Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழ இந்திய புரிந்துணர்வு - கருத்துப்பகிர்வு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லக்கி, ராஜா.. இது நிலாந்தன் எழுதிய ஒரு கட்டுரையிலிருந்து சில பதிகள்.. இந்த இடத்திற்கு பொருத்தமாயிருந்தது.. அதனால் இணைக்கிறேன்..

எனவே கொழும்பில் நடந்தவை அனைத்துப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான பயிற்சிப்பட்டறைகள் அல்ல. மாறாக பிரச்சினைகளைக் காலம் கடத்தவும் விடுதலைப்புலிகளை ஒரு புதிய பொறிக்குள் சிக்கவைப்பதற்குமாகத்தான் அவர்கள் புலிமனதைப் படிக்கிறார்கள்.

அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகளுடன் ஒத்துப்போய் அல்லது அதிகம் விட்டுக்கொடுப்பதுபோல ஒரு போக்கைக்காட்டி அதன் மூலம் விடுதலைப்புலிகளை மேற்கு நாடுகளுடன் முரண்பட வைக்கும் விதத்தில் ஒருபொறி கொழும்பில் தயாராகி வருகிறது. இது 1987இல் ஜெயவர்த்தன இந்தியாவுடன் சேர்ந்து செய்த ஒரு பொறியைப்போன்றதே. அந்தப் பொறி நடுவராக வந்த இந்தியாவை விளையாட்டு வீரராக்கியது. முடிவில் அது தமிழர்களையும் இந்தியாவையும் மோத விட்டது.

ஜெயவர்த்தனவின் யுத்தத்தை ராஜீவ்காந்தி நடத்தினார். அதிலிருந்து தொடங்கி சிதையத்தொடங்கிய இந்திய -ஈழத்தமிழ் உறவுகள் முற்றாக வழமைக்குத் திரும்பிவிடாத ஒரு பின்னணியில் இப்பொழுது புலிகளையும் மேற்குநாடுகளையும் மோதவிடும் விதத்தில் ஒரு புதியபொறி வடிவமைக்கப்பட்டு வருகிறது. இது முன்பு ரணில் வைத்திருந்த பொறியின் திருத்தப்பட்ட ஒரு வடிவமாகவும் இருக்கலாம். முன்பு ஜெயவர்த்தனவின் யுத்தத்தை ராஜீவ் காந்தி செய்தார். இப்பொழுது மஹிந்த தன்னுடைய யுத்தத்தை யாரைவைத்துச் செய்யலாம்? என்று யோசித்துக்கொண்டிருக்கிறார்.

  • Replies 186
  • Views 15.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்.. பொருத்தமான தலைப்பில் இட்டிருக்கிறீர்கள்.. யாரப்பா அதை செய்தது.. நன்றி

லக்கிலுக் உங்களுக்கான பதில்

1) பெண்களுக்கு வலுக்கட்டாயமாக ஆயுதப் பயிற்சி கொடுப்பது (சமீபத்தில் அகதியாக வந்த பெண்ணொருவர் தன் இரண்டு பெண் குழந்தைகளையும் ஆயுத பயிற்சி பெறுமாறு புலிகள் வற்புறுத்தியதாக கூறினார்இ இது ஒரு உதாரணம் மட்டுமே)

இதற்கு நான் பதில் கூறுகின்றேன் என்னை தவறாக யாரும் கருத வோண்டாம்

முதலாவது

தமிழிழ வரலாற்று போரில் சிங்கள அரசும் சிங்கள ஊடகங்களும் தமிழ் மக்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்வதை நாங்களும் அறிவோம் நீங்களும் அறிவீர்கள் அப்படி அறிக்கைகள் வரும் போது அ தை சிலர் (தமிழிழத்தை பற்றி நன்கு அறியாதவர்கள்) துாக்கிப் பிடிக்கிறார்கள் அல்லது பணத்துக்காக மாரடிக்கும் கும்பல்கள் அ தை பெரிதுபடுத்தி தமிழிழ பேராட்டத்தை இழிவு படுத்துகிறார்கள் ஏனெனில் அவர்களுக்கு தொரியும் விடுதலைப்புலிகளுடன் பேராடி வெல்லமுடியாது அதனால் அவர்களுக்கு மோல் பழிகளை சுமத்தி அவர்கள் மீது அவர்பெயரை ஏற்படுத்துகிறார்கள் இதை நாம் வெளியில் இருந்து பார்தால் அப்படித்தான் நினைப்போம்

இரண்டாவது

இராணுவத்தில் இருக்கும் ஒருவருக்கு பேராட்டத்தில் ஈடுபடுவதற்கு மணத்துணிவு வோண்டும் அந்த மணத்துணிவு இல்லாமல் பேராட முடியாது இதை நீங்கள் ஒத்துக் கொள்வீர்களா இன்று விடுதலைப் பேராட்டத்தை எடுத்து நோக்குவோமாயின் முன்னைய காலங்களில் விடுதலைப்புலிகள் இலங்கை இராணுவத்துடனே அல்லது இந்திய இராணுவத்துடனே பேராடும் போது நவீன ஆயுதங்களை வைத்து பேராடவில்லை கட்டுத்துவக்கு சக்கை(இது ஓரு வகை வெடிமருந்து) கைக்குண்டு சிறிய ரக தானியங்கி துப்பாக்கிகள் வைத்து பேராடினார் ஆனால் இராணுவங்கள் மிகப்பெரும் ஆயுத தளபாடங்களுடன் பேராடினார் அப்படி இருந்தும் அவர்களை எதிர்த்து பேராடினார்கள் என்றால் அது அவர்களின் மனத்துனிவு தான் முக்கிய காரணம் இந்தக்காரணங்களால் தான் இன்று வரை இந்த விடுதலைப்பேராட்டம் நிலைத்துநிற்கின்றது இல்லை என்றால் மாற்று இயங்கங்கள் போல் இல்லாமல் பேயிருக்கும் நினைத்துப் பாருங்கள் மக்களை வலுக்கட்டாயமகக இணைத்திருந்தால் இப்படி பேராடமுடியுமா

மூன்றாவது

இலங்கையில் இருந்து அகதிகளாக வெளியேறும் மக்கள் தாங்கள் செல்லும் நாட்டிடம் தாங்கள் அகதி என கூறுகிறார்கள் (இதில் ஒன்றை கவனிக்க வோண்டும் இதில் எத்தனை வீதம் உண்மையாக பாதிக்கப் பட்டவர்கள் என்று) அவர்கள் கோட்கும் கோள்விகளுக்கு இவர்கள் கூறும் பதில் நாங்கள் வன்னியில் இருந்தனாங்கள் என்ட பிள்ளையை இயக்கம் பிடிச்சுக் கொண்டு போய் 4 மாதம் கட்டாய பயிற்ச்சி குடுத்தவை பிறகு நாங்கள் கத்திக்குளரி மீட்டனாங்கள் இல்லாவிட்டால் எங்கடை பிள்ளையை இயக்கம் பிடித்து கொண்டு போனது பின்னர் அவ ஓடிவந்திட்டா இப்படி பல காரணங்களை கூறுவார்கள் ஏன் தாங்கள் செல்லும் நாட்டில் (அகதியாக தங்கியிருக்கும்) இருந்து திருப்பி அனுப்பக்கூடாது என்று இப்படி கூறுபவர்களிடம் நான் ஒன்று கோட்கிறேன் நான் ஒரு ஏ.கே ரக தானியங்கி துப்பாக்கியை தருகிறேன் அதை கழற்றி பிரித்து மீண்டும் பூட்டி குறிபார்த்து சுட்டுக் காட்டுமாறு அவர்கள் செய்தால் நீங்கள் கூறுவதை நான் ஆமோதிக்கிறேன்

ஜக்கிய நாடுகள் சபையின் அறிக்கை

ஒரு நாடு பேராட்டத்தை எதிர்கொள்ளும் போது நாட்டு மக்களும் அதில் இணைய வோண்டும்

அமரிக்கவை எடுத்து பாருங்கள் அங்கு எல்லேருக்கம் க்டடாய இராணுவ பயிற்ச்சி உண்டு (அமரிக்க குடியுரிமை உள்ளவர்களுக்கு)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்.. நர்மதா சொன்னது போல புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அனைவருக்கும் இராணுவ பயிற்சி வழங்கப்படுகிறது. தற்பாதுகாப்பு பயிற்சி. குண்டுவீச்சின் போது எவ்வாறு உணிரைபாதுகாப்பது? இராணுவ முன்னேற்றங்களின் போது எவ்வாறு எதிர்கொள்வது முதலான பயிற்சிகளும் அடிப்படையான களப் பின்னிலையில் நின்று செயற்படுவதற்கான பயிற்சிகளும் அதாவது களத்தில் போராடுவோருக்கான பின்நிலை உதவிகள் பயிற்சிகள் அங்கே பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன.

இன்று ஜனநாயகம் மிகச்சிறப்பாக நடந்து கொண்டிருக்கும் பல நாடகளில் கட்டாய இராணுவ பயிற்சியென்பது நடைமுறையில் இருக்கின்றது.

மற்றது வலுக்கட்டாயமாக ஒருவரை போரில் கடைசிவரை ஈடுபடுத்த முடியாது. அது போரின் போக்கையே மாற்றிவிடும்.

இன்னொரு தகவல்.. இலங்கை இராணுவத்திடம் கைதாகி இருக்கும் ஒரு தமிழ் அப்பாவி மகன் தனக்கு புலிகள் மீது வெறுப்பு.. அவர்களின் நடவடிக்கைகள் பிடிப்பதில்லை என்று சொல்வதற்கு பின்னாலிருக்கும் அவன் தன் உயிர்மேல் கொண்டிருக்கும் விமர்சிக்க முடியா ஆசையின் விளைவே காரணம் என்பதனை புரிந்து கொள்ள முடிகிறது தானெ லக்கி லுக்

  • தொடங்கியவர்

நான் கேட்டிருந்த சில கேள்விகளை நிர்வாகம் வெட்டி இருக்கிறது.... இருந்தாலும் பரவாயில்லை... நிர்வாகத்தின் சங்கடம் எனக்கு நன்றாகவே புரிகிறது....

மிகுதிக் கோள்விகளை வையுங்கள் அதற்கான விளக்த்தையும் முடியுமால் இதிலே அல்லது தனிமடலிலே தெரிவிக்கின்றேன் இயலுமானவற்றை நான் கூறுவது சரியே பிழையே தெரியாது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் கேட்டிருந்த சில கேள்விகளை நிர்வாகம் வெட்டி இருக்கிறது.... இருந்தாலும் பரவாயில்லை... நிர்வாகத்தின் சங்கடம் எனக்கு நன்றாகவே புரிகிறது

மீளவும் இந்த வசனங்களை படித்துப்பாருங்கள் லக்கி லுக்

நான் அரச பயங்கர வாதத்தின்

அட்டுழியம் பற்றிப் பேசினேன்.

அவர்கள் புலிகளின் பாசிசம் பற்றிப் பேசினார்கள்

நான் அரச இராணுவத்தின்

அடக்குமுறை பற்றிப் பேசினேன்.

அவர்கள் புலிகளின் பாசிசம் பற்றிப் பேசினார்கள்.

நான் அரசக் காடையர்களின்

காடைத்தனம் பற்றிப் பேசினேன்.

அவர்கள் புலிகளின் பாசிசம் பற்றி பேசினார்கள்.

நான் புலிகளின் பாசிசம் பற்றிப் பேசினேன்..

அவர்கள் எனது வார்த்தைகளை கடன்வாங்கி கொண்டார்கள்

-- இந்தியாவில் ஒரு காலத்தில் எமர்ஜென்சி நிலை பிரகடனப்படுத்தப்பட்டிருந்த

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விமர்சனம் குறித்தான் விவாதம் நடந்து கொண்டிருக்க, அதற்கு பொருத்தமாய் இருக்கின்ற அருணன் எழுதியிருந்த ஒரு கட்டுரையின் சில பகுதிகளை இங்கே இடுகிறேன்..

---

விடுதலைப்புலிகள் அமைப்பு இன்று மாபெரும் அரசியல் இராணுவ அமைப்பாக மாறியிருக்கின்றமை பலநாடுகளுக்கும் கண்களைக்குத்தும் விடயம் என்பது யாவரும் அறிந்த உண்மை.மூன்று தசாப்த காலமாக தமிழ்மக்களின் உரிமைகளை வென்றெடுக்க அரசியல், இராணுவ ரீதியில் சிங்களப்பேரினவாத சக்திகளுடன் புலிகள் சளைக்காது போரிட்டுவருகின்றனர்.ஆரம்பத்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படி போடு அருவளை விடிய விடிய ராமன் கதை விடிச்ச பிறகு சீதைக்கு ராமன் சித்தப்பாவா???? :P :P

எப்படியப்பா இப்படிய்யான ஆக்களுக்கு எல்லாம் பதில் சொல்லி கொண்டு இருக்கிறிங்கள்

:lol::lol::lol: :P :lol::lol: :P

'ரா'வுக்கு உள்நாட்டிலேயே ஏகப்பட்ட வேலைகள் இருக்கும்போது.... ஈழம் ஒரு முக்கியப் பிரச்சினையாக அந்த அமைப்புக்கு இருக்க முடியாது.....

நீங்கள் எந்த உலகத்தில் இருக்கிறீர்கள். சிறிது காலத்துக்கு முன் புூசாரிகளாய் ஈழத்துக்கு போன றோவைப்பற்றியும் அவர்களுக்கு என்ன நடந்தது என்றும் தெரியாதோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மீண்டும் மீண்டும் சொல்கிறேன்... பாகிஸ்தான் ஒரு அங்கீகரிக்கப்பட்ட நாடு... அதனுடன் ஏதாவது ஒரு ஒப்பந்தம் போட்டால் கூட செல்லும்....

இந்தியா எதுவாக இருந்தாலும் இலங்கை அரசின் ஒப்புதல் இல்லாமல் ஈழம் விஷயத்தில் இறங்க முடியாது....

உண்மையை நீங்கள் ஒத்துக்கொள்ளவே வேண்டும்.... இன்னமும் ஈழம் உங்களைத்தவிர வேறு யாரிடத்திலும் ஒரு நாடாக அங்கீகரிக்கப்படவில்லை.....

உங்களது ஓவர் கான்பிடன்ஸால் உங்களுக்கு யார் ஆதரவும் தேவையில்லை என்று முரட்டுத்தனமாக செயல்படுகிறீர்கள்.......

நாம் எழுதுவதால் வெறுப்பேற்படுகிறது எனச் சொன்ன லக்கி இப்ப என்ன எழுதியிருக்கிறீரகள். நீங்கள் என்ன சிறுபிள்ளைத்தனமாய் கதைத்தாலும் அது சரி, எங்களுக்கு வெறுப்பு வரக்கூடாது அப்படித்தானே.

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பங்களாதேஷை பொறுத்தவரை இந்தியாவிற்கு அங்கிருந்து வந்த அகதிகளால் பெரும் பொருட்செலவு ஏற்பட்டது.... மேலும் பாகிஸ்தானின் போர் விமானங்கள் எப்போது பார்த்தாலும் இந்திய எல்லை மீது பறந்து பங்களாதேசுக்கு சென்று கொண்டிருந்தது இந்தியாவின் பாதுகாப்புக்கு ஒரு அச்சுறுத்தலாகவே இருந்து வந்தது.... மேலும் பாகிஸ்தான் கிழக்கில் இருந்தும் இந்தியாவுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் கொடுத்து வந்ததை இந்தியா விரும்பவில்லை....

இலங்கையைப் பொறுத்த வரையில் விடுதலைப்புலிகளை விட இந்திய அரசுக்கு இலங்கை அரசே நட்புணர்வோடு செயல்பட்டு வருகிறது.... தேவை ஏதும் இல்லாமல் இங்கே மூக்கை நுழைக்க இந்தியா ஒன்றும் அமெரிக்கா அல்ல.....

எந்த விடயத்தில் இலங்கை அரசு இந்திய அரசுடன் நட்புடன் நடக்கிறது எனச் சொல்ல முடியுமா? அந்த நட்புதான் சுனாமி வத்தபோது அமெரிக்க இராணுவத்தை இலங்கைக்குள் இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி கொண்டுவந்ததா?

  • கருத்துக்கள உறவுகள்

திரு ராஜாதிராஜா.....

இணைந்தது: 13 மார்கழி 2005

கருத்துக்கள்: 572

எழுதப்பட்டது: செவ்வாய் மாசி 21இ 2006 2:29 pஅ Pழளவ ளரடிதநஉவ:

--------------------------------------------------------------------------------

திரு காவடி

புலிகள் இந்திய தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளதாக உள்ள செய்திகள் பொய்யா இருந்தால் எங்களுக்கு எந்த விதமான் நெருடல்களும் இல்லை.இது சமீபத்தில் வந்த செய்தி

hவவி:ஃஃறறற.சநனகைக.உழஅஃநெறளஃ2005ஃ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாகிஸ்தான் இந்தியா யுத்தம் நடந்தபோது பாகிஸ்தான் யுத்த விமானங்கள் இலங்கை வந்து எரிபொருள் நிரப்பிபோக அனுமதித்தது இலங்கை அரசு. அது தான் இலங்கை அரசின் நட்ப்பா? எங்களிடம் அப்போது விமானப்படை இருந்திருந்தா பாகிஸ்தான் விமானத்தை குருவி சுடுறமாதிரி சுட்டுவிழுத்தியிருப்பம் அல்லவா. இப்ப எங்களிடம் விமானப்படை இருக்கிறது விமானம் சுட்டுவீழ்த்தும் கருவி இருக்கிறது இனி பாகிஸ்த்தான் விமானம் எங்கள் எல்லைக்குள் வந்தா நாங்கள் சுட்டுவீழ்த்துவோம். இது இந்தியாவுக்காக இல்லை நாங்கள் துன்பப்படும்போது எல்லாம் எங்களுக்காக கண்ணீர் விட்ட தமிழ்நாட்டு தமிழனுக்காக.

  • தொடங்கியவர்

காவடி,

நான் ஒரு நாள் பதில் அளிக்கவில்லை... இங்கிருப்பவர்களின் கருத்துகளை கவனியுங்கள்... இவர்கள் இந்தியாவையோ, தமிழர்களையோ நேசிப்பவர்கள் என்று இனியும் கருதுகிறீர்களா? நடுவில் ஜோக்கர் 'வெங்காய ஆருரான்' வேற....

முதலில் நீ பிறரை நேசிக்கப்பழகு, பின் பிறர் உன்னை நேசிப்பார்கள். :wink: :wink: :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காவடி,

நான் ஒரு நாள் பதில் அளிக்கவில்லை... இங்கிருப்பவர்களின் கருத்துகளை கவனியுங்கள்... இவர்கள் இந்தியாவையோ, தமிழர்களையோ நேசிப்பவர்கள் என்று இனியும் கருதுகிறீர்களா? நடுவில் ஜோக்கர் 'வெங்காய ஆருரான்' வேற....

இந்தியாவை நேசிக்க வேண்டுமென்பது எந்த இலங்கைத்தமிழருக்கும் ஒரு விதியல்ல. தமிழர்களை நேசிப்பதென்ற உணர்வு தானாக வருவது, ஒவ்வொரு தமிழனுக்கும் வரவேண்டும், உண்மையான தமிழனாக இருந்தால் வரும். ஈழத்தமிழர்களை ஏளனம் செய்பவர்களுக்கும், அவர்களின் தலைமையின் மீது தருணம் கிடைக்கும் போதெல்லாம் கறை பூசுபவர்களுக்கும் இது புரியாது, அதுமட்டுமல்ல அவர்களுக்கு ஒவ்வொருவரின் எழுத்து நடையிலிருந்து மற்றவர்களை அடையாளம் தெரிந்து கொள்ளவும் முடியாது. அப்படியானவர்கள் தான் குழம்பிப் போய், மற்றவர்களையும் குழப்புவார்கள். அப்படியான குழப்பநிலையில் தான் புலம்புகிறார் 'லக்கிலுக் தங்கராசு' :lol::lol::lol: :P :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளிட்ட எந்த ஒரு சர்வதேச ஆயுத அமைப்பினரும் இந்திய மாவோயிட் ஆயுதக் குழுவினருக்கும் இடையே எதுவித தொடர்பும் இல்லை என்று இந்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவின் ராய்ப்பூரில் மாவோயிட் ஆயுதக் குழுவினர் ஆதிக்கம் உள்ள மாநிலங்களின் காவல்துறை அதிகாரிகள் கூட்டம் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், ஆந்திர பிரதேசம், சத்தீஸ்கர், உத்திரப்பிரதேசம், ஒரிசா, மத்திய பிரதேசம் மற்றும் மகாராட்டிரம் மாநிலங்களின் காவல்துறை அதிகாரிகள் இம்மாநாட்டில் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்துக்குத் தலைமை வகித்துப் பேசிய இந்திய உள்துறை அமைச்சக சிறப்புச் செயலாளர் ஏ.கே. மித்ரா கூறியதாவது:

மாவோயிட் ஆயுதக் குழுவினரது பிரச்சனை என்பது சட்டம் ஒழுங்கு பிரச்சனை மட்டும் அல்ல. அது பயங்கரவாதம் மற்றும் மாநிலங்களிடையேயான பிரச்சனையும் ஆகும். சத்தீஸ்கர் மாநிலத்தில் இந்திய அரசுக்குச் சொந்தமான வெடிமருந்து கிடங்கு மீது தாக்குதல் நடத்தும் நோக்கத்துடன் ஆயுதக் குழுவினர் வைத்திருந்த 650 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அம்மாநிலத்தில் மாவோயிட் ஆயுதக் குழுவினரது நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த அனைத்துப் பாதுகாப்புப் படையணிகளும் குவிக்கப்பட்டுள்ளன என்றார் மித்ரா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திரு காவடி

புலிகள் இந்திய தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளதாக உள்ள செய்திகள் பொய்யா இருந்தால் எங்களுக்கு எந்த விதமான் நெருடல்களும் இல்லை.இது சமீபத்தில் வந்த செய்தி

http://www.rediff.com/news/2005/dec/15bihar.htm

தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளிட்ட எந்த ஒரு சர்வதேச ஆயுத அமைப்பினரும் இந்திய மாவோயிட் ஆயுதக் குழுவினருக்கும் இடையே எதுவித தொடர்பும் இல்லை என்று இந்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவின் ராய்ப்பூரில் மாவோயிட் ஆயுதக் குழுவினர் ஆதிக்கம் உள்ள மாநிலங்களின் காவல்துறை அதிகாரிகள் கூட்டம் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், ஆந்திர பிரதேசம், சத்தீஸ்கர், உத்திரப்பிரதேசம், ஒரிசா, மத்திய பிரதேசம் மற்றும் மகாராட்டிரம் மாநிலங்களின் காவல்துறை அதிகாரிகள் இம்மாநாட்டில் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்துக்குத் தலைமை வகித்துப் பேசிய இந்திய உள்துறை அமைச்சக சிறப்புச் செயலாளர் ஏ.கே. மித்ரா கூறியதாவது:

மாவோயிட் ஆயுதக் குழுவினரது பிரச்சனை என்பது சட்டம் ஒழுங்கு பிரச்சனை மட்டும் அல்ல. அது பயங்கரவாதம் மற்றும் மாநிலங்களிடையேயான பிரச்சனையும் ஆகும். சத்தீஸ்கர் மாநிலத்தில் இந்திய அரசுக்குச் சொந்தமான வெடிமருந்து கிடங்கு மீது தாக்குதல் நடத்தும் நோக்கத்துடன் ஆயுதக் குழுவினர் வைத்திருந்த 650 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அம்மாநிலத்தில் மாவோயிட் ஆயுதக் குழுவினரது நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த அனைத்துப் பாதுகாப்புப் படையணிகளும் குவிக்கப்பட்டுள்ளன என்றார் மித்ரா.

நீங்கள் இனிமேல் வைக்கின்ற எவ்வித குற்றச்சாட்டுக்களிற்கும் நாம் பதில் அளிக்க தேவையில்லை தானே? அத்துடன் உமது நாட்டு செய்திகளை வைத்து எவ்வித முடிவுகளையும் எடுக்கமாட்டோம்.....

:lol::lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகள் இந்திய தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளதாக உள்ள செய்திகள் பொய்யா இருந்தால் எங்களுக்கு எந்த விதமான் நெருடல்களும் இல்லை.

தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளிட்ட எந்த ஒரு சர்வதேச ஆயுத அமைப்பினரும் இந்திய மாவோயிட் ஆயுதக் குழுவினருக்கும் இடையே எதுவித தொடர்பும் இல்லை என்று இந்திய அரசு அறிவித்துள்ளது

ஆகவே ராஜா உங்கள் சந்தேகங்களுக்கு புலிகள் பதில் சொல்லாவிடினும் இந்திய அரசு சொல்லியிருக்கிறது என நினைக்கிறேன்.

இப்போ உங்களுக்கு எந்த நெருடல்களும் இல்லைத்தானே!

ஆகவே ராஜா உங்கள் சந்தேகங்களுக்கு புலிகள் பதில் சொல்லாவிடினும் இந்திய அரசு சொல்லியிருக்கிறது என நினைக்கிறேன்.

இப்போ உங்களுக்கு எந்த நெருடல்களும் இல்லைத்தானே!

அட நீங்க வேற - புதுசா ஒரு நெருடல் இருக்குன்னு - இப்போ இல்லைனாலும்- கொஞ்சம் - லேட்டா-ஆரம்பிப்பாங்க - பொறுத்திருந்து பாருங்க -! 8)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்.. இரண்டு வகையானோர் எமது போராட்டம் குறித்து தவறான புரிந்துணர்வும் விளக்கமின்றியும் அதனால் தவறான அபிப்பிராயமும் கொண்டு இருக்கின்றனர்.

ஒரு வகையானோர் ஏற்கனவே மனதளவில் புலியெதிர்ப்பை ஏற்படுத்திவிட்டு பின்னர் கதைப்பவர்கள். மற்றொருவகையினர் உண்மையிலேயே தெளிவில்லாமல், (உண்மையில் ஒரு பிறநாட்டைச் சேர்ந்தவரிடம் இயல்பில் அந்த தெளிவை நாம் எதிர்பார்க்க முடியாது.)தமது சந்தேகங்களை முன் வைப்பவர்கள். இரண்டாம் வகையினருக்கு தெளிவு படுத்த வேண்டியது நமது பொறுப்பே. அவர்களது ஒவ்வொரு கேள்விகளுக்கும் ஆணித்தரமாக ஆதார புூர்வமாக பதில்களை சொல்ல வேண்டும். ஒரு கட்டத்தில் அவர் எந்தப் பிரிவிi சேர்ந்தவர் என்று தெரிந்து விடும். அவர் முதலாமவர் எனில் பேசிப் பயனில்லை. இரண்டாமவர் எனில் சந்தேகங்களை தெளிவு படுத்த வேண்டும். இங்கே லக்கி லுக் மற்றும் ராஜா ஆகியோர் இரண்டாம் வகையைச் சார்ந்தவர்களாக இருக்க கூடும் என நான் இந்தக் கணம் வரை நம்புகிறேன். அதனால்த்தான் பொறுமையாக பதில் சொல்லி கொண்டிருக்கிறேன்.

அப்பிடியா - ம்ம் - அப்போ இவர்கள் பேசிய ஒவ்வொரு தலைப்பையும் போய் பாருங்க -!

எதுக்கு - பதில் சொல்லி - விளங்கபடுத்தி சும்மா ரைம் வேஸ்ட் பண்ணிகிட்டு -! 8)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்.. இரண்டு வகையானோர் எமது போராட்டம் குறித்து தவறான புரிந்துணர்வும் விளக்கமின்றியும் அதனால் தவறான அபிப்பிராயமும் கொண்டு இருக்கின்றனர்.

ஒரு வகையானோர் ஏற்கனவே மனதளவில் புலியெதிர்ப்பை ஏற்படுத்திவிட்டு பின்னர் கதைப்பவர்கள். மற்றொருவகையினர் உண்மையிலேயே தெளிவில்லாமல், (உண்மையில் ஒரு பிறநாட்டைச் சேர்ந்தவரிடம் இயல்பில் அந்த தெளிவை நாம் எதிர்பார்க்க முடியாது.)தமது சந்தேகங்களை முன் வைப்பவர்கள். இரண்டாம் வகையினருக்கு தெளிவு படுத்த வேண்டியது நமது பொறுப்பே. அவர்களது ஒவ்வொரு கேள்விகளுக்கும் ஆணித்தரமாக ஆதார புூர்வமாக பதில்களை சொல்ல வேண்டும். ஒரு கட்டத்தில் அவர் எந்தப் பிரிவிi சேர்ந்தவர் என்று தெரிந்து விடும். அவர் முதலாமவர் எனில் பேசிப் பயனில்லை. இரண்டாமவர் எனில் சந்தேகங்களை தெளிவு படுத்த வேண்டும். இங்கே லக்கி லுக் மற்றும் ராஜா ஆகியோர் இரண்டாம் வகையைச் சார்ந்தவர்களாக இருக்க கூடும் என நான் இந்தக் கணம் வரை நம்புகிறேன். அதனால்த்தான் பொறுமையாக பதில் சொல்லி கொண்டிருக்கிறேன்.

இதில் வருந்தத்தக்கது என்னவெனில் இந்த இரண்டாம் வகையானவர்களிற்கு நாம் சரியான விளக்கம் கொடுத்தாலும் அதை எற்றுக்கொள்ளுவதென்பது அவர்களால் முடியாமல் ஊள்ளது. இப்படியானவர்களுக்கு எப்படி நாம் விளங்க வைப்பது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.