Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தம்பி

Featured Replies

image014tk.jpg

"மிட்வேலி எண்டெர்டயிண்மென்ட், மோஷன் பிக்சர்ஸ் பார்ட்னர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் மிகப்பிரம்மாண்டமான படம் "தம்பி'. இதில் மாதவன் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பூஜா நடிக்கிறார். மலையாள நடிகர் பிஜுமேனன் வில்லனாக நடிக்கிறார். வடிவேலு, இளவரசு, மணிவண்ணன், மனோபாலா, ராஜ்கபூர், சண்முகராஜன், வினோத்ராஜ், சுமித்ரா மற்றும் பலர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு - பாலசுப்பிரமணியம். இசை - வித்யாசாகர். பாடல்கள் - வைரமுத்து, நா.முத்துக்குமார். படத்தொகுப்பு - வி.டி.விஜயன், சண்டைப்பயிற்சி - விக்ரம் தர்மா, நடனம் - பிரசன்னா. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் -சீமான். வன்முறைக்கு வன்முறை தீர்வு இல்லை என்ற கொள்கை கொண்ட தம்பி கதாபாத்திரம், தமிழ்த் திரைக்கண்ட கதாநாயகப் பாத்திரங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. "தம்பி' விரைவில் திரைக்கு வருகிறான்." :P

  • தொடங்கியவர்

image082lx.jpg

நடிகர்கள் - மாதவன், பூஜா, பிஜுமேனன், வடிவேலு, மணிவண்ணன்

இயக்கம் - சீமான்

இசை - வித்யாசாகர்

ஒளிப்பதிவு - பாலசுப்ரமணியன்

கத்தி - ரத்தம் என்று வெறி பிடித்து திரிபவர்களை அடக்க, அவர்களைப்போல ஆயுதம் எடுப்பது தீர்வு ஆகாது என்பதை துணிச்சலாக சொல்லும் கதை.

வன்முறை செய்பவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பவன் தம்பி வேலுத் தொண்டைமான். ஆயுதம் எடுப்பவர்களுக்கு அனுபவ பாடம் நடத்தி திருத்த வேண்டும் என்பது அவனுடைய கொள்கை. தன் குடும்பத்தை அழித்த எதிரியையும் பழிக்குப் பழி வாங்காமல் மனித நேயத்தால் திருத்த முயற்சி செய்கிறான்.

ஆதரவற்றவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாப்பு அரணாக நிற்கிறான். நேர்மையான அதிகாரியை கொலை செய்யும் ரவுடிகளை திருத்தி வில்லனுக்கு எதிராக சாட்சி சொல்ல வைக்கிறான். இதனால் தம்பியை கொலை செய்ய முயற்சி நடக்கிறது. இந்த நிலையில் ஒரு இளம் பெண் அவனை காதலிக்கிறாள்.

வில்லன் தூண்டுதலால் ஊரில் வன்முறை வெடிக்கிறது. இதில் சிக்கிய வில்லனின் குழந்தையும், தாயும் உயிருக்கு போராடுகிறார்கள். அவர்களையும் தம்பி காப்பாற்றுகிறான். வன்முறையை தடுக்கும் தம்பியை, ஜெயிலில் இருந்து வரும் ஒரு ரவுடி வெட்டி சாய்க்கிறான். முடிவு என்ன என்பது "கிளைமாக்ஸ்''.

தம்பியாக மாதவன். வன்முறையை ஒழிக்க அகிம்சையை கடைபிடிக்கும் புதுமையான வேடம் என்றாலும் அறிவுரையை கேட்காதவர்களுக்கு "நையப்புடை'' என்ற பாரதியின் பாடலை தாரக மந்திரமாக ஏற்று பாடம் புகட்டுவது வித்தியாசம்.

தாய், தந்தை, தங்கை மீது காட்டும் பாசம் "பூவாசம்''. அவர்களைப் பிரிந்து துடிப்பது "பூகம்பம்''. சுற்றிச் சுற்றி வரும் காதலியை நெருங்க விடாமல் மிரட்டுவது வித்தியாசமான காதல். கத்தி - ரத்தம் என்று வாழ்பவர்களுக்கு அதனால் ஏற்படும் விபரீத முடிவை நேரில் காட்டி திருத்துவது புதிய கோணம். மாதவனின் கண்களும் நடிக்கின்றன.

தம்பியின் காதலி அர்ச்சனாவாக பூஜா. ஆரம்பத்தில் மாதவனை வெறுப்பதும், அவரைப் பற்றி தெரிந்ததும் விரும்புவதும் வழக்கமான விஷயம். என்றாலும், பூஜா அந்த உணர்ச்சிகளை அருமையாக பிரதிபலிக்கிறார். நாட்டிய அரங்கில் மாதவன் ரவுடிகளை துரத்தி வந்து அடித்து உதைப்பதைப் பார்த்து நடுங்கும் பூஜா, ரசிகர்களை நிமிர்ந்து பார்க்க வைக்கிறார். காதல் கனவுகளில் புகுந்து விளையாடியிருக்கிறார். கிடைத்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தி பெயர் வாங்குகிறார்.

மாதவனின் நண்பனாக வடிவேலு வந்து போகிறார். வில்லனாக பிஜுமேனன். மிரள வைக்கிறார். அவரது கையாளாக வரும் இளவரசு, சண்முகராஜன் இருவரும் கதைக்கு விறுவிறுப்பு ஏற்றுகிறார்கள். மணிவண்ணன் பாத்திரம் இதுவரை தமிழ்த்திரை காணாதது. மனோபாலா, ராஜ்கபூர், சுமித்ரா, வினோத் ராஜ் ஆகியோரும் உண்டு.

வித்யாசாகர் இசையில் "வித்தக சாகர்' என்பதை காட்டியிருக்கிறார். பாரதி பாடல் மனதில் இடம் பிடிக்கும். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு "பலம்''. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் சீமான். அகிம்சைதான் அமைதிக்கு ஆதாரம் என்பதை அழுத்தமாக பதிய வைப்பதில் முழு கவனம் செலுத்தியுள்ள இவரது சமூக அக்கறையை பாராட்டலாம்.

"கத்திக்கு கத்தி, ரத்தத்துக்கு ரத்தம்'' என்பது பிரச்சினைக்கு தீர்வு ஆகாது என்று பெரியவர்கள் சொன்னதை இன்றைய இளைஞர்களுக்கு அவர்களுடைய பாணியில் சொல்லி புரட்சி சீமான் ஆகியிருக்கிறார்.

ஒரே ஒரு இளைஞனால் அது சாத்தியமாகுமா? என்ற கேள்வியை எழுப்பி அதற்கு பதில் சொல்லும் விதம் புதுமை.

கமர்சியல் சினிமாவிலும் கனமான கருத்தை புரியும்படி சொல்ல முடியும். வெற்றியை அள்ள முடியும் என்பதற்கு இவர் சொன்ன கதை கச்சிதம்.

தம்பி - இன்றைய தலைமுறைக்கு தேவையான தங்கக் கம்பி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படம் பார்த்தன் பறவாய் இல்லை. என்ன மாதவன் நம்ம தலைவர்ட்டை டயலொக் எல்லாம் விடுறார்.

அட அது தானா காரணம்? இங்கு சில சனம் "தம்பி" படம், தலைவரின்ட கதையாம் என்று சொல்லுதுகள் :P தாங்க முடிலயடா !!!

படம் எடுத்தவர் சீமான். அவர் விடுதலை சிறுத்தைகள், நெடுமாறன் அண்ணா, மதிமுக வுடன் சேர்ந்து ஈழத்தமிழர்

ஆதரவுபோராட்டங்களில் கலந்து கொள்பவர்...

  • 2 weeks later...

தம்பியின் வெற்றியினை பெரியாருக்கும் தேசியத்தலைவருக்கும் அர்ப்பணிப்பதாக ஆனந்த விகடனில் இயக்குனர் சீமான் தெரிவித்த செய்தி.

http://www.tamilnaatham.com/press/thampi.pdf

சீமான்- தலைவரை - பெயர் சொல்லி கூட பேசமாட்டார்-!

அண்ணன் என்றே எப்போதும் சொல்வார்-

அவர் பேட்டிகளே - சாட்சி!

பத்திரிகைகளுக்கால தலைவர் பேர் சொல்லி இருந்தாலும் - அங்கே தெரிவது - நான் புலி ஆதரவாளர்தான் - என்ற கோபம்!

பணம்தான் எல்லாம் என்று நினைக்கும் - சினிமா உலகத்தில்- வாய்ப்புகள் ஏதும் கிடைக்காத காலத்திலும்

தலைவரை நேசிச்ச சீமானின் பண்பு உயர்ந்தது!

வாய்ப்பு கிடைத்த காலத்திலும் - தன் படத்துக்கு "தம்பி" என்று பெயர் வைத்தது -

ம்ம் என்ன சொல்ல- சீமான் - - ரொம்ப நல்லவர்! 8)

  • கருத்துக்கள உறவுகள்

இயக்குனர் சீமான் தேசியத்தலைவர் மீது அளவு கடந்த அன்பு கொண்டவர். இவரது கட்டுரை ஒன்றினை தேசியத்தலைவரின் 50வது அகவையில் பிரான்ஸ் ஈழமுரசு வெளியிட்ட விடுதலைப்பேரொளி என்ற புத்தகத்தில் காணலாம்.

வர்ணன், நீங்கள் இணைத்த சீமானின் பேட்டியினை யாழ்கள உறுப்பினர் கானாபிரபா அவுஸ்திரெலியா இன்பத்தமிழோசையில் பேட்டி கண்டவர் . இப்பெட்டியினை வன்னியில் புலிகளின் குரல் வானொலியிலும் பிறகு ஒளிபரப்பாகி பலர் கேட்டு பாரட்டுக்களினைத் தெரிவித்தார்கள்.

சீமானின் தம்பிபடம் மிக வெற்றிபெற எனது வாழ்த்துக்கள்

சீமானின் தம்பிபடம் மிக வெற்றிபெற எனது வாழ்த்துக்கள்

அந்த படம் -வெற்றி பெற்று ஆச்சு - மாதவனுக்கும் - ரீ எண்ட்ரீ - கிடைச்சிட்டுது 8)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படம் பார்த்தன் பறவாய் இல்லை. என்ன மாதவன் நம்ம தலைவர்ட்டை டயலொக் எல்லாம் விடுறார்.

உங்க தலைவர் யாரு என்று கடைசிவரை சொல்லவே இல்லையே?? :roll: :)

http://www.lankasritv.com/ActresAndmore/ci...nthurajadal.wmv இந்த ஒளி பேட்டியில் சேரன் தஙகர், தம்பி பட டைரக்டர் சீமானை பார்க்கலாம்

உங்க தலைவர் யாரு என்று கடைசிவரை சொல்லவே இல்லையே?? :roll: :)

ம்ம் அதுதான் நானும் யோசித்தன்,,, :roll:

சில நேரம் விஜய் ஆ இருக்குமோ...? :wink: :(

ம்ம் நானும் தம்பி படம் பார்த்தன் இந்த படத்தில் மாதவன் வித்தியாச நடித்திருக்கார் ... பூஜாவும் நல்லா நடித்திருக்கா... பாட்டுகளும் பரவாயில்லை... இந்த படம் மாதவனுக்கு வெற்றி படம் எண்டு தான் நினைக்குறன்... :(

  • கருத்துக்கள உறவுகள்

உம். எல்லோரும் கள்ளச் சீடியில் படம் பார்த்துப் போட்டு படம் வெற்றி பெறும் எண்டு நினைக்கின்றியளோ??? :twisted: :wink:

  • தொடங்கியவர்

ம்ம் நானும் தம்பி படம் பார்த்தன் இந்த படத்தில் மாதவன் வித்தியாச நடித்திருக்கார் ... பூஜாவும் நல்லா நடித்திருக்கா... பாட்டுகளும் பரவாயில்லை... இந்த படம் மாதவனுக்கு வெற்றி படம் எண்டு தான் நினைக்குறன்...

ம்ம் இப்போதேல..கொலை செய்யும் முறைகளை வைத்து தான் படம் வெற்றியோ..தோல்வியோ என்று சொல்லலாம்..புதுசு புதுசா ஐடியாவும்..ஆயுதமும் தேடுறாங்க..இதுலயும் தொடக்கமே..டண் டண் எண்டு சத்தம்..என்னெண்டு பார்த்தா..கொலை :evil: :evil: :evil:

என்ன படமோ..மாதவனும் ரொம்ப சொஃப்ற்றா வாறவர்..இதுல..ரொம்ப ஓவரா வாறார்..கண்ணை அடிக்கடி முழுசுறது எனக்கு சுத்தமா பிடிக்கல சொல்லிட்டேன் :!: :evil:

உம். எல்லோரும் கள்ளச் சீடியில் படம் பார்த்துப் போட்டு படம் வெற்றி பெறும் எண்டு நினைக்கின்றியளோ??? :twisted: :wink:

ஹி ஹி.. தியட்டர் ல போட்டால் போகமாட்டோம் எண்டா சொல்லுறம் ... இங்க போட மாட்டேங்கிறாங்க.. அதால 7 பிராங் க்கு சிடி வாங்கி பாக்குறம்.. :wink: சில பேர் 7 பிராங்க் சிலவு பண்ணாமல் நெட் ல யே பாக்கினமே.. அவர்களை என்ன சொல்லப் போறீங்க... 8) :roll:

நானூம் படம் பார்தேன் சும்மா பார்கலாம்

7 பிராங் க்கு சிடி வாங்கி பாக்குறம்.. சில பேர் 7 பிராங்க் சிலவு பண்ணாமல் நெட் ல யே பாக்கினமே.

அனிதா அக்கோய் நீங்க சொல்வத பார்தால் நீங்கள் நெட் ல தான் பார்கிறது போல

நானூம் படம் பார்தேன் சும்மா பார்கலாம்

7 பிராங் க்கு சிடி வாங்கி பாக்குறம்.. சில பேர் 7 பிராங்க் சிலவு பண்ணாமல் நெட் ல யே பாக்கினமே.

அனிதா அக்கோய் நீங்க சொல்வத பார்தால் நீங்கள் நெட் ல தான் பார்கிறது போல

அச்சோ நான் எங்க அப்படி சொன்னன் 7 பிராங்க்கு சிடி வாங்கி பாக்குறம் எண்டெல்லோ சொன்னன்... :shock: :shock: :shock: :shock: :roll: :roll:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்க தலைவர் யாரு என்று கடைசிவரை சொல்லவே இல்லையே?? :roll: :lol

ம்ம் அதுதான் நானும் யோசித்தன்,,, :roll:

சில நேரம் விஜய் ஆ இருக்குமோ...? :wink: :lol: )

என்னது விஜயோ அவர் எனக்கு தலைவரோ. கடவுளே கடவுளே நாடு இவ்வளத்துக்கா இருக்கு. நான் சொன்னது தலைவர் பிரபாகரனை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம் ம் துயவன் கள்ளச் சிடியில் பாத்தாலும் பாறவாயில்ழை தான் பாத்துட்டு அக்கா விட்டையும் கொடுத்து அண்ணாக்கும் கொடுத்து எல்லா பார்த்தது!!!

வீட்டு வாசலில் இருக்கும் மரம் வெட்டப்பட இருப்பதைக் கூடத் தாங்கிக்கொள்ள முடியாத இளகிய மனதுடைய கதாநாயகன்இ தம்பி.

மரத்தைக் காப்பாற்றஇ ஓர் ஆணியை (லேசா வலிக்கும்இ பொறுத்துக்க) அதன் மேல் அடிக்கிறான். அதிலே ஒரு சிவப்புத் துணியைச் சுற்றிஇ அதனை சாமி மரமாக ஆக்கிஇ வெட்டப்படுதலிலிருந்து காப்பாற்றுகிறான்.

இத்தனை நல்ல மனசுடைய தம்பியின் குடும்பமே வில்லன்களால் காலியாகும்போதுஇ வழக்கமான நம் ஊர் ஹீரோ போல சூரசம்ஹாரம் செய்யாமல்இ அந்தத் தீயவர்களையும் திருத்த முனைந்துஇ வெற்றியும் காண்கிறான் தம்பி.

‘அட்வைஸ் சொல்றாங்கப்பா’ என்று லேசாகச் சொல்லிட்டு புறம்தள்ளக்கூடிய கதையைத் துணிந்து செய்திருக்கிறார் சீமான்இ _ பிரமாதமாகவே.

படத்தின் பெரும் பலம் மாதவனும் அழகிய தமிழ் வசனங்களும்இ

பேரன்பும் பெருங்கோபமும் கொண்டுஇ பரட்டைத் தலையுடன் ரகளை செய்திருக்கிறார் மாதவன். ரொம்ப நாள் கழித்து மேடிக்கு சீமான் வீட்டு அறுசுவை விருந்து கிடைத்திருக்கிறது. அதுவும் கல்லூரி ஆண்டு விழாவில்இ சிறப்பு விருந்தினராக வரும் தம்பியை ஒரு மாணவன்இ ரௌடி என்று சொல்லஇ ரொம்ப பொறுமையாக ‘‘நம்ம ஊர்ல சைலன்ஸ்ங்கறதைக்கூட சத்தமாத்தான் சொல்ல வேண்டியிருக்கு’ என்று தன் நிலையை விளக்கும் காட்சி மனதில் ரொம்ப காலம் தங்கியிருக்கும்.

பூஜா ஓகே.

வடிவேலுவும் மணிவண்ணனும் அநியாயத்திற்கு வீணடிக்கப்பட்டிருக்கிறார்க

  • கருத்துக்கள உறவுகள்

ம் ம் துயவன் கள்ளச் சிடியில் பாத்தாலும் பாறவாயில்ழை தான் பாத்துட்டு அக்கா விட்டையும் கொடுத்து அண்ணாக்கும் கொடுத்து எல்லா பார்த்தது!!!

ஏன் உங்கள் வீட்டில் படம் பார்ப்பதென்றால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சீடி வாங்கிப் போட்டா பார்ப்பீர்கள்?? :wink:

  • கருத்துக்கள உறவுகள்

ஹி ஹி.. தியட்டர் ல போட்டால் போகமாட்டோம் எண்டா சொல்லுறம் ... இங்க போட மாட்டேங்கிறாங்க.. அதால 7 பிராங் க்கு சிடி வாங்கி பாக்குறம்.. :wink: சில பேர் 7 பிராங்க் சிலவு பண்ணாமல் நெட் ல யே பாக்கினமே.. அவர்களை என்ன சொல்லப் போறீங்க... 8) :roll:

சுவிசில் இருக்கின்ற உங்கள் 4 பேருக்காகவும் தியட்டார் ஒன்று கட்டி படம் போடுவதாக உத்தேசித்திருக்கின்றேன். ஒகேவா!!

பிரகாரன் மீது அதிக பற்றுள்ளவன் நான்'

கறுப்பு ஜீன்ஸ், கறுப்பு பனியன், அதில் சிவப்பு நிறத்தில் சேகுவேரா படம் என ஒரு போராளி போலவே இருக்கிறார் இயக்குநர் சீமான். பேச ஆரம்பித்தால், வார்த்தைகள் அருவியாகக் கொட்டுகின்றன. சுத்தத் தமிழில்... அவ்வப்போது சத்தத் தமிழில்! `தம்பி' பட வெற்றிச் செய்திகளால் சந்தோஷப்படுகிற முகத்தில், திடீர் திடீரெனக் கொப்பளிக்கிறது கோபம்.

"தம்பி கதைக்கான விதையை எங்கே இருந்து எடுத்தீங்க?"

"உங்களுக்கும் எனக்கும் ஏற்படுகிற சின்னச்சின்ன கோபங்களைத் தொகுத்துத்தான் தம்பியை உருவாக்கினேன். சாலையில் மஞ்சள் கோட்டைத் தாண்டி தனது வாகனத்தை நிறுத்துகிற ஒருவர், குப்பைத் தொட்டியை அலட்சியப்படுத்தி, வீதியில் குப்பையை வீசியெறிகிற பொறுப்பற்ற இளைஞன் இவர்களைப் பார்க்கும் போது உங்களுக்கும் எனக்கும் ஏற்படுகிற வருத்தம் கலந்த கோபம்தான் `தம்பி'. அதுவும், இந்தச் சமூகம் என் வீடு என்று நினைக்கிற என்னைப் போன்ற பொதுவுடைமைவாதிகளுக்கு இந்தக் கோபம் இன்னும் அதிகமாக வரும்"

"படத்தில் மாதவனின் கரக்டர் பேரு தம்பி வேலு தொண்டைமான். இது தம்பி வேலு பிரபாகரன் என்பதைப் போலவே இருக்கிறதே?"

"பிரபாகரன் மீது அதிகப் பற்று உள்ளவன் நான். அதனால் அப்படி வைத்தேன். இங்கு நடக்கும் வன்முறையை மட்டுமல்ல, உலக அளவில் வன்முறை எங்கு நடந்தாலும் தட்டிக்கேட்கிற படம் இது. இப்போது பிரபாகரன், `என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள். செய்யத் தயாராக இருக்கிறேன். எங்களுக்குத் தேவை அமைதி; தமிழீழம்! என்று அறிவித்திருக்கிறார். வன்முறை வாழ்க்கை எப்போதுமே பாதுகாப்பற்றது. அதைத்தான் `தம்பி'யில் சொல்லி இருக்கிறேன்.

பொது இடம் ஒன்றில் கதாநாயகி பூஜாவை செல்பேசி மூலம் புகைப்படம் எடுக்கும் ரௌடிகளை மாதவன் தட்டிக் கேட்பார். அவர் சுற்றி வளைத்துத் தாக்க, `இப்ப நான் என்ன பண்ண? சொல்லு' என்று கர்ஜிப்பார். அப்படி ஒரு நிலைமையில் தான் பிரபாகரன் இருக்கிறார். அவருடைய மக்கள் போராட்டத்துக்காக அவரைப் பெரிதும் மதிக்கிறேன். `தம்பி' படத்தின் வெற்றியை பெரியாருக்கும் பிரபாகரனுக்கும் அர்ப்பணிக்கிறேன்!"

"மாதவனை ஒரு ஜாலியான ஹீரோவாகவே பார்த்தவர்கள் நாம். அவரை எப்படி இந்த கதைக்குத் தேர்ந்தெடுத்தீர்கள்?"

"உண்மையைச் சொல்ல வேண்டுமானால் எந்தக் ஹீரோவும் என் படத்தில் நடிக்க முன்வரவில்லை. சினிமா மொழியில் சொன்னால், நான் மார்க்கெட் இல்லாத டைரக்டர். ஆனால் மாதவன் கதையைக் கேட்டுவிட்டு உடனே ஒப்புக் கொண்டார். தவிர, அவர் திறமையான நடிகர் என்பதை `அன்பே சிவம்' படத்தில் கண்டு கொண்டேன். கமல் என்கிற ஒப்பற்ற கலைஞனோடு போட்டி போட்டு நடித்திருந்தார். அதுவே எனக்கு நம்பிக்கை ஏற்படுத்தியது!"

"அடுத்து என்ன படம் பண்ணப் போகிறீர்கள்?"

"சமரன் என்று எனக்குள் ஒரு படம் உறங்கிக்கிடக்கிறது. என் மண்ணை, மக்களையே யதார்த்தமாகச் சொல்ல நினைத்திருக்கிறேன். ஒரு பதினைந்து நிமிடம் வரலாற்றுப் படமாகவும், அடுத்து இப்போதைய வாழ்க்கைப் படமாகவும் மாறுகிற கதை அது. சமரன் என்றால் போர் வீரன் என்று பொருள். விக்ரம் அல்லது விஜய்யை வைத்து அந்தப் படத்தைப் பண்ணினால் சிறப்பாக இருக்கும். இனிமேல்தான் அவர்களிடம் பேசிப் பார்க்க வேண்டும்.

அடுத்ததாக `புரட்சி' என்றொரு படம். சேரனை வைத்துப் பண்ணப் போகிறேன். எது உண்மையான புரட்சி என மக்களுக்கு விளங்க வைக்கிற படமாக அது இருக்கும்."

"நல்ல படங்கள் வந்துகொண்டு இருக்கும் நேரத்தில், ஆபாசமான படங்களும் வருகிறதே?"

"இயக்குநர்களுக்கு நிர்ப்பந்தம் ஒரு காரணம். சினிமா ஒரு வியாபாரம். மணிரத்னமோ, பாலாவோ, சேரனோ அந்த நிர்ப்பந்த எல்லையை தாண்டி விட்டார்கள். மக்கள் மேலும் தப்பிருக்கிறது. குத்துப் பாடல்களைத்தான் இன்றைய இளைஞர்கள் விரும்புகிறார்கள். நமது சகோதரியை அப்படி அரைகுறை ஆடையில் திரையில் பார்த்து ரசிப்போமா என்று ஒரு கணம் அவர்கள் நினைத்துப் பார்த்தால், கவர்ச்சியையும் ஆபாசத்தையும் புறக்கணிக்க ஆரம்பித்துவிடுவார்கள். அந்த மனப்பான்மை மாறும் வரை இது மாதிரியான பாடல்களும், ஆபாசப் படங்களும் வந்து கொண்டுதான் இருக்கும்."

"ராமதாஸ் தி.மு.க. கூட்டணியில் நீடிக்க, திருமாவளவன் அ.தி.மு.க.வில் சேர்ந்துவிட்டாரே... இனி தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் நிலைமை?"

"தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் என்பது அரசியல் மற்றும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைக் கடந்த, மொழி என்கிற ஒரு அற்புதமான கருவிக்காகத் தொடங்கப்பட்டது. அமெரிக்காவில் இருந்தாலும், ஆண்டிப்பட்டியில் இருந்தாலும் நம்மை இணைக்கும் தமிழ் மொழி மாதிரி, யார் யார் எங்கிருந்தாலும் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் எங்களை இணைத்திருக்கும். தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் என்பது அந்த இருவர் மட்டும் கிடையாது. ஆயிரக்கணக்கான தமிழ் அறிஞர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் அது. நல்ல நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட எந்த விடயமும் அவ்வளவு சீக்கிரம் செயலிழக்காது!"

"பல நடிகர்களும் அரசியல் கட்சிகளில் தொடர்ந்து சேர்ந்துகொண்டு இருக்கிறார்களே?"

"எனக்கும் ஒன்று புரியவில்லை. தன்னுடைய படங்கள் வசூலை வாரிக் கொடுக்கும்போது, குப்பனையும், சுப்பனையும் பற்றித் தமிழ்க் கதாநாயகர்களுக்கு வராத அக்கறை, கையில் படம் இல்லாதபோது, வருமானம் இல்லாதபோது எப்படி பொத்துக் கொண்டு வருகிறது?கண் தானமோ, ரத்த தானமோ செய்துவிட்டு அந்தச் சான்றிதழைக் கொண்டு வரும் ரசிகர்கள் தன்னோடு நின்று படம் எடுத்துக் கொள்ளலாம் என்று சிரஞ்சீவி சொல்லியிருக்கிறார். கமல்ஹாசனின் ரசிகர் மன்றத்தினர் இதுவரை 15 ஆயிரம் லீற்றர் ரத்த தானம் செய்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான ஜோடி கண்களை தானம் செய்திருக்கிறார்கள். சிரஞ்சீவி, கமல்ஹாசன் இருவரும் அரசியலில் இல்லையே?

நடிகர்கள் அரசியலுக்கு வரக் கூடாது என்று சொல்லவில்லை. மக்களுக்கு உதவி செய்ய விரும்பினால், அதற்குப் பல வழிகள் உள்ளன. தயவுசெய்து அரசியலிலும் நடிக்காதீர்கள் என்கிறேன்.

விகடன் . கொம்

நன்றி: சூரியன் இணையத்தளம்

சுவிசில் இருக்கின்ற உங்கள் 4 பேருக்காகவும் தியட்டார் ஒன்று கட்டி படம் போடுவதாக உத்தேசித்திருக்கின்றேன். ஒகேவா!!

ஆஹா அதுக்கென்ன போடுங்க, 4 பேர் என்ன 400 பேரையும் சேர்த்து கூட்டிக் கொண்டு தியட்டருக்கு வாரன்..... அப்படியே டிக்கட் எடுக்க தேவையில்லை இலவசம் எண்டு போட்டு விடுங்க :D :wink: :lol::D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.