

விளையாட்டுக்கழகங்கள் மற்றும் பாடசாலைகளையும் தாங்களே நடாத்தணும் என்பது இன்னொருவரிடமிருந்து அவற்றைப்பறிப்பதாகும். அதனால் எமது ஒற்றுமைக்கு பாதகம் ஏற்படும் என்பதால் எதிர்க்கின்றேன்.

அவர்கள் சார்பிலும் இதற்கான சரியான விளக்கமில்லை. இதைப்பற்றி இங்கு யாராவது விளக்கம் தந்தாலும் புரிந்து கொள்ளலாம். முடிந்தால் தரவும்.

முன்னர் புலிகள் இணக்கசபை என்று ஒரு அமைப்பை வைத்திருந்து பிரச்சினைகளைச் சுமுகமாகத் தீர்த்தார்கள். நீங்களும் அப்படி ஒன்றை ஆரம்பித்து பாரிஸுக்கு தலைவராக வந்தீர்கள் என்றால் இப்படியான சிக்கல்கள் எல்லாம் இருக்காது!

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் கிருபன்

அப்படி ஒரு எண்ணம் எனக்கும் இருந்தது. அத்துடன் அப்படி ஒரு எண்ணத்தின் கருவாக நடுவர் மன்றம் என்ற பெயரில் ஒன்றை அமைத்தார்கள். அதனால் ஒரு நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால் ஏதோ தேய்ந்து குட்டி... ஆனதுபோல் அதுதான் தற்போது மும்மரமாக மாவீரர் நாளையும் மற்றவற்றையும் ஒரு பக்கம் சாய்ந்து குழப்புகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
baer-0080.gifkochtopf_02.gif

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.