Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தன் இனத்தையே காட்டிக்கொடுத்து,எதிரி போட்ட எலும்புத்துண்டுக்காக வால் ஆட்டும் கருணா பெண்களுடன் உல்லாசம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

z-karunaay%20%281%29.jpg

photo.gifதேசத்துரோகி கருணா தொடர்பாகவும் அவர் பல பெண்களோடு வைத்துள்ள கள்ளத்தொடர்புகள் தொடர்பாகவும் பல முறை பல ஊடகங்களும் ஆதாரங்களோடு செய்தி வெளியிட்டிருந்தன.

இந்த நிலையில் 2012 ஆண்டு வரவேற்பு நிகழ்வின் போது கொழும்பில் உள்ள நச்சத்திர விடுதி ஒன்றில் நடத்தப்பட்ட கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட கருணா மது அருந்திவிட்டு பெண்களுடன் போடும் ஆட்டத்தை பாருங்கள்.

தன் இனத்தையே காட்டிக்கொடுத்து சிங்களவனின் எச்சி எலும்புக்காக வால் ஆட்டும் கருணா இது போன்ற ஈனத்தனமான செயல்களில் ஈடுபடுவதற்காகவே தன் இனத்தையே காட்டிக்கொடுத்தார் என்பது இப்போது தெளிவாகிறது.

z-karunaay%20%282%29.jpg

z-karunaay%20%284%29.jpg

z-karunaay%20%283%29.jpg

http://www.eeladhesa...ndex.php?option

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போயும் போயும் கொம்மானுக்கு ஒரு கிழவி தான் கிடைச்சுதோ? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கருணா துரோகி என்றால் உயிரோடு உள்ள அத்தனை தமிழரும் துரோகிகள்தான்.

(என்ன யோசிக்கிறிங்க? அப்பிடிதான் சிலர் பேசுறாங்க. உங்களுக்கு மட்டுமா புரியல்லை நமக்குந்தான்)

இரண்டாவது படத்தில் உள்ள டான்ஸ் ஸ்டேப் அந்தமாதிரி இருக்கு.விட முதலா அல்லது விட்டாப்பிறகா உதெல்லாம் பழகியவன்

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாவது படத்தில் உள்ள டான்ஸ் ஸ்டேப் அந்தமாதிரி இருக்கு.விட முதலா அல்லது விட்டாப்பிறகா உதெல்லாம் பழகியவன்.

தமிழீழம் மீட்க ஆதரவு தேடிப் போன இடத்தில.. உமா ஊர்மிளாவுக்கு சண்டை பிடிக்கேக்கையே இவனும் பழகிட்டான்.

ஆனால் என்ன விட்டா பிறகு தான் சிங்களத்திகளோட குடியும் குடித்தனமும் நடத்திறான். ஏலவே இவருக்கு நித்தியா என்ற மனைவியும் பிள்ளைகளும் உண்டு. அது இயக்கத்தில் இருந்து அடிப்படை சேவை காலம் முடித்து காதலித்த போது இயக்கமா செய்து வைத்த திருமணம். அந்த சொந்த மனைவியை இவர் இப்போ கைவிட்டு விட்டார்... போலும்..!

உதுகளுக்கு எல்லாம் இயக்கம் கலியாணம் கட்டிக் கொடுத்திராட்டி.. இன்னும் இயக்கப் பெயரை கெடுத்துத் தொலைச்சிருக்குங்கள்..! கலியாணம் கட்டிக் கொடுத்துமே கிழவி.. குமரின்னு இல்லாம கொட்ட மடிக்கிறான்னா.. கட்டிக் கொடுக்காட்டி.. நல்ல காலம்..! :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

புத்தாண்டு வரவேற்பில் பிரதியமைச்சர் கருணா அம்மான் காதலியுடன் குத்தாட்டம் - படங்களுடன்

Duo12.jpg

2012 ஆம் ஆண்டை வரவேற்பதற்காக கொழும்பு காலிமுகத் திடலுக்கு முன்னால் உள்ள ரமாடா நட்சத்திர விடுதியில் ஏற்பாடாகியிருந்த களியாட்ட நிகழ்வில் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் கேணல் கருணா அம்மான் பிரத்தியேக செயலாளருடன் கலந்து சிறப்பித்தார். ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பிரதித் தலைவரும், மீள் குடியேற்ற பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் நிகழ்வில் இசைக்கேற்ப யுவதிகளுடன் குத்தாட்டத்தில் ஈடுபட்டது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது என கூடவே கலந்து கொண்ட அதிதி ஒருவர் தெரிவித்தார்.

<a name="cke_range_marker">

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களில் பலர் இன்னமும் மீள் குடியேற்றம் செய்யப்படாமல் கண்ணீருடன் அகதிகளாக புத்தாண்டை வரவேற்கும் போது இவர்களுக்காக போராடப் புறப்பட்டேன் எனக் கூறிக் கொள்ளும் முன்னாள் கேணலும், தற்போதைய பிரதியமைச்சருமான கருணா எனும் முரளிதரன் இம் மக்களின் வேதனைகளை மறந்து குத்தாட்டத்தில்

VM03(3).jpg

VM04(2).jpg

http://kalamm.blogspot.com/2012/01/blog-post_04.html

Edited by மல்லையூரான்

இரண்டரை வருடங்களுக்கு முன் கருணாவின் மனைவியின் குமுறல்.

தமிழரைக் காட்டிக் கொடுத்த துரோகி கருணா! – மனைவி பேட்டி

Thursday, July 23, 2009 at 2:18 pm | 1,009 views

லண்டன்: வன்னியில் இன்று தமிழர்கள் சந்தித்துள்ள துயர நிலைக்கு எனது கணவர் கருணா தான் பொறுப்பேற்க வேண்டும். விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து வந்த பின்னர் அவர் சுயநலவாதியாக மாறி விட்டார் என்று கருணாவின் மனைவி நிரோ எனப்படும் வித்யாவதி குற்றம் சாட்டியுள்ளார்.

கருணாவின் மனைவி வித்யாவதி, புலிகள் இயக்கத்தின் மகளிர் பிரிவில் இடம் பெற்றிருந்தார். அப்போது அவரது பெயர் நிரோ என்பதாகும். கருணா, புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறியபோது அவருடன் வித்யாவதியும் வெளியே வந்தார்.

வித்யாவதி தனது மூன்று குழந்தைகளுடன் சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்துக்கு சென்றார். அங்கு அரசியல் புகலிடம் கோரியுள்ளார். தற்போது அகதி அந்தஸ்தில் அவர் ஸ்காட்லாந்தில் தங்கியுள்ளார்.

இந்த நிலையில், ஈழ நிலை குறித்து ‘ஸ்ரீலங்கா கார்டியன்’ என்ற இணையதளத்திற்கு வித்யாவதி பேட்டி அளித்துள்ளார்.

அதில் தனது கணவர் கருணா, தமிழ் மக்களுக்கு பெரும் துரோகம் இழைத்து விட்டார், தொடர்ந்து இழைத்துக் கொண்டிருக்கிறார். இன்று தமிழர்கள் சந்தித்துள்ள நிலைக்கு அவரே காரணம் என்று பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

வித்யாவதி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

தமிழின தலைவராக தனது கடமைகளை மறந்து செயல்படுகிறார் கருணா. தமிழ் மக்களுக்கு தொடர்ந்து துரோகம் இழைத்துக் கொண்டிருக்கிறார்.

தனது அடிப்படைக் கடமைகளை அவர் சுத்தமாக மறந்து விட்டார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. தன்னைத் தமிழர்களின் தலைவராக அவர் கூறிக் கொள்கிறார். ஆனால் அந்தக் கடமையிலிருந்து அவர் தவறி விட்டார்.

குடும்பம் தொடர்பான சில விஷயங்களைக் கூட அவரிடம் நான் பேசத் தயங்குகிறேன். அந்த அளவுக்கு குழப்பி விடுகிறார்.

6 ஆயிரம் போராளிகளுடன் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து உயரிய நோக்கத்திற்காக விலகி வந்தோம்.

ஆனால் தனது சுயநலத்திற்காக அரசாங்கத்துடன் இணைந்து கொண்டு, தலையாட்டி பொம்மை போல செயல்பட்டு வருகிறார்.

தமிழ் மக்கள் இன்று சந்தித்து வரும் இன்னல்களுக்கு அவரே பொறுப்பேற்க வேண்டும்.

அரசில் உள்ள சிலர் கருணாவை தவறான பாதையில் வழி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஊரே பற்றி எரிந்தபோது, பிடில் வாசித்துக் கொண்டிருந்த நீரோ மன்னனின் நிலை போல உள்ளது கருணாவின் நிலை. இது அப்பட்டமான துரோகம்.

தன்னைத் திருத்திக் கொள்ள கருணாவுக்கு நான் ஒரு மாதம் அவகாசம் கொடுத்துள்ளேன். அவர் திருந்தாவிட்டால் திரைமறைவில் நடந்த பல ரகசியங்களை அம்பலப்படுத்தப் போவதாக அவரை எச்சரித்திருக்கிறேன். இன்னும் என்னென்ன ரகசிய வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன என்பதையும் அம்பலப்படுத்தப் போகிறேன், என்று கூறியுள்ளார் வித்யாவதி.

கருணாவின் மனைவி குறித்து அதிக தகவல்கள் எங்கும் வந்ததில்லை. இப்போதுதான் அவர் முதல் முறையாக மீடியா வெளிச்சத்திற்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

http://www.envazhi.com/archives/9945

தமிழீழம் மீட்க ஆதரவு தேடிப் போன இடத்தில.. உமா ஊர்மிளாவுக்கு சண்டை பிடிக்கேக்கையே இவனும் பழகிட்டான்.

ஆனால் என்ன விட்டா பிறகு தான் சிங்களத்திகளோட குடியும் குடித்தனமும் நடத்திறான். ஏலவே இவருக்கு நித்தியா என்ற மனைவியும் பிள்ளைகளும் உண்டு. அது இயக்கத்தில் இருந்து அடிப்படை சேவை காலம் முடித்து காதலித்த போது இயக்கமா செய்து வைத்த திருமணம். அந்த சொந்த மனைவியை இவர் இப்போ கைவிட்டு விட்டார்... போலும்..!

உதுகளுக்கு எல்லாம் இயக்கம் கலியாணம் கட்டிக் கொடுத்திராட்டி.. இன்னும் இயக்கப் பெயரை கெடுத்துத் தொலைச்சிருக்குங்கள்..! கலியாணம் கட்டிக் கொடுத்துமே கிழவி.. குமரின்னு இல்லாம கொட்ட மடிக்கிறான்னா.. கட்டிக் கொடுக்காட்டி.. நல்ல காலம்..! :lol::icon_idea:

ஒன்றா இருந்த எனக்கே தெரியாத புதுகதைகள் எல்லாம் சொல்லுகின்றீர்கள் கேட்க நல்லாத்தான் இருக்கு ,இருந்தாலும் வசந்தமாளிகை சிவாஜி சொன்ன மாதிரி "வேண்டுமென்றால் யாரையும் வச்சுக்கலாம் வேணாமேன்றால் விபசாரியையும் விட்டிடனும் ".

கடத்தி கட்டியது யார் என உமக்கே தெரியும்

  • கருத்துக்கள உறவுகள்

கடத்தி கட்டியது யார் என உமக்கே தெரியும்

மதிவதனியை தலைவர் கடத்தி திருமணம் செய்தார் என்பதை விட கடத்தப்பட்ட மதிவதனியை விரும்பி (பாலா அண்ணன் மூலம் கேட்டு)பின்னர் பாலா அண்ணா,கேபி, யோகி போன்றோர் திருமணம் செய்து தானே பலர் கூறுகிறார்கள்.ஊடகங்களிலும் வந்தது.

ஏனைய (கடத்தப்பட்ட) 3 போராளிகளும் பின்னர் விடுதலை புலிகளில் இணைந்து செயற்பட்டார்கள்.

மதிவதனியை தலைவர் கடத்தி திருமணம் செய்தார் என்பதை விட கடத்தப்பட்ட மதிவதனியை விரும்பி (பாலா அண்ணன் மூலம் கேட்டு)பின்னர் பாலா அண்ணா,கேபி, யோகி போன்றோர் திருமணம் செய்து தானே பலர் கூறுகிறார்கள்.ஊடகங்களிலும் வந்தது.

ஏனைய (கடத்தப்பட்ட) 3 போராளிகளும் பின்னர் விடுதலை புலிகளில் இணைந்து செயற்பட்டார்கள்.

அவர்கள் சொன்னா கேட்க உங்களை மாதிரி ஆட்கள் இருந்த படியால் தான் முப்பது வருடம் எங்கள் போராட்டம் போனது .கனடாவிலோ அமெரிக்காவிலோ உங்களால் உதை செய்ய முடியுமா ?

தமிழ் சீரியல் அல்லது ராஜேந்தர் படம் நல்லா பார்பவர் போலிருக்கு ?

கடத்தினவரை கட்டியது பிழை என சொல்ல ஏன் மனம் வருகுதில்லை.அதுவரை உண்மையாக நீங்கள் நடக்க மறுக்கின்றீர்கள் என்பதுதான் அர்த்தம்.இங்குதான் உங்களில் இருந்து நான் மாறுபடுகின்றேன்.யார் பிழை செய்தாலும் உது பொருந்தும். நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே.

கடத்தினவரை கட்டியது பிழை என சொல்ல ஏன் மனம் வருகுதில்லை

கடத்தின காரணம் வேறு, கட்டிக்கொண்ட காரணம் வேறு. உமக்கு விளங்காவிட்டால் விளங்கவில்லை என்று சொல்லும் கடத்தல் நடந்தது போராட்டம் சம்பந்தமாக. போராட்டத்தில் கடத்தப்பட்ட பெண், போராளிகளால் முறையாகத்தான் நடத்தப்பட்டிருக்கிறாள். கடத்தப்பட்ட காரணமே சிங்கள அரசிடம் தலை வணங்கி நீதி கேட்கப்படாகூடாதென்பதது தான். தன்மானமுள்ள தலைவன் எந்த தமிழ் பெண்ணையும் மான பங்கப்படுத்தவில்லை. கூத்திகளுடன் குத்தாட்டம் போடும் கருணாவை நியாயப்படுத்த திரிக்கு திரி தாவி அலந்துகொண்டு, ஒவ்வொரு தமிழன் தன் மானத்தையும் காத்தவனை "கதைகட்ட நான் இருக்கும் வரை கண்ணகி வாழ்விலும் களங்கமுண்டு" என்று களங்க படுத்த நீர் இங்கே எவ்வளவு வலிந்தாலும் பலாத்காரமொன்றும் அந்த இடத்தில் நடக்கவில்லை. கடத்த பட்ட பெண்ணுக்கு போராட்ட காரணம் முடிய சுதந்திரமான முடிவு எடுக்க சந்தர்ப்பம் கொடுக்கப் பட்டது. பெண் தானே விரும்பி திருமணம் செய்துகொணடபின் நீர் வலிந்து வலிந்து படும் கஸ்டத்தை பார்த்தால் உம்மை இடையில் வைத்து தரகு பேச விடவில்லை என்று பொறாமைப் படுபவர் போல நடந்து கொள்ளுகிறீர். உமக்கு தெரிந்தால் "கடத்த பட்ட பெண் பலாத்காரம் செய்யப்பட்டாள்" என்பதை ஆதாரத்துடன் எழுதும். முடியாவிட்டால் ரோசத்துடன் அந்த கதை இனி விட்டுவிடும். மற்றயபடி உமது எதிர்பார்ப்புக்கு ஏற்றபடிதான் புலிகளுடன் தொடர்பில் வந்த பெண்கள் எல்லாம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வாதாடாதேயும்.

உமக்கு விளங்காவிட்டல் விளங்கவில்லை என்று சொல்லும். அதற்காக "நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே" என்று அகங்காரத்தால் அழிந்த இரவல் வார்த்தை ஒன்றை கடன் வாங்கி வைத்துக்கொண்டு திரிக்கு திரி பாய்ந்து ஏன்தானோ கீர் கீர் என்று அறுத்துகொண்டு திரிகிறீர் எனபது தெரியவில்லை.

அறிவுக்கு கடலாய் இருந்தாலும் அகங்காரம் தலைகேறியதால் அழிந்தான் நக்கீரன். சண்பக பண்டியன் அரசனாக இருந்த்ததால் தலைமைத்துவத்தை காட்டி, நடந்து முடிந்தவைகள் எல்லாவற்றிக்கும் தானே பொறுப்பு என்று நெற்றிக்கண்ணனை மன்றாடி நக்கீரனை எழுப்பி விட்டான். நடிப்புக்காக அல்லாமல் நக்கீரன் உண்மை மனத்தால் குற்றம் குற்றமே என்று வாதாடியதால் பிழையை உணர்ந்தவுடன் நெற்றிக்கண்ணை பணிந்து அவன் சொல்ப்படி அகத்தியனிடம் பாடம் கற்று தெளிந்த புலமை அடைந்து நிறைகுடமானான் . உமது அகங்காரம் நடிப்பல்ல; இயல்பில் வந்தது என்றால் விட்ட பிழைக்கு சரியான ஒரு அகத்தியனிடன் சென்று சரண் அடைந்து கொள்ளும். கருணாவை காபாற்ற திரிக்கு திரி தாவும் உமக்கு கொஞ்சம் நியாயம் நீதி பற்றி தெளியவைப்பான். இல்லை - நீர் "நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே" என்று நக்கீரான் பாணியில் அகங்காரம் காட்ட வந்தது ஒரு நடிப்புக்காகவென்றால் தூங்குபவனை எழுப்பமுடியும்; ஆனல் நடிப்பவனை எழுப்ப முடியாது. நீர் தொடர்ந்தும் உமது தழிழ் சீரிஸ் கதைகளை எழுதி நடியும்

Edited by மல்லையூரான்

கடத்தினவரை கட்டியது பிழை என சொல்ல ஏன் மனம் வருகுதில்லை.அதுவரை உண்மையாக நீங்கள் நடக்க மறுக்கின்றீர்கள் என்பதுதான் அர்த்தம்.இங்குதான் உங்களில் இருந்து நான் மாறுபடுகின்றேன்.யார் பிழை செய்தாலும் உது பொருந்தும். நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே.

அவர் புலிகளின் தலைவர், தமிழீழ தேசியத்தலைவர் - அதனால் மட்டுமே நாங்கள் திறப்போம், 'நெற்றி க்கண்ணை', மற்றும்படி எங்களுக்கு பிடரியில்தான் கண் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.