Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூன்று நாட்கள் தமிழக மீனவர்களும், மூன்று நாட்கள் இலங்கை மீனவர்களும் தொழில்! - ஒருநாள் விடுமுறை தினம்! மீனவர் பிரச்சினைக்கு அப்துல்கலாம் சொன்ன தீர்வு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

abdulkalam2012seithy150.jpg

இலங்கை மற்றும் தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு, இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் தீர்வு ஒன்றை முன்வைத்துள்ளார். த ஹிந்து பத்திரிகை இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி, வாரத்தின் ஏழு நாட்களில், மூன்று நாட்கள் தமிழக மீனவர்களும், மூன்று நாட்கள் இலங்கை மீனவர்களும், இந்திய இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட அனுமதிக்கப்படுவர்.

ஒருநாள் விடுமுறை தினமாக அறிவிக்கப்படும். இந்த தினங்களில், இரண்டு நாட்டு மீனவர் களும் இருநாட்டு எல்லைகளையும் மீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடமுடியும். இதற்கு இரண்டு அரசாங்கங்களும் அனுமதி வழங்க வேண்டும் எனவும் அவர் தமது திட்டத்தில் விளக்கமளித்துள்ளார். இதேவேளை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய ஜனாதிபதி அப்துல்கலாம், இன்று மாலை இந்தியா திரும்பினார்.

http://www.seithy.co...&language=tamil

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலில் அப்துல் கலாம் மற்ற நாட்டின் சட்டத்தினை மதிக்க கற்றுன் கொள்ள வேண்டும். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கலாமின் கருத்தும் தமிழகத்தில் உள்ள சாதாராண பொதுமகன் குப்புசாமியின் கருத்தும் ஒன்று.சபைக்கு எடுபடாது. :D :D

இதன்படி, வாரத்தின் ஏழு நாட்களில், மூன்று நாட்கள் தமிழக மீனவர்களும், மூன்று நாட்கள் இலங்கை மீனவர்களும், இந்திய இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட அனுமதிக்கப்படுவர்.

7 - 3- 3 = 1 அப்படியானால் ஏழாம் நாள் சீனாவுக்கா? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கும் எனி 3 நாட்கள் சாப்பாடு கொடுத்திட்டு.. 3 நாட்கள் கொடுக்காமல் விட வேணும். 1 நாள்.. சமையல்காரங்களுக்கு.. சமையலுக்கு விடுதலை..! அப்பதான் தெரியும்... கடல் வளத்தில் ஜீவனோபாயம் செய்யும் மக்களின் பசியும் வலியும்..!

இரு பகுதி மீனவர்களுக்கும் மீன்பிடிதான் ஜீவனோபாயம். சம வளப் பயன்பாடு என்பதும் எல்லை தாண்டாத மீன் பிடி என்பதும்.. புரிந்துணர்வுடன் கூடிய வளப் பகிர்தல் என்பதும்.. மீன் பிடி முறைகளில்.. றோலர்.. டைனமைட் வைத்து மீன்பிடித்தல் மற்றும் மீன் முகாமைத்துவத்தால் தடுக்கப்பட்டுள்ள வலைப் பயன்பாடுகள் போன்ற மீன் வளத்தின் sustainability ஐ பாதிக்கக் கூடிய முறைகளை கைவிட்டு.. மிகை மீன் பிடியை கட்டுப்படுத்தி.. சரியான மீன் வள முகாமைத்துவத்தோடு மீன் பிடிப்பதை உறுதி செய்வதே இதற்குப் பரிகாரம்.

அதற்கு முதல் தென்னிலங்கை சிங்கள மீனவர்களை வடக்குக் கிழக்கு கடலுக்கு நகர்த்தும் சிங்கள பேரினவாத அரசின் செயலை கலாம் போன்றவர்கள் வெளிப்படையாக கண்டிப்பதோடு.. அதுவும் மீனவர்களிடையே பிரச்சனை தோன்ற ஒரு முக்கிய காரணி என்பதையும்.. ஏற்றுக் கொண்டு.. இந்திய - இலங்கை கடற்பகுதி.. கடற்படைகளின் ஆதிக்கத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு.. மீனவர்கள் அச்சமின்றி... சுதந்திரமாக மீன்பிடிக்க அனுமதிக்கப்படுவதும் அவசியம். அதைவிட்டிட்டு....

இவங்க அக்கினியை செய்யலாம்.. அணு குண்டை செய்யலாம்.. இவற்றால் மனித இனம் ஒரு பிடி சோறு சாப்பிட முடியாது. மாறாக பேரழிவுகளையே சந்திக்க முடியும். காந்தியின் அகிம்சையைப் பேசிக் கொண்டு அணு குண்டை தயாரிக்கும் கலாம் போன்ற முரண்பாட்டாளர்களுக்கு மனித உணர்வுகளின்.. மதிப்பு புரிய வாய்ப்பில்லை.

மாணவர்களுக்கு வகுப்பெடுக்க முதல் கலாமை கூப்பிட்டு வைச்சு நாங்க அவருக்கு மனித உணர்வுகள் பற்றிய வகுப்பெடுக்க வேண்டும் போலுள்ளது. உணர்வுகள் செத்த.. படித்த மனிதர் இவர். அறிவியலில் உணர்வுகளை உணர்ந்தலும் கல்வியே. வெறும் அணு குண்டும்... அக்கினி ஏவுகணையும் அல்ல.. அறிவியல். அவை அழிவியல்..!!

இவருக்கு அறிவியலை விட அழிவியலில் தான் அதிக நாட்டம் உண்டு போல. அதுதான் மகிந்தவின் அழிவியல் இவரைக் கவர்ந்துள்ளது. பேரழிவுக்கு மத்தியில் அசோகனுக்கு புத்தி பிறந்தது போல.. இவர் மகிந்தவிற்கு புத்தி புகட்ட வேண்டுமே தவிர.. நமக்கு இவரின் பல சொற்கள் உதவ வாய்ப்பில்லை..! ஒரு சில தோல்வியால் துவழும் மக்களுக்கு ஊக்கமூட்டும் கருத்துக்களைத் தவிர..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி

இலங்கை எப்போ இந்தியாவின் மாநிலமானது

அதுவும் இவர்களது மாநிலங்களே இவங்க சொல்வதை கேட்பதுமில்லை நடைமுறைப்படுத்துவதுமில்லை. இதில சீனாக்காறன்ர தயவில நிற்கிற இலங்கை கேட்கணும் என்ற எதிர்பார்ப்பு அணுவின் பலத்தால் வந்ததோ???

அப்படிப்பார்த்தால் சீனாவின் அணுப்பலத்துடன் ஒப்பிட்டால் இந்திய அணுப்பலம் ???

Edited by விசுகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் சும்மா கண்டனம் தெரிவிப்போம். நீங்கள் உங்கடை வேலையைக்காட்டுங்க என்று இந்தியாவே ஸ்ரீலஙகாவிடம் சொல்லி இருக்கும். அல்லாவிட்டால் இது இந்தியா கண்டனம் தெரிவிக்க தெரிவிக்க அவங்களும் பிடிப்பாங்களா. எல்லாம் ஒரு ஒத்துமேவல். வெளியுலகத்திற்கு சின்னப்பூச்சாண்டி அவ்வளவு தான்.

  • கருத்துக்கள உறவுகள்

மூன்று நாட்கள் தமிழக மீனவர்களும், மூன்று நாட்கள் இலங்கை மீனவர்களும் தொழில்! - ஒருநாள் விடுமுறை தினம்! மீனவர் பிரச்சினைக்கு அப்துல்கலாம் சொன்ன தீர்வு.

ஸ்கூல் பிள்ளைகள் கணக்கா இருக்கும்.. ம்ம்ம் தேறாது ஏர்வாடி தர்காவுக்கு என்ட்ரஸ் சீட் ஒண்ணு போடுங்கப்பா...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அணு விஞ்ஞானத்தை புரிந்தளவுக்கு தமிழ் மக்களின் அன்றாட பிரச்சனையை புரியாத ஒருவர்

முன்பெல்லாம் இந்தியா அரசு கூறும் உள்நாட்டு பிரச்சனையில் தலையிடும் உரிமை தமக்கு கிடையாது என்று கூறுவார்கள் இவர்கள் கூறிய விடயத்தை முன்னாள் இந்தியா ஜனாதிபதியே மீறிவுட்டாரா ? அல்லது கொள்கையை மாற்றி விட்டார்களா ??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.